Thursday, January 13, 2011

ஆஸ்கருக்கான அறிய கண்டுபிடிப்பு

v
முதல்ல எல்லாருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன் .......
உசுருக்கு பயந்தவங்க பொங்கலுக்கு சன் டீவீ  பார்ககாதிங்க சுறா போடுறானாம் .......
முடிந்தால் உங்கள் நண்பர்களையும் காப்பாற்றுங்கள் ................ 

தமிழ்நாட்டுல இந்த வருஷம் ரொம்ப குளிர் ஜாஸ்தியா இருக்கு ...
பாவம் வயசானவங்க ரொம்ப கஷ்டபடுறாங்க . வாலிப பசங்க நிலைமை அதவிட மோசமா இருக்கு ..

நைட் ஷிப்ட் பார்த்துட்டு வர்ற பசங்க பாவம் பைக் ஓட்ட முடியாம ரொம்ப கஷ்ட படுறாங்க .
தமிழ்நாட்டுலேயே இப்படின்னா நார்த்துல சொல்லவே வேண்டாம் தினம் பத்து பேராவது குளிர்ல சாகிறார்களாம் ..........
இந்த கொடுமைக்கு முடிவு கட்ட யாரவது பொறந்து வரமாட்டாங்களா ..................
அப்படின்னு ஒரு கெழவி கதறுச்சி .

அந்த நேரம் அஞ்சா சிங்கம் என்ட்ரி.................

நாம பிறப்பால விஞ்சானி ஆச்சே ராமர் பிள்ளை மாதிரி பெரிய விஞ்சானிங்ககிட்ட பயிற்சி வேற எடுத்திருக்கோம் ...........
அதனால நாமலே ஏதாவது கண்டுபிடிக்கலாம்ன்னு களம் இறங்கிட்டேன் .......

பல நாள் முயற்சிக்கு பிறகு ஒரு பைக் ஒன்னு கண்டுபிடிச்சிருக்கேன் இதுல பாருங்க என்ன விசேஷம்னா இத ஓட்டிட்டு போகும் போது கொஞ்சம்  கூட குளிர் தெரியாது .................

இத ஊட்டி கொடைக்கானல் மட்டுமில்ல இமயமலை ஆர்டிக் அண்டார்டிகா போன்ற பனி பிரதேசங்களிலும் சுகமா ஓட்டிட்டு போகலாம் கொஞ்சம் கூட குளிராது அதுக்கு நான் கியாரண்டி .......................

இதுக்கு காப்புரிமை வாங்க முயற்சி பண்ணினேன் தரமாட்டேன்னு சொல்லிடாங்க இந்தியாவுல ஒரு வளரும் விஞ்சானிக்கு மரியாதை இல்ல அதனால சித்ரா அக்காகிட்ட சொல்லி அமெரிக்காவுல காப்புரிமை வாங்கனும்ன்னு நெனச்சிருக்கேன் .........

இந்த பைக்கு பெட்ரோல் செலவு இல்ல சுகமான பயணம் ..பதிவர்கள் யாரவது டீலர்ஷிப் எடுக்க ஆசை பட்டா முன்னுரிமை குடுக்கப்படும் ....

ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, போன்ற குளிர் பிரதேசத்தில் இருக்கும் பதிவர்களுக்கு சகாய விலையில் தரப்படும்.
நீங்க ஒரு நாலுபேர அறிமுக படுத்துநீங்கன்னா அவங்க கிட்ட இருந்து காசு புடிங்கி உங்களுக்கு தரப்படும்............

ப்ரீ ட்ரையல் பார்க்கணும்னா உடனே என்னை அணுகலாம் ................
தமிழ்மணத்துல ஒட்டு
போட்டவங்களுக்கு சிறப்பு சலுகை காத்திருக்கு........
உடனே முந்துங்கள் ஸ்டாக் உள்ளவரையே இந்த சலுகை ...................





இந்த கண்டுபிடிப்புகாவது ஆஸ்கார் அவார்ட் கெடைக்குமா ????????

பின்குறிப்பு : பின்விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல ..................

32 கருத்து சொல்றாங்க:

Unknown said...

வாலிப பசங்க நிலைமை அதவிட மோசமா இருக்கு ..//

ஆமாமா உண்மைலே மோசமாத்தான் இருக்கு

அஞ்சா சிங்கம் said...

நா.மணிவண்ணன் said...

வாலிப பசங்க நிலைமை அதவிட மோசமா இருக்கு ..//

ஆமாமா உண்மைலே மோசமாத்தான் இருக்கு...........

வாங்க தல ஒன்னு வாங்கிகரீன்களா ................

Unknown said...

ஐயையோ பழுத்துடுமே .ஆளாவிடுங்கடா சாமி . இத டீலர் ஷிப் எடுப்பாய்ங்க?

அஞ்சா சிங்கம் said...

நா.மணிவண்ணன் said...

ஐயையோ பழுத்துடுமே .ஆளாவிடுங்கடா சாமி . இத டீலர் ஷிப் எடுப்பாய்ங்க?...////

பாஸ் உங்களுக்கு ப்ரீயா தரேன் போய் நம்ம புகழ பரப்புங்க ...................

சக்தி கல்வி மையம் said...

நான் ஓட்டு போட்டுட்டேன்..
http://sakthistudycentre.blogspot.com/

தர்ஷன் said...

யோவ் உம்ம பைக்க வாங்கினா வாலிபப் பசங்க நெலம காலத்துக்கும் மோசமாகிரும்

அஞ்சா சிங்கம் said...

sakthistudycentre.blogspot.com said... நான் ஓட்டு போட்டுட்டேன்...../////

உங்களுக்கு பாதி விலைதான் ..............

அஞ்சா சிங்கம் said...

தர்ஷன் said...

யோவ் உம்ம பைக்க வாங்கினா வாலிபப் பசங்க நெலம காலத்துக்கும் மோசமாகிரும்...................../////
இது அஞ்சா சிங்கம் கண்டுபிடிப்பு கொஞ்சம் டெரரா தான் இருக்கும் .....
பயன் படுத்தி பாருங்க பழகிடும் .......................

Speed Master said...

எவ்வளவு மைலேஜ் கிடைக்கும்

அஞ்சா சிங்கம் said...

Speed Master said...

எவ்வளவு மைலேஜ் கிடைக்கும்.....................

உங்களுக்கு பின்னால சூடு வச்சா எவ்ளோ வேகமா ஓடுவீங்க ?????????????????

ரஹீம் கஸ்ஸாலி said...

அடடே....அறிய கண்டுபிடிப்பாத்தான் இருக்கும் போல...மொத்த டீலர் ஷிப்ப நம்மட்ட தந்திடுங்க....தமிழ்மணத்துல ஓட்டெல்லாம் கூட போட்டிருக்கேன்.

அஞ்சா சிங்கம் said...

ரஹீம் கஸாலி said...

அடடே....அறிய கண்டுபிடிப்பாத்தான் இருக்கும் போல...மொத்த டீலர் ஷிப்ப நம்மட்ட தந்திடுங்க....தமிழ்மணத்துல ஓட்டெல்லாம் கூட போட்டிருக்கேன்...........///////////////////

ஆஹா ஒருத்தர் சிக்கிருக்காறு இன்னக்கி கெடா விருந்துதான் ....................

ஆர்வா said...

சுறா பத்தின எச்சரிக்கை பண்ணதுக்காக வேணும்ன்னா அலர்ட் ஆறுமுகம் பிரிவுல ஒரு ஆஸ்கார் தர சொல்லலாம். ஆனா பெட்ரோல் நீங்கத்தான் போட்டுக்கணும்

Unknown said...

இந்த பதிவுக்கும் ஓட்டுப்போட்டாச்சு... உங்களுக்கு ஆஸ்கார் கொடுக்கச்சொல்லி கோஷம் போட ஆட்களையும் ரெடி பண்ணியாச்சு..

THOPPITHOPPI said...
This comment has been removed by the author.
THOPPITHOPPI said...

நோபல் பரிசுக்கு ட்ரை பண்ணுங்க(தரலைனா அந்த சைக்கிள்ள உட்க்கார வெச்சிடுங்க)

அன்புடன் நான் said...

பின்விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல ......//

நல்ல நகைச்சுவை பதிவுங்க மிக ரசித்தேன்,,,,

உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

அஞ்சா சிங்கம் said...

கவிதை காதலன் said...

சுறா பத்தின எச்சரிக்கை பண்ணதுக்காக வேணும்ன்னா அலர்ட் ஆறுமுகம் பிரிவுல ஒரு ஆஸ்கார் தர சொல்லலாம். ஆனா பெட்ரோல் நீங்கத்தான் போட்டுக்கணும்..............
நம்ம வண்டிக்கு பெட்ரோல் தேவை இல்ல சூடு வச்சா தானா ஓடும் .........

அஞ்சா சிங்கம் said...

பாரத்... பாரதி... said...

இந்த பதிவுக்கும் ஓட்டுப்போட்டாச்சு... உங்களுக்கு ஆஸ்கார் கொடுக்கச்சொல்லி கோஷம் போட ஆட்களையும் ரெடி பண்ணியாச்சு..................

அப்பாடா இப்பதான் மனசுக்கு நிம்மதியா இருக்கு ...............

அஞ்சா சிங்கம் said...

THOPPITHOPPI said...

நோபல் பரிசுக்கு ட்ரை பண்ணுங்க(தரலைனா அந்த சைக்கிள்ள உட்க்கார வெச்சிடுங்க)...............

அப்போ இதுக்கு ஆஸ்கார் தரமாடான்களா ...........
அவ்வ ...............................

அஞ்சா சிங்கம் said...

சி. கருணாகரசு said...

பின்விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல ......//

நல்ல நகைச்சுவை பதிவுங்க மிக ரசித்தேன்,,,,

உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்..........

நன்றி சார் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் உறவினர்கள் எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் ..............

Jayadev Das said...

ஹா....ஹா....ஹா....ஹா....ஹா....

அஞ்சா சிங்கம் said...

Jayadev Das said...

ஹா....ஹா....ஹா....ஹா....ஹா....
வாங்க சார் ஒன்னு வாங்கீட்டு போங்க .......

Thirumalai Kandasami said...

Mudiyala boss..

http://enathupayanangal.blogspot.com

குறையொன்றுமில்லை. said...

ஆஸ்காருக்கு ரெகமண்ட் பண்ணி மெயில் அனுப்பினேனே. பரிசுகிடைத்ததா?

தங்கராசு நாகேந்திரன் said...

அருமையான பைக் ஆனா அதை எப்படி ஓட்டுறதுன்னு முதல்ல நீங்க டெமோ பண்ணுனா நல்லா இருக்கும்

Philosophy Prabhakaran said...

// உசுருக்கு பயந்தவங்க பொங்கலுக்கு சன் டீவீ பார்ககாதிங்க சுறா போடுறானாம் ... //

இது தன்னம்பிக்கை இல்லாதவங்க பேசுற பேச்சு... நானெல்லாம் சுறா படம் பாத்தா அப்புறம் தான் வாழ்க்கையில் எந்தக் கஷ்டம் வந்தாலும் தான்கிக்குற மனப்பக்குவம் வந்துச்சு....

அஞ்சா சிங்கம் said...

Philosophy Prabhakaran said...

// உசுருக்கு பயந்தவங்க பொங்கலுக்கு சன் டீவீ பார்ககாதிங்க சுறா போடுறானாம் ... //

இது தன்னம்பிக்கை இல்லாதவங்க பேசுற பேச்சு... நானெல்லாம் சுறா படம் பாத்தா அப்புறம் தான் வாழ்க்கையில் எந்தக் கஷ்டம் வந்தாலும் தான்கிக்குற மனப்பக்குவம் வந்துச்சு............//////////////////

நான் உசுருக்கு பயந்தவங்கல மட்டும் தான் சொன்னேன் ..............வீம்புக்கு வாழ்றவங்கள பத்தி எதுவும் சொல்லல ..................

Unknown said...

சூப்பர் பாஸ்!

Sivakumar said...

என் இனிய பொங்கல் வாழ்த்துகள், சிங்கமே!!

ஆர்வா said...

//நம்ம வண்டிக்கு பெட்ரோல் தேவை இல்ல சூடு வச்சா தானா ஓடும்//

இருங்க இருங்க விஜய்கிட்ட சொல்றேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பின் விளைவுகள் மோசமாயிடும் போல இருக்கே?

Popular Posts