Tuesday, October 20, 2015

ஹிந்து நாடு ஏன் கூடாது

v


இந்த நாட்டை ஒரு இந்து மத நாடாக மாற்ற துடிப்பவர்கள் அல்லது அதுபோன்றதொரு ஆசையை மனதில் மட்டும் வைத்து கொண்டு சகிப்புத்தன்மையற்ற செயலுக்கும் மவுனம் சாதித்து மறைமுக ஆதரவு தருபவர்களும் ஏன் இந்த நாடு இந்து மத நாடாக ஆக வேண்டும் என்பதற்கும் தெளிவான ஒரு விளக்கமும் சொல்ல முடியாது .
 முஸ்லீம்களுக்கு தனி நாடுகள் இல்லையா? அவர் நாட்டில் போயி நீ இந்தமாதிரி பேசமுடியுமா ? என்கிற சொத்தை வாதத்தைதான் முன் வைக்கிறார்கள் . ஐயா அது மதவாதநாடாக இருந்து அதனால் அவர்கள் பெற்ற பயன் என்ன என்பதை ஆராய்ந்து விட்டு உன் நாட்டை மதவாத நாடாக மாற்ற உன் ஆதரவு தெரிவித்தால் நலம்.

இப்போது அனைத்து துறைகளிலும் முன்னணியில் இருக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஒரு இருண்டகாலம் இருந்தது.  ஆம் ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலும் கிருஸ்துவ மதத்தை தழுவின பின்பு விளைந்த நாசங்களை பட்டியல் இட்டால் தெரியும். அரசனின் கையில் இருக்கும் அதிகாரத்தை விட ஒரு மத நிறுவனத்திடம் அதிக அதிகாரம் குவியுமானால் அவர்கள் செயல் எப்போதும் அமைதியின்மைக்கே நம்மை இட்டு செல்லும் என்பதற்கு ஏராளமான வரலாறுகள் உள்ளது. 

போப்பின் பேச்சை மன்னன் தட்டமுடியாது சிலுவைபோர்கள் என்கிற வரலாற்றின் மிக நீண்ட போரை ஏறதாழ 200 ஆண்டுகள் சிறியது பெரியதுமாக பல சிலுவைபோர்கள் நடந்திருக்கிறது இதை ஆரம்பித்து வைத்தவர் போப் இரண்டாம் அர்பன். மதம் வெறும் போர்களை தானே உற்பத்தி செய்யும் அதில் சாவது ராணுவ வீரர்கள் தானே என்று விட்டு விட முடியுமா. அதே காலகட்டத்தில் கிறிஸ்தவ மதத்தை தழுவாதவர்கள் சடங்குகளில் நம்பிக்கை வைத்தவர்கள் எல்லாம் கூட்டம் கூட்டமாக சூனியம் செய்பவர்கள் என்று உயிரோடு கொளுத்த பட்டார்கள்.
பல ஆராய்சிகள் தடை செய்யபட்டது பல கண்டுபிடிப்பாளர்கள் கொலை செய்ய பட்டார்கள் கோப்பர்னிக்கஸ் தான் கண்டுபிடித்த சூரிய மைய கோட்பாடை இறக்கும் வரை வெளியிடவில்லை அவர் இறந்த பின் தான் அது வெளிவந்தது. கலிலேயோ அதை ஆதரித்ததால் பலவிதங்களில் கொடுமைபடுத்தபட்டார் ஏன் திருச்சபையில் தான் ஒரு பொய்யன் என்று கூறி மன்னிப்பு கேட்க்கும் நிலைமைக்கு தள்ளபட்டார். ஏன் என்றால் திருச்சபையின் அதிகாரத்திற்கு முன்னாள் மன்னனின் அதிகாரம் செல்லாது. 

இப்படி முன்னேற்றத்திற்கான எந்த தடையமும் இல்லாமல் தடுமாறி கொண்டுஇருந்த அதே ஐரோப்பிய கண்டம்தான் இன்று அறிவியல் ஆராய்ச்சியில் உலகிற்கு முன்னணி ஆகயுள்ளது .
போப்பின் அதிகாரத்தில் இருந்து வெளியேறிய பின்னர்தான் இது நடந்தது.
இனி ஒருபோதும் மத நிறுவனங்களை அரசியலில் கலக்கும் தவறை அவர்கள் செய்யமாட்டார்கள். காரணம் அவர்கள் வரலாறை வெறும் மார்க் வாங்குவதற்காக படிப்பவர்கள் அல்ல. அதில் நடந்த தவறுகளில் இருந்து பாடம் கற்பதற்காக படிப்பவர்கள். நாம் தான் வரலாறை உள்ளபடியே ஏற்றுகொள்ளும் பழக்கம் இல்லாதவர்கள் ஆயிற்றே. வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் அதை திருத்தி திருத்தி உண்மையை மறைத்து பொய்யையும் தற்புகழ்ச்சி மிக்க பாடல்களாலும் நிரப்பி விடும் பழக்கம் உள்ளவர்கள் தானே நாம். எந்த செயலுக்கும் நாம் வெட்கபட்டதே இல்லை மாறாக அதற்க்கு நியாயம் கற்ப்பிக்கும் குணம் உள்ளவர்களாக உருவாக்க பட்டுள்ளோம்.
   
ஆனால் நாம் பல்லாயிரம் ஆண்டுகளாக மதத்தின் பெயரால் ரத்தம் சிந்திகொண்டு தான் இருக்கிறோம். இஸ்லாமும் கிருத்துவமும் இந்த மண்ணிற்கு வருவதற்கு முன்னாள் இருந்தே இந்த ரத்தம் சிந்தும் படலம் நடந்து கொண்டே தான் இருக்கிறது. சைவம், வைணவம், பவுத்தம், சமணம், என்று ஏதோ ஒரு மதத்துடன் ஏதோ ஒரு காரணத்திற்காக அனல்வாதமும் புனல்வாதமும் புரிந்துகொண்டுதான் இருந்திருக்கிறோம். மற்றவர்களை கழுவில் ஏற்றுவது எப்போது நாம் ரசிக்கத்தகுந்த வெற்றியாகவே கொண்டாடி கொண்டிருந்திருக்கிறோம். வெள்ளையனின் வருகைக்கு பின்னால் சமத்துவம் சகோதரத்துவம் என்று லேசாக முன்அடி எடுத்து வைத்தால் அதற்குள் நம்மை பின்னால் இழுக்க ஒரு சக்தி கிளம்பிவிட்டது. 

இதனால் விளையபோகும் பாதிப்பு தெரியாமலேயே அந்த சக்திக்கு எரிபொருளாக ஆவதற்கு இங்கு பலர் துடிக்கிறார்கள். இன்று நீ மாட்டுகறி சாப்பிடாதே என்று சொல்பவன் நாளை நீ இதை மட்டும் தான் சாப்பிடவேண்டும் என்று உன் சாப்பாட்டை தீர்மானிப்பான் . இன்று நீ இதை எழுதாதே என்று சொல்பவன். நாளை நீ இதை மட்டும்தான் எழுதவேண்டும் அதையும் இப்படிதான் எழுத வேண்டும் என்று கட்டளை இடுவான். பிறகு இவன் மட்டும்தான் படிக்கணும் இவன் எல்லாம் படிக்கவே கூடாது அது நம்ம தர்மத்துக்கு விரோதமானது என்று சொல்வான். அப்போது நீ தலையில் காவி துண்டை சுற்றிக்கொண்டு கையில் காய்ச்சிய ஈயத்தோடு வீடு வீடாக சென்று எவன் காதில் ஊற்றலாம் என்கிற வெறியோடு சுற்றிக்கொண்டுதான் இருப்பாயா ?
சமத்துவமும், அமைதியும், குறிப்பாக நாகரிகமும் உள்ள ஒரு மதவாத நாடு நம்மால் காட்டமுடியுமா ? 
அப்படி இந்த நாடு தன் மதகொள்கையினால் மட்டுமே முன்னேறியது எல்லா மக்களும் ரத்தம் சிந்தாமல் அமைதியாக வாழ்கிறார்கள் என்று ஒரு முனுதாரனமான நாட்டை காட்டுங்கள் அப்படி ஒன்று இருந்து விட்டால் வாருங்கள் நாமும் கத்தியோடு கிளம்பலாம் இந்த நாட்டை ஒரு இந்துமத் நாடாக மாற்ற.  
                       

Popular Posts