நம்ம நாட்டுல ஏமாத்துறது தப்பு இல்ல சார் .
அது ஒரு கலை. ஒரு குறிப்பிட்ட வரியை அரசாங்கத்துக்கு குடுத்துட்டா அரசாங்க அனுமதியோட கொள்ளை அடிக்கலாம்.
உங்களில் பல பேருக்கு இந்த மாதிரி மெசேஜ் வந்திருக்கும்.
ரஜினிகாந்த் யாரு ?
a. நடிகர்.
b.விண்வெளிவீரர்.
c.கிரிக்கெட் வீரர்.
சரியான பதில் சொல்லி ஸ்கோடா கார் வெல்லுங்கள் .
அடடா ரொம்ப ஈசியா இருக்கே நாம ரிப்ளை அனுப்பி கார் தூக்கிடலாம்.
அப்புறம் இந்த கார எங்க விடுறதுன்னு யோசனை போய்டும் .
ஆனா ஆப்பு அதுக்கப்புறம் தான் இருக்கு .
அடுத்த கேள்வி வரும் .
ஜே. ஜெயலலிதா தி.மு.கா.வா ஆ.தி.மு.கா.வான்னு
என்ன தல லைட்டா சுத்துதா.
இது ஒரு வகை.
எனக்கு ஒரு மெசேஜ் வந்தது 5 க்கு பின்னால பத்து சைபர்.
அது எவ்ளோ பணம்னு என் குருவி மண்டைக்கு எட்டவே இல்ல.
நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம்.வந்து இந்த பணத்த வாங்கிட்டு போய்டுங்க ரொம்பநேரம் தூக்கி வச்சுகிட்டு நிக்கிறோம் சீக்கிரம் வந்து வாங்கிட்டு போங்க மறக்காம உங்க அக்கௌன்ட் நம்பர் அனுப்புங்க அப்படின்னு.
அவ்ளோதான் சும்மா ஜிவ்வுன்னு ஆய்டுச்சி.
ஆனா ஒரு நாள் முழுவதும் மண்டைய சிலுப்பிகிட்டு காலர தூக்கிக்கிட்டு
கண்ணா இந்த பஸ் என்ன வெல கேளு. இந்த தெரு என்ன வெல கேளு.
இந்த ஏரோபிலேன் வாங்கனும்ம்னா எவ்ளோ செலவுஆகும்னு விசாரிச்சுகிட்டு அலைஞ்சேன்.
அப்புறம் என்ன அசிங்கபட்டான் மண்டையன்.
இப்போ புதுசா ஒரு குரூப்பு ராஜ் டிவில கெளம்பி இருக்கு ராத்திரி பத்து மணிக்கு மேல ரெண்டு பேரு நின்னுகிட்டு
வள வளன்னு பேசிக்கிட்டு இருப்பாங்க.பின்னால நம்ம டாக்குடர் தம்பி போட்டோ இருக்கும்.
கொஞ்சம் கூட கெட்டப்பு மாத்தாமல் (இருந்தா தானே மாத்துறதுக்கு )
இந்த படத்துல இருக்குறது யாரு சீக்கிரம் கண்டுபிடிச்சு சொல்லுங்க உங்களுக்கு நாற்பதுஆயிரம் பரிசு உடனே போன்
பண்ணுங்கனு பேசிக்கிட்டு இருக்கும். நம்பி போன் பண்ணுனா அவ்ளோதான் உங்க கால் வெய்டிங்கில் உள்ளது.
(என் கால் என்கிட்டதான் இருக்குது.) தயவு செய்து ஹோல்ட் செய்யவும். அப்டின்னு வரும் எவ்ளோ நேரம் ஆனாலும் எடுக்க மாட்டாங்க என்னடா இது சோதனைன்னு பார்த்தா நம்ம பாலன்ஸ் முன்நூருபா காலி ஆகி இருக்கும்
அதுக்கு அப்புறம் தான் தெரியும் அந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு கெடையாது.
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒரு கால் பத்து ருபாய் எவ்ளோ புண்ணியவான் ஏமாந்தான்களோ.
இன்னும் எத்தனை பேரு ஏமாற போறாங்களோ. அதனால என்ன இப்போ அவங்க அரசாங்கத்துக்கு வரி கெட்டுறாங்க
அவங்களுக்கு அந்த உரிமை இருக்கு சார்.
நாமும் வரி கெட்டலாம் வியாபாரத்த ஆரம்பிக்கலாம்.
இப்போ உங்களுக்கான கேள்வி
மங்குனி அமைச்சர் என்பது யார் .
1. அமெரிக்க அதிபர்.
2. கலை கூத்தாடுபவர்.
3. டாகுட்டர் விஜய் ரசிகர்.
4. மொக்கை பதிவர்.
சரியான பதில் சொல்பவர்களுக்கு 12,000,000,000,000 $ யு.எஸ். டாலர் தரப்படும்.
பதில் தெரியாதவர்கள் பணகாட்டு நரியிடம் கேட்டு அனுப்பலாம்.
ஒரு மெசேஜ் 50 ரூபாய்தான்.
அனுப்ப வேண்டிய நம்பர் 9444125010.