Wednesday, September 26, 2012

மதம் (பாகம் இரண்டு )

v
                                                                         


                                  மானிகே மதம் :-

    இப்போது சுத்தமாக வேர் அறுக்கப்பட்ட ஆனால் ஒருகாலத்தில் உலகின் பெரு சமயங்களில் ஒன்றாக திகழ்ந்த மதம்.  இதை தோற்றுவித்தவர் மானி . இவர் தன்னை தீர்க்கதரசி என்று கூறி கொண்டார் . இந்த மதத்தின் இறைமையியல் கொள்கை மிகவும் கவர கூடிய கவர்சிகரமானது .

                                        மானி:-

               இவர் மேசபட்டோமியாவில் கி.பி. 216 டில்  பிறந்தார்   அப்போது அது பாரசீக அரசின் ஒரு பகுதியாக இருந்தது அதனால் அங்கு சொராஸ்ட்ரியம் மிகவும் செல்வாக்கு பெற்று இருந்தது . என்றாலும் இவர் ஒரு கிருத்துவ உட்பிரிவில் பிறந்தார் . இவர்  தனது 20 ஆவது வயதில் இருந்து தனது புதிய மதத்தை போதிக்க ஆரம்பித்தார் . அவரது சொந்த நாட்டில் அவருக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை . மற்றவர்களால் தூற்ற பட்டார் . பின்பு அவர் இந்தியா வந்து அங்கு இருந்த ஒரு அரசனை மதம் மாற்றுவதில்  வெற்றி கண்டார் . பிறகு 242 ஆம் ஆண்டில் மீண்டும் பாரசீகம் வந்தார் இப்போது அங்கு ஷாப்பூர் என்ற மன்னன் ஆண்டு வந்தான் . அவன் மானிக்கு ஆதரவு அளித்தான் .மானி மேல் மிகுந்த மரியாதை வைத்திருந்தான் .அவருக்கு தடையில்லாமல் மதத்தை போதிக்கும் உரிமை வழங்க பட்டது . ஷாப்பூர்க்கு பின்னர் வந்த முதலாம் ஹார்மிஸ்ட் காலத்திலும் இவருக்கு ஏராளமான ஆதரவாளர்கள் பெருகினார்கள் . அதே நேரம் சஸ்சானிட் அரசின் அரசு சமயமாக திகழ்ந்த பார்சி குருமார்கள் . மானியை பழிவாங்க காத்திருந்தனர் .
ஹார்மிஸ்ட்க்கு பிறகு அரியணை ஏறிய முதலாம் பஹ்ராம் சமய சகிப்பு இல்லாதவர் . அவர் மாணியை கைது செய்து சிறையில் அடித்து 26  நாள் சித்திரவதை செய்து கொன்றார் .அவர் இறந்த ஆண்டு கி.பி.276 .

                                         இறைமையியல்  :-


இது தான் உண்மையில் கருத்தை கவரும் வித்தியாசமான பார்வை கொண்ட அம்சங்கள் நிறைந்தது . கிறித்தவ மதமும், யூத மதமும் நன்மைதீமை என்ற கோட்பாட்டிற்குள் அடங்கியவை என்றாலும் தீமையை விளக்கி கூற முடியாத சித்தாந்த சிக்கலில் இருக்கும்போது . இவர் மட்டும் இந்த உலகை ஒரு கடவுள் ஆளவில்லை நன்மை தீமை இரண்டும் சம வலிமை கொண்டவை . இதில் தீமை என்பது இருளாகவும் பருபொருளாகவும் உருவக படுத்துகிறார்
நன்னெறி என்பது ஒளியாகவும் ஆன்மாவாகவும் கருத படுகிறது . அதனால் உடல் என்பது தீய சக்தி ஆன்மா என்பது
நன்னெறிஎன்பதால் உடல் உறவு கொள்வது கூட தடை செய்யபடுகிறது .........................
ஆனால் அவை சாதாரண பாமரர்களுக்கு இல்லை . மத போதகர்களாக இருக்கும் மேட்டு குடி களுக்கு மட்டுமே பொருந்தும் .(பிற்காலத்தில் இதை கிருத்துவமதம் எடுத்து கொண்டது ) இவர்கள் இறந்தால் நேரடி சொர்க்கம் கிடைக்கும் . ஆனால் பாமரர்கள் முதல் நிலை சொர்கத்தில் அனுமதிக்க பட்டு பின்னர் . பல சோதனைகளுக்கு பிறகு மேல் நிலை சொர்கத்தை அடையலாம் ...
இது ஒரு வகையில் ப்ளேட்டோவின்  குடியரசு தத்துவத்தை ஒத்திருப்பதை காணலாம் .கத்தோலிக்க திருச்சபைகளில் இந்த முறை பின்பற்ற படுகிறது . இதற்க்கு காரணம் கிருத்துவ இறைமையியல் கொட்பாட்டை  தொகுத்து அளித்த புனித அகஸ்டைஸ் ஒன்பது ஆண்டுகள் மானி மதத்தில் இருந்தார் .
இவர் புத்தர் , ஏசு , போன்றவர்களை இறைதூதர்களாக ஏற்று கொண்டார் . என்றாலும் அவர்களை விட அதிகமான இறை செய்தி தனக்கு வந்ததாக கூறிகொண்டார் (இதே முறையை பின்னாளில் நபிகள் பயன்படுத்திகொண்டார் )
இது ஆரம்பத்தில் இருந்தே சகிப்பு தன்மை அற்ற மதமாக தான் இருந்தது .

                                                   மதம் பரவுதல்

மானி காலத்தில் இந்த மதம் நன்றாக பரவி ஓரளவு ஸ்திர தன்மை பெற்று விட்டது எனலாம் . இதன் இறைமையியல் கோட்பாட்டை இவரே உருவாக்கினார் .இவர் காலத்தில் பாரசீகம் முதல் இந்தியா வரை வேகமாக பரவியது . அதன் பின்னர் ஆயிரம் ஆண்டுகளுக்கு உலகின் பெரிய சமயங்களில் ஒன்றாக திகழ்ந்தது . இது உச்ச கட்டத்தில் இருக்கும் போது இதில் இருந்து பல்வேறு கிளை சமயங்கள் எழுந்தன . ஏழாம் நூற்றாண்டில் பைசாண்டியத்தில் தோன்றிய பாலிசியன்னும் பத்தாம் நூற்றாண்டில் பால்க்கன் நாடுகளில் தோன்றிய போகோமில்ஸ் . கிழக்கு ஐரோப்பாவில் கேதாரி என்ற கிளை இது பிரான்ஸ் நாட்டில் செல்வாக்கோடு இருந்தது . இங்கு பலர் மானி சமய கோட்பாடுகளை கடை பிடித்தாலும் தங்களை கிருத்துவர்கள் என்று சொல்கிறார்கள் ஆனால் கிருத்துவர்கள் அவர்களை ஏற்று கொள்வது இல்லை .மத்திய கால ஐரோப்பாவில் மிக பெரிய செல்வாக்கோடு இந்த மதம் ஏறதாழ ஆயிரம் ஆண்டுகள் கோலோச்சியது .ஆசியாவில் இந்தியா சீனா மற்றும் எகிப்து என்று அனைத்து கண்டங்களிலும் பரவி உச்ச நிலையில் இருந்தது 


                                                     மதத்தின் வீழ்ச்சி  

 ஐரோப்பாவில் உச்ச மதமாக இருந்த இதன் வீழ்ச்சிக்கு பெரும்பாலும் கிருத்துவ மதமே காரணம் எனலாம் . மூன்றாம் போப் இன்னொசென்ட் என்பவர் இவர்களை அளிக்க சிலுவை போர் நடத்தும் படி ஆணையிட்டார் . 1209 ஆண்டு தொடங்கிய இந்த சிலுவை போர் பல ரத்த வெறியாட்டத்திற்கு பிறகு 1244 ஆம் ஆண்டு முடிவடைந்தது . அதீத கட்டுபாடுகள் நிறைந்த இந்த மதம் ஐரோப்பாவில் 1000 ஆண்டுகள் கோலோச்சியது ஆச்சரியமான விஷயம் .மானி நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார் . அவை யாவும் மானி சமயத்தின் வேதமாக கருத படுகிறது . மதத்தின் அழிவோடு அதன் நூல்களும் அழிக்க  பட்டு விட்டது . 


பின்குறிப்பு :- எவ்வளவு உச்ச நிலையில் இருந்தாலும் எந்த மதமும் நிரந்தரமானது அல்ல . மனிதனுக்கு தேவை படும்போது கடவுளையே மாற்றிவிடுவான் .என்பதற்கு மானி மதம் ஒரு சிறந்த எடுத்துகாட்டு .

அதனால் மதத்தை வளர்ப்பது மட்டுமே மனிதனின் பணி  என்று  இருப்பது மிக பெரிய மடத்தனம். காலம் எல்லாவற்றையும் அழித்து புதிய கோடுகளை போட்டு கொண்டே இருக்கும் .

அடுத்த பதிவு மகாவீரர் 

 

மதம் (பாகம் ஒன்று )படிக்க இங்கே செல்லவும் 

21 கருத்து சொல்றாங்க:

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கங்கள் (பின் குறிப்பும்) அருமை... தொடர்கிறேன்...

நன்றி...

ஒசை said...

மதங்களின் வீழ்ச்சியை வாசிக்க

ராஜ நடராஜன் said...

அஞ்சா சிங்கம்!நீங்க சொல்ற மதங்கள் இருப்பது தமிழ்நாட்டில் பலருக்குக்கும் தெரியவில்லை.தெரிந்திருந்தால் ஒவ்வொன்றுக்கும் பல சீடர்கள் முளைத்திருப்பார்கள்:)

Unknown said...

இதுவரை அறியாத, ஏன் கேள்விப் படாத மதங்கள்! அருமையான ஆய்வு! தொடரத் தொடர்வேன்!

நாய் நக்ஸ் said...

பாலோ அப்.

அஞ்சா சிங்கம் said...

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கங்கள் (பின் குறிப்பும்) அருமை... தொடர்கிறேன்...

நன்றி...////////////////

என் கண்ணையே என்னால் நம்ப முடிய வில்லை .................ஆஹா நீங்களா ....நீங்களா ....நீங்களா ....

அஞ்சா சிங்கம் said...

@ ஒசை said...
படித்தேன் மிகவும் நல்ல அலசல் நன்றி .................

அஞ்சா சிங்கம் said...

ராஜ நடராஜன் said...

அஞ்சா சிங்கம்!நீங்க சொல்ற மதங்கள் இருப்பது தமிழ்நாட்டில் பலருக்குக்கும் தெரியவில்லை.தெரிந்திருந்தால் ஒவ்வொன்றுக்கும் பல சீடர்கள் முளைத்திருப்பார்கள்:)...................///
அவ்வாறு அடுத்த மதத்தை பற்றி அறிந்து கொள்வது ஹராம் ஆக இருக்கும் என்று நினைக்கிறேன் ..:-)
சீடர்கள் என்ன பல இறைதூதர்கள் இப்போது இணையத்தில் தான் டீ..ஆத்திக்கிட்டு இருக்காங்க .........:-)

அஞ்சா சிங்கம் said...

புலவர் சா இராமாநுசம் said...

இதுவரை அறியாத, ஏன் கேள்விப் படாத மதங்கள்! அருமையான ஆய்வு! தொடரத் தொடர்வேன்!........
//////////////////////////
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா ...................

அஞ்சா சிங்கம் said...

நாய் நக்ஸ் said...

பாலோ அப்...............
////////////////////////////////
இந்த ஆளுக்கு இதே வேலையா போச்சி என்னை ஏன்யா பாலோ பண்றே ...பாக்குறவங்க தப்பா நினைச்சிக்க போறாங்க ...............:-)

காற்றில் எந்தன் கீதம் said...

நல்ல பகிர்வு... உங்கள் பின் குறிப்பு அனைவரும் மனதில் பதித்துக்கொள்ள வேண்டிய ஒன்று தொட்டருங்கள் தொடர்கிறேன்...:)

அஞ்சா சிங்கம் said...

காற்றில் எந்தன் கீதம் said...

நல்ல பகிர்வு... உங்கள் பின் குறிப்பு அனைவரும் மனதில் பதித்துக்கொள்ள வேண்டிய ஒன்று தொட்டருங்கள் தொடர்கிறேன்...:)
////////////////////////////////////////////////////////////////////////

கருத்துக்கு நன்றி ................

பட்டிகாட்டான் Jey said...

ஓ முதல் பாகம் இருக்கா அப்ப முதல்ல அதை படிச்சிட்டு வரேன் செல்வின் :-)

பட்டிகாட்டான் Jey said...

செல்வின் ரியல்லி சூப்பர்... தொடரவும்

மானி மதம் பற்றி நான் படித்த மற்ற இடுகைகள்..

1. http://www.arivulakam.com/2012/08/20/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/

2. http://en.wikipedia.org/wiki/Mani_(prophet)

3. http://looklex.com/e.o/mani.htm

R.Puratchimani said...

செல்வின் நீங்கள் வேண்டும் என்றே இப்பதிவை தவறாக எழுதியுள்ளீர்கள் என்று உங்கள் மீது குற்றம் சுமத்துகிறேன்.
இந்த மதத்தின் பெயர் மானி அல்ல மணி ...
ஆதாரம் என் பெயர் புரட்சிமணி (puratchimani)
http://en.wikipedia.org/wiki/Mani_(name)
உலக மதங்களை ஒன்றிணைத்து அல்லது அழித்து மனிதம் காக்கவே நான் அவதரித்துள்ளேன் :) :) ஹி ஹி
புதிய செய்தி....நல்ல பதிவு

அஞ்சா சிங்கம் said...

R.Puratchimani said... செல்வின் நீங்கள் வேண்டும் என்றே இப்பதிவை தவறாக எழுதியுள்ளீர்கள் என்று உங்கள் மீது குற்றம் சுமத்துகிறேன்.
இந்த மதத்தின் பெயர் மானி அல்ல மணி..........////////////////////////

யோவ் அது மணி அல்ல Manichaeism மானி என்றும் சொல்லலாம் . நான் மணி என்று சொன்னால் . இது தமிழ் பெயர் போல் இருந்ததால் தவிர்த்துவிட்டேன் .. உச்சரிப்பு படி மானிகேசியம் தான் சரி ..

http://en.wikipedia.org/wiki/Manichaeism

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கம்,

அடுத்த பாகம் போட்டாச்சா, இந்த பதிவுக்கு நானும் பின்னூட்டம் போடலாம்னு பார்க்கிறேன், பிளாக்கர் சொதப்பிக்கிட்டே இருக்கு.

நல்ல தகவல் தொகுப்பு ,கொஞ்சம் தகவல்கள் விடுப்பட்டா போல இருக்கு.

மணிசையிசம்னு தமிழில் ஒரு தடவைப்படித்து இருக்கேன், மானி, மனி,மணி எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்னு நினைக்கிறேன்.

சீனாவில் எல்லாம் பரவியிருந்து இருக்கு, இப்போவும் கூட புதிய மானி மதம் என சிலர் செயல்படுவதாக என்சைகிளோபீடியா பிரிட்டானிகாவில் போட்டு இருந்தான்.

இஸ்லாம் இரானில் பரவிய காலத்தில் பல ஆதாரங்கள் அழிக்கப்பட்டதில் மானி மத வரலாறு ,மற்றும் நூல்கள் கொளுத்தப்பட்டுவிட்டது.

மத்திய அரேபியாவின் வரலாறு கூட இப்படி அழிக்கப்பட்டுவிட்டதாம், அதோடு அல்லாமல், இரான்,இராக் ,மற்ற மத்திய தரைக்கடல் பகுதி வரலாற்று ஆவணங்களும் அழிக்கப்பட்டு ,இப்போது நமக்கு அங்கு கிடைப்பது எஞ்சியவை மட்டுமே.

ஒட்டமான்களின் அனடோலிய படை எடுப்பினையே ஒரு உதாரணமாக கொள்ளலாம்.நல்லா விரிவா கொடுத்து இருக்காங்க.

"Thus, bands of soldiers began now looting. Doors were broken, private homes were looted, their tenants were massacred. Shops in the city markets were
looted. Monasteries and Convents were broken in. Their tenants were killed, nuns were raped, many, to avoid dishonor, killed themselves. Killing, raping, looting, burning, enslaving, went on and on according to tradition. The troops had to satisfy themselves. The great doors of Saint Sophia were forced open, and crowds of angry soldiers came in and fell upon the unfortunate worshippers. Pillaging and killing in the holy place went on for hours. Similar was the fate of worshippers in most churches in the city. Everything that could be taken from the splendid buildings was taken by the new masters of the Imperial capital. Icons were destroyed, precious manuscripts were lost forever. Thousands of civilians were enslaved, soldiers fought over young boys and young women."

//http://www.greece.org/Romiosini/fall.html

அந்த சுட்டியில் போனால் மேலதிக விவரங்கள் கிடைக்கும்.

எப்படி வரலாறு புரியாமல் சிக்கலாக்கப்பட்டது என்பதற்கு உதாரணமாகவே இச்சம்பவம் சொல்லியுள்ளேன்.

குட்டிபிசாசு said...

படித்தேன்.

Anonymous said...

மானியிசம் என்பது மிகவும் அருமையாக பரிணமித்த ஒரு மதமாகும் .. பழங்காலம் தொட்டே கீழைத் தேய மதங்களுக்கும் மேலைத் தேயங்களும் ஒன்றோடு ஒன்று புணர்ந்துள்ளன ... அதன் தாக்கம் மானியிசத்திலும் நன்கு தென்படும் .. நிறைய எழுதுங்கள் .. எதிர்ப்பார்க்கின்றோம்

அஞ்சா சிங்கம் said...

@வவ்வால்
வாங்க வவ்வால் ரெண்டு நாள் ஊரில் இல்லை அதான் உடனே பின்னூட்டதிற்கு பதில் சொல்ல வில்லை .
//இஸ்லாம் இரானில் பரவிய காலத்தில் பல ஆதாரங்கள் அழிக்கப்பட்டதில் மானி மத வரலாறு ,மற்றும் நூல்கள் கொளுத்தப்பட்டுவிட்டது//

இஸ்லாம் எங்கெல்லாம் நுழைகிறதோ அங்கெல்லாம் அது அந்த மண்ணின் கலாசாரத்தை தடம் தெரியாமல் அழித்துவிடுகிறது .
இந்தியாவில் மட்டும் முழுசாக அளிக்க முடியாததுக்கு காரணம் . சில சமரசத்தோடு தான் இந்தியாவில் அவர்கள் ஆட்சி தொடர்ந்து நடத்த முடிந்தது ..

////ப்போவும் கூட புதிய மானி மதம் என சிலர் செயல்படுவதாக////

ஆமாம் உண்மையில் அதை படித்து பார்த்தேன் அருமை ஓரளவிற்கு வரவேற்ப்பு இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன் புதிதாக ஆள் சேர்க்கிறார்கள் . பருப்பொருள் ஆன்மா என்று நல்லா விளக்குகிறார்கள் .நீ செத்து போ 72 கண்ணிகள் தருகிறேன் என்று சொல்லும் வேதத்தை விட இதில் சிந்திக்க நிறைய அத்தாட்சி இருக்கு வவ்வால் .

http://www.manichaeism.org/blog

ஒவ்வொரு நாளும் புதிதாக அப்டேட் செய்றாங்க ... நாம ரெண்டு பேரும் சேர்திடலாமா ..?
கட்டிங்க கறாரா பேசி வாங்கிப்போம் . இணையத்தில் தாவா செய்யலாம் ....:-)

அஞ்சா சிங்கம் said...

இக்பால் செல்வன் said...
//////////////////////

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இக்பால் ................

Popular Posts