Thursday, January 19, 2012

மேதை படம் பார்த்த மாமேதைகள்

v
  
                                       I am back
இந்த பொங்கலை வாழ்கையில் மறக்க முடியாத தினம் ஆக்கிய நண்பர்கள் பிரபா மற்றும் சிவகுமாருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ------ஏன்ப்பா நான் சரியாதான் பேசுறேனா?

பொங்கலுக்கு முந்தைய நாள் நான் குத்துமதிப்பா போதையில் இருக்கும் போது . பிரபா மற்றும் சிவாவிடம் அவர்களுடன் படத்திற்கு வருவதாக வாக்கு குடுத்து தொலைத்துவிட்டேன் .அதன் வீரியம் எனக்கு அப்போது தெரியாது .காலையில் பிரபா செல்லியவுடன்தான் எனக்கு புரிந்தது மேதை படம்பார்க்க நான் ஒத்துகொண்ட விஷயம்  . ராத்திரி கொஞ்சம் ஓவர்தான் போல  ------ஏன்ப்பா நான் சரியாதான் பேசுறேனா?

இருந்தாலும் குடுத்த வாக்கை காப்பாற்ற எண்ணி கடமை வீரனாக அவருடன் கிளம்பினேன் .காலையில் இருந்தே சிவா போன் மேல போன் போட்டு எழுந்தாச்சா? பல்லு வேளக்கியாச்சா? ஆயி போயாச்சா ? சட்டை போட்டாச்சா? என்று எல்லாத்தையும் விசாரித்து கொண்டிருந்தார் . பாவம் அந்த புள்ள டிக்கட் எடுக்க அதிகாலை எழுந்து தியேட்டர் வாசலில் போயி நிக்குது ------ஏன்ப்பா நான் சரியாதான் பேசுறேனா?


  

 பொங்கல் வாழ்த்து சொல்ல என் நண்பனிடம் இருந்து அழைப்பு வந்தது . பேச்சுவாக்கில் இன்னைக்கு என்ன ப்ரோக்ராம் என்று கேட்டான் . நானும் சாதாரணமாக மேதை படம் பார்க்க போகிறேன் என்றேன் .
மறுமுனையில் நீண்ட நிசப்தம் . பிறகு மெதுவானகுரலில். ஏன் என்ன ஆச்சி வீட்டில் எது பிரச்சனையா ? மனசு ஏதும் சரியில்லையா ? நீ உடனே புறப்பட்டு என் வீட்டுக்கு வந்திரு எதுவாக இருந்தாலும் நேரில்  பேசி கொள்ளலாம் அவசரபட்டு எந்த தவறான முடிவும் எடுக்காதே என்று சொல்லிக்கொண்டே போனான் . எனக்கு ஒன்றும் புரியவில்லை------ஏன்ப்பா நான் சரியாதான் பேசுறேனா?

ஒருவழியாக படம் ஓடும் கிருஷ்ணவேணி திரை அரங்கை  வந்து அடைந்தேன். அங்கே சிவா திரை அரங்கை சுற்றி சுற்றி போட்டோ எடுத்து கொண்டிருந்தார் . வண்டியை நிறுத்திவிட்டு தியேட்டர் உள்ளே நுழைந்தோம் அங்கே நான் கண்ட காட்சி ....ஆங்கிலபடத்தில் வரும் நடைபினங்களை போல் வெறித்த பார்வையுடன் எங்களை எல்லோரும் உற்று பார்த்துகொண்டிருந்தார்கள் . அனைவரும் நாற்ப்பது ஐம்பதை கடந்தவர்கள் எங்களை அவர்கள் விநோதமாக பார்ப்பது எனக்கு சங்கடமாக இருந்தது. ஏதோ ஷக்கீலா படத்திற்கு வந்த எலிமெண்ட்ரி ஸ்கூல் பையனை பார்ப்பது போல் இருந்தது .என் நண்பன் ஏன் அப்படி போனில் பேசினான் என்று எனக்கு லேசாக புரிய ஆரம்பித்தது அனைவரும்  ஏதோ விதத்தில் வாழ்க்கையை வெறுத்தவர்கள் என்று நினைக்கிறேன் தங்களை ரட்சிக்க ஒரு நல்ல தலைவனை தேடி தியேட்டர் தியேட்டராக போவார்கள்  போலும் ------ஏன்ப்பா நான் சரியாதான் பேசுறேனா?

  
                                   ராமராஜனின் தீவெறி ரசிகன்

பிரபா மட்டும் ஒரு தேனியின் சுறுசுறுப்போடு சுற்றிகொண்டிருந்தார் . கேட்டை திறந்தவுடன் முண்டியடித்து அனைவரையும் வயதானவர்கள் என்றுகூட பாராமல் ஏறி மிதித்து முதல் ஆளாக டிக்கட் எடுத்துகொண்டு வந்து அதை  காட்டும் போது பிரபா முகத்தில் ஒரு ஒளியை பார்த்தேன் . நித்தியானந்தா போஸ்டரில் அவரது சிஷ்ய கேடிகள் வரைவார்களே அதை விட பிரகாசமான ஒளியை அன்று பிரபா முகத்தில் பார்த்தேன் ------ஏன்ப்பா நான் சரியாதான் பேசுறேனா?


  
        அனைவரையும் மிதித்து பிரபா முன்னேறிய காட்சி

படம் ஆரம்பித்தவுடன் ஆரத்தி எடுக்கும் ரசிகனை நான் ஆச்சரியமாக பார்த்துகொண்டிருந்த போது .என் அருகில் இருந்தவர் வினோதமான  ஒலி எழுப்பி சிரித்து கொண்டிருந்தார் . என்னை சுற்றி என்ன நடக்கிறது என்று புரியவில்லை .பின்னால் திரும்பி பார்த்தேன் அங்கே ஒருவர் இந்தியன் டாயலட்டில் இருப்பது போல் சீட்டுக்கு மேலே குத்த வைத்து அமர்ந்திருந்தார் .படம் முடியும்வரை அவர் அப்படிதான் இருந்தார் . பிரபாவிற்கு அருகில் இருந்தவர் எம்.ஜி.ஆர். போட்டோவை திரையில் காட்டும் போதெல்லாம் கைதட்டிகொண்டிருந்தார் ------ஏன்ப்பா நான் சரியாதான் பேசுறேனா?
       
குணா படத்தில் கமல் கதாநாயகியிடம் லட்டு வாங்க போகும் போது என்ன மனநிலையில் இருந்தாரோ அதே போன்றதொரு நிலையில் தான் நானும் இருந்தேன் .அதனால் படத்தைப்பற்றி விமர்சனம் எதிர்பார்ப்பவர்கள் இங்கே செல்லவும்   அது முடியாதென்றால் இங்கே செல்லவும் இல்லை என்றால் எங்கேயோ போகவும் நான் இந்த படத்திற்கு விமர்சனம் எழுதும் அளவுக்கு இன்னும்  பக்குவபடவில்லை ------ஏன்ப்பா நான் சரியாதான் பேசுறேனா?

  
                   மேதையை இயக்கிய மாமேதை

படத்தின் இடைவேளையின் போது இந்த படத்தின் இயக்குனர் சரவணன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது .
எங்களோடு கைகுலுக்கி கட்டிபிடித்து சிறிது  நேரம் பேசி கொண்டிருந்தார் . அதை பற்றி பின்னர் பதிவிடுகிறேன் .
படம் முடியும் வரை இருந்து பார்த்துவிட்டுதான் போகவேண்டும் என்று அன்புகட்டளை போட்டார் .
இந்த படத்தின் க்ளைமாக்ஸ் எந்த நாட்டு படத்திலும் எடுக்காதது . அம்பேத்காருக்கு தோன்றாத ஒரு புதுவிதமான சிந்தனை இயக்குனருக்கு தோன்றி உள்ளது பாராட்ட படவேண்டிய விஷயம். வில்லன்களுக்கு நீதிபதி குடுக்கும் தண்டனை  இந்தியன் பீனல் கோடு மட்டும் அல்லாது ஜெர்மன் ,இத்தாலி,பிரான்ஸ்,டென்மார்க்,பங்களாதேஷ்,அமேரிக்கா என்று அத்தனை நாட்டு கோடுகளும் சிந்திக்க வேண்டிய புதுமை
அதை நீங்கள் திரையில்தான் பார்க்கவேண்டும் ------ஏன்ப்பா நான் சரியாதான் பேசுறேனா?

படம் பார்த்து மூன்று நாள் ஆகியும் பதிவிட ஏன் லேட்டு என்று கேட்கக்கூடாது .இரவில் நான் திடீர் திடீர் என்று அலறுவதாக வீட்டில் சொல்கிறார்கள் .எனக்கு வித்தியாசமாக ஒன்றும் தெரியவில்லை நான் முன்பை விட ஆனந்தமான மனநிலையில்தான் இருக்கிறேன். நீங்களும் இந்த படம் பார்த்து பரவசநிலை அடையுமாறு அன்போடு கேட்டுகொள்கிறேன் ------ஏன்ப்பா நான் சரியாதான் பேசுறேனா?


Popular Posts