Wednesday, December 22, 2010

வெங்காய வடை

v

இந்த வார்த்தையை பெரியார் அதிகமாக பயன்படுத்தினார்.
அதாவது ஒண்ணுமே இல்லாத விசயத்திற்கு வெங்காயம் அப்படின்னு சொல்லுவார்.
உண்மையில் அது ஒண்ணுமே இல்லாத விசயமா?
ஆட்சியே கவிழ்த்திருக்கு பாஸ்.
ஒரு கிலோ கோழிக்கறி நூறு ருபாய் . ஒருகிலோ வெங்காயமும் இப்போ நூறு ருபாய்.
அப்படின்னா அதோட மதிப்ப புரிஞ்சிகங்க.
சரி ஆனது ஆய்டிச்சி என்கிட்டே ஒரு கிலோ வெங்காயம் இருக்கு அத எப்படி பாதுகாப்பா வச்சிகிறதுன்னு.
ரெண்டு நாளா ஒரு கொழப்பம். பாங்க்ல அத வைக்க முடியாதாம்.
நான் என்னதான் பண்றது.
அக்கம் பக்கத்துக்கு வீட்டுகாரங்களுக்கு தெரிஞ்சா அவ்ளோதான்.
இதனால என் உயிர்க்கு ஏதாவது ஆபத்து வருமோன்னு பயமா இருக்கு.


வெங்காயம் ஒன்னும் சாதாரண விஷயம் இல்ல சார்.
உலகத்தின் முதல் வேலை நிறுத்த போராட்டதிற்கு காரணம் நம்ம வெங்காயம் தான்.(அப்போ வெங்காயம் கம்யுனிஸ்டா )
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் எகிப்தில் பிரமிட் கட்டும் அடிமைகள்தான் வரலாற்றில் முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள் அதற்க்கு காரணம் ரொட்டியோடு வெங்காயமும் சேர்த்து தரவேண்டும் என்பதுதான் அவர்கள் கோரிக்கை.
வெங்காயத்திற்கும் ஆட்சியாளர்களுக்கும் அப்படி ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கு.
சென்ற முறை பா.ஜா.கா. அரசுக்கு வேங்காயதால்தான் வீழ்ச்சி ஏற்ப்பட்டது.
சரி நம்ம விசயத்திற்கு வருவோம் என் கையிருப்பில் இருக்கும் வெங்காயத்தை பத்திரமாக பாதுகாப்பது எப்படி?
நல்ல ஐடியா சொல்றவங்களுக்கு ஒரு வெங்காய தோசை தரப்படும்.

(பின்னூட்டம் இடுபவர்களுக்கு வெங்காய வடை தரப்படும்)
 

Tuesday, December 14, 2010

காதலர்கள் ஜாக்ரதை

v
கல்யானம்னாலே ஏதாவது கலாட்டா தகராறு நடக்கும்.
கல்யாணமே கலாட்டாவானா?
எத்தன படத்துல பொண்ணுங்க வாழ்கைய கெடுத்த வில்லன அந்த பொண்ணோட அண்ணன் கடைசில வழிக்கு கொண்டுவந்து அந்த பொண்ணுக்கே அவன கட்டி வச்சிருக்கான்.
இதுல உங்களுக்கு  உடன்பாடு இருக்கா?
காதல் சத்தியமா புனிதமும் கெடயாது ஒரு மண்ணாங்கட்டியும் கெடயாது.
ரெண்டு பேரு கல்யாணம் செஞ்சிகுற நோக்கத்தோடு நெருங்கி பழகுவது தான் காதல்.
அப்படி பழகும் பொது இருவருக்கும் புரிதல் சரி இல்லனா பிரிந்து விடுவது நல்லது.
இந்த கொடுமைய பாருங்க. இந்த பயபுள்ள லவ் பண்ணுன பொண்ண கட்டிக்க முடியாதுன்னு சொன்னானாம்.
அவன் நிலமைய பாருங்க. பயமா இருந்தா லவ் பண்ணாதிங்க.
இல்லனா லிவிங்டுகதரா இருந்துட்டு போங்க.
இதய பலகீனமான காதலர்கள் இதை பார்க்க வேண்டாம்.



இந்த சம்பவம் யாருக்காவது சரி என்று பட்டால் சொல்லவும்.
தவறுன்னு சொல்றவங்க மட்டும் ஒட்டு போட்டா போதும்.


Monday, December 13, 2010

மரணபயம்

v

இந்த பதிவில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனை அல்ல உண்மையில் நடந்தது.
சில வருடங்களுக்கு முன்னால் நான் என் கல்லூரி நண்பர்களுடன் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவாரத்தில் உள்ள காட்டுக்கு அட்வென்ச்சர் டூர் சென்றேன்.
ஸ்ரீவள்ளிபுத்தூர் அருகே இடம் சரியாக தெரியவில்லை .
அடர்ந்த காடு நிறைய வனவிலங்குகள் காட்டு அருவி .
கூட்டம் கூட்டமாக யானைகள்.எங்கு போவதென்றாலும்  நடந்து தான் செல்லவேண்டும்.
பாதை கிடையாது எங்களுக்கு வழி காட்ட பழங்குடி சிறுவன் ஒருவன் வந்திருந்தான்.
அவன் செருப்பு எனக்கு விநோதமாக தெரிந்தது.
லாரி டயரை வெட்டி செருப்பு போல் தைத்திருந்தான்.
எனக்கு அதை மாட்டி பார்க்க ஆசை.என் ஷூவை குடுத்து அவன் செருப்பை வாங்கி மாட்டிக்கொண்டேன்.
நடக்க கொஞ்சம் சிரமமாக இருந்தது. இருந்தாலும் மனது உற்சாகமாக இருக்கும் போது சிரமம் பெரிதாக தெரியாது.
ஒரு மலை உச்சியில் இருக்கும் போது இது தான் யானை வழுக்கி பாறை என்று சொன்னான்.
ஆர்வகோளாறு காரணமாக அதன் முனை வரை போய் எட்டிப்பார்த்தேன்.
அதன் பிறகு நான் அனுபவித்த அந்த ஆறு வினாடிகள்  பற்றி தான் உங்களோடு பகிர்கிறேன்.
பாறை முனையில் பாசி படிந்து இருந்ததால் கால் வழுக்கி விட்டது.
அது மிகவும் செங்குத்தான மலை. வினாடியில் எல்லாம் மாறி விட்டது கீழ் நோக்கி வேகமாக விழுந்து கொண்டிருந்தேன்.
மரணத்தை மிக அருகில் சந்தித்தவன் நான். மரண பயம் என்று சொல்கிறார்களே அது மரணத்தை நெருங்கி பார்க்கும் பொது வருவதா? அல்லது தப்பிக்க ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று மூளை சிந்திக்கும் போது வருவதா?
நான் விழும் போது முதலில் காலம் என்னை விட்டு விலகியதை உணர்ந்தேன்.
ஏனென்றால் அதிகபட்சம் ஆறு வினாடிகள் இருக்கலாம் ஆனால் ரொம்பநேரம் அந்தரத்தில் பயணம் செய்த உணர்வு இருந்தது.
பயம் என்ற உணர்ச்சி அப்போது வரவில்லை. மனது மிக லேசாகவும் முழு அர்ப்பணிப்பு உணர்வோடு கீழ் நோக்கி விழுந்து கொண்டிருந்தேன். எந்த வித பதட்டமோ சிந்தனையோ வரவில்லை.
நடுவில் ஒரு புதரில் சிக்கி கொண்டு அதை கெட்டியாக பிடித்து கொண்டேன்.
அந்த வினாடியில் என் நிலைமை புரிய ஆரம்பித்தது.
இன்னும் கெட்டியாக அந்த புதரை பிடித்து கொண்டேன். பயம் நடுக்கத்தில் என் இதயதுடிப்பை நான் கேட்க முடிந்தது.
மீண்டும் காலம் வேகமாக நகர்வதாக உணர்ந்தேன்.
பயத்தில் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பிறகு அந்த பழம்குடி மக்கள் என்னை லேசான சிராய்ப்புகளுடன் காப்பாற்றி விட்டார்கள்.
என் கேள்வி என்னவென்றால் மரணம் உண்மையில் பயங்கரமானதா?
எனக்கு அப்படி தெரியவில்லை ஆபத்தில் இருக்கும் போது நம் உடலில் estrogen அளவு அதிகம் சுரந்து பயம் இல்லாத வலி இல்லாத ஒரு வித பரவச உணர்வுடன் வைத்திருக்கிறது.
இயற்கைக்கு என்ன ஒரு கருணை.
உங்கள்ளில் யாருக்காவது இந்த மாதிரி அனுபவம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன் ஆவலுடன் இருக்கிறேன்.

 

 


Monday, December 6, 2010

நான் ரொம்ப வெகுளி பாஸ்

v
 எனக்கு சின்ன வையசுல இருந்து ஒரு பழக்கம் இருக்கு.
எது கெடச்சாலும் படிச்சிக்கிட்டு இருப்பேன்.
எங்கயாவது வெளியூர் பயனம்ன்னா கெடைக்கிற எல்லா புக்ஸ் எடுத்துப்பேன் .
ஜட்டி பனியன கூட மறந்திருப்பேன்.ஆனா புக்ஸ் எடுக்க மறக்க மாட்டேன் .
படிக்க ஒன்னும் கெடைக்கலனா கடைகளின் பெயர் பலகை படித்து கொண்டிருப்பேன்.
அவ்வளவு அப்பாவி சார் நானு. அப்பேர் பட்ட எனக்கு நேத்து ஒரு சோதனை சார்.
ஒரு நண்பனை பார்க்க ராயபேட் போயிருந்தேன்.பேசி கொண்டு கடை தெருவில் நின்று கொண்டிருந்தோம் .
அங்கு  ஒரே கலர்கள் கூட்டம். அந்த இடம் ரொம்ப குளுமையாய் இருந்தது.
அப்போது ஒரு பெண் ட்ஷிர்ட் ஜீன்ஸ் போட்டு என் எதிரில் வந்தால்.
நமக்கு தான் எங்க என்ன எழுதிருந்தாலும் படிக்கிற பழக்கமாச்சே அதில் என்ன எழுதி இருக்குன்னு கர்ம சிரத்தையா படிச்சிகிட்டு இருந்தேன். ஆனா நம்மள சுத்தி இருக்கிறவங்க எல்லாம் என்னையே பார்த்துகிட்டு இருக்காங்க.ஐயா நான் சத்தியமா எழுத்ததான் பார்த்தேன்னு சொன்னா என் நண்பன் கூட நம்ப மறுக்கிறான். (நீங்க மட்டும் என்ன நம்பவா போறீங்க)
அதுக்காக நான் ராமராஜன் மாதிரி தீ மிதிக்க முடியாது.
இப்போ உங்களுக்காக சில ட்ஷிர்ட் வாசகம்




























பொதுவா இந்த மாதிரி ட்ஷிர்ட் போடும் பெண்கள் ரொம்ப தைரியமானவர்கள். மிகுந்த தன்னம்பிக்கை உடையவர்கள்
பயம் இல்லாதவர்களாக இருப்பார்கள் இவர்களிடம் வாலாட்ட ஆண்கள் கொஞ்சம் தயங்குவார்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து.
அதில் இருக்கும் நகைச்சுவை கொஞ்சம் ரசிக்கிற மாதிரி தான் இருக்கு…….


(நொறுக்கு தீனி )

பொதுவாக அமெரிக்க அதிபர்கள் வேறு நாட்டு அதிபர்களை சந்திக்கும் போது அவர்கள் மனைவிமார்களை முத்தம் குடுத்து வரவேற்ப்பார்கள். ஆனால் சீன அதிபர் எம்புட்டு உசாருனு பாருங்க.....................................................................











Wednesday, December 1, 2010

வற்றாத கண்ணீர்

v
ரெண்டு நாளா எனக்கு வீட்டிற்க்கு செல்லும் மனம் இல்லை.
போனாலும் யாரும் என்னிடம் சரியாக பேசுவதில்லை .
நான் என்ன தவறு செய்தேன் ?
பொறுப்பில்லாத ஒருவனுக்கு மகனாக பிறந்ததுதான் என் தவறு.
என் தங்கை பிறந்து ஆறு மாதத்தில் என் தந்தை யாரோடோ ஓடி போய்விட்டார்.
அதன் பிறகு நாங்கள் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் அல்ல.
என்ன அம்மா என் கனவில்  கூட தையல் எந்திரம் இல்லாமல் காட்சி தர மாட்டாள்.
ஆனால் காலம் எங்களை மோசமாக தண்டிக்க வில்லை .
நான் நன்றாக படித்தால் . என் பள்ளிகூடம் என்னை படிக்கவைத்தது.
என் தலைமை ஆசிரியர் என் மேற் படிப்புக்கு உதவி செய்தார்.
நானும் நன்றாக படிப்பை முடித்து. இப்போது நல்ல இடத்தில் வேலை செய்கிறேன்.
ஊருக்கு வெளியே அரை கிரௌண்ட் இடத்தில் வீடு கட்டிவிட்டேன்.
இப்போது தங்கைக்கு வரன் பார்த்துகொண்டிருக்கிறேன்.

இந்த நேரத்தில் சோதனையாக சின்ன வயதில் பொறுப்பு இல்லாமல் ஓடி போன என் அப்பா போன மாதம் திரும்பி வந்தார்.
உடம்புக்கு முடியாமல் கிழிந்த நார் மாதிரி பார்க்க பரிதாபமாக இருந்தாலும் நான் வீட்டில் சேர்க்க வில்லை.
அவ்ளோதான் என் தாய்க்கு வந்ததே கோபம். உன் தயவில் நான் வாழமுடியாது நானும் இப்பவே கிளம்புறேன் அப்டின்னு பொட்டிய தூக்கிட்டு கெளம்ப தயார் ஆய்ட்டா. நான் இருப்பதே என் தாய்க்கும் தங்கைக்கும் தான்.
 இவர்கள் இல்லாமல் என் உலகம் இல்லை.சரி என்று சேர்த்து கொண்டோம்.

என் உலகம் ரொம்ப சிறுசு சார். வீட்டில் இருந்து காலை கிளம்பினால் நான் கேட் திறந்த உடன் என் வருகைக்காக காத்திருக்கும் ஒரு நன்றி உள்ள ஜீவன் குமரன் . இந்த பெயர் நான் தான் அதற்க்கு வைத்தேன்.
வேகமாக என் பைக்கிற்கு முன்னாள் ஓடி சென்று தெரு முனை கடைக்கு என்னை விட வேகமாக போய்விடும்.
நான் அதற்காகவே மெதுவாக ஒட்டி செல்வேன் .நான் வரும் வரை அங்கே குதித்து கொண்டும் வாலை ஆட்டி கொண்டும்.
அது என்னை எதிர்பார்த்து நிற்கும்.அந்த காட்சி எனக்கு ஒரு கவிதை.

டீ கடையில் அதற்க்கு ரெண்டு பிஸ்கட் எனக்கு ஒரு கிங்க்ஸ். மீண்டும் நான் சாயங்காலம் வரும் நேரம் அதற்க்கு தெரியும்.
அந்த டீ கடையில் காத்திருக்கும் மீண்டும் அதற்க்கு ரெண்டு பிஸ்கட் எனக்கு ஒரு கிங்க்ஸ். அவ்ளோதான் என் நட்பு வட்டம்
.நேற்று என் தந்தை இறந்துவிட்டார்.
வீட்டில் ஒரே அழுகை என் தாய் மட்டும் அல்ல என் தங்கை கூட அவளுக்கு என்ன தெரியும். எப்படித்தான் இந்த பெண்களுக்கு
கண்ணீர் வருமோ தெரியாது. வந்திருந்த சொந்தபந்தங்கள் எல்லாம் என்னிடம் வந்து தம்பி துக்கத்த அடக்கி வைக்க கூடாது
அழுதிருன்னு அட்வைஸ் வேற. எனக்கு அழுகை வந்தால்தானே அழுவதற்கு. வேண்டாத விருந்தாளி  வீட்டை விட்டு கிளம்பும்போது எப்படி இருக்குமோ அந்த மனநிலையில் தான் நான் இருந்தேன்.
ஒரு வழியாக காரியங்களை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் யாரும் என்னிடம் சரியாக பேசவில்லை.
என்ன இருந்தாலும் இவ்ளோ கல்நெஞ்சு ஒருத்தனுக்கு இருக்க கூடாது. பெத்த தகப்பன் சாவுக்கு கண்ணீர் விடாதவன் மனுசனா எனக்குனு புள்ளயா பொறந்தியே என்று என் தாய் திட்டுவது என் காதில் விழுகிறது.
எனக்கு என்ன கண்ணீர் வறண்டுவிட்டதா.?
தெரியவில்லை.

இன்று வழக்கம் போல் நான் ஆபீஸ் கிளம்பினேன். வெளியே வந்தவுடன் வந்து நிற்கும் குமரனை காணும்.
மெதுவாக அதை எதிர்பார்த்துக்கொண்டு வண்டியை ஒட்டி டீ கடையை அடைந்தேன்.
இன்னும் அது வராததால் டீ கடைகாரரிடம் விசாரித்தேன்.
அண்ணே குமரன பார்த்தீங்களா?
தம்பி உனக்கு விஷயம் தெரியாதா காலைல லாரிகாரன் அடிச்சுட்டான்பா அந்த தெருமுனைல.
எனக்கு காலுக்கு கீழ் தரை நழுவியது போல் இருந்தது.
மெதுவாக அந்த இடத்திற்கு போனேன்.
லாரி டயர் அதன் வயிற்றில் ஏறியதால் ஒரே ரத்தசகதியாக இருந்தது.
அதை அப்படியே என் கைகளில் அள்ளி கொண்டு என் வீடு நோக்கி நடந்தேன்.
என் வீட்டு தோட்டத்தில் அதை புதைத்தேன்.
புதைத்த இடத்தின் அருகில் அமர்ந்து பெரும் குரல் எடுத்து அழ ஆரம்பித்தேன்........................ 

Tuesday, November 30, 2010

கொள்ளை அடிக்கலாம் வாங்க

v


நம்ம நாட்டுல ஏமாத்துறது தப்பு இல்ல சார் .
அது ஒரு கலை. ஒரு குறிப்பிட்ட வரியை அரசாங்கத்துக்கு குடுத்துட்டா அரசாங்க அனுமதியோட கொள்ளை அடிக்கலாம்.
உங்களில் பல பேருக்கு இந்த மாதிரி மெசேஜ் வந்திருக்கும்.
ரஜினிகாந்த் யாரு ?

a. நடிகர்.

b.விண்வெளிவீரர்.

c.கிரிக்கெட் வீரர்.

சரியான பதில் சொல்லி ஸ்கோடா கார் வெல்லுங்கள் .

அடடா ரொம்ப ஈசியா இருக்கே நாம ரிப்ளை அனுப்பி கார் தூக்கிடலாம்.
அப்புறம் இந்த கார எங்க விடுறதுன்னு யோசனை போய்டும் .
ஆனா ஆப்பு அதுக்கப்புறம் தான் இருக்கு .
அடுத்த கேள்வி வரும் .
ஜே. ஜெயலலிதா தி.மு.கா.வா .தி.மு.கா.வான்னு
என்ன தல லைட்டா சுத்துதா.

இது ஒரு வகை.

எனக்கு ஒரு மெசேஜ் வந்தது 5 க்கு பின்னால பத்து சைபர்.

அது எவ்ளோ பணம்னு என் குருவி மண்டைக்கு எட்டவே இல்ல.

நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம்.வந்து இந்த பணத்த வாங்கிட்டு போய்டுங்க ரொம்பநேரம் தூக்கி வச்சுகிட்டு நிக்கிறோம் சீக்கிரம் வந்து வாங்கிட்டு போங்க மறக்காம உங்க அக்கௌன்ட் நம்பர் அனுப்புங்க அப்படின்னு.

அவ்ளோதான் சும்மா ஜிவ்வுன்னு ஆய்டுச்சி.

ஆனா ஒரு நாள் முழுவதும் மண்டைய சிலுப்பிகிட்டு காலர தூக்கிக்கிட்டு

கண்ணா இந்த பஸ் என்ன வெல கேளு. இந்த தெரு என்ன வெல கேளு.

இந்த ஏரோபிலேன் வாங்கனும்ம்னா எவ்ளோ செலவுஆகும்னு விசாரிச்சுகிட்டு அலைஞ்சேன்.

அப்புறம் என்ன அசிங்கபட்டான் மண்டையன்.

இப்போ புதுசா ஒரு குரூப்பு ராஜ் டிவில கெளம்பி இருக்கு ராத்திரி பத்து மணிக்கு மேல ரெண்டு பேரு நின்னுகிட்டு

வள வளன்னு பேசிக்கிட்டு இருப்பாங்க.பின்னால நம்ம டாக்குடர் தம்பி போட்டோ இருக்கும்.

கொஞ்சம் கூட கெட்டப்பு மாத்தாமல் (இருந்தா தானே மாத்துறதுக்கு )

இந்த படத்துல இருக்குறது யாரு சீக்கிரம் கண்டுபிடிச்சு சொல்லுங்க உங்களுக்கு நாற்பதுஆயிரம் பரிசு உடனே போன்

பண்ணுங்கனு பேசிக்கிட்டு இருக்கும். நம்பி போன் பண்ணுனா அவ்ளோதான் உங்க கால் வெய்டிங்கில் உள்ளது.

(என் கால் என்கிட்டதான் இருக்குது.) தயவு செய்து ஹோல்ட் செய்யவும். அப்டின்னு வரும் எவ்ளோ நேரம் ஆனாலும் எடுக்க மாட்டாங்க என்னடா இது சோதனைன்னு பார்த்தா நம்ம பாலன்ஸ் முன்நூருபா காலி ஆகி இருக்கும்

அதுக்கு அப்புறம் தான் தெரியும் அந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு கெடையாது.

ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒரு கால் பத்து ருபாய் எவ்ளோ புண்ணியவான் ஏமாந்தான்களோ.

இன்னும் எத்தனை பேரு ஏமாற போறாங்களோ. அதனால என்ன இப்போ அவங்க அரசாங்கத்துக்கு வரி கெட்டுறாங்க

அவங்களுக்கு அந்த உரிமை இருக்கு சார்.

நாமும் வரி கெட்டலாம் வியாபாரத்த ஆரம்பிக்கலாம்.

இப்போ உங்களுக்கான கேள்வி

மங்குனி அமைச்சர் என்பது யார் .

1. அமெரிக்க அதிபர்.

2. கலை கூத்தாடுபவர்.

3. டாகுட்டர் விஜய் ரசிகர்.

4. மொக்கை பதிவர்.

சரியான பதில் சொல்பவர்களுக்கு 12,000,000,000,000 $ யு.எஸ். டாலர் தரப்படும்.

பதில் தெரியாதவர்கள் பணகாட்டு நரியிடம் கேட்டு அனுப்பலாம்.

ஒரு மெசேஜ் 50 ரூபாய்தான்.

அனுப்ப வேண்டிய நம்பர் 9444125010.



Saturday, November 27, 2010

மரண வெட்டு

v


அஞ்சா சிங்கத்தையே அலறவச்ச ஒரு மாவீரன் இருக்கார் .
இது ஐயப்பசாமி சீசன் ஆச்சே .
இப்போபோய் இவன் வீராசாமீய பத்தி பேசுறானேன்னு யாரும் என்ன தப்பா நெனைக்க வேண்டாம் .
நம்ம அமைப்பு அப்படி .
இந்த உலக நாயகனுக்கு ஏன் இன்னும் ஆஸ்கார் குடுகலன்னு எனக்கு புரியல.
இந்த படத்த பார்த்தா நீங்களும் அப்டிதான் நினைப்பீங்க.

o.k ..........o.k............. o.k.................




அப்புறம் தன்னம்பிக்கைக்கும் தலைகனத்துகும் ஒரு நூல் வித்யாசம்னு சொன்னாங்க .
அப்டீனா விஜய T.ராஜேந்தர்க்கு இருப்பது தன்னம்பிக்கையா அல்லது தலைகனமா .?
தலைகனம்னு சொல்றவங்க ப்ளஸ் ஓட்டும் . தன்னம்பிகைனு சொல்றவங்க மைனஸ் ஓட்டும் போடுங்க .

அய்யய்யோ .................தெரியாம வாய்தவறி சொல்லிட்டேன் .........
எனக்கு யாரும் காசு வெட்டி போட்றாதிங்க அப்பு ......

Friday, November 26, 2010

தமிழேண்டா

v


தமிழன் என்றொரு இனம் உண்டு
தனியே அதற்கொரு குணம் உண்டு .

சின்ன வயசுல படிச்சது. சரி அது என்ன குணம்னு நானும் யோசிச்சு பார்த்தேன் .

பஸுல இடம் இருந்தாலும் தொங்கிகிட்டே போவது .
காலை பத்துமணிக்குதான் கடை தொரபாங்கனு தெரிஞ்சாலும் .
எட்டு மணிக்கெலாம் வாசல்ல இருந்துகிட்டு சார் கடை எப்போ சார் தொரபீங்கனு கேக்குறது .
ஹோட்டல்க்கு சாப்பிடபோனா பில்லு அடுத்தவன எப்படி கட்ட வைக்கிறது.
இப்படி நிறைய குணம் இருந்தாலும் .
ஸ்பெஷல் குணம் ஒன்னு இருக்கு சார்.
பள்ளிகூடத்துல சைன்சு வாத்தி சொன்னதெல்லாம் பாத்ரூம் செவுருல வரைஞ்சி பழகுறது.
அதான் படம் வரைஞ்சு பாகங்கள குறிக்கிறது .
மரத்த கண்டா சிற்பிமாதிரி பெயர செதுக்கிடுறாங்க. கஷ்டப்பட்டு மலை மேல ஏறி அங்க ரெண்டு பேரு பெயர் ஒரு ஆர்ட்டின் அப்புறம் ஒரு அம்புகுறி.
அவ்ளோதான் பிறப்பின் பயன் அடைஞ்சிடுறாங்க.


நானும் சின்னவயசுல இப்டிதான் சார் எங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு வக்கீல் இருந்தாரு
அவரு புதுசா ஒரு நேம் போர்டு வச்சாரு.

கோ.அரங்கநாதன் ma.ml.

நானும் என் நண்பனும் நைட்டோட நைட்டா புள்ளிய மட்டும் அளிச்சிடோம்
அவரு பாவம் சாகுற வரைக்கும் கோரங்கநாதன் அப்படிங்குற பேரோடதான் வாழ்ந்தார் .

இது நான் சமீபத்துல பார்த்தது ஒரு பஸ் டிரைவர் சீட்டுக்கு பின்னால் ஒரு விளம்பரம் பார்த்தேன் .

அதை யாரோ கலை ஆர்வம்கொண்ட ஒரு சுரண்டல் கலைஞ்ன் மேனக்கட்டும் உங்கார்ந்து ஒருமணி நேரம் சொரண்டிருகான்.

அந்த கலைமாமணி என்ன சொல்லவருதுனு உங்களுக்கு புரியுதா.

இந்த குசும்புல மட்டும் தமிழன யாரும் அசைக்கமுடியாது...... அசைக்கமுடியாது..........


Thursday, November 25, 2010

லிவ்விங் டுகெதர் காலத்தின் கட்டாயம்

v

ஹே நானும் பதிவு எழுத ஆரம்பிச்சுட்டேன் .
நானும் பிரபல பதிவர் ஆகிடவேண்டியதுதான் .

கமிங் டு தி பாயிண்ட் கொஞ்சநாள இந்த மேட்டர் பலபேர் மண்டைய கொடைஞ்சுக்கிட்டு இருக்கு .
நான் மட்டும் என்ன விதிவிலக்கா?
அதான் என் குருவி மண்டைக்கு எட்டியது .

இதை ஆதரிப்பவர்கள் எதிர்பவர்கள் என்று பதிவுலகமே
ரெண்டா பிரிஞ்சுகெடக்கு.

ஆதரிபவர்கள் கருத்து என்னானா தனிமனித உரிமை
அதை தவறு சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை என்பது.

எதிர்பவர்கள் கருத்து என்னனா இது கலாசார சீரழிவு .

இதை அனுமதித்தால் குடும்பம் என்ற கட்டுமானம் சிதைக்கப்படும் என்பது .

சரி நீ என்ன சொல்ல வரணு கேக்றீங்களா?.

சொல்றேன் சொல்றேன் . அதுக்கு தானே வந்திருகோம்.

கலாசாரம் அப்டினா என்ன சார் ?

நம்ம பன்னிக்குட்டி கூட இந்த கேள்விய கேக்குறார்.

இந்தியால ஒரு இடம் இருக்கு சார் ஹிமாலய பக்கதுல மலாங் அப்டின்னு.

அங்க பாருங்க ஒரு குடும்பத்துக்கு ஒரு பொண்ணுதான் கட்டுவாங்க மூத்த பையன் கல்யாணம் பண்ணினால் அவனுக்கு பின்னால் உள்ள அனைவர்க்கும் அந்த பெண் தான் மனைவி.

திருமண செலவு அதிகம் மற்றும் பெண்களின் எண்ணிக்கை குறைவு போன்ற காரணங்களால் காலகாலமாக இந்த

பழக்கத்தை கடைபிடிகிறார்கள் .

இதுவும் இந்தியாலதான் தல நடக்குது.

செக்ஸ் என்பது பொருளாதாரம், மக்கள்தொகை மற்றும் தேவையை பொருத்தது.

உணவு பஞ்சம் வரும்போது திமிங்கலங்கள் எல்லாம் கூட்டம்மாக தற்கொலை செய்வதுபோல.

மக்கள் தொகை குறைவாக இருக்கும்போது பலதார முறை சரியானதீர்வாக இருக்கும்.

அதே நேரத்தில் மக்கள் தொகை அதிகமிருக்கும் போது ஒரு தாரமுறை ஓகே.

மக்கள் தொகை மிக அதிகமாக இருக்கும்போது உளவியல்ரீதியாக திருமணத்தின் மீதான நாட்டம் குறைந்துவிடும்.

அதற்கு கமிட்மென்ட்குள் சிக்க விரும்பாதவர்களின் எண்ணிக்கை அதிகமாவதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு திருமணத்தின் தேவை இப்போது குறைந்திருக்கு.

கல்யாணம் பன்னாமல் வாழும் ஆண்களின் எண்ணிக்கை. பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு

குழந்தை வளர்க்கும் பொறுப்பை அவர்கள் விரும்பாததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆண் பெண் உறவு பல்லாயிரம் ஆண்டுகளாக பல பரிமாணம் தாண்டி இந்த நிலையை அடைந்திருகிறது.

இன்னும் அது மாறும். அது தேவைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும்.

கலாச்சாரத்தில் சரி என்றோ தவறு என்றோ எதுவும் கிடையாது.

சௌகர்யம் அசவ்கரியம் அவ்ளோதான் போன நூற்றாண்டில் உடன்கட்டை ஏறுவதும்.

தேவதாசி முறையும் நியாயம். ஆனா இப்போ அது அநியாயம்.

எல்லாம் மாறும் பாஸ் மாறிக்கிட்டு இருக்கும் வரைதான் கலாசாரம் வாழும்.

இல்லேன்னா பண்டைய எகிப்து கிரேக் கலாசாரம் காலாவதி ஆனமாதிரி ஆகிடும்.

கடைசியா ஒன்னு சொல்றேன்.

தண்ணியும் கலாச்சாரமும் ஒன்னுதான்.

தண்ணிக்கு ஓடி கிட்டிருக்கும் வரைதான் மரியாதை.

ஒருஇடத்தில் நின்றுவிட்டால் அதுக்கு பேரு குட்டை.

ரொம்ப நாள் ஆய்டுச்சினா அதுக்கு பேரு சாக்கடை.

கலாச்சாரமும் புதுமைகளை ஏற்கும்வரை அது உச்சத்தில் இருக்கும்.

நான் இதை நியாய படுத்தவோ அல்லது எதிர்க்கவோ இல்லை.

இது இந்த காலத்தின் தேவையாக கூட இருக்கலாம்.

வலம் போகிறவர்கள் வலம் போகட்டும் இடம் போகிறவர்கள் இடம் போகட்டும்.

அவர் அவர் விருப்பம்.

(அப்புறம் இதுதான் என் முதல் பதிவு ரொம்ப திட்டாதிங்க வலிக்கும் அழுதிருவேன்.)




Popular Posts