Tuesday, January 18, 2011

குவாட்டரும் கோழி பிரியாணியும்

v

பதிவு எழுத ஆரம்பிச்சி ரெண்டு மாதம் முழுசா ஆய்டுச்சி போன பதிவு ஆஸ்கருக்கான அறிய கண்டுபிடிப்பு தான் என் முதல் ஹிட் .
வாக்களித்து என்னை ஊக்க படுத்திய அணைத்து உள்ளங்களுக்கும் என் நன்றி கலந்த வணக்கம் .............(அட கருமம் பிடிச்சவனே எத எதோட கலக்குது பாரு ) என்ன பண்றது கலந்து குடுத்தே பழகிடுச்சி .....................

குவாட்டரும் கோழி பிரியாணியும்  .................

தாலி இல்லாம கூட கல்யாணம் நடக்கலாம் ஆனா குவாட்டரும் கோழி பிரியாணியும் இல்லாம தேர்தலோ மாநாடோ நடக்காது ....
அடுத்த  மாதம் முதல் தேர்தல் ஜுரம் தமிழ்நாட்ட தொத்திக்க போகுது நாம ஒரு முன்னூட்டம் பார்க்கலாம் .............

அரசியல் கட்சிகள் ........................

இப்போ எல்லாம் கட்சி நடத்துறதும் ஒரு கம்பனி நடத்துறதும் ஒன்னு கட்சிய நல்லபடியா வளர்த்து பெரிய லாபம் சம்பாதிக்கும் ஒரு நிறுவனமா மாத்துறது தான் தலைவரோட தலையாய  கடமை அதற்காக என்ன வேணும்னாலும் செய்யலாம் ...
அப்படி அது லாபம் சம்பாதிக்க ஆரம்பிச்சவுடன் . அதை சேதாரம் இல்லாம தன் வாரிசுகள் கையில் ஒப்படைக்கும் வரை உயிர் போயி உயிர் வந்திடும் .
இப்போ தமிழகத்தில் முன்னணி கம்பெனிகளை பற்றி ஒரு அலசல் .......................

தி.மூ.க .
இப்போதைக்கு தமிழகத்தின் மிக பெரிய லாபம் சம்பாதிக்கும் நிறுவனம் இதுதான் .
தங்களுக்கு மட்டும் அல்லாமல் தங்கள் பங்கு நிறுவனமான காங்கிரசுக்கும் நல்ல லாபம் சம்பாதித்து கொடுக்கிறது ..
சென்ற ஆட்சி லாபத்தோடு ஒப்பிடும் பொது இம்முறை மும்மடங்கு லாபம் ஈட்டி உள்ளது .
அதனால் ஓட்டுக்கு ரெண்டாயிரம் முதல் ஐயாயிரம் வரை இவர்களால் தரமுடியும் .

ஆ.தி.மு.க.
தி.மூ.க .வுக்கு அடுத்தபடியாக பெரிய கம்பனி இதுதான் என்ன பெரிய கம்பெனி யாக இருந்தாலும் தலைமை சரியில்லாததால் அடிக்கடி நஷ்டத்தை சந்திக்கிறது .தி.மூ.க .வின் பங்கு நிறுவனமான காங்கிரசை வாங்க எவ்ளவோ முயற்சி செய்தும் பேரம் படியவில்லை.
இம்முறை லாபம் ஈட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது . இல்லை என்றால் கம்பனி கரைய வாய்ப்புண்டு............

தே.மு.தி.க.
இது ஒரு சிறிய நிறுவனம் இப்போது தான் வியாபாரத்தை ஆரம்பித்திருகிரார்கள் .
கடை ஆரம்பித்து போனி பண்ணியதோடு சரி . அதன் பிறகு ஆண்டவனோடும் மக்களோடும் தான் என் வியாபாரம் .
கடைக்கு வரவங்கள தொரத்தி விட்டுடுராறு . இப்படி வியாபாரம் பண்ணா கடைய இழுத்து மூட வேண்டியதுதான் .
இந்த கடையை நம்பி பணம் போட்டவர்கள் இப்பவே புலம்ப ஆரம்பித்து விட்டார்கள் .
இந்த கடை கம்பனியாக மாறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .

கம்யுநிஸ்ட் .
 இந்த நிறுவனம் ஏற்கனவே மிகவும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது .
வியாபார திறமை இன்மைதான் இதற்க்கு காரணம் .
கடையில் ஒரு உண்டியல் வைத்து விட்டு போய்விடுவார்கள்.
வருபவர் வேண்டிய பொருளை எடுத்துக்கொண்டு உண்டியலில் காசுபோட்டு போகவேண்டுமாம்......... ம் ................ வெளங்கீரும் .

பா.ம.க.
நல்ல வளர்ந்து  வந்த ஒரு நிறுவனம் இப்போது இதன் பங்குகள் வீழ்ச்சி அடைந்து விட்டது .
நிறுவனத்தை காக்க எடுத்த அணைத்து முயற்சிகளும் இதுவரை தோல்விதான் ..
இந்த நிறுவனத்துடன் வியாபார தொடர்பு வைத்துகொள்ள எந்த நிறுவனமும் முன்வரவில்லை .
இவர்களின் நம்பக தன்மை மிக மோசம் .
ஏற்கனவே நஷ்டத்தில் இருக்கும் இந்த நிறுவனம் இம்முறை மிக பெரும் நஷ்டத்தை சந்திக்கும் என்பது வல்லுனர்களின் கருத்து.

பெட்டிக்கடைகள் .

ம.தி.மு.க.
ஒரு காலத்தில் ஓஹோ என்று இருந்த கம்பனி இப்போது பெட்டிகடையாக மாறி அதுவும் நிலைக்காமல் இப்போது தள்ளு வண்டியில் வியாபாரம் செய்கிறார். எங்கே இந்த வண்டியும் பறிபோய் விடுமோ என்ற பயத்தில் இவர் போயஸ் தோட்டம் ஏரியாவில் மட்டுமே வியாபாரம் செய்கிறார் .
ஐயஹோ பிரெஞ்ச் புரட்சியிலே.... என்று இவர் கூவி கூவி விற்கும் பொது பார்க்க பரிதாபமாக இருக்கிறது .........

வி.சி.க.(விடுதலை சிறுத்தை)
இவரும் ஒரு தள்ளுவண்டி வியாபாரிதான். இவர் ஏரியா கோபாலபுரம் .இவர் கொட்டை எடுத்த புளிகளை பெருமளவு வியாபாரம் செய்கிறார் .
இந்த ஐந்து ஆண்டுகளில் கணிசமான லாபம் பார்த்தால் நல்ல தெம்பாக இருக்கிறார். எப்படியும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் நிலையான ஒரு கடையை போட  வேண்டும் என்பது இவர் ஆசை .

 நாம் தமிழர்.
புதிதாக வியாபாரம் செய்ய வந்திருக்கிறார் .   இவர் வி.சி.க. கடைக்கு கடும் போட்டியாக இருப்பார் என்று எதிபார்க்க படுகிறது .
இவரும் புளி வியாபாரத்தை ஆரம்பித்திருக்கிறார் .ஆனால் இவருக்கு இன்னும் எந்த ஏரியாவில் வியாபாரம் செய்வது என்று குழப்பத்தில் இருக்கிறார்  
போயஸ் தோட்டத்தில் ஏற்கனவே ஒரு புளி  வியாபாரி இருந்த போதும்  இவர் அங்கே வியாபாரம் செய்யவே விருப்ப படுவார் என்று நம்பலாம் .

*******************************************************************************************************************************

இன்னும் நிறைய சிறிய கடைகள் இருந்தாலும் சரக்கு இல்லாததால் வியாபாரம் செய்யமுடியாத நிலையில் இருக்கிறார்கள் .
அதனால் அவர்களை விட்டு விடலாம் .........

சரி நாம செய்ய வேண்டியதெல்லாம் சென்ற முறை ரெண்டாயிரம் தந்தார்கள் என்றால் இந்த முறை அதிகமாக போட்டு தர சொல்லி கேட்கலாம் .
கேட்டதை குடுத்தால் விரலை கரை ஆக்கிகொள்ளலாம் ..........................

(சென்ற பதிவை போல் இதையும் ஹிட் ஆக்குவீர்கள் என்ற நம்பிக்கையில் அன்புடன் அஞ்சா சிங்கம் )

22 கருத்து சொல்றாங்க:

பாலா said...

திமூக - ஸ்பெல்லிங் மிஸ்டெக்கா? திமுகதானே சரி
ஆதிமுக - அதிமுகதானே சரி?

நல்ல எழுதி இருக்கீங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல கம்பேனி, நல்ல யாவாரம்......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வி.சி.க.(விடுதலை சிறுத்தை)
இவரும் ஒரு தள்ளுவண்டி வியாபாரிதான். இவர் ஏரியா கோபாலபுரம் .இவர் கொட்டை எடுத்த புளிகளை பெருமளவு வியாபாரம் செய்கிறார் .////

நல்ல வேளை கொட்டை எடுத்துட்டாரு..... இல்லேன்னா........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா இந்தப் புளி யாவாரிகளுக்கெல்லாம் மொதலாளி யாரு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////(சென்ற பதிவை போல் இதையும் ஹிட் ஆக்குவீர்கள் என்ற நம்பிக்கையில் அன்புடன் அஞ்சா சிங்கம் ) //////

நமக்கு ஏன் இந்த வெளம்பரம்? அந்த அர்சியல்வியாதிகதான் ஊர நாறடிக்கிறானுக.... நமக்கு ஏன் இந்த பொழப்பு?
(சரி சரி, அவனுக மாதிரி ஏதாவது போட்டுக்கொடுத்தா நாங்களும் சத்தமில்லாம ஒட்டப்போட்டுட்டு வேற சோலிய பார்ப்போல?)

ஆர்வா said...

அரசியல்ல உங்களுக்கு இருக்கும் நாலேட்ஜை பார்த்தா எதிர்காலத்துல நீங்க ஒரு சுப்ரமணியசாமி'யா வருவீங்களோனு தோணுது

Chitra said...

வாழ்த்துக்கள்! பெட்டிக்கடைகள் பற்றி சூப்பரா எழுதி இருக்கீங்க...

கண்ணன்.கா said...

பின்னீட்டீங்க போங்க.

Unknown said...

சரி நாம செய்ய வேண்டியதெல்லாம் சென்ற முறை ரெண்டாயிரம் தந்தார்கள் என்றால் இந்த முறை அதிகமாக போட்டு தர சொல்லி கேட்கலாம் .////

ஆமாமா விலைவாசி ஏறி கிட்டே இருக்கு .பெட்ரோல் வெலை கூடிபோச்சு .கண்டிப்பாக கூடத்தான் கேக்கணும்

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வி.சி.க.(விடுதலை சிறுத்தை)
இவரும் ஒரு தள்ளுவண்டி வியாபாரிதான். இவர் ஏரியா கோபாலபுரம் .இவர் கொட்டை எடுத்த புளிகளை பெருமளவு வியாபாரம் செய்கிறார் .////

நல்ல வேளை கொட்டை எடுத்துட்டாரு..... இல்லேன்னா......../////////////////

எடுத்திருவாங்க சார் ................

சி.பி.செந்தில்குமார் said...

good alasal

அஞ்சா சிங்கம் said...

சி.பி.செந்தில்குமார் said...

good alasal..........////

நன்றி .................

Unknown said...

கலக்கல்ஸ்! :-)

Philosophy Prabhakaran said...

ம.தி.மு.க பற்றிய நக்கல் செம கலக்கல்... அது சரி, புளி வியாபாரம்னா என்ன...?

அஞ்சா சிங்கம் said...

Philosophy Prabhakaran said...

ம.தி.மு.க பற்றிய நக்கல் செம கலக்கல்... அது சரி, புளி வியாபாரம்னா என்ன...?.........................../////////////////////////
புலி என்று புரிந்து கொள்ளவேண்டியதுதான் ..........

Unknown said...

அருமை. இந்த கடைகலில் எல்லம் லாபம் பார்பவர்கள் கடையி முதளாளி மட்டுமே. மக்களுக்கு வெரும் அல்வாதான் கிடைக்கும்

Anonymous said...

>>> அஞ்சா சிங்கம்னா சும்மாவா. திருவொற்றியூர் தொகுதில சுயேச்சை எம்.எல்.ஏ.வா நிக்க போறீங்கன்னு கேள்விப்பட்டேன். கலக்குங்க. வீட்டு பக்கத்துல இருக்குற பிரபாகரன்தான் உங்கள் கொள்கை பரப்பு செயலாளரா??

Unknown said...

நல்லாவே புளிகரைக்கிறீங்க

அஞ்சா சிங்கம் said...

johnny said...

அருமை. இந்த கடைகலில் எல்லம் லாபம் பார்பவர்கள் கடையி முதளாளி மட்டுமே. மக்களுக்கு வெரும் அல்வாதான் கிடைக்கும்...///////

அதான் ஓட்டுக்கு குடுக்குறாங்களே . அதா வாங்கீட்டு பப்பர முட்டை வாங்கி சாப்பிடலாம் ..........

அஞ்சா சிங்கம் said...

சிவகுமார் said...

>>> அஞ்சா சிங்கம்னா சும்மாவா. திருவொற்றியூர் தொகுதில சுயேச்சை எம்.எல்.ஏ.வா நிக்க போறீங்கன்னு கேள்விப்பட்டேன். கலக்குங்க. வீட்டு பக்கத்துல இருக்குற பிரபாகரன்தான் உங்கள் கொள்கை பரப்பு செயலாளரா??...........//////
அட பாவிகளா இது வேறயா என்னையும் வியாபாரி ஆகா சொல்றீங்களா ........................

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

unga பெட்டிக்கடை super

மாணவன் said...

செம்ம கலக்கல் கலாய்ப்பு பெட்டிக்கடை அருமை பாஸ்

தொடருங்கள்.......

Popular Posts