Monday, January 31, 2011

இயலாமையும் இறையாண்மையும் .........

v




கடந்த இரு நாட்களாக பதிவுலகில் தமிழக மீனவர்கள் பிரச்சனை என்கிற சூறாவளி மையம் கொண்டுள்ளது .
அனைவரும் அதை பற்றி ஒரு பதிவு கட்டாயம் எழுத வேண்டும் .

ஏறதாழ அனைவரும் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு போட்டுவிட்டார்கள் .
நாம் நம் எதிர்ப்பை பதிவு செய்ய எந்த தளங்களுக்கு செல்லவேண்டும் என்கிற தகவல்கள் .நண்பர் பிரபா தளத்தில் விரிவாக சொல்லிருக்கிறார் .
அதன் இணைப்பு இங்கே இருக்கிறது.

நண்பர் ராஜன் நாம் அனைவரும் உலககோப்பை கிரிக்கட்டை புறக்கணிக்கும் யோசனை கூறி இருக்கிறார் .
நல்ல ஆனால் சாத்தியமில்லாத யோசனை .
500 முதல் 10000 ருபாய் வரை செலவு செய்து டிக்கெட் வாங்கி மைதானத்தில் கிரிகட் பார்க்கும் ரசிகர்களில் எத்தனை பேர் தமிழ் உணர்வாளர்கள் இருப்பார்கள் ?

இப்போது போராட்டம் மீனவர்கள் கொல்லபடுவதை தடுப்பதற்கா ? அல்லது மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமையை மீட்பதற்கா ?
எல்லை தாண்டும் மீனவர்களை சுடவேண்டாம் என்று இந்தியா வற்புறுத்தி இருக்கிறது .
சரிதான்பா இனிமேல் சுடமாட்டாங்க .கட்டைல அடிச்சும் . கழுத்துல கையறு கட்டி இழுத்தும் தான் கொல்லுவாங்க.

மீனவர்கள் படுகொலை எந்த நாட்களில் அதிகமாக நடக்கிறது என்று கவனித்தால் ஒரு உண்மை நமக்கு புரியும் .
அந்த நாளில் இந்திய கிரிகட் அணி உலகின் ஏதாவது ஒரு மூலையில் மேட்ச் ஆடிகொண்டிருக்கும் .
சமீபத்திய கொலை கூட இந்தியா சவுத் ஆப்ரிகா கடைசி மேட்ச் அன்றுதான் .
அதற்க்கு என்ன காரணம் இருக்க முடியும் ?
அந்த நாளில் கொலை செய்தால் இந்திய மக்கள் இந்தியாவின் கிரிகெட் வெற்றி தோல்வி செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள் .
மீனவர் கொலை என்னும் செய்தி தமிழ்நாட்டில் மட்டும் அல்லது ஒரு மாவட்ட செய்தி அளவில் சுருங்கிவிடும் .
இந்த கணிப்பு உண்மை என்றால் இது திட்டம் மிட்ட படுகொலை என்பதில் சந்தேகம் இல்லை .

இந்திய அரசாங்கம் இருநாட்டு மீனவர்களும் மீன்பிடிக்கும் வண்ணம் ஒரு ஒப்பந்தம் இலங்கையிடம் போட முடியாதா ?
இயலாமையின் மொத்த உருவம் நம் இந்திய அரசாங்கம் இதற்க்கு இறையாண்மை ஒரு கேடா ? 
இந்த சொல் கொஞ்சம் கடினமாக இருந்தாலும் உண்மை அதுதான் ........................

டிஸ்கவரி சானலில் காட்டு மிருகங்களுக்கு கழுத்தில் G.P.S. கருவி மாட்டுவார்கள் அது காட்டுக்குள் எங்கெல்லாம் செல்கிறது .
அதன் எல்லை என்ன என்று கண்காணிக்க .
அதை போல் அமெரிக்காவில் படிக்க போன நம் இந்திய மாணவர்களுக்கு காலில் G.P.S. கருவி பொருத்தி இருக்கிறார்கள் .
வழக்கம் போல் இந்தியா இதற்க்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது .
உலக நாடுகள் அனைத்திற்கும் தெரியும் இந்தியாவின் கண்டனம் என்கிற வார்த்தைக்கு என்ன பலம் என்று .
அதை ஒரு டாய்லட் பேப்பரில் கண்டனம் என்று எழுதி கொடுத்திருந்தால் அமெரிக்ககாரன் துடைத்து போட வசதியாக இருந்திருக்கும் .
அது சரி முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோர்களையே டிரஸ்சை கழட்டி ராகிங் செய்தவர்கள் தானே . 
மாணவர்களை மட்டும் சும்மா விடுவார்களா கழுத்தில் இன்னும் சங்கிலி மாட்ட வில்லை என்று சந்தோச படவேண்டியதுதான் .

குஜராத்தில் பூகம்பம் .கார்கில் போர் என்று வடக்கில் என்ன நடந்தாலும் நாங்கள் பதறி போய் விளக்கேற்றி நிதி திரட்டி தருகிறோம் .
தெற்கில் என் தமிழ் இனம் அழியும் போதும் மீனவ பெண்கள் தாலி அறுத்த போதும் வடக்கில் ஒரு மயிர் கூட மடங்கவில்லை என்றால் .
இதற்க்கு பெயர்தான் உங்கள் மானங்கெட்ட இறையாண்மை என்றால்.
போங்கடா நீங்களும் உங்க இறையாண்மையும்........................................

இந்தியன் என்று சொல்லடா .......எல்லாரிடமும் அடிவாங்கீட்டு நில்லடா ...........................


டிஸ்கி :- கலைஞ்ர் டி.வீ. இல் ஒருவர் அடிக்கடி தமிழர்களே தமிழர்களே என்னை கடலில் தூக்கி போடுங்கள் என்று சொல்கிறார் .
வாருங்களேன் அவர் ஆசையை நிறைவேற்ற ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாம்.   


  

Tuesday, January 25, 2011

ஜும்பலக்கடி பம்பா ஆப்ரிகா அங்கள் ..........

v
உங்கள்ள யாருக்காவது மனசு சரி இல்லேனா என்ன செய்வீங்க .
பன்னிக்குட்டி அண்ணன் கேட்டா என்ன சொல்லுவாரு .
அடேய் ஒரு மொளம் மல்லிகப்பூ காலே கால் கிலோ அல்வா வாங்கீட்டு வீட்டுக்கு போவேன் .
என் வீட்டுகாரி என்ன வேலை செஞ்சிகிட்டு இருந்தாலும் அத அப்படியே போட்டுட்டு என் கூட ஆத்தங்கரைக்கோ குலதாங்கரைக்கோ வந்திருவா அப்புறம் அவமடியில நான் படுக்க என் மடியில அவ படுக்க இப்படி ஒரே கிளுகிளுப்பா இருக்குமாடா ................

இதெல்லாம் குடுத்து வச்ச மகராசனுகளுக்கு . நம்மள மாதிரி ஆளுங்க அதுக்கு எங்க போறது .
நான் மனசு சரி இல்லனா உடனே யூடியுப்  சைட்டுக்கு போய்டுவேன் அங்கே விஜய டி.ராஜேந்தர் அப்படீன்னு டைப் பண்ணுவேன் அப்புறம் ஒரு அரை மணிநேரம் கதற கதற ...............வயித்துக்கு வஞ்சனை இல்லாம சிரிப்பேன் ..
மனசு லேசா ஆயிடும். அப்புறம் எழுந்து என் வேலைய பார்க்க போய்டுவேன் .
இது ஒரு நல்ல சிகிச்சை முறை அப்படின்னு எங்க குடும்ப டாக்டர் சொல்லிருக்காரு நீங்களும் முயற்சி பண்ணி பாருங்க ... 




இவருக்கு தான் ஒரு அறிவு ஜீவி அப்படின்னு நெனைப்பு இந்தியால ரெண்டேபேறு ஒன்னு ஜி.டி.நாய்டு இன்னொன்னு நான்தான்
யாராவது இவர் ஒரு காமடி பீசுன்னு இவருக்கு சொல்லுங்கப்பா .இவரு இப்போ குறள் டி.வீ.ன்னு ஒரு இணையதள டி.வீ. ஆரம்பிச்சு
சேவை செய்றாரு .இவர் சேவை தமிழ்நாட்டுக்கு தேவை மனநலம் பாதிக்கபட்டவர்கள் எல்லாம் இதை பார்த்து பயன் அடையுங்கள் ....



Friday, January 21, 2011

நழுவி செல்லும் காலம் .......

v




முஸ்கி 1  :  இந்த கவித இல்ல கவித . அது நேத்து ராத்திரி என் கனவுல வந்து.
 என்ன ஏன் இன்னும் நீ எழுதல அப்புடின்னு ஒரே அழுகாச்சி .
அது கேக்குறதும் ஞாயம் தானே பாவம் அது மட்டும் என்ன தப்பு பண்ணிச்சி .
அதான் அதையும் எழுதிட வேண்டியதுதான் துணிஞ்சி இறங்கியாச்சி .

முஸ்கி 2  :     பின்னால போட்டா டிஸ்கி (டிக்கி) அப்படீனா முன்னால போட்டா அது முஸ்கி தானே .
எப்படி நம்ம கண்டுபிடிப்பு ( எமது திருவிளையாடல் களில் இதுவும் ஒன்று) .

நழுவி செல்லும் காலம் .......

இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறது என்றாலும்
இன்றே மனம் பரபரக்கும் .
யாரெல்லாம் வாழ்த்துவார்கள் என்னவெல்லாம் தருவார்கள்
இன்றே மனம் கணக்கு போடும் .

கடந்து போகும் ஒவ்வொரு பிறந்தநாளும்
ஏன் ஆயுளில் ஒரு  வருடத்தை விழுங்கி செல்கிறது என்று
தெரியாமலேயே மனம் கொண்டாட தூண்டும் .
காலத்தை முந்தி செல்லும் வேகத்தோடு .

முன் நரை கண்ணாடியில் பார்த்தபின்
காலத்தை மெதுவாக நகர்த்தும் வித்தை தெரியாமல்
கலங்கி நிற்கிறது மனம்
ஒவ்வொரு பிறந்த நாளிலும் .

இப்போது நான் என் மனதிடம் சொல்வது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்
மரணம் உண்டென்று தெரிந்திரிந்தால்
ஜனனம் எடுத்திருக்க மாட்டேன் ................
 

*********************************************************************************************************

இது என் முதல் முயற்சி பிடிச்சிருந்தா ஒட்டு போடுங்க பிடிக்கலன்னா பின்னூட்டத்தில் சொல்லிடுங்க
ஏன்னா மீண்டும் நான் ரிஸ்க் எடுக்க கூடாது பாருங்க ........................

Tuesday, January 18, 2011

குவாட்டரும் கோழி பிரியாணியும்

v

பதிவு எழுத ஆரம்பிச்சி ரெண்டு மாதம் முழுசா ஆய்டுச்சி போன பதிவு ஆஸ்கருக்கான அறிய கண்டுபிடிப்பு தான் என் முதல் ஹிட் .
வாக்களித்து என்னை ஊக்க படுத்திய அணைத்து உள்ளங்களுக்கும் என் நன்றி கலந்த வணக்கம் .............(அட கருமம் பிடிச்சவனே எத எதோட கலக்குது பாரு ) என்ன பண்றது கலந்து குடுத்தே பழகிடுச்சி .....................

குவாட்டரும் கோழி பிரியாணியும்  .................

தாலி இல்லாம கூட கல்யாணம் நடக்கலாம் ஆனா குவாட்டரும் கோழி பிரியாணியும் இல்லாம தேர்தலோ மாநாடோ நடக்காது ....
அடுத்த  மாதம் முதல் தேர்தல் ஜுரம் தமிழ்நாட்ட தொத்திக்க போகுது நாம ஒரு முன்னூட்டம் பார்க்கலாம் .............

அரசியல் கட்சிகள் ........................

இப்போ எல்லாம் கட்சி நடத்துறதும் ஒரு கம்பனி நடத்துறதும் ஒன்னு கட்சிய நல்லபடியா வளர்த்து பெரிய லாபம் சம்பாதிக்கும் ஒரு நிறுவனமா மாத்துறது தான் தலைவரோட தலையாய  கடமை அதற்காக என்ன வேணும்னாலும் செய்யலாம் ...
அப்படி அது லாபம் சம்பாதிக்க ஆரம்பிச்சவுடன் . அதை சேதாரம் இல்லாம தன் வாரிசுகள் கையில் ஒப்படைக்கும் வரை உயிர் போயி உயிர் வந்திடும் .
இப்போ தமிழகத்தில் முன்னணி கம்பெனிகளை பற்றி ஒரு அலசல் .......................

தி.மூ.க .
இப்போதைக்கு தமிழகத்தின் மிக பெரிய லாபம் சம்பாதிக்கும் நிறுவனம் இதுதான் .
தங்களுக்கு மட்டும் அல்லாமல் தங்கள் பங்கு நிறுவனமான காங்கிரசுக்கும் நல்ல லாபம் சம்பாதித்து கொடுக்கிறது ..
சென்ற ஆட்சி லாபத்தோடு ஒப்பிடும் பொது இம்முறை மும்மடங்கு லாபம் ஈட்டி உள்ளது .
அதனால் ஓட்டுக்கு ரெண்டாயிரம் முதல் ஐயாயிரம் வரை இவர்களால் தரமுடியும் .

ஆ.தி.மு.க.
தி.மூ.க .வுக்கு அடுத்தபடியாக பெரிய கம்பனி இதுதான் என்ன பெரிய கம்பெனி யாக இருந்தாலும் தலைமை சரியில்லாததால் அடிக்கடி நஷ்டத்தை சந்திக்கிறது .தி.மூ.க .வின் பங்கு நிறுவனமான காங்கிரசை வாங்க எவ்ளவோ முயற்சி செய்தும் பேரம் படியவில்லை.
இம்முறை லாபம் ஈட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது . இல்லை என்றால் கம்பனி கரைய வாய்ப்புண்டு............

தே.மு.தி.க.
இது ஒரு சிறிய நிறுவனம் இப்போது தான் வியாபாரத்தை ஆரம்பித்திருகிரார்கள் .
கடை ஆரம்பித்து போனி பண்ணியதோடு சரி . அதன் பிறகு ஆண்டவனோடும் மக்களோடும் தான் என் வியாபாரம் .
கடைக்கு வரவங்கள தொரத்தி விட்டுடுராறு . இப்படி வியாபாரம் பண்ணா கடைய இழுத்து மூட வேண்டியதுதான் .
இந்த கடையை நம்பி பணம் போட்டவர்கள் இப்பவே புலம்ப ஆரம்பித்து விட்டார்கள் .
இந்த கடை கம்பனியாக மாறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .

கம்யுநிஸ்ட் .
 இந்த நிறுவனம் ஏற்கனவே மிகவும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது .
வியாபார திறமை இன்மைதான் இதற்க்கு காரணம் .
கடையில் ஒரு உண்டியல் வைத்து விட்டு போய்விடுவார்கள்.
வருபவர் வேண்டிய பொருளை எடுத்துக்கொண்டு உண்டியலில் காசுபோட்டு போகவேண்டுமாம்......... ம் ................ வெளங்கீரும் .

பா.ம.க.
நல்ல வளர்ந்து  வந்த ஒரு நிறுவனம் இப்போது இதன் பங்குகள் வீழ்ச்சி அடைந்து விட்டது .
நிறுவனத்தை காக்க எடுத்த அணைத்து முயற்சிகளும் இதுவரை தோல்விதான் ..
இந்த நிறுவனத்துடன் வியாபார தொடர்பு வைத்துகொள்ள எந்த நிறுவனமும் முன்வரவில்லை .
இவர்களின் நம்பக தன்மை மிக மோசம் .
ஏற்கனவே நஷ்டத்தில் இருக்கும் இந்த நிறுவனம் இம்முறை மிக பெரும் நஷ்டத்தை சந்திக்கும் என்பது வல்லுனர்களின் கருத்து.

பெட்டிக்கடைகள் .

ம.தி.மு.க.
ஒரு காலத்தில் ஓஹோ என்று இருந்த கம்பனி இப்போது பெட்டிகடையாக மாறி அதுவும் நிலைக்காமல் இப்போது தள்ளு வண்டியில் வியாபாரம் செய்கிறார். எங்கே இந்த வண்டியும் பறிபோய் விடுமோ என்ற பயத்தில் இவர் போயஸ் தோட்டம் ஏரியாவில் மட்டுமே வியாபாரம் செய்கிறார் .
ஐயஹோ பிரெஞ்ச் புரட்சியிலே.... என்று இவர் கூவி கூவி விற்கும் பொது பார்க்க பரிதாபமாக இருக்கிறது .........

வி.சி.க.(விடுதலை சிறுத்தை)
இவரும் ஒரு தள்ளுவண்டி வியாபாரிதான். இவர் ஏரியா கோபாலபுரம் .இவர் கொட்டை எடுத்த புளிகளை பெருமளவு வியாபாரம் செய்கிறார் .
இந்த ஐந்து ஆண்டுகளில் கணிசமான லாபம் பார்த்தால் நல்ல தெம்பாக இருக்கிறார். எப்படியும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் நிலையான ஒரு கடையை போட  வேண்டும் என்பது இவர் ஆசை .

 நாம் தமிழர்.
புதிதாக வியாபாரம் செய்ய வந்திருக்கிறார் .   இவர் வி.சி.க. கடைக்கு கடும் போட்டியாக இருப்பார் என்று எதிபார்க்க படுகிறது .
இவரும் புளி வியாபாரத்தை ஆரம்பித்திருக்கிறார் .ஆனால் இவருக்கு இன்னும் எந்த ஏரியாவில் வியாபாரம் செய்வது என்று குழப்பத்தில் இருக்கிறார்  
போயஸ் தோட்டத்தில் ஏற்கனவே ஒரு புளி  வியாபாரி இருந்த போதும்  இவர் அங்கே வியாபாரம் செய்யவே விருப்ப படுவார் என்று நம்பலாம் .

*******************************************************************************************************************************

இன்னும் நிறைய சிறிய கடைகள் இருந்தாலும் சரக்கு இல்லாததால் வியாபாரம் செய்யமுடியாத நிலையில் இருக்கிறார்கள் .
அதனால் அவர்களை விட்டு விடலாம் .........

சரி நாம செய்ய வேண்டியதெல்லாம் சென்ற முறை ரெண்டாயிரம் தந்தார்கள் என்றால் இந்த முறை அதிகமாக போட்டு தர சொல்லி கேட்கலாம் .
கேட்டதை குடுத்தால் விரலை கரை ஆக்கிகொள்ளலாம் ..........................

(சென்ற பதிவை போல் இதையும் ஹிட் ஆக்குவீர்கள் என்ற நம்பிக்கையில் அன்புடன் அஞ்சா சிங்கம் )

Thursday, January 13, 2011

ஆஸ்கருக்கான அறிய கண்டுபிடிப்பு

v
முதல்ல எல்லாருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன் .......
உசுருக்கு பயந்தவங்க பொங்கலுக்கு சன் டீவீ  பார்ககாதிங்க சுறா போடுறானாம் .......
முடிந்தால் உங்கள் நண்பர்களையும் காப்பாற்றுங்கள் ................ 

தமிழ்நாட்டுல இந்த வருஷம் ரொம்ப குளிர் ஜாஸ்தியா இருக்கு ...
பாவம் வயசானவங்க ரொம்ப கஷ்டபடுறாங்க . வாலிப பசங்க நிலைமை அதவிட மோசமா இருக்கு ..

நைட் ஷிப்ட் பார்த்துட்டு வர்ற பசங்க பாவம் பைக் ஓட்ட முடியாம ரொம்ப கஷ்ட படுறாங்க .
தமிழ்நாட்டுலேயே இப்படின்னா நார்த்துல சொல்லவே வேண்டாம் தினம் பத்து பேராவது குளிர்ல சாகிறார்களாம் ..........
இந்த கொடுமைக்கு முடிவு கட்ட யாரவது பொறந்து வரமாட்டாங்களா ..................
அப்படின்னு ஒரு கெழவி கதறுச்சி .

அந்த நேரம் அஞ்சா சிங்கம் என்ட்ரி.................

நாம பிறப்பால விஞ்சானி ஆச்சே ராமர் பிள்ளை மாதிரி பெரிய விஞ்சானிங்ககிட்ட பயிற்சி வேற எடுத்திருக்கோம் ...........
அதனால நாமலே ஏதாவது கண்டுபிடிக்கலாம்ன்னு களம் இறங்கிட்டேன் .......

பல நாள் முயற்சிக்கு பிறகு ஒரு பைக் ஒன்னு கண்டுபிடிச்சிருக்கேன் இதுல பாருங்க என்ன விசேஷம்னா இத ஓட்டிட்டு போகும் போது கொஞ்சம்  கூட குளிர் தெரியாது .................

இத ஊட்டி கொடைக்கானல் மட்டுமில்ல இமயமலை ஆர்டிக் அண்டார்டிகா போன்ற பனி பிரதேசங்களிலும் சுகமா ஓட்டிட்டு போகலாம் கொஞ்சம் கூட குளிராது அதுக்கு நான் கியாரண்டி .......................

இதுக்கு காப்புரிமை வாங்க முயற்சி பண்ணினேன் தரமாட்டேன்னு சொல்லிடாங்க இந்தியாவுல ஒரு வளரும் விஞ்சானிக்கு மரியாதை இல்ல அதனால சித்ரா அக்காகிட்ட சொல்லி அமெரிக்காவுல காப்புரிமை வாங்கனும்ன்னு நெனச்சிருக்கேன் .........

இந்த பைக்கு பெட்ரோல் செலவு இல்ல சுகமான பயணம் ..பதிவர்கள் யாரவது டீலர்ஷிப் எடுக்க ஆசை பட்டா முன்னுரிமை குடுக்கப்படும் ....

ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, போன்ற குளிர் பிரதேசத்தில் இருக்கும் பதிவர்களுக்கு சகாய விலையில் தரப்படும்.
நீங்க ஒரு நாலுபேர அறிமுக படுத்துநீங்கன்னா அவங்க கிட்ட இருந்து காசு புடிங்கி உங்களுக்கு தரப்படும்............

ப்ரீ ட்ரையல் பார்க்கணும்னா உடனே என்னை அணுகலாம் ................
தமிழ்மணத்துல ஒட்டு
போட்டவங்களுக்கு சிறப்பு சலுகை காத்திருக்கு........
உடனே முந்துங்கள் ஸ்டாக் உள்ளவரையே இந்த சலுகை ...................





இந்த கண்டுபிடிப்புகாவது ஆஸ்கார் அவார்ட் கெடைக்குமா ????????

பின்குறிப்பு : பின்விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல ..................

Tuesday, January 11, 2011

ஒரு வித்தியாசமான காதல் கடிதம்

v


பொண்ணுங்க மனச புரிஞ்சிக்கிறது ரொம்ப கஷ்டம் பாஸ் ....
நம்ம பய புள்ள ஒரு லவ் லட்டர் எழுதி அவன் காதலிக்கு குடுத்திருக்கான் ..
பதில் எப்படின்னு பாருங்க .....

வித்தியாசமான காதல் கடிதம் .............

அன்புள்ள ப்ரியா .
கீழ் கண்ட கேள்விகளுக்கு சரியான பதில் தேர்தெடுக்கவும் ..

(A) 10 மார்க்
(B) 5 மார்க்
(C) 3 மார்க்

எப்போதும் நீ கிளாசுக்கு வரும்போது என்னை ஓர கண்ணால் பார்க்கிறாயே  ஏன்?
 (A) என் மேல் உள்ள காதலால் .
(B) என்னை பார்க்காமல் இருக்க முடியவில்லை .
(C) நான் என்ன செய்கிறேன் என்று பார்க்கிறாய் .

ஆசிரியர் ஏதாவது ஜோக் சொன்னால் நீ சிரித்து  கொண்டே என்னை பார்க்கிறாய் .
(A) என் புன்னகை உனக்கு பிடித்திருப்பதால் .
(B) எனக்கும் அந்த ஜோக் பிடித்திருக்கிறதா என்று பார்பதற்கு .
(C) நான் சிரிக்கும் பொது எப்படி இருக்கிறேன் என்று பார்பதற்கு .

நீ வகுப்பறையில் பாடி கொண்டிருந்தபோது நான் வந்தவுடன் பாடுவதை நிறுத்திவிட்டாய்
(A) என் முன்னால் பாட உனக்கு வெட்கம் .
(B) என் வருகை உன்னை பாதித்தால்
(C) உன் குரல் எனக்கு பிடிக்காமல் போய் விடுமோ என்ற பயம்

நீ உன் தோழிகளுக்கு உன் சிறு வயது படத்தை காட்டும் போது நான் கேட்டவுடன் மறைத்து கொண்டாய் .
(A) உனக்கு வெட்கமாக இருந்தது
(B) உனக்கு சங்கடமாக இருந்தது
(C) சொல்ல தெரியவில்லை .

நீ படிகளில் தவறி விழுந்த போது நானும் என் நண்பனும் உனக்கு கை குடுத்தோம் நீ என்னை உற்று பார்த்துவிட்டு என் நண்பனின் கையை பிடித்தாய் .
(A) என்னை வெருபேற்றி பார்க்க
(B) என் கையை பிடித்தால் விட மனம் வராது என்ற காரணம்
(C) சொல்ல தெரியவில்லை .

நீ பஸுக்காக காத்திருக்கும் போது பஸ் வந்தபிறகும் ஏறாமல் நின்றது .
(A) எனக்காக காத்திருந்தாய் .
(B) என்னை நினைத்து கொண்டிருந்ததால் பஸ்ஸை கவனிக்கவில்லை .
(C) அந்த பஸில் இடம் இல்லாததால் .

உன் பெற்றோர்கள் கல்லூரி வந்தபோது என்னை அறிமுகபடுத்தி வைத்தாய் .
(A) வருங்கால மாப்பிளையை காட்ட வேண்டும் என்ற விருப்பம் .
(B) என்னை பற்றி உன் பெற்றோர்கள் நினைப்பதை தெரிந்து கொள்ள .
(C) ஏதோ தோன்றியது  சும்மாதான் .

எனக்கு ரோஜா பிடிக்கும் என்று சொன்னேன் அடுத்த நாளே நீ ரோஜா வைத்து வந்தாய் .
(A) என் ஆசையை நிறைவேற்ற
(B) உனக்கும் ரோஜா பிடிக்கும் என்பதால்
(C) காரணம் ஒன்றும் இல்லை அன்று கிடைத்தது அதனால்

என் பிறந்தநாள் அன்று காலை 6 மணிக்கு என்னை கோவிலில் பார்த்தாய் .
(A) நான் இன்று கோவில் வருவேன் என்று எதிர்பார்த்தால்
(B) முதல் வாழ்த்து உன்னுடையதாக இருக்க வேண்டும் என்ற ஆசை
(C) கோவிலில் வைத்து என்னை வாழ்த்த வேண்டும் என்ற ஆசை .

***********************************************************************************************

40 மதிப்பெண் எடுத்திருந்தால் .
நீ என்னை காதலிக்கிறாய் தயங்காமல் உடனே சொல்லிவிடலாம் .

30 - 40 மதிப்பெண் காதல் உன் மனதின் ஆழத்தில் இருக்கிறது . எப்போது வேண்டுமானாலும் அது வெளி  வரலாம் .

30 ற்கு கீழ் என்னை காதலிக்கலாமா என்ற குழப்பத்தில் இருக்கிறாய் .
பதிலை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.
*******************************************************
ப்ரியாவின் பதில்.

கீழ் கண்ட கேள்விகளுக்கு ஆம் இல்லை என்று மட்டும் பதில் கூறவும் .

முதல் வரிசையில் இருக்கும் மாணவனை உள்ளே நுளையும் யாரும் பார்த்துவிட்டு போவது  சாதாரணமானதா.
(A)ஆம் (B) இல்லை

ஒரு பெண் சிரித்து கொண்டே யாரையாவது பார்த்தல் அது காதலா.?
 (A)ஆம் (B) இல்லை

யாராவது பாடிகொண்டிருக்கும் பொது வரிகள் மறந்துவிட்டால் தொடர்ந்து பாட முடியுமா ?
(A)ஆம் (B) இல்லை

தோழிகளிடம் சிறு வயது படத்தை காட்டி கொண்டிருக்கும் போது ஒரு ஆண் தேவை இல்லாமல் மூக்கை நுழைத்தால் படங்களை மறைத்து  வைப்போமா ?
(A)ஆம் (B) இல்லை

உன் கையை பிடிக்காமல் உன் நண்பன் கையை பிடித்ததில் இருந்து உனக்கு ஒன்று புரியவில்லையா ?
(A)ஆம் (B) இல்லை

ஏன் நான் என் தோழி வசந்திக்காக காத்திருக்கலாம்?
(A)ஆம் (B) இல்லை 

என் பெற்றோர்களுக்கு அன்று நிறைய பேர்களை அறிமுகம் செய்தேன் அதில் நீயும் ஒருவன்
(A)ஆம் (B) இல்லை  .

ரோஜா மட்டும் அல்ல தாமரை காலிபிளவர் , வாழைபூ , இது எல்லாம் உனக்கு  பிடிக்கும் என்று நீ சொன்னாய் .
(A)ஆம் (B) இல்லை

ஓஹோ அன்று உன் பிறந்தநாளா அதனால் தான் கோவில் வந்தாயா . நான் தினமும் வருவேன் உனக்கு தெரியுமா?
(A)ஆம் (B) இல்லை

இதில் ஏதாவது ஒரு கேள்விக்கு நீ (ஆம்) என்று பதில்  சொல்லி இருந்தால்
 நான் உன்னை காதலிக்க வில்லை என்று புரிந்து கொண்டிருப்பாய் .

(இல்லை) என்று பதில் சொல்லியிருந்தால் உனக்கு காதலுக்கான அர்த்தம் தெரியவில்லை ......
********************************************************************************************************************************************************
இது ஒரு மெயிலில் வந்தது ........................



 

Friday, January 7, 2011

ராத்திரி நேரத்து ....................

v
 
இப்போ நான்  எழுத போறது ஒரு உண்மை சம்பவம் ரொம்ப பயபடுறவங்க இப்பவே கெளம்பலாம் .

தைரியசாலிகள் என்னை பின் தொடர்ந்து வரலாம் .

18 வயதுக்கு உட்பட்டவர்கள் பெற்றோர்கள்  துணையுடன்  படிக்கவும் ..

என் கல்லூரி  நண்பன் ஒருவன் அவன் சித்தப்பாவை பார்க்க அவர்கள் கிராமத்திற்கு போயிருந்தான் அந்த ஊர் பெயர் நரிக்குடி .

எப்பவாவது தான் பஸ் வரும் அன்று இவன் போய் சேர இரவு 11:30  ஆகிவிட்டது ஊருக்குள் செல்லும் கடைசி பஸும் போய்விட்டது .

3 k.m நடந்து தான் ஊருக்குள்  செல்லமுடியும் . திரும்பி வந்து விடலாம் என்று அவன் உள் உணர்வு சொல்லியது.

இருந்தாலும் இவ்ளோ தூரம் வந்தாச்சி தைரியமா போய் பார்த்திடலாம் என்று வயசுக்கேற்ற துணிச்சல் அவனை முன் செல்ல வைத்தது.

இந்த ஊரில் பேய் நடமாட்டம் அதிகம்  என்று அவன் சித்தப்பா ஏற்கனவே சொல்லியது அப்போது நினைவிற்கு வந்தது .

பயபுள்ள என்னை மாதிரி தைரியசாலி வேற அதனால முன்வச்ச கால பின்வாங்காம மனசுல முருகன் பாட்டு பாடிகிட்டு நடைய போட்டான் .

பாதி தூரம் கடந்தாச்சி தெரு விளக்கு வேற இல்ல அம்மாவாசை இருட்டு வேற   இப்போ கூட மனசு திரும்பிடலாம்ன்னு சொல்லுது ஆனா மனசு சொல்ற பேச்சை யாரு கேட்டா . நானெலாம் அப்பா சொல்ற பேச்சையே கேட்கமாட்டோம் .

அப்போ கொஞ்ச தூரத்துல ஒரு வெளிச்சம் லாந்தர் விளக்கு மாதிரி அப்பாட என்று மனசு நிம்மதி ஆய்டுச்சி .

வெளிச்சம் கிட்ட நெருங்க நெருங்க மீண்டும் பயம் அங்கே ஒரு வயதான பெரியவர் முகம் தீயில் பாதி கருகிய நிலையில்
கையில் லாந்தர் விளக்குடன் என் நண்பனையே முறைத்து பார்த்தபடி உட்கார்திருந்தார் .

மேற்கொண்டு முன்னாள் போவதா இல்லை புறமுதுகிட்டு ஓடிவிடுவதா என்று ஒரு கணம் யோசித்தபடி அங்கேயே நின்று விட்டான் .

பிறகு மனதில் எல்லா கடவுள்களையும் வேண்டிகொண்டு துணைக்கு அஞ்சா சிங்கத்தையும் நினைத்து கொண்டு முன்னாள் நடக்க ஆரம்பித்தான் .

அவரை தாண்டிதான் இவன் நடந்து செல்ல வேண்டும் . கொஞ்சம் தைரியத்தை வரவைத்து கொண்டு என்ன பெரியவரே இந்த ராத்திரியில இங்க என்ன பண்றீங்க என்று அதட்டலாக கேட்டான் .

அவர் பின்னால் இருந்த பையை எடுத்து அவன் முன்னாள் வைத்தார் அதில் நிறைய புத்தகங்கள் இருந்தது தம்பி நான் புத்தகம் விக்கிறேன் ஒன்று வாங்கீட்டு போ என்று சொன்னார் .

அந்த குரலை கேட்டவுடன் இவன் உடம்பு பயத்தில் சில்லிட்டுவிட்டது . செவுற்றை நகத்தால் சுரண்டும்போது ஒரு சிலிர்ப்பு சிலிர்க்குமே அது மாதிரி எனக்கு வேண்டாம் என்று சொல்லிபார்தான் . தம்பி ஒன்னு வாங்கிக்க நீ வாங்கினாதான் நான் போவேன்.
என்றார் .

மீண்டும் அந்த குரலை கேட்க பயந்து சரி குடுங்க நான் பார்த்து வாங்கிக்கிறேன் என்று கேட்டான்.
அவர் புத்தக பையை இவனிடம் தந்தார். அதில் இருப்பதிலேயே கனமான புத்தகம் ஒன்றை எடுத்து இது எவ்ளவு என்று கேட்டான் .

ஆஹா ரொம்ப அருமையான புத்தகம் 250  ருபாய் சீக்கிரம் குடுப்பா நான் வீட்டுக்கு போகணும்ன்னு சொன்னார்.
ஆள விட்டா போதுன்னு  அவனும் 250 ருபாய் குடுத்து விட்டு வேகமாய் நடைய கட்டினான்.
அப்போது அவன் தோளின் மேல் ஒரு கை விழுந்தது .

அசையாமல் விறைத்து நின்று விட்டான் . பின்னால் இருந்து அதே குரல் தம்பி கடைசி பக்கத்தை மட்டும் படிக்காதே என்று.
சரி என்று தலை ஆட்டிவிட்டு திரும்பி பார்க்காமல் வேகமாக நடந்தான் .

வீட்டுக்கு வந்தவுடன் நிம்மதி பெருமூச்சி விட்டபடி அவன் சித்தப்பாவிடம் இந்த ஊருல ராத்திரி 12 மணிக்கு யாரு புத்தகம் விக்கிறதுன்னு கேட்டான்.அதற்க்கு அவர் அப்படி யாரும் இல்ல சில பேர் அம்மாவாசை பௌர்ணமி தினங்களில் அப்படி ஒரு கிழவனை பார்த்ததாக சொல்கிறார்கள் ஏன் என்ன விஷயம்?

இல்ல வரும்போது கேள்விபட்டேன் ஊர் காரங்க சொன்னாங்க என்று தான் பயந்த கதையை சொல்ல வெட்கப்பட்டு சமாளித்திருக்கிறான் .

எல்லாரும் தூங்கிய பிறகு இவன் மட்டு தான் வாங்கிய புத்தகத்தை எடுத்து பார்த்தான் அதில் காந்தி தாத்தா அட்டையில் சிரித்து கொண்டிருந்தார்.

கடைசி பக்கத்தை பார்க்க  கூடாதென்று அந்த கிழவர் கூறியது நினைவிற்கு வந்தது.
ஏதை கூடாது என்று சொல்கிறோமோ அதை தான் முதலில் செய்ய தோன்றும் அதற்க்கு இவன் மட்டும் என்ன விதிவிலக்கா?
புத்தகத்தை பிரித்தவுடன் கடைசி பக்கத்தை பார்த்தான் .

அங்கே .........

சத்தியசோதனை  : விலை : 20 ருபாய்

தள்ளுபடி விற்பனை : 10 : ருபாய் .








Thursday, January 6, 2011

ஆஸ்கர் நாயகனின் சாதனை பாடல்

v

இன்று இசை புயல் A.R. ரஹ்மானுக்கு 45 ஆவது பிறந்தநாள் .

அவருக்கு நம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..

இளையராஜா ரசிகர்கள் பலர் A.R.ரஹ்மானை பற்றி குறை கூருபவர்களாய் இருப்பது அவர்கள் அறியாமையை காட்டுகிறது .

தலைமுறைகள் மாறும்போது தேடலும் மாறும் .

முப்பெரும் இசை மேதைகளாக நான் மதிப்பது . M.S விஸ்வநாதம் , இளையராஜா , A.R. ரஹ்மான்

இவர்கள் அனைவருக்கும் ஒரு தலைமுறை இடைவெளி இருக்கிறது மூவரும் சிறந்தவர்களே .

மூவரும் trendsetters ஒப்பளவில் மூவரையும் எடைபோடுவது முட்டாள் தனமானது.

மூவரும் இசைக்கு புதிய பாதை வகுத்தவர்கள் .

இப்போது A.R. ரஹ்மான் பிறந்த நாளுக்காக அவர் இசை அமைத்த எனக்கு  மிகவும் பிடித்த பாடல் ஒன்று .

திருடா திருடா படத்தில் ராசாத்தி என் உசுரு ........

இதில்  ஒரு விசேஷம் என்னவென்றால் இந்த பாடலுக்கு எந்த இசை கருவியும் பயன்படுத்த வில்லை .

 வெறும்  குரல் கோரஸ் ஹம்மிங் மட்டும் வைத்து ஒரு முழு பாடலையும் இசை அமைத்திருப்பார்.

யாரும் செய்யாத ஒரு முயற்சி நிச்சயமாக என்னை பொறுத்தவரை  இது ஒரு சாதனை முயற்சி தான்.

நீங்க பலமுறை இந்த பாடலை கேட்டிருந்தாலும் இன்னொருமுறை எனக்காக கேட்டு பாருங்கள் .



Wednesday, January 5, 2011

காவலன் ஒப்பனிங் சீன்

v







பொங்கல் வரைக்கும் பொறுத்துக்கொள்ள முடியாதவங்களுக்காக.........

இதில் விஜயை ஓப்பனிங்கில் வித்யாசமாக காட்ட ரொம்ப கஷ்டப்பட்டு படம் எடுத்திருக்கிறார்கள் .
விசில் சத்தத்தில் தியேட்டர் ஸ்க்ரீன் மட்டும் அல்ல பயத்தில் தியேட்டர் சீட்டு கூட கிழியலாம் ஜாக்ரதை.
கில்லி, அழகிய தமிழ் மகன், குருவி,சுறா , இதை மிஞ்சும் அளவுக்கு இருக்கும்.
கில்லி, அழகிய தமிழ் மகன், குருவி, இந்த படங்களில் எல்லாம் விஜய் போட்டிக்கு கிளம்புவது போல் இருந்ததால் ரசிக குஞ்சிகள் கை வலிக்கும் அளவுக்கு தட்டினார்கள்.
அது மாதிரி இதுவும் ஒரு பைக் ரேஸ் போட்டிதலையில் ஹெல்மட் போட்டு ஒரு பத்து பேர்  கலந்துகொள்கிறார்கள்.
அதில்  ஒருவர் நம்ம பழைய சீ. சீ . இளைய தளபதி விஜய் .ஹெல்மட் இருப்பதால யாருன்னு தெரியாது .
அப்போ வில்லன் குருப்பு ஆளுங்க பெட்ரோல் டான்க்ல ஓட்ட போட்டுர்றாங்க இது தெரியாம  ரேஸ் ஆரம்பிக்குது.
தளபதி பைக் தான்   முன்னால போகுது. பாதிதூரம் போனதும் பெட்ரோல் இல்லாம வண்டி நின்னுடுது.
எல்லா பைக்கும்  அவர் கிட்ட நெருங்கி வருது . நமக்கு திக்........... திக் ...........
அந்த நேரம் தளபதி ஒரு காரியம்  பண்றாரு பாருங்க...
நம்ம அதிர்ச்சியில ஒன்னுக்கு போய்டுவோம்..
அத நீங்களும் பாருங்க.............
*

*
*
*
*
*

*
*
*
*

*




அப்புறம் என்ன தளபதி ஜெய்ச்சிடுறாரு அடுத்து ஒப்பனிங் பாட்டு .....
அதுல பாருங்க பட்டய கெளப்புறாரு டான்சு மூமன்டுல இதுல ஒரு வித்யாசம் பண்றாரு அது என்னன்னா
வழக்கமா தலைல, கைல, தொடைல, மட்டும் கர்சீப் கட்டி ஆடுரவரு இதுல இன்னும் ஒரு எடத்துலயும் கர்சீப் கட்டிருப்பாரு.
அது எந்த எடம்ன்னு முடிஞ்சா கண்டுபிடிங்க.
இல்லைனா பொங்கல் வரைக்கும் காத்திருந்து வெள்ளி திரையில் காணுங்கள் ..............
 

வல்லரசு உங்க வீட்டுக்கு வரணுமா

v
இந்தியா ஏன் வல்லரசாக முடியாதா?
இந்திய ஜனத்தொகை 100 கோடி .................
அதில்  9 கோடி பேர் ஓய்வு பெற்றவர்கள் ..................
மாநில அரசு ஊழியர்கள் எண்ணிக்கை 30 கோடி .............
மத்திய அரசு ஊழியர்கள் எண்ணிக்கை 17 கோடி ..............

(இரு வர்க்கமும் வேலை செய்வதில்லை )
I.T தொழில் செய்பவர்கள் 1 கோடி .................

(அவர்கள் இந்தியாவிற்கு வேலை செய்வதில்லை) ..............
25 கோடிபேர் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ....................
1 கோடிபேர் ஐந்து வயதிற்கு குறைந்தவர்கள் .....................
15 கோடிபேர் வேலை இல்லாத பட்டதாரிகள் ......................
1.2 கோடிபேர் எப்பொழுதும் மருத்துவமனையில்  இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை ..............................
79,99,998, இது சிறையில் இருப்பவர்கள் எண்ணிக்கை ...........................................

இப்போ மீதி ரெண்டுபேரு இருக்காங்க ................
ஒன்னு நான்..... (உட்கார்ந்து பதிவு எழுதிக்கிட்டு இருக்கேன்) ......................

ரெண்டாவது நீங்க........ (உட்கார்ந்து படிச்சுக்கிட்டு இருக்கீங்க)....................
அப்புறம் எங்க இருந்து நாம வல்லரசாவது ?

இன்னும் ஏன் உக்காந்துக்கிட்டு இருக்கீங்க மரியாதையா நாட்ட காப்பத்த கெளம்புங்க இல்லனா
இவரு உங்க வீட்டுக்கு வந்து இப்படி பயம் காட்டுவாரு 



பல்ல கடிக்கிற சத்தம் இங்கவரைக்கும் கேக்குது
கூல் டவ்ன். கூல் டவ்ன்.கூல் டவ்ன்.............................





Tuesday, January 4, 2011

புதிர் போட்டி

v
இந்த படத்தில இருக்கிறவங்க யாருன்னு சொல்லுங்க பார்க்கலாம் .
க்ழு தேவை படாது என்று நினைக்கிறேன்.
இருந்தாலும் குடுக்கிறேன் .
ஒருவர் சைக்கிள் ஓட்டியவர்.
அடுத்தவர் தலையின் ஒரு பாதி.
மூன்றாமவர் சொல்லவே வேண்டாம் இட்லி கடைக்காரர்களுக்கு தெரியும்..
அடுத்தவர் நன்றாக குளிப்பவர்......
அடுத்து புதிய k.r. விஜயா.......
ஹி ஹி இவர் மட்டும் சின்ன திரை...
இவரும்  தன்னை தளபதி என்று சொல்லுகிறார்.
காதை பார்த்தல் தெரியும்......................
 இவர்  தலையை பார்த்தல் கண்டுபிடித்துவிடலாம்..............

 ரெண்டு பெரும் ஹீரோ தான் ஒருவர் காட்டுக்கு ராஜா..................
 இது விழையும் பயிர் ...........பாரத ரத்னா விருது குடுக்கலாம் என்று ஒரு பேச்சிருக்கு இவர் நடிகர் அல்ல...........

பதில் பின்னூட்டத்தில் சொல்லப்படும் ..........

Monday, January 3, 2011

சிங்காரி சரக்கு சீமை சரக்கு

v
ஒரு வாரமாக பதிவு எழுதமுடியாத நிலைமைக்கு வருந்துகிறேன். இன்று எப்படியும் பதிவு போடணும்னு காலைல இருந்து முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். ஆனா சோதனை பாருங்க என்ன தனியா விடமாட்ராணுக பாசமான நம்ம நண்பர்கள் தொல்லை தான் காலைல இருந்தே என்ன மாத்தி மாத்தி சிப்டு போட்டு கண்கானிகிறாங்க. காரணம் என்னனா என்னிடம்  ரெண்டு புல்லு  சீமைசரக்கு அதாங்க (Scotch Whisky) இருக்கு பயபுள்ளைக அத ஆட்டைய போட மூணுமாசமா முயற்சி பண்றாங்க நானும் கற்ப காப்பதுற மாதிரி இத இவ்ளோநாளும் காபாத்திகிட்டு வந்தேன் இன்னக்கி என் பிறந்தநாள் இனிமேல் அத காப்பாத்துறது கஷ்டம்ன்னு தெரிஞ்சி போய்டுச்சி அதான் இன்னக்கி ராத்திரி பார்ட்டில அத ஓபன் பண்ணிடலாம்னு சொல்லிட்டேன்  இருந்தும் என்ன நம்பாம நான் தனியா போய்டுவேன்ன்னு கண்காணிக்க சிப்டு போட்டு வேலை பாக்குறானுக. அதுகூட பரவா இல்ல ரொம்ப ஓவரா புகழ்ராணுக தங்கதாரகன் அப்படின்னு பட்டம் வேற குடுக்குறாங்க என் முகத்துக்கு முன்னால புகழாதிங்கன்னு சொல்லிட்டேன்.இருந்தாலும் பின்னால வாழ்க வாழ்கன்னு சத்தம் கேட்டுகிட்டு தான் இருக்கு சரி என்ன பண்றது புட்டிய தொறக்குரவரைக்கும் இப்படிதான் இருக்கும் பாசக்கார பயபுள்ளைக.


எங்க நட்பு  வட்டத்துல ஒரு  பழக்கம் இருக்கு காரணம் இல்லாம குடிக்க கூடாது.
ஏதாவது ஒரு நியாயமான காரணத்தை  முன்வைத்து விட்டுதான் குடிக்கவே ஆரம்பிப்போம்.
கடைசியாக புத்தாண்டுக்கு குடித்தோம்.
புத்தாண்டு என்பதே போதுமான காரணம். அதற்க்கு முன்னால் நண்பனின் ஒரு தலை காதல் கைமாறி போனது அதற்காக அனைவரும் துக்கத்தை கோப்பையில் பகிர்ந்து கொண்டோம்.
சோதனையாக தினமும் ஒரு காரணம் கிடைத்து விடுகிறது.  காலில் சாணி மிதித்தாலோ சட்டையில் காக்கா கக்கா போனால் கூட
குவாட்டர் அடிக்க போதுமான காரணங்கள்.
இப்படி இருக்கும் போது என் பிறந்தநாள் என்றால் சும்மா விடுவார்களா?

இடம் : எழும்பூர் பார்
நேரம் : இரவு  8:30 
பக்கத்தில் யாரவது இருந்தால் தாராளமாக வரலாம்.......
நட்புடன் நண்பன்டா ..................................

Popular Posts