இப்போது தான் எங்கே செல்லும் பாதை கே.ஆர்.பீ. செந்தில் அவர்களின் (குஞ்சாமணி என்று சொன்னால் கூட கோபித்துக்கொள்ள மாட்டார் )மோடியின் பயோடேட்டா பார்த்து விட்டு வந்தேன்.
மோடிக்கு அமேரிக்கா பிடிக்காது என்று சொல்லி இருந்தார். இதில் என்னுடைய கருத்தை பதிவு செய்கிறேன் பார்த்துவிட்டு பதில் சொல்லவும் ..
நீண்ட கால எரிச்சல் : காங்கிரஸ்காரர்கள், அமெரிக்கா............./////
இதில் நான் கொஞ்சம் மாறுபடுகிறேன் ..
அரசியலில் மட்டும் அல்ல அமெரிக்காவுக்கும் நிரந்தர நண்பன் எதிரி எல்லாம் கிடையாது ...
மோடிக்கு அமேரிக்கா செல்ல தடை இருப்பது உண்மைதான். ஆனால் அவர் பிரதமர் ஆனால் அந்த தடை செல்லாதது ஆகி விடும் என்று அமெரிக்க பத்திரிக்கை தான் சொல்கிறது . தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும் போது மோடியை முன்னிறுத்தும் யோசனையை ஊதி விட்டதே இந்த அமெரிக்காதான் ..
அதற்க்கு காரணம் இல்லாமல் இல்லை .அவர் பிரதமர் ஆனால் மிக பெரிய லாபம் அடைவது பன்னாட்டு நிறுவனங்கள் தான் எப்படி என்றால் .இதுவரை பன்னாட்டு நிறுவனங்களின் செல்ல குட்டியாக இருந்தது டாக்குடர் மன்மோகன் சிங்தான் அதனால்தான் காங்குரசில் மிக பெரிய தலைவர்கள் இருந்தும் தனிப்பட்ட செல்வாக்கு எதுவும் இல்லாமல் இவரால் பத்துஆண்டுகள் பிரதமராக தொடர முடிந்தது ?....
ராகுல் சோனியா என்று யார் நினைத்தாலும் இவரை மாற்றி இருக்க முடியாது காரணம் பிரதமர் மட்டும் அல்ல நிதி அமைச்சர் மற்றும் வெளிஉறவுதுறை அமைச்சர் என்று யார் எந்த பதவியில் அமரவேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரம் பன்னாட்டு நிறுவனகளுக்கு உண்டு . எங்கேயோ அரசியலுக்கு சம்மந்தம் இல்லாத ஒரு சாதாரண செல்வாக்கு இல்லாத இவரால் எப்படி நிதி அமைச்சர் ஆகமுடிந்தது ?. எந்த போட்டியும் இல்லாமல் எப்படி இவரால் இரண்டு முறை பிரதமராக தொடர முடிகிறது ? யோசித்தால் இவரை தாங்கி பிடிக்கும் சக்திகள் என்ன என்று புரியவரும் ....
சரி இப்போ விசயத்துக்கு வரேன் இப்படி பன்னாட்டு நிறுவனங்களின் அன்புக்கு பாத்திரமான மன்மோகன் செல்வாக்கு மிகவும் சரிந்துவிட்டது .துவண்டு கிடக்கும் செல்வாக்கை தூக்கி செங்க்குத்தாக நிறுத்த இனிமேல் வெண்ணிறாடை மூர்தியாலும் முடியாது என்று தெரிந்து விட்டது .சரி இனி என்ன செய்யலாம் ? ராகுல் ?...ச்சே ச்சே ..இவரு அதுக்கு சரிபட்டு வரமாட்டாரு .இல்லை இவரு எதுக்குமே சரிபட்டு வரமாட்டாரு என்ற முடிவுக்கு வந்தாச்சி .....
இப்படி பலவிதமாக யோசித்து கொண்டிருந்த நிறுவனங்களுக்கு புதிதாக கிடைத்த பிம்பம் தான் மோடி.
சிறந்த நிர்வாகி என்று பெயர் வேற இருக்கு .மற்ற மாநிலங்களில் ஆறு சதவீதம் என்றால் இவர் மாநிலத்தில் பதினொரு சதவீத வளர்ச்சி .எல்லாம் உள்நாட்டு வளர்ச்சியா என்றால் இல்லை என்பது சதவீதம் அந்நிய முதலீடு தான் குஜராத்தின் இந்த வளர்ச்சிக்கு காரணம் .
மற்ற மாநிலங்களில் நிறுவனம் ஆரம்பிக்க நிலம் பார்த்து ஓகே சொன்ன கம்பனி எல்லாம் சொல்லாமல் குஜராத் பக்கம் தங்கள் கடையை விரிக்கிறார்கள் என்றால் . அதற்க்கு அவர்கள் சொல்லும் காரணம் திறந்த நிர்வாகம் ..
உண்மைதான் இது மக்களுக்கான திறந்த நிர்வாகம் அல்ல .பன்னாட்டுக்கான திறந்த நிர்வாகம் .சமீபத்தில் நிஸ்ஸான் மற்றும் போர்ட் ஆகிய இரு கம்பனிகள் தமிழ்நாட்டில் நிலம்பார்த்து ஓகே செய்து பிறகு தங்கள் கடையை குஜராத் பக்கம் மாற்றியவர்கள் கொல்கத்தாவில் இருந்து டாடா தன்
ஜாகையை மாற்றியது .இன்னும் நிறைய இருக்கு .
இப்படி அநியாயத்துக்கு நல்லவனா இருக்கானே இவனுக்கு நாம ஏதாவது பண்ணனும் என்று முடிவு செய்து களம் இறங்கி இருக்கிறார்கள் . அரசியலில் இருந்து ஓய்வு பெற்று இருந்த நரசிமராவ். ராஜீவ்காந்தி கொலைக்கு பின் போட்டி இன்றி பிரதமர் ஆகிறார். மைனாரிட்டி அரசை ஐந்து ஆண்டுகாலம் வெற்றிகரமாக நடத்துகிறார் . எங்கேயோ அரசியலுக்கு சம்பந்தம் இல்லாதே வாத்தியார் மன்மோகனை கொண்டு வந்து நிதியமைச்சர் ஆக்குகிறார் அவர் தாராளமய கொள்கையை புகுத்துகிறார் .பிறகு அவரே இருமுறை பிரதமர் ஆகிறார் அந்த கொள்கையை தீவிரமாக கடை பிடித்து மக்கள் செல்வாக்கை இழக்கிறார் . இப்போது இதே கொள்கையை இவரை விட தீவிரமாக கடைபிடிக்கும் ஒரு ஆடு சிக்கி இருக்கு அவரை இப்போதே பிரதமர் வேட்பாளருக்கு தயார் செய்யும் வேலை நடக்கிறது .
மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் எல்லாம் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இருப்பது போல் தெரிகிறதா?
இனி நடக்க போவதை பாப்போம் . மோடி பிரதமர் ஆக்கபடுவார். ராகுல் தில்லி வீதிகளில் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே .. என்ற பாடலை பாடி திறிவார். பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் கச்சா என்னை உயர்வுதான் .டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததுதான் விலைவாசி ஏற்றத்திற்கு காரணம் என்று பிரதமர் மோடி மக்களுக்கு விளக்கம் சொல்லி கொண்டு இருப்பார் .
எனக்கு சின்ன வயதில் வயல்களில் ஓணான் பிடிக்கும் ஞாபகம்தான் வருகிறது .கன்னியை ஓணானின் கழுத்திற்கு பக்கத்தில் வைத்து காத்திருப்போம். அது கழுத்தை உள்ளே விடுவதும் எடுப்பதுமாக ஆட்டம் காட்டும் ஆனாலும் நாங்கள் பொறுமையாக காத்திருப்போம் . சிலசமயம் ஓணான் கண்ணிக்குள் கழுத்தை விட்டு எடுக்காமல் அப்படியே நிற்கும் ...பிறகு என்ன ? கன்னி இருக்கப்படும் ...கழுத்து நெறிக்கப்படும் ...ஓணான் தொங்கவிடப்படும் .....
மேற்கண்ட கட்டுரைக்கும் இந்த கதைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் ....
இப்படிக்கு அண்ணனின் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் அண்ணனின் அடி விழுதுகள் ...........