Friday, September 28, 2012

நித்தியாயிசம் .....

v
கடந்த இரண்டு பதிவுகளும் மதத்தை பற்றியதாக இருந்ததால் . கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண வேறு ஏதாவது பதியலாம் என்று நினைத்தேன் ..நாம நினைக்கிறது எல்லாம் அப்படியே நடந்து விடுகிறதா என்ன .?


சிறு வயதில் இருந்தே நான் பலவிதமான .துக்க செய்திகள் , எதிர்பாராத மரணம் , கண் எதிரே  விபத்து , நெருக்கமான நண்பர்களின் மரணம் , என்று பல விஷயத்தை பார்த்திருக்கிறேன் . அந்த நிகழ்சிகள் என் மனதை லேசாக பாதித்தாலும் . நான் அழுதது இல்லை . என்ன யாரிடமும் பேசாமல் அமைதியாக இருப்பேனே தவிர . எவ்வளவு முயன்றாலும் அழுகை வராது . நான் நார்மலா ..? அப்நார்மலா ...? என்ற சந்தேகம் கூட எனக்கு வந்ததுண்டு ...
ஆனால் அந்த சந்தேகம் எனக்கு இப்போது தீர்ந்துவிட்டது .நான் நார்மல்தான் . என்று எனக்கு புரிய வைத்தவர் நிதியானந்தாதான் ..

எப்படி பட்டவரும் தன நெருங்கிய சொந்தத்தின் இறப்பிற்கு அழுதே ஆகவேண்டும் .அதுவும் தன் தாயோ ! தந்தையோ என்றால் சொல்லவே வேண்டாம் . சரி அழுகைதான் வரவில்லை என்றால் அதை யாரும் கொண்டாட மாட்டார்கள் .
என்று நினைத்திருந்த எனக்கு இந்த காணொளி சரியான பாடம் புகட்டி விட்டது .

நித்தியின் தந்தை மரணத்தை கட்டிபிடி டான்ஸ் உடன் எப்படி கொண்டாடுகிறார் என்று பாருங்கள் . அதுவும் ஒரு கட்டத்தில் பரவச நிலை தொடும்போது  செருப்பை அவர் தலையில் வைப்பது ஆகட்டும் .
தன காலால் இறந்த தந்தையை மிதிப்பது ஆகட்டும் . அட அட எப்பேர்பட்ட இறைபனி .


நல்ல வேளை இவர் நாம் வாழும் தகவல் தொழில்நுட்ப காலத்தில் பிறந்தார் ஒரு 1000 ஆண்டுகளுக்கு முன்னாள் பிறந்திருந்தால் .இவர் இந்நேரம் கடவுள் ஆகி இருப்பார் . அல்லது குறைந்த பட்சம் ஒரு தூதராவது ஆகி இருப்பார் . நல்ல வேளை  அப்படி மதம் உருவாகாமல் காலம் தடுத்து விட்டது .


காணொளியை இங்கு காணுங்கள் :-


ஒரு படத்தில் செந்தில் கவுண்டமணியின் தாய் இறந்த இடத்தில நின்றுகொண்டு எல்லோரையும் சிரிக்க சொல்வாரு .
ஒரு வேளை நித்தியும் கவுண்டமணி ரசிகராக இருக்குமோ .......

Wednesday, September 26, 2012

மதம் (பாகம் இரண்டு )

v
                                                                         


                                  மானிகே மதம் :-

    இப்போது சுத்தமாக வேர் அறுக்கப்பட்ட ஆனால் ஒருகாலத்தில் உலகின் பெரு சமயங்களில் ஒன்றாக திகழ்ந்த மதம்.  இதை தோற்றுவித்தவர் மானி . இவர் தன்னை தீர்க்கதரசி என்று கூறி கொண்டார் . இந்த மதத்தின் இறைமையியல் கொள்கை மிகவும் கவர கூடிய கவர்சிகரமானது .

                                        மானி:-

               இவர் மேசபட்டோமியாவில் கி.பி. 216 டில்  பிறந்தார்   அப்போது அது பாரசீக அரசின் ஒரு பகுதியாக இருந்தது அதனால் அங்கு சொராஸ்ட்ரியம் மிகவும் செல்வாக்கு பெற்று இருந்தது . என்றாலும் இவர் ஒரு கிருத்துவ உட்பிரிவில் பிறந்தார் . இவர்  தனது 20 ஆவது வயதில் இருந்து தனது புதிய மதத்தை போதிக்க ஆரம்பித்தார் . அவரது சொந்த நாட்டில் அவருக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை . மற்றவர்களால் தூற்ற பட்டார் . பின்பு அவர் இந்தியா வந்து அங்கு இருந்த ஒரு அரசனை மதம் மாற்றுவதில்  வெற்றி கண்டார் . பிறகு 242 ஆம் ஆண்டில் மீண்டும் பாரசீகம் வந்தார் இப்போது அங்கு ஷாப்பூர் என்ற மன்னன் ஆண்டு வந்தான் . அவன் மானிக்கு ஆதரவு அளித்தான் .மானி மேல் மிகுந்த மரியாதை வைத்திருந்தான் .அவருக்கு தடையில்லாமல் மதத்தை போதிக்கும் உரிமை வழங்க பட்டது . ஷாப்பூர்க்கு பின்னர் வந்த முதலாம் ஹார்மிஸ்ட் காலத்திலும் இவருக்கு ஏராளமான ஆதரவாளர்கள் பெருகினார்கள் . அதே நேரம் சஸ்சானிட் அரசின் அரசு சமயமாக திகழ்ந்த பார்சி குருமார்கள் . மானியை பழிவாங்க காத்திருந்தனர் .
ஹார்மிஸ்ட்க்கு பிறகு அரியணை ஏறிய முதலாம் பஹ்ராம் சமய சகிப்பு இல்லாதவர் . அவர் மாணியை கைது செய்து சிறையில் அடித்து 26  நாள் சித்திரவதை செய்து கொன்றார் .அவர் இறந்த ஆண்டு கி.பி.276 .

                                         இறைமையியல்  :-


இது தான் உண்மையில் கருத்தை கவரும் வித்தியாசமான பார்வை கொண்ட அம்சங்கள் நிறைந்தது . கிறித்தவ மதமும், யூத மதமும் நன்மைதீமை என்ற கோட்பாட்டிற்குள் அடங்கியவை என்றாலும் தீமையை விளக்கி கூற முடியாத சித்தாந்த சிக்கலில் இருக்கும்போது . இவர் மட்டும் இந்த உலகை ஒரு கடவுள் ஆளவில்லை நன்மை தீமை இரண்டும் சம வலிமை கொண்டவை . இதில் தீமை என்பது இருளாகவும் பருபொருளாகவும் உருவக படுத்துகிறார்
நன்னெறி என்பது ஒளியாகவும் ஆன்மாவாகவும் கருத படுகிறது . அதனால் உடல் என்பது தீய சக்தி ஆன்மா என்பது
நன்னெறிஎன்பதால் உடல் உறவு கொள்வது கூட தடை செய்யபடுகிறது .........................
ஆனால் அவை சாதாரண பாமரர்களுக்கு இல்லை . மத போதகர்களாக இருக்கும் மேட்டு குடி களுக்கு மட்டுமே பொருந்தும் .(பிற்காலத்தில் இதை கிருத்துவமதம் எடுத்து கொண்டது ) இவர்கள் இறந்தால் நேரடி சொர்க்கம் கிடைக்கும் . ஆனால் பாமரர்கள் முதல் நிலை சொர்கத்தில் அனுமதிக்க பட்டு பின்னர் . பல சோதனைகளுக்கு பிறகு மேல் நிலை சொர்கத்தை அடையலாம் ...
இது ஒரு வகையில் ப்ளேட்டோவின்  குடியரசு தத்துவத்தை ஒத்திருப்பதை காணலாம் .கத்தோலிக்க திருச்சபைகளில் இந்த முறை பின்பற்ற படுகிறது . இதற்க்கு காரணம் கிருத்துவ இறைமையியல் கொட்பாட்டை  தொகுத்து அளித்த புனித அகஸ்டைஸ் ஒன்பது ஆண்டுகள் மானி மதத்தில் இருந்தார் .
இவர் புத்தர் , ஏசு , போன்றவர்களை இறைதூதர்களாக ஏற்று கொண்டார் . என்றாலும் அவர்களை விட அதிகமான இறை செய்தி தனக்கு வந்ததாக கூறிகொண்டார் (இதே முறையை பின்னாளில் நபிகள் பயன்படுத்திகொண்டார் )
இது ஆரம்பத்தில் இருந்தே சகிப்பு தன்மை அற்ற மதமாக தான் இருந்தது .

                                                   மதம் பரவுதல்

மானி காலத்தில் இந்த மதம் நன்றாக பரவி ஓரளவு ஸ்திர தன்மை பெற்று விட்டது எனலாம் . இதன் இறைமையியல் கோட்பாட்டை இவரே உருவாக்கினார் .இவர் காலத்தில் பாரசீகம் முதல் இந்தியா வரை வேகமாக பரவியது . அதன் பின்னர் ஆயிரம் ஆண்டுகளுக்கு உலகின் பெரிய சமயங்களில் ஒன்றாக திகழ்ந்தது . இது உச்ச கட்டத்தில் இருக்கும் போது இதில் இருந்து பல்வேறு கிளை சமயங்கள் எழுந்தன . ஏழாம் நூற்றாண்டில் பைசாண்டியத்தில் தோன்றிய பாலிசியன்னும் பத்தாம் நூற்றாண்டில் பால்க்கன் நாடுகளில் தோன்றிய போகோமில்ஸ் . கிழக்கு ஐரோப்பாவில் கேதாரி என்ற கிளை இது பிரான்ஸ் நாட்டில் செல்வாக்கோடு இருந்தது . இங்கு பலர் மானி சமய கோட்பாடுகளை கடை பிடித்தாலும் தங்களை கிருத்துவர்கள் என்று சொல்கிறார்கள் ஆனால் கிருத்துவர்கள் அவர்களை ஏற்று கொள்வது இல்லை .மத்திய கால ஐரோப்பாவில் மிக பெரிய செல்வாக்கோடு இந்த மதம் ஏறதாழ ஆயிரம் ஆண்டுகள் கோலோச்சியது .ஆசியாவில் இந்தியா சீனா மற்றும் எகிப்து என்று அனைத்து கண்டங்களிலும் பரவி உச்ச நிலையில் இருந்தது 


                                                     மதத்தின் வீழ்ச்சி  

 ஐரோப்பாவில் உச்ச மதமாக இருந்த இதன் வீழ்ச்சிக்கு பெரும்பாலும் கிருத்துவ மதமே காரணம் எனலாம் . மூன்றாம் போப் இன்னொசென்ட் என்பவர் இவர்களை அளிக்க சிலுவை போர் நடத்தும் படி ஆணையிட்டார் . 1209 ஆண்டு தொடங்கிய இந்த சிலுவை போர் பல ரத்த வெறியாட்டத்திற்கு பிறகு 1244 ஆம் ஆண்டு முடிவடைந்தது . அதீத கட்டுபாடுகள் நிறைந்த இந்த மதம் ஐரோப்பாவில் 1000 ஆண்டுகள் கோலோச்சியது ஆச்சரியமான விஷயம் .மானி நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார் . அவை யாவும் மானி சமயத்தின் வேதமாக கருத படுகிறது . மதத்தின் அழிவோடு அதன் நூல்களும் அழிக்க  பட்டு விட்டது . 


பின்குறிப்பு :- எவ்வளவு உச்ச நிலையில் இருந்தாலும் எந்த மதமும் நிரந்தரமானது அல்ல . மனிதனுக்கு தேவை படும்போது கடவுளையே மாற்றிவிடுவான் .என்பதற்கு மானி மதம் ஒரு சிறந்த எடுத்துகாட்டு .

அதனால் மதத்தை வளர்ப்பது மட்டுமே மனிதனின் பணி  என்று  இருப்பது மிக பெரிய மடத்தனம். காலம் எல்லாவற்றையும் அழித்து புதிய கோடுகளை போட்டு கொண்டே இருக்கும் .

அடுத்த பதிவு மகாவீரர் 

 

மதம் (பாகம் ஒன்று )படிக்க இங்கே செல்லவும் 

Monday, September 24, 2012

மதம் (பாகம் ஒன்று )

v
 
                                                                                                      
இந்த வார்த்தைக்கு தமிழில் மட்டுமே சிறப்பான அர்த்தம் உள்ளதாக நான் கருதுகிறேன் .
இந்த உலகில் பல கால கட்டத்தில் பல வித தத்துவங்கள் மதமாக பரினவித்து உள்ளன .
அவற்றில் பல மதங்கள் முற்றிலும் அழிந்து போய்விட்டது .எப்படி ஒவ்வொரு உயிருக்கும் தோற்றம் ,மறைவு  இருக்கிறதோ . ஒவ்வொரு சாம்ராஜ்யத்துக்கும் தோற்றம் மறைவு இருக்கிறதோ . அதேபோல ஒவ்வொரு மதத்திற்கும் தோற்றம் மறைவு கண்டிப்பாக உண்டு . இப்படி அழிந்து போன மதங்கள் ஒரு கால கட்டத்தில் மிகவும் செல்வாக்கான உச்ச நிலையில் இருந்தவைதான் என்பதை நாம் மறக்க கூடாது .

இவ்வாறு அழிந்த அல்லது அழியும் நிலையில் இருக்கும் மதங்களை பற்றி ஒரு தொடராக எழுதலாம் என்று இருக்கிறேன் . உங்கள் ஆதரவை பொருத்து ...

சொராஸ்ட்ரியம்:-
(zoroastrianism ):-
                                      இந்த மதம் சொராஸ்டார் என்பவரால்  தோற்றுவிக்க பட்டது .இவரை பற்றி தகவல்கள் மிக அரிதாகவே கிடைக்கிறது . இன்றைய வடக்கு ஈரானின் ஒரு பகுதியில் கி.மு. 628  இவர் பிறந்திருக்கலாம் என்று அறிய படுகிறது . இவரது  இளமை காலம் பற்றி எந்த தகவலும் இல்லை . எந்த சமயத்தில் இவர் இறை அருள் பெற்றார் என்றும் தெரிய வில்லை ஆனால் தனது 40 ஆம் வயதில் வடகிழக்கு ஈரானிய மன்னன் விஷ்டாஸ்பா என்பவரை தன் சமயத்திற்கு மாற்றுவதில் வெற்றி கண்டார் . அந்த மன்னரே பிற்காலத்தில் இவரின் நண்பராகவும் பாதுகாவலனாகவும் இருந்தார். இவர் 77 ஆண்டுகள் உயிரோடு இருந்தார் .கி.மு. 551  ஆண்டு வாக்கில் இவர் இறந்திருக்கலாம் ..

இறைமையியல்  :-
                              அத்வைதமும் துவைதமும் இணைந்த ஒரு கலவைதான் இந்தமதம் .  இவர் கருத்து படி ஒருவனே தேவன் . அவர் பெயர் "அஹூரா மாஜ்டா " அதன் அர்த்தம் மெய் அறிவு பெருமான் . அதே போல் இந்த உலகில் தீய சக்தி இருக்கிறது அதன் பெயர் "அங்ரா மைன்யு " இது தீமையும் பொய்மையும் ஊக்குவிக்கும் ..
இந்த இரு சக்திகளின் போராட்ட களம் தான் இந்த பூமி . இதில் நன்மையை ஆதரிப்பதா ,.? அல்லது தீமையை ஆதரிப்பதா .?என்பதை ஒவ்வொரு மனிதனும் தேர்ந்தெடுக்க உரிமை உள்ளவர்கள் . தற்போது இது நெருங்கிய போராட்டமாக இருந்தாலும் நீண்ட கால போக்கில் நன்மையே வெல்லும் என்பது சொராஸ்டார்களின் நம்பிக்கை .
துறவு வாழ்வை இந்த சமயம் கடுமையாக எதிர்க்கிறது மிகவும் விசித்திரமான சமய சடங்குகள் இவர்களிடம் உண்டு .
நெருப்பை புனிதமாக கருதுவார்கள் . இவர்கள் கோவிலில் ஒரு அணையா தீபம் ஒன்று இருக்கும் .
இவர்கள் இறந்தவர்கள் உடலை அப்புற படுத்தும் முறை மிக விசித்திர மானது . அதை எரிக்கவோ புதைக்கவோ கூடாது . மலை உச்சிகளில் கழுகுக்கு இரையாக வைத்து விடுவார்கள் .

மதம் பரவுதல் :-
                                 இவர் வாழ்ந்த காலத்திலே ஓரளவு வெற்றி பெற்ற மதமாக இருந்தாலும் .கி.மு.6 ஆம் நூற்றாண்டில் மகா சைரஸ் என்ற மாவீரன் பாரசீகத்தோடு இரானை இணைத்துகொண்டான் .அடுத்த 200  ஆண்டுகளில் பாரசீக மன்னர்கள் இந்த மதத்தை தழுவினார்கள் . இந்த சமயத்திற்கு ஆதரவு பெரிய அளவில் பெருகியது .

மதத்தின் வீழ்ச்சி :-
                                     கி.மு.4 காம் நூற்றாண்டில் அலெக்சாண்டர் படையெடுப்பினால் இந்த மதம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது . எனினும் மீண்டும் பாரசீகர்கள் அரசியல் சுதந்திரம் பெற்றதும் மீண்டும் இது புத்துயிர் பெற்றது .
சாஸ்சானிட் அரசர்களின் காலத்தில் (கி.பி.226 -651 ) இது அரச சமயமாக ஏற்று கொள்ளப்பட்டது ...
என்றாலும் இதற்க்கு கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டது கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் பாரசீகத்தை முஸ்லீம்கள் கைப்பற்றிய பின்புதான் ஏற்பட்டது .மிக கடுமையான முறையில் இவர்கள் மதம் மாற்ற பட்டார்கள் .
பலர் சலுகைகளுக்காகவும் உயிருக்கு பயந்தும் மதம் மாறினார்கள் . எஞ்சி இருந்தவர்கள் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் இரானில் இருந்து தப்பி ஹார்மொஸ் என்ற தீவில் தஞ்சம் புகுந்தார்கள் . பிறகு அவர்களின் சந்ததிகள் இந்தியா சென்று அங்கு அவர்களுக்கு ஒரு சிறு குடியிருப்பை ஏற்படுத்தி கொண்டார்கள் . பாரசீகத்தில் இருந்து வந்ததால் இவர்கள் பார்சி என்று அழைக்க படுகிறார்கள் ..ஏறதாள   1 ,50000  லட்சம் பார்சிகள் இந்தியாவில் இருக்கிறார்கள் இது மிக சிறு தொகை என்றாலும்  இந்த மதம் முழுவதுமாக அழியவில்லை என்பதற்கு இதுவே அத்தாட்சி . ஒரு காலத்தில் மிக அதிகமான செல்வாக்கோடு இருந்த சமயம் இது அதே நேரம் உலகின் தொன்மையான மதங்களில் ஒன்று . இதன் இறைமையியல் செல்வாக்கு .யுத மதத்திலும் கிறித்துவ மதத்திலும் மற்றும் இதற்க்கு பின்னர் தோன்றிய மானி மதத்திலும் மிக பெரிய செல்வாக்கை செலுத்துகிறது ..

குறிப்பு :-அடுத்த பகுதியில் மானி மதத்தை பற்றி எழுதுகிறேன் .

Monday, September 10, 2012

பிரபல பதிவரும் கிழிந்த டவுசரும் .

v


தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்யன் . மீண்டும் சுடுகாடு வந்து சேர்ந்தான் .ஆனால் இம்முறை வேதாளத்தை கண்டு லேசாக பயம் வந்துவிட்டது .இது கேக்குற கேள்விக்கெல்லாம் நம்மளால் பதில் சொல்ல முடியாது சாமி ..அதனால் யாராவது அப்பிராணி கிடைத்தால் நல்லாஇருக்கும் என்று நினைத்து அங்கு சுற்றி கொண்டிருந்த தேவாங்கை தூக்கி தன் தோளில் வைத்து கொண்டு புறப்பட்டான் ...........

போகும் வழியில் போர் அடிக்காமல் இருக்க. ஒரு கதை சொல்லுங்க தோழர் என்று தேவாங்கு கேட்க .ஏன் அதை நீங்க சொன்னதில்லையா தோழர். என்று விக்கி பதில் அளிக்க . ஆஹா இன்னைக்கு பொழுது நல்லா போயிடும். ஒரு ஆடு சிக்கி இருக்கு என்று தேவாங்கு நினைத்து கொண்டு கதையை ஆரம்பித்தது .

ஒரு ஊருல நாலு பதிவர்கள் இருந்தாங்களாம் . ஒருத்தர் பேரு இங்கி, அடுத்து பிங்கி ,அப்புறம் பாங்கி , கடைசி பதிவர் பெயரு டாங்கி , இந்த நாலு பெயருக்கும் திடீர்ன்னு ஒரு சந்தேகம் . நம்ம நாலு பேரில் யார் பிரபல பதிவர் ..? யார் அதி முக்கிய பதிவர் ,? யார் "முக்கிய " பதிவர்ன்னு . இங்கி சொல்றாரு நான் மஞ்சள் துண்டு போட்டிருக்கேன் அதனால் நான் தான் பிரபல பதிவர்ன்னு . பிங்கி நான் ரொம்ப ஏழை. அந்த பிரபல பதிவர் பட்டதை எனக்கே குடுத்து விடுங்கள் என்று . பாங்கி சொல்றாரு என் இடுப்பை கிள்ளி பாருங்க நான் துள்ளுவேன். அதனால நாந்தான் பிரபல பதிவர் ,டாங்கி மட்டும் என்ன லேசு பட்டதா? நான் நிறைய அழுகாச்சி காவியம் எல்லாம் எழுதி இருக்கேன் அதனால் நாந்தான் பிரபல பதிவர்ன்னு ...

இவங்க கதை இப்படி இருக்க. ஒரு நாள் சைக்கிள் ரிக்க்ஷாவில் 
பதிவர்கள் மாநாடு நடக்கிறது அனைவரும் வாரீர்ன்னு விளம்பரம் பண்ணீட்டு போயிட்டாங்க . இவங்க நாலு பேருக்கும் ஒரே மண்ட குழப்பம் ஆகிடிச்சி . என்னடா இது நாம நாலு பேரும்
இங்க இருக்கோம். . அப்புறம் எப்படி மாநாடு .? வேறு யாரும் பதிவு எழுதுகிறார்களா என்ன ..? அப்படி எழுதினால் அவர்கள் யாரென்று போயி பார்த்துவிடலாம். என்று பாங்கி சொல்ல . இல்லை நாமெல்லாம் பிரபல பதிவர்கள். அந்த விளம்பரத்தை நல்லா பாரு அது "வெறும்" பதிவர்கள் மாநாடு என்றுதான் போட்டிருக்கு . பிரபல பதிவர்கள் மாநாடு என்று இருந்தால் நாம் போகலாம் என்று டாங்கி சொன்னது , அதற்க்கு இங்கி அட அவசர படாதீங்கப்பா நாம இங்கயே உக்காந்து இருப்போம் இன்னும் கொஞ்ச நேரத்தில் பார்த்தசாரதி கோயில் யானை வரும் . அதன் துதிக்கையில் மாலை  இருக்கும் . அது நம்ம நாலு பேருக்கும் மாலை போட்டு பரிவட்டம் கட்டி நம்மளை விழா மேடைக்கு கூட்டிபோகும் . அங்கே நம்மளை நடு சென்டரில் வைத்து விருது குடுப்பார்கள் . அதனால் நாம் இங்கனயே குத்த வச்சி இருப்போம் . என்று சொல்லி அங்கேயே உக்கார்ந்து விட்டார்கள் .பாவம் அவர்கள் எதிபார்த்த யானை வரவே இல்லை .


இப்போது அவர்களுக்கே சந்தேகம் வந்து விட்டது உண்மையில் யார் பிரபல பதிவர் என்று . இந்த கேள்வியை தான் நான் உன்னிடம் கேட்க போகிறேன் விக்கிரமா . இவர்களில் உண்மையில் யார் பிரபல பதிவர் என்று . நீ சரியான விடை கூறிவிட்டால் காலா காலத்திற்கும் உன் வீட்டில் பத்து பாத்திரம் தேய்க்கிறேன் .

விக்கிரமன் தேவாங்கை பார்த்தான் அருகில் இருந்த மரத்தை பார்த்தான் . இதை விட அது பெட்டர் என்று முடிவு செய்து . தேவாங்கை கீழே இறக்கிவிட்டு அந்த மரத்தில் தூக்கு மாட்டிகொண்டான் ........................................................................................தி எண்டு 

........................................................

 

 

தொடர்புடைய குட்டி சீ........ சீ.........சுட்டி இதை கிளிக்கி பார்க்கவும்
 

Saturday, September 8, 2012

விகடனின் சதி அம்பலம்

v

                   
இந்த வலை உலகில் ஆரம்பதில் ஒரு பார்வையாளனாக என் பயனத்தை ஆரம்பித்த நான் விதி வசத்தால் பன்னிகுட்டி, மங்குனி அமைச்சர். போன்ற சான்றோர்களின் பதிவுகளை படிக்க நேர்ந்தது . அதுவரை வெறுமனே கமன்ட்டி கொண்டிருந்த நான் பதிவு எழுதும் துணிச்சல் பெற்றேன் . (நீ எல்லாம் பதிவு எழுதும் போது) .
சரி எழுதலாம் என்றால் எதை எழுதுவது எனக்கு பிடித்த வரலாறு அறிவியல் ,எழுதலாம் என்றால் அவ்வாறு எழுதுபவர்கள் ப்ளாகை சென்று பார்வை இட்டால் 100 முதல் 160 பதிவுகளுக்கு மேல் எழுதிவிட்டு வெறும் 2000 ஹிட்ஸ் மட்டும் வாங்கி ஒலிம்பிக்கில் இந்தியா போல் பரிதாபமாக இருந்தார்கள் .
இன்னொரு பக்கம் ஒரு மொக்கை பதிவு போட்டுவிட்டு 400  கமன்ட்டுகளுக்கு மேல் வாங்கி கொழு...கொழு என்று கொழுத்திருந்தது இன்னொரு கூட்டம் . நீங்களே ஊகித்து கொள்ளுங்கள் நான் எந்த வழியை தேர்ந்து எடுத்திருப்பேன் என்று . இப்படி எனக்கு நேரம் கிடைக்கும் போது அல்லது எனக்கு தோன்றும் போது மட்டும் பதிவுகளை போட்டு இந்த பதிவுலக வானில் சுதந்திர பறவையாக சுற்றி கொண்டிருந்த என்னை ...வெறும் ஸ்பெசல்சாதா  பதிவரான என்னை ............பிரபல பதிவர் ஆக்கும் சதி நடக்கிறதோ என்று அச்சபடுகிறேன் .
அந்த சதியின் ஒரு பகுதியாக விகடனின் வலையோசையில் என்னை அறிமுகம் செய்துவிட்டார்கள் . அதுவும் யார் பிரபல பதிவர் என்று பதிவுலக பஞ்சாயத்து நடக்கும் இந்த நேரத்தில் .இதில் வெளிநாட்டின் கை இருக்குமோ ..என்னமோ போங்க எனக்கு இப்பவே தலைக்கு மேல கொம்பு முளைக்கிற மாதிரி இருக்கு . நாக்கு நீளுது ..வாயெல்லாம் அசைபோட தோணுது ..........

Popular Posts