Wednesday, December 1, 2010

வற்றாத கண்ணீர்

v
ரெண்டு நாளா எனக்கு வீட்டிற்க்கு செல்லும் மனம் இல்லை.
போனாலும் யாரும் என்னிடம் சரியாக பேசுவதில்லை .
நான் என்ன தவறு செய்தேன் ?
பொறுப்பில்லாத ஒருவனுக்கு மகனாக பிறந்ததுதான் என் தவறு.
என் தங்கை பிறந்து ஆறு மாதத்தில் என் தந்தை யாரோடோ ஓடி போய்விட்டார்.
அதன் பிறகு நாங்கள் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் அல்ல.
என்ன அம்மா என் கனவில்  கூட தையல் எந்திரம் இல்லாமல் காட்சி தர மாட்டாள்.
ஆனால் காலம் எங்களை மோசமாக தண்டிக்க வில்லை .
நான் நன்றாக படித்தால் . என் பள்ளிகூடம் என்னை படிக்கவைத்தது.
என் தலைமை ஆசிரியர் என் மேற் படிப்புக்கு உதவி செய்தார்.
நானும் நன்றாக படிப்பை முடித்து. இப்போது நல்ல இடத்தில் வேலை செய்கிறேன்.
ஊருக்கு வெளியே அரை கிரௌண்ட் இடத்தில் வீடு கட்டிவிட்டேன்.
இப்போது தங்கைக்கு வரன் பார்த்துகொண்டிருக்கிறேன்.

இந்த நேரத்தில் சோதனையாக சின்ன வயதில் பொறுப்பு இல்லாமல் ஓடி போன என் அப்பா போன மாதம் திரும்பி வந்தார்.
உடம்புக்கு முடியாமல் கிழிந்த நார் மாதிரி பார்க்க பரிதாபமாக இருந்தாலும் நான் வீட்டில் சேர்க்க வில்லை.
அவ்ளோதான் என் தாய்க்கு வந்ததே கோபம். உன் தயவில் நான் வாழமுடியாது நானும் இப்பவே கிளம்புறேன் அப்டின்னு பொட்டிய தூக்கிட்டு கெளம்ப தயார் ஆய்ட்டா. நான் இருப்பதே என் தாய்க்கும் தங்கைக்கும் தான்.
 இவர்கள் இல்லாமல் என் உலகம் இல்லை.சரி என்று சேர்த்து கொண்டோம்.

என் உலகம் ரொம்ப சிறுசு சார். வீட்டில் இருந்து காலை கிளம்பினால் நான் கேட் திறந்த உடன் என் வருகைக்காக காத்திருக்கும் ஒரு நன்றி உள்ள ஜீவன் குமரன் . இந்த பெயர் நான் தான் அதற்க்கு வைத்தேன்.
வேகமாக என் பைக்கிற்கு முன்னாள் ஓடி சென்று தெரு முனை கடைக்கு என்னை விட வேகமாக போய்விடும்.
நான் அதற்காகவே மெதுவாக ஒட்டி செல்வேன் .நான் வரும் வரை அங்கே குதித்து கொண்டும் வாலை ஆட்டி கொண்டும்.
அது என்னை எதிர்பார்த்து நிற்கும்.அந்த காட்சி எனக்கு ஒரு கவிதை.

டீ கடையில் அதற்க்கு ரெண்டு பிஸ்கட் எனக்கு ஒரு கிங்க்ஸ். மீண்டும் நான் சாயங்காலம் வரும் நேரம் அதற்க்கு தெரியும்.
அந்த டீ கடையில் காத்திருக்கும் மீண்டும் அதற்க்கு ரெண்டு பிஸ்கட் எனக்கு ஒரு கிங்க்ஸ். அவ்ளோதான் என் நட்பு வட்டம்
.நேற்று என் தந்தை இறந்துவிட்டார்.
வீட்டில் ஒரே அழுகை என் தாய் மட்டும் அல்ல என் தங்கை கூட அவளுக்கு என்ன தெரியும். எப்படித்தான் இந்த பெண்களுக்கு
கண்ணீர் வருமோ தெரியாது. வந்திருந்த சொந்தபந்தங்கள் எல்லாம் என்னிடம் வந்து தம்பி துக்கத்த அடக்கி வைக்க கூடாது
அழுதிருன்னு அட்வைஸ் வேற. எனக்கு அழுகை வந்தால்தானே அழுவதற்கு. வேண்டாத விருந்தாளி  வீட்டை விட்டு கிளம்பும்போது எப்படி இருக்குமோ அந்த மனநிலையில் தான் நான் இருந்தேன்.
ஒரு வழியாக காரியங்களை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் யாரும் என்னிடம் சரியாக பேசவில்லை.
என்ன இருந்தாலும் இவ்ளோ கல்நெஞ்சு ஒருத்தனுக்கு இருக்க கூடாது. பெத்த தகப்பன் சாவுக்கு கண்ணீர் விடாதவன் மனுசனா எனக்குனு புள்ளயா பொறந்தியே என்று என் தாய் திட்டுவது என் காதில் விழுகிறது.
எனக்கு என்ன கண்ணீர் வறண்டுவிட்டதா.?
தெரியவில்லை.

இன்று வழக்கம் போல் நான் ஆபீஸ் கிளம்பினேன். வெளியே வந்தவுடன் வந்து நிற்கும் குமரனை காணும்.
மெதுவாக அதை எதிர்பார்த்துக்கொண்டு வண்டியை ஒட்டி டீ கடையை அடைந்தேன்.
இன்னும் அது வராததால் டீ கடைகாரரிடம் விசாரித்தேன்.
அண்ணே குமரன பார்த்தீங்களா?
தம்பி உனக்கு விஷயம் தெரியாதா காலைல லாரிகாரன் அடிச்சுட்டான்பா அந்த தெருமுனைல.
எனக்கு காலுக்கு கீழ் தரை நழுவியது போல் இருந்தது.
மெதுவாக அந்த இடத்திற்கு போனேன்.
லாரி டயர் அதன் வயிற்றில் ஏறியதால் ஒரே ரத்தசகதியாக இருந்தது.
அதை அப்படியே என் கைகளில் அள்ளி கொண்டு என் வீடு நோக்கி நடந்தேன்.
என் வீட்டு தோட்டத்தில் அதை புதைத்தேன்.
புதைத்த இடத்தின் அருகில் அமர்ந்து பெரும் குரல் எடுத்து அழ ஆரம்பித்தேன்........................ 

12 கருத்து சொல்றாங்க:

Chitra said...

பாவம்ங்க. :-(

அஞ்சா சிங்கம் said...

Chitra said...

பாவம்ங்க. :-
வருகைக்கு நன்றி மேடம்

எஸ்.கே said...

உண்மையான அன்பின் வெளிப்பாடு!
மனம் கனக்கிறது!

Philosophy Prabhakaran said...

இதென்ன புனைவா அல்லது உண்மைச்சம்பவமா...

ruby said...

தங்கை செண்டிமெண்ட் super T.R மண்டையனுக்கு வாழ்த்துக்கள்

அஞ்சா சிங்கம் said...

எஸ்.கே said...

உண்மையான அன்பின் வெளிப்பாடு!
மனம் கனக்கிறது!/////

சும்மா செண்டிமெண்ட் முயற்சிபண்ணி பார்த்தேன்.

அஞ்சா சிங்கம் said...

philosophy prabhakaran said...

இதென்ன புனைவா அல்லது உண்மைச்சம்பவமா...///

இல்ல பாஸ் கற்பனை கதைதான்.

அஞ்சா சிங்கம் said...

ruby said...

தங்கை செண்டிமெண்ட் super T.R மண்டையனுக்கு வாழ்த்துக்கள்/////
உங்களுக்கு மட்டும் ரொம்ப தெளிவா புரிஞ்சிருக்கு போல.
எப்படி இதெல்லாம்.

மாணவன் said...

//இல்ல பாஸ் கற்பனை கதைதான். //

கற்பனையாக இருந்தாலும் படிக்கும்போது மனதை ஏதோ செய்கிறது நண்பா,

நல்லாயிருக்கு தொடருங்கள்....

வாழ்க வளமுடன்

அஞ்சா சிங்கம் said...

மாணவன் said...

//இல்ல பாஸ் கற்பனை கதைதான். //

கற்பனையாக இருந்தாலும் படிக்கும்போது மனதை ஏதோ செய்கிறது நண்பா,

நல்லாயிருக்கு தொடருங்கள்....

வாழ்க வளமுடன்...
நன்றி நன்றி.......................

Anonymous said...

கண்டிப்பாக இது உண்மையான பதிவென நினைக்கிறேன். முதல் சில வரிகளே நெகிழ வைக்கின்றன. தொடர தொடர இன்னும்..

அஞ்சா சிங்கம் said...

சிவகுமார் said...

கண்டிப்பாக இது உண்மையான பதிவென நினைக்கிறேன். முதல் சில வரிகளே நெகிழ வைக்கின்றன. தொடர தொடர இன்னும்..//////
நன்றி சிவகுமார்

Popular Posts