Wednesday, July 24, 2013

கன்னி கணணி அனுபவம்

v
என் முதல் கணணி அனுபவம் என்கிற பெயரில் பலரும் எழுதி தள்ளுகிறார்கள்.சரி நம்மளையும் எழுத ஏதாவது ஒரு பக்கி கூப்பிடும் அப்போ எழுதலாம் என்று இருந்தேன். ஹம் ஹம் ......ஒரு பய சீண்டலையே ..

அதுக்காக அப்படியே விட்டிட முடியுமா . இதோ என் முதல் கணணி அனுபவம்.

+1னில் வேறு வழி இல்லாமல் எனக்கு ஒதுக்க பட்ட பாடம் கம்பியுட்டர் சயின்ஸ். வெந்ததை தின்னுட்டு விதியேன்னு கிளாசுக்கு போய் கிட்டு இருந்தேன் . கொஞ்சம் கூட என்னை அந்த பாடம் ஈர்க்கவில்ல . ப்ரேக்டிகள் கிளாசுக்கு எங்கள் வகுப்பறையில் இருந்து லேபிற்கு வருசையாக அழைத்து செல்வார்கள் .அப்போது அந்த வரிசையில் இருந்து சில கருப்பு ஆடுகள் தனியாக பிரிந்து வேறு ஒரு பாதையில் போய் கொண்டு இருக்கும். அந்த கருப்பு ஆடுகளில் முதன்மையான ஆடு நான் தான் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன .?

பின்பு கல்லூரியில் நான் எடுத்தது எலக்ட்ரானிக்ஸ் & கம்யுனிகேஷன் . இதில் மைக்ரோ பிராசசர் என்று ஒரு பாடம்  வரும். நான் ஹாஸ்டலில் தங்கி படித்ததால் அப்போது வீட்டு நியாபகம் அடிகடி வரும் . குறிப்பாக இந்த பீரியடில் நான் காலச்சக்கரத்தில் பின்னோக்கி நகர்த்தப்பட்டு தொட்டிலில் படுத்துஇருப்பதாகவும்என் தாய் தாலாட்டு பாடுவதை போலவும் இருக்கும்.
 இப்போது கூட சரியாக தூக்கம் வராத வேளைகளில்  சாரதா மேடம் பாடம் நடத்துவதாக கற்பனை செய்துகொண்டால் பொதும் .

கல்லூரி ப்ரோஜக்ட் எடுத்த பொது என் நண்பர்கள் கம்ப்யுடர்  செய்யலாம்  என்ற யோசனையை கொலை வெறியுடன் எதிர்த்து வாதாடி டி.வி.ட்ரான்ஸ் மீட்டர் & ரிசிவர் செய்ய வைத்த புண்ணியம் என்னையே சாரும் .

இப்படியாக சென்று கொண்டிருந்த என் வாழ்க்கையில் திடீர் என்று டார்ச் அடித்தது என் நண்பன் பெரோஸ் கான் . புதுசா பிரவ்சிங் செண்டர் போட்டிருக்காங்க வா போயி பார்க்கலாம் என்று கூட்டி போனான் .
அங்க பார்த்தா பசங்களை விட பொண்ணுங்க எண்ணிக்கை அதிகமாக இருந்தது . பெரோஸ் சொன்னான் மாப்பிள டெய்லி டியுஷன் போற மாதிரி இங்க ஒரு மணி நேரம் வந்துட்டு போகலாம்ன்னு சொன்னான் .பட் அந்த டீலிங் எனக்கு பிடிச்சிருந்தது ஒத்துகிட்டேன் .

ஆரம்பத்தில் ஒன்னுமே புரியல எந்த சைட்டிற்கு போனாலும் மெயில் ஐடி கேக்குது .அப்போ கடை ஓனர் எனக்கு ஒரு யாஹு மெயில் ஐ.டி. உருவாக்கி தந்தார் . தினமும் வந்து மெயில் செக் வேறு பண்ணுவேன் . ஒரு மெயிலும் வந்திருக்காது . கடுப்புல கடைகாரரிடம் இந்த இளநியில தண்ணி வரல மாதிரி எனக்கு எந்த மெயிலும்வர மாட்டுது என்று கம்ப்ளைன்ட் வேறு பண்ணினேன்னா பார்த்துக்கங்க .

நாளையில்  இருந்து உனக்கு நிறைய மெயில் வர மாதிரி பண்றேன் என்று சொன்னவர். அதே போல் செஞ்சிட்டார் . ஒரு நாளைக்கு குறைந்தது 200 மெயிலாவது வரும். அதில் பெரும்பாலானது கேப்டன் டி.வி. மற்றும் வசந்த் டி.வி. யில் ஒளிபரப்ப படும் நள்ளிரவு சமாச்சாரங்கள்தான் ....

சரி இப்போது நாம் அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டிய நேரம்வந்துவிட்டதாக உள் உணர்வு சொல்லவே. அப்பா கையில் காலில் விழுந்து ஒரு கம்பியுடர் வாங்கினேன் . முதல் வேலையாக அதை பிரித்து போட்டேன்.கொஞ்சம் கூட பயப்படலையே .. அக்குவேறாக ஆணி வேறாக பிரிச்சி மேஞ்சு இது எப்படி வேலை செய்கிறது என்பதை தெரிந்து கொண்டேன்.

நான் படித்தது எலெக்ட்ரானிக்ஸ் என்பதால் இது சுலபமானதாகவும் எனக்கு ஏற்ற வேலையாகவும் தெரிந்தது .
அப்போ ஆரம்பிச்சது இப்போ அதுவே என் தொழிலாக மாறிவிட்டது எங்க  ஏரியாவில் முதன் முதலில் கம்ப்யுடர் சேல்ஸ்&சர்விஸ் செண்டர் ஆரம்பித்தது நான் தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
    
இந்த ஆண்டு புதிதாக திறந்த என் அலுவலகத்திற்கு லோகோ டிசைன் செய்து குடுத்தது அருமை நண்பர் வீடு சுரேஷுகுமார் ...........

Friday, July 19, 2013

மரியான்

v

1980 முதல் 90 வரை காதலுக்கு இருக்குற பவரை பத்தி ஏகப்பட்ட படங்கள் வந்திருக்கு. குறைந்த பட்சம் 300 மெகாவாட் மின்சாரமாவது காதலை வைத்து எடுக்க முடியும். கூடங்குளம் இல்லை என்றால் என்ன நம்ம கிட்ட காதல் இருக்கு என்று அப்போதைய இளைஞ்சர்கள் நம்பவைக்க பட்ட காலம் .
இதில் நாக்கை அறுத்த காதல், மூக்கை அறுத்த காதல் , என்று பல வெரைட்டிகள் வேறு உண்டு .

இப்படி அப்பாவி தனமாக போய் கொண்டிருந்த சினிமா கி.பி.2000 ஆண்டுக்கு பின்னால் காசு ,பணம் , துட்டு ,மணி,மணி, என்று தன்னை புதிப்பித்து கொண்டு வேறு கோணத்தில் பயணிக்க தொடங்கியது .
ரோஜா என்று ஒருபடம் வந்து மணிரத்தினத்தை உச்சத்திற்கு கொண்டு போனதே நினைவு  இருக்கிறதா ? அதே படத்திற்கு கொஞ்சம் ஸ்ப்ரே அடித்து பவ்டர் போட்டு அலங்காரம் பண்ணி வேறு ஒரு பெயர் வத்து உங்க கிட்ட காசை வாங்கி உங்க டேபளில் பரிமாறி இருக்கிறார்கள் .

தனுஷ் :- குறை சொல்ல முடியாத நல்ல நடிகன் சொன்னதை எல்லாம் சிறப்பா செய்கிறார் . இந்த படத்திற்கும் கடுமையாக உழைத்து வேறு இருக்கிறார் பாவம் .
எவ்ளவோ விஷயங்கள் சொல்ல கூடிய சாத்தியம் இருந்தும்.அது மீனவர்கள் வாழ்வாதார பிரச்சனையாக இருக்கட்டும் . அல்லது ஆப்ரிக்க எண்ணெய் சுரண்டல் பிரச்சனையாக இருக்கட்டும். சாத்தியம் இருக்கும் கலத்தை எல்லாம் வீனடித்திருக்கிரார்கள்.

ஒரு பாரதிராஜா படத்தை மணிரத்தினம் டைரெக்ட் செய்த மாதிரி ஒரு எபெக்ட் கடற்கரையை காட்டி காதலர்களை லாங் ஷாட்டில் கொண்டுபோகும் போது ..........ஏ பிலிம் பை பாரதிராஜா என்று போடுவார்களோ என்று எதிர் பார்த்தேன் ஆனால் ஏ பிலிம் பை பரத்பாலா  என்று போட்டு முடித்து விட்டார்கள் .

இந்த படத்தின் மூலம் சமுதாயத்திற்கு அவர்கள் சொல்லும் ஒரே ஒரு விஷயம் என்ன வென்றால் யாரையாவது காதலிச்சி தொலைங்க உங்களால் சோறு தண்ணி இல்லாமல் ஒரு 30 நாள் உயிரோடு இருக்க முடியும் .



Popular Posts