Monday, March 21, 2011

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ........

v


இந்த மூன்று மாதத்தில் ஜனங்கள் பொழுது போக்க எத்தனை விதமான பொழுதுபோக்குகள் இருக்கிறது பாருங்கள். உலக கோப்பை கிரிக்கட்டு அடுத்து ஐ.பீ.எல் கிரிக்கெட்டு அப்புறம் தேர்தல் கூத்துக்கள் என்று ஜனங்களுக்கு ஒரே கிளுகிளுப்புதான் .

தேர்தல் தேதி அறிவிக்க பட்டவுடன் நடந்த கூத்துக்கள் எல்லாருக்கும் தெரியும்.என் சிறுமூளைக்கு மட்டும் சின்ன டவுட்டு இருக்கு பெருமூளை  எப்போதும் வேலை செய்வதில்லை.யாராவது விவரமானவங்க சொன்னா புரிஞ்சிபேன் .

இந்த தேர்தலில் தி.மு.க. ஒரு அணியாகவும் ஆ.தி.மு.க ஒரு அணியாகவும் நிற்கிறது. ஆரம்பத்தில்  தி.மு.க. மேல் இருந்த மக்கள் கோபம் ஆ.தி.மு.க அணியை சுலபமாக வெற்றி பெற வைக்கும் என்று தான் நினைத்திருந்தேன் . ஆனால் கடந்த நாட்களில் அம்மா ஆடிய கூத்து பார்த்து என் கணக்கு தவறு என்று புரிந்துகொண்டேன் .

போதாத குறைக்கு கலைஞ்சரின் தேர்தல் அறிக்கை வேறு .நாம் என்னதான் கரடியாக கத்தினாலும் மிக்சி கிரைண்டர்க்கு சோரம் போகும் மக்கள் தான் எண்ணிக்கையில் பெரும்பாலும் இருக்கிறார்கள்.

இந்த தேர்தலில் நாம் காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் .........ம்................நியாயமான கோபம் .
சரி நாம் தோற்கடிக்க முயற்சிப்போம் தமிழ் இனத்தை அளிக்கும் வேலையே நயவஞ்சகமாக செய்யும் கட்சி தமிழகத்தில் இருக்க கூடாது நியாயமான கோபம்தான் .

அதை தோற்கடிக்க வேண்டும் என்றால் எதிரணியை ஜெயிக்கவைக்க வேண்டும் எதிர் அணியில் யார் இருக்கிறார்கள் ?
போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சொன்ன தங்கதாரகை பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று குரல்குடுத்த வீராங்கனை .சரி அவரை பற்றிதான் தெரியுமே கேப்டன் பிரபாகரன் இருக்கிறார் ஆனால் இவர் கடைசி வரை காங்கிரஸ் கூட்டணிக்கு காத்திருந்து வேறு வக்கு இல்லாமல் அம்மா காலில் போயி விழுந்து விட்டார்.

வை.கோ என்று ஒரு மானஸ்தன் இருந்தார்  ( இந்த ஊரு இன்னுமா இவரை நம்புது )ஊரை விடுங்க கட்சிக்காரன் நிலைமை என்ன?
தமிழர்களுக்காக தம்மு கட்டி குரல் குடுப்பவர்கள் இவரும் திருமாவும் திருமா இப்போது காங்கிரசுடன் கும்மியடிக்கிறார் .
வை.கோ போட்டிக்கு நான் வரலை என்று சொல்லி விட்டார் .
நமக்கு ஒரே வாய்ப்பு தங்க தாரகைக்கு ஒட்டு போடுவதுதான் .

எனக்கு என்ன சந்தேகம்னா தேர்தலுக்கு பிறகு அம்மா ஆட்சி அமைந்துவிட்டால். காங்கிரஸ் மஞ்சள் துண்டை உதறிவிடும் அம்மாவும் காங்கிரசும் சேர்ந்து விடுவார்கள் . இதில் சந்தேகம் இல்லை இது நடக்க போகும் உண்மை .
காங்கிரஸ் அறுபத்தி மூன்று இடத்திலும் தோற்றாலும் இது நடக்கும் மத்தியில் தி.மு.க.கழட்டிவிடபட்டு அம்மா அதிகாரத்தை சுவைப்பார் ஐந்து ஆண்டுகள் பிரெச்சனை இல்லாமல் இங்கு ஆட்சி செய்ய காங்கிரஸ்  தயவு வேண்டும்.

காங்கிரஸ் காரனுக்கு மானம் ரோஷம் சூடு சொரணை எதுவும் இருக்க போவதில்லை அதனால் அவர்கள் எதற்கும் கவலை பட போவது இல்லை .இப்போது காங்கிரசுக்கு எதிராக நாம் போடும் வாக்குகளின் எதிர்காலம் என்ன?
அது இலையாக மாறி மத்தியில் செல்வாக்காக அடுத்த ஐந்து ஆண்டுகள் இருக்கும் என்பதுதான் என் நம்பிக்கை .



காங்கிரசுக்கு எதிராக நான் போடும் வாக்குகளின் எதிர்காலம் என்ன?
49 ஒ போடலாமா ?
விவரமானவங்க சொல்லுங்களேன் புரிஞ்சிகுறேன் ..............


34 கருத்து சொல்றாங்க:

Unknown said...

மாப்ள நீ ரொம்ப யோசிக்கற ஸ்ஸ்ஸ் நானும் கொஞ்சம் யோசிச்சி சொல்றேன் அதுவரைக்கும் இப்படியே இருக்குமா இல்ல அதுக்குள்ள எந்த பயபுள்ளயாவது ஓடிப்போய் கால்ல விழுதுருமா தெரியல.........!

அஞ்சா சிங்கம் said...

விக்கி உலகம் said...

மாப்ள நீ ரொம்ப யோசிக்கற ஸ்ஸ்ஸ் நானும் கொஞ்சம் யோசிச்சி சொல்றேன் அதுவரைக்கும் இப்படியே இருக்குமா இல்ல அதுக்குள்ள எந்த பயபுள்ளயாவது ஓடிப்போய் கால்ல விழுதுருமா தெரியல.........!
/////////////////////////////
ஒரே குஷ்டமப்பா......................ச்சே கஷ்டமப்பா ..............

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மானங்கெட்ட அரசியல்..
அதை புரிஞ்சி என்னவாகபோகுது...

காங்கிரஸ் மண்ணைக்கவ்வ போவது உறுதி..


காங்கிரசுடன் அதிமுக-வின் நிலைபாடு எப்படி என்று பின்னர் தான் தெரியும்..

சக்தி கல்வி மையம் said...

காங்கிரஸ் மண்ணைக்கவ்வ போவது உறுதி..

சக்தி கல்வி மையம் said...

எல்லாம் அரசியல் தலைவா...

சி.பி.செந்தில்குமார் said...

மொத்தத்துல ஆளும் கட்சி அவுட் ஆனா சரி

ரஹீம் கஸ்ஸாலி said...

vanthen

தமிழ் 007 said...

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

இன்னும் என்ன என்னமோ கூத்தெல்லாம் இருக்கு. அதுக்குள்ள யாருக்கு ஓட்டுப்போடுறதுன்னு எப்படி யோசிக்கிறது.பொறுத்திருந்து பார்ப்போம்.

arasan said...

இதுக்கு ஒரு முடிவ சொல்லுங்கப்பு ...

நானும் இந்த குழப்பத்தில் தான் இருக்கேன் ...

Unknown said...

ம்ம்ம்ம்.... என்ன பாஸ் மொத்தத்தில எல்லாருக்குமே குழப்பம்தானா? :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன ஒரு சிந்தனை.....? ஆனா இதுதான் மாப்பு நடக்கப்போகுது........

உளவாளி said...

49 ஒ போடலாமா ?
////////

பூஸ் ச்சி பாஸ்.. நீங்க பூத்துக்கு போகறதுக்கு முன்னால வேற எவனது போட்டுடுவான்.........

Unknown said...

நமது பொது எதிரி காங்கிரஸ் அதனை வேரோடு சாய்க்க எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடலாம்..

Anonymous said...

அ.தி.மு.கவுக்கு ஓட்டு போடுவோம்...இல்லைனா பி.ஜே.பிக்கு (இருக்கா)ஓட்டு போடுவோம்

Sivakumar said...

பூத்துல போயி நாப்பத்தி ஒன்பது ஓ படிவம் கேட்டா நம்மள எல்லா கட்சி ஆளுங்களும் ஒரு லுக்கு விடுவாங்க..அதை மீறி ஓட்டு போட்ரவன்தான் பிஸ்தா.

ராஜேஷ், திருச்சி said...

இதற்கு நல்ல வழி,

63ல் காங்கிரஸ் தோற்கட்டும். 100௦௦ - 115 தி மு க ஜெயிக்கட்டும்.. காங்கிரசை அழித்தது போலும் ஆச்சு.. அம்மா என்ன பண்ணும கவலை படவும் வேண்டாம்..

செல்வா said...

அப்படின்னா யாருக்குத்தான் ஓட்டுப் போடுறது ? ஓ , இதே சந்தேகம்தான் உங்களுக்குமா ? சரி விடுங்க .. யாராச்சும் சொன்னா எனக்கு ஒரு மெயில் பண்ணுங்க ..

அஞ்சா சிங்கம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

மானங்கெட்ட அரசியல்..
அதை புரிஞ்சி என்னவாகபோகுது...

காங்கிரஸ் மண்ணைக்கவ்வ போவது உறுதி..


காங்கிரசுடன் அதிமுக-வின் நிலைபாடு எப்படி என்று பின்னர் தான் தெரியும்..//////

பின்னர் எல்லாம் இல்ல இப்பவே தெரியும் கண்டிப்பா கூட்டணி மாறும் அதற்க்கு இடையுறு என்ர்ட்ருதான் வைக்கோ இப்பவே கழட்டி விட பட்டிருக்கிறார்

அஞ்சா சிங்கம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

காங்கிரஸ் மண்ணைக்கவ்வ போவது உறுதி......
///////////
ரொம்ப சந்தோஷம் .........

அஞ்சா சிங்கம் said...

சி.பி.செந்தில்குமார் said...

மொத்தத்துல ஆளும் கட்சி அவுட் ஆனா சரி......///

எல்லாரும் இதை தான் எதிர்பார்க்கிறார்கள் பல துறைகள் தப்பி பிழைக்கும் ......

அஞ்சா சிங்கம் said...

தமிழ் 007 said...

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

இன்னும் என்ன என்னமோ கூத்தெல்லாம் இருக்கு. அதுக்குள்ள யாருக்கு ஓட்டுப்போடுறதுன்னு எப்படி யோசிக்கிறது.பொறுத்திருந்து பார்ப்போம்........///////
///////////
கவுண்டமணி உண்மையிலேயே தீர்க்கதரசி ஒரு வார்த்தை சொன்னாலும் எல்லா காலத்திற்கும் பொருந்துற மாதிரி சொல்லிட்டாரு .......

அஞ்சா சிங்கம் said...

அரசன் said...

இதுக்கு ஒரு முடிவ சொல்லுங்கப்பு ...

நானும் இந்த குழப்பத்தில் தான் இருக்கேன் ...//////

வாங்க நாம ரெண்டுபேரும் சேர்ந்து ஊரை குழப்புவோம்

அஞ்சா சிங்கம் said...

ஜீ... said...

ம்ம்ம்ம்.... என்ன பாஸ் மொத்தத்தில எல்லாருக்குமே குழப்பம்தானா? :-)........./////////
///////////////////
குல்லா ..............

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன ஒரு சிந்தனை.....? ஆனா இதுதான் மாப்பு நடக்கப்போகுது......../////////////
///////////
தெரிஞ்சே குழிக்குள்ள விழுறதுதான் நம்மளமாதிரி வீரனுக்கு அழகு ........

அஞ்சா சிங்கம் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

நமது பொது எதிரி காங்கிரஸ் அதனை வேரோடு சாய்க்க எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடலாம்........
//////////////

வேற வழி? அதைதான் செய்யணும் .........

அஞ்சா சிங்கம் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அ.தி.மு.கவுக்கு ஓட்டு போடுவோம்...இல்லைனா பி.ஜே.பிக்கு (இருக்கா)ஓட்டு போடுவோம்..........////
//////////
செல்லாத ஒட்டு போடுங்கன்னு நாசூக்கா சொல்றீங்க பட் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு ......

அஞ்சா சிங்கம் said...

! சிவகுமார் ! said...

பூத்துல போயி நாப்பத்தி ஒன்பது ஓ படிவம் கேட்டா நம்மள எல்லா கட்சி ஆளுங்களும் ஒரு லுக்கு விடுவாங்க..அதை மீறி ஓட்டு போட்ரவன்தான் பிஸ்தா.........../////////////
////////////////////
முயற்சி பண்ணி பார்க்கலாமா?

அஞ்சா சிங்கம் said...

ராஜேஷ், திருச்சி said...

இதற்கு நல்ல வழி,

63ல் காங்கிரஸ் தோற்கட்டும். 100௦௦ - 115 தி மு க ஜெயிக்கட்டும்.. காங்கிரசை அழித்தது போலும் ஆச்சு.. அம்மா என்ன பண்ணும கவலை படவும் வேண்டாம்......../////////////
////
இன்னும் அஞ்சு வருசமா ..................ஆண்டவா..............

அஞ்சா சிங்கம் said...

கோமாளி செல்வா said... அப்படின்னா யாருக்குத்தான் ஓட்டுப் போடுறது ? ஓ , இதே சந்தேகம்தான் உங்களுக்குமா ? சரி விடுங்க .. யாராச்சும் சொன்னா எனக்கு ஒரு மெயில் பண்ணுங்க....../////

எல்லாரும் வந்து ரொம்ப தெளிவா குழப்புறாங்க

டானியல் செல்லையா said...

அன்புடைய பதிவருக்கு வணக்கம்,

தங்களின் வலைப்பூவின் எழுத்து தரத்தையும், கருத்துக்களையும் மிகுந்த ஆய்வுக்குப் பின் சிறந்த தளம் என முடிவு செய்து எமது வலைச்சரம் வலைப்பதிவு தானியங்கி திரட்டியில் இணைத்துள்ளோம். இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், தயையுடன் எமக்கு தெரிவிக்கவும். எமது வலைச்சரம் திரட்டியில் தங்களின் வலைப்பதிவு இடம்பெறுவதை விரும்பினால் தயையுடன் எமது இணையப் பட்டையை தங்களின் தளத்தில் இணைக்கும் படி கோரிக்கொள்கிறோம். நன்றிகள் ! மேன் மேலும் தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் ...

அன்புடன்,

வலைச்சரம் நிர்வாகம்.

ஜெயம்கொண்டான் said...

நல்லா கிளப்புரைங்க பீதிய ....எது எப்புடி போனாலும் மக்கள் எதிர்பார்த்தபடி நேர்மையா ஆட்சி செய்ய ஒரு பயலும் இல்ல .......நாமதாங்க இப்படி வெட்டியா சாகனும் ....நமக்கும் ஒரு சந்தேகம் தீத்துட்டு போங்கோ ...
http://buildappu.blogspot.com/2011/03/3.html

டக்கால்டி said...

49 ஒ போடலாமா ?
விவரமானவங்க சொல்லுங்களேன் புரிஞ்சிகுறேன் ..............//

இதுக்கு நீங்க ஒட்டு போடாமலேயே இருக்கலாம்...

அஞ்சா சிங்கம் said...

viji said...

நல்லா கிளப்புரைங்க பீதிய ....எது எப்புடி போனாலும் மக்கள் எதிர்பார்த்தபடி நேர்மையா ஆட்சி செய்ய ஒரு பயலும் இல்ல .......நாமதாங்க இப்படி வெட்டியா சாகனும் ....நமக்கும் ஒரு சந்தேகம் தீத்துட்டு போங்கோ ...
http://buildappu.blogspot.com/2011/03/3.html.................
வந்து பார்த்தேன் நண்பா அருமை ........

அஞ்சா சிங்கம் said...

டக்கால்டி said...

49 ஒ போடலாமா ?
விவரமானவங்க சொல்லுங்களேன் புரிஞ்சிகுறேன் ..............//

இதுக்கு நீங்க ஒட்டு போடாமலேயே இருக்கலாம்...
////////////////
ரொம்ப சரிதான் தலை

Popular Posts