Friday, January 21, 2011

நழுவி செல்லும் காலம் .......

v




முஸ்கி 1  :  இந்த கவித இல்ல கவித . அது நேத்து ராத்திரி என் கனவுல வந்து.
 என்ன ஏன் இன்னும் நீ எழுதல அப்புடின்னு ஒரே அழுகாச்சி .
அது கேக்குறதும் ஞாயம் தானே பாவம் அது மட்டும் என்ன தப்பு பண்ணிச்சி .
அதான் அதையும் எழுதிட வேண்டியதுதான் துணிஞ்சி இறங்கியாச்சி .

முஸ்கி 2  :     பின்னால போட்டா டிஸ்கி (டிக்கி) அப்படீனா முன்னால போட்டா அது முஸ்கி தானே .
எப்படி நம்ம கண்டுபிடிப்பு ( எமது திருவிளையாடல் களில் இதுவும் ஒன்று) .

நழுவி செல்லும் காலம் .......

இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறது என்றாலும்
இன்றே மனம் பரபரக்கும் .
யாரெல்லாம் வாழ்த்துவார்கள் என்னவெல்லாம் தருவார்கள்
இன்றே மனம் கணக்கு போடும் .

கடந்து போகும் ஒவ்வொரு பிறந்தநாளும்
ஏன் ஆயுளில் ஒரு  வருடத்தை விழுங்கி செல்கிறது என்று
தெரியாமலேயே மனம் கொண்டாட தூண்டும் .
காலத்தை முந்தி செல்லும் வேகத்தோடு .

முன் நரை கண்ணாடியில் பார்த்தபின்
காலத்தை மெதுவாக நகர்த்தும் வித்தை தெரியாமல்
கலங்கி நிற்கிறது மனம்
ஒவ்வொரு பிறந்த நாளிலும் .

இப்போது நான் என் மனதிடம் சொல்வது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்
மரணம் உண்டென்று தெரிந்திரிந்தால்
ஜனனம் எடுத்திருக்க மாட்டேன் ................
 

*********************************************************************************************************

இது என் முதல் முயற்சி பிடிச்சிருந்தா ஒட்டு போடுங்க பிடிக்கலன்னா பின்னூட்டத்தில் சொல்லிடுங்க
ஏன்னா மீண்டும் நான் ரிஸ்க் எடுக்க கூடாது பாருங்க ........................

16 கருத்து சொல்றாங்க:

Unknown said...

முன் நரை கண்ணாடியில் பார்த்தபின் ///

ஆஹா வயசான ஆளா நீங்க ? ச்சே ச்சே தெரியாம போச்சே .

அஞ்சா சிங்கம் said...

நா.மணிவண்ணன் said...

முன் நரை கண்ணாடியில் பார்த்தபின் ///

ஆஹா வயசான ஆளா நீங்க ? ச்சே ச்சே தெரியாம போச்சே ...../////

அடா பாவி மனுசா நான் சத்தியமா யூத் தான்யா ........நம்புங்க

Unknown said...

இறப்புக்கும் பிறப்புக்கும் இடைப்பட்டது தாங்க வாழ்க்கை .இதில் மரணம் கண்டிப்பாக உண்டு .சரி சரி மனச போட்டு கொலப்பிகாதிங்க

Unknown said...

கவிதா கவிதா ச்சே ச்சே கவித கவித

அஞ்சா சிங்கம் said...

நா.மணிவண்ணன் said...

இறப்புக்கும் பிறப்புக்கும் இடைப்பட்டது தாங்க வாழ்க்கை .இதில் மரணம் கண்டிப்பாக உண்டு .சரி சரி மனச போட்டு கொலப்பிகாதிங்க...........//////////////

ரொம்ப சரி எனக்கு பயம் எல்லாம் கிடையாது .
காதல் கவிதை எழுதலாம்னா நம்மள பார்த்தா எல்லாம் தெரிசி ஓடுறாங்க .
வேற என்ன பண்ண இப்படிதான் ஏதாவது கிறுக்கனும் .......

அஞ்சா சிங்கம் said...

நா.மணிவண்ணன் said...

கவிதா கவிதா ச்சே ச்சே கவித கவித...........//////////

ஜிப்பா வாங்கி போட்டா தான் கவிதை வருமா?

Anonymous said...

முஸ்கி, டிஸ்கி... You continue…..
நீங்களும் ஜிப்பா போட்டுடீங்களா???

Unknown said...

தலை நரச்சிட்டுதா? அப்போ வயசு போயிட்டா? கவிதை எழுதறேன்னு பாட்டுக்கு உண்மையா எல்லாம் சொல்லிட்டீங்களே? ரொம்ப நல்லவருண்ணே நீங்க! :-)

அஞ்சா சிங்கம் said...

ஜீ... said...

தலை நரச்சிட்டுதா? அப்போ வயசு போயிட்டா? கவிதை எழுதறேன்னு பாட்டுக்கு உண்மையா எல்லாம் சொல்லிட்டீங்களே? ரொம்ப நல்லவருண்ணே நீங்க! :-).......................//////////////////////////
ஐயா நான் சத்தியமா யூத் தான் .....................
அநியாயத்துக்கு சந்தேக படுறாங்க மைலார்ட் ................

Chitra said...

Birthday is a celebration of life..... reminds us that we are still alive and healthy.... ENJOY!!!!!!!!!!!

சேலம் தேவா said...

நல்லா இருக்குது கவிதை..!! :))

Unknown said...

:-)

Unknown said...

உங்களது அறுபதாவது பிறந்த நாளுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..
கனவில் கூட கவிதையா? ம்ம்ம்ம்ம்ம்ம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஹூம்.. இதுக்கு நான் புண்ணாக்கு யாவாரமே பண்ணிக்கிட்டு இருந்திருக்கலாம். ஆங்.. மாப்பு, என்ன எழுதியிருக்கே, ஓ... கவிதையா.... இரு படிச்சிட்டு வர்ரேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கவிதை நல்லாத்தாம்ல இருக்கு.....

சாமக்கோடங்கி said...

நல்லாதானப்பு எழுதி இருக்கீங்க.. அப்புறம் ஏன் கவிதை இல்லை அது இல்லைன்னு பயப்படுறீக ..

நல்லாருக்குபா...

Popular Posts