Tuesday, January 11, 2011

ஒரு வித்தியாசமான காதல் கடிதம்

v


பொண்ணுங்க மனச புரிஞ்சிக்கிறது ரொம்ப கஷ்டம் பாஸ் ....
நம்ம பய புள்ள ஒரு லவ் லட்டர் எழுதி அவன் காதலிக்கு குடுத்திருக்கான் ..
பதில் எப்படின்னு பாருங்க .....

வித்தியாசமான காதல் கடிதம் .............

அன்புள்ள ப்ரியா .
கீழ் கண்ட கேள்விகளுக்கு சரியான பதில் தேர்தெடுக்கவும் ..

(A) 10 மார்க்
(B) 5 மார்க்
(C) 3 மார்க்

எப்போதும் நீ கிளாசுக்கு வரும்போது என்னை ஓர கண்ணால் பார்க்கிறாயே  ஏன்?
 (A) என் மேல் உள்ள காதலால் .
(B) என்னை பார்க்காமல் இருக்க முடியவில்லை .
(C) நான் என்ன செய்கிறேன் என்று பார்க்கிறாய் .

ஆசிரியர் ஏதாவது ஜோக் சொன்னால் நீ சிரித்து  கொண்டே என்னை பார்க்கிறாய் .
(A) என் புன்னகை உனக்கு பிடித்திருப்பதால் .
(B) எனக்கும் அந்த ஜோக் பிடித்திருக்கிறதா என்று பார்பதற்கு .
(C) நான் சிரிக்கும் பொது எப்படி இருக்கிறேன் என்று பார்பதற்கு .

நீ வகுப்பறையில் பாடி கொண்டிருந்தபோது நான் வந்தவுடன் பாடுவதை நிறுத்திவிட்டாய்
(A) என் முன்னால் பாட உனக்கு வெட்கம் .
(B) என் வருகை உன்னை பாதித்தால்
(C) உன் குரல் எனக்கு பிடிக்காமல் போய் விடுமோ என்ற பயம்

நீ உன் தோழிகளுக்கு உன் சிறு வயது படத்தை காட்டும் போது நான் கேட்டவுடன் மறைத்து கொண்டாய் .
(A) உனக்கு வெட்கமாக இருந்தது
(B) உனக்கு சங்கடமாக இருந்தது
(C) சொல்ல தெரியவில்லை .

நீ படிகளில் தவறி விழுந்த போது நானும் என் நண்பனும் உனக்கு கை குடுத்தோம் நீ என்னை உற்று பார்த்துவிட்டு என் நண்பனின் கையை பிடித்தாய் .
(A) என்னை வெருபேற்றி பார்க்க
(B) என் கையை பிடித்தால் விட மனம் வராது என்ற காரணம்
(C) சொல்ல தெரியவில்லை .

நீ பஸுக்காக காத்திருக்கும் போது பஸ் வந்தபிறகும் ஏறாமல் நின்றது .
(A) எனக்காக காத்திருந்தாய் .
(B) என்னை நினைத்து கொண்டிருந்ததால் பஸ்ஸை கவனிக்கவில்லை .
(C) அந்த பஸில் இடம் இல்லாததால் .

உன் பெற்றோர்கள் கல்லூரி வந்தபோது என்னை அறிமுகபடுத்தி வைத்தாய் .
(A) வருங்கால மாப்பிளையை காட்ட வேண்டும் என்ற விருப்பம் .
(B) என்னை பற்றி உன் பெற்றோர்கள் நினைப்பதை தெரிந்து கொள்ள .
(C) ஏதோ தோன்றியது  சும்மாதான் .

எனக்கு ரோஜா பிடிக்கும் என்று சொன்னேன் அடுத்த நாளே நீ ரோஜா வைத்து வந்தாய் .
(A) என் ஆசையை நிறைவேற்ற
(B) உனக்கும் ரோஜா பிடிக்கும் என்பதால்
(C) காரணம் ஒன்றும் இல்லை அன்று கிடைத்தது அதனால்

என் பிறந்தநாள் அன்று காலை 6 மணிக்கு என்னை கோவிலில் பார்த்தாய் .
(A) நான் இன்று கோவில் வருவேன் என்று எதிர்பார்த்தால்
(B) முதல் வாழ்த்து உன்னுடையதாக இருக்க வேண்டும் என்ற ஆசை
(C) கோவிலில் வைத்து என்னை வாழ்த்த வேண்டும் என்ற ஆசை .

***********************************************************************************************

40 மதிப்பெண் எடுத்திருந்தால் .
நீ என்னை காதலிக்கிறாய் தயங்காமல் உடனே சொல்லிவிடலாம் .

30 - 40 மதிப்பெண் காதல் உன் மனதின் ஆழத்தில் இருக்கிறது . எப்போது வேண்டுமானாலும் அது வெளி  வரலாம் .

30 ற்கு கீழ் என்னை காதலிக்கலாமா என்ற குழப்பத்தில் இருக்கிறாய் .
பதிலை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.
*******************************************************
ப்ரியாவின் பதில்.

கீழ் கண்ட கேள்விகளுக்கு ஆம் இல்லை என்று மட்டும் பதில் கூறவும் .

முதல் வரிசையில் இருக்கும் மாணவனை உள்ளே நுளையும் யாரும் பார்த்துவிட்டு போவது  சாதாரணமானதா.
(A)ஆம் (B) இல்லை

ஒரு பெண் சிரித்து கொண்டே யாரையாவது பார்த்தல் அது காதலா.?
 (A)ஆம் (B) இல்லை

யாராவது பாடிகொண்டிருக்கும் பொது வரிகள் மறந்துவிட்டால் தொடர்ந்து பாட முடியுமா ?
(A)ஆம் (B) இல்லை

தோழிகளிடம் சிறு வயது படத்தை காட்டி கொண்டிருக்கும் போது ஒரு ஆண் தேவை இல்லாமல் மூக்கை நுழைத்தால் படங்களை மறைத்து  வைப்போமா ?
(A)ஆம் (B) இல்லை

உன் கையை பிடிக்காமல் உன் நண்பன் கையை பிடித்ததில் இருந்து உனக்கு ஒன்று புரியவில்லையா ?
(A)ஆம் (B) இல்லை

ஏன் நான் என் தோழி வசந்திக்காக காத்திருக்கலாம்?
(A)ஆம் (B) இல்லை 

என் பெற்றோர்களுக்கு அன்று நிறைய பேர்களை அறிமுகம் செய்தேன் அதில் நீயும் ஒருவன்
(A)ஆம் (B) இல்லை  .

ரோஜா மட்டும் அல்ல தாமரை காலிபிளவர் , வாழைபூ , இது எல்லாம் உனக்கு  பிடிக்கும் என்று நீ சொன்னாய் .
(A)ஆம் (B) இல்லை

ஓஹோ அன்று உன் பிறந்தநாளா அதனால் தான் கோவில் வந்தாயா . நான் தினமும் வருவேன் உனக்கு தெரியுமா?
(A)ஆம் (B) இல்லை

இதில் ஏதாவது ஒரு கேள்விக்கு நீ (ஆம்) என்று பதில்  சொல்லி இருந்தால்
 நான் உன்னை காதலிக்க வில்லை என்று புரிந்து கொண்டிருப்பாய் .

(இல்லை) என்று பதில் சொல்லியிருந்தால் உனக்கு காதலுக்கான அர்த்தம் தெரியவில்லை ......
********************************************************************************************************************************************************
இது ஒரு மெயிலில் வந்தது ........................ 

19 கருத்து சொல்றாங்க:

சி.பி.செந்தில்குமார் said...

1 st cut

Unknown said...

Super! :-)

சி.பி.செந்தில்குமார் said...

>>>>ஒட்டு போடும் அனைவருக்கும் வடை நிச்சியம் உண்டு.

ha haa haa

அஞ்சா சிங்கம் said...

சி.பி.செந்தில்குமார் said...

1 st cut///

வாங்க சார் ஒரு வடை எடுத்துக்கங்க ................

அஞ்சா சிங்கம் said...

ஜீ... said...

Super! :-)////////////////
வருகைக்கு நன்றி ............

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை....

சி.பி.செந்தில்குமார் said...

this is comedyfull

அஞ்சா சிங்கம் said...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை....////

நன்றி .............

அஞ்சா சிங்கம் said...

சி.பி.செந்தில்குமார் said...

this is comedyfull...////

முதல் முதலாக வருகை தந்திருக்கும் சி.பி.செந்தில்குமார் அவர்களுக்கு நன்றி

Speed Master said...

அருமை அருமை

karthikkumar said...

yempa ippadi :)

அஞ்சா சிங்கம் said...

karthikkumar said...

yempa ippadi :)//////////////////

ஒரு விளம்பரம் ..................

Philosophy Prabhakaran said...

இந்த மாதிரியெல்லாம் லெட்டர் எழுதினா நாடு வெளங்கிடும்...

அஞ்சா சிங்கம் said...

Philosophy Prabhakaran said...

இந்த மாதிரியெல்லாம் லெட்டர் எழுதினா நாடு வெளங்கிடும்...///////

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .......

Anonymous said...

இந்தியா சீக்கிரம் வல்லரசு ஆயிடும்.. போட்டு தாக்குங்க.. மீண்டும் நேரில் சந்திப்போம்..

Unknown said...

//எப்படியாவது படித்து விஞ்சானதிற்கான ஆஸ்கார் அவார்ட் வாங்கி. இந்தியாவிற்கு பெருமை சேர்க்க ஆசைப்பட்டேன்//

விஞ்ஞானத்திற்க்கான ஆஸ்கார் வாங்க முடியாது என்பது உண்மைதான், ஆனால் நோபல் தரங்க, உங்க முயற்சிகளை தொடங்குங்கள்.

Unknown said...

தங்களுடைய விஞ்ஞான ஆர்வம் மெய் சிலிர்க்க வைக்கிறது, நோபல் வாங்கும் முயற்சிக்கான பதிவாகவே, இந்த பதிவு தோன்றுகிறது. வாழ்த்துக்கள்.

குறையொன்றுமில்லை. said...

nallaa irukku

puthiyavan said...

supper

Popular Posts