Wednesday, March 30, 2011

வருங்கால நிரந்தர முதல்வர் டி.ஆர்.(2081)

v

தக்காளி நானும் பார்த்துக்கிட்டு இருக்கேன் .யாருமே எங்க வருங்கால முதல்வரை கண்டுக்க மாட்றாங்க .
வைகோ தேர்தலை புறக்கணித்த போது வளைச்சி வளைச்சி பதிவு எழுதினவங்க எல்லாம் எங்க போனாங்க .
இந்த நாட்டுக்காக எப்பேர் பட்ட தியாகத்தை பண்ணிருக்காரு யாருமே கண்டுக்கலேனா எப்படி ......
அதான் அந்த வரலாற்று சிறப்பு மிக்க அறிக்கையை நான் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் படிக்க சோம்பல் படுபவர்களுக்காக காணொளி இணைக்கப்பட்டுள்ளது .
அதனால் அனைவரும் கண்டிப்பாக பார்த்துவிட்டு செல்லவும் வரலாறு மிக முக்கியம் அமைச்சரே ..............


லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கை.....

தற்போது வரும் அறிக்கைகளில் சிலர் தங்கள் கோணத்தில் சொல்வதைப் போல நாங்களும் விரட்டப்பட்டவர்களும் அல்ல. விடு பட்டவர்களும் அல்ல. துரத்தப்பட்டவர்களும் அல்ல.


தொலைநோக்குப் பார்வையில் சிந்தித்துப் பார்த்து தூரம் தள்ளி நின்றவர்கள். கடந்த காலத்து கசந்த அனுபவங்கள் மறக்க வில்லை. அதனால் இந்த தேர்தல் குறித்து இடைப்பட்ட காலத்தில் நான் வாய் திறக்கவில்லை.

இந்த காலத்தில் அரசியலில் முன்னேறுவதற்கு தேவைப்படுகின்றன சில அடிப்படைத் தகுதிகள். அப்படிப்பட்ட தகுதிகள் இருந்தால்தான் தேர்தலில் கூட கிடைக்கும்போல இருக்கிறது கணிசமான தொகுதிகள். இன்றைய சூழலில் அரசியலில் முன்னேறுவதற்கு தேவை யோகம். மாறாக தேவை இல்லவே இல்லையோ தியாகம்.

ஆம் நாட்டு நடப்பைப்பார்த்தால் அரசியல் ஆகி விட்டது கேலிக்கூத்து. அதிக பட்சத்தினர் பேசுகின்றனர்.   வரும் இந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் வாக்களிக்கும் நாள் ஏப்ரல்-13 வாக்குகளை எண்ணும் நாள் மே-13. இடையில் இருப்பது ஒரு மாசம். எதற்கு இந்த அவகாசம்? எனப் பலர் மனதில் எழுந்தது இந்தக் கேள்வி. எந்த கண்கட்டு வித்தை காரணமாகவும் கண்டு விடக்கூடாதல்லவா தோல்வி.

என இந்த தேர்தலில் இறைவனை நோக்கி நடத்த விரும்புகிறோம் ஒரு வேள்வி. மின்னணு வாக்கு பதிவில் குளறுபடி நடப்பதற்கு இருக்கிறதாம் பல வழிமுறை... ஆகையால் மீண்டும் வர வேண்டும் வாக்குச் சீட்டு முறை... அப்படி ஒரு மாற்றம் வராத வரை இந்திய ஜனநாயகத்துக்கே அதுபெரும் குறை. அமாவாசையன்று மாதத்தில் வான் நிலவுக்கு ஒரு நாள் விடுமுறை. சில நாள் வளர்பிறை.

சில நாள் தேய்பிறை. இந்த சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரையில் எங்களுக்கு இருக்கலாம் தேய்பிறை.

இறைவன் அருளால் வரும் காலத்தில் காண்போம் வளர்பிறை. இந்த தேர்தல் காலம் எங்களுக்கான கோடை விடு முறை. கொள்கையைக் காக்க இதுதான் எனக்கு தெரிந்த நடைமுறை. 


தனித்து நின்று தனி ஆவர்த்தனம் வாசிப்போம் என்று சொல்லவும் கூடாது. தண்டவாளம் இல்லாத ஊருக்கு புறப்பட்டு போகவும் முடியாது என்ற சமயோசித முடிவின்படி இந்த சட்ட மன்ற தேர்தலெனும் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆட்டக் காரர்களாக களமிறங்காமல் வெறும் பார்வையாளர்களாகவே இருக்க விரும்புகிறோம்’’தெரிவித்துள்ளார்.
************************************************************************

எல்லோரும் கரகோஷங்களை எழுப்புங்கள் .........



தமிழ்நாடு எத்தனையோ சோதனைகளையும் வேதனைகளையும் சகித்து கொண்டிருக்கிறது ................
இதையும் சேர்த்துதான் .....................

38 கருத்து சொல்றாங்க:

சக்தி கல்வி மையம் said...

உசிரோட இருப்பாரா?

சக்தி கல்வி மையம் said...

5 வடை பத்தாதே...

அஞ்சா சிங்கம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

உசிரோட இருப்பாரா?...........///////////////////

அவரு தமிழ்நாட்டின் சொத்து பார்ப்போம் .........

அஞ்சா சிங்கம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

5 வடை பத்தாதே.......////////////
////////////
அது குறையாத அமுத சுரப்பி எவ்ளோ எடுத்தாலும் வரும் ...............

சக்தி கல்வி மையம் said...

ரைமிங் நல்லா வருது தோழா ...

சக்தி கல்வி மையம் said...

மின்னணு வாக்கு பதிவில் குளறுபடி நடப்பதற்கு இருக்கிறதாம் பல வழிமுறை... ஆகையால் மீண்டும் வர வேண்டும் வாக்குச் சீட்டு முறை... அப்படி ஒரு மாற்றம் வராத வரை இந்திய ஜனநாயகத்துக்கே அதுபெரும் குறை. --- இதுதான் டாப்பு..

அஞ்சா சிங்கம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ரைமிங் நல்லா வருது தோழா .../////////////
/////////////////////////
அவரு பிறக்கும் போதே ரைமிங் கோட தான் அழுதிருப்பாறு ...............

அஞ்சா சிங்கம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மின்னணு வாக்கு பதிவில் குளறுபடி நடப்பதற்கு இருக்கிறதாம் பல வழிமுறை... ஆகையால் மீண்டும் வர வேண்டும் வாக்குச் சீட்டு முறை... அப்படி ஒரு மாற்றம் வராத வரை இந்திய ஜனநாயகத்துக்கே அதுபெரும் குறை. --- இதுதான் டாப்பு..//////////////////


அமாவாசையன்று மாதத்தில் வான் நிலவுக்கு ஒரு நாள் விடுமுறை. சில நாள் வளர்பிறை.
சில நாள் தேய்பிறை.......................இது திருந்தாது ............

சக்தி கல்வி மையம் said...

தமிழ்நாடு எத்தனையோ சோதனைகளையும் வேதனைகளையும் சகித்து கொண்டிருக்கிறது ................
இதையும் சேர்த்துதான் .....................----
இன்னும் சிரிப்பு நிக்கல...

சக்தி கல்வி மையம் said...

நம்ம கடை பக்கம் வர்ரது..

அஞ்சா சிங்கம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நம்ம கடை பக்கம் வர்ரது..////////
இதோ கிளம்பியாச்சி .........

சக்தி கல்வி மையம் said...

அந்த வீடியோ... Ha..ha..ha..ha..ha..

Unknown said...

அவ்வ்வ்வ்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சிரிச்சு சிரிச்சு.................. முடியல!!

அஞ்சா சிங்கம் said...

ஜீ... said...

அவ்வ்வ்வ்!............//////////
வாங்க ஜீ..............உங்களை தான் சி.பீ.ஐ.தேடுறாங்க ................

அஞ்சா சிங்கம் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சிரிச்சு சிரிச்சு.................. முடியல!!.........//////////////////
சாருக்கு ஒரு டீ சொல்லு வயிறு வலிக்குதாம்

Sivakumar said...

யாருய்யா இது...எங்க பவர் ஸ்டாருக்கு போட்டியா? தைரியம் இருந்தா உங்க டி.ஆர். படத்தை எங்க அடுத்த படத்தோட ரிலீஸ் பண்ண சொல்லுங்க. யார் ஜெயிக்கிறான்னு பாப்போம்.

-பவர் ஸ்டார் கிழக்கு ஆசிய ரசிகர் பேரவை.

Speed Master said...

ஸ்ஸ்ஸ் முடியல

ஆப்புன்னா என்னா?

http://speedsays.blogspot.com/2011/03/blog-post_30.html

Unknown said...

மாப்ள அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோஅய்யோ அய்யோஅய்யோ அய்யோ

போங்கடாங்கோகோகோகோகோகோகோகோகோகோ!

தப்பிசிட்டாண்டா ஜஸ்டு தப்பிசிட்டாண்டா தமிழன் இந்த முறை மட்டும் ஹிஹி!

அஞ்சா சிங்கம் said...

! சிவகுமார் ! said...

யாருய்யா இது...எங்க பவர் ஸ்டாருக்கு போட்டியா? தைரியம் இருந்தா உங்க டி.ஆர். படத்தை எங்க அடுத்த படத்தோட ரிலீஸ் பண்ண சொல்லுங்க. யார் ஜெயிக்கிறான்னு பாப்போம்.

-பவர் ஸ்டார் கிழக்கு ஆசிய ரசிகர் பேரவை................////////////
தமிழகத்தின் விடிவெள்ளி தன்னிகரில்லா தலைவன் அப்படின்னு தனக்கு தானே சொல்லிகொள்ளும் ஒரே தலைவர் ...............

அஞ்சா சிங்கம் said...

விக்கி உலகம் said...

மாப்ள அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோஅய்யோ அய்யோஅய்யோ அய்யோ

போங்கடாங்கோகோகோகோகோகோகோகோகோகோ!

தப்பிசிட்டாண்டா ஜஸ்டு தப்பிசிட்டாண்டா தமிழன் இந்த முறை மட்டும் ஹிஹி!................//////////
///////////////
யோவ் யாராவாவது இந்த ஆளை மடக்கி பிடிங்கையா ........நைசா தப்பிக்குது பாரு ...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அட போய்யா... எங்க பெரிய கரடிக்கு இதெல்லாம் ஒரு மேட்டரா? இன்னும் எவ்வளவோ இருக்கு.....

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அட போய்யா... எங்க பெரிய கரடிக்கு இதெல்லாம் ஒரு மேட்டரா? இன்னும் எவ்வளவோ இருக்கு........../////////

இல்ல மாப்பு தேர்தல் புறக்கணிப்பு பத்தி யாருமே கண்டுக்கலை அதான் .............

Unknown said...

//அஞ்சா சிங்கம் said...
ஜீ... said...
அவ்வ்வ்வ்!............//////////
வாங்க ஜீ..............உங்களை தான் சி.பீ.ஐ.தேடுறாங்க//
எதுக்கு நண்பா?

அஞ்சா சிங்கம் said...

ஜீ... said...

//அஞ்சா சிங்கம் said...
ஜீ... said...
அவ்வ்வ்வ்!............//////////
வாங்க ஜீ..............உங்களை தான் சி.பீ.ஐ.தேடுறாங்க//
எதுக்கு நண்பா?.......................//////////////
ஹி ஹி .....எல்லாம் 2 ஜீ விவகாரம்தான் ...
நீங்கதானே அந்த ஜீ .............

Unknown said...

அஞ்சா சிங்கம் said...
ஜீ... said...

//அஞ்சா சிங்கம் said...
ஜீ... said...
அவ்வ்வ்வ்!............//////////
வாங்க ஜீ..............உங்களை தான் சி.பீ.ஐ.தேடுறாங்க//
எதுக்கு நண்பா?.......................//////////////
ஹி ஹி .....எல்லாம் 2 ஜீ விவகாரம்தான் ...
நீங்கதானே அந்த ஜீ .............

ஓ! நான்தான் ஜீ! ஆனா 2ஜீ யாருன்னு சத்தியமா தெரியாது! யார் அந்தப்பயபுள்ள? பேரே சமீபத்துலதான் கேள்விப்பட்டேன்! அவ்வ்வ்வ்!

சி.பி.செந்தில்குமார் said...

அகில இந்திய சொம்பு புகழ் சிம்பு ரசிகர் மன்ற சார்பாக அண்ணன் அஞ்சா சிங்கத்துக்கு மைனஸ் ஓட்டு போட்டுட்டு போறேன் ஹி ஹி

Unknown said...

கவலைபடாத சிவா, பவர் ஸ்டாரோட தலைமை ரசிகன் நான் இருக்கும் போது டி ஆர ஜெயிக்க விட்டுட்வனா? பார்த்துக்கலாம்:-)

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்நாடு என்னிக்கிய்யா உருப்படும்....?

MANO நாஞ்சில் மனோ said...

//தமிழ்நாடு எத்தனையோ சோதனைகளையும் வேதனைகளையும் சகித்து கொண்டிருக்கிறது ................
இதையும் சேர்த்துதான் //


ஆத்தாடியோ......

ரஹீம் கஸ்ஸாலி said...

வருங்கால முதல்வருன்னா எந்த வருசத்திலிருந்து?

நம்ம கடையில் இன்றைய இரண்டாவது பதிவு ஒளிவு மறைவு இல்லாத வெளிப்படையான தலைவரு விஜயகாந்த் வாழ்க....

Unknown said...

கலக்கல்...

Chitra said...

இறைவன் அருளால் வரும் காலத்தில் காண்போம் வளர்பிறை. இந்த தேர்தல் காலம் எங்களுக்கான கோடை விடு முறை. கொள்கையைக் காக்க இதுதான் எனக்கு தெரிந்த நடைமுறை.



...... பஞ்ச் லைன்க்கு பஞ்சமில்லை!

Unknown said...

அய்யா நீங்கலாம் உயிரோடத்தான் இருக்கீங்களா.. இதெல்லாம் பாத்து.... படிச்சி.....

சிவகுமார் said...

செவுத்துல அடிச்சா ஆணி ..
மாடு போட்ட சாணி..
இது எப்படி இருக்கு..

உளவாளி said...

கட்சிக்கு கோடைகால லீவு விட்டுட்டு பேச்சபாரு.....

R.Gopi said...

நான் 45 முதலமைச்சரை எதிர்த்து அரசியல் பண்ணுறவன்... என் கிட்டயேவா!! - டி.ஆர்...

டக்கால்டி said...

நான் வந்தது லேட்டு
எப்படி கீது என் பாட்டு
தேர்தல் அன்னிக்கு போடுவேன் ஓட்டு
அதன் மூலமா வெக்கப் போறேன் சிலருக்கு வேட்டு
இது தான் என்னோட ரூட்டு
முடிஞ்சா எல்லாருக்கும் என் ரூட்டை காட்டு
இப்போ நான் அப்பீட்டு
அப்புறமா ரிப்பீட்டு

Popular Posts