Wednesday, February 9, 2011

திரை விமர்சனம்

v


எனக்கு திரை விமர்சனம் எழுதனும்ன்னு ரொம்ப நாளா ஆசை . ஆனா மனசுல ஒரு சின்ன பயம் சி .பி.எஸ். மாதிரி பெரிய ஜாம்பவான்கள் இருக்கும் இந்த வலை உலகில் நான் திரை விமர்சனம் எழுதினால் இந்த சமுதாயம் என்ன சொல்லும் ?

அதனால ரொம்ப யோசிச்சி என்ன ஆனாலும் சரி நான் திரை விமர்சனம் எழுதிவிடுவது என்ற வீரமான முடிவை எடுத்து விட்டேன் .
சரி எழுதலாம்ன்னு  முடிவு பண்ணீட்டேன் எந்த தியேட்டருக்கு போறது ?

சிட்டில இருக்குற நல்ல தியேட்டர்ல ஒரு ஆறு தியேட்டர் மட்டும் செலக்ட் பண்ணி சீட்டு போட்டு குலுக்கி எடுத்தேன் .
அதுல தேவிபாரடிஸ் தியேட்டர் வந்தது .

காவலன் படம் ஓடுதே சரி அதையும் பார்திடலாம்ன்னு கெளம்பி போனேன் .
தியேட்டர் இப்போ கொஞ்சம் நல்லா செலவு செஞ்சி ரெடி பண்ணிருக்காங்க டிக்கட் சுலபமா கிடைத்தது .
வாசலிலேயே நம்ம பாகெட்ட தடவி சோதனை போடுறாங்க . அது ஏன்னு கேட்டதுக்கு பான்பராக் வெடிகுன்டு போன்ற பொருள்களுக்கு அனுமதி இல்லையாம் .(பாருங்க சார் கொடுமைய)
ஒரு வழியா இமிகிரேசன் சோதனை எல்லாம் வெற்றிகரமா முடிச்சிட்டு உள்ளே பொய் என் இருக்கையில் அமர்தேன் .

இப்போது திரை விமர்சனம் பார்க்கலாம் .

அந்த திரை ஒரு பதினாலு மீட்டர் அகலம் மற்றும் ஆறு மீட்டர் உயரம் இருக்கும் முழுவதும் வெள்ளை நிறத்தில் இருந்தது .
வேறு ஏதாவது நிறம் இருந்தால் கொஞ்சம் நல்லா இருந்திருக்கும்ன்னு மனசுக்கு பட்டுது .

அப்புறம் அந்த திரை லேசாக வெளிப்பக்கம் வளைந்தது போல் வடிவமைக்க பட்டிருந்தது .
ஒரு மிக பெரிய மேடை அமைத்து அதில்  திரையை வைத்திருந்தார்கள் .
அந்த திரைக்கு பின்னால் ஒன்றுமே இல்லை .
இதில் மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அந்த திரைக்கு முன்னால் இன்னொரு திரை இருக்கிறது .
அதில் பன்னீரண்டு வண்ண பல்புகள் தொங்க விடபட்டிருக்கிறது . நல்ல வேளை இந்த திரை வெறும் வெள்ளையாக இல்லாமல் பல வண்ணத்தில் இருந்தது மனதுக்கு ஆறுதல்.

எனக்கு பிடித்த காட்சி :

படம் ஆரம்பிக்கும் போதும் இடைவேளை விடும் போதும் முன்னால் இருக்கும் அந்த திரையின் விளக்குகள் ஒளிர்ந்தபடி மேலே செல்வதும் பின்னர் கீழே இறங்கி வருவதும் .


டிஸ்கி :- சரி சரி திரை விமர்சனம் படிசிடீங்கள்ளே அப்புறம் என்ன ஒட்டு போட்டுட்டு கேளம்புறது... நாளைக்கு வாங்க நூல் விமர்சனம் பண்றேன் ...............

 

52 கருத்து சொல்றாங்க:

உளவாளி said...

வடை

அஞ்சா சிங்கம் said...

சரி அடிச்சிக்காம சாப்பிடனும்

Chitra said...

இம்பூட்டு நாளா... திரைக்கு மேல ஓடுற படத்தை விமர்சனம் பண்ணிட்டு, திரை விமர்சனம் என்று சொல்லிப்புட்டாகளே.... சரியா திரை விமர்சனம் செய்த அஞ்சா சிங்கமே.... அறிவு களஞ்சியமே.... பாராட்டுக்கள்!

உளவாளி said...

திரைய பத்தி இவ்ளோ விவரம் தெரிஞ்சிவச்சிருகிங்கலே அந்த திரைல நம்ம விஜய் வந்திருபரே அத பத்தி சொல்லவே இல்ல...

அஞ்சா சிங்கம் said...

Chitra said...

இம்பூட்டு நாளா... திரைக்கு மேல ஓடுற படத்தை விமர்சனம் பண்ணிட்டு, திரை விமர்சனம் என்று சொல்லிப்புட்டாகளே.... சரியா திரை விமர்சனம் செய்த அஞ்சா சிங்கமே.... அறிவு களஞ்சியமே.... பாராட்டுக்கள்!........///////////
நான் கரக்ட்டா தான் விமர்சனம் பண்ணிருக்கேன் எப்படியோ ஒரு பதிவு தேத்தியாச்சி .....

அஞ்சா சிங்கம் said...

உளவாளி said...

திரைய பத்தி இவ்ளோ விவரம் தெரிஞ்சிவச்சிருகிங்கலே அந்த திரைல நம்ம விஜய் வந்திருபரே அத பத்தி சொல்லவே இல்ல........//////

நான் பயங்கரமான கதை எல்லாம் போடுறது இல்ல ............

Speed Master said...

தலைப்பை பார்க்கும் போதே நிணைத்தேன்



உலகக்கோப்பை முன்னோட்டம்

http://speedsays.blogspot.com/2011/02/blog-post_09.html

Unknown said...

யோவ் ஏன்யா காலங்கத்தால இந்த கும்மு கும்முறீர்ங்க

அஞ்சா சிங்கம் said...

நா.மணிவண்ணன் said...

யோவ் ஏன்யா காலங்கத்தால இந்த கும்மு கும்முறீர்ங்க.......///////

வாங்க தல என்ன இன்னக்கி கொஞ்சம் லேட்டு

Unknown said...

ஏய்யா ஏன் உங்களுக்கு இந்த கொலைவெறி.........அந்த நடிப்புலக சக்கரவத்தி போடோவ பாத்த உடனே கெளம்ப வேண்டியது.......ஆனா இந்தளவுக்கு திரையப்பத்தி விமர்சனம் பண்ண நீவிர் வாழ்க உம கொற்றம் வாழ்க...........

சி.பி.செந்தில்குமார் said...

பதிவுலகிலேயே நீங்கதான் ரொம்ப நல்லவர்னு நினைச்சேன்... நீங்களும் என்னை நக்கல் அடிக்க ஆரம்பிச்சுட்டீங்களா? சரி பரவால்ல.. உங்க காமெடி சென்சூக்காக ஓட்டு

சி.பி.செந்தில்குமார் said...

இப்பதான் டைட்டிலை பார்த்தேன்.. யாரும் கேள்வி கேக்க முடியாது.. ஹா ஹா

அஞ்சா சிங்கம் said...

சி.பி.செந்தில்குமார் said...

இப்பதான் டைட்டிலை பார்த்தேன்.. யாரும் கேள்வி கேக்க முடியாது.. ஹா ஹா......//

ஒரு விளம்பரம் ...................ஹி ஹி ....

அஞ்சா சிங்கம் said...

சி.பி.செந்தில்குமார் said...

பதிவுலகிலேயே நீங்கதான் ரொம்ப நல்லவர்னு நினைச்சேன்... நீங்களும் என்னை நக்கல் அடிக்க ஆரம்பிச்சுட்டீங்களா? சரி பரவால்ல.. உங்க காமெடி சென்சூக்காக ஓட்டு.............////////

நீங்க எப்படி என்ன தப்பா நினைக்கலாம் ?
நான் நல்லவன்னு சொன்னேனா ......

நான் ரொம்ப நல்லவன் .....

Unknown said...

//படம் ஆரம்பிக்கும் போதும் இடைவேளை விடும் போதும் முன்னால் இருக்கும் அந்த திரையின் விளக்குகள் ஒளிர்ந்தபடி மேலே செல்வதும் பின்னர் கீழே இறங்கி வருவதும்//
நிச்சயம் பார்க்கவேண்டும்!
இப்படியொரு திரை விமர்சனத்தை நான் படிச்சதே இல்லை அருமையான அனுபவம்!
அப்படியே நேரில் பார்த்தது போன்ற உணர்வு!

அஞ்சா சிங்கம் said...

ஜீ... said...

//படம் ஆரம்பிக்கும் போதும் இடைவேளை விடும் போதும் முன்னால் இருக்கும் அந்த திரையின் விளக்குகள் ஒளிர்ந்தபடி மேலே செல்வதும் பின்னர் கீழே இறங்கி வருவதும்//
நிச்சயம் பார்க்கவேண்டும்!
இப்படியொரு திரை விமர்சனத்தை நான் படிச்சதே இல்லை அருமையான அனுபவம்!
அப்படியே நேரில் பார்த்தது போன்ற உணர்வு!........////////

நாம ரொம்ப நியாயமான விமர்சனம் எழுதுறவங்க பாஸ் ..........

Anonymous said...

>>> You continue.....

சேலம் தேவா said...

இன்னும் சீட் விமர்சனம்,இன்டர்வெல் விமர்சனம்,பாப்கார்ன் விமர்சனம் எல்லாம் போடுங்க... ஹி.ஹி..ஹி...

அஞ்சா சிங்கம் said...

சேலம் தேவா said...

இன்னும் சீட் விமர்சனம்,இன்டர்வெல் விமர்சனம்,பாப்கார்ன் விமர்சனம் எல்லாம் போடுங்க... ஹி.ஹி..ஹி...///////

ஆஹா நல்ல ஐடியாவா இருக்கே ......

ரஹீம் கஸ்ஸாலி said...

ஆஹா...நான் இன்று வெளியிட்டிருக்கும் சாருவின் தேகம் விமர்சனத்தை விட இது டெர்ரரா இருக்கே.....

arasan said...

விமர்சனம் அருமைங்க தல ....
தொடர்ந்து எழுதுங்க...(நல்ல வேளை பட விமர்சனம் பண்ணல)

Anonymous said...

யோவ் இந்த அநியாயம் பண்ணாதய்யா

வைகை said...

அப்பிடியே தியேட்டருக்கு வந்த பிகர் விமர்சனமும் எழுதலாம்ல?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எலே.. ஏதோ விமர்சனம்ன்னு உள்ளே வந்து வாழ்த்திட்டு போலான்னா தியாட்டர் பத்தி விமர்சனம் போட்டிருக்கே.. என்னதிது..

அஞ்சா சிங்கம் said...

அரசன் said...

விமர்சனம் அருமைங்க தல ....
தொடர்ந்து எழுதுங்க...(நல்ல வேளை பட விமர்சனம் பண்ணல).................//////////////

சீ சீ ....................அதுக்கெல்லாம் நாம இன்னும் வளரனும் ........................

அஞ்சா சிங்கம் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

யோவ் இந்த அநியாயம் பண்ணாதய்யா..............////////////////////

அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன் ....................................

அஞ்சா சிங்கம் said...

வைகை said...

அப்பிடியே தியேட்டருக்கு வந்த பிகர் விமர்சனமும் எழுதலாம்ல? .................................//////////////////////////////

இது வெறும் திரை விமர்சனம் மட்டும் தான் அடுத்த பதிவு வேணும்ன்னா அப்படி பண்ணலாம் ......

அஞ்சா சிங்கம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

எலே.. ஏதோ விமர்சனம்ன்னு உள்ளே வந்து வாழ்த்திட்டு போலான்னா தியாட்டர் பத்தி விமர்சனம் போட்டிருக்கே.. என்னதிது..............//////////////////////////

அண்ணே அதுக்கு பேரு தான் திரை விமர்சனம் ......

நான் திரைப்பட விமர்சனம்ன்னு எங்கேயும் சொல்லலையே ..................

அஞ்சா சிங்கம் said...

! சிவகுமார் ! said...

>>> You continue.....///////

வாங்க தல என்ன மொபைல் போன்ல கமண்ட்டு போடுறீங்க உங்க பொறுப்புணர்ச்சிய பாராட்டுறேன் ...................

இன்றைய கவிதை said...

அவ்வள்வு நல்லா இருந்த்தா படம் அதான் ஒண்ணும் பேச்சே இல்லை விஜய் பத்தி நாசுக்கான் விமர்சனமா?

நன்றி

ஜேகே

கேதாரன் said...

இப்படியே ஒவ்வொரு தியேட்டரும் போய் திரைய பார்த்து விமர்சனம் பண்ணினா பதிவுக்கு பதிவுமாச்சு ரண்டு மூணு வருசத்தை கவர் பண்ணியதுமாச்சு. ஐடியா எப்பூடி தல.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மச்சி, நீ எங்கே, எப்படி இருக்க வேண்டிய ஆளு, உன்னப் போயி ப்ளாக்கு எழுத வெச்சி..... சே...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மச்சி, படத்துல டாகுடரு வந்ததும் நீ தூங்க ஆரம்பிச்சிட்டே, இருந்தாலும் ஒரு விமர்சனம் போட்டிருக்கே பாரு.... இதான் டாகுடரு மகிம....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா மச்சி, அந்த வெள்ள திரைக்கு முன்னால ஒரு ப்ரௌன் திரை வெச்சி படம் போட முன்னாடி கினி கினின்னு மணியடிச்சி மேல தூக்குவானுகளே, அதெல்லாம் பாக்கலியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆனந்த விகடன், குமுதத்துல என்ன ரேட்டிங் போடுவாங்கன்னு எழுதலியா...?

டக்கால்டி said...

நீங்க அஞ்சா சிங்கம் மறுத்து பாண்டியா? எதிர் கட்சிக்காரன் இந்த பதிவை படிச்ச என்ன நினைப்பான்...

டக்கால்டி said...

'முக்கி'யமான விஷயத்தை விட்டுடீங்களே..அட அதாங்க தியேட்டர் கக்கூஸ் தூய்மையை பத்தி எழுத மறந்துட்டீங்க..(ஜாக்கி அண்ணன் மன்னிப்பாராக..)

Philosophy Prabhakaran said...

// நாளைக்கு வாங்க நூல் விமர்சனம் பண்றேன் ............... //

அதைத்தான் ரஹீம் எழுதிட்டாரே...

அஞ்சா சிங்கம் said...

இன்றைய கவிதை said...

அவ்வள்வு நல்லா இருந்த்தா படம் அதான் ஒண்ணும் பேச்சே இல்லை விஜய் பத்தி நாசுக்கான் விமர்சனமா?

நன்றி

ஜேகே..............///////////////////////
இது அக்மார்க் திரை விமர்சனம் மட்டும் தான் ...........

அஞ்சா சிங்கம் said...

கேதாரன் said...

இப்படியே ஒவ்வொரு தியேட்டரும் போய் திரைய பார்த்து விமர்சனம் பண்ணினா பதிவுக்கு பதிவுமாச்சு ரண்டு மூணு வருசத்தை கவர் பண்ணியதுமாச்சு. ஐடியா எப்பூடி தல..................//////////////////////////

ஹி ஹி ஹி ஹி ஹி ஹி....................
ஏதோ நம்மளால முடிஞ்சுது ............

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மச்சி, நீ எங்கே, எப்படி இருக்க வேண்டிய ஆளு, உன்னப் போயி ப்ளாக்கு எழுத வெச்சி..... சே...!...................///////////////////

அதானே நம்ம அருமை யாருக்கு புரியுது ................

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா மச்சி, அந்த வெள்ள திரைக்கு முன்னால ஒரு ப்ரௌன் திரை வெச்சி படம் போட முன்னாடி கினி கினின்னு மணியடிச்சி மேல தூக்குவானுகளே, அதெல்லாம் பாக்கலியா?.................////////////////

அது மிகவும் ரசித்த காட்சிகள் அதுக்கு ஒரு தனி பதிவே போடலாம் ..........

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆனந்த விகடன், குமுதத்துல என்ன ரேட்டிங் போடுவாங்கன்னு எழுதலியா...?..............///////////////

அதுக்கு தான் அண்ணன் சி.பீ.எஸ். இருக்காரே .நாம வேற என்னாத்துக்கு ..........

அஞ்சா சிங்கம் said...

டக்கால்டி said...

நீங்க அஞ்சா சிங்கம் மறுத்து பாண்டியா? எதிர் கட்சிக்காரன் இந்த பதிவை படிச்ச என்ன நினைப்பான்.../////////
சரி சரி இது நமக்குள்ளே இருக்கட்டும் .........

அஞ்சா சிங்கம் said...

டக்கால்டி said...

'முக்கி'யமான விஷயத்தை விட்டுடீங்களே..அட அதாங்க தியேட்டர் கக்கூஸ் தூய்மையை பத்தி எழுத மறந்துட்டீங்க..(ஜாக்கி அண்ணன் மன்னிப்பாராக..)...........///////////////

எதுக்கு தல இது வெறும் திரை விமர்சனம் மட்டும் தான் . அதுக்கு வேணும்ன்னா தனி பதிவு போடலாம் .

அஞ்சா சிங்கம் said...

Philosophy Prabhakaran said...

// நாளைக்கு வாங்க நூல் விமர்சனம் பண்றேன் ............... //

அதைத்தான் ரஹீம் எழுதிட்டாரே.......///////////////////

நான் சொல்ல வந்தது மாஞ்சா போட்ட நூல் காத்தாடி விடுவோமே .................

சக்தி கல்வி மையம் said...

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...

பை த பை 'வேடந்தாங்கல் ' னு ஒரு கடைய வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன்! ஒரு எட்டு வந்து பாத்திட்டு போங்க பாஸ்!

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_10.html

logu.. said...

inthala engernthupa pudichutu vanthanga?

அஞ்சா சிங்கம் said...

logu.. said...

inthala engernthupa pudichutu vanthanga?.............///////////////////
ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ........

நீங்க நினைகிறது சரி அதே இடம்தான் ........................

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

விமர்சனம் சூப்பர்?..
ஆமா , அந்த லைட் எரிவதை, இன்னும் ஒருமுறை பார்க்கலாமா?..

ஹி..ஹி

அஞ்சா சிங்கம் said...

பட்டாபட்டி.... said...

விமர்சனம் சூப்பர்?..
ஆமா , அந்த லைட் எரிவதை, இன்னும் ஒருமுறை பார்க்கலாமா?..

ஹி..ஹி................//////////////

அடடா வந்துடாருயா பதிவுலக வெண்ணிறாடை மூர்த்தி .....................

Unknown said...

அருமையான திரை விமர்சனம். முடியல

Popular Posts