Tuesday, September 20, 2011

மோடி பயோடேட்டா-----( கே.ஆர்.பி.க்கு ஒரு விளக்கம் )

v
இப்போது தான் எங்கே செல்லும் பாதை கே.ஆர்.பீ. செந்தில் அவர்களின் (குஞ்சாமணி என்று சொன்னால் கூட கோபித்துக்கொள்ள மாட்டார் )மோடியின் பயோடேட்டா பார்த்து விட்டு வந்தேன்.
மோடிக்கு அமேரிக்கா பிடிக்காது என்று சொல்லி இருந்தார். இதில் என்னுடைய கருத்தை பதிவு செய்கிறேன் பார்த்துவிட்டு பதில் சொல்லவும் ..

  
நீண்ட கால எரிச்சல்         
: காங்கிரஸ்காரர்கள், அமெரிக்கா............./////

இதில் நான் கொஞ்சம் மாறுபடுகிறேன் ..
அரசியலில் மட்டும் அல்ல அமெரிக்காவுக்கும் நிரந்தர நண்பன் எதிரி எல்லாம் கிடையாது ...
மோடிக்கு அமேரிக்கா செல்ல தடை இருப்பது உண்மைதான். ஆனால் அவர் பிரதமர் ஆனால் அந்த தடை செல்லாதது ஆகி விடும் என்று அமெரிக்க பத்திரிக்கை தான் சொல்கிறது . தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும் போது மோடியை முன்னிறுத்தும் யோசனையை ஊதி விட்டதே இந்த அமெரிக்காதான் ..

அதற்க்கு காரணம் இல்லாமல் இல்லை .அவர் பிரதமர் ஆனால் மிக பெரிய லாபம் அடைவது பன்னாட்டு நிறுவனங்கள் தான் எப்படி என்றால் .இதுவரை பன்னாட்டு நிறுவனங்களின் செல்ல குட்டியாக இருந்தது டாக்குடர் மன்மோகன் சிங்தான் அதனால்தான் காங்குரசில் மிக பெரிய தலைவர்கள் இருந்தும் தனிப்பட்ட செல்வாக்கு எதுவும் இல்லாமல் இவரால் பத்துஆண்டுகள்  பிரதமராக தொடர முடிந்தது ?....

ராகுல் சோனியா என்று யார் நினைத்தாலும் இவரை மாற்றி இருக்க முடியாது காரணம் பிரதமர் மட்டும் அல்ல நிதி அமைச்சர் மற்றும் வெளிஉறவுதுறை அமைச்சர் என்று யார் எந்த பதவியில் அமரவேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரம் பன்னாட்டு நிறுவனகளுக்கு உண்டு . எங்கேயோ அரசியலுக்கு சம்மந்தம் இல்லாத ஒரு சாதாரண செல்வாக்கு இல்லாத இவரால் எப்படி நிதி அமைச்சர் ஆகமுடிந்தது ?. எந்த போட்டியும் இல்லாமல் எப்படி இவரால் இரண்டு முறை பிரதமராக தொடர முடிகிறது ? யோசித்தால் இவரை தாங்கி பிடிக்கும் சக்திகள் என்ன என்று புரியவரும் ....

சரி இப்போ விசயத்துக்கு வரேன் இப்படி பன்னாட்டு நிறுவனங்களின் அன்புக்கு பாத்திரமான மன்மோகன் செல்வாக்கு மிகவும் சரிந்துவிட்டது .துவண்டு கிடக்கும் செல்வாக்கை தூக்கி செங்க்குத்தாக நிறுத்த இனிமேல் வெண்ணிறாடை மூர்தியாலும் முடியாது என்று தெரிந்து விட்டது .சரி இனி என்ன செய்யலாம் ? ராகுல் ?...ச்சே ச்சே ..இவரு அதுக்கு சரிபட்டு வரமாட்டாரு .இல்லை இவரு எதுக்குமே சரிபட்டு வரமாட்டாரு என்ற முடிவுக்கு வந்தாச்சி .....

இப்படி பலவிதமாக யோசித்து கொண்டிருந்த நிறுவனங்களுக்கு புதிதாக கிடைத்த பிம்பம் தான் மோடி.
சிறந்த நிர்வாகி என்று பெயர் வேற இருக்கு .மற்ற மாநிலங்களில் ஆறு சதவீதம் என்றால் இவர் மாநிலத்தில் பதினொரு சதவீத வளர்ச்சி .எல்லாம் உள்நாட்டு வளர்ச்சியா என்றால் இல்லை என்பது சதவீதம் அந்நிய முதலீடு தான் குஜராத்தின் இந்த வளர்ச்சிக்கு காரணம் .

மற்ற மாநிலங்களில் நிறுவனம் ஆரம்பிக்க நிலம் பார்த்து ஓகே சொன்ன கம்பனி எல்லாம் சொல்லாமல் குஜராத் பக்கம் தங்கள் கடையை விரிக்கிறார்கள் என்றால் . அதற்க்கு அவர்கள் சொல்லும் காரணம் திறந்த நிர்வாகம் ..
உண்மைதான் இது மக்களுக்கான திறந்த நிர்வாகம் அல்ல .பன்னாட்டுக்கான திறந்த நிர்வாகம் .சமீபத்தில் நிஸ்ஸான் மற்றும் போர்ட் ஆகிய இரு கம்பனிகள் தமிழ்நாட்டில் நிலம்பார்த்து ஓகே செய்து பிறகு தங்கள் கடையை குஜராத் பக்கம் மாற்றியவர்கள் கொல்கத்தாவில் இருந்து டாடா தன்
ஜாகையை மாற்றியது .இன்னும் நிறைய இருக்கு .

இப்படி அநியாயத்துக்கு நல்லவனா இருக்கானே இவனுக்கு நாம ஏதாவது பண்ணனும் என்று முடிவு செய்து களம் இறங்கி இருக்கிறார்கள் . அரசியலில் இருந்து ஓய்வு பெற்று இருந்த நரசிமராவ். ராஜீவ்காந்தி கொலைக்கு பின் போட்டி இன்றி பிரதமர் ஆகிறார். மைனாரிட்டி அரசை ஐந்து ஆண்டுகாலம் வெற்றிகரமாக நடத்துகிறார் . எங்கேயோ அரசியலுக்கு சம்பந்தம் இல்லாதே வாத்தியார் மன்மோகனை கொண்டு வந்து நிதியமைச்சர் ஆக்குகிறார் அவர் தாராளமய கொள்கையை புகுத்துகிறார் .பிறகு அவரே இருமுறை பிரதமர் ஆகிறார் அந்த கொள்கையை தீவிரமாக கடை பிடித்து மக்கள் செல்வாக்கை இழக்கிறார் . இப்போது இதே கொள்கையை இவரை விட தீவிரமாக கடைபிடிக்கும் ஒரு ஆடு சிக்கி இருக்கு அவரை இப்போதே பிரதமர் வேட்பாளருக்கு தயார் செய்யும் வேலை நடக்கிறது .

  மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் எல்லாம் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இருப்பது போல் தெரிகிறதா?
இனி நடக்க போவதை பாப்போம் . மோடி பிரதமர் ஆக்கபடுவார். ராகுல் தில்லி வீதிகளில் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே .. என்ற பாடலை பாடி திறிவார். பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் கச்சா என்னை உயர்வுதான் .டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததுதான் விலைவாசி ஏற்றத்திற்கு காரணம் என்று பிரதமர் மோடி மக்களுக்கு விளக்கம் சொல்லி கொண்டு இருப்பார் .

எனக்கு சின்ன வயதில் வயல்களில் ஓணான் பிடிக்கும் ஞாபகம்தான் வருகிறது .கன்னியை ஓணானின் கழுத்திற்கு பக்கத்தில் வைத்து காத்திருப்போம். அது கழுத்தை உள்ளே விடுவதும் எடுப்பதுமாக ஆட்டம் காட்டும் ஆனாலும் நாங்கள் பொறுமையாக காத்திருப்போம் . சிலசமயம் ஓணான் கண்ணிக்குள் கழுத்தை விட்டு எடுக்காமல் அப்படியே நிற்கும் ...பிறகு என்ன ? கன்னி இருக்கப்படும் ...கழுத்து நெறிக்கப்படும் ...ஓணான் தொங்கவிடப்படும் .....
மேற்கண்ட கட்டுரைக்கும் இந்த கதைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் ....    
இப்படிக்கு  அண்ணனின் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் அண்ணனின் அடி விழுதுகள் ...........

 

56 கருத்து சொல்றாங்க:

அஞ்சா சிங்கம் said...

யாராவது பெரியமனுசங்க தமிழ் மணத்துல இணைச்சிடுங்க உங்களுக்கு புண்ணியமா போகும் ......

K said...

நண்பா, உங்க கருத்தையும், செந்தில் சாரின் கருத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து உண்மைகளை அறிகிறோம்! நன்றி!

K said...

தமிழ்மணத்தில் இணைத்துவிட்டு ஓட்டும் போட்டுள்ளேன் நண்பா!

அஞ்சா சிங்கம் said...

நன்றி நண்பா இதுக்குதான் ஊருக்குள்ள ஒரு ஐடியா மணி வேணும்கறது ...............

MANO நாஞ்சில் மனோ said...

துவண்டு கிடக்கும் செல்வாக்கை தூக்கி செங்க்குத்தாக நிறுத்த இனிமேல் வெண்ணிறாடை மூர்தியாலும் முடியாது என்று தெரிந்து விட்டது .சரி இனி என்ன செய்யலாம் ? ராகுல் ?...ச்சே ச்சே ..இவரு அதுக்கு சரிபட்டு வரமாட்டாரு .இல்லை இவரு எதுக்குமே சரிபட்டு வரமாட்டாரு என்ற முடிவுக்கு வந்தாச்சி .....//


வெண்ணிற ஆடை மூர்த்தி இங்கே எங்கேய்யா வந்தாரு ஹா ஹா ஹா ஹா சிரிச்சி முடியலை...

MANO நாஞ்சில் மனோ said...

நீங்க சொல்றதை பார்த்தால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியா பலியாகிருமோ, மோடி பிரதமர் ஆனால்...???

அஞ்சா சிங்கம் said...

MANO நாஞ்சில் மனோ said...

நீங்க சொல்றதை பார்த்தால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியா பலியாகிருமோ, மோடி பிரதமர் ஆனால்...???
////
அது எப்பவோ ஆயாச்சி அந்த ஓணான் கதைதான் ..............
வருகைக்கு நன்றி மக்கா.............

அஞ்சா சிங்கம் said...

MANO நாஞ்சில் மனோ said...
வெண்ணிற ஆடை மூர்த்தி இங்கே எங்கேய்யா வந்தாரு ஹா ஹா ஹா ஹா சிரிச்சி முடியலை...///
////////////////
ஏன் மாப்பு சுப்பிரமணிய சாமியால முடியும் போது இவரால முடியாதா?

சிவா said...

சைக்கிள் கேப்புல ஓணான் பிடிக்கிற விஷயத்தை அழகா சொல்லி இருக்கீங்க...வாழ்த்துக்கள்

அஞ்சா சிங்கம் said...

சிவா said...

சைக்கிள் கேப்புல ஓணான் பிடிக்கிற விஷயத்தை அழகா சொல்லி இருக்கீங்க...வாழ்த்துக்கள்...
வருகைக்கு நன்றி ..............

Unknown said...

உங்கள் பதிவு மாறுபட்ட கோணத்தில் இருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களின் உள்கை இதில் இருக்குமோ என்று கவலை கொள்வது யோசிக்க வைக்கிறது. ஆனால் அன்னா ஹசாரே அளவிற்கு மோடியின் உண்ணாவிரதம் மக்களை ஈர்க்கவில்லை என்பது என் கருத்து.
அத்வானிக்கு அடுத்து பாஜகவிற்கு தேவைப்படும் மாற்று முகம் தான் மோடி.

Unknown said...

ராகுல் பற்றி சொல்லிருப்பது சூப்பரு..

Unknown said...

ஆக மொத்தம்
கன்னியை இறுக்கும் போதெல்லாம் துடிக்கப்போவது மக்கள் தான்..

அஞ்சா சிங்கம் said...

பாரத்... பாரதி... said...

உங்கள் பதிவு மாறுபட்ட கோணத்தில் இருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களின் உள்கை இதில் இருக்குமோ என்று கவலை கொள்வது யோசிக்க வைக்கிறது. ஆனால் அன்னா ஹசாரே அளவிற்கு மோடியின் உண்ணாவிரதம் மக்களை ஈர்க்கவில்லை என்பது என் கருத்து.
அத்வானிக்கு அடுத்து பாஜகவிற்கு தேவைப்படும் மாற்று முகம் தான் மோடி...///////
//////////
நான் அப்படி நினைக்கவில்லை அத்வானியை விட கொடூர முகம் கொண்டவர்தான் மோடி .
அப்படி இருக்கும் பட்சத்தில் திடீர் என்று இவர் முன்னிறுத்த படுவதற்கான காரணம் . யோசிக்க வைக்கிறது .
இந்த உண்ணா விரதம் மக்களை ஈர்ப்பதற்காக அல்ல . கட்சியில் தனது செல்வாக்கை நிரூபிக்கவும் அடுத்த பிரதமருக்கான வேட்பாளர் நான் தான் என்று மக்கள் மனதில் இப்போதே பதியவைத்து தயார் செய்வதற்கு தான் ..

அஞ்சா சிங்கம் said...

பாரத்... பாரதி... said...

ஆக மொத்தம்
கன்னியை இறுக்கும் போதெல்லாம் துடிக்கப்போவது மக்கள் தான்..///\

அதே அதே ..........

Unknown said...

நல்லாவே புரியும்படி சொல்லியிருக்கீங்க, உண்ணாவிரதம் மூலம் மோடி காட்டியது ஒரு மோடி மஸ்தான் வித்தைதான்.அதில் பல்வேறு தந்திரங்கள் ஒளிந்துள்ளது தெரிகிறது.

அஞ்சா சிங்கம் said...

R.Elan. said...

நல்லாவே புரியும்படி சொல்லியிருக்கீங்க, உண்ணாவிரதம் மூலம் மோடி காட்டியது ஒரு மோடி மஸ்தான் வித்தைதான்.அதில் பல்வேறு தந்திரங்கள் ஒளிந்துள்ளது தெரிகிறது...
//////////////
புரிந்தால் சரி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ..........

சக்தி கல்வி மையம் said...

சிங்கம் மறுபடிடியும் காலத்துல இறங்கிடுச்சா?

மாப்ள பதிவு படிச்சுட்டு விரிவா அப்புறம் கமென்ட் போடுறேன்..

வாழ்த்துக்கள் மறுபடியும் பதிவு உலகில்...

Unknown said...

எதிர்கருத்து நியாயமாகத்தான் இருக்கிறது. ஆனால் இன்னொருமுறை கான்கிரஸ் என்பதைதான் நினைத்துப்பார்க்க முடியவில்லை.

அப்புறம் ஒரு சின்ன திருத்தம் கே.ஆர்.பி.தான் பீ அல்ல.. (அதில் ஏதும் உள்குத்து இல்லாமல் இருந்தால்)

அஞ்சா சிங்கம் said...

கே.ஆர்.பி.செந்தில் said...
அப்புறம் ஒரு சின்ன திருத்தம் கே.ஆர்.பி.தான் பீ அல்ல.. (அதில் ஏதும் உள்குத்து இல்லாமல் இருந்தால்)......
/////////////////

அண்ணா மன்னிச்சு .............எந்த உள்குத்தும் இல்லை வருகைக்கு நன்றி .............

வைகை said...

இதில் பல கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு சிங்கம்.. நான் இதை பஸ்ஸில் போடறேன் உங்கள் அனுமதியுடன் :))

kobiraj said...

நல்லா சொல்லுறீங்க. உங்கள் அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ச்சி .நம்ம பக்கமும் வரலாமே
http://kobirajkobi.blogspot.com/2011/09/blog-post_20.html?spref=fb
சின்ன தல உங்களுக்கு ஒஸ்தி தேவைதானா ?

அஞ்சா சிங்கம் said...

வைகை said...

இதில் பல கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு சிங்கம்.. நான் இதை பஸ்ஸில் போடறேன் உங்கள் அனுமதியுடன் :))
/////////////////////////////////////

இதற்க்கு எதற்கு பாஸ் அனுமதி தாராளமாக போடலாம் ............

அஞ்சா சிங்கம் said...

kobiraj said...

நல்லா சொல்லுறீங்க. உங்கள் அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ச்சி .நம்ம பக்கமும் வரலாமே
http://kobirajkobi.blogspot.com/2011/09/blog-post_20.html?spref=fb
சின்ன தல உங்களுக்கு ஒஸ்தி தேவைதானா ?.........///////////
வந்துட்டா போச்சி .................

arasan said...

சில விடயங்களில் நிறையவே யோசிக்க வைக்கின்றது ,,
சிந்திக்க தெரிந்த குணம் மனிதர்களாகிய நமக்கு மட்டும்தான் .. உணர வேண்டும்

அஞ்சா சிங்கம் said...

அரசன் said...

சில விடயங்களில் நிறையவே யோசிக்க வைக்கின்றது ,,
சிந்திக்க தெரிந்த குணம் மனிதர்களாகிய நமக்கு மட்டும்தான் .. உணர வேண்டும்.........////////
ராஜீவ் காந்தி மரணத்தில் இருந்து தொடர்ந்து அரசியலை கூர்ந்து கவனித்தால் பல மர்ம முடிச்சிக்கள் இருப்பது புரியும் .
அரசியல் செல்லும் திசையில் இந்த முடிச்சிக்கள் அவிழும் இன்னும் நிறைய இருக்கு நண்பா.............

தமிழ்வாசி பிரகாஷ் said...

கட்டுரை ஓகே....

அஞ்சா சிங்கம் said...

தமிழ்வாசி - Prakash said...

கட்டுரை ஓகே....////////////

நன்றி நண்பரே.....................

இம்சைஅரசன் பாபு.. said...

சிங்கம் சபாஷ் ..வித்தியாசமான பார்வை ...

அஞ்சா சிங்கம் said...

இம்சைஅரசன் பாபு.. said...

சிங்கம் சபாஷ் ..வித்தியாசமான பார்வை .../////////////////////////


நன்றி இம்சை ..............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரியான சிந்தனை. இது உண்மையாகத்தான் இருக்கும் தோன்றுகிறது.

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரியான சிந்தனை. இது உண்மையாகத்தான் இருக்கும் தோன்றுகிறது..........///////////

வாங்க தலைவரே ...நான் அப்படிதான் நம்புகிறேன் ..........

ADMIN said...

ஓணான், கண்ணி, சுருக்கு, மோடி, அமெரிக்கா, மன்மோகன், ராகுல், இப்படி எல்லாத்தையும் வச்சு ஒரு நல்ல வலை பின்னி இருக்கீங்க அப்பூ..! அது நல்லா வசமா மாட்டிக்கிட்டோம்..சக பதிவர்களும். வலையை நல்லாவே வீசியிருக்கீங்க!! பதிவைத்தான் சொன்னேன்..! வித்தியாசமான சிந்தனை, வித்தியாசமான பதிவு..! பகிர்ந்தமைக்கு நன்றி.. வாழ்த்துக்கள் சகோ.

அஞ்சா சிங்கம் said...

தங்கம்பழனி said...

ஓணான், கண்ணி, சுருக்கு, மோடி, அமெரிக்கா, மன்மோகன், ராகுல், இப்படி எல்லாத்தையும் வச்சு ஒரு நல்ல வலை பின்னி இருக்கீங்க அப்பூ..! அது நல்லா வசமா மாட்டிக்கிட்டோம்..சக பதிவர்களும். வலையை நல்லாவே வீசியிருக்கீங்க!! பதிவைத்தான் சொன்னேன்..! வித்தியாசமான சிந்தனை, வித்தியாசமான பதிவு..! பகிர்ந்தமைக்கு நன்றி.. வாழ்த்துக்கள் சகோ.........../////////
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே ....................

Unknown said...

யோவ் மாப்ள...நீ எப்படியா ஒரு தெருவுல தேஞ்ச பக்தன ச்சே தேச பக்தன தாக்கி இருக்க கொய்யால...அவரு பாவம் இருக்குற சக்திய எல்லாம் ஒண்ணா செத்து ச்சே சேத்து இந்தியாவ காப்பாத்த காவடி எடுக்குறாரு அது புடிக்கலையா உமக்கு ஹிஹி!

bandhu said...

இது உண்மையாக இருக்க வாய்ப்புகள் அதிகம். இதன் மூலம் இந்து-முஸ்லிம் பிரச்சனையில் இந்திய தவிக்கும் என்பது வெளி நாடுகளுக்கு ஒரு அடிஷனல் பெனிபிட்!

Anonymous said...

//நீண்ட கால எரிச்சல் : காங்கிரஸ்காரர்கள், அமெரிக்கா............./////

இதில் நான் கொஞ்சம் மாறுபடுகிறேன் ..//

அப்ப நீங்க பி.ஜே.பி. இந்தியனா?

Anonymous said...

//சரி இப்போ விசயத்துக்கு வரேன் //

அப்ப இதுக்கு மேலே இருந்ததை படிச்ச நாங்க எல்லாம் டொட்டடொய்யா?

Anonymous said...

//கன்னியை ஓணானின் கழுத்திற்கு பக்கத்தில் வைத்து காத்திருப்போம்.//

ஓணானை பிடிக்க கன்னியா? என்னய்யா இது ஆணாதிக்க கொடும!

Anonymous said...

சரியான அலசல்

Philosophy Prabhakaran said...

சிங்கம் களத்துல இறங்கிடுச்சு டோய்...

அஞ்சா சிங்கம் said...

விக்கியுலகம் said... யோவ் மாப்ள...நீ எப்படியா ஒரு தெருவுல தேஞ்ச பக்தன ச்சே தேச பக்தன தாக்கி இருக்க கொய்யால...அவரு பாவம் இருக்குற சக்திய எல்லாம் ஒண்ணா செத்து ச்சே சேத்து இந்தியாவ காப்பாத்த காவடி எடுக்குறாரு அது புடிக்கலையா உமக்கு ஹிஹி..................///////////////////

மாப்பு புல் அரிக்குது என்ன ஒரு தேச பக்தி ...........

அஞ்சா சிங்கம் said...

! சிவகுமார் ! said...
அப்ப நீங்க பி.ஜே.பி. இந்தியனா? //////////////////////

நான் தமிழன் .............

அப்ப இதுக்கு மேலே இருந்ததை படிச்ச நாங்க எல்லாம் டொட்டடொய்யா? .////////////////

யோவ் பாட்டி வடை சுட்ட கதையாக இருந்தாலும் ஒரு ஊருல ஏன்றுதான் ஆரம்பிக்கணும் புரிஞ்சுதா.......

ஓணானை பிடிக்க கன்னியா? என்னய்யா இது ஆணாதிக்க கொடும! .///////////////////////////

ஹி ஹி டங்கு ஸ்லிப் ஆய்டுச்சி .........................

அஞ்சா சிங்கம் said...

ஷீ-நிசி said...

சரியான அலசல்.............../////////////////////

நன்றி ...........

அஞ்சா சிங்கம் said...

Philosophy Prabhakaran said...

சிங்கம் களத்துல இறங்கிடுச்சு டோய்...////////////

இனிமேல் அதிரடிதான் ................

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ அஞ்சா சிங்கம்...
ஆரம்பம் முதல் இறுதி வரை உங்க கர்ஜனை அருமை..! கை குடுங்க சகோ..!
ஓணான்-கன்னி உவமையும் சூப்பர்..!

ஒரு சின்ன திருத்தம்...
இந்த ஓணான்...
ஏற்கனவே ஒரு ஓணான் கன்னியிலே செத்து தொங்கிட்டு இருக்கும்போதே... அதை புடிச்சு இழுத்து போட்டுட்டு தானே போய் தலைய கன்னிக்குள்ளே விட்டுக்குதே..!
குடுத்த காசுக்கு மேலே ஓவரா துள்ளுதே..!

அஞ்சா சிங்கம் said...

~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said...

ஸலாம் சகோ அஞ்சா சிங்கம்...
ஆரம்பம் முதல் இறுதி வரை உங்க கர்ஜனை அருமை..! கை குடுங்க சகோ..!
ஓணான்-கன்னி உவமையும் சூப்பர்..!

ஒரு சின்ன திருத்தம்...
இந்த ஓணான்...
ஏற்கனவே ஒரு ஓணான் கன்னியிலே செத்து தொங்கிட்டு இருக்கும்போதே... அதை புடிச்சு இழுத்து போட்டுட்டு தானே போய் தலைய கன்னிக்குள்ளே விட்டுக்குதே..!
குடுத்த காசுக்கு மேலே ஓவரா துள்ளுதே..!.......
////////////////////////

நன்றி சகோ .............

கோகுல் said...

களமிறங்கியவுடன் அதிரடியா?
கலக்குங்க!கலக்(கு)"கிங்"க!

அஞ்சா சிங்கம் said...

கோகுல் said...

களமிறங்கியவுடன் அதிரடியா?
கலக்குங்க!கலக்(கு)"கிங்"க!//
//////////////////////

நன்றி கோகுல்

thiyagarajan.s said...

வேடிக்கையான செய்தி... அதக்கூட ஆஷிக்கால பொருத்துக்கமுடியல...ஏன்னா மோடி வந்திடக்கூடாது...அப்புறம் எப்படி பொழப்பு நடத்துறது....???/

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ thiyagarajan...
என்ன சகோ பண்றது..? உயிர்ப்பிரச்சினை..! உயிருக்கு அப்புறம்தானே பொழப்பு..?

உணவு உலகம் said...

ஓணான் கதைக்கும், உங்கள் பகிர்விற்கும் சம்பந்தமில்லை என்று தெளிவாய்த் தெரிகிறது.

அஞ்சா சிங்கம் said...

thiyagarajan. said...

வேடிக்கையான செய்தி... அதக்கூட ஆஷிக்கால பொருத்துக்கமுடியல...ஏன்னா மோடி வந்திடக்கூடாது...அப்புறம் எப்படி பொழப்பு நடத்துறது....???///////
இதில் என்ன வேடிக்கை இருக்குன்னு புரியவில்லை ................

அஞ்சா சிங்கம் said...

FOOD said...

ஓணான் கதைக்கும், உங்கள் பகிர்விற்கும் சம்பந்தமில்லை என்று தெளிவாய்த் தெரிகிறது................///////////

ஹையா................ஆபிசர் வருகைக்கு நன்றி .................

சீனுவாசன்.கு said...

அட இன்னா பாஸ் நீங்க?
நம்ம சைட்டுக்கு வாங்க!
கருத்து சொல்லுங்க!!
நல்லா பழகுவோம்!!!

சிராஜ் said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க நண்பரே.... நல்ல தெளிவான அலசல்... நீங்க பேசாம விஞ்ஞானம் பத்தி ஆராய்ச்சி பண்றத விட்டுட்டு இது மாதிரி நல்ல பதிவுகல எழுதலாம். உங்களால முடியும். பாவம் விஞ்ஞானம், அத மட்டும் விட்ருங்க, பொழச்சு போகட்டும்.

சிராஜ்

Popular Posts