Wednesday, May 18, 2011

இந்த மிருகத்தை என்ன செய்யலாம்----உண்மை சம்பவம்

v

நான் என் நண்பர்கள் இருவருடன் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சில நாட்களுக்கு முன்னர் சென்று இருந்தேன் .
அங்கு நடந்த ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .

நேரில் பார்த்தவர்களுக்கு அந்த பூங்கா பற்றி நன்றாக தெரிந்திருக்கும் . சென்னைகுள் ஒரு காடு உள்ளது என்றால் அது வண்டலூர்தான். நல்ல அடர்த்தியான மரங்கள் உள்ள இடம் என்பதால் நல்ல மற்றும் கள்ள காதலர்களின் டாப் டென் வரிசையில் வண்டலூர் எப்போதும் முதலிடம் வகிக்கும் .

பிற்பகல் இரண்டு மணி நல்ல உச்சி வெயில். மரங்கள் சூழ்ந்த   இடம் என்பதால் வெயில் அவ்வளவாக  தெரியாது நல்லா உண்ட களைப்பு தீர ஒரு மரத்தடியில் என்னுடன் வந்த நண்பர்களில் ஒருவன் குட்டி தூக்கம் போட்டான் .
எனக்கு தூக்கம் வரவில்லை அதனால் முழித்திருந்த இன்னொருவனையும் கூட்டி கொண்டு அப்படியே ஒரு நடை போட்டு வரலாம் என்று கிளம்பினேன் .

லயன் சபாரி செய்யும் இடம் மிகவும் அடர்ந்த காடுபோல் இருக்கும் . நண்பகல் என்பதால் பயங்கர நிசப்தம் அப்போது காட்டுக்குள் யாரோ வேகமாக ஓடிவரும் சத்தம் கேட்டது . சத்தம் வந்த திசை நோக்கி நாங்கள் இருவரும் சென்றோம் அருகில் செல்ல செல்ல முச்சிரைக்கும்  சத்தம் பெரிதாக கேட்டது.

அப்போது புதருக்கு பின்னால் இருந்து ஒரு பதினைந்து வயது மதிக்க தக்க  இளம் பெண் வேகமாக ஓடிவந்தாள் .
வேகமாக வந்து என்மேல் மோதி என்னை  பின்னால் இருக்க பிடித்து கொண்டால் . அவள் உடல் நடுங்குவது அவள் இதய துடிப்பின் வேகம் மற்றும் அவள் ஓடிவந்த வேகம் அவள் மூச்சிரைப்பின் மூலம் நன்றாக புரிந்தது. யாருக்கோ பயந்து இப்படி நடுங்குகிறாள் என்று புரிந்தது .

அவளை மெல்ல ஆசுவாசபடுத்தி அவள் முதுகை தடவி பயபடாதே நான் இருக்கிறேன் என்ன ஆயிற்று என்று கேட்டேன். அவள் எவ்வளவோ பேச முயற்சித்தும் அவள் வாயில் இருந்து வார்த்தை  வரவில்லை  உடல் முழுவதும் ஒவ்வொரு மில்லி மீட்டரும் நடுங்கி கொண்டிருந்தது . என் பைகுள் கையை விட்டு என் செல் போனை எடுத்து யாருக்கோ போன் செய்ய முயற்சித்தாள் . அவள் விரல்கள் அதற்க்கு ஒத்துழைக்க வில்லை மீண்டும் போனை என்கையில் குடுத்துவிட்டு பரிதாபமாக பார்த்தாள்.
.


என் நண்பன் உடனே தன் கையில் இருந்த குளிர்பானத்தை அவளிடம் குடுத்து குடிக்க சொன்னான் .
அப்போது நான் அவளை கவனித்தேன் அவள் காலில் செருப்பு இல்லை. அவள் உடை ஓரளவு வசதியானவள் என்று காட்டியது .உடம்பில் ஆங்காங்கே முற்கள் குத்திய காயம் இருந்தது .
அவள் ஓடிவந்த திசை நோக்கி சில  அடி தூரம் நடந்து பார்த்தேன் ஒன்றும் தென்படவில்லை.
மீண்டும் திரும்பி வந்தபோது அவள் ஓரளவு தெளிவாக இருந்தால் என் நண்பனிடம் பேசி கொண்டிருந்தாள் .

என்னை பார்த்ததும் எழுந்து வந்து அண்ணா என்னை எப்படியாவது வெளியே கொண்டு விட்டு விடுங்கள் என்று கதறினாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை உன் பிரெச்சனை என்ன சொல் நான் இருக்கும் போது எந்த ஆபத்தும் வராது தைரியமாக இரு என்று சொன்னேன் .

அவள் சொன்னதை கேட்டு நானும் என் நண்பனும் கோவத்தின் உச்சிக்கு சென்று விட்டோம் .
அப்படி என்ன சொன்னால் என்று தெரிய வேண்டுமா ?

அவள் ஒரு ப்ளஸ் 2  மாணவி அவள் காதலனுடன் வண்டலூருக்கு வந்திருக்கிறாள் . அவனும் அவளுடன்  படிக்கும் மாணவன்தான்.    இருவரும் ஆள் நடமாட்டம் இல்லாத லயன் சபாரி இடத்தில அமர்ந்து பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்கள் . அப்போது அவன் அவளுக்கு முத்தம் குடுக்க முயற்சி செய்திருக்கிறான் . இதை அங்கு வந்த காவலர் ஒருவர் பார்த்துவிட்டார் . அவர் இருவரையும் பிடித்து மிரட்டி இருக்கிறார் . அந்த பையனை ஜெயிலில் போட்டு விடுவேன் என்று மிரட்டி அடித்து விரட்டி விட்டார் .

இந்த பெண்ணை மட்டும் பிடித்து கொண்டு உன்னை போலீசில் ஒப்படைக்க  போகிறேன். விபச்சாரம் செய்தாய் என்று உன்னை உள்ளே போட்டு விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார் .
ஐயா என்னை விட்டு விடுங்கள் இனிமேல் இந்தமாதிரி தனியாக வரமாட்டேன் என்று கெஞ்சி இருக்கிறாள் .

சரி அப்படி என்றால் என்னோடு வா என்று  அழைத்து போயிருக்கிறான் .அங்கே அவனோடு இன்னொரு கபோதியும் சேர்ந்து கொள்ள இவளுக்கு பயம் வந்துவிட்டது. என்னை எங்கே கூட்டி போகிறீர்கள் என்று கேட்டிருக்கிறாள் .
உன்னை போலீசில் பிடித்து குடுக்க வேண்டாம் என்றால் எங்களோடு ஒரு பத்து நிமிடம் ஜாலியாக இரு இல்லை என்றால் விபச்சார கேசில் உள்ளே இரு எப்படி விருப்பம் என்று எச்சில் ஒழுக அந்த நாய் கேட்டிருக்கு . இவள் மறுக்கவே பலாத்காரம் செய்ய முயன்று இருக்கிறார்கள் .

அவர்களை தள்ளி விட்டு தப்பி வந்து வழி தெரியாமல் ரொம்ப நேரம் சுற்றி எங்களை பார்த்திருக்கிறாள் .
 அவளிடம் அவள் காதலன் நம்பர் வாங்கி பேசினேன் .அவனும் பயந்து போய் பூங்காவிற்கு வெளியே காத்திருந்தான் .
பயபடாதே பத்திரமாக இருக்கிறாள் நான் வெளியே கூட்டி வருகிறேன் என்று சொன்னேன் .

வெளியே வரும் வழியில் இரண்டு காவலர்கள் யாரையோ தேடுவது போல் சுற்றும் முற்றும் பார்த்து கொண்டிருந்தனர்
நான் அந்த பெண்ணிடம் கேட்டேன் உன்னை பலாத்காரம் செய்ய முயன்றவர்கள் உனக்கு அடையாளம் தெரியுமா ?
தெரியும் அதோ இருக்கிறான் என்று ஒருவனை காட்டினாள் அவனுக்கு சத்தியமாக ஐம்பது வயது இருக்கும் .

நான் அவள் கையை பிடித்து கொண்டு என்னோடு வந்து அவனை நேராக அடையாளம் காட்டு என்று இழுத்து சென்றேன். அவள் அண்ணா வேண்டாம் என்னை பத்திரமாக  வெளியே  கொண்டு விடுங்கள் போதும் என்று மீண்டும் அழ ஆரம்பித்தாள் . நான் இவளை கூட்டி கொண்டு வருவதை பார்த்த அந்த காவலர்கள் வேகமாக தங்கள் பைக் ஸ்டார்ட் செய்து அந்த இடத்தை விட்டு ஓடி விட்டார்கள் .

என் நண்பனும் அந்த பெண் சொல்வது தான் சரி அதன் வாழ்க்கை பாதிக்கும் அதனால் விட்டு விடு என்று சொன்னான் .
எனக்கும் அது சரியாக பட்டது .
அவளை வெளியே கூட்டி வந்தேன் அங்கே அவள் காதலன் என்று சொல்ல கூடிய பொடியன் நின்று கொண்டிருந்தான்
எனக்கு அந்த காவலன் மேல் இருந்த கோவத்தை இவன் மேல் இறக்கி வைத்தேன் . இடது கன்னம் மட்டும் லேசாக வீங்கியது புத்திமதி சொல்லி இருவரையும் அனுப்பி வைத்தேன் .

இன்னும் வண்டலூரில் அந்த மிருகம் வேலை செய்கிறது எத்தனை  பயந்த அப்பாவி பெண்களை அது வேட்டையாடி இருக்குதோ இல்லை இன்னும் எத்தனை பேரை வேட்டையாட காத்திருக்குதோ ?

நீங்களே சொல்லுங்கள் அந்த மிருகத்தை என்ன செய்யலாம் என்று .
 

 

77 கருத்து சொல்றாங்க:

Unknown said...

இது தீவிரமான பிரச்சினை, கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்..

அஞ்சா சிங்கம் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

இது தீவிரமான பிரச்சினை, கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்..
/////////////////////////////////////

அதை தான் யோசித்து கொண்டிருக்கிறேன் என்ன பண்ணலாம் என்று .......

சி.பி.செந்தில்குமார் said...

போலீஸில் புகார் கொடுக்க வேண்டும். காதலர்கள் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஏரியாவில் எண்ட்டர் ஆகாமல் இருப்பது நல்லது. எல்லா ஊர்களிலும் இதற்கென்றே ஆள்கள் இருக்கிறார்கள்

அஞ்சா சிங்கம் said...

சி.பி.செந்தில்குமார் said...

போலீஸில் புகார் கொடுக்க வேண்டும். காதலர்கள் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஏரியாவில் எண்ட்டர் ஆகாமல் இருப்பது நல்லது. எல்லா ஊர்களிலும் இதற்கென்றே ஆள்கள் இருக்கிறார்கள்..
///////////////////////////////////////////////////////////

காவலர்கள் தான் இந்த மாதிரி தவறை துணிந்து செய்கிறார்கள் .

கூடல் பாலா said...

காவலர்களின் இச்செயல் மன்னிக்க முடியாதது ...

அஞ்சா சிங்கம் said...

koodal bala said...

காவலர்களின் இச்செயல் மன்னிக்க முடியாதது ...
////////////////////////////////////////

நிச்சியமாக அது ஏற்கனவே ருசி கண்ட பூனையாகதான் இருக்கும் .
அதனால் தான் அந்த துணிச்சல் வந்திருக்கும் ...............

Unknown said...

இதற்க்கு உணர்ச்சி பூர்வமாக என்ன பதில்வேண்டுமானாலும் சொல்லாம் , நிர்வாகத்திடம் போலீசிடம் கம்ப்ளைன் செய்யத்தான் நம்மால் முடியும்

அஞ்சா சிங்கம் said...

நா.மணிவண்ணன் said...

இதற்க்கு உணர்ச்சி பூர்வமாக என்ன பதில்வேண்டுமானாலும் சொல்லாம் , நிர்வாகத்திடம் போலீசிடம் கம்ப்ளைன் செய்யத்தான் நம்மால் முடியும்............/////////////////////////////////////
////////////////////////////
கம்ப்ளைன்ட் பண்ண தயங்குவார்கள் என்று ஓநாய்களுக்கு தெரியும் .
அதனால் இதை வேறு விதமாக கையாள வேண்டும் ............

Unknown said...

மாப்ள இது இப்படியெல்லாம் டீல் செய்யக்கூடாது......!

மாப்ள பயபுள்ளைங்க மேட்டர கட் பண்ணிடனும்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இந்தவிஷயத்தை உடனடியாக போலீசில் முறையிடுவதே நல்லது!!

தமிழ்வாசி பிரகாஷ் said...

அவளை காட்டுக்கு கூட்டி வந்து முத்தம் கொடுத்தானே அவன் தான் முதல் மிருகம்.

ரேவதி சீனிவாசன் said...

இந்த மாதிரி சம்பவத்தை பாடித்தாலோ அல்லது கேட்டலோ எனக்கு வரும் கோபத்துக்கு அளவே இல்லை. இதில் யோசிக்க ஒன்றுமே இல்லை, அவனை நிற்க வைத்த சுட வேண்டும். இது போல பல சம்பவங்களை என் பள்ளி நாட்களில் பேருந்தில் நான் பார்த்திருக்கிறேன். இது போல் அலையும் மிருகங்கள் அனைத்தும் 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள்தான்.

Unknown said...

Good orticle. hats off our brother to help the girl

துளசி கோபால் said...

அந்த மிருகத்தைக் கூண்டில் உடனே ஏத்தணும்:(

சிவா said...

தோழரே,



இதை போன்ற சம்பவங்கள், பொது இடங்களில் மட்டும் அல்ல, சில,பல அலுவல்களிலும் நடக்கின்றது.

நிறைய பெண்கள் நமக்கேன் வம்பு என்று பேசாமல் இருக்கிறார்கள்.

முதலில் அந்த பெண்ணின் மீதுதான் தவறு இருக்கிறது. தன்னை காப்பாற்ற தன் காதலனுக்கு தைரியம் இருக்கிறதா என்பதை அவள் சிந்தித்து இருக்க வேண்டும். அடுத்தாற் போல அந்த வெளியே நின்ற இளைஞனுக்கு புத்திமதிகள் (வெகுமதியோடு) சொல்லி இருக்க வேண்டும்.

மூன்றாவது அப்படியே போய் நிர்வாகத்திடம் புகார் செய்திருக்க வேண்டும். அந்த பெண்ணின் எதிர்காலத்தை பற்றி அந்த பெண்ணே கவலை கொள்ளாமல்தான் பெற்றோருக்கு தெரியாமல் எவனோ ஒரு பயந்தான்கொள்ளியோடு வந்திருக்கிறாள்.

இது சம்பந்தமாக சொல்லாமல் வந்ததால் அந்த அம்பது வயது கிழத்திற்கு ஒன்றும் பிரச்சினை இல்லை, வண்டலூரில் கூண்டுக்குள் இருப்பவை எல்லாம் மிருகங்கள் அல்ல, அந்த மாதிரியான கிழம்தான் முக்கியமான, ஆபத்தான மிருகம்.

அவன் ஒருவேளை மாட்டி இருந்தால் அவனை நிர்வாணமாய் ஆக்கி போகும், வருவோரை எல்லாம் வைத்து கல்லால் அடிக்க செய்ய வேண்டும்.

அவன் கழுத்தினில் ஒரு பலகையை மாட்டி அவன் தனியே வந்த பெண்ணிடம் என்ன செய்ய முயற்ச்சித்தான் என்று எழுதி வைக்க வேண்டும். அதற்க்கு பிறகு எந்த ஜோடியாவது உள்ளே சென்று அட்டூழியம் செய்யுமா என்ன?

தவறு அந்த மூன்று பேரிடமும் இருக்கிறது. முதலில் பெற்றோரை ஏமாற்றி வந்த அந்த பெண், இரண்டாவது பெண்ணை காவு கொடுத்து விட்டு வாசலில் நின்ற அந்த பொடியன், மூன்றாவது அந்த கிழவனும் அவனது கூட்டாளிகளும்.

Chitra said...

என்ன கொடுமைங்க இது? :-(

அஞ்சா சிங்கம் said...

விக்கி உலகம் said...

மாப்ள இது இப்படியெல்லாம் டீல் செய்யக்கூடாது......!

மாப்ள பயபுள்ளைங்க மேட்டர கட் பண்ணிடனும்!
//////////////////////////////

வா மாப்பு

அஞ்சா சிங்கம் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இந்தவிஷயத்தை உடனடியாக போலீசில் முறையிடுவதே நல்லது!!
//////////////////////////////////

அறியாமல் விளைவுகளை பற்றி புரியாமல் ஒரு பருவ கோளாறின் விளைவாக வந்த அந்த சிறு பெண்ணின் வாழ்கையை பற்றி நாம் கொஞ்சம் யோசிக்கத்தான் வேண்டும் .............

அஞ்சா சிங்கம் said...

தமிழ்வாசி - Prakash said...

அவளை காட்டுக்கு கூட்டி வந்து முத்தம் கொடுத்தானே அவன் தான் முதல் மிருகம்./////////
/////////////////////////////////

அவனை விடுங்க பாஸ் அவன் சிறுவன் அவனுக்கு நாம் வாழும் உலகம் காட்டை விட ஆபத்தானது என்று இனிமேல் புரிந்திருக்கும் .......................

Anonymous said...

காவலர்களா கயவர்களா !!!

அஞ்சா சிங்கம் said...

ரேவதி சீனிவாசன் said...

இந்த மாதிரி சம்பவத்தை பாடித்தாலோ அல்லது கேட்டலோ எனக்கு வரும் கோபத்துக்கு அளவே இல்லை. இதில் யோசிக்க ஒன்றுமே இல்லை, அவனை நிற்க வைத்த சுட வேண்டும். இது போல பல சம்பவங்களை என் பள்ளி நாட்களில் பேருந்தில் நான் பார்த்திருக்கிறேன். இது போல் அலையும் மிருகங்கள் அனைத்தும் 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள்தான்...................////////////////////
//////////////////////////////////////////////////////
உண்மைதான் அவனை ஒன்றும் செய்யாமல் விட்டு வந்தது எனக்கு இன்னும் வருத்தம்தான் ....

அஞ்சா சிங்கம் said...

AZIFAIR-SIRKALI said...

Good orticle. hats off our brother to help the girl............////////////////////////////////////
நன்றி ................

அஞ்சா சிங்கம் said...

துளசி கோபால் said...

அந்த மிருகத்தைக் கூண்டில் உடனே ஏத்தணும்:(
////////////////////////////////////////
உங்கள் கோபம் புரிகிறது ..........

அஞ்சா சிங்கம் said...

சிவா said...
முதலில் அந்த பெண்ணின் மீதுதான் தவறு இருக்கிறது. தன்னை காப்பாற்ற தன் காதலனுக்கு தைரியம் இருக்கிறதா என்பதை அவள் சிந்தித்து இருக்க வேண்டும். அடுத்தாற் போல அந்த வெளியே நின்ற இளைஞனுக்கு புத்திமதிகள் (வெகுமதியோடு) சொல்லி இருக்க வேண்டும். ///////
///////////////////
முதலில் அவள் ஒரு சிறுபெண் இயற்கையான காதல் உணர்வும் துணிந்து காதல் செய்ய சொல்லும் ஊடகங்களும் வீட்டில் அவள் குழந்தையாக இருக்கும் போதில் இருந்து பார்த்து வந்தது .இதில் இருக்கும் ஆபத்து அவளுக்கு இனிமேல் புரிந்திருக்கும் .
இதில் யாரை குற்றம் சொல்ல ?

அஞ்சா சிங்கம் said...

இது சம்பந்தமாக சொல்லாமல் வந்ததால் அந்த அம்பது வயது கிழத்திற்கு ஒன்றும் பிரச்சினை இல்லை, வண்டலூரில் கூண்டுக்குள் இருப்பவை எல்லாம் மிருகங்கள் அல்ல, அந்த மாதிரியான கிழம்தான் முக்கியமான, ஆபத்தான மிருகம்.
///////////////////////////////////

இதை சும்மா விட எனக்கு மனம் இல்லை . அந்த சிறுபெண்ணை மேலும் பயத்தில் தள்ள விருப்பம் இல்லை .
ஆனாலும் வேறு வழியில் அவன் தண்டனை பெற்றே ஆகவேண்டும் .

அஞ்சா சிங்கம் said...

Chitra said...

என்ன கொடுமைங்க இது? :-(
////////////////////////
ஆமாம் அக்கா. :-(

அஞ்சா சிங்கம் said...

கந்தசாமி. said...

காவலர்களா கயவர்களா !!!
/////////////////////////

காவாலிகள் .......

NKS.ஹாஜா மைதீன் said...

இந்த மாதிரி ஆளுகளுக்கு நறுக் தண்டனைதான் சரி..

Unknown said...

அந்த இரு கேவலர்களையும், காவலர்களிடம் பிடித்துக்கொடுத்திருக்கலாம், மீண்டும் இது மாதிரி நடக்காதிருக்க.

ஆளில்லாத காட்டுக்கு இந்த ரெண்டு பொடிசுகளும் எதுக்குப் போனார்கள் என்பதும் யோசிக்கவேண்டிய விஷயம்.

காதல், காமம் சார்ந்த புரிதல் இல்லாத இந்த நாட்டில் இது மாதிரி இன்னும் நிறைய நடக்கும் :(

Unknown said...

பூங்கா,சுற்றுலா தளங்கள் எங்கும் காதலர்கள் செய்யும் சேஷ்டைகள் சில இடங்களில் உறவு வைத்துக் கொள்கின்றார்கள் இதைப் பார்க்கும் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல கூசிய அப்பா, அம்மா க்களை பார்த்து இருகின்றேன் அதான் லாட்ஜ் இருக்கே போகவேண்டியதுதானே பொது இடத்துல நாய் மாதிரி நடந்துகிட்டா நாலு நாய் கைய வைக்கத்தான் செய்யும் தேவை ஒழுக்கம் உங்களை போன்றவர்களால் தான் உண்மையான காதலர்களை பெற்றோர் நம்புவதில்லை

அஞ்சா சிங்கம் said...

veedu said...
உங்களை போன்றவர்களால் தான் உண்மையான காதலர்களை பெற்றோர் நம்புவதில்லை......//////////

//////////////////////
உண்மையான காதல் என்று ஒரு மண்ணும் கிடையாது .
எல்லாம் இனகவர்ச்சிதான் அந்த வயதில் பயந்தவர்கள் யோக்கியர்கள் என்று சொல்லிகொள்வார்கள் துணிந்தவர்கள் முயற்சித்து பார்கிறார்கள் .

Unknown said...

கொடுமைதான். ஆனாலும் உங்களுக்கு சமூக பொறுப்பு உணர்ச்சி அதிகம்

பாலா said...

ஒருவேளை சம்பந்தப்பட்ட துறையின் உயரதிகாரிகளுக்கும், ஏதாவது ஒரு பத்திரிக்கைக்கும் கடிதம் எழுதினால் தீர்வு கிடைக்கலாம்.

MANO நாஞ்சில் மனோ said...

என்னய்யா அந்த காவகாரனை பிடிச்சி நாலு அப்பு அப்பாம விட்டுட்டீங்களே ச்சேய்....

சக்தி கல்வி மையம் said...

நண்பா இந்தப் பிரச்சனை உடனே தீர்வு காணவேண்டியது அவசியம்..

MANO நாஞ்சில் மனோ said...

வேஷ்டி கட்டி அடிச்சிருக்கணும் அந்த நாதாரிகளை....

MANO நாஞ்சில் மனோ said...

பிளீஸ் பத்திரிக்கைகளின் கவனத்திர்க்கு.....

அஞ்சா சிங்கம் said...

jaisankar jaganathan said...

கொடுமைதான். ஆனாலும் உங்களுக்கு சமூக பொறுப்பு உணர்ச்சி அதிகம்.............../////////////////

நன்றி நண்பரே .............

அஞ்சா சிங்கம் said...

பாலா said...

ஒருவேளை சம்பந்தப்பட்ட துறையின் உயரதிகாரிகளுக்கும், ஏதாவது ஒரு பத்திரிக்கைக்கும் கடிதம் எழுதினால் தீர்வு கிடைக்கலாம்................/////////////
//////////////
உங்கள் கருத்துக்கு நன்றி .............

அஞ்சா சிங்கம் said...

MANO நாஞ்சில் மனோ said...

என்னய்யா அந்த காவகாரனை பிடிச்சி நாலு அப்பு அப்பாம விட்டுட்டீங்களே ச்சேய்..../////
///////////////////
அவனுக்கு கண்டிப்பா இருக்கு மக்கா நான் சும்மா விடமாட்டேன் எதுக்கு அடி விழுதுன்னு தெரியாம வாங்குவான் பாரு .

அஞ்சா சிங்கம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நண்பா இந்தப் பிரச்சனை உடனே தீர்வு காணவேண்டியது அவசியம்../////
ஆமாம் நிறைய ஜோடிகள் அங்கு சென்று வருகிறார்கள் .
பயந்த ஜோடிகளை இந்த மாதிரி ஓநாய்கள் தேடி கொண்டு இருக்கிறது ..

சிநேகிதன் அக்பர் said...

மகா மட்டமான விசயம். எப்படி இவர்களுக்கு மனது வருகிறது இப்படி செய்ய, அதுவும் ஐம்பது வயதில். கேவலம்.

காதலர்கள் என்றில்லை. மணமான தம்பதியர் தனியே சென்றாலும் என்ன பாதுகாப்பு இருக்கிறது?

Anonymous said...

அவன் கழுத்தினில் ஒரு பலகையை மாட்டி அவன் தனியே வந்த பெண்ணிடம் என்ன செய்ய முயற்ச்சித்தான் என்று எழுதி வைக்க வேண்டும். அதற்க்கு பிறகு எந்த ஜோடியாவது உள்ளே சென்று அட்டூழியம் செய்யுமா என்ன?

தவறு அந்த மூன்று பேரிடமும் இருக்கிறது. முதலில் பெற்றோரை ஏமாற்றி வந்த அந்த பெண், இரண்டாவது பெண்ணை காவு கொடுத்து விட்டு வாசலில் நின்ற அந்த பொடியன், மூன்றாவது அந்த கிழவனும் அவனது கூட்டாளிகளும்.

சிவக்குமார் said...

இந்த மாதிரி எங்க நடந்ததா கேள்விப்பட்டாலும் நல்லா பத்திகிட்டு வருது.
//உண்மையான காதல் என்று ஒரு மண்ணும் கிடையாது.எல்லாம் இனகவர்ச்சிதான் அந்த வயதில் பயந்தவர்கள் யோக்கியர்கள் என்று சொல்லிகொள்வார்கள் துணிந்தவர்கள் முயற்சித்து பார்கிறார்கள் //

மிகச்சரியாகச் சொன்னீங்க தலைவா !! so called உண்மையான காதலர்கள் மட்டும் இதற்கு ஆளாவதில்லையா ? இங்கேயும் 3 ஆண்களை விட்டு பாதிக்கப்பட்ட அந்தப் பொண்ணையே குறை சொல்றாங்க சிலர். அவன எங்க பாத்தாலும் மிதிங்க

Butter_cutter said...

தவறு அந்த மூன்று பேரிடமும் இருக்கிறது. முதலில் பெற்றோரை ஏமாற்றி வந்த அந்த பெண், இரண்டாவது பெண்ணை காவு கொடுத்து விட்டு வாசலில் நின்ற அந்த பொடியன், மூன்றாவது அந்த கிழவனும் அவனது கூட்டாளிகளும்.உண்மை சிவா.
கடைசிக்கு அந்த காவலாளி இன் போட்டோ பிடித்து போட்ருக்கலாம்

மலரின் நினைவுகள் said...

"I Spit on your Grave - ன்னு ஒரு படம்..
இதன் ரீமேக் 2010 - இல் வந்தது..
அதில் வரும் கதாநாயகி தன்னை வன்புணர்ச்சி செய்த 5 பேர் கொண்ட கும்பலை எவ்வாறு அணு அணுவாக சாகடிக்கிறாள் என்பதை பார்த்து அதை விட மோசமான வதைக்கு இந்த நாதாரிகளை உட்படுத்தி உடம்பில் வெறும் உயிரை மட்டும் விட்டு அலைய விட வேண்டும்.

seethag said...

இது ரொம்ப முக்கியமான விஷயம். உங்கள் பாதுகாப்பு ,மற்றும் அங்கே வரும் பிற இளயவர்கள்இன் கதி எல்லாம் பார்க்க வேண்டும்.

அந்த சின்ன பெண்ணை இப்போது சரி தப்பு என்று வாதிடுவது தேவையில்லை.
நின்ஙள் ஜூவீ, மற்றும் child helpline ஆலோசனை கேட்க்வேண்டும்.இதை இப்படியே விட முடியாது, பலரின் பாதுகாப்பும் இதில் அடங்கியுள்ள்அது.

பெண்களுக்கும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தவெஎண்டும்.

South Regional Resource Centre

CHILDLINE India Foundation
Second Floor, No.2, Dr. Nair Road
T.Nagar,
Chennai- 600 017
Landmark: Near Vani Mahal

You can call us on: 044-2815 6098, 044-28158098

seethag said...

இது மிகவும் முக்கியமான விஷயமாக பட்டதால் உங்கள் ப்லாகை என்னுடய facebook பக்கத்தில் இணக்கலாமா?

நாம் எல்லாரும் குடிமக்களஅக ஒன்றாக ஈணந்தால் தான் இதையெல்லாம் தடுக்க முடியும்.

Preetha said...

Hi,

I would like to write a letter to below mentioned person and this is what I could find in web. Please let me know that I can use your blog post link when I write a letter to them. Thanks.

Tourism and Culture

Thiru S.S Jawahar IAS
Secretary to Government, (Full Additional Charge)
Secretariat, Chennai - 600 009

Phone : 25670820 (O)
Fax : 25670820, 25670716, 25676287
E-Mail : toursec@tn.gov.in

Sivakumar said...

செல்வின், இது போன்ற விஷயங்கள் கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி நிகழ்வதாக கேள்விப்பட்டிருக்கிறோம். காதல் செய்பவர்கள் தனிமை வேண்டி ஆள் அரவமில்லா இடத்தை விரும்புவதே இதற்கெல்லாம் முதல் காரணம். அச்சிறுவன் வயதுக்கோளாறில் செய்துள்ளான்.

பொது ஜனம் அதிகம் நடமாடும் இடங்களிலும் காம எண்ணங்கள் தலைதூக்கவே செய்கிறது. சந்தர்ப்பம் அதிகம் வாய்க்கும் இடங்களில் அந்த மிருகம் வெளியே வருகிறது.

நீங்கள் கேமரா மொபைலில் அந்த பொறுக்கிகளை படம் பிடித்து இருக்கலாம்.

அந்த சூழ்நிலையில் சாத்தியமில்லை என்றாலும் நம் சமயோசிதத்தை பயன்படுத்துவதில்தான் இது போன்ற விசயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இயலும். இனி வரும் காலங்களில் இது போன்ற இக்கட்டான சூழ்நிலை வருகையில் கேமரா மொபைல் எனும் அஸ்திரத்தை உபயோகிப்பது நன்று என்பது என் கருத்து.

pichaikaaran said...

கொடூரமான சம்பவம்.. மனம் பதைக்கிறது..

அஞ்சா சிங்கம் said...

seethag said...
உங்கள் தகவலுக்கு நன்றி நிச்சியம் நான் தொடர்பு கொள்கிறேன் ....
///இது மிகவும் முக்கியமான விஷயமாக பட்டதால் உங்கள் ப்லாகை என்னுடய facebook பக்கத்தில் இணக்கலாமா?///

தாராளமாக இணைக்கலாம் இது பலபேருக்கு சென்றடைய வேண்டும் என்பதுதான் முக்கியம் .............

அஞ்சா சிங்கம் said...

Hi,

I would like to write a letter to below mentioned person and this is what I could find in web. Please let me know that I can use your blog post link when I write a letter to them. Thanks.../////
/////

கண்டிப்பாக லிங்க் மட்டும் அல்ல என்னால் வேறு உதவி தேவை என்றாலும் தயாராக இருக்கிறேன் ....

அஞ்சா சிங்கம் said...

! சிவகுமார் ! said...

நண்பா படம் எடுக்கும் சூழல் அமையவில்லை . அப்படி அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் ....

அஞ்சா சிங்கம் said...

பார்வையாளன் said...

கொடூரமான சம்பவம்.. மனம் பதைக்கிறது..////'

கருத்துக்கு நன்றி ....

பாலா said...

நான் சமீபத்தில் சென்ற போது கூட மக்கள் அதிகம் நடமாடும் இடத்திலேயே ஒரு ஜோடி சல்லாபம் செய்து கொண்டிருந்தது. காவலாளிகள் மிக மட்டமான வார்த்தைகளால் அத்தனை மக்கள் முன்னிலையில் அவர்களை ஏசிக்கொண்டிருந்தனர்.

மூவருமே தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இச்செயல்களின் மூலக்காரணத்தை கண்டறிந்து களைய வேண்டும்.

வசந்தவாசல் அ.சலீம்பாஷா said...

கிட்டத்தட்ட ஒரு எட்டுமாதம் முன்பு, ஆட்டோ டிரைவர் ஒருவனின் உதவியுடன்... இரவு நேரத்தில் ஒரு பெண்ணை கடத்திச்சென்று வண்டலூர் பூங்காவுக்குள்ளேயே வைத்து பலாத்காரம் செய்த இரண்டு வண்டலூர் பூங்கா அதிகாரிகள் கைது செய்யப்பட்டது பலருக்கு நினைவிருக்கலாம்.எனக்கொரு சந்தேகம்! சரணாலயத்திலிருக்கும் மிருகங்களை பராமரிக்க சில வக்கிர மிருகங்களையே பனியில் அமர்த்தியிருக்கிறார்களோ? இதுப்போன்ற மிருகங்களை அடையாளம் கண்டு, பலியிட்டு அங்குள்ள வனவிலங்குகளுக்கே உணவாய் தரவேண்டும்!

Anonymous said...

It is true it was the mistake of the couple to go inot isolated place, it is notright for the workers to misuse the situation!.

If this is left unchecked, they will become more bold and start assaulting anyone and everyone. They do have some problem, and they need to be brought to book.

Hope some one will take over , giving wider publciity to such incident in a public place, so that women can freely move about.

Chennai , you can do it.

Blog forums like Indus ladies can do their bit in this matter. Woemn;s organisations can be brought in the picture. Please publicise.

BTW, hats off to you young man!

ஷர்புதீன் said...

உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி!

seethag said...

have linked to my facebook.

thank you.

seetha

Kazhudhai said...

ungal samooga unarchikku sabaash. inge palar andha pennayum, andha podiyanayum kutram koorugiraargaL palar. Aanaal nan avrgalai paaraatta virumbugiren. Andha penn thavaru nadakka pOvadhai unarndhu thapi vandhirukkiraal. sari dhaan ippo enna panradhu adjust pnnikkiruvomnunenikkala. Andha payanum vadai pochennu sollittu avan paattukku thatti vittuttu poyirla. Anga andha ponnu varuvaanu kaththirukkiraan. Indha siraargalidam irukkumpanbu andha kelattu naaykku illaadhadhu dhaan enakku kovam.

சிராஜ் said...

செல்வின், இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க, இது போன்ற சூழல் நமது குழந்தைகளுக்கு வராமல் பார்த்துக்கொள்வதே சிறந்த வழியாக எனக்கு படுகிறது. வரும் முன் காப்பதே நல்லது.

சிராஜ் said...

அந்த சூழலில் என்ன செய்ய முடியுமோ அதை நீங்கள் செய்துள்ளீர்கள்... அதனால் நீங்கள் வருத்தப்பட வேண்டியது இல்லை... ஒரு பெண்ணின் எதிர்காலம் போயிருமே என்று நாம் நினைத்து தவறுகளை சகிப்பதால் தான் பல பெண்களின் வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்படுகிறது என்பதே எதார்த்தம். எனவே அடுத்த முறை இது போன்ற தவறு செய்பவர்களைக் கண்டால் போலீசில் பிடித்து கொடுங்கள் அல்லது அடித்து சாவடியுங்கள்

சிராஜ் said...

இன்று கூட தினத்தந்தியில் ஒரு செய்தி... மறைவிடத்தில் உல்லாசமாக இருந்த காதலி கற்பழித்து கொலை, காதலனும் அதே கயவர்களால் கொல்லப்பட்டான்.

Jayaram said...

//அவனுக்கு சத்தியமாக ஐம்பது வயது இருக்கும் .//

அவனுக்கு கூட பெண் குழந்தை இருந்தால் அந்த பெண்ணின் வயது தான் இருக்கும்.

"தாரிஸன் " said...

அவனை எல்லாம் அம்மணமா நடு ரோட்ல நிக்க வச்சு மயக்க மருந்தே இல்லாம கருத்தடை ஆபரேஷன் பண்ணனும்ங்க....
கண்டிப்பா அவன் பொன்னை இவனை போல் ஒருத்தன் ஏதாவது பண்ணத்தான் போறான்....

...αηαη∂.... said...

கட் பண்ணிட வேண்டியது தான்....

seethag said...

உங்கள் மின்னஞ்ஞல் முகவரி தரமுடியுமா?இந்த விஷயம் குறித்து விவாதிக்கவேண்டும்.

அஞ்சா சிங்கம் said...

seethag said...
உங்கள் மின்னஞ்ஞல் முகவரி தரமுடியுமா?இந்த விஷயம் குறித்து விவாதிக்கவேண்டும்.
selwin76@gmail.com

Radha N said...

any updation about this matter. that police should be punished. pl update the action.

கோவை நேரம் said...

எப்படிங்க ...நீங்க விட்டிட்டு வரலாம் ..அந்த களவாணி களை ரெண்டு போட்டிட்டு வந்து இருக்கலாம் ..

N.H. Narasimma Prasad said...

என்னை பொறுத்தவரை தவறு போலீஸ் மீது மட்டுமல்ல, அந்த 'பள்ளிப் பருவ' காதலர்கள் மீதும் தான். இந்த வயதில் அதுவும் யாருமே இல்லாத இடத்தில் சந்தித்துப் பேசுவது மிகப்பெரிய தவறு. இந்த காலத்தில் மெரினா கடற்கரையிலேயே 'பல அநியாயங்கள்' நிகழ்கின்றன.

Krish said...

அரபு நாட்டுல செய்ற மாதிரி, அந்த சொரி நாய்களை உயிரோ தோலை உரிச்சி அண்ணா சாலைல தொங்க விடணும்

Krish said...

அரபு நாட்டுல செய்ற மாதிரி, அந்த சொரி நாய்களை உயிரோட தோலை உரிச்சி அண்ணா சாலைல தொங்க விடணும்

J.P Josephine Baba said...

அந்த ஆள் படத்தை இந்த பதிவையும் சேர்த்து போட்டால் விழிப்புணர்வு தருவதாகவும் அவனை தண்டிப்பது போன்ற்றும் இருந்திருக்கும். பெண்ணை காப்பிற்றினீர்களே. வாழ்த்துக்கள்

கவியாழி said...

விலங்குகள் மட்டுமல்ல மனித மிருகங்களும் ஜூவில் இருக்கிறதோ?நீங்க சும்மா விட்டிருக்ககூடாது

Unknown said...

அந்த மிருகம் பிடித்த காவலர்களின் ஆண் உறுப்பை வெட்ட வேண்டும்.

Popular Posts