Tuesday, February 22, 2011

ப்ளீஸ் என்ன கல்யாணம் பண்ணிக்கங்க

v


இந்த பதிவு எனக்கு மெயிலில் வந்தது அப்படியே உங்களுக்கு தருகிறேன் .

இதை தமிழ்படுத்தினால் இதில் இருக்கும் உண்மையான அர்த்தம் சிதைந்துவிடும் அதனால் அப்படியே தருகிறேன் .

கையில் டிக்சனரி வைத்து கொண்டு புரிந்து கொள்ளவும் .

நல்ல ஆங்கிலம் தெரிந்தவர்கள் இதை படித்து முடித்த வுடன் உங்கள் ஆங்கில அறிவு கெட்டு போச்சின்னு கம்ப்ளைன்ட் பண்ண கூடாது.

These are Girls profiles taken from shaadi.com
These are actual ads on a matrimony site. Grammar and spelling errors have no place in a profile description as everything is straight from the heart!
Disclaimer : I am not responsible if you forget your
basic grammar after reading this mail...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
- Hello To Viewers My Name is Sowmya , I am single i dont have male,
If any one whant to marrie to me u can visite to my home. I am not a good education but i working all
field in bangalore.. if u like me u welcome to my heart...
when ever u whant to meet pls visit my resident or send u letter..
Thanks
yours Regards Sowmya ~*~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
i want very simple boy. from brahmin educated family from Orissa state
she is also know about RAMAYAN, GEETA BHAGABATA, and other homework
(Wut Homework?)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
I am a happy-go-lucky kind of person. Enjoys every moments of life. I love to make friendship. Becauese friendship is a first step of love. I am looking for my dreamboy who will love me more than i.
Because i love myself a lot. If u think that is u then why to late come on ........ hold my hand forever !!!
(The dilwale dulhaniya effect)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
i am simple girl. I have lot of problemin my life because of my lucknow i am looking one boy he care me and love me lot lot lot
(I don't know why but this is one of my favorites)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
i want a boy with no drinks if he wants he can wear jeans in house but while steping out of house he should give recpect to our cast
(by not wearing his jeans? Wat the hell...)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
HYE I AM A GOOD LOKING GIRL,WHO HAS THE CAPABILITY TO MAKE ANY BODY TO LOUGH.I BELIEVE IN GOD AND ACCORDING TO ME FRIENDS ARE THE REAL MESSENGER OF GOD. THE 3 THINGS I AM LOOKING FROM A BOY ,THEY ARE
1.THEY MUST BELIEVE IN GOD.
2. THEY HAVE TO LIKE MY PROFFESION
3. THEY SHOULD NOT GET BORED WITH ME WHEN I WILL TRY
TO MAKE THEM LOUGH.
(all of us are loughing{laughing})
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
whatever he may be but he should feel that he is going to be someone groom and he must think of the future life if he is toolike this he would be called the man of the lamp
(I am clueless, I feel so lost. Can anyone tell me
what this girl wants)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
i love my patner i marriage the patner ok i search my patner and i love the patner ok thik h ai the patner has a graduate ok
(I am again clueless but I liked the use of "ok". The person is suffering from "Ok-syndrome")
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
iam pranati my family histoy my two brother two sister and father & mother sister completely married
(somebody please explain in comments section how to get married 'completely'?)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
my name is farhanbegum and i am unmarried. pleaes you marrige me pleaes pleaes pleaes pleaes pleaes pleaes pleaes
(height of desperation! )
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
iam kanandevi. i do owo businas.one sistar.he was marred.
(No comments)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
hello i am a good charactarised woman. i want to run my life happily . i divorced my first husband. his charactor is not good'. i expect the good minded and clean habits boy who may be in the same caste or other caste accepted ...
(but credit cards not accepted..???)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Iam Sharmila my colour is black, but my heart is white. i like social service.
(Zebra..???)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நண்பர்களே நான் இன்று கவுண்டமணி ரசிகர் மன்ற தளத்தில் காட்டு தர்பார் - சித்தியனாந்தாவின் சிருவிளையாடல் என்று ஒரு பதிவு போட்டிருக்கிறேன் அதையும் கொஞ்சம் வந்து பாருங்களேன் ....................

Wednesday, February 16, 2011

கஷ்டம் குடுக்கிறவன் தான் கஸ்டமரா

vஎனக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து உண்மையிலேயே ரொம்ப சோகமான வேலைன்னா அது பரோட்டா மாஸ்டர் வேலைதான்
அப்படின்னு நினைச்சிகிட்டு இருந்தேன். காதல்ல தோல்வி அடைஞ்சவங்க தான் இந்த வேலை பார்க்கமுடியும். அமைதியா ஓரமா இருந்து அவங்க வேலை செய்யும்போது அவங்க உடல் அசைவு வேடிக்கை பார்த்திருக்கேன் .

ஆனால் இப்போ என் கருத்து மாறிடிச்சி அதை விட இம்சையான ஒரு வேலை உண்டுன்னா அது கால்செண்டர் வேலைதான் .
எவ்ளோ திட்டினாலும் வலிக்காத மாதிரி நடிக்கணும் நமக்குன்னு தனிப்பட்ட உணர்ச்சி இருக்க கூடாது சுருக்கமா சொன்னா மனுஷனா இருக்க கூடாது மரம் மாதிரி இருக்கணும் .

சில பேறு போதைக்கு இவங்கதான் ஊறுகாய் பொழுது போகலைனா சும்மா இங்க போன் போட்டு கடலை போடுறவங்கள என்ன சொல்றது .
அதுவும் பெண்கள் குரலா இருந்துட்டா சொல்லவே வேண்டாம் இவனுங்க இம்சையை .
   பய புள்ளைக்கு நகைச்சுவை உணர்வு ரொம்ப அதிகம் மதுரை கார சேட்டை எனக்கு என்னமோ இது நம்ம நா.மணிவண்ணன் . குரல் மாதிரி இருக்கு அவருதான் வம்ப வேலைக்கு வாங்குரவரு .


இந்த சேட்டையாவது பரவாயில்ல இங்க ஒருத்தர் இங்கிலீசு பேசுறாரு பாருங்க என்ன பெத்த ஆத்தா நான் படிச்ச இங்கிலீசு எனக்கு மறந்து போச்சேன்னு அந்த பொண்ணு அழுகாத குறை .


இப்போ சொல்லுங்க மக்களே கால் செண்டர்ல வேலை பார்க்கிறவங்க உண்மையிலே பாவ பட்டவங்கதானே.
நமக்கு தெரிஞ்சவங்க யாரவது அங்க வேலை செஞ்சா அவங்க கிட்ட நாம பரிவோடு நடந்துகலாம் .
பாவம் சார் அவங்களும் மனுஷங்கதான் .


Tuesday, February 15, 2011

காட்டு தர்பார்

v


அப்படியே யு டர்ன் போட்டு எல்லோரும் இங்க போய்டுங்க இன்னக்கி நம்ம கச்சேரி அங்கதான் வாங்க வந்து
பார்த்துட்டு எப்படின்னு சொல்லுங்க

Wednesday, February 9, 2011

திரை விமர்சனம்

v


எனக்கு திரை விமர்சனம் எழுதனும்ன்னு ரொம்ப நாளா ஆசை . ஆனா மனசுல ஒரு சின்ன பயம் சி .பி.எஸ். மாதிரி பெரிய ஜாம்பவான்கள் இருக்கும் இந்த வலை உலகில் நான் திரை விமர்சனம் எழுதினால் இந்த சமுதாயம் என்ன சொல்லும் ?

அதனால ரொம்ப யோசிச்சி என்ன ஆனாலும் சரி நான் திரை விமர்சனம் எழுதிவிடுவது என்ற வீரமான முடிவை எடுத்து விட்டேன் .
சரி எழுதலாம்ன்னு  முடிவு பண்ணீட்டேன் எந்த தியேட்டருக்கு போறது ?

சிட்டில இருக்குற நல்ல தியேட்டர்ல ஒரு ஆறு தியேட்டர் மட்டும் செலக்ட் பண்ணி சீட்டு போட்டு குலுக்கி எடுத்தேன் .
அதுல தேவிபாரடிஸ் தியேட்டர் வந்தது .

காவலன் படம் ஓடுதே சரி அதையும் பார்திடலாம்ன்னு கெளம்பி போனேன் .
தியேட்டர் இப்போ கொஞ்சம் நல்லா செலவு செஞ்சி ரெடி பண்ணிருக்காங்க டிக்கட் சுலபமா கிடைத்தது .
வாசலிலேயே நம்ம பாகெட்ட தடவி சோதனை போடுறாங்க . அது ஏன்னு கேட்டதுக்கு பான்பராக் வெடிகுன்டு போன்ற பொருள்களுக்கு அனுமதி இல்லையாம் .(பாருங்க சார் கொடுமைய)
ஒரு வழியா இமிகிரேசன் சோதனை எல்லாம் வெற்றிகரமா முடிச்சிட்டு உள்ளே பொய் என் இருக்கையில் அமர்தேன் .

இப்போது திரை விமர்சனம் பார்க்கலாம் .

அந்த திரை ஒரு பதினாலு மீட்டர் அகலம் மற்றும் ஆறு மீட்டர் உயரம் இருக்கும் முழுவதும் வெள்ளை நிறத்தில் இருந்தது .
வேறு ஏதாவது நிறம் இருந்தால் கொஞ்சம் நல்லா இருந்திருக்கும்ன்னு மனசுக்கு பட்டுது .

அப்புறம் அந்த திரை லேசாக வெளிப்பக்கம் வளைந்தது போல் வடிவமைக்க பட்டிருந்தது .
ஒரு மிக பெரிய மேடை அமைத்து அதில்  திரையை வைத்திருந்தார்கள் .
அந்த திரைக்கு பின்னால் ஒன்றுமே இல்லை .
இதில் மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அந்த திரைக்கு முன்னால் இன்னொரு திரை இருக்கிறது .
அதில் பன்னீரண்டு வண்ண பல்புகள் தொங்க விடபட்டிருக்கிறது . நல்ல வேளை இந்த திரை வெறும் வெள்ளையாக இல்லாமல் பல வண்ணத்தில் இருந்தது மனதுக்கு ஆறுதல்.

எனக்கு பிடித்த காட்சி :

படம் ஆரம்பிக்கும் போதும் இடைவேளை விடும் போதும் முன்னால் இருக்கும் அந்த திரையின் விளக்குகள் ஒளிர்ந்தபடி மேலே செல்வதும் பின்னர் கீழே இறங்கி வருவதும் .


டிஸ்கி :- சரி சரி திரை விமர்சனம் படிசிடீங்கள்ளே அப்புறம் என்ன ஒட்டு போட்டுட்டு கேளம்புறது... நாளைக்கு வாங்க நூல் விமர்சனம் பண்றேன் ...............

 

Monday, February 7, 2011

சங்கம் வைத்து சரக்கடித்த தமிழன் .

v
சண்டே ஆனாலே நண்பர்கள் டாஸ்மாக் கடைல சங்கத்த கூட்டுவாங்க .
அங்க உக்காந்துதான் உலகவரலாறு எல்லாம் பேசி ஒரு முடிவு எடுப்போம் .
எனக்கும் என் நண்பன் குமாருக்கும் வரலாறுனா ரொம்ப இஷ்டம் .
கட்டிங் உட்டுட்டு அப்படியே இலங்கைல இருந்து கெளம்பினா சிங்கபூர் , மலேசியா,தாய்லாந்து , சீனால இருந்து அப்படியே ஆப்ரிக்கா ,அமேரிக்கா,ஐரோப்பா,எல்லாம் கடந்து திரும்ப தமிழ்நாடு வந்து லேண்ட் ஆகும்போது ஒரு ஆப் சரக்காவது ஓடிருக்கும் .

இது எப்பவும் நடக்கிறது தான் அதனால மத்த நண்பர்கள் எல்லாம் பாதுகாப்பான இடத்தில (சீட்பெல்ட் போட்டுகிட்டுதான் )
இருந்து கவனிப்பார்கள்.

நேத்து நம்ம பய குமாரு கூட படிச்சபயன்னு ஒருத்தன கூட்டிட்டு வந்தான் .
சங்கத்த கூட்டீட்டு கெளம்புனோம் . வழக்கம் போல நம்ம வண்டி உலக நாடுகள எல்லாம் சுத்தீட்டு கடைசியா தமிழ்நாட்டுக்கு வந்து பார்த்தா வழக்கத்தை விட ஒரு கட்டிங் அதிகமா போய்டுச்சி .

கமிங் டூ தி பாய்ன்ட் சங்ககால தமிழர்களோட வீரம் கொடைன்னு நான் ரொம்ப புகழ்ந்து பேசிக்கிட்டு இருந்தேன் .
குமாரு கூட வந்தானே அந்த கருங்காலி அவன் என்ன கிண்டல் பண்ணிக்கிட்டு இருந்தான் .

என்னையா? பெரிய வீரம் கொடைன்னு. எல்லாம் காசுவாங்கீட்டு இந்த புழுவனுங்க புழுவீட்டு போய்ட்டானுங்க அதையும் நம்பறீங்களே பாஸ் .

சரி மயிலுக்கு போர்வை போர்த்தினானே பேகன் அவன் கோடை வள்ளல் தானே ?
அட போயா புரியாம பேசிக்கிட்டு சரக்கு அடிச்சிட்டு மயில பிடிக்க போர்வைய போட்டிருப்பாரு அது போர்வையோட எஸ்கேப் ஆய்டுச்சி சமாளிக்கிறதுக்கு அது குளிர்ல நடுங்கிச்சி நான் தான் போர்த்தி உட்டேன்னு.
வள்ளல்னா நம்ம கலைஞ்ர் ஐயா மாதிரி எல்லா மயிலுக்கும் போர்வை குடுத்திருக்கணும் .அதுவும்  போர்த்திகிட்டு மானாட மயிலாடன்னு ஜாலியா சுத்தி இருக்கும்.

சரி முல்லைக்கு தேர் குடுத்தானே பாரி அத பத்தி என்ன சொல்றே ?
ஏண்டா லூசா நீ படிச்ச பையன் தானே . எவனாவது திருடன் வந்தால் கொடிய வெட்டிட்டு தேர ஓட்டீட்டு போய்ட மாட்டான் . மேட்டர் அது இல்ல மாமூ (மச்சி ஒரு க்வாட்டர் சொல்லேன் ) அது என்னானா அன்னிக்கி பார்த்து சரக்கு ஜாஸ்தி சாப்டாபுல நம்ம பாரி . டூப்ளிகேட் சரக்கா இருந்திருக்கும் .அதான் குப்புன்னு தூக்கிடுச்சி வண்டிய எங்க பார்க் பன்னினோம்ன்னு மறந்துடாபுல வீட்டம்மா கேட்டா நம்ம கவுண்டர் ஒரு படத்துல சொல்லுவாரே எங்கங்க உங்க வேட்டி சட்டைய காணும்  அது வழில ஒரு பிச்சகாரன் நின்னுகிட்டு இருந்தான் தானமா குடுதுட்டேன்னு .
அது மாதிரி சமாளிசிருக்காறு மப்புல வண்டிய தொலைச்சிட்டு ஏன்னா பில்டப்பு ?

இவன இப்படியே விட கூடாதுன்னு அடுத்த கேள்விய தாக்குனேன் .
இந்த வல்வில் ஓரி பற்றி தெரியுமா அவரு ஒரு அம்பு விட்டா அது மானை  துளைத்து . புலியை துளைத்து .
கரடியை துளைத்து. காட்டு பன்றியை துளைத்து பாம்பு புற்றை துளைத்து பாம்பை குத்தி நின்னிசாம் இதுக்கு என்ன சொல்ல முடியும் ?
அதுக்கு அவன் சொல்றான் .
@@@@!!$$#########   $$$$%%%%%%%&^&^&^&^&))*****:">>ல்!!~~~@@%*(*&&(_++
சரி விடு ஜூட்டு அதுக்கப்புறம் நான் ஏன் அங்க இருக்கேன் .
நாங்கெல்லாம் ராவான ரவடி .....................................................

ஒரு வேளை இப்படியும் இருக்குமோன்னு பயபுள்ள நம்மள யோசிக்க வச்சிட்டான். ( சங்க காலத்துல டாஸ்மாக் கடை இருந்திச்சா சார் ? )

டிஸ்கி :- வலது பக்கம் மேலே பாலோவர்ஸ்குன்னு ஒரு பட்டன் இருக்கு பாருங்க அது வேலை செய்யுதான்னு ஒரு சின்ன சந்தேகம் எனக்கு..
நீங்க ஒருமுறை அதை அமுக்கி பார்த்து வேலை செய்யுதான்னு கண்டுபிடிச்சி சொல்லுங்களேன் ( அப்பாடா பொறி வச்சாச்சி எந்த எலி மாட்டுதுன்னு பாப்போம் )
Friday, February 4, 2011

பிரியமானவளும் ...... பிரபஞ்சமும்.........

v
சர்க்கரை துண்டாக கரையும் நிலவு --மனதில்
வளர்ந்து கொண்டிருக்கும் வானமாய்
உன் நினைவு .


**************************************************************

பூமி சூரியனை சுற்றுவது
புவி ஈர்ப்பு விசையால் நான்
உன்னை சுற்றுவது -- உன்
விழி ஈர்ப்பு விசையால்


****************************************************************


நட்சத்திர கூட்டங்களாக
உன் தோழிகள் நடுவில்
நீ மட்டும் விடி வெள்ளியாய் .


*****************************************************************


நாளை சூரிய கிரகணம் --- நீ
வீட்டிலேயே இருந்து விடு
வெழியே வந்து விஞ்சானிகளை
குழப்பி விடாதே .


***********************************************************


டிஸ்கி :- நானும் கவிதை எழுதீட்டேன் எல்லாரும் பார்த்துகங்க நானும் ரவுடி தான் ....நானும் ரவுடி தான் ....நானும் ரவுடி தான்..........

Popular Posts