Monday, September 10, 2012

பிரபல பதிவரும் கிழிந்த டவுசரும் .

v


தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்யன் . மீண்டும் சுடுகாடு வந்து சேர்ந்தான் .ஆனால் இம்முறை வேதாளத்தை கண்டு லேசாக பயம் வந்துவிட்டது .இது கேக்குற கேள்விக்கெல்லாம் நம்மளால் பதில் சொல்ல முடியாது சாமி ..அதனால் யாராவது அப்பிராணி கிடைத்தால் நல்லாஇருக்கும் என்று நினைத்து அங்கு சுற்றி கொண்டிருந்த தேவாங்கை தூக்கி தன் தோளில் வைத்து கொண்டு புறப்பட்டான் ...........

போகும் வழியில் போர் அடிக்காமல் இருக்க. ஒரு கதை சொல்லுங்க தோழர் என்று தேவாங்கு கேட்க .ஏன் அதை நீங்க சொன்னதில்லையா தோழர். என்று விக்கி பதில் அளிக்க . ஆஹா இன்னைக்கு பொழுது நல்லா போயிடும். ஒரு ஆடு சிக்கி இருக்கு என்று தேவாங்கு நினைத்து கொண்டு கதையை ஆரம்பித்தது .

ஒரு ஊருல நாலு பதிவர்கள் இருந்தாங்களாம் . ஒருத்தர் பேரு இங்கி, அடுத்து பிங்கி ,அப்புறம் பாங்கி , கடைசி பதிவர் பெயரு டாங்கி , இந்த நாலு பெயருக்கும் திடீர்ன்னு ஒரு சந்தேகம் . நம்ம நாலு பேரில் யார் பிரபல பதிவர் ..? யார் அதி முக்கிய பதிவர் ,? யார் "முக்கிய " பதிவர்ன்னு . இங்கி சொல்றாரு நான் மஞ்சள் துண்டு போட்டிருக்கேன் அதனால் நான் தான் பிரபல பதிவர்ன்னு . பிங்கி நான் ரொம்ப ஏழை. அந்த பிரபல பதிவர் பட்டதை எனக்கே குடுத்து விடுங்கள் என்று . பாங்கி சொல்றாரு என் இடுப்பை கிள்ளி பாருங்க நான் துள்ளுவேன். அதனால நாந்தான் பிரபல பதிவர் ,டாங்கி மட்டும் என்ன லேசு பட்டதா? நான் நிறைய அழுகாச்சி காவியம் எல்லாம் எழுதி இருக்கேன் அதனால் நாந்தான் பிரபல பதிவர்ன்னு ...

இவங்க கதை இப்படி இருக்க. ஒரு நாள் சைக்கிள் ரிக்க்ஷாவில் 
பதிவர்கள் மாநாடு நடக்கிறது அனைவரும் வாரீர்ன்னு விளம்பரம் பண்ணீட்டு போயிட்டாங்க . இவங்க நாலு பேருக்கும் ஒரே மண்ட குழப்பம் ஆகிடிச்சி . என்னடா இது நாம நாலு பேரும்
இங்க இருக்கோம். . அப்புறம் எப்படி மாநாடு .? வேறு யாரும் பதிவு எழுதுகிறார்களா என்ன ..? அப்படி எழுதினால் அவர்கள் யாரென்று போயி பார்த்துவிடலாம். என்று பாங்கி சொல்ல . இல்லை நாமெல்லாம் பிரபல பதிவர்கள். அந்த விளம்பரத்தை நல்லா பாரு அது "வெறும்" பதிவர்கள் மாநாடு என்றுதான் போட்டிருக்கு . பிரபல பதிவர்கள் மாநாடு என்று இருந்தால் நாம் போகலாம் என்று டாங்கி சொன்னது , அதற்க்கு இங்கி அட அவசர படாதீங்கப்பா நாம இங்கயே உக்காந்து இருப்போம் இன்னும் கொஞ்ச நேரத்தில் பார்த்தசாரதி கோயில் யானை வரும் . அதன் துதிக்கையில் மாலை  இருக்கும் . அது நம்ம நாலு பேருக்கும் மாலை போட்டு பரிவட்டம் கட்டி நம்மளை விழா மேடைக்கு கூட்டிபோகும் . அங்கே நம்மளை நடு சென்டரில் வைத்து விருது குடுப்பார்கள் . அதனால் நாம் இங்கனயே குத்த வச்சி இருப்போம் . என்று சொல்லி அங்கேயே உக்கார்ந்து விட்டார்கள் .பாவம் அவர்கள் எதிபார்த்த யானை வரவே இல்லை .


இப்போது அவர்களுக்கே சந்தேகம் வந்து விட்டது உண்மையில் யார் பிரபல பதிவர் என்று . இந்த கேள்வியை தான் நான் உன்னிடம் கேட்க போகிறேன் விக்கிரமா . இவர்களில் உண்மையில் யார் பிரபல பதிவர் என்று . நீ சரியான விடை கூறிவிட்டால் காலா காலத்திற்கும் உன் வீட்டில் பத்து பாத்திரம் தேய்க்கிறேன் .

விக்கிரமன் தேவாங்கை பார்த்தான் அருகில் இருந்த மரத்தை பார்த்தான் . இதை விட அது பெட்டர் என்று முடிவு செய்து . தேவாங்கை கீழே இறக்கிவிட்டு அந்த மரத்தில் தூக்கு மாட்டிகொண்டான் ........................................................................................தி எண்டு 

........................................................

 

 

தொடர்புடைய குட்டி சீ........ சீ.........சுட்டி இதை கிளிக்கி பார்க்கவும்
 

61 கருத்து சொல்றாங்க:

Anonymous said...

அன்பர்....நான் ஒரு எழுத்தாளன் என்பதால் பதிவுகள் குறித்து பேச லஜ்ஜையாக உள்ளது. பதுவிசாக பேச இச்சையாக உள்ளது. நீங்கள் பிரபலம் ஆக அடிக்கடி கொசுக்கடிகளை எல்லாம் தாண்டி பதிவர் சந்திப்புகளில் கலக்க வேண்டும். இது எனது சிந்திப்பு.

Anonymous said...

'அன்பினால் எல்லாம் உடையார். அடுத்த சுவரை தாண்டினால் அடையார்' எனும் பீத்த பதிவரின் சொற்கேற்ப இப்பூவுலகில் அமைதியாக இருங்கள். உங்களை பார்த்தால் ஒரு குட்டி கே.ஆர்.பி.மாதிரி தெரிகிறது.

பட்டிகாட்டான் Jey said...

பதிவு அருமை. அதில் சொல்லப்பட்ட கதை ஆகச்சிறந்த கதை. இதை நான் மனப்பாடம் செய்துகொள்கிறேன்.

அப்போதுதான் அடுத்தடுத்து அடிக்கப்படும் ஆப்பிலிருந்து தப்பிக்க முடியும்.

இப்படிக்கு
கிழகிஷ்ணா.

அஞ்சா சிங்கம் said...

! சிவகுமார் ! said...

அன்பர்....நான் ஒரு எழுத்தாளன் என்பதால் பதிவுகள் குறித்து பேச லஜ்ஜையாக உள்ளது. பதுவிசாக பேச இச்சையாக உள்ளது. நீங்கள் பிரபலம் ஆக அடிக்கடி கொசுக்கடிகளை எல்லாம் தாண்டி பதிவர் சந்திப்புகளில் கலக்க வேண்டும். இது எனது சிந்திப்பு........
/////////////////////////////////////////

இதற்க்கு எங்கேயாவது அமர்ந்து லட்ஜை இல்லாமல் பிச்சை எடுக்கலாம் ....

சிராஜ் said...

எப்பா ராசாக்களா...

அவங்க 2 பேரையும் விட்டுடுங்கப்பா, ஏதோ தெரியாம சொல்லிட்டாங்க...

ஏன் நேரடியா பேர போட்டே கதை எழுதிட வேண்டியது தானே?? ஏன் சுத்தி வளைச்சு தாக்கிகிட்டு... நேரடி பஞ்ச் கொடுத்திட வேண்டியது தானே?????

அஞ்சா சிங்கம் said...

! சிவகுமார் ! said...

'அன்பினால் எல்லாம் உடையார். அடுத்த சுவரை தாண்டினால் அடையார்' எனும் பீத்த பதிவரின் சொற்கேற்ப இப்பூவுலகில் அமைதியாக இருங்கள். உங்களை பார்த்தால் ஒரு குட்டி கே.ஆர்.பி.மாதிரி தெரிகிறது.
////////////////////////////////
சரிதான் நான் ஒருத்தன்தான் குட்டி போடாமல் திரிஞ்சேன் எனக்குமா ..........?

குட்டி சுஜாதா கோவிச்சுக்க போறாரு ...........

அஞ்சா சிங்கம் said...

///அப்போதுதான் அடுத்தடுத்து அடிக்கப்படும் ஆப்பிலிருந்து தப்பிக்க முடியும்./////

ஆப்பு யாரும் வந்து அடிப்பதில்லை அது ஆங்காங்கே ரெடியாக உள்ளது . அவர்களாக போயி உக்காந்துக்கணும் ..

அஞ்சா சிங்கம் said...

சிராஜ் said...

எப்பா ராசாக்களா...

அவங்க 2 பேரையும் விட்டுடுங்கப்பா, ஏதோ தெரியாம சொல்லிட்டாங்க...

ஏன் நேரடியா பேர போட்டே கதை எழுதிட வேண்டியது தானே?? ஏன் சுத்தி வளைச்சு தாக்கிகிட்டு... நேரடி பஞ்ச் கொடுத்திட வேண்டியது தானே?????
////////////////////////////////////////////////////////////////////////////////////

இப்போ மட்டும் என்ன யாருக்கும் தெரியாமலா இருக்கு ......நேரடியா போடலாம்தான் ஆனால் விக்ரமாதித்யன் மாதிரி ஏதாவது செஞ்சிகிட்டா அந்த பாவம் நமக்கு வேண்டாம்ன்னுதான் ...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அன்பின் அஞ்சா சிங்கம்,
தங்கள் சமைத்த இந்த நவீனத்துவ கதையினை யாம் சற்றுமுன் படித்தோம். நிற்க. இக்கதையில் பொருட்குற்றம் உள்ளது. நான்கு பேருக்கு நல்லது என்றால் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று பிரபல மேதைகள் இயம்பி இருக்கின்றர் என்பதால், பிரபல பதிவர்களை அழைத்துவர யானை வரவில்லை என்பது சமகாலத்திற்கு பொருந்தா உண்மையாக தோன்றுகிறது. எனவே கதை மாந்தர்களின்பால் வாசகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை என்பதை உணர்கிறேன். இந்த சூழலை சற்றே ஆழ்ந்து உள்வாங்கி அவதானித்து தக்க குறியீடுகளை பொருத்தி அவற்றை பேச வைத்திருக்கலாம் என்பது அடியேனின் கருத்து.

நட்புடன்,
பிரபல பதிவர் பன்னிக்குட்டி ராம்சாமி 

(உடான்சில் வாக்களித்திருக்கிறேன் என்று அறிக, எத்தனையாவது வாக்கு என்று பார்க்க மறந்துவிட்டதால் அதை குறிப்பிட முடியாமைக்கு வருந்துகிறேன்)

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... அன்பின் அஞ்சா சிங்கம்,
தங்கள் சமைத்த இந்த நவீனத்துவ கதையினை யாம் சற்றுமுன் படித்தோம். நிற்க. இக்கதையில் பொருட்குற்றம் உள்ளது. நான்கு பேருக்கு நல்லது என்றால் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று பிரபல மேதைகள் இயம்பி இருக்கின்றர் என்பதால், பிரபல பதிவர்களை அழைத்துவர யானை வரவில்லை என்பது சமகாலத்திற்கு பொருந்தா உண்மையாக தோன்றுகிறது. எனவே கதை மாந்தர்களின்பால் வாசகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை என்பதை உணர்கிறேன். இந்த சூழலை சற்றே ஆழ்ந்து உள்வாங்கி அவதானித்து தக்க குறியீடுகளை பொருத்தி அவற்றை பேச வைத்திருக்கலாம் என்பது அடியேனின் கருத்து.

நட்புடன்,
பிரபல பதிவர் பன்னிக்குட்டி ராம்சாமி 
//////////////////////////////////////////////////////////////////////////////////

இது என்னங்கண்ணே இதுக்கு பேரு என்டர் காமன்ட்டா ............?
வழக்கமா நீங்க இப்படி பண்ற ஆள் இல்லையே ..........இன்னைக்கு என்ன ஆச்சி ...........?

அஞ்சா சிங்கம் said...

/////நட்புடன்,
பிரபல பதிவர் பன்னிக்குட்டி ராம்சாமி ////////////////

அட அந்த நாலு பேரில் நீங்களும் ஒருத்தரா ...............? சொல்லவே இல்ல ............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பின்னூட்டம் முழுவதும் பின்நவீனத்துவ குறியீடுகள் உள்ளதை அறிக....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அஞ்சா சிங்கம் said...
/////நட்புடன்,
பிரபல பதிவர் பன்னிக்குட்டி ராம்சாமி ////////////////

அட அந்த நாலு பேரில் நீங்களும் ஒருத்தரா ...............? சொல்லவே இல்ல ............///////

பிரபல பதிவர்கள் அந்த நாலுபேர் மட்டும்தானா தோழர்? நீங்களும் பிரபல பதிவர்தான், நானும் பிரபல பதிவர்தான்..... என்று அணுகி இருக்கிறேன் தோழர்.......!

Sivakumar said...

@ எழுத்தாளர் பன்னிக்குட்டி

தங்கள் மடல் கண்டேன். சமகால யானை பற்றிய எழுத்தில் இருந்த சூட்சும வஸ்துவையும் சிலாகித்தேன். நாளை எனக்கு லாஸ் வேகாஸ் கூகிள் ப்ளஸ் குழுமம் சார்பாக விருது மற்றும் விருந்த தர உள்ளனர். குறிப்பாக இரண்டு குஷ்பு இட்லியும் உண்டாம். எனவே பாடாவதி பரப்பிரம்ம வாழ்வை உதறி பப்பரப்பே என்று பாகிஸ்தான் வழியாக அமெரிக்கா பறக்கிறேன்.

நீங்கள் ஒரு திராவிட போர்வாள் என்பதை உணருங்கள். உங்களை குட்டி பட்டிக்காட்டான் எனும் விருது தந்து குளு குளுவிக்கிறேன்.

பால கணேஷ் said...

நவீன விக்ரமாதித்தன் கதை அருமை. ஆனா விக்கிய ரோசக்காரப் புள்ளயாக்கி மரத்துல தொங்க விட்டுட்டீங்களே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இது என்னங்கண்ணே இதுக்கு பேரு என்டர் காமன்ட்டா ............?
வழக்கமா நீங்க இப்படி பண்ற ஆள் இல்லையே ..........இன்னைக்கு என்ன ஆச்சி ...........?//////

யோவ்........ ஏன்யா......ஏன்...? மறுக்கா மறுக்கா படிச்சுப்பாருய்யா...... கொஞ்சம் டீசண்ட்டா கமெண்ட்டு போடவிடமாட்டீங்களே..... பதிவு எப்படியும் ஹிட்டாகிடும், நாலு பேர் நாலு எடத்துல இருந்து வருவாங்க, இலக்கியத்தரத்துல கமெண்ட்டு போட்டு பெரிய எழுத்தாளராகிடலாம்னு பார்த்தா விடமாட்டேங்கிறீங்கய்யா........

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பின்னூட்டம் முழுவதும் பின்நவீனத்துவ குறியீடுகள் உள்ளதை அறிக....!
////////////////////////////////////

என்ன கருமமோ நமக்கு இது மட்டும் புரிய மாட்டுது பின்நவீனம் அப்படீனா கீ போர்டை பின்னால வைத்து டைப்பனுமா...........?

Sivakumar said...


//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////அஞ்சா சிங்கம் said...
/////நட்புடன்,
பிரபல பதிவர் பன்னிக்குட்டி ராம்சாமி ////////////////

அட அந்த நாலு பேரில் நீங்களும் ஒருத்தரா ...............? சொல்லவே இல்ல ............///////

பிரபல பதிவர்கள் அந்த நாலுபேர் மட்டும்தானா தோழர்? நீங்களும் பிரபல பதிவர்தான், நானும் பிரபல பதிவர்தான்..... என்று அணுகி இருக்கிறேன் தோழர்.......!///

தோழர்..உடுமலைப்பேட்டை உடான்ஸ் சாமியார் (பராசக்தி புகழ்) உண்டைக்கட்டி வாங்கி தின்ன ட்ரான்ஸ்போர்ட் கேட்கிறார். அவரோ சட்டை கிழிந்த ஏழை. அவருக்கு தங்களால் ஆன உதவியை செய்ய செய்யவும்.

சென்னையில் நான்கு பிரபல பதிவர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களை எனக்கு தெரியாது. நீங்கள் ஒரு உன்னத பதிவர் என்பதால் உங்கள் கணுக்காலில் விழுந்து யாசகம் கேட்கிறேன். உதவுங்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

@ ரைட்டர் சிவகுமார்,

தாங்கள் குஷ்பூ இட்டிலிகளை குறிப்பிட்டதை வைத்து தங்களின் திராவிட தாகத்தை அறிந்து கொண்டேன். நன்றாக விருந்து சமைத்துவிட்டு வரவும்....!

Unknown said...

தோழர் அஞ்சா சிங்கம் பின்நவீனத்துவத்தில்....!புலிபாணியில் நன்றாக எழுதியுள்ளீர்கள்...!
விரைவில் எலிப்பாணி, நரிப்பாணி, என பட்டையைக் கிளப்புங்கள்...!

Sivakumar said...


//பன்னிக்குட்டி ராம்சாமி said...
@ ரைட்டர் சிவகுமார்,

தாங்கள் குஷ்பூ இட்டிலிகளை குறிப்பிட்டதை வைத்து தங்களின் திராவிட தாகத்தை அறிந்து கொண்டேன். நன்றாக விருந்து சமைத்துவிட்டு வரவும்....!//

நீங்கள் இப்படியே பேசிக்கொண்டு இருந்தால் இன்னொரு புள்ளை பூச்சியை கூகிள் ப்ளஸ்ஸில் ராகிங் செய்வேன். ராகிங் செய்வதில் நான் ராவான கிங் என்பதை உணர்க.
என்னுடன் பாதுஷாவும் இணைந்தால் பட்டையை கிளப்புவோம்.

உங்களில் யார் அடுத்த புள்ளை பூச்சி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அஞ்சா சிங்கம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

பின்னூட்டம் முழுவதும் பின்நவீனத்துவ குறியீடுகள் உள்ளதை அறிக....!
////////////////////////////////////

என்ன கருமமோ நமக்கு இது மட்டும் புரிய மாட்டுது பின்நவீனம் அப்படீனா கீ போர்டை பின்னால வைத்து டைப்பனுமா...........?/////

இல்லை கீபோர்டுடன் பகார்டியை வைத்துக் கொண்டு பார்க்க வேண்டும்....!

sathishsangkavi.blogspot.com said...

மச்சி இனி பிரபல பதிவர் என்று சொல்வதற்கு ரொம்ப யோசிப்பாங்கய்யா...

Sivakumar said...


//வீடு சுரேஸ்குமார் said...
தோழர் அஞ்சா சிங்கம் பின்நவீனத்துவத்தில்....!புலிபாணியில் நன்றாக எழுதியுள்ளீர்கள்...!
விரைவில் எலிப்பாணி, நரிப்பாணி, என பட்டையைக் கிளப்புங்கள்...!//

அன்பர் வீடு,

நீங்கள் ஒரு திராவிட் (!) போர்வாள் என்பதை உணர்க. உங்கள் எழுத்தை பார்க்கையில் எனது தலைவர் கம்மாக்கரை கக்கூசில் கதறிய கவிதை நினைவிற்கு வருகிறது. வாழ்த்துகள். நன்றிகள்.

நிறைய பேசினால் கூகிள் ப்ளஸ்ஸில் இருக்கும் சான்றோர்களை வைத்து கலாய்த்து விடுவேன். நான் பயங்கர டெர்ரர். அடங்கவும். இல்லாவிடில் அடக்கப்படுவீர்கள். சொல்லிபுட்டேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///உங்களில் யார் அடுத்த புள்ளை பூச்சி?////

மானாட மயிலாடவில் வருவது போன்ற நல்ல ஜட்ஜுகளை வைத்து அடுத்த புள்ளை பூச்சியை தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Unknown said...

நமீதா!

அஞ்சாஸிங்கம் ஆனை வரும் மால போடும்ன்னு சொல்லுது நாலு பேர் உக்காந்து இருக்குது ஆனைன்னு என்னை சொன்னீங்களா மச்சான்ஸ்! இது நல்லா இல்லே எனக்கு கோவம் வருது!

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா நல்லாதானே போயிகிட்டு இருந்துச்சு.....ஆரம்பிச்சுட்டானுகளே.....இனி நக்ஸ் இருப்பு கொள்ளாம ஓடிவந்து கொலை கொலையா முந்திரிக்கா விளையாடுவாரே...!

Unknown said...

கலா மாஸ்டர்
அஞ்சா சிங்கம்.....
ரியலி சூப்பரப்..!
தலீவர் கதை சொன்ன மாதிரியே இருந்தது..!
அதுவும் அந்த வேதாளத்துக்கு பதிலா தேவாங்கு...!பென்டாஸ்டிக்....!பென்டாஸ்டிக்....!
அஞ்சா சிங்கம் கிழிகிழின்னு கிழிச்சுட்ட போ..!

வா....வா.....இந்தா ஒன்னேமுக்கால் ரூபா...!கீப் இட்....!

Admin said...

படிச்சுட்டு சும்மா போனா எப்படின்னு கேக்குறீங்க.அதனால நானும் கருத்தை சொல்லிட்டே போயிடுறேன்..

Unknown said...

குசுப்பு Said!

அஞ்சா சிங்கம் நல்லா பண்ணியிருக்கிங்க....!
அதுவும் /////பாங்கி சொல்றாரு என் இடுப்பை கிள்ளி பாருங்க நான் துள்ளுவேன்.////இந்த இடத்தில கிள்ளிய மாதிரியே துள்ளினேன் வெல்டன் சபாஷ்!

Sivakumar said...


கூகிள் ப்ளஸ்ஸில் மாற்றான் இருவரும் ஓட்டியதில் ங்கோயா மக்கா வியாதியால் பீடிக்கப்பட்டுள்ள/படவுள்ள பதிவர்களுக்கு சிகிச்சை தேவை.

மருத்துவர்,கலைமாமணி - பன்னிக்குட்டி ஆவன செய்ய வேண்டும்.

- இவண்,

விருதுக்கு வீங்கும் வித்தக விபீஷணன்.

Sivakumar said...


//MANO நாஞ்சில் மனோ said...
ஆஹா நல்லாதானே போயிகிட்டு இருந்துச்சு.....ஆரம்பிச்சுட்டானுகளே.....இனி நக்ஸ் இருப்பு கொள்ளாம ஓடிவந்து கொலை கொலையா முந்திரிக்கா விளையாடுவாரே...!//

தோழர் பாதுஷா. பைலட் தியேட்டர் டிக்கட் கேன்சல். இதோ நமக்கு ஒரு புள்ள பூச்சி சிக்கி உள்ளது. தீவிரமாக ராக்கிங் செய்வோம். அலைகடலென வாடகை சைக்கிளில் பறந்து வா.

rajamelaiyur said...

ஏற்கனவே அவர்களாகவே பிள்சில் தூக்கு போட்டுகொண்டாபோல புகைப்படம் போட்டு கொண்டார்கள் .. இதை படித்த பின் அது நிஜமாக மாறிவிட போகிறது

அஞ்சா சிங்கம் said...

என்ன மாயம் இன்னும் அப்பெண்டிக்சுகளை திட்டி ஒரு கமன்ட்டும் வரவில்லை .............

Unknown said...

இதற்கு கைமாறாக இத்தனை பேரும் டிசம்பர் சீசன்ல மோளம் நேரடியா வாசிப்போம்.....!ஈரோடு தாங்குமான்னு தெரியலை....?

arasan said...

விக்காத மாதித்தன் சீ விக்கிர மாதித்தன் கதை அருமையாக இருக்குங்க அண்ணே

சி.பி.செந்தில்குமார் said...

>>அஞ்சா சிங்கம் said...

என்ன மாயம் இன்னும் அப்பெண்டிக்சுகளை திட்டி ஒரு கமன்ட்டும் வரவில்லை .............
September 10, 2012 12:04 PM

ராகுகாலம் மாலை 7 டூ 8 . அப்போ வரலாம் ;-0

Sivakumar said...

அன்பர் அஞ்சா...

சரியான பதில் சொல்ல வக்கு இல்லை என்றால் உங்கள் எதிரிகளை இப்படி ஓட்டுக:

உங்கள் மூக்கு ஸ்ரீதேவி போல் உள்ளது. அவருடைய நாக்கு சிம்ரன் மாதிரி உள்ளது. இவருடைய நெத்தி ராதிகா மாதிரி உள்ளது. இவன் ஒரு டயப்பர் வாயன். செத்தான் உங்கள் எதிரி. எப்புடி நம்ம டிப்ஸ்??

- இப்படிக்கு,
சர்வ லட்சணம் பொருந்திய சாமுத்ரிகா யுவதி!!

Sivakumar said...

மஞ்சள் பத்திரிகை போல் எழுத வேண்டாம் தோழர்களே..

இப்படிக்கு,

'ஷகிலா போஸ்ட் புகழ்' டயப்பர் வாயன்!!

அஞ்சா சிங்கம் said...

! சிவகுமார் ! said... அன்பர் அஞ்சா...

சரியான பதில் சொல்ல வக்கு இல்லை என்றால் உங்கள் எதிரிகளை இப்படி ஓட்டுக:

உங்கள் மூக்கு ஸ்ரீதேவி போல் உள்ளது.///////////////////////////////

தோழர் சிவா இங்கு நவீன முறையில் பிளாஸ்டிக் சர்ஜரி இலவசமாக செய்து தரப்படும்

இப்படிக்கு அப்பன்டிக்ஸ்களின் அனகோண்டா ..

Anonymous said...

தமிழின் நம்பர் ஒன் பதிவர் சிபி செந்தில் குமார் வந்து உங்களுக்கு பின்னூட்டமிட்டிருக்கிறார் என்றால் இந்த பதிவின் தரம் எப்படி என்பதை நான் உங்களுக்கு விம் போட்டு விளக்கவா வேண்டும். அருமை, அருமை.

அஞ்சா சிங்கம் said...

அதானே என்னடா இன்னும் அந்த மைனஸ் ஒட்டு விழவில்லையே என்று கலங்கி போயி இருந்தேன் ..
வழக்கமாக வந்து மைனஸ் ஒட்டு போடும் என் வாசகர் வரவில்லையே என்ற தவிப்பு வேறு .. நல்லவேளையாக என் வாட்டத்தை போக்கி விட்டீர்கள் ........நன்றி

IlayaDhasan said...

//டாங்கி மட்டும் என்ன லேசு பட்டதா? நான் நிறைய அழுகாச்சி காவியம் எல்லாம் எழுதி இருக்கேன் அதனால் நாந்தான் பிரபல பதிவர்ன்னு ...
//
இது மட்டும் யாருன்னு தெரியுது ,மிச்சவீங்க யாருன்னு தெரியல நெசமாலுமே,கொஞ்சம் சுட்டி கொடுக்கமுடியுமா, அப்புறம் ஏதாவது ரெபெரன்சு ஆர்டிகிள்,முக்கியமா பேஜ் நம்பர் ப்ளீஸ். சைண்டிஸ்ட் சொன்ன மாதிரி இருந்தா டபுள் ஓகே!

அஞ்சா சிங்கம் said...

IlayaDhasan said...
நண்பா தொடர்புடைய சுட்டியை பதிவின் கீழ் குடுத்து விட்டேன் . அங்கு சென்றால் இன்னும் தெளிவாக புரியும் . அதுவும் நம்ம இடம்தான் .

mohamed salim said...

ரெடி!!! ஸ்டார்ட் !!! மியூசிக் !!!

குட்டன்ஜி said...

சிங்கம் கெளம்பிடுச்சு!ஓடுங்கப்பா!

Anonymous said...

பிரபல பதிவர் ஆனாலும் ஆனீங்க இப்படி மண்டை காய விடுறீங்களே சிங்கம் ... விக்கிரமாதித்தானாவது தூக்கில் தொங்கினான்.. நானாக இருந்தால் ஸ்பாட்டிலேயே காலியாகி இருப்பேன் ... !!!

முடியல சாமி ....

பாருங்கடா இந்தப் பதிவுக்கும் ஒரு மைனஸ் வோட்டு விழுந்துருக்கு ... கன்ஃபார்ம் ..

அப்போ தேவாங்கு சொன்ன அந்த பிரபல பதிவரு நீங்க தானா ..................................................... !!!!!

CS. Mohan Kumar said...

//ஆரூர் மூனா செந்தில் said...
தமிழின் நம்பர் ஒன் பதிவர் சிபி செந்தில் குமார் வந்து உங்களுக்கு பின்னூட்டமிட்டிருக்கிறார் என்றால் இந்த பதிவின் தரம் எப்படி என்பதை நான் உங்களுக்கு விம் போட்டு விளக்கவா வேண்டும். அருமை, அருமை. /

:)))

அஜீம்பாஷா said...

பிரபல பதிவருக்கு லால் சலாம்.

ராஜ் said...

அன்பின் அஞ்சாசிங்கம்..
நீங்கள் கூறிய நான்கு பதிவர்களை எண்ணி பார்க்கும் போது..எனக்கு 90 களில் கொடி கட்டி பறந்து இபொழுது மார்க்கெட் இழந்த தமிழ் கதாநாயகர்களின் பெயர்கள் தான் ஞாபகம் வருகிறது..
பிரதாப் கே. போதன் = இங்கி
ராமராஜன் = பிங்கி
நடன புயல் பாக்யராஜ் = பாங்கி
மைக் மோகன் = டாங்கி
இவர்கள் தங்களை காலத்திற்கு ஏற்ற மாற்றி கொண்டு ஹீரோயின்க்கு அப்பா, ஹீரோவுக்கு மாமா போன்ற கதாபாத்திரங்கள் பண்ணாமல், இன்னும் ஹீரோ ரோல் தான் பண்ணுவேன் என்று அடம் பிடிப்பது ஏற்று கொல்ல முடியவில்லை...
Some one has to do something about this somewhere....

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஹா..ஹா...

ரஹீம் கஸ்ஸாலி said...

ம்.................. நடக்கட்டும்.....
இப்படிக்கு பிரபல, பிரபல பதிவர்: ரஹீம் கஸாலி

தமிழ்வாசி பிரகாஷ் said...

தங்கள் கதையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள நான்கு பேர்களின் கதையை சுருக்கி பதிவாக போடவும்.
ஏன்னா, பிரபலங்களை??????? எழுதி இன்னும் பிரபலம் ஆகட்டும்.
அந்த பதிவு வந்ததுக்கு அப்புறமா அஞ்சா சிங்கம் வாழ்க அப்படின்னு அந்த பிரபலங்கள் கூவும்....

அப்போ நீ காலரை தூக்கி விட்டுக்கோ மச்சி...

அஞ்சா சிங்கம் said...

தமிழ்வாசி பிரகாஷ் said... தங்கள் கதையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள நான்கு பேர்களின் கதையை சுருக்கி பதிவாக போடவும்.////////////////////////////////

ஏன் ஏதுக்கு இந்த கொலை வெறி ....

அஞ்சா சிங்கம் said...

ரஹீம் கஸாலி said...

ம்.................. நடக்கட்டும்.....
இப்படிக்கு பிரபல, பிரபல பதிவர்: ரஹீம் கஸாலி.................///////////////////////////////

அதெல்லாம் முடியாது நாங்க ஏத்துக்க மாட்டோம் நீங்க விளிம்பு நிலை பதிவர்தான் ..............

அஞ்சா சிங்கம் said...

ராஜ் said...
Some one has to do something about this somewhere....////////////////

இல்லை என்றால் விளம்பரத்திற்கு போகலாம் ......கல்யான் ஜுவல்லர்ஸ் புரட்சி போராட்டம் ........

அஞ்சா சிங்கம் said...

azeem basha said...

பிரபல பதிவருக்கு லால் சலாம்..........................////////////////////

குசும்பு தான் ...........

அஞ்சா சிங்கம் said...

இக்பால் செல்வன் said.

அப்போ தேவாங்கு சொன்ன அந்த பிரபல பதிவரு நீங்க தானா ..................................................... !!!!!
//////////////////////////////////////////////////

ஐயோ சாமி அந்த தேவாங்கே நான்தான்னு நினைத்து கொள்ளுங்கள் ...........

அஞ்சா சிங்கம் said...

குட்டன் said...

சிங்கம் கெளம்பிடுச்சு!ஓடுங்கப்பா!///////////////////////////////
/////////////////////////////////
சிங்கம் சிலிர்த்து கிட்டு இருக்கும் போது சீப்பை கொண்டு வார முயற்சித்தால் என்ன ஆகும் ...

அஞ்சா சிங்கம் said...

mohamed salim said...

ரெடி!!! ஸ்டார்ட் !!! மியூசிக் !!!////////////////////////////////////////
அதை ஆரம்பத்தில் சொல்லணும் ..........

இந்திரா said...

செம உள்குத்தா இருக்கே..
இது யாருக்கு? யாருக்கோ..

அந்த வேதாளம் நல்ல முடிவு தான் எடுத்திருக்கு.

Popular Posts