Monday, November 14, 2011

பண்ணியும் ,பிரபாவும், பின்னே..ஞானும்..

v


எல்லா காலை பொழுதுபோல் அன்றும் எனக்கு விடிந்தது . முதல் கால் பிரபாவிடம் இருந்து வந்தது .
கொஞ்சம் என்னுடன் எக்ஸ்ப்ரஸ் அவன்யு வரை வரமுடியுமா என்றார் ?
எனக்கு வேலை இருக்கிறது என்ன விஷயம் என்று கேட்டேன் .
பிரபல பதிவர் டாக்குடர் பன்னிகுட்டி ராமசாமி வந்திருக்கிறார் (அப்படிதான் அவரை சொல்லவேண்டும் என்று அன்பு கட்டளை போட்டிருக்கிறார் )அவரை பார்க்கவேண்டும் என்றார் .
இதை விட நமக்கு வேற என்ன பெரிய வேலை உடனே வருகிறேன் என்று சொல்லிவிட்டு பிரபா வீட்டிற்கு கிளம்பினேன்.

பிரபாகரையும் அழைத்துகொண்டு கிளம்பும்போது அந்த அதிர்ச்சி தகவலை சொன்னார்.
பன்னி எனக்கு மட்டும்தான் அனுமதி கொடுத்திருக்கிறார்.அவர் வந்திருக்கும் தகவலை வேறு யாருக்கும் சொல்லகூடாது . கேமரா , செல்போன் போன்றவைக்கு அனுமதி இல்லை. அதனால் என்னை இறக்கி விட்டு ஒரு ஓரமாக நின்னு பன்னியை பார்த்துவிட்டு நீங்கள் போய்விடுங்கள் என்று .
அது என்ன அப்படி ஒரு அப்பாடேகர் ? நாங்க அண்டர்டேகரையே அசால்ட்டா டீல் பண்ணுவோம் பார்த்துவிடலாம் என்று எக்ஸ்ப்ரஸ் அவன்யு உள்ளே நுழைந்தேன் . ரொம்ப சீக்கிரம் வந்துவிட்டோம் என்று நினைக்கிறேன்  ஒரு கடையையும் திறக்கவில்லை. எலிவேட்டர் பக்கத்தில் யாரோ  மறைந்திருந்து நம்மளையே உற்று பார்ப்பது தெரிந்தது. அது வேறுயாரும் இல்லை நம்ம சிவகுமார்தான். அவரையும் இதேபோல் நிபந்தனையுடன் பிரபாகர் அழைத்து வந்திருப்பது புரிந்தது.

இதை பார்த்ததும் என் ரத்தம் கொதித்தது. இன்று பன்னியை ஊறுகாய் போடாமல் விடுவது இல்லை என்று மனசுக்குள் கருவிகொண்டேன். ஒருவேளை வயதானவராக இருப்பாரோ ? அதனால்தான் முகத்தை காட்ட இப்படி பயப்படுகிறார் என்று நாங்கள் பேசிகொண்டிருக்கும் போது. சில் என்று ஏ.சி காற்று முகத்தில் அறைந்தது . எங்கள் தலைமுடி எல்லாம் லேசாக காற்றில் ஆடியது . பின்னால் இருந்த கடைகளில் எல்லாம் ஒரேநேரத்தில் விளக்குகள் எரிந்தது.காற்றில் நறுமண வாசம் . எதுக்கு வள வளன்னு அதாங்க தமிழ் பட கதாநாயகி  வரும்போது ஒரு எபக்ட் வருமே அதுமாதிரின்னு வச்சிக்கங்க .

அங்கே கதவை திறந்து கொண்டு பண்ணி என்டர் ஆகிறார் . பன்னியை பார்த்தவுடன் நம்ம சிவகுமார் பரவச நிலையை அடைந்துவிட்டார் . அந்த நிலை அவர் கிளம்பும் வரை இருந்தது என்பது வேறுவிசயம்.
பன்னி ஏன் தன்னை வெளிக்காட்டிக்கொள்ள தயங்குகிறார் என்பது அவரை பார்த்த பின்னால் எனக்கு புரிந்தது .

அவரை பார்த்தவுடன் நான் சொல்ல நினைத்தது . நீங்க எம்.ஜி.ஆர். மாதிரி நல்லா கலரா இருக்கீங்க . சும்மா தக தகன்னு மின்னுறீங்க . அப்புறம் நமீதாவிற்கு மீசை வைத்தது  போல் ஒரு கலையான முகம் . அவர் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் காலில் விழுந்து என்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டிருப்பேன்.ஓகே பாஸ் நீங்க முகத்தை காட்டாமல் இருப்பது இந்த சமுதாயத்திற்கு நல்லதுதான் .

பிரபா நைசாக எங்களிடம் இருந்து விலகி போய் பன்னியிடம் தன்னை  அறிமுகம் செய்துகொண்டார் .
நானும் சிவாவும் பின்னால் சென்று ஹெலோ ஐ யாம் அஞ்சா சிங்கம் என்றேன் . அவ்ளோதான் ஒரு நிமிடம் ஜெர்க் ஆனவர் ப்ருச்லீ  போல் கை யை வைத்து கொண்டு சுற்றும் முற்றும் பார்க்க தொடங்கி விட்டார். இன்னும் எத்தனை பேர் மறைந்து இருக்கீங்க உண்மையை சொல்லுங்க என்று. யோவ் வேற யாரும் இல்லை நாங்க மட்டும்தான் என்று சமாதானம் செய்வதற்குள் போதும்டா சாமி .

இன்னும் அவரின் அடுத்தடுத்த அலம்பல்கள் தொடரும் ...................


உலக வலைபூ வரலாற்றில் சென்னைக்கு வந்து சில நாட்களே ஆன புத்தம் புதிய பன்னியின் புகைப்படம் விரைவில் எதிர்பாருங்கள் ..






  


 

53 கருத்து சொல்றாங்க:

உளவாளி said...

உலக வலைபூ வரலாற்றில் சென்னைக்கு வந்து சில நாட்களே ஆன புத்தம் புதிய பன்னியின் புகைப்படம் விரைவில் எதிர்பாருங்கள் ..
////////////////
ப்ரோமோ போட்டீங்க... ரிலீஸ் பண்ணுற தேதி சொல்லவே இல்ல....

அஞ்சா சிங்கம் said...

இப்படியே ஒரு நாலு பதிவு போட்டுட்டு அப்புறமா ரிலீஸ் பண்ணலாம்ன்னு இருக்கேன் .
எதுக்கும் நான் முன்ஜாமீன் வாங்கி வச்சிகிறது நல்லதுன்னு நினைக்கிறேன் ...................

Anonymous said...

//நம்ம சிவகுமார் பரவச நிலையை அடைந்துவிட்டார் . அந்த நிலை அவர் கிளம்பும் வரை இருந்தது என்பது வேறுவிசயம். //

அடப்பாவிங்களா..பன்னி என்ன நித்யானந்தாவா? பரவச நிலையை அடைய..அவர் டாக்குடருங்கோ.

Anonymous said...

//நமீதாவிற்கு மீசை வைத்தது போல் ஒரு கலையான முகம் //

ஆமாங்க..பன்னி செம பிகர். கலர்ல தமன்னா தோத்தா போங்க.

அஞ்சா சிங்கம் said...

! சிவகுமார் ! said... அடப்பாவிங்களா..பன்னி என்ன நித்யானந்தாவா? பரவச நிலையை அடைய..அவர் டாக்குடருங்கோ. //////////////////////////////////////
அவரு டாக்குடருதான் ஆனாலும் எபெக்ட் ஒண்ணுதான் ......

அஞ்சா சிங்கம் said...

சிவகுமார் ! said...

//நமீதாவிற்கு மீசை வைத்தது போல் ஒரு கலையான முகம் //

ஆமாங்க..பன்னி செம பிகர். கலர்ல தமன்னா தோத்தா போங்க...................////////////
இப்போ சொல்லுங்க உங்க பரவச நிலைக்கான காரணம் சரிதானே ...............

ரஹீம் கஸ்ஸாலி said...

ஆமாங்க..பன்னி செம பிகர். கலர்ல தமன்னா தோத்தா போங்க./////

யோவ்...அவனா நீய்யி

அஞ்சா சிங்கம் said...

ரஹீம் கஸாலி said...

ஆமாங்க..பன்னி செம பிகர். கலர்ல தமன்னா தோத்தா போங்க./////

யோவ்...அவனா நீய்யி..............

//////////////////////////////////////////////////////////

பன்னிகுட்டி பயத்துக்கு ஒரு நியாயமான காரணம் இருக்கும் போல ........

Anonymous said...

/ரஹீம் கஸாலி said...
ஆமாங்க..பன்னி செம பிகர். கலர்ல தமன்னா தோத்தா போங்க./////

யோவ்...அவனா நீய்யி//

பன்னியும் சிங்கமும் மணிக்கணக்கா மாத்தி மாத்தி ஒருத்தர ஒருத்தர் சைட் அடிச்சிக்கிட்டாங்க. பயர் ஆகாம தடுத்ததே பெரிய விஷயம்.

அஞ்சா சிங்கம் said...

! சிவகுமார் ! said...

/ரஹீம் கஸாலி said...
ஆமாங்க..பன்னி செம பிகர். கலர்ல தமன்னா தோத்தா போங்க./////

யோவ்...அவனா நீய்யி//

பன்னியும் சிங்கமும் மணிக்கணக்கா மாத்தி மாத்தி ஒருத்தர ஒருத்தர் சைட் அடிச்சிக்கிட்டாங்க. பயர் ஆகாம தடுத்ததே பெரிய விஷயம்.............//////////////////////
வெளங்கிரும் ..................

வெளங்காதவன்™ said...

//பிரபாகரையும் அழைத்துகொண்டு கிளம்பும்போது அந்த அதிர்ச்சி தகவலை சொன்னார்.
பன்னி எனக்கு மட்டும்தான் அனுமதி கொடுத்திருக்கிறார்.அவர் வந்திருக்கும் தகவலை வேறு யாருக்கும் சொல்லகூடாது . கேமரா , செல்போன் போன்றவைக்கு அனுமதி இல்லை. அதனால் என்னை இறக்கி விட்டு ஒரு ஓரமாக நின்னு பன்னியை பார்த்துவிட்டு நீங்கள் போய்விடுங்கள் ///

யாருய்யா பன்னினு நீரு சொல்லுற மனுஷர்? அவ்ளோ பெரிய அப்பாட்டக்கரா?
:)

அஞ்சா சிங்கம் said...

வெளங்காதவன் said...

//பிரபாகரையும் அழைத்துகொண்டு கிளம்பும்போது அந்த அதிர்ச்சி தகவலை சொன்னார்.
பன்னி எனக்கு மட்டும்தான் அனுமதி கொடுத்திருக்கிறார்.அவர் வந்திருக்கும் தகவலை வேறு யாருக்கும் சொல்லகூடாது . கேமரா , செல்போன் போன்றவைக்கு அனுமதி இல்லை. அதனால் என்னை இறக்கி விட்டு ஒரு ஓரமாக நின்னு பன்னியை பார்த்துவிட்டு நீங்கள் போய்விடுங்கள் ///

யாருய்யா பன்னினு நீரு சொல்லுற மனுஷர்? அவ்ளோ பெரிய அப்பாட்டக்கரா?
:)...........................///////////////////////

தமிழ்மனம் தகராறுக்கு பின்னர் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்காராமாம் ......................

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னியை பார்த்தவுடன் நம்ம சிவகுமார் பரவச நிலையை அடைந்துவிட்டார் . //

ஏதாச்சும் டபுள் மீனிங் இருக்குதா?

அஞ்சா சிங்கம் said...

நோ நோ.............
ஒன்லி சிங்கள் மீனிங் தான் ................

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

! சிவகுமார் ! said...

/ரஹீம் கஸாலி said...
ஆமாங்க..பன்னி செம பிகர். கலர்ல தமன்னா தோத்தா போங்க./////

யோவ்...அவனா நீய்யி//

பன்னியும் சிங்கமும் மணிக்கணக்கா மாத்தி மாத்தி ஒருத்தர ஒருத்தர் சைட் அடிச்சிக்கிட்டாங்க. பயர் ஆகாம தடுத்ததே பெரிய விஷயம்.//

கருமம் கருமம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னியை பார்த்ததை இவ்ளோ சந்தோசமா சொல்றானுகளே. இனி நடக்க போறத நினைச்சா பாவமா இருக்கு ..

அஞ்சா சிங்கம் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

! சிவகுமார் ! said...
கருமம் கருமம்.....................
//////////////////
அதைதான் நானும் சொல்றேன் ..................

அஞ்சா சிங்கம் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னியை பார்த்ததை இவ்ளோ சந்தோசமா சொல்றானுகளே. இனி நடக்க போறத நினைச்சா பாவமா இருக்கு ..
///////////////////////////////////////////
என்னது சந்தோசமா ? நான் முன்ஜாமீன் வாங்குறதை பத்தி யோசிச்சிக்கிட்டு இருக்கேன் . நீங்க வேற ...........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அஞ்சா சிங்கம் said... ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னியை பார்த்ததை இவ்ளோ சந்தோசமா சொல்றானுகளே. இனி நடக்க போறத நினைச்சா பாவமா இருக்கு ..
///////////////////////////////////////////
என்னது சந்தோசமா ? நான் முன்ஜாமீன் வாங்குறதை பத்தி யோசிச்சிக்கிட்டு இருக்கேன் . நீங்க வேற ...//

யோவ் ஜாமீன் எதுக்கு. காரமடை ஜோசியரை பார்த்து ஏதாச்சும் பரிகாரம் பண்ணுங்க. இல்லன்னா பின் விளைவுகள் மிக மோசமா இருக்கும்

அஞ்சா சிங்கம் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... யோவ் ஜாமீன் எதுக்கு. காரமடை ஜோசியரை பார்த்து ஏதாச்சும் பரிகாரம் பண்ணுங்க. இல்லன்னா பின் விளைவுகள் மிக மோசமா இருக்கும்............................/////////////////////////
/////////////////////
வேப்பிலை அடிக்கவேண்டியது சிவகுமாருக்கு . ஏனென்றால் அவர்தான் அதிகம் பாதிக்க பட்டது .................

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சிவகுமாருக்கு மந்திரிக்க வேண்டிதான்

வெளங்காதவன்™ said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னியை பார்த்ததை இவ்ளோ சந்தோசமா சொல்றானுகளே. இனி நடக்க போறத நினைச்சா பாவமா இருக்கு ..
////

பாவம்யா... ராத்திரி கொடூர கொடூரமா.....
சரி விடு.... பப்ளிக்ல சொல்லப்படாது...

அஞ்சா சிங்கம் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சிவகுமாருக்கு மந்திரிக்க வேண்டிதான்..............////////////////////
எனக்கும் ஒரே கெட்ட கெட்ட கனவா வருது .............

வெளங்காதவன்™ said...

//அஞ்சா சிங்கம் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சிவகுமாருக்கு மந்திரிக்க வேண்டிதான்..............////////////////////
எனக்கும் ஒரே கெட்ட கெட்ட கனவா வருது .............
////

ஹி ஹி ஹி... நான் சொல்லல?

அஞ்சா சிங்கம் said...

வெளங்காதவன் said...
ஹி ஹி ஹி... நான் சொல்லல?
.............///////////////////////////////////////////////////////////////

ஓஹோ உங்களுக்கு ஏற்கனவே இந்த அனுபவம் இருக்கா?
தக்காளி இது பயங்கரமான தீய சக்தியாக இருக்கும் போல பலபேரு பாதிக்க பட்டிருக்காங்க போல ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///எல்லா காலை பொழுதுபோல் அன்றும் எனக்கு விடிந்தது . ///

ஒரு மாபெரும் அறிவியல் உண்மையை கண்டறிந்த விஞ்ஞாணி அஞ்சா செல்வின் வால்க.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////எனக்கு வேலை இருக்கிறது என்ன விஷயம் என்று கேட்டேன் .
பிரபல பதிவர் டாக்குடர் பன்னிகுட்டி ராமசாமி வந்திருக்கிறார் (அப்படிதான் அவரை சொல்லவேண்டும் என்று அன்பு கட்டளை போட்டிருக்கிறார் )/////

என்ன கொடும சார் இது......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இதை விட நமக்கு வேற என்ன பெரிய வேலை உடனே வருகிறேன் என்று சொல்லிவிட்டு பிரபா வீட்டிற்கு கிளம்பினேன்.
/////

என்னா ஒரு கொலவெறி......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாங்கள் பேசிகொண்டிருக்கும் போது. சில் என்று ஏ.சி காற்று முகத்தில் அறைந்தது . எங்கள் தலைமுடி எல்லாம் லேசாக காற்றில் ஆடியது . பின்னால் இருந்த கடைகளில் எல்லாம் ஒரேநேரத்தில் விளக்குகள் எரிந்தது.காற்றில் நறுமண வாசம் . எதுக்கு வள வளன்னு அதாங்க தமிழ் பட கதாநாயகி வரும்போது ஒரு எபக்ட் வருமே அதுமாதிரின்னு வச்சிக்கங்க . ///////

யோவ் காலைலயே மப்பா? ஏன்யா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அவரை பார்த்தவுடன் நான் சொல்ல நினைத்தது . நீங்க எம்.ஜி.ஆர். மாதிரி நல்லா கலரா இருக்கீங்க . சும்மா தக தகன்னு மின்னுறீங்க . அப்புறம் நமீதாவிற்கு மீசை வைத்தது போல் ஒரு கலையான முகம் . அவர் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் காலில் விழுந்து என்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டிருப்பேன்.ஓகே பாஸ் நீங்க முகத்தை காட்டாமல் இருப்பது இந்த சமுதாயத்திற்கு நல்லதுதான் .///////

வெளங்கிருச்சு........ வஞ்சப்புகழ்ச்சில அண்ணன் பெரிய மன்னனா இருப்பாரு போல...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அங்கே கதவை திறந்து கொண்டு பண்ணி என்டர் ஆகிறார் . பன்னியை பார்த்தவுடன் நம்ம சிவகுமார் பரவச நிலையை அடைந்துவிட்டார் . /////

ஏன் காலைல அடிச்ச கஞ்சா அப்பத்தான் வேல செய்ய ஆரம்பிச்சதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////உலக வலைபூ வரலாற்றில் சென்னைக்கு வந்து சில நாட்களே ஆன புத்தம் புதிய பன்னியின் புகைப்படம் விரைவில் எதிர்பாருங்கள் ../////

பேசுனபடி அமௌண்ட் வந்துடனும் ஆமா...... இல்லேன்னா அடுத்து ஒரு பயங்கரடேட்டா போட்டுடுவேன்......

Unknown said...

மாம்ஸ பார்க்க ரொம்ப ஆவலாயிருக்கு! எப்போ படம் ரிலீஸ்?

தமிழ்வாசி பிரகாஷ் said...

பன்னிக்குட்டி படம் எங்கிட்ட இருக்கே.... எதுக்கு முகத்தை காட்டாம இருக்கார்னு எனக்கு தெரியும்..ஹி..ஹி...


நம்ம தளத்தில்:
மனைவியா டிவியும், தோழியா மொபைல் போனையும் வச்சு செம காமெடிங்க...

Unknown said...

ஏன்யா இம்புட்டு நல்லவனா நீ...இவனுங்கள நம்பி சென்னைக்கு வர்ற விஷயத்த சொன்ன பன்னி வாழ்க...நான் வர்றத ப்ளான் பண்ணிட்டேன் ஆனா சொல்ல வேனாம்னும் முடிவு பண்ணிட்டேன் இந்த பதிவை பார்த்து ஹிஹி!(எல்லாம் ஒரு பில்டப்புதான்!)

அஞ்சா சிங்கம் said...

விக்கியுலகம் said...

ஏன்யா இம்புட்டு நல்லவனா நீ...இவனுங்கள நம்பி சென்னைக்கு வர்ற விஷயத்த சொன்ன பன்னி வாழ்க...நான் வர்றத ப்ளான் பண்ணிட்டேன் ஆனா சொல்ல வேனாம்னும் முடிவு பண்ணிட்டேன் இந்த பதிவை பார்த்து ஹிஹி!(எல்லாம் ஒரு பில்டப்புதான்!).........................///////////////////////////

ஆஹா அடுத்த ஆடும் சிக்கீடிச்சி .........

மாப்பு நீ வாடி செம விருந்து வச்சிருக்கோம் ............

அஞ்சா சிங்கம் said...

தமிழ்வாசி - Prakash said... பன்னிக்குட்டி படம் எங்கிட்ட இருக்கே.... எதுக்கு முகத்தை காட்டாம இருக்கார்னு எனக்கு தெரியும்..ஹி..ஹி............////////////////////
உங்களையும் சேர்த்து நிறைய பேர் பாதிக்க பட்டிருக்காங்க போல ..............

அஞ்சா சிங்கம் said...

ஜீ... said...

மாம்ஸ பார்க்க ரொம்ப ஆவலாயிருக்கு! எப்போ படம் ரிலீஸ்?...............////////////////////////
இப்போதான் டாக்குடர் விஜய் படம் வந்திருக்கு . அது கொஞ்ச நாள் ஓடட்டும் ....
பவர் ஸ்டார் படம் ரிலீஸ் ஆகும்போது பன்னிகுட்டி படத்தையும் ரிலீஸ் பண்ணலாம்ன்னு இருக்கேன் ........

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... பேசுனபடி அமௌண்ட் வந்துடனும் ஆமா...... இல்லேன்னா அடுத்து ஒரு பயங்கரடேட்டா போட்டுடுவேன்......
//////////////////////////////////////////

அட சும்மா இருங்க தல நானே மந்திரிச்சி விட்டாமாதிரி ரெண்டுநாளா இருக்கேன் .இதுல பயங்கர டேட்டா வேறைய ஆள விடு சாமி

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///எல்லா காலை பொழுதுபோல் அன்றும் எனக்கு விடிந்தது . ///

ஒரு மாபெரும் அறிவியல் உண்மையை கண்டறிந்த விஞ்ஞாணி அஞ்சா செல்வின் வால்க.......///
//////////////////////////////////////////////////

இருக்கட்டும் இருக்கட்டும் ......

சக்தி கல்வி மையம் said...

சொல்லவே இல்லை..

சக்தி கல்வி மையம் said...

உலக வலைபூ வரலாற்றில் சென்னைக்கு வந்து சில நாட்களே ஆன புத்தம் புதிய பன்னியின் புகைப்படம் விரைவில் எதிர்பாருங்கள் ..// கூப்பிடத்தான் இல்லை, அட்லீஸ்ட் மாப்ள படத்தையாவது போடு மாப்ள..

அஞ்சா சிங்கம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

சொல்லவே இல்லை..
எனக்கும்தான் சொல்லல ஆனாலும் பொறி வச்சி பிடிச்சொம்ல ...............

Philosophy Prabhakaran said...

தலைப்புல சிவா பெயர் போடாமல் இப்படி ஓரவஞ்சனை பண்ணிட்டீங்களே... அந்த தம்பி மேல உங்களுக்கு அப்படியென்ன கோபம்...

Philosophy Prabhakaran said...

// பன்னி எனக்கு மட்டும்தான் அனுமதி கொடுத்திருக்கிறார் //

யோவ் ஏற்கனவே குருப்பா சேர்ந்து என் டவுசரை கிழிச்சது போதாதா... இன்னும் வேற கிழிக்கனுமா... நான் தான்யா அவர்கிட்ட கெஞ்சி கூத்தாடி பர்மிஷன் வாங்கினேன்...

Philosophy Prabhakaran said...

// சில் என்று ஏ.சி காற்று முகத்தில் அறைந்தது . எங்கள் தலைமுடி எல்லாம் லேசாக காற்றில் ஆடியது . பின்னால் இருந்த கடைகளில் எல்லாம் ஒரேநேரத்தில் விளக்குகள் எரிந்தது.காற்றில் நறுமண வாசம் . எதுக்கு வள வளன்னு அதாங்க தமிழ் பட கதாநாயகி வரும்போது ஒரு எபக்ட் வருமே அதுமாதிரின்னு வச்சிக்கங்க . //

லயணம் படத்துல சில்க் மூஞ்சியையும் வெள்ளைக்குதிரை ஓடி வர்றதையும் மாத்தி மாத்தி காட்டுவாங்க... அந்த மாதிரி என்னா பில்டப்பு...

Philosophy Prabhakaran said...

// பன்னியை பார்த்தவுடன் நம்ம சிவகுமார் பரவச நிலையை அடைந்துவிட்டார் //

பார்த்ததுமேவா...

Philosophy Prabhakaran said...

// நீங்க எம்.ஜி.ஆர். மாதிரி நல்லா கலரா இருக்கீங்க . சும்மா தக தகன்னு மின்னுறீங்க //

ஏன்யா யோவ் எம்.ஜி.ஆரா முன்னபின்ன பாத்திருக்கியா இல்லையா நீயி... கன்னங்கரேல்ன்னு இருந்த ஆள இப்படியா ஓட்டுறது...

Philosophy Prabhakaran said...

// உலக வலைபூ வரலாற்றில் சென்னைக்கு வந்து சில நாட்களே ஆன புத்தம் புதிய பன்னியின் புகைப்படம் விரைவில் எதிர்பாருங்கள் .. //

போட்டோ என்கிட்டே தான் இருக்கு... போட்டோவை தராம விட்டா கீழே பின்னூட்டம் போட்டிருக்குற கும்பல் உங்களை பின்னி எடுத்திடும் போல இருக்கே...

அஞ்சா சிங்கம் said...

Philosophy Prabhakaran said...

தலைப்புல சிவா பெயர் போடாமல் இப்படி ஓரவஞ்சனை பண்ணிட்டீங்களே... அந்த தம்பி மேல உங்களுக்கு அப்படியென்ன கோபம்.../////////////////////
'
அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை மூணு பேரா இருந்தா அந்த காரியம் வெளங்கிடும்ன்னு சொல்லுவாங்கல்ல அதுக்காகதான் ..........................

அஞ்சா சிங்கம் said...

Philosophy Prabhakaran said...

// பன்னி எனக்கு மட்டும்தான் அனுமதி கொடுத்திருக்கிறார் //

யோவ் ஏற்கனவே குருப்பா சேர்ந்து என் டவுசரை கிழிச்சது போதாதா... இன்னும் வேற கிழிக்கனுமா... நான் தான்யா அவர்கிட்ட கெஞ்சி கூத்தாடி பர்மிஷன் வாங்கினேன்...//////////////////
ஏற்கனவே கிழிஞ்ச டவுசர் தானே இன்னும் கொஞ்சம் கிழிச்சா ஜாக்கி ஜட்டி மாதிரி ஆயிடும் .(இதில் எந்த உள்குத்தும் இல்லை )

அஞ்சா சிங்கம் said...

Philosophy Prabhakaran said...

// நீங்க எம்.ஜி.ஆர். மாதிரி நல்லா கலரா இருக்கீங்க . சும்மா தக தகன்னு மின்னுறீங்க //

ஏன்யா யோவ் எம்.ஜி.ஆரா முன்னபின்ன பாத்திருக்கியா இல்லையா நீயி... கன்னங்கரேல்ன்னு இருந்த ஆள இப்படியா ஓட்டுறது.../////////////////
////////////////////////////////////////////////////
அதெல்லாம் இல்லை அவரு நல்ல கலருதான் உமக்கு பொறாமை ...........
போயி பஸ்சுல பாருங்க இந்த பதிவை படிச்சுட்டு அவருக்கு நவீன நமீதான்னு பெயர் வச்சிருக்காங்க ..
நவீன கழிப்பிடம் கேள்வி பட்டிருக்கேன் அது என்ன நவீன நமீதாவோ .........?

சிராஜ் said...

என்னமோ ஓபாமாவ பாத்த மாதிரி... இதுக்கெல்லாம் ஒரு போஸ்ட்... சிவா, பிரபா மற்றும் உமக்கும் வேறு வேலையே இல்ல... சைட் அடிக்கிறதுக்காக மெரீனா பீச் போக வேண்டியது, அங்க யாராவது ஒரு எக்ஸ்ட்ரா பதிவர பாத்திட்டா போதும்... சென்னையில் ஒரு பதிவர் சந்திப்புன்னு உடான்ஸ் அடிச்சிட வேண்டியது. உங்க 3 பேருக்கும் மொதல்ல வேப்பில அடிக்கணும்யா, அப்பத்தான் சரிப்படுவீங்க.
பன்னிகுட்டி அண்ணே கோபிக்க கூடாது.. இந்த பசங்களுக்கு இதே வேலையா போச்சு... அதான் இப்டி ஒரு கமெண்ட்.

சிராஜ்

Popular Posts