Friday, August 24, 2012

தமிழ் பதிவர் சந்திப்புக்கு வர முடியாதவர்கள் என்ன செய்யலாம் !

v

சென்னைப் பதிவர் சந்திப்பு ஏற்பாடுஆகிவிட்டது. தமிழ்நாட்டில் இருக்கும் பதிவர்கள் பலர் கோலகலத்துக்கு தயாராகிவிட்டார்கள். ஆனால் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மத்தியக் கிழக்கு, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா மற்றும் உலகெங்கும் உள்ள பதிவர்களால் கலந்துக் கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் இருக்கின்றது. ஒரு விடயத்தில் நேரில் கலந்துக் கொள்ள முடியாவிட்டாலும் நாம் நமது உளப் பூர்வமான ஆதரவை (Solidarity)தெரிவிப்போம் அல்லவா. ஆனால் சற்றே ஒரு வித்தியாசமான யோசனை எனக்குத் தோன்றியது. இணையத்தில் உலாவும் நாம் எதாவது செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. 
பதிவர் சந்திப்பு நடக்கப் போகும் நாள் ஞாயிறு ( August 26, 2012 ), கலந்துக் கொள்ளப் போவது சுமார் 200 -500 வரையிலான பதிவர்கள். ஞாயிறு பலருக்கும் விடுமுறையாகவே இருக்கும் அல்லவா.  ஆனால் தமிழில் எழுதும் ஆயிரக் கணக்கான நாம் என்ன செய்யலாம்.
வீரராகவன் சம்பத் : குப்பையாக விரவிக் கிடக்கும் இணைய செய்திகளை வகைப்படுத்த வந்த ஒரு எளிய முறை தான் # பயன்பாடு. உங்கள் செய்தி எதைப் பற்றியது என்று இரண்டு மூன்று keywords இட்டு இணைப்பது போல. உதாரணத்திற்கு, இந்த பத்தியின #tamilblogger என்று வகைப்படுத்தினால், தேடுபவர்களுக்கு எளிதாகக் கிடைக்கும். நிறைய பேர் ஒரே குறியீட்டுச் சொல்லை ஒரே நேரத்தில் பயன்படுத்தினால், அந்தக் குறியீட்டை கண்டறிந்து Trending topics என்று "தலைப்புச் செய்தி" ஆக்கி விடலாம். நிறைய உதாரணங்களை நீங்கள் Twitter Timeline-ல் பார்த்திருப்பீர்கள்.
ட்விட்டர் வந்த பின் தான் # பயன்பாடு பரவலானது. தற்போது Google+ம் இதைப் பயன்படுத்தி வருகிறது.#ஐ சரியாக பயன்படுத்தினால், இணையம் வழி பல கூட்டு முயற்சிகளை நாம் மேற்கொள்ளலாம். அவை எல்லாவற்றிற்கும் அடிப்படை புரிதல் அவசியம். 

இருக்கவே இருக்கு ட்விட்டர். பதிவர் சந்திப்பு நடக்கும் அந்த நாளில் தயவு செய்து ட்விட்டரில் தொடர்ந்து ட்விட் மழை பொழிய வாருங்கள். உங்களுக்கான குறிச்சொல் ஒன்றையும் உருவாக்கி இருக்கின்றேன். 
#tamilbloggers
நிச்சயம் உங்களின் பேஸ்புக், ட்விட்டர், கூகிள் ப்ளஸ் நண்பர்களை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ட்விட்டரில் ட்விட் மழை பொழியும்படிக் வேண்டிக் கொள்ளுங்கள். நேரில் போகாவிட்டாலும் அவர்களுக்கான ஆதரவுக் குரலை ட்விட்டரில் கொடுப்போம். குறைந்தது இந்திய அளவிலாவது #tamilbloggers -ஐ trend செய்ய வைப்போம். 
நான் தயார் ! நீங்கள் தயாரா ? இந்தப் பதிவை நீங்கள் மீள்பதிவு செய்யவும், பேஸ்புக் உட்பட எதிலும் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கின்றேன். நன்றிகள் !!!
 
நன்றி இக்பால்செல்வன்
இவர் முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்போம் .
http://www.kodangi.com/2012/08/sypport-tamil-bloggers-conference-in-twitter.html

Wednesday, August 22, 2012

மதுவா ...மதமா ...எதில் போதை அதிகம் .?

v


போதை என்ற சமாசாரம் இல்லாமல் இந்த உலகில் எந்த மனிதனும் வாழ்ந்துவிட முடியாது .
என்ன போதைக்கான சமாசாரம் மட்டும் மாறுபடும் . சிலருக்கு மது என்றால் வேறுசிலருக்கு பெண்கள் . சிலருக்கு சிகரெட் . பலருக்கு மதம் .விஷயம் தான் மாறுபடுமே தவிர விளைவு எல்லாம் ஒண்ணுதான் .
சரி இப்போ மது என்ன செய்யும் மதம் என்ன செய்யும் என்று பார்ப்போம் .

மது :- தைரியமும் தன்னம்பிக்கை குறைந்தவன் கூட மது உள்ளே போய்விட்டால் தன்னை ஒரு மாவீரனாக நினைத்து கொள்வான் ....த்தா ஆம்பிளையாய் இருந்தா மேல கை வச்சி  பாருடா ..என்று உச்சஸ்தாயில் கத்திக்கொண்டு ஒரு உயர்வு மனப்பான்மையான மனநிலையில் இருப்பான். அதுவும் தூங்கி எழுந்தால் தெளிந்துவிடும் .

மதம் :- தன் மதம் தான் உயர்ந்தது தாங்கள் தான் ஆழப்பிறந்தவர்கள் .மற்றவர்கள் எங்களுக்கு சமம் கிடையாது . எங்கள் சொல்படி மற்றவர்கள் கேட்க வேண்டும். மற்றவர்கள் சொல்லை ஒருபோதும் நாங்கள் கேட்க மாட்டோம் .
என்று ஒரு உயர்வு மனப்பான்மையான மனநிலையில் இருப்பார்கள் . இது தெளியவே தெளியாது  .

மது :- சில குடிகாரன் (நிச்சியமாக எல்லாரும் அல்ல ) பெண்கள் மேல் வன்கொடுமை செய்கிறார்கள் .மனைவியை குடித்துவிட்டு அடிப்பது போன்ற செயல் . கடுமையாக கண்டிக்க படவேண்டிய செயல் . போதை தெளிந்தவுடன் யாராவது கண்டித்தால் சிலர் அமைதியாக கேட்டு கொள்வார்கள் .

மதம் :- எங்கள் மதமே மனைவியை அடிக்கும் உரிமையை குடுத்திருக்கு . (எல்லா மதமும் அல்ல)அதை கேட்க யாருக்கும் உரிமை இல்லை . பெண்கள் நமக்கு சமமானவர்கள் இல்லை .அவர்களுக்கு சுதந்திரம் அளிக்க கூடாது . எல்லோரும் 1600  ஆம் நூற்றாண்டிலேயே வாழ வேண்டும் . அதை தாண்டி ஒரு பயலும் அடுத்து நூற்றாண்டுக்கு போக கூடாது .மீறி போனால் குண்டு வைத்து கொன்னுபுடுவோம் . என்று அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்வது ஒரு வகையான போதைதான் .

மது :- இந்த போதை அதிகமாக ஆகிவிட்டால் . தெரு என்று கூட பார்க்காமல் கீழே படுத்து விடுவார்கள் . ஊரே சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் .

மதம் :- இந்த போதை அதிகம் ஆகிவிட்டால் தெருவில் கூட்டம் போட்டு . மற்ற மதத்தினரை வசை பாட வைக்கும் .
               ஊரே சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் .

மது :- அரசு கட்டிடம் என்றோ பள்ளி கட்டிடம் என்றோ எதை பற்றியும் கவலை படாது . உச்சா வந்தால் ஒரே சொயிங் தான் .........

மதம்  :- வரலாற்று கட்டிடம் கலைபோக்கீஷம் . பண்டைய நினைவு சின்னம் என்று எதையும் பார்க்காது . போதை தலைக்கு ஏறிவிட்டால் இடித்து தரை மட்டம்தான் .

மது :- அளவிற்கு அதிகமாக போனால் தன் உடம்பை கெடுத்து மரணம் வரை கொண்டு வந்துவிடும் . பாதிப்பு அவனுக்கும் அவனை சார்ந்த குடும்பத்திற்கும் .

மதம் :- அளவிற்கு அதிகமாக போனால் மற்றவர்கள் உயிரை கூட துச்சம் என மதிக்கும் . கொலை செய்வது கூட புனித பணி ஆகி விடும் .

மது :- தன் மன அழுத்தம் போக்கவோ அல்லது நண்பர்களுடம் சந்தோஷத்தை அல்லது துக்கத்தை பகிர்ந்து கொள்ள இதை நாடுபவர்கள் அதிகம்

மதம் :- செத்த பிறகு சொர்க்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் . உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியை நரகமாக ஆக்குபவர்கள் அதிகம் .



மது :- இதை குடித்து விட்டு பதிவு எழுதினால் .டேய் என்னங்கடா படம் எடுக்கிறீங்க . த்தா என்று அநாகரீகமான வார்த்தை சொல்லாடல் எல்லாம் வரும் .

மதம் :- ஈ படத்திற்கு விமர்சனம் எழுத அமர்ந்தாலும் ஏழு குரான் வசனங்களை உள்ளே சொருகி பதிவிட வைக்கும் .

கடைசியாக ஒன்று மது குடித்து இந்த பூமியில் செத்தவனை விட . மத போதை தலைக்கு ஏறி வெட்டிக்கொண்டு செத்தவர்கள் எண்ணிக்கை பலாயிரம் மடங்கு அதிகம் .

நண்பர்களே உண்மையில் எந்த போதை அதிக ஆபத்தானது ......................?

Monday, August 20, 2012

பதிவர் மாநாட்டு தகவல்கள் (அறிய படங்களுடன்)

v
வரலாற்று சிறப்பு மிக்க அந்த மாநாடு இதோ பக்கத்தில் வந்து விட்டது ...

பதிவர்களின் புண்ணியத்தை வணங்கி கட்டிகொள்ளபோகும் மண்டபம் இதுதான் ..
முக்கிய குறிப்பு :-இங்கிருந்து உள்ளேசென்று ஒரு 25  அடி எடுத்து வைத்தால் சாப்டுற இடம் வந்திரும் ..


மண்டபத்தின் ஹால் இதுதான் கட்டி உருண்டாலும்  கலவரமே நடந்தாலும் . வெளியே யாருக்கும் தெரியாத அளவிற்கு பாதுகாப்பானது .இதன் கொள்ளளவு ஆரூர் . மூனா செந்திலை போல் ஒரு ஐநூறு பெயரை தாங்கும் அளவிற்கு வலுவானது என்று தெரிவிக்கிறார்கள் .
முக்கிய குறிப்பு :-இங்கிருந்து  ஒரு 20  அடி கீழே எடுத்து வைத்தால் சாப்டுற இடம் வந்திரும் ..



வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானங்கள் பல எடுக்க போகும் விழா மேடை இதுதான் ..

முக்கிய குறிப்பு :-இங்கிருந்து  ஒரு 40  அடி கீழே எடுத்து வைத்தால் சாப்டுற இடம் வந்திரும் ..



திரும்பிகிற பக்கம் எல்லாம் ஏசியோ..... ஏசி . கார் ஏசி கக்கூஸ் ஏசி ஒரே ஏசிதான் போங்க ....

முக்கிய குறிப்பு :-இது சாப்பிடுற இடத்திற்கு மிக அருகில் உள்ளது .



இந்த இடம்தான் த்ரில்லிங்கான இடம் அடிச்சிக்காதீங்க அமைதியா பாருங்க ...
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
இதுதான் சாப்டுற இடம் ......


ஏற்ப்பாடு பெரியது என்பதால் வெளியூர் பதிவர்கள் தங்கள் வருகையை சீக்கிரமே தெரியபடுத்திவிட்டால் . உங்களை உபசரிக்க எங்களுக்கு சவுகரியமாக இருக்கும் ..


அதி முக்கிய குறிப்பு :- நக்கீரன் மாமா டக்கீலாவுடன்
(நன்றாக கவனிக்கவும் ஷக்கீலா  அல்ல டக்கீலா ) சனி அன்றே வருவதாக வாக்கு குடுத்திருக்கிறார் அதனால் அவருக்கு சிறப்பு விருந்தினருக்கான பட்டம் குடுத்து சிகப்பு கம்பள வரவேற்ப்பு தந்து . அவரை தனியாக அடைக்கும்படி நக்கீரன் கண்காணிப்பு குழுவிற்கு வேண்டுகோள் விடுகிறோம் .

Thursday, August 9, 2012

தகத்தகாய தமிழ் பதிவர்கள் மாநாடு

v
மிக பிரம்பாண்டமாக நடைபெற இருக்கும் அனைத்துலக பதிவர்கள் திருவிழாவிற்கான அழைப்பிதழ்





அலைகடலென திரண்டு வாரீர் வஞ்சம் தீர்த்து கொள்ள வசதியான இடம் என்பதால் பதிவுலக சண்டியர்கள் பயன்படுத்திக்கொள்ளவும் .
  ****************************************************************

டெசோ மாநாடு இலங்கை அரசுக்கு எதிரானதல்ல மு .கருணாநிதி # சமயத்துல குடிகாரன் பேச்சி கூட தெளிவா புரிஞ்சிடும்.

Popular Posts