Friday, January 11, 2013

அலெக்ஸ்லு..பாண்டியன்லு

v

வழக்கமாக சினிமா அதிகம் பார்க்காதவன் நான் அப்படியே பார்த்தாலும் அதை விமர்சனம் பண்ணுவது எப்போதாவது நிகழும் அதிசயம் .
அந்த அதிசயம் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இவ்வளவு சீக்கிரம் வாய்க்கும் என்று நான் கனவிலேயும் நினைக்க வில்லை .
இன்று பவர் சடவ்ன் . வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல் இன்று ரிலீஸ் ஆன புது படம் ஏதாவது இருக்கிறதா என்று யோசித்து அம்பத்தூர் ராக்கி சினிமாஸில் அலக்ஸ் பாண்டியன் என்ற அமர காவியம் ரிலீஸ் ஆவதை அறிந்து கொண்டேன் .
சற்றும் தாமதிக்காமல் உடனே கிளம்பி தியேட்டருக்கு வந்து சேர்ந்தேன் .(டிக்கட் கிடைக்க வேண்டுமே என்ற கவலை) ஆனால் கூடட்ம் அதிகம் இல்லாததை கண்டதும் மனதிற்குள் ஒரு சிறு சந்தோஷம் . (அது எவ்வளவு முட்டாள்தனமானது என்று அப்போது எனக்கு தெரியாது )

இப்போது விமர்சனத்திற்கு போவோம் .
படம் ஆரம்பிக்கும் போது இந்த படத்தில் மிருகங்கள் எதுவும் வதைக்கபடவில்லை என்று டைட்டில் கார்ட் காட்டுகிறார்கள் அப்போது எனக்கு  தெரியாது அடுத்த மூன்று மணி நேரம் இவர்களிடம் மாட்டி வதை பட போறது நாம்தான் என்று .
படம் ஆரம்பித்து பத்தே வினாடிகளில் உங்களை அலேக்காக தூக்கி ஆந்திராவிற்கு கொண்டு போய்விடுகிறார் அலேக் பாண்டியன் .
சற்று மிரட்சியோடு படத்தை பின்தொடர்ந்தால். ஓடும் ரெயில். அதை துரத்தும் கதாநாயகி. அவளை துரத்தும் 10 அடியாட்கள். அவளை காப்பாற்ற அவர்களை பின்தொடர்ந்து விரட்டி வரும் கதாநாயகன் . என்று தமிழ் சினிமா இதுவரை கண்டிராத அற்புத காட்சியோடு படம் ஆரம்பம் ஆகிறது .

ரெயில்  பெட்டிகளை  எஞ்சின் கொண்டு இழுக்கிரார்களா ? அல்லது ஷேர் ஆட்டோ வைத்து இழுக்கிரார்களா என்று நமக்கு சந்தேகம் வருவதை தவிர்க்க முடிய வில்லை. அந்த அளவுக்கு எல்லாரும்  ஓடும் ரெயிலில் ஏறி இறங்கி ஜாலியாக விளையாடுகிறார்கள் . வில்லன்னும் வழக்கம் போல் ரயிலை எலிகாப்டரில் துரத்தி வருகிறான் .அவளவுதான் கட் பண்ணா நாம் எங்கு இருக்கிறோம்  என்று நமக்கே மறந்து விடுகிறது அது பரவாஇல்லை . ஆனால் அதை டைரெக்டரும் கதாநாயகனும் மறந்து விட்டதுதான் சோகம் .

சம்பந்தம் இல்லாமல் சந்தானம் ...................இடைவேளை வரை இருவரும் ரெட்டை அர்த்த வசனம் பேசி விளையாடிகொண்டே இருக்கிறார்கள். ஏற்கனவே நம்ம தலைவர் கவுண்டமணி பல படங்களில் செய்த காமடி சீன்களை வைத்து ஒப்பேற்றுகிறார் .சந்தானதிற்க்கு மூன்று தங்கச்சிகள் . சந்தானமே இந்த படத்திற்கு வேஸ்ட் லக்கேஜ் இதில் இன்னும் எக்ஸ்ட்ரா 3 லக்கேஜ் வேறு  ......... 

ஆனால் பார்க்கிற அனைவருக்கும் ஒரு விஷயம் தெளிவாக புரிந்து விடுகிறது . எந்த நேரத்திலும்  இந்த படத்தில் ஒரு கேவலமான பிளாஷ் பேக் வரபோகிறது எல்லோரும் தயாராக இருக்க வேண்டும் என்று .
அது எந்த  அளவிற்கு கேவலமாக இருக்கும் என்பதுதான் நம்மால் யூகிக்க முடியாத சஸ்பென்ஸ் . இந்த விஷயத்தில் டைரெக்டர் சுராஜ் ஜெயித்து விடுகிறார்.

அனுஷ்காவிற்கு கார்த்தி மேல்  காதல் வரும் காரணம் சுறா படத்தில் விஜய் மீது தமன்னாவிற்கு காதல் வருமே அதை விட வலுவானது . இடைவேளை வரை கார்த்தியின் பெயரை யாரும் உச்சரிக்காமல் இருக்கிறார்கள் . இடைவேளைக்கு பிறகு தான் அவர் பெயர் அலெக்ஸ் பாண்டியன் என்று நமக்கு தெரிய வருகிறது எப்பேர்பட்ட சஸ்பென்ஸ் .

இதெல்லாம் என்ன பிசுகோத்து என்று இதைஎல்லாம் தூக்கி சாப்பிடுகிறமாதிரி  இருக்கு பாருங்க ஒரு கிளைமாக்ஸ் . அது நமக்கு அங்க புரியாது வீட்டுக்கு வந்து ஒரு குவாட்டர் விட்டதுக்கு அப்புறம் தான் புரிகிறது . பல பேருக்கு அது புரியாமலே போய்விட சாத்தியமும் இருக்கிறது .
இந்த படத்தை பார்த்துவிட்டு நீங்கள் இருக்கையை ஈரம் பண்ணாமல் வந்துவிட்டால் நீங்கள் பாக்கியவான்கள் ......

படம் பார்த்துவிட்டு நாம்  வெளியே வரும்போது அடுத்த காட்சிக்காக டிக்கெட் வாங்கி விட்டு  உள்ளே போக தயாராக காத்திருப்பவர்களை பார்க்கும் போது நமக்கு வருகிறது பாருங்கள் ஒரு சிரிப்பு அந்த சிரிப்பிற்காக இந்த படத்தை பார்க்கலாம்.

அலெக்ஸ் பாண்டியன் : first worst film of the year  (சுறாவிற்கு அஞ்சான் இதற்கும் அஞ்சான் )

46 கருத்து சொல்றாங்க:

Anonymous said...

என்ன தல சேம் பிளட்டா, நான் கொளத்தூர் கங்காவில் பார்த்து நொந்தேன். நீங்கள் எங்கள் ஏரியாவில் பார்த்து வெந்தீர்களா.

rajamelaiyur said...

என்ன தல அருவாளால சுமோவை கவுக்குற அற்புதமான காட்சி பற்றி ஒண்ணுமே சொல்லல ?

rajamelaiyur said...

இன்று

FACEBOOK இல் உள்ள உங்கள் படங்கள் அனைத்தையும் எளிதில் DOWNLOAD செய்ய வேண்டுமா ?

பலசரக்கு said...

சிறுத்தையில் "ஜின்தாக்கு ஜின்தாக்கு.. " என்று கேட்ட பொது வயிறு எரிந்து பயந்து போனவர்களில் நானும் ஒருவன்.

நீங்க அஞ்சா சிங்கமாச்சே உங்களுக்கு கொஞ்சம் தைரியம் அதிகமா தான் இருக்கும். இன்னும் இதே போன்று நிறைய "பட" வாழ்த்துக்கள் :-)

Unknown said...

இந்த அற்புதமான காவிய படத்தை நான் 150 கொடுத்து பார்த்தேன் முடியல்ல கூட்டம் இல்லதப்பவே நான் உஸார் ஆயிருக்கனும்

Ramesh said...

செம நக்கலான விமர்சனம். அலெக்ஸ்லு பாண்டியன்லு. அலேக் பாண்டியன். ஷேர் ஆட்டோல இழு படற ரயிலு. கட் பண்ணா எங்க இருக்கம்னே தெரியல. இருக்கைய ஈரம் பண்ணாம வந்தா பாக்கியவான்கள்....... அசத்தலான விமர்சனம். விமர்சனம் எழுதவே இவ்ளோ யோசிக்கறீங்க. இவனுங்க கோடிய கொட்டி கடுப்பேத்தறானுங்க.

வவ்வால் said...

ஓய் அஞ்சா ஸிங்கம்,

// அது நமக்கு அங்க புரியாது வீட்டுக்கு வந்து ஒரு குவாட்டர் விட்டதுக்கு அப்புறம் தான் புரிகிறது .//

நீர் படம் பார்ப்பதில் பச்சிளம் பாலகன்னு நன்னா தெரியுது ஓய் :-))

வீட்டுக்கு வந்து குவாட்டர் அடிச்சு ரோசனை செய்ததை ...தியேட்டர் போகும் போதே ஒரு குவாட்டர் அடிச்சிருந்தா ,படம் "கும்முனு" பிரிஞ்சு இருக்கும்.

இதுக்காகவே ராக்கி தியேட்டர் பின்னாடி,சைடில் என ரெண்டு டாச்மாக் தொறந்து வச்சிருக்கான் :-))

3 லக்கேஜுன்னு சொன்னத பார்த்தாம் "வெயிட்டான" லக்கேஜ்ஜா இருக்கும் போல, எடை போட தெரியாத இ.வா இருக்கீரே, அதெல்லாம் கிக்கான கிலோக்கள் :-))

ஆமாம் அனுஸ்கா , ஒன்னும் அனுசரிச்சு போகலையோ... படத்தில தாராள மயமில்லையா,இதுக்கு தான்யா அந்நிய முதலீடு வேண்டும் என்கிறது :-))

சன்னி லியோன் போன்ற அன்னிய முதலீடுகளின் சேவை தமிழ் சினிமாவுக்கும் தேவை :-))

Philosophy Prabhakaran said...

தம்பி... சினிமா விமர்சனம் எழுதும் போது ஹீரோயினியை புகழ்ந்து ரெண்டொரு நல்ல வார்த்தையாவது எழுதணும்ப்பா...

அஞ்சா சிங்கம் said...

ஆரூர் மூனா செந்தில் said...
என்ன தல சேம் பிளட்டா, நான் கொளத்தூர் கங்காவில் பார்த்து நொந்தேன். நீங்கள் எங்கள் ஏரியாவில் பார்த்து வெந்தீர்களா.//////
/////////////////////////////////

அருவாமனையில் வைத்து நறுக்கி புட்டானுக ..........

அஞ்சா சிங்கம் said...

என் ராஜபாட்டை : ராஜா said...
என்ன தல அருவாளால சுமோவை கவுக்குற அற்புதமான காட்சி பற்றி ஒண்ணுமே சொல்லல ?///

///////////////////////////

அட போயா என்னவோ அது ஒன்னுதான் சீன் மாதிரி .அனுஷ்காவை கார்த்தி கடத்தும் சீன் இருக்கே அதை ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு சீன் வைத்தவர்களால் மட்டுமே யோசித்திருக்க முடியும்...

எனக்கு சிபி யை நினைத்தால் பாவமாக இருக்கு . அந்த ஆளுதான் லாஜிக் மிஸ்டேக் இயக்குனருக்கு கேள்வி என்று ஏதாவது எழுதுவாப்ள . இதுக்கு விமர்சனம் எழுத அவருக்கு ஆயுள் போதுமா என்று தெரியவில்லை .....

அஞ்சா சிங்கம் said...

@ பலசரக்கு
சிருதையில் காமடியாவது நல்லா இருந்துச்சி .....
கார்த்தி ஆந்திரா பக்கமே போயி செட்டில் ஆகிவிடலாம் என்று திட்டம் போட்டு நடிப்பது போல் தெரிகிறது ...
மகராசன் அப்படியே போயிடு திரும்பி வந்துராதே ....

அஞ்சா சிங்கம் said...

சக்கர கட்டி said...
இந்த அற்புதமான காவிய படத்தை நான் 150 கொடுத்து பார்த்தேன் முடியல்ல கூட்டம் இல்லதப்பவே நான் உஸார் ஆயிருக்கனும்.............//////

//

விதி வலியது .................

அஞ்சா சிங்கம் said...


@பிரியமுடன் ரமேஷ் ..

காசும் கால்ஷீட்டும் கிடைத்தால் போதும் வேறு எதுவும் தேவை இல்லை என்று நினைப்பவர்கள் குறும்படம் எடுக்கும் இளைஞ்சர்களிடம் பாடம் கற்க வேண்டும் ............நன்றி

அஞ்சா சிங்கம் said...


@ வவ்வால் ......

என்னது தாராள மயமாக்கலா அது இதில் நிறையவே இருக்கு . ஆனால் ரசிக்க முடியாத அளவிற்கு கன்றாவியாக இருக்கு ....
என்ன சமீப காலமாக வவ்வாலை பல இடத்தில காணவில்லை . ரொம்ப தூரம் பறக்க முடியவில்லையா .? ரெக்கைக்கு ஏதும் சேதாரமா ?

அஞ்சா சிங்கம் said...

Philosophy Prabhakaran said...
தம்பி... சினிமா விமர்சனம் எழுதும் போது ஹீரோயினியை புகழ்ந்து ரெண்டொரு நல்ல வார்த்தையாவது எழுதணும்ப்பா...

///////////////////////////////புகழ்வதற்கு அனுஷ்காவிடம் என்ன இருக்கு தொடையை தவிர ................என்னதான் காட்டினாலும் அதை ரசிக்க முடியாத அளவிற்கு கடுப்பு ஏற்றுகிறார் இயக்குனர்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே ஒரு நாலு டயலாக்கு, டைரக்டருக்கு ரெண்டு வார்த்த இப்படி எதுவுமே இல்லாம வெமர்சனம்னா எப்படிண்ணே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வழக்கமாக சினிமா அதிகம் பார்க்காதவன் நான் அப்படியே பார்த்தாலும் அதை விமர்சனம் பண்ணுவது எப்போதாவது நிகழும் அதிசயம் .//////

இப்படிப்பட்ட ஆளையே முதல் நாளே படம் பார்த்து விமர்சனமும் எழுத வெச்ச அலெக்ஸ்பாண்டியனை பாராட்டாமல் நக்கல் அடித்திருப்பது கண்டிக்கத்தக்கது.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சற்று மிரட்சியோடு படத்தை பின்தொடர்ந்தால். ஓடும் ரெயில். அதை துரத்தும் கதாநாயகி. அவளை துரத்தும் 10 அடியாட்கள். அவளை காப்பாற்ற அவர்களை பின்தொடர்ந்து விரட்டி வரும் கதாநாயகன் .////////

ட்ரைன்னா ஓடத்தான் செய்யும்.... உங்களுக்காக ஓடாத ட்ரைனை காட்ட முடியாது.... வில்லன்னா ஹீரோயினை பார்த்தா விரட்டத்தான் செய்வான்.... ஹீரோனா போய் காப்பாத்திதான் ஆகனும்..... இதையெல்லாம் விமர்சனம் பண்ணா அப்புறம் எப்புடிண்ணே படம் எடுக்கறது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரெயில் பெட்டிகளை எஞ்சின் கொண்டு இழுக்கிரார்களா ? அல்லது ஷேர் ஆட்டோ வைத்து இழுக்கிரார்களா என்று நமக்கு சந்தேகம் வருவதை தவிர்க்க முடிய வில்லை. அந்த அளவுக்கு எல்லாரும் ஓடும் ரெயிலில் ஏறி இறங்கி ஜாலியாக விளையாடுகிறார்கள் . //////

யோவ் ஓடுற ட்ரைன்ல ஏறி இறங்குறதுன்னா அவ்ளோ ஈசியா போச்சா? எவ்ளோ ரிஸ்க் எடுத்து படத்த எடுத்திருக்காங்க, அத போய் ஜாலியா விளையாடுறாங்கன்னு சொல்லிட்டீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அவளவுதான் கட் பண்ணா நாம் எங்கு இருக்கிறோம் என்று நமக்கே மறந்து விடுகிறது அது பரவாஇல்லை . ஆனால் அதை டைரெக்டரும் கதாநாயகனும் மறந்து விட்டதுதான் சோகம் .//////

தயாரிப்பாளரும்தான் மறந்திருப்பாரு, அதை யாராவது கேக்கிறாங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///.சந்தானதிற்க்கு மூன்று தங்கச்சிகள் . சந்தானமே இந்த படத்திற்கு வேஸ்ட் லக்கேஜ் இதில் இன்னும் எக்ஸ்ட்ரா 3 லக்கேஜ் வேறு ......... /////

வந்த வரைக்கும் லாபம்னு பாத்துட்டு போகாம, எக்ஸ்ட்ரா லக்கேஜ்னா.... எப்பூடி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஆனால் பார்க்கிற அனைவருக்கும் ஒரு விஷயம் தெளிவாக புரிந்து விடுகிறது . எந்த நேரத்திலும் இந்த படத்தில் ஒரு கேவலமான பிளாஷ் பேக் வரபோகிறது எல்லோரும் தயாராக இருக்க வேண்டும் என்று .
அது எந்த அளவிற்கு கேவலமாக இருக்கும் என்பதுதான் நம்மால் யூகிக்க முடியாத சஸ்பென்ஸ் . இந்த விஷயத்தில் டைரெக்டர் சுராஜ் ஜெயித்து விடுகிறார்.///////

நீங்களும் ஜெயிச்சிட்டீங்கண்ணே, படம் இந்தளவுக்கு கேவலமா இருக்கும்னு விமர்சனம் படிக்கிற எங்களாலேயும் கெஸ் பண்ண முடியாம போய்டுச்சே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அனுஷ்காவிற்கு கார்த்தி மேல் காதல் வரும் காரணம் சுறா படத்தில் விஜய் மீது தமன்னாவிற்கு காதல் வருமே அதை விட வலுவானது .///////

இன்னுமா இந்த கருமத்துக்கெல்லாம் காரணம் வெச்சி படம் எடுக்குறானுங்க.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இடைவேளை வரை கார்த்தியின் பெயரை யாரும் உச்சரிக்காமல் இருக்கிறார்கள் . இடைவேளைக்கு பிறகு தான் அவர் பெயர் அலெக்ஸ் பாண்டியன் என்று நமக்கு தெரிய வருகிறது எப்பேர்பட்ட சஸ்பென்ஸ் .//////

அது ஒண்ணுமில்லீங்கோ, பாதிப் படத்துக்கப்புறம்தான் ஹீரோவுக்கு (படத்துக்கும்) பேரே வெச்சாங்களாம்...... (என்ன ஒரு ராஜதந்திரம், என்ன ஒரு சாணக்கியத்தனம்......?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இந்த படத்தை பார்த்துவிட்டு நீங்கள் இருக்கையை ஈரம் பண்ணாமல் வந்துவிட்டால் நீங்கள் பாக்கியவான்கள் ......///////

அப்போ படத்துக்கு போறவங்களை டயாப்பர் கட்டிக்கிட்டு போக சொல்றீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////(சுறாவிற்கு அஞ்சான் இதற்கும் அஞ்சான் )////

இதற்கும் 100-நாள் வெற்றி விழா போஸ்டர் ஒட்டி, கொண்டாடி மகிழ்வான் தமிழன்.... கார்த்தி வாழ்க...... (இந்தாளு என்ன வகை தளபதிய்யா.....?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அஞ்சா சிங்கம் said...
Philosophy Prabhakaran said...
தம்பி... சினிமா விமர்சனம் எழுதும் போது ஹீரோயினியை புகழ்ந்து ரெண்டொரு நல்ல வார்த்தையாவது எழுதணும்ப்பா...

///////////////////////////////புகழ்வதற்கு அனுஷ்காவிடம் என்ன இருக்கு தொடையை தவிர ................என்னதான் காட்டினாலும் அதை ரசிக்க முடியாத அளவிற்கு கடுப்பு ஏற்றுகிறார் இயக்குனர் //////////

அவனுங்கள விடுங்க, நீங்களாவது ரெண்டு படத்த போட்டிருக்கலாம்...

arasan said...

உங்க விமர்சனத்தோட பாதியிலேயே அந்த படத்தை பாக்குற எண்ணம் போச்சு ...

பட்டிகாட்டான் Jey said...

// அலெக்ஸ் பாண்டியன் : first worst film of the year (சுறாவிற்கு அஞ்சான் இதற்கும் அஞ்சான் ) //

பரிஸ்கார்னர்ல 20 ஊவாய்க்கி டிவிடி வாங்கிஆய்ந்து படத்தை ஓட்டி ஓட்டி பார்த்துட்டு, நான் ஒரு தகிரியசாலினு இந்த உலகத்துக்கு தெரிவிக்காம விடுறதில்லைப்பா.... இது ஒயின்சாப் ஓனர் பிரபா தலைமேல் அடிச்சி சத்தியம் பன்றேன் :-)))))

பட்டிகாட்டான் Jey said...

// அப்போ படத்துக்கு போறவங்களை டயாப்பர் கட்டிக்கிட்டு போக சொல்றீங்க? //

:-)))))))

Unknown said...

//படம் பார்த்துவிட்டு நாம் வெளியே வரும்போது அடுத்த காட்சிக்காக டிக்கெட் வாங்கி விட்டு உள்ளே போக தயாராக காத்திருப்பவர்களை பார்க்கும் போது நமக்கு வருகிறது பாருங்கள் ஒரு சிரிப்பு அந்த சிரிப்பிற்காக இந்த படத்தை பார்க்கலாம்.//

ha ha ha super! :-)

rajasundararajan said...

சுராஜ்-ஞானவேல்ராஜா உங்களுக்கு ஒரு முப்பது லட்சம் கடன்பட்டு இருக்காங்க: படத்துல சந்தானம் கும்பல் செய்யாததை உங்கள் விமர்சனம் செய்திருக்கிறது. நல்ல காமெடிக் கலாட்டா!

Unknown said...

இந்த படத்தை பார்த்துவிட்டு நீங்கள் இருக்கையை ஈரம் பண்ணாமல் வந்துவிட்டால் நீங்கள் பாக்கியவான்கள்
//////////////////////////
மாப்ள...நல்லா யோசனை பண்ணிச் சொல்லு நீ பார்த்தது அலேக்ஸ் பாண்டியனா....? மேட்டர் படமா...பயபுள்ள வில்லங்கமாவே சொல்றாப்டியே...!

ராஜ் said...

//அடுத்த மூன்று மணி நேரம் இவர்களிடம் மாட்டி வதை பட போறது நாம்தான் என்று//
உண்மை ...உண்மை ...பயங்கர வதை... தமிழ் படம் பார்க்கிற ஆசையை இவனுக மொத்தமா அழிச்சிருவாங்க போல பாஸ்..

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே ஒரு நாலு டயலாக்கு, டைரக்டருக்கு ரெண்டு வார்த்த இப்படி எதுவுமே இல்லாம வெமர்சனம்னா எப்படிண்ணே?
////////////////////////////////////////////////

எதுக்கு சிபி அண்ணன் கோவிச்சிகிடுவாறு ..........

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வழக்கமாக சினிமா அதிகம் பார்க்காதவன் நான் அப்படியே பார்த்தாலும் அதை விமர்சனம் பண்ணுவது எப்போதாவது நிகழும் அதிசயம் .//////

இப்படிப்பட்ட ஆளையே முதல் நாளே படம் பார்த்து விமர்சனமும் எழுத வெச்ச அலெக்ஸ்பாண்டியனை பாராட்டாமல் நக்கல் அடித்திருப்பது கண்டிக்கத்தக்கது.....!////////

அண்ணே படத்தை பார்க்காமல் நீங்கள் என்னை கலாய்ப்பது தான் கண்டிக்க தக்கது .

பவர் ஸ்டாரை தவிர வேறு யார் நடித்தாலும் இந்த படம் ஓடாது என்று அனைவருக்கும் தெரியும் பவர் நடித்திருந்தால் இது இன்னொரு லத்திகா வாக வெள்ளி விழா கொண்டாடி இருக்கும் ..

அஞ்சா சிங்கம் said...

////யோவ் ஓடுற ட்ரைன்ல ஏறி இறங்குறதுன்னா அவ்ளோ ஈசியா போச்சா? எவ்ளோ ரிஸ்க் எடுத்து படத்த எடுத்திருக்காங்க, அத போய் ஜாலியா விளையாடுறாங்கன்னு சொல்லிட்டீங்க?////////

ரிஸ்க்கெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது ஓடியே போயி ரெயிலை ஓவர் டேக் செய்து டிரைவரை வெறுப்பேற்றுகிறார்கள் ...

அஞ்சா சிங்கம் said...

அரசன் சே said...

உங்க விமர்சனத்தோட பாதியிலேயே அந்த படத்தை பாக்குற எண்ணம் போச்சு .../////

////////////////

இப்படி சொன்னால் எப்படி உங்கள் வீரம் என்ன ஆச்சி ......?

அஞ்சா சிங்கம் said...

பட்டிகாட்டான் Jey said...

// அலெக்ஸ் பாண்டியன் : first worst film of the year (சுறாவிற்கு அஞ்சான் இதற்கும் அஞ்சான் ) //

பரிஸ்கார்னர்ல 20 ஊவாய்க்கி டிவிடி வாங்கிஆய்ந்து படத்தை ஓட்டி ஓட்டி பார்த்துட்டு, நான் ஒரு தகிரியசாலினு இந்த உலகத்துக்கு தெரிவிக்காம விடுறதில்லைப்பா.... இது ஒயின்சாப் ஓனர் பிரபா தலைமேல் அடிச்சி சத்தியம் பன்றேன் :-)))))

/////////////////

கர்ர் ......தூ .....................

வீரனாமாம் என் வெள்ளரு .......

அஞ்சா சிங்கம் said...

ஜீ... said...

//படம் பார்த்துவிட்டு நாம் வெளியே வரும்போது அடுத்த காட்சிக்காக டிக்கெட் வாங்கி விட்டு உள்ளே போக தயாராக காத்திருப்பவர்களை பார்க்கும் போது நமக்கு வருகிறது பாருங்கள் ஒரு சிரிப்பு அந்த சிரிப்பிற்காக இந்த படத்தை பார்க்கலாம்.//

ha ha ha super! :-)////////////////

நன்றி ஜீ

அஞ்சா சிங்கம் said...

rajasundararajan said...

சுராஜ்-ஞானவேல்ராஜா உங்களுக்கு ஒரு முப்பது லட்சம் கடன்பட்டு இருக்காங்க: படத்துல சந்தானம் கும்பல் செய்யாததை உங்கள் விமர்சனம் செய்திருக்கிறது. நல்ல காமெடிக் கலாட்டா!...................

//////////////////////////////////////

சரியா போச்சி 30 லச்சம் கேட்டு நஷ்ட ஈடு வழக்கு தொடராமல் இருந்தால் சரி ..நீங்களே எடுத்து குடுபீர்கள் போல் ..........

அஞ்சா சிங்கம் said...

வீடு சுரேஸ்குமார் said...

இந்த படத்தை பார்த்துவிட்டு நீங்கள் இருக்கையை ஈரம் பண்ணாமல் வந்துவிட்டால் நீங்கள் பாக்கியவான்கள்
//////////////////////////
மாப்ள...நல்லா யோசனை பண்ணிச் சொல்லு நீ பார்த்தது அலேக்ஸ் பாண்டியனா....? மேட்டர் படமா...பயபுள்ள வில்லங்கமாவே சொல்றாப்டியே...!/

//////////////////////////////////////////////

அப்படியும் சொல்லலாம் நம்மால் எச்சரிக்கை தான் பண்ண முடியும் .............

அஞ்சா சிங்கம் said...

ராஜ் said...

//அடுத்த மூன்று மணி நேரம் இவர்களிடம் மாட்டி வதை பட போறது நாம்தான் என்று//
உண்மை ...உண்மை ...பயங்கர வதை... தமிழ் படம் பார்க்கிற ஆசையை இவனுக மொத்தமா அழிச்சிருவாங்க போல பாஸ்..//////////

////////////////////////////

நான் இஷ்டப்பட்டு எல்லாம் போயி கஷ்ட படல வேறு வலி இல்லாமல் போயி மாட்டிக்கிட்டேன் .........

வவ்வால் said...அஞ்ஸா ஸிங்கம்,

//என்ன சமீப காலமாக வவ்வாலை பல இடத்தில காணவில்லை . ரொம்ப தூரம் பறக்க முடியவில்லையா .? ரெக்கைக்கு ஏதும் சேதாரமா ?
//

எல்லாம் கமெண்ட் மாடரேஷன் வச்சு நம்மளை சமூகக்கடமை செய்ய விடுமா தடுத்துடுறாங்க, நான் கலிஞர் போல கெரித்துண்டு வச்சு சுவத்துல எழுதியாவது ...சமுக்கத்துக்கு செய்தி சொல்லாம உட மாட்டேன்.:-))

//ஆனால் ரசிக்க முடியாத அளவிற்கு கன்றாவியாக இருக்கு ....//

அந்த கருப்பு கண்ணாடிய கழட்டிட்டு படம் பார்த்தீரா?

அப்படியும் ரசிக்க முடியவில்லை எனில் உமது உடல்மொழி அவதானிப்பு சரியில்லை என நினைக்கிறேன்,ஒரு யோகியின் மன் நிலையில் இருந்து உடல்மொழியினை அவதானித்தால் குண்டலி நாபிக்கமலத்தில் இருந்து அப்படியே கிளம்பி ஆக்ஞா, வழியாக உச்சந்தலைக்கு ஏறும், இதனை நான் எனது பதின்ம வயதுகளில் இருந்து பழகி வருகிறேன், இப்பொழுது தான் கைவறப்பெற்றேன்,விரைவில் உமக்கும் காரியம் சித்தியாக மகா அவதார் பாப்பாஜி அருள் புரிவாராக.

டிரயினை விட வேகமாக ஓட ,ஓடுகாலி லேகியம் சாப்பிட்டால் சாத்தியம் ,சீனாவின் ஜியங்சென் மகாணத்தில் கிடைக்கிறது, இதனை கண்டுப்பிடித்தது ஒரு தமிழர்,போதி தர்மனின் சின்ன வீட்டு வாரிசின் டிஎன்ஏவை வைத்து உருவாக்கியதாக பக்கிப்பீடியாவில் படித்தேன் :-))

அலெக்ஸ் பாண்டியன் இரண்டாம் பாகத்தில் இதனை சொல்வார்கள் என கிரீன் ஸ்டுடியோ வட்டாரங்கள் சொல்கின்றன :-))

Anonymous said...

உங்கள் மன தைரியத்தைப் பாராட்டுகின்றேன். படம் பார்த்த உங்களுக்கே கண்களில் தக்காளி சட்னி என்றால், படத்தை வாங்கி தியேட்டரில் ஓட்டினவன் எல்லாம்.. அவ்வ்வ் !

சமீரா said...

படம் பார்த்திருந்தாகூட இவ்ளோ சிரிப்பு வந்து இருக்காது! உங்க விமர்சனம் செம காமெடி தான்!!

Popular Posts