Tuesday, November 22, 2011

போதி தர்மனை உருவாக்கும் புதிய வழி

v



சமீபத்தில்தான் 7 ஆம் அறிவு படம் பார்த்தேன். நிறைய விமர்சனங்களை படித்து விட்டு 
பார்க்கலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்தேன் .
படம் பார்த்தவுடன் அந்த குழப்பம் தீர்ந்தது .

என்னய்யா உங்க ஞாயம் 6 கோடி வருடத்திற்கு முன்னாள் வாழ்ந்த டைனோசரை டி.என்.ஏ. ஆராய்ச்சி மூலம் 
மீண்டும் இந்த உலகத்திற்கு கொண்டுவந்தால் பாராட்டுகிறீர்கள் . 
காரணம் அவன் வெள்ளையன் சிகப்பா இருப்பவன் பொய்சொல்ல மாட்டான் என்ற நம்பிக்கை . 

அதே டி.என்.ஏ. ஆராய்ச்சி மூலம் வெறும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் வாழ்ந்த போதி தர்மனை  
ஒரு தமிழ் டைரெக்டர் கொண்டுவந்தால் . எல்லாரும் ரூம் போட்டு திட்டுறது .

இருந்தாலும் முருகதாசும் கொஞ்சம் ஓவராதான் பண்ணிட்டாரு . ஒரு போதிதர்மரை உருவாக்குவது 
அவ்வளவு கஷ்டமா? சூரியாவை கோணியில் கட்டுகிறார்கள் . தண்ணீரில் ஊற வைக்கிரார்கள். அடுப்பில் 
வைத்து வேக மட்டும் வைக்கவில்லை அவ்ளோதான் மற்ற எல்லா இம்சைகளும் செய்து சூரியாவை போதி தர்மராக 
மாற்றுகிறார்கள் . பாவம் அவர்கள் என்னிடம் முன்னமே கேட்டிருந்தால் சுலபமான வழிமுறையை நான் 
சொல்லிகுடுத்திருப்பேன் .

ஒரே ஒரு குவாட்டர் ஓல்ட் மங் போதும்  போதிதர்மனை உருவாக்க . என்ன நம்பிக்கை வரவில்லையா?
இந்த பரிசோதனை முழு வெற்றி அடைந்த பரிசோதனை சந்தேகம் இருந்தால் நீங்களே பாருங்கள் ..





இந்த சம்பவம் நடந்தது எங்க ஏரியா எப்புடி .
தமிழ் நாட்டில் குவாட்டருக்கு மேல் குடிக்கும் அனைவருமே போதிதர்மன் தான் ..
இன்னும் எலைட் பார் வேற வரபோகுது . அந்த சரக்கை அடித்தால் வள்ளுவர் ஆகலாம் என்று நினைக்கிறேன் .
அந்த பரிசோதனையையும் செய்து பார்த்து பின்னர் உங்களுக்கு சொல்கிறேன் ......

Monday, November 21, 2011

ஜாக்கி பதிவை படிக்காத அம்மா .

v


கடந்த இரு நாட்களாக தமிழகம் அல்லோல தில்லோல பட்டு கொண்டிருக்கிறது .
எல்லாத்திற்கும்  இந்த விலைவாசி உயர்வுதான் காரணம் .எனக்கு இது ஆச்சரியமாக இல்லை .
அம்மையாரை பற்றி அறியாதவர்கள் வேண்டுமானால் அதிர்ச்சி அடையலாம் .

எல்லாவறிற்கும் அம்மையாரை குறை சொல்வதை நான் ஏற்று கொள்ள மாட்டேன் .
அவருக்கு வழங்கப்படும் ஆலோசனைகளின் தரம் அப்படி . அல்லது அம்மையார் ஜாக்கி பதிவுகளை
படிக்காதவராக  இருப்பார் . படித்திருந்தால் இந்நேரம் கட்சியை  கலைத்துவிட்டு திருந்தி இருப்பார் .

தமிழகத்தில் அனைவரும் ஐ.டி. துறையில்  வேலைபார்த்து மாதம் லட்ச ருபாய் சம்பாதிக்கிறார்கள்.
என்று அவரின் ஆலோசனை அம்பிகள்  சொல்லி இருப்பார்கள். அதனால்தான் அனைவரும் லட்ச லட்சமாக
சம்பாதிக்கும் போது. எதற்கு இந்த பதிமூன்றாயிரம் மக்கள் நல பணியாளர்கள் மட்டும் குறைந்த வருமானத்தில்
அரசாங்கத்திடம் அடிமை வேலை செய்யவேண்டும் என்று. தாயுள்ளத்தோடு அனைவரையும் வேலையே விட்டு
நீக்கி உள்ளார் . இனிமேல் அவர்களும் ஏதாவது ஒரு ஐ.டி. கம்பனியில் வேலைக்கு சேர்ந்து லட்ச லட்சமாக
சம்பாதிக்க தான் போகிறார்கள் .

இப்படி லட்சாதிபதிகள் மட்டும் வாழும் தமிழகத்தில் எதற்கு மக்கள் தேவை இல்லாமல் பஸ்ஸில் வியர்வை வழிய
பயணம் செய்யவேண்டும் ? அதனால்தான் தாயுள்ளத்தோடு அம்மா அவர்கள் பஸ் கட்டண உயர்வை அமல் படுத்தி உள்ளார் .
இனிமேல் நீங்கள் கார் வாங்கி அதில் ஏ.சி. மாட்டிகொண்டு வியர்க்காமல் பயணம் செய்யலாம் .

இதை எல்லாம் சரியாக புரிந்து கொள்ளாத எதிர்கட்சிகள் மற்றும் கம்யுநிச்ட்டுகள் சிலர் போராட்டம் உண்ணாவிரதம்
என்று ஆரம்பித்து விடுவார்கள் . இதை எல்லாம் பார்த்து நீங்கள் மனம் இறங்கி விடாதீர்கள் .சில பல பேர் தீக்குளிதாலும்
நீங்கள் விட்டு கொடுத்துவிடாதீர்கள் . விட்டு குடுத்தால் அப்புறம் உங்கள் தாய் உள்ளத்திற்கு பங்கம் ஏற்பட்டுவிடும் .

உங்களுக்கு ஆலோசனை சொல்லும் அந்த அதிசய அம்பிகளை மட்டும் கடைசி வரை கை விட்டுவிடாதீர்கள்.
அவர்கள் உங்களை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்லாமல் விட மாட்டார்கள் .
இனம் இனத்தோடு சேரும் . குணம் குணத்தோடு சேரும் . இது முன்னோர்கள் சொன்னது .
பிச்சகாரனுக்கு செக்யுரிட்டி பிச்சகாரனே பேஷ் ................இது எங்க தலைவர் கவுண்டமணி சொன்னது .
 


Monday, November 14, 2011

பண்ணியும் ,பிரபாவும், பின்னே..ஞானும்..

v


எல்லா காலை பொழுதுபோல் அன்றும் எனக்கு விடிந்தது . முதல் கால் பிரபாவிடம் இருந்து வந்தது .
கொஞ்சம் என்னுடன் எக்ஸ்ப்ரஸ் அவன்யு வரை வரமுடியுமா என்றார் ?
எனக்கு வேலை இருக்கிறது என்ன விஷயம் என்று கேட்டேன் .
பிரபல பதிவர் டாக்குடர் பன்னிகுட்டி ராமசாமி வந்திருக்கிறார் (அப்படிதான் அவரை சொல்லவேண்டும் என்று அன்பு கட்டளை போட்டிருக்கிறார் )அவரை பார்க்கவேண்டும் என்றார் .
இதை விட நமக்கு வேற என்ன பெரிய வேலை உடனே வருகிறேன் என்று சொல்லிவிட்டு பிரபா வீட்டிற்கு கிளம்பினேன்.

பிரபாகரையும் அழைத்துகொண்டு கிளம்பும்போது அந்த அதிர்ச்சி தகவலை சொன்னார்.
பன்னி எனக்கு மட்டும்தான் அனுமதி கொடுத்திருக்கிறார்.அவர் வந்திருக்கும் தகவலை வேறு யாருக்கும் சொல்லகூடாது . கேமரா , செல்போன் போன்றவைக்கு அனுமதி இல்லை. அதனால் என்னை இறக்கி விட்டு ஒரு ஓரமாக நின்னு பன்னியை பார்த்துவிட்டு நீங்கள் போய்விடுங்கள் என்று .
அது என்ன அப்படி ஒரு அப்பாடேகர் ? நாங்க அண்டர்டேகரையே அசால்ட்டா டீல் பண்ணுவோம் பார்த்துவிடலாம் என்று எக்ஸ்ப்ரஸ் அவன்யு உள்ளே நுழைந்தேன் . ரொம்ப சீக்கிரம் வந்துவிட்டோம் என்று நினைக்கிறேன்  ஒரு கடையையும் திறக்கவில்லை. எலிவேட்டர் பக்கத்தில் யாரோ  மறைந்திருந்து நம்மளையே உற்று பார்ப்பது தெரிந்தது. அது வேறுயாரும் இல்லை நம்ம சிவகுமார்தான். அவரையும் இதேபோல் நிபந்தனையுடன் பிரபாகர் அழைத்து வந்திருப்பது புரிந்தது.

இதை பார்த்ததும் என் ரத்தம் கொதித்தது. இன்று பன்னியை ஊறுகாய் போடாமல் விடுவது இல்லை என்று மனசுக்குள் கருவிகொண்டேன். ஒருவேளை வயதானவராக இருப்பாரோ ? அதனால்தான் முகத்தை காட்ட இப்படி பயப்படுகிறார் என்று நாங்கள் பேசிகொண்டிருக்கும் போது. சில் என்று ஏ.சி காற்று முகத்தில் அறைந்தது . எங்கள் தலைமுடி எல்லாம் லேசாக காற்றில் ஆடியது . பின்னால் இருந்த கடைகளில் எல்லாம் ஒரேநேரத்தில் விளக்குகள் எரிந்தது.காற்றில் நறுமண வாசம் . எதுக்கு வள வளன்னு அதாங்க தமிழ் பட கதாநாயகி  வரும்போது ஒரு எபக்ட் வருமே அதுமாதிரின்னு வச்சிக்கங்க .

அங்கே கதவை திறந்து கொண்டு பண்ணி என்டர் ஆகிறார் . பன்னியை பார்த்தவுடன் நம்ம சிவகுமார் பரவச நிலையை அடைந்துவிட்டார் . அந்த நிலை அவர் கிளம்பும் வரை இருந்தது என்பது வேறுவிசயம்.
பன்னி ஏன் தன்னை வெளிக்காட்டிக்கொள்ள தயங்குகிறார் என்பது அவரை பார்த்த பின்னால் எனக்கு புரிந்தது .

அவரை பார்த்தவுடன் நான் சொல்ல நினைத்தது . நீங்க எம்.ஜி.ஆர். மாதிரி நல்லா கலரா இருக்கீங்க . சும்மா தக தகன்னு மின்னுறீங்க . அப்புறம் நமீதாவிற்கு மீசை வைத்தது  போல் ஒரு கலையான முகம் . அவர் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் காலில் விழுந்து என்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டிருப்பேன்.ஓகே பாஸ் நீங்க முகத்தை காட்டாமல் இருப்பது இந்த சமுதாயத்திற்கு நல்லதுதான் .

பிரபா நைசாக எங்களிடம் இருந்து விலகி போய் பன்னியிடம் தன்னை  அறிமுகம் செய்துகொண்டார் .
நானும் சிவாவும் பின்னால் சென்று ஹெலோ ஐ யாம் அஞ்சா சிங்கம் என்றேன் . அவ்ளோதான் ஒரு நிமிடம் ஜெர்க் ஆனவர் ப்ருச்லீ  போல் கை யை வைத்து கொண்டு சுற்றும் முற்றும் பார்க்க தொடங்கி விட்டார். இன்னும் எத்தனை பேர் மறைந்து இருக்கீங்க உண்மையை சொல்லுங்க என்று. யோவ் வேற யாரும் இல்லை நாங்க மட்டும்தான் என்று சமாதானம் செய்வதற்குள் போதும்டா சாமி .

இன்னும் அவரின் அடுத்தடுத்த அலம்பல்கள் தொடரும் ...................


உலக வலைபூ வரலாற்றில் சென்னைக்கு வந்து சில நாட்களே ஆன புத்தம் புதிய பன்னியின் புகைப்படம் விரைவில் எதிர்பாருங்கள் ..






  


 

Friday, October 14, 2011

உயிரின் எடை 21 அயிரி

v



எ ட்ரீம் வேல்ட் என்ற நிறுவனம் சார்பில் இ.கலைவாணன் தயாரித்துள்ள படம் உயிரின் எடை 21 அயரி 


படத்தின் ஆரம்பமே நமக்கு புரிய வைத்து விடுகிறது இன்னும் இரண்டரை 
மணிநேரம் வரை தியேட்டர் திரையில் இருந்து நாம் அமர்ந்திருக்கும் 
சீட் வரை ரத்தம் தெறிக்க போகிறது என்று .

ஆனால் நல்லவேளையாக நாம் எதிர்பார்த்த அளவிற்கு பயங்கரம் இல்லை. 
ஈஸ்வர் என்கிற ஒரு ரவுடி அச்சா என்கிற ஒரு டான் . 
கொலை செய்வது இவர்கள் தொழில். 
உயிரின் மதிப்பை பற்றி கொஞ்சம்கூட கவலை படாத கதாநாயகன் .
அதன் மதிப்பு அறிந்து வாழ ஆசை படும்போது அது அவனுக்கு கிடைத்ததா ?



கதாநாயகனாக ஏகன் என்பவர் நடித்துள்ளார் நல்ல நடிப்பு.
ஆரம்பத்தில் நமக்கு அன்னியமாக தெரிந்தாலும் விரைவிலேயே
 படத்தோடு நம்மை ஒன்ற வைத்துவிடுகிறார் .
புதுமுகம் வினிதா என்பவர் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
 தேவை அற்ற காதல் காட்சிகள் எதுவும் இல்லாத தமிழ் சினிமா ஆச்சரியம்தான் .
படத்தில் நடித்த எல்லாரையும் மிக சுலபமாக ஓரம் கட்டிவிடுகிறார் திலகன்.
ஆஹா என்ன ஒரு வசன உச்சரிப்பு. அச்சா என்கிற கதாபாத்திரம்
அவருக்கு அம்சமாக பொருந்துகிறது .
அநேகமாக இதுதான் இவர் நடித்த கடைசி படம் என்று நினைக்கிறேன் .

முதல் பாதி முழுவதும் ரவுடி வெட்டு குத்து என்று இருந்தாலும்.
நல்லவேளையாக மதுரையை நமக்கு காட்டவில்லை அதற்காக
இயக்குனருக்கு நன்றி .

இரண்டாம் பாதி கொஞ்சம் அன்பேசிவம் மாதிரி .
படத்தின் வேகத்தை குறைக்கிறது என்றாலும்
அந்த மலை கிராம மக்களாக வரும் கதாபாத்திரங்கள்
படத்தின் சுவாரசியம் குறையாமல் பார்த்து கொள்கிறார்கள் .


படத்தில் பல இடங்களில் பண பற்றாக்குறை தெரிகிறது.
 கொஞ்சம் காலதாமதமாக வெளிவந்த படம் என்றாலும்
படத்தில் அனைவருமே புதுமுகம் என்றிருந்தாலும்.
படம் போர் அடிக்காமல் இருப்பதற்கு திலகன் மிக முக்கிய காரணம்.

தமிழகத்தின் முதல் பெண் எடிடர் கிருத்திகா சிறப்பாக செய்துள்ளார்.
 படத்தில் மூன்று பாடல்கள் இடம்பிடித்துள்ளது .
மூன்றும் வெவேறு ரகம் . படத்தின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது .

பட்ஜெட் படம் என்பதால் படத்தில் தெரியும் சில குறைகள் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது .

மற்றபடி நல்ல மெசேஜ் உள்ள படம் . 


Tuesday, October 11, 2011

Cable சங்கர்: நாம் ஏன் தமிழ் ப்ளாகர்களுக்கு உதவக்கூடாது?.

v
Cable சங்கர்: நாம் ஏன் தமிழ் ப்ளாகர்களுக்கு உதவக்கூடாது?.: உரக்க குரல் கொடுப்போம் ஒற்றுமையாய்... வாழ்த்துகள்.

Tuesday, September 20, 2011

மோடி பயோடேட்டா-----( கே.ஆர்.பி.க்கு ஒரு விளக்கம் )

v




இப்போது தான் எங்கே செல்லும் பாதை கே.ஆர்.பீ. செந்தில் அவர்களின் (குஞ்சாமணி என்று சொன்னால் கூட கோபித்துக்கொள்ள மாட்டார் )மோடியின் பயோடேட்டா பார்த்து விட்டு வந்தேன்.
மோடிக்கு அமேரிக்கா பிடிக்காது என்று சொல்லி இருந்தார். இதில் என்னுடைய கருத்தை பதிவு செய்கிறேன் பார்த்துவிட்டு பதில் சொல்லவும் ..

  
நீண்ட கால எரிச்சல்         
: காங்கிரஸ்காரர்கள், அமெரிக்கா............./////

இதில் நான் கொஞ்சம் மாறுபடுகிறேன் ..
அரசியலில் மட்டும் அல்ல அமெரிக்காவுக்கும் நிரந்தர நண்பன் எதிரி எல்லாம் கிடையாது ...
மோடிக்கு அமேரிக்கா செல்ல தடை இருப்பது உண்மைதான். ஆனால் அவர் பிரதமர் ஆனால் அந்த தடை செல்லாதது ஆகி விடும் என்று அமெரிக்க பத்திரிக்கை தான் சொல்கிறது . தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும் போது மோடியை முன்னிறுத்தும் யோசனையை ஊதி விட்டதே இந்த அமெரிக்காதான் ..

அதற்க்கு காரணம் இல்லாமல் இல்லை .அவர் பிரதமர் ஆனால் மிக பெரிய லாபம் அடைவது பன்னாட்டு நிறுவனங்கள் தான் எப்படி என்றால் .இதுவரை பன்னாட்டு நிறுவனங்களின் செல்ல குட்டியாக இருந்தது டாக்குடர் மன்மோகன் சிங்தான் அதனால்தான் காங்குரசில் மிக பெரிய தலைவர்கள் இருந்தும் தனிப்பட்ட செல்வாக்கு எதுவும் இல்லாமல் இவரால் பத்துஆண்டுகள்  பிரதமராக தொடர முடிந்தது ?....

ராகுல் சோனியா என்று யார் நினைத்தாலும் இவரை மாற்றி இருக்க முடியாது காரணம் பிரதமர் மட்டும் அல்ல நிதி அமைச்சர் மற்றும் வெளிஉறவுதுறை அமைச்சர் என்று யார் எந்த பதவியில் அமரவேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரம் பன்னாட்டு நிறுவனகளுக்கு உண்டு . எங்கேயோ அரசியலுக்கு சம்மந்தம் இல்லாத ஒரு சாதாரண செல்வாக்கு இல்லாத இவரால் எப்படி நிதி அமைச்சர் ஆகமுடிந்தது ?. எந்த போட்டியும் இல்லாமல் எப்படி இவரால் இரண்டு முறை பிரதமராக தொடர முடிகிறது ? யோசித்தால் இவரை தாங்கி பிடிக்கும் சக்திகள் என்ன என்று புரியவரும் ....

சரி இப்போ விசயத்துக்கு வரேன் இப்படி பன்னாட்டு நிறுவனங்களின் அன்புக்கு பாத்திரமான மன்மோகன் செல்வாக்கு மிகவும் சரிந்துவிட்டது .துவண்டு கிடக்கும் செல்வாக்கை தூக்கி செங்க்குத்தாக நிறுத்த இனிமேல் வெண்ணிறாடை மூர்தியாலும் முடியாது என்று தெரிந்து விட்டது .சரி இனி என்ன செய்யலாம் ? ராகுல் ?...ச்சே ச்சே ..இவரு அதுக்கு சரிபட்டு வரமாட்டாரு .இல்லை இவரு எதுக்குமே சரிபட்டு வரமாட்டாரு என்ற முடிவுக்கு வந்தாச்சி .....

இப்படி பலவிதமாக யோசித்து கொண்டிருந்த நிறுவனங்களுக்கு புதிதாக கிடைத்த பிம்பம் தான் மோடி.
சிறந்த நிர்வாகி என்று பெயர் வேற இருக்கு .மற்ற மாநிலங்களில் ஆறு சதவீதம் என்றால் இவர் மாநிலத்தில் பதினொரு சதவீத வளர்ச்சி .எல்லாம் உள்நாட்டு வளர்ச்சியா என்றால் இல்லை என்பது சதவீதம் அந்நிய முதலீடு தான் குஜராத்தின் இந்த வளர்ச்சிக்கு காரணம் .

மற்ற மாநிலங்களில் நிறுவனம் ஆரம்பிக்க நிலம் பார்த்து ஓகே சொன்ன கம்பனி எல்லாம் சொல்லாமல் குஜராத் பக்கம் தங்கள் கடையை விரிக்கிறார்கள் என்றால் . அதற்க்கு அவர்கள் சொல்லும் காரணம் திறந்த நிர்வாகம் ..
உண்மைதான் இது மக்களுக்கான திறந்த நிர்வாகம் அல்ல .பன்னாட்டுக்கான திறந்த நிர்வாகம் .சமீபத்தில் நிஸ்ஸான் மற்றும் போர்ட் ஆகிய இரு கம்பனிகள் தமிழ்நாட்டில் நிலம்பார்த்து ஓகே செய்து பிறகு தங்கள் கடையை குஜராத் பக்கம் மாற்றியவர்கள் கொல்கத்தாவில் இருந்து டாடா தன்
ஜாகையை மாற்றியது .இன்னும் நிறைய இருக்கு .

இப்படி அநியாயத்துக்கு நல்லவனா இருக்கானே இவனுக்கு நாம ஏதாவது பண்ணனும் என்று முடிவு செய்து களம் இறங்கி இருக்கிறார்கள் . அரசியலில் இருந்து ஓய்வு பெற்று இருந்த நரசிமராவ். ராஜீவ்காந்தி கொலைக்கு பின் போட்டி இன்றி பிரதமர் ஆகிறார். மைனாரிட்டி அரசை ஐந்து ஆண்டுகாலம் வெற்றிகரமாக நடத்துகிறார் . எங்கேயோ அரசியலுக்கு சம்பந்தம் இல்லாதே வாத்தியார் மன்மோகனை கொண்டு வந்து நிதியமைச்சர் ஆக்குகிறார் அவர் தாராளமய கொள்கையை புகுத்துகிறார் .பிறகு அவரே இருமுறை பிரதமர் ஆகிறார் அந்த கொள்கையை தீவிரமாக கடை பிடித்து மக்கள் செல்வாக்கை இழக்கிறார் . இப்போது இதே கொள்கையை இவரை விட தீவிரமாக கடைபிடிக்கும் ஒரு ஆடு சிக்கி இருக்கு அவரை இப்போதே பிரதமர் வேட்பாளருக்கு தயார் செய்யும் வேலை நடக்கிறது .

  மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் எல்லாம் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இருப்பது போல் தெரிகிறதா?
இனி நடக்க போவதை பாப்போம் . மோடி பிரதமர் ஆக்கபடுவார். ராகுல் தில்லி வீதிகளில் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே .. என்ற பாடலை பாடி திறிவார். பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் கச்சா என்னை உயர்வுதான் .டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததுதான் விலைவாசி ஏற்றத்திற்கு காரணம் என்று பிரதமர் மோடி மக்களுக்கு விளக்கம் சொல்லி கொண்டு இருப்பார் .

எனக்கு சின்ன வயதில் வயல்களில் ஓணான் பிடிக்கும் ஞாபகம்தான் வருகிறது .கன்னியை ஓணானின் கழுத்திற்கு பக்கத்தில் வைத்து காத்திருப்போம். அது கழுத்தை உள்ளே விடுவதும் எடுப்பதுமாக ஆட்டம் காட்டும் ஆனாலும் நாங்கள் பொறுமையாக காத்திருப்போம் . சிலசமயம் ஓணான் கண்ணிக்குள் கழுத்தை விட்டு எடுக்காமல் அப்படியே நிற்கும் ...பிறகு என்ன ? கன்னி இருக்கப்படும் ...கழுத்து நெறிக்கப்படும் ...ஓணான் தொங்கவிடப்படும் .....
மேற்கண்ட கட்டுரைக்கும் இந்த கதைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் ....    
இப்படிக்கு  அண்ணனின் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் அண்ணனின் அடி விழுதுகள் ...........

 

Monday, May 30, 2011

பெரிய இடத்து கிசு கிசு

v

ஒரு கிசு கிசு
*****************
கேடி சகோ என்று பெயர் வாங்கியவர்களில் மூத்தவர். நிதிக்கு பஞ்சம் இல்லாதவர் பெயரிலேயே அதை வைத்திருப்பவர்
ஆனால் அவரை பற்றி அவர் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் பிண கஞ்சன் என்று தான் சொல்வார்கள் .
வெஸ்டர்ன் டாயலட்டில் அம்பது பைசா விழுந்தால்  கையை விட்டு எடுக்கிற ஆளு .

ஊழியர்களுக்கு பிசினாரித்தனமாக சம்பளம் குடுப்பது அதிலும் அந்த பிடித்தம் இந்த பிடித்தம் என்று பாதி சம்பளத்தை திருப்பி வாங்கி கொள்வது என்று இவர் கஞ்சத்தனம் எல்லை மீறி இருக்க இவருக்கு வாய்த்த துணைவியோ இவரை விட ஒரு படி மேலே சென்று விட்டார். இருவரும்  சேர்ந்து பிசினாரித்தனதுக்கு ஒரு பயிற்சி பள்ளி ஆரம்பித்தால் நாங்களும் சேர்ந்து உங்கள் அளவுக்கு இல்லை என்றாலும் ஏதோ ஓரளவுக்கு பிழைத்து கொள்வோம் ........

கிழக்கே எந்த ரெயில் போனாலும் பின்னால் போகும் நடிகை இப்போது சின்னத்திரையில் உச்சத்தில் இருக்கிறார் .
ஒரு நாள் இவருக்கு கஞ்சத்தின் துணைவியார் போன் செய்து நான் வீட்டில் ஒரு எக்ஸ்இபிசன் வைத்திருக்கிறேன் நீங்கள் அவசியம் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார் . பெரிய இடத்து அழைப்பு என்று இவரும் எல்லா வேலைகளையும் நிறுத்தி வைத்து விட்டு. இதனால் ஏற்பட போகும்  சில நஷ்டங்களையும் சகித்து கொண்டு வீட்டிற்கு சென்று இருக்கிறார் அங்கே நான்கு டேபளில் வத்தல் , வடாகம்,ஊறுகாய் ,மற்றும் அப்பளம்  அடுக்கி வைக்க பட்டிருந்தது . இவரும் குழப்பத்துடன் எக்ஸ்இபிசன் என்று சொன்னீர்களே? என்று கேட்டிருக்கிறார் .
இவை எல்லாம் நானே என் கையால் செய்தது நீங்கள் கட்டாயம் ஒன்று வாங்கிதான் செல்லவேண்டும் என்று கஞ்ச துணைவியார் அடம்பிடிக்க நடிகைக்கு சிரிப்பதா  அழுவதா என்று தெரியவில்லை வேறு வழி இல்லாமல் ஐம்பது ரூபாய்க்கு ஒரு ஊர்காய் பாட்டில் வாங்கி  சென்றுள்ளார்.எப்படி எல்லாம் சம்பாதிக்கிறாங்க பாருங்க.......................

***********************************************************************************************************************


ஒரு ஜோக்
****************
மன்மோகன்சிங் :-           நாங்கள் 2012  இல் நிலவுக்கு 20  ஆட்களை அனுப்ப போகிறோம் .

ஒபாமா :-                    அப்படியா ரொம்ப சந்தோஷம் யாரெல்லாம் அவங்க ?

மன்மோகன்சிங் :-    4  ஓ,சி, ....... 4  பிசி, ........... 4  எம் பி சி ,..........3  எஸ் சி ,...........................3  எஸ் டி,.............2  ஸ்பெசல் கோட்டா .................

ஒபாமா :-   2012 ல மட்டும் இல்ல 3012 இல்  கூட உங்களை திருத்த முடியாது ..............

 

Wednesday, May 18, 2011

இந்த மிருகத்தை என்ன செய்யலாம்----உண்மை சம்பவம்

v

நான் என் நண்பர்கள் இருவருடன் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சில நாட்களுக்கு முன்னர் சென்று இருந்தேன் .
அங்கு நடந்த ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .

நேரில் பார்த்தவர்களுக்கு அந்த பூங்கா பற்றி நன்றாக தெரிந்திருக்கும் . சென்னைகுள் ஒரு காடு உள்ளது என்றால் அது வண்டலூர்தான். நல்ல அடர்த்தியான மரங்கள் உள்ள இடம் என்பதால் நல்ல மற்றும் கள்ள காதலர்களின் டாப் டென் வரிசையில் வண்டலூர் எப்போதும் முதலிடம் வகிக்கும் .

பிற்பகல் இரண்டு மணி நல்ல உச்சி வெயில். மரங்கள் சூழ்ந்த   இடம் என்பதால் வெயில் அவ்வளவாக  தெரியாது நல்லா உண்ட களைப்பு தீர ஒரு மரத்தடியில் என்னுடன் வந்த நண்பர்களில் ஒருவன் குட்டி தூக்கம் போட்டான் .
எனக்கு தூக்கம் வரவில்லை அதனால் முழித்திருந்த இன்னொருவனையும் கூட்டி கொண்டு அப்படியே ஒரு நடை போட்டு வரலாம் என்று கிளம்பினேன் .

லயன் சபாரி செய்யும் இடம் மிகவும் அடர்ந்த காடுபோல் இருக்கும் . நண்பகல் என்பதால் பயங்கர நிசப்தம் அப்போது காட்டுக்குள் யாரோ வேகமாக ஓடிவரும் சத்தம் கேட்டது . சத்தம் வந்த திசை நோக்கி நாங்கள் இருவரும் சென்றோம் அருகில் செல்ல செல்ல முச்சிரைக்கும்  சத்தம் பெரிதாக கேட்டது.

அப்போது புதருக்கு பின்னால் இருந்து ஒரு பதினைந்து வயது மதிக்க தக்க  இளம் பெண் வேகமாக ஓடிவந்தாள் .
வேகமாக வந்து என்மேல் மோதி என்னை  பின்னால் இருக்க பிடித்து கொண்டால் . அவள் உடல் நடுங்குவது அவள் இதய துடிப்பின் வேகம் மற்றும் அவள் ஓடிவந்த வேகம் அவள் மூச்சிரைப்பின் மூலம் நன்றாக புரிந்தது. யாருக்கோ பயந்து இப்படி நடுங்குகிறாள் என்று புரிந்தது .

அவளை மெல்ல ஆசுவாசபடுத்தி அவள் முதுகை தடவி பயபடாதே நான் இருக்கிறேன் என்ன ஆயிற்று என்று கேட்டேன். அவள் எவ்வளவோ பேச முயற்சித்தும் அவள் வாயில் இருந்து வார்த்தை  வரவில்லை  உடல் முழுவதும் ஒவ்வொரு மில்லி மீட்டரும் நடுங்கி கொண்டிருந்தது . என் பைகுள் கையை விட்டு என் செல் போனை எடுத்து யாருக்கோ போன் செய்ய முயற்சித்தாள் . அவள் விரல்கள் அதற்க்கு ஒத்துழைக்க வில்லை மீண்டும் போனை என்கையில் குடுத்துவிட்டு பரிதாபமாக பார்த்தாள்.
.


என் நண்பன் உடனே தன் கையில் இருந்த குளிர்பானத்தை அவளிடம் குடுத்து குடிக்க சொன்னான் .
அப்போது நான் அவளை கவனித்தேன் அவள் காலில் செருப்பு இல்லை. அவள் உடை ஓரளவு வசதியானவள் என்று காட்டியது .உடம்பில் ஆங்காங்கே முற்கள் குத்திய காயம் இருந்தது .
அவள் ஓடிவந்த திசை நோக்கி சில  அடி தூரம் நடந்து பார்த்தேன் ஒன்றும் தென்படவில்லை.
மீண்டும் திரும்பி வந்தபோது அவள் ஓரளவு தெளிவாக இருந்தால் என் நண்பனிடம் பேசி கொண்டிருந்தாள் .

என்னை பார்த்ததும் எழுந்து வந்து அண்ணா என்னை எப்படியாவது வெளியே கொண்டு விட்டு விடுங்கள் என்று கதறினாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை உன் பிரெச்சனை என்ன சொல் நான் இருக்கும் போது எந்த ஆபத்தும் வராது தைரியமாக இரு என்று சொன்னேன் .

அவள் சொன்னதை கேட்டு நானும் என் நண்பனும் கோவத்தின் உச்சிக்கு சென்று விட்டோம் .
அப்படி என்ன சொன்னால் என்று தெரிய வேண்டுமா ?

அவள் ஒரு ப்ளஸ் 2  மாணவி அவள் காதலனுடன் வண்டலூருக்கு வந்திருக்கிறாள் . அவனும் அவளுடன்  படிக்கும் மாணவன்தான்.    இருவரும் ஆள் நடமாட்டம் இல்லாத லயன் சபாரி இடத்தில அமர்ந்து பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்கள் . அப்போது அவன் அவளுக்கு முத்தம் குடுக்க முயற்சி செய்திருக்கிறான் . இதை அங்கு வந்த காவலர் ஒருவர் பார்த்துவிட்டார் . அவர் இருவரையும் பிடித்து மிரட்டி இருக்கிறார் . அந்த பையனை ஜெயிலில் போட்டு விடுவேன் என்று மிரட்டி அடித்து விரட்டி விட்டார் .

இந்த பெண்ணை மட்டும் பிடித்து கொண்டு உன்னை போலீசில் ஒப்படைக்க  போகிறேன். விபச்சாரம் செய்தாய் என்று உன்னை உள்ளே போட்டு விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார் .
ஐயா என்னை விட்டு விடுங்கள் இனிமேல் இந்தமாதிரி தனியாக வரமாட்டேன் என்று கெஞ்சி இருக்கிறாள் .

சரி அப்படி என்றால் என்னோடு வா என்று  அழைத்து போயிருக்கிறான் .அங்கே அவனோடு இன்னொரு கபோதியும் சேர்ந்து கொள்ள இவளுக்கு பயம் வந்துவிட்டது. என்னை எங்கே கூட்டி போகிறீர்கள் என்று கேட்டிருக்கிறாள் .
உன்னை போலீசில் பிடித்து குடுக்க வேண்டாம் என்றால் எங்களோடு ஒரு பத்து நிமிடம் ஜாலியாக இரு இல்லை என்றால் விபச்சார கேசில் உள்ளே இரு எப்படி விருப்பம் என்று எச்சில் ஒழுக அந்த நாய் கேட்டிருக்கு . இவள் மறுக்கவே பலாத்காரம் செய்ய முயன்று இருக்கிறார்கள் .

அவர்களை தள்ளி விட்டு தப்பி வந்து வழி தெரியாமல் ரொம்ப நேரம் சுற்றி எங்களை பார்த்திருக்கிறாள் .
 அவளிடம் அவள் காதலன் நம்பர் வாங்கி பேசினேன் .அவனும் பயந்து போய் பூங்காவிற்கு வெளியே காத்திருந்தான் .
பயபடாதே பத்திரமாக இருக்கிறாள் நான் வெளியே கூட்டி வருகிறேன் என்று சொன்னேன் .

வெளியே வரும் வழியில் இரண்டு காவலர்கள் யாரையோ தேடுவது போல் சுற்றும் முற்றும் பார்த்து கொண்டிருந்தனர்
நான் அந்த பெண்ணிடம் கேட்டேன் உன்னை பலாத்காரம் செய்ய முயன்றவர்கள் உனக்கு அடையாளம் தெரியுமா ?
தெரியும் அதோ இருக்கிறான் என்று ஒருவனை காட்டினாள் அவனுக்கு சத்தியமாக ஐம்பது வயது இருக்கும் .

நான் அவள் கையை பிடித்து கொண்டு என்னோடு வந்து அவனை நேராக அடையாளம் காட்டு என்று இழுத்து சென்றேன். அவள் அண்ணா வேண்டாம் என்னை பத்திரமாக  வெளியே  கொண்டு விடுங்கள் போதும் என்று மீண்டும் அழ ஆரம்பித்தாள் . நான் இவளை கூட்டி கொண்டு வருவதை பார்த்த அந்த காவலர்கள் வேகமாக தங்கள் பைக் ஸ்டார்ட் செய்து அந்த இடத்தை விட்டு ஓடி விட்டார்கள் .

என் நண்பனும் அந்த பெண் சொல்வது தான் சரி அதன் வாழ்க்கை பாதிக்கும் அதனால் விட்டு விடு என்று சொன்னான் .
எனக்கும் அது சரியாக பட்டது .
அவளை வெளியே கூட்டி வந்தேன் அங்கே அவள் காதலன் என்று சொல்ல கூடிய பொடியன் நின்று கொண்டிருந்தான்
எனக்கு அந்த காவலன் மேல் இருந்த கோவத்தை இவன் மேல் இறக்கி வைத்தேன் . இடது கன்னம் மட்டும் லேசாக வீங்கியது புத்திமதி சொல்லி இருவரையும் அனுப்பி வைத்தேன் .

இன்னும் வண்டலூரில் அந்த மிருகம் வேலை செய்கிறது எத்தனை  பயந்த அப்பாவி பெண்களை அது வேட்டையாடி இருக்குதோ இல்லை இன்னும் எத்தனை பேரை வேட்டையாட காத்திருக்குதோ ?

நீங்களே சொல்லுங்கள் அந்த மிருகத்தை என்ன செய்யலாம் என்று .
 

 

Monday, May 16, 2011

வந்துட்டாருயா ராஜபாட் ரங்கதுரை...................

v

இந்த படத்திற்கு வசனம் தேவை இல்லை என்று நினைக்கிறேன் ................

இப்போ அடுத்த டிராமா போட நொய்டா போயிருக்கு இந்த பச்ச கொழந்த .............

எப்பா நடிப்புக்கரசா உன் நடிப்பை அப்படியே எங்க ஊரு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுக்கு சொல்லி குடு .

சரியா நடிக்க தெரியாம தப்பு தப்பா நடிச்சி மாட்டிகிராப்புல ...........

டமாசு................ டமாசு .............................  

Monday, April 25, 2011

இந்தியாவின் காலில் குத்த போகும் முள்

v


அமெரிக்காவிற்கு ஒரு கியூபா அதே போல் இந்தியாவிற்கு ஒரு இலங்கை .
முடிந்தவரை அங்கிருந்த தமிழர்களை கொன்று விட்டு நட்புக்கு அடையாளமாக ராஜபக்சையுடன் முஸ்தபா முஸ்தபா ....பாட்டு பாடி தேனிலவு முடித்தாகிவிட்டது இனிமேல் தான் தம்பியின் சுயரூபம் அண்ணனுக்கு தெரிய வரும் ....

நான் ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லி இருந்தேன். எப்போதெல்லாம் இந்திய அணி கிரிகெட் ஆடுகிறதோ அப்போதெல்லாம் மீனவர்கள் கொல்லபடுகிறார்கள் என்று அது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகி விட்டது. உலக கோப்பை போட்டியில் இலங்கை நம்மிடம் தோத்ததற்கு நான்கு மீனவர்களை கொன்று வெறியை தீர்த்து கொண்டது . வழக்கம் போல் நிருபமா வருத்தம் தெரிவித்தாகி  விட்டது . பிரெச்சனையை இந்தியா உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறதாம் .ஹி ஹி .வேற என்ன புடுங்க முடியும் ..இன்னும் நாற்ப்பது பேரை கொன்றாலும் இன்னும் உன்னிப்பாக கவனித்து கொண்டுதான் இருப்பார்கள்.பேசாமல் உன்னிப்பாக கவனிக்கும் இலாக்கா ஒன்று ஆரம்பித்து  அதுக்கு ஒரு அமைச்சரையும் போடலாம் மங்குனி சும்மாதான் இருக்காரு .

சரி விசியத்துக்கு வரேன் ஐ.பி.எல். என்னும் பணம் கொழிக்கும் ஆட்டத்தில். கிரிகெட் ஆடும் அணைத்து நாடுகளும் விளையாட மிக ஆர்வமாக இருக்கிறது . காரணம் வீரர்களுக்கு கிடைக்கும் அபரிதமான பணம் .
அந்த அற்ப சந்தோசத்தை கூட பாகிஸ்தானுக்கு குடுக்க இந்தியா தயாராக இல்லை . அந்த நாட்டில் இருந்து ஒருவரையும் ஏலத்தில் எடுக்கவில்லை. பழி வாங்குறாங்கலாமாம்.

அப்பேற்பட்ட ரோசகார புளியாங்கொட்டை நாடான இந்தியா இலங்கையில் இருந்து மட்டும் பதினொரு வீரர்களை ஏலம் எடுத்தது .
எல்லாம் செஞ்சோற்று கடன் .வேற எந்த நாட்டில் இருந்தும் இவ்ளவு வீரர்களை மொத்தமாக எடுக்கவில்லை .

ஆனால் நேரம் பார்த்து வச்சான் பாரு ஆப்பு. எல்லாரும் ஆடுனது போதும் திரும்பி வாங்கன்னு . நம்ம ஆளுங்க  கெஞ்சி கேக்குறாங்க ஒன்னுத்துக்கும் மசியவில்லை .

 இப்போ ஐ.பி.எல். க்கு போட்டியாக எஸ்.பி.எல். ஆரம்பிக்க போறாங்களாம் இந்த போட்டியை பாகிஸ்தானும் இலங்கையும் சேர்ந்து நடத்துகிறது என்று நினைக்கிறன் . கிழக்கு இலங்கைக்கு அப்ரிதி கேப்டனாக நியமிக்க பட்டுள்ளார்
ஜூலை முதல் ஆகஸ்ட்டு வரை இலங்கையில் நடக்கும் வெளிநாட்டு வீரர்களை அவர்கள் ஏலம் எடுப்பார்களாம் .
போங்கடா போங்க இங்க விலை போகாத மாடுங்க எல்லாம் இனிமேல் அங்க போயி கழுத்துல டோக்கன மாட்டிக்கிட்டு நில்லுங்க நல்ல விலைக்கு போவீங்க மகராசனுங்களா .

அமெரிக்காவின் காலில் குத்திய முள் என்று கியூபாவை சொல்வார்கள் . அதே போல இந்தியாவின் காலில் குத்த போகும் முள்ளாக வளர்ந்து  வருகிறது இலங்கை. இந்த புண்ணியம் எல்லாம் அந்த கணவனை இழந்த அந்த அன்னையாரை தான் சேரும்.
அது சரி எவன் தாலி அறுத்தா நமக்கு என்ன இத்தாலி பிசா சாப்பிட்டா போதும். நல்ல கட்சி,...... நல்ல தலைவி,..... நல்ல நாடு,...நல்ல தேசபக்தி......நல்ல (மானங்கெட்ட)தொண்டர்கள் ..............
நேரு நாமம் வாழ்க ........
இந்திரா நாமம் வாழ்க .......
ராஜீவ் நாமம் வாழ்க ......
சோனியா நாமம் வாழ்க ............
மொத்தத்தில் அவர்கள் குடும்பம் மட்டுமே வாழ்க ..........
மீதி எல்லாம் கடலுக்கு போங்க .......................        

Thursday, April 14, 2011

நீ எல்லாம் ஒரு அரசியல்வாதியா?

v


செக் குடியரசின் அதிபர் அரசு முறை பயணமாக சிலி நாட்டிற்கு போயி இருக்கிறார் .
அங்கு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது அவர் முன்னாள் வைக்கபட்டிருந்த பேனாவை நைசாக திருடி விட்டார் .
அந்த கொடுமையை நீங்களும் பாருங்க .


இவரெல்லாம் ஒரு அரசியல்வாதி அதிலும் அதிபர் என்று சொல்லவே தகுதி இல்லாதவர் .
அதிலும் இவர் இந்த சம்பவத்திற்கு வருத்தம் வேற தெரிவிச்சிருக்காரு ....
எப்பேர்பட்ட அவமானம் ச்சே முதலில் இவர் இந்தியா வந்து நம் தலைவர்களிடம் அரசியல் பால பாடம் கற்று கொள்ளட்டும் .
ஒரு பேனாவை திருடியதற்கு வருத்தம் தெரிவிக்கும் அளவிற்கு செக்  நாட்டு அரசியல் கெட்டு கிடக்கிறது ....
அவர்களுக்கு இந்திய அரசாங்கம் அரசியல் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதுதான் நமது ஆசை ...
இவரெல்லாம் ஸ்பெக்ட்ரம் காமன்வெல்த் பற்றி கேள்வி பட்டாலே செத்து போயிடுவாருன்னு நினைக்கிறேன் ........
இந்தியாவில் ஒரு கவுன்சிலர் ஆக கூட தகுதி இல்லாதவர் எல்லாம் அந்த நாட்டில் அதிபர் .......
கலி முத்தி போச்சி  கலி முத்தி போச்சி வேற என்ன சொல்ல ..............



Tuesday, April 12, 2011

நகைச்சுவை கலாட்டா

v

நேற்றைய பதிவை போல இதுவும் காமடி கலவை மட்டும் தான் யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் கம்பனிக்கு கிடையாது .

இந்த உலகம் இன்னும் நம்மளை நம்புது ....................




சீக்கிரம் எடுங்க பாஸ் பதிவர்கள் சண்டை போட்டு ரொம்ப நாள் ஆச்சி .......................


டி.வீ.யை  உடச்சது  ஒரு குற்றமா? இதுக்கு போட்டு ஆளாளுக்கு அடிக்கிறாங்க ஒரு பச்சை பிள்ளையை போட்டு ..................




இப்போ வந்த மதுரை  படங்களை பார்த்த பாதிப்பு .........................


அந்த கிழவியின் முகத்தை பாருங்க உண்மையிலேயே ரொம்ப நொந்து போயி வசனம் பேசுறாங்க ........
அரசியலில் இவர் வந்தால் வடிவேலு அளவுக்கு வருவாரா என்பதே கேள்விக்குறிதான் ..................
**********************************************************************
இப்போ கொஞ்சம் எஸ்.எம்.எஸ். ஜோக் 


நான் உங்க லவ்வர பஸ் ஸ்டாண்ட்’ல பார்த்தேன்...


அவ என் பக்கத்துல வந்தா...


ரொம்ப பக்கத்துல வந்தா....


வந்து எங்கிட்ட ஒன்னு சொன்னா...


“கொஞ்சம் ஓரமா போங்க...குப்பை அள்ளனும்னு”


ஆமாம்.......சொல்லவே இல்ல!!!!!!!!!!!
*****************************************************
என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும்,
கப்பல்
கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம்பழம்  எல்லாம் வைக்க முடியாது... சங்கு
ஊதிவிட்டுதான் கெளம்பனும்...
*****************************************************
இது தத்துவம் (அட நம்புங்கப்பா)

முதல் பெஞ்ச்ல இருப்பவனுக்கு பிரச்சனைய எப்படி தவிர்ப்பது

என்றுதான் தெரியும்... ஆனா கடைசி பெஞ்ச்ல இருப்பவனுக்குதான் எப்படி

பிரச்சனையே எதிர்கொள்வது என்பது தெரியும்...........

 


Monday, April 11, 2011

சும்மா வந்து சிரிச்சிட்டு போங்க

v

இது எல்லாமே sms ஜோக் தான் நான் ரசித்தவை உங்கள் பார்வைக்கு


1 – 3rd Std.: தினமும் படிக்கிறேண்டா...


4th – 6th: கொஞ்சம் கஷ்டம்டா...


7th – 9th: முக்கியமான கொஸ்டின் மட்டும்தான் படிக்கிறேண்டா...


10th - +2: மைக்ரோ செராக்ஸ் எடுதுக்கலாமடா மச்சான்?


UG: இன்னிக்கு என்ன எக்ஸாம்’டா?


PG: என்னடா சொல்ற... இன்னிக்கு எக்ஸாமா? சொல்லவே இல்ல....
****************************************************************************************************

ஆசிரியர் – 1: எதுக்கு சார் அந்த பையன

பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க?


ஆசிரியர் – 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு

சொல்றான்...

*******************************************************************************************************************
 ஏப்ரல் முதல் தேதி அன்று பன்னிகுட்டி  ஒரு பஸ்ஸில்

ஏறினார். கண்டக்டர் டிக்கெட் வாங்க சொல்ல, பத்து ரூபாய்க்கு டிக்கெட்

வாங்கினார்...


பின் கண்டக்டரைப் பார்த்து சத்தமாக “ ஹே ஏப்ரல் பூல்! என்னிடம் பஸ் பாஸ்

இருக்கே!?” என்றார்..
**********************************************************************************************************************
பெண் – 1: அக்கா இன்னைக்கு என் புருஷன்

ஊருக்கு போறாரு... இன்னைக்கு ராத்திரி மட்டும் என் கூட துணைக்கு

படுங்களேன்...


பெண் – 2: அடிப் போடி...உனக்கும் உன் புருஷனுக்கும் வேற வேல இல்ல! யார்

ஊருக்கு போனாலும் என்னையே கூப்பிடுறீங்க!!
*****************************************************************************************************************************
வாழ்க்கை நமக்கு எவ்வளவோ பாடங்கள் கற்று தருகிறது.. ஒரு

புகழ்வாய்ந்த சீன கவிஞர் சொல்கிறார்...” சிங்க்லியோ சுவா சொன்கலோமா ச்யோன

சுங் உணா செவோல்”


உண்மையிலேயே மனசை தொடும் வரிகள்தானே!...


நான் இதை படித்துவிட்டு அழுதே விட்டேன்!.....


*******************************************************************************************************************************
ஆசிரியர்: போய் சிலபஸ் வாங்கிட்டு வாடா!


கொஞ்ச நேரம் கழித்து மாணவன் வெறும் கையுடன் வருகிறான்...


மாணவன்: சார்..


சிட்டிபஸ்..


ஏர்பஸ்...


டவுன்பஸ்...


எக்ஸ்பிரஸ் பஸ்...


பாயிண்ட்-பாயிண்ட் பஸ்....


டீலக்ஸ்பஸ்....


ஏசிபஸ்....


இப்படி எல்லா பஸ்சும் இருக்கு...


ஆனா நீங்க கேட்ட சிலபஸ் மட்டும் கிடைக்கவே இல்ல!


பஸ் டெபோவிலேயே கேட்டுட்டேன்!
****************************************************************************************************************
டிஸ்கி :- நேரம் கிடைக்கவில்லை அதான் இப்படி இறங்கிட்டேன் கண்டுக்காதீங்க ........

Wednesday, March 30, 2011

வருங்கால நிரந்தர முதல்வர் டி.ஆர்.(2081)

v

தக்காளி நானும் பார்த்துக்கிட்டு இருக்கேன் .யாருமே எங்க வருங்கால முதல்வரை கண்டுக்க மாட்றாங்க .
வைகோ தேர்தலை புறக்கணித்த போது வளைச்சி வளைச்சி பதிவு எழுதினவங்க எல்லாம் எங்க போனாங்க .
இந்த நாட்டுக்காக எப்பேர் பட்ட தியாகத்தை பண்ணிருக்காரு யாருமே கண்டுக்கலேனா எப்படி ......
அதான் அந்த வரலாற்று சிறப்பு மிக்க அறிக்கையை நான் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் படிக்க சோம்பல் படுபவர்களுக்காக காணொளி இணைக்கப்பட்டுள்ளது .
அதனால் அனைவரும் கண்டிப்பாக பார்த்துவிட்டு செல்லவும் வரலாறு மிக முக்கியம் அமைச்சரே ..............


லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கை.....

தற்போது வரும் அறிக்கைகளில் சிலர் தங்கள் கோணத்தில் சொல்வதைப் போல நாங்களும் விரட்டப்பட்டவர்களும் அல்ல. விடு பட்டவர்களும் அல்ல. துரத்தப்பட்டவர்களும் அல்ல.


தொலைநோக்குப் பார்வையில் சிந்தித்துப் பார்த்து தூரம் தள்ளி நின்றவர்கள். கடந்த காலத்து கசந்த அனுபவங்கள் மறக்க வில்லை. அதனால் இந்த தேர்தல் குறித்து இடைப்பட்ட காலத்தில் நான் வாய் திறக்கவில்லை.

இந்த காலத்தில் அரசியலில் முன்னேறுவதற்கு தேவைப்படுகின்றன சில அடிப்படைத் தகுதிகள். அப்படிப்பட்ட தகுதிகள் இருந்தால்தான் தேர்தலில் கூட கிடைக்கும்போல இருக்கிறது கணிசமான தொகுதிகள். இன்றைய சூழலில் அரசியலில் முன்னேறுவதற்கு தேவை யோகம். மாறாக தேவை இல்லவே இல்லையோ தியாகம்.

ஆம் நாட்டு நடப்பைப்பார்த்தால் அரசியல் ஆகி விட்டது கேலிக்கூத்து. அதிக பட்சத்தினர் பேசுகின்றனர்.   வரும் இந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் வாக்களிக்கும் நாள் ஏப்ரல்-13 வாக்குகளை எண்ணும் நாள் மே-13. இடையில் இருப்பது ஒரு மாசம். எதற்கு இந்த அவகாசம்? எனப் பலர் மனதில் எழுந்தது இந்தக் கேள்வி. எந்த கண்கட்டு வித்தை காரணமாகவும் கண்டு விடக்கூடாதல்லவா தோல்வி.

என இந்த தேர்தலில் இறைவனை நோக்கி நடத்த விரும்புகிறோம் ஒரு வேள்வி. மின்னணு வாக்கு பதிவில் குளறுபடி நடப்பதற்கு இருக்கிறதாம் பல வழிமுறை... ஆகையால் மீண்டும் வர வேண்டும் வாக்குச் சீட்டு முறை... அப்படி ஒரு மாற்றம் வராத வரை இந்திய ஜனநாயகத்துக்கே அதுபெரும் குறை. அமாவாசையன்று மாதத்தில் வான் நிலவுக்கு ஒரு நாள் விடுமுறை. சில நாள் வளர்பிறை.

சில நாள் தேய்பிறை. இந்த சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரையில் எங்களுக்கு இருக்கலாம் தேய்பிறை.

இறைவன் அருளால் வரும் காலத்தில் காண்போம் வளர்பிறை. இந்த தேர்தல் காலம் எங்களுக்கான கோடை விடு முறை. கொள்கையைக் காக்க இதுதான் எனக்கு தெரிந்த நடைமுறை. 


தனித்து நின்று தனி ஆவர்த்தனம் வாசிப்போம் என்று சொல்லவும் கூடாது. தண்டவாளம் இல்லாத ஊருக்கு புறப்பட்டு போகவும் முடியாது என்ற சமயோசித முடிவின்படி இந்த சட்ட மன்ற தேர்தலெனும் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆட்டக் காரர்களாக களமிறங்காமல் வெறும் பார்வையாளர்களாகவே இருக்க விரும்புகிறோம்’’தெரிவித்துள்ளார்.
************************************************************************

எல்லோரும் கரகோஷங்களை எழுப்புங்கள் .........



தமிழ்நாடு எத்தனையோ சோதனைகளையும் வேதனைகளையும் சகித்து கொண்டிருக்கிறது ................
இதையும் சேர்த்துதான் .....................

Monday, March 28, 2011

மானம்கெட்ட வாக்காள பெருமக்களே

v

மொத்த தமிழ்நாடே தேர்தல் சுரத்தில் பேஸ்தடித்து இருக்கிறது தண்ணி போடாமலே தமிழ்நாட்டு மக்கள் இப்போது போதையில் இருக்கிறார்கள் . ஐயா வந்தால் என்ன கிடைக்கும் அம்மா வந்தால் என்ன கிடைக்கும் என்று மன கணக்கு போட்டு கொண்டிருக்கிறான் .
அட மானம் கெட்ட வாக்காள பெருமக்களே ஐயாவும் சரியில்லை ஆத்தாளும் சரியில்லை பின்னே மக்களும் தறுதலையாகதான் இருப்பார்கள் .....

இவ்வளவு  இலவசங்கள் இரு கழகங்களும் மாறி மாறி குடுக்கிரார்களே கொஞ்சமாவது சுரனையுடன் எதிர்ப்போம் என்று யாருக்காவது தோன்றுகிறதா ? இவர்கள் இலவசமாக குடுத்து வள்ளல் என்று பெயர் வாங்க அது என்ன அவர்கள் அப்பன் வீட்டு பணமா.?

நல்ல அரசின் வேலை இலவசங்கள் குடுப்பது அல்ல . நல்ல திட்டங்கள் குடுப்பதுதான் . அப்படியே இலவசம் குடுத்துதான் ஆகவேண்டும் என்றால் கல்வியை குடு . மருத்துவத்தை இலவசமாக குடு மற்றதை நாங்கள் சம்பாதித்து கொள்கிறோம் .

நான் இப்போது சம்பாதித்து சேர்த்துவைக்கும் பணம் முழுவதும் என் வாரிசுகளுக்கு முழுமையாக போகும் என்று நினைத்தால் உங்களை விட முட்டாள் வேறு யாரும் இல்லை .

உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள் முன்பு வைன் ஷாப் கடைகள் எல்லாம் அரசியல்வாதிகள் கையில் இருந்தது அவர்கள் அதில் சம்பாதித்து கட்சிகளுக்கு படி அளந்து கொண்டிருந்தார்கள் .அரசு சாராயம் விற்க ஆரம்பித்த பின்னர் அவர்களுக்கு சம்பாதிக்க வேறு துறை தேவைபட்டது . எல்லோரும் இப்போது கல்வித்தந்தை ஆகிவிட்டார்கள் . தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் பொது ஒருவிஷயத்தை கவனியுங்கள் .பெட்ரோல் பன்க்கை விட அதிகமாக பொறியியல் கல்லூரிகள் இருபக்கமும் இருக்கும் .
அதற்க்கு அடுத்த படியாக மருத்துவம். ஒரு நடுத்தர குடும்பத்தை  சேர்ந்த ஒருவன் தன வாழ்நாள் முழுவதும் உழைத்து சம்பாதிக்கும் பணம் பாதி அவன் வாரிசுகளின் கல்விக்காகவும் மீதி அவனின் முதிய வயதில் மருத்துவதுக்காகவும் செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். ஒருவரின் வாழ்நாள் சம்பாத்தியம் முழுதும்  இருவரால் கொள்ளையடிக்க படுகிறது. அது தெரியாமலேயே ஒண்ணரையணா மிக்சீக்காக சோரம் போகும் வாக்காளர்களை வேறு எப்படி அழைக்க முடியும் .....

இப்போது வரை இலவசங்களை மக்கள் வெறுப்பதாக தெரிய வில்லை ஒரு வித நப்பாசையுடன் தான் இருக்கிறார்கள் .
கல்வி கட்டனத்தை குறைக்கும் நடவடிக்கை என்ன ஆனது. எந்த கட்சியாவது தேர்தல் அறிக்கையில் இதை பற்றி சொல்லி இருக்கிறதா? கல்வி என்ன அத்தியாவசிய பொருளா? மிக்சி மாதிரி ...........

முன்னேற்றம் தரும் திட்டம் என்று ஏதாவது கழகங்களிடம் இருக்கிறதா?
நாம் ஏன் இலவசங்களை எதிர்த்து போராடகூடாது. ஈ என இறத்தல் இழிந்தன்று .............அவ்வை கிழவி அப்பவே சொன்னது .
எங்க வீட்டு கிழவி மூணுமே யாரு தராங்களோ அவுங்களுக்கு தான் ஒட்டு போடணும்ன்னு சொல்லுது ..................
ஏற்கனவே தமிழனின் வீரத்தையும் ரோஷத்தையும் தனித்தன்மையையும் மழுங்கடித்து விட்டோம் ...........
மிச்சம் இருப்பது மானம் மட்டும் தான் அதையும் இந்த அரசியல்வாதிகள் மழுங்கடித்து விடுவார்கள் ................

இது மிகவும் ஆபத்தான அரசியல் என்று யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை. இதை மக்களுக்கு புரியவைக்க யாரும் முன்வரவும் இல்லை. வலையுலக நண்பர்கள் குறைந்தபட்சம் இந்த பிரச்சாரத்தை முன்னெடுக்க ஆசை படுகிறேன் . இந்த இலவசங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அறிய ஆவலாய் இருக்கிறேன் .................. 

   

 

Monday, March 21, 2011

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ........

v


இந்த மூன்று மாதத்தில் ஜனங்கள் பொழுது போக்க எத்தனை விதமான பொழுதுபோக்குகள் இருக்கிறது பாருங்கள். உலக கோப்பை கிரிக்கட்டு அடுத்து ஐ.பீ.எல் கிரிக்கெட்டு அப்புறம் தேர்தல் கூத்துக்கள் என்று ஜனங்களுக்கு ஒரே கிளுகிளுப்புதான் .

தேர்தல் தேதி அறிவிக்க பட்டவுடன் நடந்த கூத்துக்கள் எல்லாருக்கும் தெரியும்.என் சிறுமூளைக்கு மட்டும் சின்ன டவுட்டு இருக்கு பெருமூளை  எப்போதும் வேலை செய்வதில்லை.யாராவது விவரமானவங்க சொன்னா புரிஞ்சிபேன் .

இந்த தேர்தலில் தி.மு.க. ஒரு அணியாகவும் ஆ.தி.மு.க ஒரு அணியாகவும் நிற்கிறது. ஆரம்பத்தில்  தி.மு.க. மேல் இருந்த மக்கள் கோபம் ஆ.தி.மு.க அணியை சுலபமாக வெற்றி பெற வைக்கும் என்று தான் நினைத்திருந்தேன் . ஆனால் கடந்த நாட்களில் அம்மா ஆடிய கூத்து பார்த்து என் கணக்கு தவறு என்று புரிந்துகொண்டேன் .

போதாத குறைக்கு கலைஞ்சரின் தேர்தல் அறிக்கை வேறு .நாம் என்னதான் கரடியாக கத்தினாலும் மிக்சி கிரைண்டர்க்கு சோரம் போகும் மக்கள் தான் எண்ணிக்கையில் பெரும்பாலும் இருக்கிறார்கள்.

இந்த தேர்தலில் நாம் காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் .........ம்................நியாயமான கோபம் .
சரி நாம் தோற்கடிக்க முயற்சிப்போம் தமிழ் இனத்தை அளிக்கும் வேலையே நயவஞ்சகமாக செய்யும் கட்சி தமிழகத்தில் இருக்க கூடாது நியாயமான கோபம்தான் .

அதை தோற்கடிக்க வேண்டும் என்றால் எதிரணியை ஜெயிக்கவைக்க வேண்டும் எதிர் அணியில் யார் இருக்கிறார்கள் ?
போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சொன்ன தங்கதாரகை பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று குரல்குடுத்த வீராங்கனை .சரி அவரை பற்றிதான் தெரியுமே கேப்டன் பிரபாகரன் இருக்கிறார் ஆனால் இவர் கடைசி வரை காங்கிரஸ் கூட்டணிக்கு காத்திருந்து வேறு வக்கு இல்லாமல் அம்மா காலில் போயி விழுந்து விட்டார்.

வை.கோ என்று ஒரு மானஸ்தன் இருந்தார்  ( இந்த ஊரு இன்னுமா இவரை நம்புது )ஊரை விடுங்க கட்சிக்காரன் நிலைமை என்ன?
தமிழர்களுக்காக தம்மு கட்டி குரல் குடுப்பவர்கள் இவரும் திருமாவும் திருமா இப்போது காங்கிரசுடன் கும்மியடிக்கிறார் .
வை.கோ போட்டிக்கு நான் வரலை என்று சொல்லி விட்டார் .
நமக்கு ஒரே வாய்ப்பு தங்க தாரகைக்கு ஒட்டு போடுவதுதான் .

எனக்கு என்ன சந்தேகம்னா தேர்தலுக்கு பிறகு அம்மா ஆட்சி அமைந்துவிட்டால். காங்கிரஸ் மஞ்சள் துண்டை உதறிவிடும் அம்மாவும் காங்கிரசும் சேர்ந்து விடுவார்கள் . இதில் சந்தேகம் இல்லை இது நடக்க போகும் உண்மை .
காங்கிரஸ் அறுபத்தி மூன்று இடத்திலும் தோற்றாலும் இது நடக்கும் மத்தியில் தி.மு.க.கழட்டிவிடபட்டு அம்மா அதிகாரத்தை சுவைப்பார் ஐந்து ஆண்டுகள் பிரெச்சனை இல்லாமல் இங்கு ஆட்சி செய்ய காங்கிரஸ்  தயவு வேண்டும்.

காங்கிரஸ் காரனுக்கு மானம் ரோஷம் சூடு சொரணை எதுவும் இருக்க போவதில்லை அதனால் அவர்கள் எதற்கும் கவலை பட போவது இல்லை .இப்போது காங்கிரசுக்கு எதிராக நாம் போடும் வாக்குகளின் எதிர்காலம் என்ன?
அது இலையாக மாறி மத்தியில் செல்வாக்காக அடுத்த ஐந்து ஆண்டுகள் இருக்கும் என்பதுதான் என் நம்பிக்கை .



காங்கிரசுக்கு எதிராக நான் போடும் வாக்குகளின் எதிர்காலம் என்ன?
49 ஒ போடலாமா ?
விவரமானவங்க சொல்லுங்களேன் புரிஞ்சிகுறேன் ..............


Thursday, March 17, 2011

எங்களுக்கு உணர்ச்சி இல்லை என்று யார் சொன்னது ?

v
கீழே உள்ள  படங்களை பாருங்கள்..........



நெடுஞ்சாலை ஒன்றில் வேகமாக சென்ற காரில் அடிப்பட்டு இருக்கிறாள் அவள் ........


அவன் அவளுக்கு உணவு கொண்டு வந்து தருகிறான் ....





மீண்டும் உணவு எடுத்து வருகிறான் ..............




அவள் இறந்துவிட்டதை நம்ப முடியாமல் அவளை அசைத்து பார்க்கிறான் ..........



தன் காதலி  இறந்து விட்டதை தாங்க முடியாமல் நெஞ்சி வெடித்து அழுகிறான் ..............





மீண்டும் வரமுடியாத தூரத்திற்கு அவள் சென்றுவிட்டால் என்று புரிந்தவுடன்  சோகமே உருவாக அவளை பார்த்து கொண்டிருக்கிறான் ...................

*********************************************************
இப்போது சொல்லுங்கள் பறவைகளுக்கு உணர்ச்சி இல்லையா ?

இதை விட உயர்ந்ததா ஷாஜஹானின் காதல் ?

இதை எடுத்த புகைப்படக்காரர் நிச்சியமாக ஒரு துளி கண்ணீர் ஆவது விட்டிருப்பார்........

நீங்கள் ?................... 
**********************************************************
டிஸ்கி 1 :-  நான் பிரபல பதிவர் ஆவது பிடிக்காமல் அதை தடுக்க பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் சதி செய்கிறார்கள் என்று நினைக்கிறேன் .
தமிழ்மணத்தில் எனக்கு யாரும் ஒட்டு போட முடியவில்லை no such post என்று வருகிறது தமிழ்மண நிர்வாகத்திடம் கேட்டால் இந்த ப்ராப்ளம் எனக்கு மட்டும் தான் இருக்கிறது அதனால் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லிவிட்டார்கள் ...
டிஸ்கி 2   :- அப்பாடா இவனுக்கு ஒட்டு போடுற தொல்லை  இல்லைன்னு யாரும் தப்பித்து போக முயற்சி செய்யவேண்டாம் இன்ட்லி இருக்கிறது அதில் உங்கள் பொன்னான வாக்கை போடுங்கள் .இதற்க்கு தீர்வு தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் ............. 


 

Wednesday, March 9, 2011

பன்னிகுட்டி - அறிவியல் (பாகம் -2 )

v



பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// நாகராஜசோழன் MA said...
மேலும் ஒரு தகவல்: இப்போ இருக்கிற உபகரணங்களைப் பயன்படுத்தி ஒளியின் திசைவேகத்திற்கு இணையாக எந்த பொருளையும் செலுத்த முடியாது. (இது சரிதானே?)/////

இப்போன்னு இல்ல, எப்பவுமே முடியாதுன்னுதான் நினைக்கிறேன். ஏன்னா ஒரு பொருள் ஒளியின் திசைவேகத்தை அடையனும்னா அதன் நிறை (mass) ஜீரோ ஆகிடும் அதாவது அது பொருளாக இருக்கமுடியாது, அலைவடிவமாக (wave) மாறிவிடும், ஒளித்துகளான போட்டோனுக்கு (photon) நிறை கிடையாது....

********************************************************************************************************************************************************************************

நிச்சியமாக எப்போதும் முடியாது .ஏனென்றால் ஒளியின் வேகம் வினாடிக்கு 1,86000 மைல் அதாவது வினாடிக்கு 3,00000 கி.மீ. இந்த வேகத்தில் ஒரு துகள் பயணம் செய்தால் சில அபத்தங்கள் நடக்கும்.

ஒரு துகள் ஒளியின் வேகத்தில் 90 % வேகத்தை அடையும் பொது அதன் எடை 10 % கூடுகிறது அதே துகள் 99 % வேகத்தை அடையும் போது அதன் எடை இரு மடங்காக ஆகிறது பின்னர் அது 99 .9 % வேகத்தை அடையும் போது அதன் எடை  infinity அதாவது ஈறிலி(சரி என்று நினைக்கிறேன்)யாக இருக்கும் அந்த துகளை உந்தி தள்ளுவதற்கு தேவையான ஆற்றல் infinity  ஆக இருக்கும் அதாவது ஈறிலி இது சாத்தியம் இல்லாதது .அதாவது வரைமுறை இல்லாத எடையை உந்தி தள்ள வரைமுறை அற்ற ஆற்றல் வேண்டும் . இந்த தடைதான் எப்போதும் எந்த துகளும் ஒளியின் வேகத்தை எட்ட முடியாமல் நிரந்தரமாக முடக்கி வைக்கபடுகிறது.



அலை துகள் ரெட்டைதன்மை :- இது ஒளியை பற்றி நாம் புரிந்துகொள்ள கணக்கீடு செய்ய ஏற்படுத்த பட்டது . உள்ளார்த எடை இல்லாத எந்த பொருளும் ஒளியின் வேகத்தில் பயணம் செய்யலாம் கதிர் வீச்சுகள் போல் . ஒளியின் இடத்தையும் அதன் வேகத்தையும் எப்போதுமே துல்லியமாக அளவிட முடியாது அதன் இடத்தை எவ்வளவு துல்லியமாக அளக்கிறீர்களோ அந்த அளவுக்கு அதன் வேகத்தை தவறாக அளவீடு செய்வீர்கள் . அதன் வேகத்தை துல்லியமாக அளவீடு செய்யும் போது அதன் இடத்தை தவறாக அளப்பீர்கள் . இந்த முரண்பாடு அதன் இயல்பான தன்மையில் இருக்கிறது . அதனால் தான் அதை அலையாகவும் துகளாகவும் மாற்றி அளவிடுகிறோம் ஒளி என்பது form of energy (இதுக்கு தமிழில் என்னப்பா ) அது ஆற்றலை சுமந்து செல்கிறது அதற்க்கும் ஒரு வரைமுறை இருக்கிறது அது தன்னிச்சையாக ஆற்றல் முழுவதையும் எடுத்து செல்ல முடியாது சிறு சிறு பொட்டலங்களாக தான் எடுத்து செல்ல முடியும் குவாண்டம் என்று சொல்லலாம் .

அலைவடிவில் கற்பனை செய்தால் சூரியன் எரிய ஆரம்பித்து சிலமணி நேரங்களில் அதன் ஆற்றல் முழுவதும் தீர்ந்து போய் இருக்கும் .

ஆனால் இந்த வரைமுறை அதாவது குவாண்டம் தியரிபடி ஆற்றல் வெளியிடுவதால் இன்னும் பல கோடி ஆண்டுகளுக்கு சூரியன் ஆற்றலை வெளிபடுத்தி கொண்டிருக்கும் .............



ரொம்ப கடுப்பேத்துரேனோ சரி விடுங்க இப்போ கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க .............

இந்த படத்தை பாருங்க ஒரு கஷ்டமான கேள்வி கேட்க போறேன்
சரியான பதில் சொல்றவங்க அத்தனை பேருக்கும் சிட்டு குருவி லேகியமும் மாரியம்மா கோயில்ல மந்திரிச்சு குடுத்த தாயத்து இலவசமா தருகிறேன் .
அதை கட்டிக்கிட்டு அவங்க என் கூட சிங்கபூர் டூர் வரலாம் ............................





மேலே உள்ள படத்தில் யாரெல்லாம் ............................

A ௦) தூங்கிகொண்டிருக்கிறார்கள் ?

B  ) முழித்து கொண்டிருக்கிறார்கள் ?

C ) சந்தோஷமாக இருக்கிறார்கள் ?

D )  ஜுரத்தில் (காய்ச்சல் ) இருக்கிறார்கள் ?

E ) குடித்து இருக்கிறார்கள் ?

சரியான விடையை அனுப்புப்ப வேண்டிய முகவரி தபால் பெட்டி என் :- 111
நல்லா குப்புற படுத்து யோசிங்க விடை கிடைத்தாலும் கிடைக்கும் ...........................

Thursday, March 3, 2011

கவுண்டர் கலை உலக பொக்கிஷம்

v


ஐன்ஸ்டீன் தியரியை  புரிந்து கொள்வது கடினம் அதை விட கடினம் அதை எளிமையாக விளக்கி சொல்லமுயற்சிப்பது
சென்ற பதிவு பன்னிகுட்டி -அறிவியல் அந்த மாதிரி ஒரு சிறு முயற்சிதான். இப்போது அலை துகள் கொட்பாட்டை எளிமையான உதாரணத்துடன் விளக்க முயற்சித்து கொண்டிருக்கிறேன் எப்படி பார்த்தாலும் பதிவு மிக பெருசாக இருக்ககூடாது இதுவரை சேர்த்து வைத்த உடன்பிறப்புகலான பாலோவர்ஸ் தெறித்து ஓடிவிட கூடாது என்பதில் கவனாமாக இருக்கிறேன் சென்ற பதிவின் பின்னூட்டத்தில் நண்பர் ஜெயதேவ்தாஸ் நல்ல கருத்துக்களை சொல்லிருந்தார் அவருக்கும் நம் நன்றிகள் ...........


ஆனால் இன்று கொஞ்சம் ரிலாக்ஸ் மூடுக்காக கவுண்டமணியை பற்றி நான் வலையில் சேகரித்த தகவல்கள் அப்படியே  தருகிறேன்
பன்னிகுட்டி அறிவியல் அடுத்த பதிவு ஓக்கேவா ..............................
கவுண்டமணி பேன்சுக்காக .............




கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ்


சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்டமணியின் சில மணியோசைகள் மட்டும் இங்கே...

'சுப்பிரமணி'யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக்கொண்டபுரம்!

கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் ரஜனீஷின் மேற்கோள்கள் தெறிக்கும். 'பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி' என்பார் இயக்குநர் மணிவண்ணன்!

பாரதிராஜாதான் 'கவுண்டமணி' எனப் பெயர் மாற்றினார். '16 வயதினிலே'தான் அறிமுகப் படம்!

அம்மாவை 'ஆத்தா' என்றுதான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டுவிட்டுத்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போதுதான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பார்!

கவுண்டமணியை நண்பர்கள் செல்லமாக அழைப்பது 'மிஸ்டர் பெல்' என்று. கவுண்டமணியே நண்பர்களைப் பட்டப் பெயர் வைத்துத்தான் கூப்பிடுவார். அவை யாரையும் புண்படுத்தாது. நகைச்சுவையாக மட்டுமே இருக்கும். ஆரம்ப கால நண்பர் மதுரை செல்வம் முதல் அனைவரிடமும் இன்று வரை நட்பினைத் தொடர்ந்து வருகிறார்!

மிகப் பிரபலமான கவுண்டமணி - செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை!

இவர் மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக மட்டும் நடித்த படங்கள் 12.

கவுண்டமணிக்குப் பிடித்த நிறம் கறுப்பு. எந்நேரமும் அந்த நிறம் சூழ இருந்தால்கூட 'சரி' என்பார். 'இங்கிலீஷ் கலருடா ப்ளாக்!' என்பவர், எங்கே போவதென்றாலும் ஜீன்ஸ்-கறுப்பு நிற பனியன் அணிந்துதான் செல்வார்!

உணவு வகைகளில் ரொம்பக் கண்டிப்பு. 'பசி எப்போதும் அடங்காத மாதிரியே சாப்பிடுங்கப்பா' என நண்பர்களுக்கு அறிவுறுத்துவார். பக்கா சைவம்!

திருப்பதி ஏழுமலையான்தான் கவுண்டமணி விரும்பி வணங்கும் தெய்வம். நினைத்தால் காரில் ஏறி சாமி தரிசனம் செய்து திரும்புவார். வாராவாரம் நடந்த தரிசனத்தை இப்போதுதான் குறைத்திருக்கிறார் கவுண்டர்!

சினிமா உலகில் அவருக்குப் பெரிய நட்பு வட்டம் கிடையாது. ஆனாலும் சத்யராஜ், அர்ஜுன், கார்த்திக் ஆகிய மூவரிடமும் நெருக்கமாகப் பழகுவார்!

கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன்தான். அவரின் நகைச்சுவைபற்றி அவ்வளவு பெருமிதமாகப் பேசுவதைக் கேட்டுக்கொண்டே வயிறு வலிக்கச் சிரித்து வரலாம்!

புகைப் பழக்கம் அறவே கிடையாது. வெளியே விழாக்கள், பார்ட்டிகள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்துகொள்கிற வழக்கம் கிடையாது. தனிமை விரும்பி!

ஓஷோவின் புத்தகங்களுக்கு ரசிகர். அதே மாதிரி ஹாலிவுட் படங்களைத் தவறாமல் பார்த்து, நல்ல படங்களை நண்பர்களுக்குச் சிபாரிசும் செய்வார்!

கவுண்டரின் தி.நகர் ஆபீஸுக்குப் போனால் சின்ன வயதுக்காரராக இருந்தாலும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் சொல்வார். நாம் அமர்ந்த பிறகுதான் அவர் உட்கார்ந்து பேச்சை ஆரம்பிப்பார்!

கவுண்டருக்கு எந்தப் பட்டங்களும் போட்டுக்கொள்ளப் பிடிக்காது. 'என்னடா, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம். அவருக்கே பட்டம் கிடையாதுடா!' என்பார்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் நிச்சயம் பெருமாள் கோயில் தரிசனமும் விரதமும் உண்டு!

ஷ¨ட்டிங் இல்லை என்றால், எப்பவும் சாயங்காலம் உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலில் முன்பு கவுண்டரைப் பார்க்கலாம். இப்போது நண்பர்களைச் சந்திப்பது ஆபீஸ் மொட்டை மாடியில் மாலை நடைப் பயிற்சியின்போதுதான்!

கார்களின் காதலன் கவுண்டர். 10 கார்களை வைத்திருக்கிறார். நெரிசல் நிரம்பிய இடங்களுக்கு சின்ன கார். அகல சாலைகள் உள்ள இடங்களுக்குப் பெரிய கார்களை எடுத்துச் செல்வார். 'நம் சௌகர்யம் பார்த்தா பத்தாது... ஜனங்க நடமாட சௌகர்யம் கொடுக்கணும்' என்பார்!

எண்ணிக்கையில் அடங்காத வாட்ச், கூலிங்கிளாஸ் கலெக்ஷன் வைத்திருக்கிறார். நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே வந்த பழக்கம் இது!

டுபாக்கூர் சாமியார்களைப் பயங்கரமாகக் கிண்டல் செய்வார். 'மனிதனாகப் பிறந்தவர்களைத் தெய்வமாகச் சித்திரிப்பது ஏமாற்றுவேலை' என்பார். நமக்கும் கடவுளுக்கும் சாமியார்கள் மீடியேட்டரா எனச் சாட்டை வீசுவார். ஆனாலும், தீவிர கடவுள் நம்பிக்கை உடையவர்!

கவுண்டருக்கு, அவர் நடித்ததில் பிடித்த படங்கள் 'ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்' 'வரவு எட்டணா செலவு பத்தணா', 'நடிகன்'. 'அட... என்னடா பெருசா நடிச்சுப்புட்டோம், மார்லன் பிராண்டோவா நானு' என சுய எள்ளலும் செய்துகொள்வார்!

'மறக்க வேண்டியது நன்றி மறந்தவர்களை, மறக்கக் கூடாதது உதவி செய்தவர்களை' என அடிக்கடி குறிப்பிடுவார். ஒருவரை எதிரி என நினைத்துவிட்டால் அவர்களை அப்படியே புறக்கணித்துவிடுவார். ஆனால், நண்பர்கள் கோபித்தாலும், அவரே சமாதானத்துக்குப் போவார்!

சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சைக்குப் பிறகு குணமானார் கவுண்டர். அப்போது மருத்துவமனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வந்த போன் கால்கள், இ-மெயில்கள் கணக்கில் அடங்காதவை. அதைப்பற்றிப் பேசினால் சிரிப்பு அரசனின் கண்களில் நீர் சுரக்கும்!

ஒரே ஒரு தடவைதான் விகடனில் மிக நீண்ட பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். மற்றபடி பேட்டி, தொலைக்காட்சி நேர்காணல் என எதிலும் தலை காட்டியது இல்லை!




 நன்றி மகேந்திரன்.பெ




Tuesday, March 1, 2011

பன்னிகுட்டி -அறிவியல்

v


கடுகு சைஸ் பொருளை வச்சு இந்த உலகத்தை அழிக்க முடியுமா?
இப்படி ஒரு பதிவு ரோஜா பூந்தோட்டம் பாரத் பாரதி தளத்தில் போட்டிருந்தாங்க ரொம்ப நல்லா இருந்துச்சி .

எனக்கு ஆச்சரியம் என்னனா அந்த பதிவுக்கு நம்ம பன்னிகுட்டி அண்ணனின் பின்னூட்டம் பார்க்கணுமே சும்மா பின்னி பெடல் எடுத்திருந்தாரு உண்மையில் நான் ஆச்சரிய பட்டேன் (அதாவது கழுத மேய்க்கிற பையனுக்கு இம்ம்புட்டு அறிவான்னு ?) சும்மா தமாசுக்கு தல கோவிச்சுக்காதீங்க .............

அதே மேட்டர இன்னும் கொஞ்ச விரிவா பார்க்கலாம்ன்னு தான் இந்த பதிவு.
அந்த பதிவின் பின்னூட்டத்தில்  பன்னிகுட்டி என்ற நகைச்சுவை மனிதருக்கு பின்னால் இப்படி ஒரு விஷய ஞானம் உள்ள ஒரு மனிதர் இருக்கிறார் என்று  தெரிஞ்சுகிட்டேன். அதனால சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் அங்கு எங்கள் அண்ணன் தானை தலைவன், தன்மான தமிழன், ஏழைகளின் ஏந்தல்,தாய்குலத்தின் கூந்தல் , இப்படி ஏகப்பட்ட பட்டங்களுக்கு சொந்தக்காரரான பன்னிகுட்டி அவர்களின் ஒவ்வொரு கமன்ட்ஐயும் எடுத்து அதற்க்கு ஒரு சிறு விளக்கம் குடுத்து இங்கு போட போகிறேன்.........  
யாரும் என் மேல பொதுநல வழக்கு போட்டுறாதீங்க ...........................
இப்போது அவரின் அறிவுபூர்வமான பின்னூட்டத்தை பாப்போம் ..............

பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஐன்ஸ்டைனுடைய சார்பியல் தத்துவங்கள் நிருவப்பட முடியாததே அவருக்கு அதற்காக நோபல் பரிசு கொடுக்கப்படாததற்குக் காரணம், நோபல் பரிசு வழங்குவதற்கு, முழு ஆதாரத்துடன் கூடிய கண்டுபிடிப்பு அவசியம்../////////

உண்மை தான் ஐன்ஸ்டீன் கொள்கைகும் நியுட்டன் கொள்கைக்கும் அடிப்படையில் ஒரு முரண்பாடு இருந்தது .
கோள்கள் மையத்தை சுற்றி வருவது புவிஈர்ப்பு விசைதான் காரணம் என்பது நியுட்டன் வாதம்.
 அப்படி பார்க்க போனால் தற்செயலாக ஒரு கோள் இன்னொரு கோள் மீது  மோதினால் எல்லா கோள்களும் ஒன்றோடு ஒன்று மோதிகொள்ளும். காரணம் பொருட்களின் நிறையை பொருத்து அதன் ஈர்ப்பு விசை அமையும் .நிறை இருமடங்கானால் ஈர்ப்பும் இருமடங்காகும் .
இதற்க்கு ஐன்ஸ்டீன் தீர்வு :-  கோள்களின்  சுற்றுப்பாதை ஈர்ப்பு விசையால் அமைவதில்லை மாறாக இந்த பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த துகள்களின் அபரிதமான ஏடையின் காரணமாக விண்வெளியே வளைத்து சுருட்ட பட்டிருக்கிறது இங்கு எல்லாமே வளைவான பாதையில்தான் செல்ல முடியும் நேர்கோடு என்பது கிடையாது .
இப்படி கற்பனை செய்து பாருங்கள் நீங்கள் இப்போது இருக்கும் இடத்தில இருந்து ஒரே நேர்க்கோட்டில் பயணத்தை  தொடங்குகிறீர்கள் நடுவில் எந்த தடையும் உங்களை தடுக்க முடியாது என்று வைத்துகொள்வோம் .அப்படி என்றால் நீங்கள் புறப்பட்ட இடத்திற்கே தான் வந்து சேர்வீர்கள் உங்களை பொறுத்தவரை நீங்கள் பயணித்தது நேர் கொடு ஆனால் வெளியே இருந்து பார்த்தால் நீங்கள் பயணித்தது சுற்று பாதை இது தான் பிரச்சனை. ரோடு மோசம்பா அதான் இப்படி. கோள்கள் நேர்கொட்டில்தான் பயணிக்கிறது ஆனால் வெளிமண்டலம் வளைத்து சுருட்ட பட்டிருப்பதால் நம் கணக்கீடுகள் அனைத்தும் அவை வளைந்து பயணிப்பதாக  காட்டும்.
நியுட்டன் விதிப்படி மற்ற கோள்களின் சுற்றுப்பாதையை தெளிவாக கணக்கிட முடிந்தாலும் .புதன் கோளின் சுற்றுப்பாதையை  துல்லியமான கணக்கீடு செய்யமுடியவில்லை மற்ற கோள்களின் சுற்றுபாதைக்கும் புதனின் சுற்றுப்பாதைக்கும் சுழற்சி வேறுபாடு வித்யாசம் இருந்தது. இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்ததால் உடனடியாக ஐன்ஸ்டீனின் இந்த கொள்கையை உறுதிபடுத்த முடியவில்லை அதன்பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு சூரியகிரகணத்தின் போது புதன் கிரகத்தின் சுற்றுப்பாதையை துல்லியமாக அளந்து ஐன்ஸ்டீன் கொள்கை உறுதிபடுத்தினார்கள் .


அடுத்த பதிவிற்கான கமன்ட் :-பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// நாகராஜசோழன் MA said...
மேலும் ஒரு தகவல்: இப்போ இருக்கிற உபகரணங்களைப் பயன்படுத்தி ஒளியின் திசைவேகத்திற்கு இணையாக எந்த பொருளையும் செலுத்த முடியாது. (இது சரிதானே?)/////

இப்போன்னு இல்ல, எப்பவுமே முடியாதுன்னுதான் நினைக்கிறேன். ஏன்னா ஒரு பொருள் ஒளியின் திசைவேகத்தை அடையனும்னா அதன் நிறை (mass) ஜீரோ ஆகிடும் அதாவது அது பொருளாக இருக்கமுடியாது, அலைவடிவமாக (wave) மாறிவிடும், ஒளித்துகளான போட்டோனுக்கு (photon) நிறை கிடையாது....

இதை இன்னும் கொஞ்சம் விரிவாக அடுத்த பதிவில் பார்க்கலாம் .....................
பன்னிகுட்டி ராமசாமிக்கு ஸ்பெசலாக ஒரு நன்றி................. 
    

Tuesday, February 22, 2011

ப்ளீஸ் என்ன கல்யாணம் பண்ணிக்கங்க

v


இந்த பதிவு எனக்கு மெயிலில் வந்தது அப்படியே உங்களுக்கு தருகிறேன் .

இதை தமிழ்படுத்தினால் இதில் இருக்கும் உண்மையான அர்த்தம் சிதைந்துவிடும் அதனால் அப்படியே தருகிறேன் .

கையில் டிக்சனரி வைத்து கொண்டு புரிந்து கொள்ளவும் .

நல்ல ஆங்கிலம் தெரிந்தவர்கள் இதை படித்து முடித்த வுடன் உங்கள் ஆங்கில அறிவு கெட்டு போச்சின்னு கம்ப்ளைன்ட் பண்ண கூடாது.

These are Girls profiles taken from shaadi.com
These are actual ads on a matrimony site. Grammar and spelling errors have no place in a profile description as everything is straight from the heart!
Disclaimer : I am not responsible if you forget your
basic grammar after reading this mail...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
- Hello To Viewers My Name is Sowmya , I am single i dont have male,
If any one whant to marrie to me u can visite to my home. I am not a good education but i working all
field in bangalore.. if u like me u welcome to my heart...
when ever u whant to meet pls visit my resident or send u letter..
Thanks
yours Regards Sowmya ~*~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
i want very simple boy. from brahmin educated family from Orissa state
she is also know about RAMAYAN, GEETA BHAGABATA, and other homework
(Wut Homework?)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
I am a happy-go-lucky kind of person. Enjoys every moments of life. I love to make friendship. Becauese friendship is a first step of love. I am looking for my dreamboy who will love me more than i.
Because i love myself a lot. If u think that is u then why to late come on ........ hold my hand forever !!!
(The dilwale dulhaniya effect)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
i am simple girl. I have lot of problemin my life because of my lucknow i am looking one boy he care me and love me lot lot lot
(I don't know why but this is one of my favorites)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
i want a boy with no drinks if he wants he can wear jeans in house but while steping out of house he should give recpect to our cast
(by not wearing his jeans? Wat the hell...)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
HYE I AM A GOOD LOKING GIRL,WHO HAS THE CAPABILITY TO MAKE ANY BODY TO LOUGH.I BELIEVE IN GOD AND ACCORDING TO ME FRIENDS ARE THE REAL MESSENGER OF GOD. THE 3 THINGS I AM LOOKING FROM A BOY ,THEY ARE
1.THEY MUST BELIEVE IN GOD.
2. THEY HAVE TO LIKE MY PROFFESION
3. THEY SHOULD NOT GET BORED WITH ME WHEN I WILL TRY
TO MAKE THEM LOUGH.
(all of us are loughing{laughing})
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
whatever he may be but he should feel that he is going to be someone groom and he must think of the future life if he is toolike this he would be called the man of the lamp
(I am clueless, I feel so lost. Can anyone tell me
what this girl wants)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
i love my patner i marriage the patner ok i search my patner and i love the patner ok thik h ai the patner has a graduate ok
(I am again clueless but I liked the use of "ok". The person is suffering from "Ok-syndrome")
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
iam pranati my family histoy my two brother two sister and father & mother sister completely married
(somebody please explain in comments section how to get married 'completely'?)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
my name is farhanbegum and i am unmarried. pleaes you marrige me pleaes pleaes pleaes pleaes pleaes pleaes pleaes
(height of desperation! )
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
iam kanandevi. i do owo businas.one sistar.he was marred.
(No comments)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
hello i am a good charactarised woman. i want to run my life happily . i divorced my first husband. his charactor is not good'. i expect the good minded and clean habits boy who may be in the same caste or other caste accepted ...
(but credit cards not accepted..???)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Iam Sharmila my colour is black, but my heart is white. i like social service.
(Zebra..???)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நண்பர்களே நான் இன்று கவுண்டமணி ரசிகர் மன்ற தளத்தில் காட்டு தர்பார் - சித்தியனாந்தாவின் சிருவிளையாடல் என்று ஒரு பதிவு போட்டிருக்கிறேன் அதையும் கொஞ்சம் வந்து பாருங்களேன் ....................

Popular Posts