நான் மிகவும் மதிக்கும் நண்பரின் முதல் படமான இதற்கு நான் விமர்சனம் எழுதலாமா என்று ஒரு சின்ன தயக்கம் இருந்தது அதை தூக்கி மூலையில் வைத்து விட்டு இதை எழுதுகிறேன் ..
இது ஒரு ரொமாண்டிக் த்ரில்லர் வகை .. பொதுவாக இந்த மாதிரி திரில்லர் படங்களுக்கு ரெண்டு விதமான சைக்காலஜி (உளவியல்) மட்டுமே பிரதானம் .
ஒன்று கொலையாளி யார் என்பதை மறைத்து வத்து பார்வையாளர்களை யூகிக்க விட்டு கடைசியில் முடிச்சை அவிழ்ப்பது . பார்வையாளர்கள் இவனா அவனா ? என்று குழம்பவைத்து அவர்கள் எதிர்பார்க்காத முடிவை தருவது . அந்த முடிவு பார்வையாளர்கள் ஏற்று கொள்ளும் வகையில் இருந்தால் படம் சக்சஸ். உதாரணம் அதே கண்கள் போன்றவை. இதில் வெற்றியை விட தோல்வியே அதிகம் . காரணம் இயக்குனரின் திருப்பம் பார்வையாளர்கள் ஓரளவிற்கு யூகித்து விடுவது . அல்லது ஏற்று கொள்ள முடியாத நிலையில் இருப்பது .
ரெண்டாவது வகை ஓரளவிற்கு வெற்றிகரமானது . இதில் கொலையாளி யார் என்பதை பார்வையாளர்களுக்கு முன்னரே தெரியபடுத்தி விடுவது. ஆனால் அந்த படத்தில் இருக்கும் கேரேக்டர்களுக்கு அது தெரியாது . இப்போது பார்வையாளர்களுக்கு சஸ்பென்ஸ் இருக்காது ஆனால் ஒரு வகை பதபதைப்பு இருக்கும். அது அவர்களை படத்தோடு ஒன்ற செய்துவிடும் . சிகப்பு ரோஜா , விடியும் வரை காத்திரு , வாலி . போன்ற வகையறாக்கள் .
தொட்டால் தொடரும் முதல் வகை . படம் ஆரம்பித்து பத்து நிமிடத்திற்குள் நம்மைஉள்ளே இழுத்து விடுகிறார் இயக்குனர் . படம் தொய்வில்லாமல் நகருவது மிகபெரிய பலம் . படத்தின் நாயகன் தமன் எதார்த்தமான நடிப்பு. பல நேரங்களில் ப்ரித்விராஜ் நினைவுக்கு வருகிறார் அப்படி ஒரு வாயிஸ் மாடுலேஷன் கொஞ்சம் மெனக்கிட்டால் ஒரு ரவுண்ட் வரலாம் .
நாயகி அருந்ததி இந்த அம்மணி கால் சென்ட்டரில் வேலை பார்ப்பவராக இல்லாமல் சண் மியுசிக் காம்பயர் என்று காட்டி இருந்தால் சரியாக இருந்திருக்கும். ஏன் என்றால் இவர் பாடி லேங்குவேஜ் அப்படி இருக்கு நாயகனிடம் பேசும் பொது கூட ஏதோ டெலி காலரிடம் பேசுவதை போலவே இருக்கு. கதாநாயகிகளுக்கு நடிக்க வாய்ப்பு இருக்கும் படங்கள் கிடைப்பது அரிது . இவருக்கு இந்த வாய்ப்பு அதிர்ஷ்டம் தான். அதை சரியாக பயன் படுத்தினாரா என்பது கொஞ்சம் கேள்வி குறிதான் . நாயகனுடன் பாண்டிச்சேரியில் தனியாக தாங்கும் சந்தர்ப்பத்தில் எங்கே கவர்ச்சி கிவர்ச்சி காட்டிவிடுவாரோ என்கிற பதட்டம் தோற்றி கொள்வதை தவிர்க்க முடியவில்லை . நல்ல வேலையாக அப்படி எதுவும் இல்லை . பிற்காலத்திலும் அப்படி நடந்துவிடாமல் இருக்க கடவுளை வேண்டி கொள்வோம் .
நாடகத்தனமான காட்சியமைப்பு படத்திற்கு மிக பெரிய தொய்வு சித்தி கொடுமை கையாலாகாத தந்தை என்று நாயகியின் குடும்பத்தை பார்க்கும் போது எல்லாம் சீரியல் நினைவுதான் வருகிறது .
ரெண்டு ட்ராக்காக பயணிக்கும் திரைக்கதை சுவாரசியம். இன்வெஸ்டிகேஷன் பிரிவு கொஞ்சம் அமெச்சூர் தனம். சுவாரசியமாக போட்ட முடிச்சிகள் அவிழ்க்கும் பொது இருந்த சுவாரஸ்யம் வடிந்து விடுகிறது.
நடிப்பு என்று பார்த்தால் பாரதி மணி ஐயா ஒரு காட்சியில் வந்தாலும் முத்திரை பதுத்து விட்டு போகிறார் . ரெண்டாவது பிரமிட் நடராஜன் . எல்லாம் எச்பீரியன்ஸ்.
இசை பி.சி.சிவம் பாடல்கள் ஒ.கே. ரகம் பின்னணி இசை ரொம்ப சுமார் படம் நாடகத்தனமாக தோன்றுவதற்கு இவர் முக்கிய காரணம் .
க்ளைமாக்ஸ் காட்சி படத்திற்கு ஒரு திரிஷ்ட்டி போட்டு .
தான் ஒரு இயக்குனர் என்பதை கேபிள் ஷங்கர் இந்த படத்தின் மூலம் தெளிவாக நிருபித்து விட்டார் . மிக சிறந்த இயக்குனர் என்பதை அடுத்த படத்தில் நிரூபிப்பார் என்று நம்புகிறேன்.

9 கருத்து சொல்றாங்க:
padam pappandanma!!!!....iyoda!!
தொய்வில்லாமல் நகர்வதே மிகப்பெரிய வெற்றி தான்...
வாழ்த்துக்கள்...
நேர்மையான விமர்சனம்...
நாளைக்குத்தான் பாக்கனும் . தெளிவான விமர்சனத்துக்கு நன்றி அண்ணே !
மிக நேர்மையான விமர்சனம். ஷங்கர், மணிரத்னம், ரஜினி,விஜய், அஜித்,சூர்யா படங்களை கிழித்துதொங்கவிட்ட கேபிள் சங்கர் சரக்கு இவ்வளவு தானா?
இனிமேல் அவர் எந்த படத்தையும் மொக்கை, திரைக்கதை தொதப்பல், க்ரிப்பே இல்லை, நாடகத்தனமா இருக்கு என்று விமர்சனம் செய்யும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார் என்றே நினைக்குறேன்.
உங்கள் விமர்சனம் வாசித்துவிட்டு போய் குடும்பத்தோடு படம் பார்த்தோம். மயிரு மாதிரி இருக்கு. டைம் காசு எல்லாம் வேஸ்ட்டு.
நல்லா இருக்குன்னு நான் சொல்லலையே . நல்லா இருந்திருந்தால் நல்லா இருக்குமேன்னு தானே சொன்னேன் . :-)
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Desktop Showrooms in Chennai
Printer prices in chennai
Buy Tablets online chennai
Laptop stores in chennai
Projectors price in Chennai
Buy pendrive online India
External hard disk price in Chennai
Laptop accessories online chennai
Best laptops in Chennai
Tablet showroom in Chennai
Inverters dealers in Chennai
Server dealers in Chennai
Post a Comment