Tuesday, March 1, 2011

பன்னிகுட்டி -அறிவியல்

v


கடுகு சைஸ் பொருளை வச்சு இந்த உலகத்தை அழிக்க முடியுமா?
இப்படி ஒரு பதிவு ரோஜா பூந்தோட்டம் பாரத் பாரதி தளத்தில் போட்டிருந்தாங்க ரொம்ப நல்லா இருந்துச்சி .

எனக்கு ஆச்சரியம் என்னனா அந்த பதிவுக்கு நம்ம பன்னிகுட்டி அண்ணனின் பின்னூட்டம் பார்க்கணுமே சும்மா பின்னி பெடல் எடுத்திருந்தாரு உண்மையில் நான் ஆச்சரிய பட்டேன் (அதாவது கழுத மேய்க்கிற பையனுக்கு இம்ம்புட்டு அறிவான்னு ?) சும்மா தமாசுக்கு தல கோவிச்சுக்காதீங்க .............

அதே மேட்டர இன்னும் கொஞ்ச விரிவா பார்க்கலாம்ன்னு தான் இந்த பதிவு.
அந்த பதிவின் பின்னூட்டத்தில்  பன்னிகுட்டி என்ற நகைச்சுவை மனிதருக்கு பின்னால் இப்படி ஒரு விஷய ஞானம் உள்ள ஒரு மனிதர் இருக்கிறார் என்று  தெரிஞ்சுகிட்டேன். அதனால சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் அங்கு எங்கள் அண்ணன் தானை தலைவன், தன்மான தமிழன், ஏழைகளின் ஏந்தல்,தாய்குலத்தின் கூந்தல் , இப்படி ஏகப்பட்ட பட்டங்களுக்கு சொந்தக்காரரான பன்னிகுட்டி அவர்களின் ஒவ்வொரு கமன்ட்ஐயும் எடுத்து அதற்க்கு ஒரு சிறு விளக்கம் குடுத்து இங்கு போட போகிறேன்.........  
யாரும் என் மேல பொதுநல வழக்கு போட்டுறாதீங்க ...........................
இப்போது அவரின் அறிவுபூர்வமான பின்னூட்டத்தை பாப்போம் ..............

பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஐன்ஸ்டைனுடைய சார்பியல் தத்துவங்கள் நிருவப்பட முடியாததே அவருக்கு அதற்காக நோபல் பரிசு கொடுக்கப்படாததற்குக் காரணம், நோபல் பரிசு வழங்குவதற்கு, முழு ஆதாரத்துடன் கூடிய கண்டுபிடிப்பு அவசியம்../////////

உண்மை தான் ஐன்ஸ்டீன் கொள்கைகும் நியுட்டன் கொள்கைக்கும் அடிப்படையில் ஒரு முரண்பாடு இருந்தது .
கோள்கள் மையத்தை சுற்றி வருவது புவிஈர்ப்பு விசைதான் காரணம் என்பது நியுட்டன் வாதம்.
 அப்படி பார்க்க போனால் தற்செயலாக ஒரு கோள் இன்னொரு கோள் மீது  மோதினால் எல்லா கோள்களும் ஒன்றோடு ஒன்று மோதிகொள்ளும். காரணம் பொருட்களின் நிறையை பொருத்து அதன் ஈர்ப்பு விசை அமையும் .நிறை இருமடங்கானால் ஈர்ப்பும் இருமடங்காகும் .
இதற்க்கு ஐன்ஸ்டீன் தீர்வு :-  கோள்களின்  சுற்றுப்பாதை ஈர்ப்பு விசையால் அமைவதில்லை மாறாக இந்த பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த துகள்களின் அபரிதமான ஏடையின் காரணமாக விண்வெளியே வளைத்து சுருட்ட பட்டிருக்கிறது இங்கு எல்லாமே வளைவான பாதையில்தான் செல்ல முடியும் நேர்கோடு என்பது கிடையாது .
இப்படி கற்பனை செய்து பாருங்கள் நீங்கள் இப்போது இருக்கும் இடத்தில இருந்து ஒரே நேர்க்கோட்டில் பயணத்தை  தொடங்குகிறீர்கள் நடுவில் எந்த தடையும் உங்களை தடுக்க முடியாது என்று வைத்துகொள்வோம் .அப்படி என்றால் நீங்கள் புறப்பட்ட இடத்திற்கே தான் வந்து சேர்வீர்கள் உங்களை பொறுத்தவரை நீங்கள் பயணித்தது நேர் கொடு ஆனால் வெளியே இருந்து பார்த்தால் நீங்கள் பயணித்தது சுற்று பாதை இது தான் பிரச்சனை. ரோடு மோசம்பா அதான் இப்படி. கோள்கள் நேர்கொட்டில்தான் பயணிக்கிறது ஆனால் வெளிமண்டலம் வளைத்து சுருட்ட பட்டிருப்பதால் நம் கணக்கீடுகள் அனைத்தும் அவை வளைந்து பயணிப்பதாக  காட்டும்.
நியுட்டன் விதிப்படி மற்ற கோள்களின் சுற்றுப்பாதையை தெளிவாக கணக்கிட முடிந்தாலும் .புதன் கோளின் சுற்றுப்பாதையை  துல்லியமான கணக்கீடு செய்யமுடியவில்லை மற்ற கோள்களின் சுற்றுபாதைக்கும் புதனின் சுற்றுப்பாதைக்கும் சுழற்சி வேறுபாடு வித்யாசம் இருந்தது. இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்ததால் உடனடியாக ஐன்ஸ்டீனின் இந்த கொள்கையை உறுதிபடுத்த முடியவில்லை அதன்பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு சூரியகிரகணத்தின் போது புதன் கிரகத்தின் சுற்றுப்பாதையை துல்லியமாக அளந்து ஐன்ஸ்டீன் கொள்கை உறுதிபடுத்தினார்கள் .


அடுத்த பதிவிற்கான கமன்ட் :-பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// நாகராஜசோழன் MA said...
மேலும் ஒரு தகவல்: இப்போ இருக்கிற உபகரணங்களைப் பயன்படுத்தி ஒளியின் திசைவேகத்திற்கு இணையாக எந்த பொருளையும் செலுத்த முடியாது. (இது சரிதானே?)/////

இப்போன்னு இல்ல, எப்பவுமே முடியாதுன்னுதான் நினைக்கிறேன். ஏன்னா ஒரு பொருள் ஒளியின் திசைவேகத்தை அடையனும்னா அதன் நிறை (mass) ஜீரோ ஆகிடும் அதாவது அது பொருளாக இருக்கமுடியாது, அலைவடிவமாக (wave) மாறிவிடும், ஒளித்துகளான போட்டோனுக்கு (photon) நிறை கிடையாது....

இதை இன்னும் கொஞ்சம் விரிவாக அடுத்த பதிவில் பார்க்கலாம் .....................
பன்னிகுட்டி ராமசாமிக்கு ஸ்பெசலாக ஒரு நன்றி................. 
    

43 கருத்து சொல்றாங்க:

Unknown said...

சந்தோசம் மகிழ்ச்சி ஹி ஹி!

அஞ்சா சிங்கம் said...

விக்கி உலகம் said...

சந்தோசம் மகிழ்ச்சி ஹி ஹி!.............../////////////

வாங்க நண்பரே ...........

ரஹீம் கஸ்ஸாலி said...

பன்னிக்குட்டி ஒரு பல்துறை வித்தகர்ன்னு அவரோட பின்னூட்டங்கள் சொல்லுது.

எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு
கலைஞரின் பேச்சும் எடக்கு மடக்கான எனது கேள்விகளும்

அஞ்சா சிங்கம் said...

ரஹீம் கஸாலி said... பன்னிக்குட்டி ஒரு பல்துறை வித்தகர்ன்னு அவரோட பின்னூட்டங்கள் சொல்லுது.

///////////////////////////////////////////////////

உண்மைதான்

Chitra said...

அப்படி பார்க்க போனால் தற்செயலாக ஒரு கொள் இன்னொரு கொள் மீது மோதினால் எல்லா கொள்களும் ஒன்றோடு ஒன்று மோதிகொள்ளும்.

.....கோள்

Chitra said...

I am very impressed! :-)

அஞ்சா சிங்கம் said...

Chitra said...

I am very impressed! :-)////////////////////

நன்றி அக்கா ....................

sathishsangkavi.blogspot.com said...

கலக்கி அடிக்கறீங்க...

சக்தி கல்வி மையம் said...

pannikutti ஓரு ஆளினால் அழகுராஜா...

அஞ்சா சிங்கம் said...

சங்கவி said...

கலக்கி அடிக்கறீங்க......................////////////////

வாழ்த்துக்கு நன்றி .........

அஞ்சா சிங்கம் said...

வேடந்தாங்கல் - கருன் said...

pannikutti ஓரு ஆளினால் அழகுராஜா................///////////////

அவரு ஒரு பெட்ரமாஸ் விஞ்சானி .............../////////////

Speed Master said...

பாரேன் பன்னிக்குட்டிக்குள்ள இப்படி ஒரு பகுத்தறிவாளியா

அஞ்சா சிங்கம் said...

Speed Master said...

பாரேன் பன்னிக்குட்டிக்குள்ள இப்படி ஒரு பகுத்தறிவாளியா...............................////////////////////
எந்த புத்துல எந்த அனகோண்டா இருக்குன்னு யாருக்கு தெரியுது .............

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பன்னி படிச்ச பயலா?..

இது தெரியாம.. சே..

போங்க பாஸ்.. இப்ப பன்னிய பார்த்தா பயமாயிருக்கு...

அஞ்சா சிங்கம் said...

பட்டாபட்டி.... said...

பன்னி படிச்ச பயலா?..

இது தெரியாம.. சே..

போங்க பாஸ்.. இப்ப பன்னிய பார்த்தா பயமாயிருக்கு.................../////////////////

இது தெரியாம நானும் ரொம்ப தப்பா பீல் பண்ணீட்டேன் .............

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிகுட்டியின் பேக் ரவுண்டு ஃபிரன்ட் ரவுண்டு தெரியாம இருக்கியோ தம்பி ஹே ஹே ஹே ஹே...

MANO நாஞ்சில் மனோ said...

நல்ல இருக்கு தொடந்து போடு....

அஞ்சா சிங்கம் said...

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிகுட்டியின் பேக் ரவுண்டு ஃபிரன்ட் ரவுண்டு தெரியாம இருக்கியோ தம்பி ஹே ஹே ஹே ஹே.........../////////////////////

அதானே வெரி டேஞ்சரஸ் பெல்லோ ...........

அஞ்சா சிங்கம் said...

MANO நாஞ்சில் மனோ said...

நல்ல இருக்கு தொடந்து போடு.............//////////

இதுலே ஏதும் உள்குத்து இல்லையே .......

VELU.G said...

interestingஆ இருக்குங்க

வைகை said...

பன்னியின் அறிவுக்கு இதெல்லாம் சாதாரணமப்பா.....

(இந்த வெளம்பரம் தேவையா?).

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடங்கொன்னியா என்றா இது......? இதுக்குத்தான்யா நான் படிச்ச பயலுக சகவாசம் வெச்சிக்கிறதே இல்ல....

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடங்கொன்னியா என்றா இது......? இதுக்குத்தான்யா நான் படிச்ச பயலுக சகவாசம் வெச்சிக்கிறதே இல்ல....///////////////

இது ஒரு தொடர் பதிவு உங்க பின்னூட்டம் எல்லாத்துக்கும் கொஞ்சம் விரிவான விளக்கம் குடுக்கலாம்ன்னு ........
எல்லாம் ஒரு விளம்பரம் தான் .............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் என்னையப் பாத்தா எனக்கே பயம் வர்ர மாதிரி பண்ணிப்புட்டியே......?

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் என்னையப் பாத்தா எனக்கே பயம் வர்ர மாதிரி பண்ணிப்புட்டியே......?///////////////////////

தல நீங்க உண்மையிலேயே டெரர் தான் .................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////அஞ்சா சிங்கம் said...
வேடந்தாங்கல் - கருன் said...

pannikutti ஓரு ஆளினால் அழகுராஜா................///////////////

அவரு ஒரு பெட்ரமாஸ் விஞ்சானி .............../////////////
//////

பெட்ரோமேக்ஸ் லைட்டே வேணுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாபட்டி.... said...
பன்னி படிச்ச பயலா?..

இது தெரியாம.. சே..

போங்க பாஸ்.. இப்ப பன்னிய பார்த்தா பயமாயிருக்கு... //////

ங்ணா இப்பிடி மொத்தமா உள்குத்து குத்துனா என்னங்ணா பண்றது?

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாபட்டி.... said...
பன்னி படிச்ச பயலா?..

இது தெரியாம.. சே..

போங்க பாஸ்.. இப்ப பன்னிய பார்த்தா பயமாயிருக்கு... //////

ங்ணா இப்பிடி மொத்தமா உள்குத்து குத்துனா என்னங்ணா பண்றது?..................///////////////////

எல்லாம் ஊமை குத்தாலே இருக்குது ..............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////MANO நாஞ்சில் மனோ said...
பன்னிகுட்டியின் பேக் ரவுண்டு ஃபிரன்ட் ரவுண்டு தெரியாம இருக்கியோ தம்பி ஹே ஹே ஹே ஹே... ///////////

வேணாம் மக்கா அப்புறம் அழுதுடுவேன்........

அன்புடன் நான் said...

பாரின்ல படிச்ச
குட்டி விஞ்ஞானி
ராம்சாமியத்தான்
....
பன்னிகுட்டி ராம்சாமின்னு வச்சியிருக்காருன்னு நினைக்கிறேன்.

அஞ்சா சிங்கம் said...

சி.கருணாகரசு said...

பாரின்ல படிச்ச
குட்டி விஞ்ஞானி
ராம்சாமியத்தான்
....
பன்னிகுட்டி ராம்சாமின்னு வச்சியிருக்காருன்னு நினைக்கிறேன்................//////////

இருக்கலாம் பன்னிகுட்டிங்குறது அவரு படிச்சி வாங்கின பட்டமா ?

Unknown said...

அண்ணே பன்னிகுட்டி அண்ணே நீங்க ஒரு விஞ்ஞானியா

சொல்லவே இல்ல

Unknown said...

யோவ் என்னய்யா தீடீர்னு இப்படி எறங்கீட்ட

இதலாம் படிச்சு கடுப்பாய் போய்த்தான ஒக்கார்ந்திருக்கோம் இப்ப போயிட்டு

சார்பியல் தத்துவம் ,நியுட்டன் கொள்கைனு கடுப்புகள கெளப்பிகிட்டு இருக்க ,இதலாம் படிச்சா

எனக்கு பாடம் நடுத்துண பிசிக்ஸ் மிஸ்ஸு நீ வெலங்காமா போய்டுவனு சொன்னதுதான் நியாபகத்துக்கு வருது

arasan said...

ம்ம்ம் .. பதிவு கலக்கல் ...

Jayadev Das said...

அன்புடையீர் , இந்த வலைப்பக்கத்தில் சில பின்னூட்டங்களைச் சேர்த்துள்ளேன், தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவும்.

http://bharathbharathi.blogspot.com/2011/02/blog-post_18.html

Jayadev Das said...

\\ஐன்ஸ்டைனுடைய சார்பியல் தத்துவங்கள் நிருவப்பட முடியாததே அவருக்கு அதற்காக நோபல் பரிசு கொடுக்கப்படாததற்குக் காரணம்\\Einstein's Theory of Relativity சோதனை அளவில் நிரூபிக்கப் பட்டு இன்றளவும் எல்லா Challenge களையும் வென்று நிலைத்து நிற்கும் தியரி ஆகும். அதற்க்கு நோபல் பரிசு தராதது வெறும் அரசியல். [ஒபாமாவுக்கு கொடுத்தது எப்படி அரசியலோ அதுபோல!].

Jayadev Das said...

\\கோள்கள் மையத்தை சுற்றி வருவது புவிஈர்ப்பு விசைதான் காரணம் என்பது நியுட்டன் வாதம். \\
\\கோள்களின் சுற்றுப்பாதை ஈர்ப்பு விசையால் அமைவதில்லை மாறாக இந்த பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த துகள்களின் அபரிதமான ஏடையின் காரணமாக விண்வெளியே வளைத்து சுருட்ட பட்டிருக்கிறது இங்கு எல்லாமே வளைவான பாதையில்தான் செல்ல முடியும் நேர்கோடு என்பது கிடையாது.\\
இரண்டுமே ஒரு இயற்க்கைக்கு இருவேறு விதமான விளக்கங்கள்தான். நியூட்டனின் விளக்கத்தை வைத்து கோள்கள் எவ்வாறு இயங்குகின்றன என்று சொல்ல முடியும், வானத்தில் புவியிலிருந்து செயற்கைக் கொலை அனுப்பி இயக்க முடியும். ஆனால், ஒளி நிறையால் ஈர்க்கப் படுவதை விளக்க வேண்டுமானால் ஐன்ஸ்டீனின் தியரியால் தான் முடியும், அது நியூட்டன் சொன்னதையும் சேர்த்து நிரூபிக்கும். நியூட்டனின் தியரி தரல்ல, ஓரளவு வரை சரி.

Jayadev Das said...

இரண்டுமே ஒரு இயற்க்கைக்கு இருவேறு விதமான விளக்கங்கள்தான். நியூட்டனின் விளக்கத்தை வைத்து கோள்கள் எவ்வாறு இயங்குகின்றன என்று சொல்ல முடியும், வானத்தில் புவியிலிருந்து செயற்கைக் கோளை அனுப்பி இயக்க முடியும். ஆனால், ஒளி நிறையால் ஈர்க்கப் [Bending of light by Mass] படுவதை விளக்க வேண்டுமானால் ஐன்ஸ்டீனின் தியரியால் தான் முடியும், அது நியூட்டன் சொன்னதையும் சேர்த்து நிரூபிக்கும். நியூட்டனின் தியரி தவறல்ல, ஓரளவு வரை சரி.

Anonymous said...

//நா.மணிவண்ணன் said...
அண்ணே பன்னிகுட்டி அண்ணே நீங்க ஒரு விஞ்ஞானியா. சொல்லவே இல்ல//

அவர் ஒரு ஞானியும் கூட..முற்றும் துறந்தவர். (ஆசைகளை...ராஸ்கோல்..அதுக்குள்ள தப்பா நினைக்குறத பாரு)

அஞ்சா சிங்கம் said...

Jayadev Das said...

இரண்டுமே ஒரு இயற்க்கைக்கு இருவேறு விதமான விளக்கங்கள்தான்.////////////////////

உண்மைதான் நண்பரே நான் நியுட்டன் தியரி தவறு என்று சொல்லவில்லை .
அதன் எல்லையை விட ஐன்ஸ்டீனின் எல்லை அதிகம் அதுமட்டும் இல்லாமல் கொஞ்சம் எளிமையாகவும் சுருக்கமாகவும் புரியவைக்கும் முயற்சி இது. வாசகர்களை ரொம்ப குழப்ப வேண்டாம் என்று தான் ரொம்ப விளக்க முற்படவில்லை ..................

Anonymous said...

தலைப்பு மிரள வைக்குது

டக்கால்டி said...

பன்னிக்குட்டி ஆனார் ஓர் ஞானிகுட்டி!!!

முத்துவேல் said...

the first tangible evidence of E = mc2 is the atomic bomb!

Popular Posts