Tuesday, November 22, 2011

போதி தர்மனை உருவாக்கும் புதிய வழி

vசமீபத்தில்தான் 7 ஆம் அறிவு படம் பார்த்தேன். நிறைய விமர்சனங்களை படித்து விட்டு 
பார்க்கலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்தேன் .
படம் பார்த்தவுடன் அந்த குழப்பம் தீர்ந்தது .

என்னய்யா உங்க ஞாயம் 6 கோடி வருடத்திற்கு முன்னாள் வாழ்ந்த டைனோசரை டி.என்.ஏ. ஆராய்ச்சி மூலம் 
மீண்டும் இந்த உலகத்திற்கு கொண்டுவந்தால் பாராட்டுகிறீர்கள் . 
காரணம் அவன் வெள்ளையன் சிகப்பா இருப்பவன் பொய்சொல்ல மாட்டான் என்ற நம்பிக்கை . 

அதே டி.என்.ஏ. ஆராய்ச்சி மூலம் வெறும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் வாழ்ந்த போதி தர்மனை  
ஒரு தமிழ் டைரெக்டர் கொண்டுவந்தால் . எல்லாரும் ரூம் போட்டு திட்டுறது .

இருந்தாலும் முருகதாசும் கொஞ்சம் ஓவராதான் பண்ணிட்டாரு . ஒரு போதிதர்மரை உருவாக்குவது 
அவ்வளவு கஷ்டமா? சூரியாவை கோணியில் கட்டுகிறார்கள் . தண்ணீரில் ஊற வைக்கிரார்கள். அடுப்பில் 
வைத்து வேக மட்டும் வைக்கவில்லை அவ்ளோதான் மற்ற எல்லா இம்சைகளும் செய்து சூரியாவை போதி தர்மராக 
மாற்றுகிறார்கள் . பாவம் அவர்கள் என்னிடம் முன்னமே கேட்டிருந்தால் சுலபமான வழிமுறையை நான் 
சொல்லிகுடுத்திருப்பேன் .

ஒரே ஒரு குவாட்டர் ஓல்ட் மங் போதும்  போதிதர்மனை உருவாக்க . என்ன நம்பிக்கை வரவில்லையா?
இந்த பரிசோதனை முழு வெற்றி அடைந்த பரிசோதனை சந்தேகம் இருந்தால் நீங்களே பாருங்கள் ..

இந்த சம்பவம் நடந்தது எங்க ஏரியா எப்புடி .
தமிழ் நாட்டில் குவாட்டருக்கு மேல் குடிக்கும் அனைவருமே போதிதர்மன் தான் ..
இன்னும் எலைட் பார் வேற வரபோகுது . அந்த சரக்கை அடித்தால் வள்ளுவர் ஆகலாம் என்று நினைக்கிறேன் .
அந்த பரிசோதனையையும் செய்து பார்த்து பின்னர் உங்களுக்கு சொல்கிறேன் ......

Monday, November 21, 2011

ஜாக்கி பதிவை படிக்காத அம்மா .

v


கடந்த இரு நாட்களாக தமிழகம் அல்லோல தில்லோல பட்டு கொண்டிருக்கிறது .
எல்லாத்திற்கும்  இந்த விலைவாசி உயர்வுதான் காரணம் .எனக்கு இது ஆச்சரியமாக இல்லை .
அம்மையாரை பற்றி அறியாதவர்கள் வேண்டுமானால் அதிர்ச்சி அடையலாம் .

எல்லாவறிற்கும் அம்மையாரை குறை சொல்வதை நான் ஏற்று கொள்ள மாட்டேன் .
அவருக்கு வழங்கப்படும் ஆலோசனைகளின் தரம் அப்படி . அல்லது அம்மையார் ஜாக்கி பதிவுகளை
படிக்காதவராக  இருப்பார் . படித்திருந்தால் இந்நேரம் கட்சியை  கலைத்துவிட்டு திருந்தி இருப்பார் .

தமிழகத்தில் அனைவரும் ஐ.டி. துறையில்  வேலைபார்த்து மாதம் லட்ச ருபாய் சம்பாதிக்கிறார்கள்.
என்று அவரின் ஆலோசனை அம்பிகள்  சொல்லி இருப்பார்கள். அதனால்தான் அனைவரும் லட்ச லட்சமாக
சம்பாதிக்கும் போது. எதற்கு இந்த பதிமூன்றாயிரம் மக்கள் நல பணியாளர்கள் மட்டும் குறைந்த வருமானத்தில்
அரசாங்கத்திடம் அடிமை வேலை செய்யவேண்டும் என்று. தாயுள்ளத்தோடு அனைவரையும் வேலையே விட்டு
நீக்கி உள்ளார் . இனிமேல் அவர்களும் ஏதாவது ஒரு ஐ.டி. கம்பனியில் வேலைக்கு சேர்ந்து லட்ச லட்சமாக
சம்பாதிக்க தான் போகிறார்கள் .

இப்படி லட்சாதிபதிகள் மட்டும் வாழும் தமிழகத்தில் எதற்கு மக்கள் தேவை இல்லாமல் பஸ்ஸில் வியர்வை வழிய
பயணம் செய்யவேண்டும் ? அதனால்தான் தாயுள்ளத்தோடு அம்மா அவர்கள் பஸ் கட்டண உயர்வை அமல் படுத்தி உள்ளார் .
இனிமேல் நீங்கள் கார் வாங்கி அதில் ஏ.சி. மாட்டிகொண்டு வியர்க்காமல் பயணம் செய்யலாம் .

இதை எல்லாம் சரியாக புரிந்து கொள்ளாத எதிர்கட்சிகள் மற்றும் கம்யுநிச்ட்டுகள் சிலர் போராட்டம் உண்ணாவிரதம்
என்று ஆரம்பித்து விடுவார்கள் . இதை எல்லாம் பார்த்து நீங்கள் மனம் இறங்கி விடாதீர்கள் .சில பல பேர் தீக்குளிதாலும்
நீங்கள் விட்டு கொடுத்துவிடாதீர்கள் . விட்டு குடுத்தால் அப்புறம் உங்கள் தாய் உள்ளத்திற்கு பங்கம் ஏற்பட்டுவிடும் .

உங்களுக்கு ஆலோசனை சொல்லும் அந்த அதிசய அம்பிகளை மட்டும் கடைசி வரை கை விட்டுவிடாதீர்கள்.
அவர்கள் உங்களை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்லாமல் விட மாட்டார்கள் .
இனம் இனத்தோடு சேரும் . குணம் குணத்தோடு சேரும் . இது முன்னோர்கள் சொன்னது .
பிச்சகாரனுக்கு செக்யுரிட்டி பிச்சகாரனே பேஷ் ................இது எங்க தலைவர் கவுண்டமணி சொன்னது .
 


Monday, November 14, 2011

பண்ணியும் ,பிரபாவும், பின்னே..ஞானும்..

v


எல்லா காலை பொழுதுபோல் அன்றும் எனக்கு விடிந்தது . முதல் கால் பிரபாவிடம் இருந்து வந்தது .
கொஞ்சம் என்னுடன் எக்ஸ்ப்ரஸ் அவன்யு வரை வரமுடியுமா என்றார் ?
எனக்கு வேலை இருக்கிறது என்ன விஷயம் என்று கேட்டேன் .
பிரபல பதிவர் டாக்குடர் பன்னிகுட்டி ராமசாமி வந்திருக்கிறார் (அப்படிதான் அவரை சொல்லவேண்டும் என்று அன்பு கட்டளை போட்டிருக்கிறார் )அவரை பார்க்கவேண்டும் என்றார் .
இதை விட நமக்கு வேற என்ன பெரிய வேலை உடனே வருகிறேன் என்று சொல்லிவிட்டு பிரபா வீட்டிற்கு கிளம்பினேன்.

பிரபாகரையும் அழைத்துகொண்டு கிளம்பும்போது அந்த அதிர்ச்சி தகவலை சொன்னார்.
பன்னி எனக்கு மட்டும்தான் அனுமதி கொடுத்திருக்கிறார்.அவர் வந்திருக்கும் தகவலை வேறு யாருக்கும் சொல்லகூடாது . கேமரா , செல்போன் போன்றவைக்கு அனுமதி இல்லை. அதனால் என்னை இறக்கி விட்டு ஒரு ஓரமாக நின்னு பன்னியை பார்த்துவிட்டு நீங்கள் போய்விடுங்கள் என்று .
அது என்ன அப்படி ஒரு அப்பாடேகர் ? நாங்க அண்டர்டேகரையே அசால்ட்டா டீல் பண்ணுவோம் பார்த்துவிடலாம் என்று எக்ஸ்ப்ரஸ் அவன்யு உள்ளே நுழைந்தேன் . ரொம்ப சீக்கிரம் வந்துவிட்டோம் என்று நினைக்கிறேன்  ஒரு கடையையும் திறக்கவில்லை. எலிவேட்டர் பக்கத்தில் யாரோ  மறைந்திருந்து நம்மளையே உற்று பார்ப்பது தெரிந்தது. அது வேறுயாரும் இல்லை நம்ம சிவகுமார்தான். அவரையும் இதேபோல் நிபந்தனையுடன் பிரபாகர் அழைத்து வந்திருப்பது புரிந்தது.

இதை பார்த்ததும் என் ரத்தம் கொதித்தது. இன்று பன்னியை ஊறுகாய் போடாமல் விடுவது இல்லை என்று மனசுக்குள் கருவிகொண்டேன். ஒருவேளை வயதானவராக இருப்பாரோ ? அதனால்தான் முகத்தை காட்ட இப்படி பயப்படுகிறார் என்று நாங்கள் பேசிகொண்டிருக்கும் போது. சில் என்று ஏ.சி காற்று முகத்தில் அறைந்தது . எங்கள் தலைமுடி எல்லாம் லேசாக காற்றில் ஆடியது . பின்னால் இருந்த கடைகளில் எல்லாம் ஒரேநேரத்தில் விளக்குகள் எரிந்தது.காற்றில் நறுமண வாசம் . எதுக்கு வள வளன்னு அதாங்க தமிழ் பட கதாநாயகி  வரும்போது ஒரு எபக்ட் வருமே அதுமாதிரின்னு வச்சிக்கங்க .

அங்கே கதவை திறந்து கொண்டு பண்ணி என்டர் ஆகிறார் . பன்னியை பார்த்தவுடன் நம்ம சிவகுமார் பரவச நிலையை அடைந்துவிட்டார் . அந்த நிலை அவர் கிளம்பும் வரை இருந்தது என்பது வேறுவிசயம்.
பன்னி ஏன் தன்னை வெளிக்காட்டிக்கொள்ள தயங்குகிறார் என்பது அவரை பார்த்த பின்னால் எனக்கு புரிந்தது .

அவரை பார்த்தவுடன் நான் சொல்ல நினைத்தது . நீங்க எம்.ஜி.ஆர். மாதிரி நல்லா கலரா இருக்கீங்க . சும்மா தக தகன்னு மின்னுறீங்க . அப்புறம் நமீதாவிற்கு மீசை வைத்தது  போல் ஒரு கலையான முகம் . அவர் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் காலில் விழுந்து என்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டிருப்பேன்.ஓகே பாஸ் நீங்க முகத்தை காட்டாமல் இருப்பது இந்த சமுதாயத்திற்கு நல்லதுதான் .

பிரபா நைசாக எங்களிடம் இருந்து விலகி போய் பன்னியிடம் தன்னை  அறிமுகம் செய்துகொண்டார் .
நானும் சிவாவும் பின்னால் சென்று ஹெலோ ஐ யாம் அஞ்சா சிங்கம் என்றேன் . அவ்ளோதான் ஒரு நிமிடம் ஜெர்க் ஆனவர் ப்ருச்லீ  போல் கை யை வைத்து கொண்டு சுற்றும் முற்றும் பார்க்க தொடங்கி விட்டார். இன்னும் எத்தனை பேர் மறைந்து இருக்கீங்க உண்மையை சொல்லுங்க என்று. யோவ் வேற யாரும் இல்லை நாங்க மட்டும்தான் என்று சமாதானம் செய்வதற்குள் போதும்டா சாமி .

இன்னும் அவரின் அடுத்தடுத்த அலம்பல்கள் தொடரும் ...................


உலக வலைபூ வரலாற்றில் சென்னைக்கு வந்து சில நாட்களே ஆன புத்தம் புதிய பன்னியின் புகைப்படம் விரைவில் எதிர்பாருங்கள் ..


  


 

Popular Posts