Saturday, December 1, 2012

விளிம்பு நிலை மனிதரின் பேட்டி (பேத்தி அல்ல )

v

சமீப காலங்களாக விளிம்பு நிலை மனிதர்கள் யாரும் என் கண்ணில் படுவது இல்லை . என்ன காரணம் யார் செய்த சூழ்ச்சி என்று பலவாறாக யோசித்து பார்த்ததில் காரணம் எனக்கு புரிந்தது.
 அதாவது நான் அலுவலகத்திற்கு காரில் சென்று வருவதால் என்னால் அவர்களை கண்டு பிடிக்க முடிய வில்லை என்பது இன்று விடுமுறை ஆதலால் மின்சார ரயிலில் பயணித்து யாராவது ஒரு விளிம்பு நிலை மனிதனின் பேட்டியை எடுத்து விடுவது என்ற வைராக்கியத்துடன் வீட்டை விட்டு கிளம்புகிறார் ஆரோக்கியசாமி .

இடம் திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையம் .
கூட்டம் அவ்வளவாக இல்லை என்றாலும் எங்கு பார்த்தாலும் டிப்டாப் ஆசாமிகள் மயம் . ஒரு விளிம்பு நிலை மனிதன் கூட ஆரோக்கியசாமி கண்ணில் படவில்லை . என்னடா இது இப்படி பிள்ளை பிடிக்கிறவன் மாதிரி எவ்வளவு நேரம் தான் தேடிக்கிட்டு இருக்கிறது என்று மனதுக்குள் நினைத்து கொண்டிருக்கும் போது . சட் என்று அவர் பார்வை பிளாட்பார்ம் ஓரத்திற்கு செல்கிறது .
அங்கே பிளாட்பார்ம் விழும்பில் ஒரு மனிதன் நின்று கொண்டு தண்டாவளத்தில் ரயில் வருகிறதா என்று பார்த்து கொண்டு இருந்தான் . மிகவும் விழும்பில் நின்று எட்டிப்பார்த்து கொண்டிருந்ததால் நாம் தேடும் விளிம்பு நிலை மனிதன் இவனாக இருக்குமோ என்று மனதிற்குள் ஒரு மணி அடித்தது . உடனே நம் மூளை சுறுசுறுப்பு அடைந்தது .
மெதுவாக அவன் அருகே சென்று பாஷா படத்தில் ரஜினி சொல்வது போல் சொல்லவேண்டும் என்று நினைத்து கொண்டேன் .

இனிமேல் லைவ் ரிலே :

ஆ.சாமி:-   அண்ணே வணக்கம் என் பேறு பிரேம்குமார்.

வி .மனிதன் :- இருக்கட்டும்...

ஆ.சாமி:- எனக்கு இன்னொரு பெயர் இருக்கு

வி .மனிதன் :- வச்சிக்கோ ..உன் இஷ்டம் எத்தினி வேணும்னாலும் வச்சிக்கோ.

ஆ.சாமி:- அது இல்லைன்னே உங்க பேட்டி வேணும் அதான் .

வி .மனிதன் :- ஏன்பா பார்த்தா படிச்சவனாட்டம் இருக்கே மனசு ஏதும் சரி இல்லையா வீட்ல ஏது பிரச்சனையா .?

(அவன் என்னை பேட்டி எடுக்க  ஆரம்பித்துவிட்டான் )

ஆ.சாமி:- அண்ணே நீங்க ரொம்ப விளிம்புல இருக்கீங்க . கிட்ட வர பயமா இருக்கு கொஞ்சம் பின்னாடி வாங்க நாம அந்த பென்ச்ல உக்கார்ந்து பேசலாம் .

(சிறிது யோசனைக்கு பிறகு சம்மதித்தான் )

ஆ.சாமி:- நீங்க எத்தனை வருஷமா இப்படி விளும்புல நிக்குறீங்க.?

 வி .மனிதன் :- அது ஆச்சிங்க ஒரு பதினைஞ்சி வருஷத்துக்கு மேல . நான் இஸ்கூலுக்கு  போசொல்ல ஆரம்பிச்சது . அப்போ எங்க இஸ்கூலு பேரிஸ்ல இருந்திச்சி . எங்க வீட்டுல இருந்து பஸ்லதான் போகணும் .ஆனா எனக்கு ட்ரைன்ல போகணும்னு ஆசை . வீட்ல இருந்து தாம்பரத்துக்கு பஸ்ல போயி அங்க இருந்து ட்ரைன்ல போலாம்ன்னு ப்ளான் பண்ணி போய்டேன் .
அப்படியே பிளாட்பாரம் விளும்புல நின்னுகிட்டு ரெயில் வருதான்னு பார்த்துக்கிட்டு இருந்தேன் . அப்போ திடீர்ன்னு ரெயில் வர்ற சத்தம் மட்டும் கேட்டுச்சு ஆனா ரெயிலை காணும் . என்னடா ஆச்சிரியமா இருக்குதேன்னு நெனைச்சிகிட்டு இன்னும் நல்லா விளும்புல போயி எட்டி பார்த்தேன் . அப்பவும் என் கண்ணுக்கு ரெயில் தெரியல. ஆனா சத்தம் மட்டும் ரொம்ப கிட்டக்க கேக்க ஆரம்பிச்சுது . பின்னால இருந்து ஒரு குரல் . சாவுகிராக்கி  திரும்பி பாரு ரெயில் வருது தலைய உள்ள எடு என்று . திரும்பி பார்த்தால் ரெயில் பக்கத்துல வந்திருச்சி . சடார்ன்னு தலைய உள்ள இழுத்து தப்பிச்சிட்டேன் . ஆனா அந்த த்ரில் பழகிடுச்சி 

ஆ.சாமி:- சரி பிழைப்புக்கு என்ன செய்கிறீர்கள் .?

வி .மனிதன் :-  ஆங் .. இங்க தான் டைட்டில் பார்க்குல அஜுபா கம்பனியில டெவலப்பர் ஆக இருக்கேன் . மாசம் 65,000 ருபாய் சம்பளம் வருது .

 ஆ.சாமி:- நல்ல வேலைதானே அப்புறம் ஏன் சலிச்சிகிறீங்க.?

வி .மனிதன் :- என்னதான் இருந்தாலும் மனசுக்கு பிடிச்ச வேலையா இருக்கனும்ல சார் . மதியானம் போல அவங்களே கார் அனுப்பி கூப்பிட்டு போறாங்க நாடு ராத்திரி வரை வெளிய உடமான்டாங்க . அப்புறம் அவங்களே வீட்டுக்கும் கார்ல அனுப்பி வைக்கிறாங்க . அப்புறம் எனக்கு தொங்குரதுக்கு ஏது நேரம் என்ன பொழைப்பு சார் இது . வெளிய போயி சுத்திகிட்டு வரமாதிரி வேலை இருந்தா நல்லாஇருக்கும். என்ன பண்றது எல்லாம் நம்ம கைலயா  இருக்கு. ஆனா வாரத்துக்கு ரெண்டு நாள் லீவு குடுக்குறாங்க சார் அந்த மாறி நேரத்துல இப்படி ரெயில்ல தொக்கி கிட்டு போறதுக்கு வந்துருவேன் .தோ இப்போ ஆரம்பிச்சி சாயங்காலத்துக்குள்ளாற எல்லா ஸ்டேசனுக்கும்  தொங்கிகினே போயிட்டு வந்துற மாட்டேன் . ஆ.சாமி:- உங்கள் எதிர்கால லட்சியம் என்ன .?

வி .மனிதன் :- சின்ன வயசில் இருந்து எல்லா பிளாட்பாரம் விளும்புளையும் நின்னுபார்துடேன் . பறக்கும் ரெயில் வந்தப்போ அது ரொம்ப புதுசா இருந்துச்சி . இப்போ மெட்ரோ ரெயில் வருது அதை நினைக்கும் போதே மனசு பரபரக்குது .
இன்னும் மோனோ ரெயில் வேறு வரும்ன்னு சொல்லிகிறாங்க . நான் கண்ணை மூடுறதுக்குள்ள அதுலயும் ஒரு தபா தொங்கீரனும் சார்.

(அந்த வீரமான மனிதனின் கண்விழியோரம் ஈரம் )

 ஆ.சாமி:- இந்த கேள்வி கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே ..நீங்க தமிழ்மணம் ஒட்டு போடுவீங்களா ...?


 வி .மனிதன் :- அதெல்லாம் இல்லை சார் நான் எப்போதும் தி.மு.க.வுக்கு தான் வோட்டு போடுவேன்.

நாம் அடுத்த கேள்வியை ஆரம்பிக்கும் முன் பீச் செல்லும் ரெயில் வர மின்னல் வேகத்தில் அதில் தொத்தி கொண்டு நம்மை பார்த்து கை ஆட்டிகொண்டே சென்றான் ....
இப்போது ஒன்லி மைன்ட் வாய்ஸ்

ஆரோக்கிய சாமி  மைன்ட் வாய்ஸ் (ச்சே இவன் கிட்ட கேமராவை குடுத்து என்னை ஒரு போட்டோ எடுக்க சொல்லலாம்ன்னு நினைச்சேன் அதுக்குள்ள தப்பிச்சிட்டானே )

விளிம்பு நிலை மனிதன் மைன்ட் வாய்ஸ் (ஹம்ம் பாவம் யார் பெத்த புள்ளையோ ஆளை பார்த்தால்  பையித்தியம் மாதிரி தெரியலயே சரி நமக்கு என்ன டிரெயின் வர்ற வரைக்கும் அந்த ஆளாள நல்லா பொழுது போச்சி )

டிஸ்கி :- சிரிக்க மட்டுமே சிந்திக்க அல்ல .


Popular Posts