Sunday, January 27, 2013

விசுவாசரூபம்-ஒரு புதிய கதை

v




விஸ்வரூபம் பெயரே வில்லங்கமாக இருக்கு இதற்க்கு ஏகப்பட்ட எதிர்ப்பு வேறு கிளம்பி இருக்கு . அதனால் இந்த படத்தை நான் இயக்கிஇருந்தால் எப்படி இயக்கி இருப்பேன் என்று சொல்கிறேன்.

சிபி. கோவித்து கொள்ள மாட்டார் ஏனென்றால் இது அவர் டிப்பார்ட்மண்ட்.
எதிர்ப்பு இல்லாமல் படம் ஆக்குவது எப்படி .
கமல் அமெரிக்காவில் இருக்கும் ஒரு கதக் ஆசிரியர் அவர் மனைவி அவரிடம் இருந்து விவாகரத்து வாங்க முயற்சிக்கிறார் . அதற்க்கு அவரிடம் ஏதாவது குறை கண்டுபிடிக்க ஒரு துப்பறியும் சாம்புவை நியமிக்கிறார் .இது வரை எந்த மாற்றமும் இல்லை கதை ஆப்கானிஸ்தான் போனபின் மக்கள் எதிர்பார்க்காத திருப்பங்களை வைக்க வேண்டும் .

முதலில் கமல் ஒரு தாலிபான் இயக்க தியாகியாக காட்டவேண்டும் அவர் மீண்டும் வந்து தாலிபானில் இணையும் பொது அங்கு சூழ்நிலை சரி இல்லாததை உணர்கிறார். அவருக்கு அந்த இயக்கத்தின் மீது லேசாக சந்தேகம் வருகிறது . முல்லா ஓமர் வேறு நன்றாக தமிழ் பேசுவது இவரின் சந்தேகத்தை அதிக படுத்துகிறது . இதற்க்கு முன் பார்த்த ஒமருக்கு கன்னத்தில் மறு கிடையாது . இப்போது இருக்கும் ஒமருக்கு கன்னத்தில் மறு இருக்கிறது இவர் உண்மயிலேயே ஓமர்தானா .? சில பல துப்பறியும் வேலைகளுக்கு பின் . ஜிகாதிகள் கையில் வைத்திருப்பது குரான் அல்ல . அது யூதர்களின் தோரா என்றும் அட்டையை மட்டும் குரான் என்று பைண்டிங் செய்திருக்கிறார்கள் என்று கண்டு பிடிக்கிறார் . அதை படித்துவிட்டுதான் இவர்கள் எல்லார் கழுத்தையும் அறுக்கிறார்கள் என்று புரிகிறது . இது கமலின் சந்தேகத்தை அதிக படுத்துகிறது .

ஆப்கானிஸ்தானில் ஏதற்கு புத்தர் சிலை அதை உடைத்து விடலாமே என்று கமல் கேட்க  அதற்க்கு ஓமர் மறுப்பது கமலின் சந்தேகத்தை மேலும் ஊர்ஜித படுத்த அடுத்தகட்ட துப்பறியும் வேலையில் இறங்குகிறார் நம்மவர் .

பல ஆபத்துகளை கடந்து ஆப்கன் மலைகளுக்கு நடுவில் ஒரு பாதாள சுரங்கத்தில் நிறைய டயர்கள் மற்றும் ட்ரம்முகள் அடிக்கி வைக்க பட்டிருக்கும் ஒரு இடத்தில் சிகப்பு மற்றும் பச்சை விளக்குகள் எரியும் பின்னணியில் உண்மையான ஓமர் பல ஆண்டுகளாக கட்டி வைக்க பட்டிருக்கிறார் .
அப்படியென்றால் இப்போது இருப்பவர் உண்மையில் இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனின் சித்தப்பா மகன் இலட்சுமண கோபாலன்  என்ற உண்மை தெரிய வருகிறது. வில்லன்கள் கடைசியில் கமலையும் அண்ட்ரியாவையும் அதே குகையில் கடத்தி கொண்டு போயி கட்டிவைத்து அடிக்கிறார்கள் .
 ஏற்கனவே நிறைய தமிழ் படம் பார்த்திருக்கும் ஆண்ட்ரியா . இதுவரை ஒரு தமிழ்படம் கூட பார்த்திராத வில்லன்களிடம் நீங்க ஆம்பிளையா இருந்தா அவர் கட்ட அவிழ்த்து விட்டு அடிங்கடா பார்ப்போம் என்று சவால் விடுகிறார்.
இதில் மறைந்திருக்கும் சூழ்ச்சி தெரியாமல் வில்லன்கள் கமலின் கட்டை அவிழ்த்து விட்டு வாங்கி கட்டி கொள்கிறார்கள் .






 
ஒரு வழியாக போலி ஓமரை அழித்துவிட்டு உண்மையான ஓமரை தாலிபான் இயக்க தலைவராக ஆக்கிவிட்டு . புத்தர் சிலையை இடிக்க வைத்து விட்டு அங்கிருந்து கிளம்புகிறார் கமல் -----------------------சுபம்

இருங்க ரெண்டாவது பாகத்திற்கு லீட் குடுக்கணும் இல்லையா அதையும் கேட்டுட்டு போங்க . அமெரிக்க அதிபர் உண்மையான ஒபாமா கிடயாது.
அங்கு இருப்பவர் சிவ ராமசேனா தலைவர் முத்தலிக்கின் மூன்றாவது தம்பி இந்த விவரம் கமலுக்கு தெரியவர  அமெரிக்கா கிளம்புகிறார் .----------- விசுவாசரூபம் -2

டிஸ்க்கி :-
                    இந்த படத்திற்கு இந்து அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு வரலாம் ஆனால் மக்கள் ஆதரவோ அரசாங்கத்தின் ஆதரவோ கிடைக்காது என்பதால் கவலை படவேண்டிய அவசியம் இல்லை. இந்துக்களுக்கு அவர்கள் கடவுள் மேல் நம்பிக்கை அதிகம்  நீங்க எவ்ளோ கிண்டல் பண்ணினாலும் எங்க கடவுளுக்கு ஒன்னும் ஆகாது என்ற நம்பிக்கை. சோ பிரெச்சனை இல்லை 

Sunday, January 20, 2013

சின்மயி விவகாரம் -புத்தக விமர்சனம்

v

இந்த புத்தகத்தை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் .
சென்ற வாரம் கண்காட்சிக்கு செண்டிருந்த போது இன்னும் இந்த புத்தகம் கடைக்கு வரவில்லை என்றதும் மிகுந்த ஏமாற்றம் அடிந்திருந்தேன் .
ஆனால் நேற்று இது கிழக்கு பதிப்பகத்தில் பார்த்ததும் வாங்கிவிட்டேன் .

ஆசிரியர் விமலாதித்த மாமல்லன் வயது 52 என்று சொல்கிறார் ஆனால் அவர் எழுத்தை பார்த்தால் மிகவும் இளமையாக இருக்கிறது .
கொஞ்சம் கூட தயவு தாட்சண்யம் பாராமல் இந்த விவகாரத்தை மிக நேர்மையாக அலசியிருக்கிறார் .
சின்மயி அவர் தாயார் மட்டும் அல்ல எழுத்தாளர்கள் ஷோபா ஷக்தி ,அசோகமித்திரன் ,சாருநிவேதா ஜெயமோகன்,என்று அனைவர் நெற்றியிலும் ஆணி அடிக்கிறார்.
அதுவும் இவர் சாருவை காய்ச்சி எடுக்கும்போது நம் மனசுக்குள் ஒரு உற்சாக பட்டாசு வெடிக்கிறது.இந்த விவகாரத்தில் மறைந்து இருக்கும் நுண்ணரசியல் மற்றும் மேட்டு குடி  மனப்பான்மை.எப்படி இவர்களுக்காக சட்டம் வளைந்து குடுத்து ஆலோசனையும் சொல்கிறது .சின்மயி மற்றும் அவர் தாயின் மனநிலையை உளவியல் பூர்வமாக மிக விரிவாக விவரிக்கிறார்.

சின்மயி செய்தது  வினை . ராஜன் செய்தது எதிர்வினை  எதிர்வினைக்கு மட்டும் தண்டனையா ? இதில் ஒரே ஒரு ட்விட்க்காக மாட்டிகொண்ட சரவணபெருமாள் மற்றும் அழிக்கபட்ட ட்விட்கள் என்று எல்லாவற்றையும் ஆதார பூர்வமாக அடுக்குகிறார்.
சின்மயியின் தாயாரின் ரெட்டை வேடம்  பல இடத்தில்  ஆதார பூர்வமாக கலைக்க படுகிறது . வவ்வால் ஏற்க்கனவே அவர் பதிவில் சுட்டிக்காட்டி இருந்தார். இசையும் வசையும் -1  இசையும் வசையும்-2 
ஒரு பிராமினான இவரே பார்ப்பனர்களை கடுமையாக விமர்சிக்கிறார்.
இது விற்றாலும் விற்காவிட்டாலும் கவலை இல்லை இதை புத்தகமாக கொண்டுவந்து தமிழக முதல்வருக்கும் . போலீஸ் கமிஷ்னருக்கும் ஒன்று அனுப்பிவைப்பேன் அப்போதுதான் இந்த குடும்பத்திடம் இருந்து தமிழ்நாட்டில் பல குடும்பங்கள் தப்பிக்கும் இது என் சமுதாய கடமை என்று சொல்கிறார் .

இதில் நமக்கு நன்கு அறிமுகமான பலர் வருகிறார்கள்.சி.பி.செந்தில்குமார் யுவகிருஷ்ணா ,அதிஷா (புத்தகத்தில் கூட இந்த பெயர்கள் இணைபிரியாமல்   வருகிறது) வால்பையன் என்று .
சின்மயி ஆதரவாளரான மாயவரத்தான் செய்கை எல்லாவற்றியும் ஸ்க்ரீன் ஷாட்டுடன் அம்பலபடுத்துகிறது இந்த புத்தகம். மாயவரத்தானை சின்மயி வளர்க்கும் நாய் குட்டியுடன் ஒப்பிட்டு ஒரு படம் இருக்கிறது பாருங்கள்.
எப்படித்தான் யோசிக்கிறார்களோ குபுக் சிரிப்பை வரவழைத்தது .  

யாருக்கு தேவையோ இல்லையோ பதிவர்களுக்கு கண்டிப்பாக இந்த புத்தகம் அவசியத்தேவை. சில ஜாதிவெறியர்கள்களிடம் எச்சரிக்கையுடன் உறையாட வேண்டிய அவசியத்தை நமக்கு உணர்த்துகிறது .
இப்போது புதிது புதிதாக வன்னிய மைந்தன் , தேவேந்திர திலகன் , என்று கிளம்பி இருக்கிறார்கள். இவர்களின் ப்ரெண்ட் ரிக்குவெஸ்ட்களை எப்போதும் நான் ஏற்று கொள்வதில்லை. புறக்கணிப்புதான் நல்லது.

ஆக மொத்தம் இணையத்தில் இயங்கும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். சும்மா ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரவுண்டு கட்டி அடித்திருக்கிறார் .
   

Thursday, January 17, 2013

காட்டுமிராண்டிகளின் தேசத்தில் ரிஸானா

v
வார்த்தைகளில் நிதானிக்க முடியாத காரணத்தால் இந்த காணொளியை பகிர்கிறேன் .
சவுதி காட்டு மிராண்டிகளால் ஆளப்படும் தேசம் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது .
அங்கு வேலைக்கு செல்லும் அனைவரும் அவர்கள் பார்வையில் அடிமைகள்தான்.
அடிமைகளை எப்படி நடத்தவேண்டும் என்று  போதிக்க பட்டுள்ளதால். அதை அவர்கள் பெருமையாக தான்  நினைப்பார்கள் . எண்ணெய் வளம் இருக்கும் வரை இந்த ஆட்டம் தொடரும் . பிறகு நாய் படாத பாடு அவர்கள் படவேண்டி இருக்கும்..
முன்பெல்லாம் சில பெருசுகள்  சமூக குற்றம் நடக்கும்போது இவனுகளை எல்லாம் சவுதி பாணியில் தண்டனை கொடுத்தால்தான் சரி வரும் என்று சொல்ல கேட்டிருக்கிறேன். அரசியல் சார் குற்றங்கள் வெளிவரும்போது ராணுவ ஆட்சி வந்தால்தான் சரிப்படும் என்று சொல்வதையும் நாம் கேட்டிருப்போம் இவை இரண்டும் எவ்வளவு முட்டாள்தனமானது என்று பாக்கிஸ்தானும் சவுதியும் நமக்கு கண் முன் பாடங்களாக இருக்கின்றது .

இந்த தண்டனைக்கு வக்காலத்து வாங்கும் சிலரை  நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது . கிழிந்த டவுசருக்கு (ஷரியா) எத்தனை ஓட்டுதான் போடுவார்கள் என்று .
இந்த திமிர் பிடித்த சவுதி தொழில் அதிபர்கள் இந்தியாவிற்கு தொழில் முறையில் வரும்போது 2 மாதமோ 3 மாதமோ தங்க நேர்ந்தால் . இங்கு சிறு முஸ்லீம் பெண்களை திருமணம் செய்து கொள்வார்கள். மூன்று மாதம் அனுபவித்து விட்டு பிறகு தலாக் சொல்லிவிட்டு பறந்து விடுவார்கள் .
இதற்க்கு ஹைதராபாத்தில் பல ஏஜண்டுகள் இருக்கிறார்கள் .
இது அவர்கள் மத சட்டப்படி அனுமதிக்க பட்ட செயல்.
விபச்சாரம் செய்ய கூடாதாம் அது ஹராம் . அதே நேரம் அதுக்கு ஒரு குறுக்கு வழியும் போட்டு குடுத்திருக்காங்க .

உடல் முழுவதும் ரத்தத்திற்கு பதில் திமிர் ஓடிகொண்டிருக்கும் சவுதிகளை போல மாறிவிட வேண்டும் என்று இங்கும் சிலர் துடிப்பது பார்த்தால் ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை என்ற கதைதான் நியாபகத்திற்கு வருகிறது .

 இதில் மலுபலான பதில் வேறு. ரிசானா விஷயத்தில் யாராவது தவறு செய்திருந்தால். அவர்களுக்கு இறைவன் மறுமையில் தீர்பளிப்பான் .
மற்றவர்களுக்கு இதை பற்றி பேச அருகதை இல்லை என்று சொல்பவர்கள் .
குஜராத் கலவரத்தில் மோடி தவறு செய்திருந்தால். அவரையும் மறுமையில்  இறைவன் தண்டித்து கொள்ளட்டுமே.

சவுதிகளின் உயர்வு மனபான்மைக்கு கிழே வரும் காணொளியை பாருங்கள் இதற்க்கு பெயர்தான் சகோதரத்துவம்.
  

Monday, January 14, 2013

கண்ணா லட்டு திங்க ஆசையா

v



ஏற்கனவே அலக்ஸ் பாண்டியன் படம் பார்த்து அக்குளில் கட்டி வந்தவன் போல் சூடாகி போயி இருந்த என்னை பிலாசபி லட்டு திங்க அழைத்தார் .
இந்த ஆளு எப்போவும் இப்படிதான் சனிகிழமை இரவு போன் போட்டு நம்மகிட்ட சம்மதம் வாங்கிடுவாரு .(சைக்காலஜி தெரிஞ்ச பிலாசபி )
சரி பார்ப்போம் இதிலாவது லட்டு தராங்களா? இல்லை புட்டு தராங்களா ?அட்லீஸ்ட் பொறி உருண்டை அளவிற்கு திருப்தி கிடைத்தால் கூட பொதும்  என்ற மனநிலையில் கிளம்பினேன் .
சரியாக காலை 9.00 மணிக்கு ஐ ட்ரீம்ஸ் திரை அரங்கம் வந்து சேர்ந்தேன்.தியேட்டர் வாசலில் எங்கு பார்த்தாலும் அலெக்ஸ் பாண்டியன் போஸ்டர்கள் கட் அவுட்கள் என்று  வியாபித்து இருக்க பயபுள்ள திட்டம் போட்டு நம்மளை கவுத்திடுச்சி என்று நினைத்து கொண்டு பின் வாங்க தயாரானேன் .
ஜீ அது மூன்று காட்சி நம்ம படம்தான் பகல் காட்சி என்று சமாதான படுத்தி  மேலே சிறிதாக ஒட்டி இருந்த போஸ்டரை காட்டினார் அதன் பிறகுதான் உயிர் வந்தது .

படத்தின் கதை அனைவருக்கும் தெரிந்ததுதான் அதை சொல்லிய விதத்திலும் பெரிதாக எந்த மாறுதலும் இல்லை .என்றாலும் படம் ஆரம்பம் முதல் முடியும் வரை நம்மை இருக்கையில் கட்டி போட்டு விடுகிறார்கள்.
பவர் ஸ்டாரை வைத்து பெரிய அறுவடை செய்திருக்கிறார்கள் .இந்த ஆளுக்கு நடிக்கவே தெரியவில்லை ,பாடி லேங்குவேஜ் சரி இல்லை டயலாக் டெலிவரி படு மோசம் , லிப் மூமன்ட் சுத்தமா இல்லை , சரி இருக்கட்டும் அதனால் என்ன இதெல்லாம் சாதா ஸ்டாருக்கு தான் வேண்டும் எங்க பவருக்கு இது எதுவும் தேவை இல்லை .நீங்க வந்தா மட்டும் போதும் .நீங்க வந்தா மட்டும் போதும் என்று கொண்டாடி தீர்க்கிறார்கள் ரசிகர்கள் .
தியேட்டரில் இதே போன்றதொரு ஆர்ப்பரிப்பை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் ரஜினி படத்திற்குதான் போக வேண்டும் .

அடுத்து  சந்தானம் மனிதர் மிக கடுமையாக உழைத்திருக்கிறார் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இந்த படத்தில் இவர்பங்கு மிக அதிகம் இந்த படத்திலும் ரெட்டை அர்த்த வசனம் பேச தவறவில்லை . ஆனால் அது அதிகம் இல்லாதது ஆறுதல்.

அடுத்து சேது இந்த படத்திற்கு கதாநாயகன் வேண்டுமே என்பதற்காக இவரை வைத்திருக்கிறார்கள்.(மிக்ஸ்சர் சாப்பிடதான்) பெரிதாக இவருக்கு ஸ்கோர் பண்ணும் வாய்ப்பு எதுவும் இந்த படத்தில் இல்லை நாயகி இவர் காதலை ஏற்று கொண்டதால் இவர் கதாநாயகன் ஆகி விடுகிறார். பவர் ஸ்டார் மற்றும் சந்தானம் என்கின்ற ரெண்டு லைட் ஹவுஸ்க்கு நடுவே இவர் வெறும் பெட்டர்மாஸ் லைட் ஆகி விடுகிறார்.


நாயகி விஷாகா  நல்லாத்தான் இருக்கிறார் பஞ்சாப் கோதுமை ஆச்சே பின்ன எப்படி இருக்கும் . பொதுவாக கமெடி படங்களில் பெண்களுக்கு நடிக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கும் . சதிலீலாவதி போல். இதில் இவருக்கு அந்த மாதிரி கிடைக்காதது வருத்தம் தான் . ஆனாலும் ஒரு பாடலில் தனது எல்லா திறமையும் காட்டு காட்டு என்று காட்டி விடுகிறார். அதனால் இவரை ஏற்று கொள்ளலாம்.

அடுத்ததுதான் முக்கியமான பாயிண்ட் இந்த படத்திற்கு விமர்சனம் எழுதிய எல்லோரும் இவருடைய உழைப்பை மறந்து விட்டார்கள். இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் நம்ம யங் சூப்பர் ஸ்டார் சிம்பு என்கின்ற எஸ்.டி .ஆர் . படம் நல்லா விருவிருப்பா போயிகிட்டு இருக்கும் போது  கவுரவ வேடத்தில் இவர் வருகிறார் . நமக்கு அடிவயிறு பகீர் என்கிறது .
நல்ல வேலையாக எந்த பைட்டும் செய்யாமல், பாட்டு பாடாமல், ரெண்டே ரெண்டு பஞ்ச் டயலாக் மட்டும் சொல்லிவிட்டு இடத்தை காலி செய்கிறார் .
படமும் பிழைத்து கொண்டது .


பழைய படத்தையும் இதையும் ஒப்பிட்டு பார்த்தல் . இந்த படம் அதன் அருகில் கூட வரமுடியாது .அதுதான் பாக்கியராஜின் வெற்றி .
லட்டு சிறுசாக இருந்தாலும் சுவையாகவே இருக்கிறது ...


Friday, January 11, 2013

அலெக்ஸ்லு..பாண்டியன்லு

v

வழக்கமாக சினிமா அதிகம் பார்க்காதவன் நான் அப்படியே பார்த்தாலும் அதை விமர்சனம் பண்ணுவது எப்போதாவது நிகழும் அதிசயம் .
அந்த அதிசயம் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இவ்வளவு சீக்கிரம் வாய்க்கும் என்று நான் கனவிலேயும் நினைக்க வில்லை .
இன்று பவர் சடவ்ன் . வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல் இன்று ரிலீஸ் ஆன புது படம் ஏதாவது இருக்கிறதா என்று யோசித்து அம்பத்தூர் ராக்கி சினிமாஸில் அலக்ஸ் பாண்டியன் என்ற அமர காவியம் ரிலீஸ் ஆவதை அறிந்து கொண்டேன் .
சற்றும் தாமதிக்காமல் உடனே கிளம்பி தியேட்டருக்கு வந்து சேர்ந்தேன் .(டிக்கட் கிடைக்க வேண்டுமே என்ற கவலை) ஆனால் கூடட்ம் அதிகம் இல்லாததை கண்டதும் மனதிற்குள் ஒரு சிறு சந்தோஷம் . (அது எவ்வளவு முட்டாள்தனமானது என்று அப்போது எனக்கு தெரியாது )

இப்போது விமர்சனத்திற்கு போவோம் .
படம் ஆரம்பிக்கும் போது இந்த படத்தில் மிருகங்கள் எதுவும் வதைக்கபடவில்லை என்று டைட்டில் கார்ட் காட்டுகிறார்கள் அப்போது எனக்கு  தெரியாது அடுத்த மூன்று மணி நேரம் இவர்களிடம் மாட்டி வதை பட போறது நாம்தான் என்று .
படம் ஆரம்பித்து பத்தே வினாடிகளில் உங்களை அலேக்காக தூக்கி ஆந்திராவிற்கு கொண்டு போய்விடுகிறார் அலேக் பாண்டியன் .
சற்று மிரட்சியோடு படத்தை பின்தொடர்ந்தால். ஓடும் ரெயில். அதை துரத்தும் கதாநாயகி. அவளை துரத்தும் 10 அடியாட்கள். அவளை காப்பாற்ற அவர்களை பின்தொடர்ந்து விரட்டி வரும் கதாநாயகன் . என்று தமிழ் சினிமா இதுவரை கண்டிராத அற்புத காட்சியோடு படம் ஆரம்பம் ஆகிறது .

ரெயில்  பெட்டிகளை  எஞ்சின் கொண்டு இழுக்கிரார்களா ? அல்லது ஷேர் ஆட்டோ வைத்து இழுக்கிரார்களா என்று நமக்கு சந்தேகம் வருவதை தவிர்க்க முடிய வில்லை. அந்த அளவுக்கு எல்லாரும்  ஓடும் ரெயிலில் ஏறி இறங்கி ஜாலியாக விளையாடுகிறார்கள் . வில்லன்னும் வழக்கம் போல் ரயிலை எலிகாப்டரில் துரத்தி வருகிறான் .அவளவுதான் கட் பண்ணா நாம் எங்கு இருக்கிறோம்  என்று நமக்கே மறந்து விடுகிறது அது பரவாஇல்லை . ஆனால் அதை டைரெக்டரும் கதாநாயகனும் மறந்து விட்டதுதான் சோகம் .

சம்பந்தம் இல்லாமல் சந்தானம் ...................இடைவேளை வரை இருவரும் ரெட்டை அர்த்த வசனம் பேசி விளையாடிகொண்டே இருக்கிறார்கள். ஏற்கனவே நம்ம தலைவர் கவுண்டமணி பல படங்களில் செய்த காமடி சீன்களை வைத்து ஒப்பேற்றுகிறார் .சந்தானதிற்க்கு மூன்று தங்கச்சிகள் . சந்தானமே இந்த படத்திற்கு வேஸ்ட் லக்கேஜ் இதில் இன்னும் எக்ஸ்ட்ரா 3 லக்கேஜ் வேறு  ......... 

ஆனால் பார்க்கிற அனைவருக்கும் ஒரு விஷயம் தெளிவாக புரிந்து விடுகிறது . எந்த நேரத்திலும்  இந்த படத்தில் ஒரு கேவலமான பிளாஷ் பேக் வரபோகிறது எல்லோரும் தயாராக இருக்க வேண்டும் என்று .
அது எந்த  அளவிற்கு கேவலமாக இருக்கும் என்பதுதான் நம்மால் யூகிக்க முடியாத சஸ்பென்ஸ் . இந்த விஷயத்தில் டைரெக்டர் சுராஜ் ஜெயித்து விடுகிறார்.

அனுஷ்காவிற்கு கார்த்தி மேல்  காதல் வரும் காரணம் சுறா படத்தில் விஜய் மீது தமன்னாவிற்கு காதல் வருமே அதை விட வலுவானது . இடைவேளை வரை கார்த்தியின் பெயரை யாரும் உச்சரிக்காமல் இருக்கிறார்கள் . இடைவேளைக்கு பிறகு தான் அவர் பெயர் அலெக்ஸ் பாண்டியன் என்று நமக்கு தெரிய வருகிறது எப்பேர்பட்ட சஸ்பென்ஸ் .

இதெல்லாம் என்ன பிசுகோத்து என்று இதைஎல்லாம் தூக்கி சாப்பிடுகிறமாதிரி  இருக்கு பாருங்க ஒரு கிளைமாக்ஸ் . அது நமக்கு அங்க புரியாது வீட்டுக்கு வந்து ஒரு குவாட்டர் விட்டதுக்கு அப்புறம் தான் புரிகிறது . பல பேருக்கு அது புரியாமலே போய்விட சாத்தியமும் இருக்கிறது .
இந்த படத்தை பார்த்துவிட்டு நீங்கள் இருக்கையை ஈரம் பண்ணாமல் வந்துவிட்டால் நீங்கள் பாக்கியவான்கள் ......

படம் பார்த்துவிட்டு நாம்  வெளியே வரும்போது அடுத்த காட்சிக்காக டிக்கெட் வாங்கி விட்டு  உள்ளே போக தயாராக காத்திருப்பவர்களை பார்க்கும் போது நமக்கு வருகிறது பாருங்கள் ஒரு சிரிப்பு அந்த சிரிப்பிற்காக இந்த படத்தை பார்க்கலாம்.

அலெக்ஸ் பாண்டியன் : first worst film of the year  (சுறாவிற்கு அஞ்சான் இதற்கும் அஞ்சான் )

Popular Posts