Monday, July 16, 2012

பில்லா வாயில வருது நல்லா ....

v

ஆரம்பத்திலேயே சொல்லிடுறேன் எனக்கு விமர்சனம் எல்லாம் எழுத வராது .
இருந்தாலும் இந்த படத்தை ரெண்டு முறை பார்க்க வேண்டிய நிலைமைக்கு ஆளாக்க பட்டதினால் ஏற்ப்பட்ட விளைவு தான் இந்த பதிவு .

இந்த படம் ரசிக்கும்படி எடுக்கப்படவில்லை என்ற குறையை தவிர வேறு ஒன்றும் எனக்கு பெருசாக தெரியவில்லை .
சித்தாந்த ரீதியாக பார்த்தால் அந்த கதாபாத்திரம் செய்யும் செயல் எல்லாம் நியாயம்தான் .
அது ஒரு நிழல் உலக தாதா எப்படி உருவாகிறான் என்பது மட்டும்தான் .
டானுக்கு செண்டிமெண்ட் இருக்ககூடாது . எல்லோரையும் எதிரியாக பார்க்கவேண்டும் .இது மட்டும்தான் அடிப்படை
நமக்கு முன்னாள் ஆட்சி செய்த அரசர்களின் வாழ்கையை பார்த்தால் புரியும். எத்தனை கொலைகள் அண்ணன், தம்பி, 
தந்தை என்று யாரை வேண்டுமானாலும் கொன்று சாம்ராஜ்யத்தை நிறுவுவது ஒரு அரசனின் செயல் . இதற்காக பெற்ற மகனை கூட கொன்ற அல்லது குருடாக்கிய மன்னர்கள் பல இது போன்று தான் மன்னர்கள் உருவாக முடியும் சராசரி மனிதனுக்கு இது  நினைக்க முடியாத துயரம் .

படத்தின் ஆரம்பத்திலேயே நாயகன் சொல்லிவிடுகிறார் தீவிரவாதிக்கும் போராளிக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான் ஜெயித்தால் அவன் போராளி தோத்தால் தீவிரவாதி .இது ஒரு யூத பழமொழி . நீ கடந்து வந்த பாதையை உன் வெற்றி நியாயபடுத்தி விடும் .

இன்னும் எவ்ளோ நாளைக்கு தான் கதாநாயகன் நல்லது மட்டும் செய்யவேண்டும் என்று அவனை கட்டாய படுத்த போறோம் . அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறேன் . ரொம்ப நல்ல ஹீரோ வேண்டாம் அப்புறம் அவனுங்க முதலமைச்சர் ஆக ஆசை படுவானுங்க.

இந்த படத்திற்கு எதிர்மறை விமர்சனம் வருவது நல்லது தான் . ஆனால் இதுதான் நிசர்தனம் இப்படி ஒரு வாழ்க்கை இருப்பதும் உண்மைதான் .

ஒரு வேளை இந்த படத்தை ரெண்டு முறை பார்ததானால் வந்த பாதிப்பா என்று தெரியவில்லை .
அஜித்தை பாராட்டிதான் ஆக வேண்டும் நான் இப்படிதான் என் வாழ்க்கை நான் வாழ்கிறேன் எனக்கு கார் ஓட்ட வேண்டும் என்றால் கார் ஓட்டுவேன் . படம் நடிக்க வேண்டும் என்றால் நடிப்பேன் . உனக்காக என் வாழ்கை இல்லை . என் வாழ்கை எனக்காக மட்டும்தான் . போலி நல்லவர்கள் வேண்டாம் நிறையா பார்த்தாச்சி இந்த நடிகர்களிடம் என்ன எதிர் பார்கிறீர்கள் நாட்டை காப்பாற்றும் பொறுப்பா.?

நூற்றி ஐம்பது ருபாய் குடுத்து படம் பார்த்துவிட்டு இதில் கருத்து இல்லை லாஜிக் இல்லை என்று சொல்பவர்களுக்கு ..
சினிமாவில் இந்த கருமத்தை எல்லாம் ஏன் தேடுறீங்க . நல்ல புத்தகத்தில் கருத்து தேடுங்க அது நியாயம்.அதை விட்டு விட்டு எல்லா எழவையும் சினிமாவில் தேடுகிற கூட்டமாக இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் இருக்கபோகிறோமோ.


விடுங்க பாஸ் அவனுங்க பாட்டுக்கு நடிச்சிட்டு போகட்டும் திரை துறையில் இருந்து இன்னொரு முதல்வர் நமக்கு வேண்டாம் ...........

Popular Posts