Tuesday, November 30, 2010

கொள்ளை அடிக்கலாம் வாங்க

v


நம்ம நாட்டுல ஏமாத்துறது தப்பு இல்ல சார் .
அது ஒரு கலை. ஒரு குறிப்பிட்ட வரியை அரசாங்கத்துக்கு குடுத்துட்டா அரசாங்க அனுமதியோட கொள்ளை அடிக்கலாம்.
உங்களில் பல பேருக்கு இந்த மாதிரி மெசேஜ் வந்திருக்கும்.
ரஜினிகாந்த் யாரு ?

a. நடிகர்.

b.விண்வெளிவீரர்.

c.கிரிக்கெட் வீரர்.

சரியான பதில் சொல்லி ஸ்கோடா கார் வெல்லுங்கள் .

அடடா ரொம்ப ஈசியா இருக்கே நாம ரிப்ளை அனுப்பி கார் தூக்கிடலாம்.
அப்புறம் இந்த கார எங்க விடுறதுன்னு யோசனை போய்டும் .
ஆனா ஆப்பு அதுக்கப்புறம் தான் இருக்கு .
அடுத்த கேள்வி வரும் .
ஜே. ஜெயலலிதா தி.மு.கா.வா .தி.மு.கா.வான்னு
என்ன தல லைட்டா சுத்துதா.

இது ஒரு வகை.

எனக்கு ஒரு மெசேஜ் வந்தது 5 க்கு பின்னால பத்து சைபர்.

அது எவ்ளோ பணம்னு என் குருவி மண்டைக்கு எட்டவே இல்ல.

நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம்.வந்து இந்த பணத்த வாங்கிட்டு போய்டுங்க ரொம்பநேரம் தூக்கி வச்சுகிட்டு நிக்கிறோம் சீக்கிரம் வந்து வாங்கிட்டு போங்க மறக்காம உங்க அக்கௌன்ட் நம்பர் அனுப்புங்க அப்படின்னு.

அவ்ளோதான் சும்மா ஜிவ்வுன்னு ஆய்டுச்சி.

ஆனா ஒரு நாள் முழுவதும் மண்டைய சிலுப்பிகிட்டு காலர தூக்கிக்கிட்டு

கண்ணா இந்த பஸ் என்ன வெல கேளு. இந்த தெரு என்ன வெல கேளு.

இந்த ஏரோபிலேன் வாங்கனும்ம்னா எவ்ளோ செலவுஆகும்னு விசாரிச்சுகிட்டு அலைஞ்சேன்.

அப்புறம் என்ன அசிங்கபட்டான் மண்டையன்.

இப்போ புதுசா ஒரு குரூப்பு ராஜ் டிவில கெளம்பி இருக்கு ராத்திரி பத்து மணிக்கு மேல ரெண்டு பேரு நின்னுகிட்டு

வள வளன்னு பேசிக்கிட்டு இருப்பாங்க.பின்னால நம்ம டாக்குடர் தம்பி போட்டோ இருக்கும்.

கொஞ்சம் கூட கெட்டப்பு மாத்தாமல் (இருந்தா தானே மாத்துறதுக்கு )

இந்த படத்துல இருக்குறது யாரு சீக்கிரம் கண்டுபிடிச்சு சொல்லுங்க உங்களுக்கு நாற்பதுஆயிரம் பரிசு உடனே போன்

பண்ணுங்கனு பேசிக்கிட்டு இருக்கும். நம்பி போன் பண்ணுனா அவ்ளோதான் உங்க கால் வெய்டிங்கில் உள்ளது.

(என் கால் என்கிட்டதான் இருக்குது.) தயவு செய்து ஹோல்ட் செய்யவும். அப்டின்னு வரும் எவ்ளோ நேரம் ஆனாலும் எடுக்க மாட்டாங்க என்னடா இது சோதனைன்னு பார்த்தா நம்ம பாலன்ஸ் முன்நூருபா காலி ஆகி இருக்கும்

அதுக்கு அப்புறம் தான் தெரியும் அந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு கெடையாது.

ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒரு கால் பத்து ருபாய் எவ்ளோ புண்ணியவான் ஏமாந்தான்களோ.

இன்னும் எத்தனை பேரு ஏமாற போறாங்களோ. அதனால என்ன இப்போ அவங்க அரசாங்கத்துக்கு வரி கெட்டுறாங்க

அவங்களுக்கு அந்த உரிமை இருக்கு சார்.

நாமும் வரி கெட்டலாம் வியாபாரத்த ஆரம்பிக்கலாம்.

இப்போ உங்களுக்கான கேள்வி

மங்குனி அமைச்சர் என்பது யார் .

1. அமெரிக்க அதிபர்.

2. கலை கூத்தாடுபவர்.

3. டாகுட்டர் விஜய் ரசிகர்.

4. மொக்கை பதிவர்.

சரியான பதில் சொல்பவர்களுக்கு 12,000,000,000,000 $ யு.எஸ். டாலர் தரப்படும்.

பதில் தெரியாதவர்கள் பணகாட்டு நரியிடம் கேட்டு அனுப்பலாம்.

ஒரு மெசேஜ் 50 ரூபாய்தான்.

அனுப்ப வேண்டிய நம்பர் 9444125010.30 கருத்து சொல்றாங்க:

உளவாளி said...

Wow!!! Wait pannunga recharge pannittu msg anupuren..

அஞ்சா சிங்கம் said...

Wow!!! Wait pannunga recharge pannittu msg anupuren../////
அனுப்புங்க அனுப்புங்க அதுக்கு தானே காத்திருகோம்.
வியாபாரம் இன்னும் சூடு பிடிக்கலையே.

மாணவன் said...

செம கலக்கல்...

தொடருங்கள்

மாணவன் said...

அதெப்படி நீங்களும் டாக்டர் விஜயும் ஒரே மாதிரி கண்ணாடி போட்டிருக்கீங்க?

Philosophy Prabhakaran said...

நண்பா... நான் ஒன்று கேட்கிறேன் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்... உங்கள் முகம் நான் அடிக்கடி பார்க்கும் ஒரு முகத்தை நினைவூட்டுகிறது... உங்களுடைய இயற்பெயர் செல்வினா...???

அஞ்சா சிங்கம் said...

philosophy prabhakaran said...

நண்பா... நான் ஒன்று கேட்கிறேன் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்... உங்கள் முகம் நான் அடிக்கடி பார்க்கும் ஒரு முகத்தை நினைவூட்டுகிறது... உங்களுடைய இயற்பெயர் செல்வினா...??//


ஆமாம் மன்னிக்கவும் நீங்கள் யார் என்று தெரியவில்லை.
உங்கள் பெயர் தெரிந்தால் சந்தோஷம்.

அஞ்சா சிங்கம் said...

செம கலக்கல்...

தொடருங்கள்

நன்றி நண்பரே ...............

அஞ்சா சிங்கம் said...

மாணவன் said...

அதெப்படி நீங்களும் டாக்டர் விஜயும் ஒரே மாதிரி கண்ணாடி போட்டிருக்கீங்க?/////

ஹி ஹி ஹி ...........கண்டு பிடிச்சிடீங்க போங்க சார் என்ன ரொம்ப கலாயகுறீங்க.

எஸ்.கே said...

அந்த ராஜ் டிவி புரோக்ராம் ஆரம்பிச்ச அன்னுக்கு நாங்களும் ஃபோன் பண்ணி ஏமாந்துட்டோங்க!

எஸ்.கே said...

ஆமா, மங்குனி அமைச்சர் என்பவர் ஸ்பெக்ட்ரம் ஊழல்ல மாட்டினாரே அவர்தானே!

அஞ்சா சிங்கம் said...

எஸ்.கே said...

அந்த ராஜ் டிவி புரோக்ராம் ஆரம்பிச்ச அன்னுக்கு நாங்களும் ஃபோன் பண்ணி ஏமாந்துட்டோங்க!//////


ஒய் ப்ளட் சேம் ப்ளட்.

அஞ்சா சிங்கம் said...

எஸ்.கே said...

ஆமா, மங்குனி அமைச்சர் என்பவர் ஸ்பெக்ட்ரம் ஊழல்ல மாட்டினாரே அவர்தானே!///
அட கடவுளே இதுவேறயா. எனக்கு அவரு யாருன்னே தெரியாதுங்கோ.

Anonymous said...

காவலன் வரட்டும்.....நாங்க யாருன்னு காட்டுறோம். நாங்கல்லாம் கொட்டுற மழைல கொய்யா சாப்புடுறவங்க.

அஞ்சா சிங்கம் said...

சிவகுமார் said...

காவலன் வரட்டும்.....நாங்க யாருன்னு காட்டுறோம். நாங்கல்லாம் கொட்டுற மழைல கொய்யா சாப்புடுறவங்க.///
இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது ?
சரி அது நம்ம விதி ..............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மங்குனி அமைச்சர்=டாகுடர் விஜய் ரசிகர், சரியா..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பணம் எங்க?பணம் எங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அதெப்படி நீங்களும் டாக்டர் விஜயும் ஒரே மாதிரி கண்ணாடி போட்டிருக்கீங்க?

yyyyyyyyy

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பணம் எங்க?பணம் எங்க?/////
உங்களுக்கு விருத்தகிரி டிக்கெட் இலவசம்.

அஞ்சா சிங்கம் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அதெப்படி நீங்களும் டாக்டர் விஜயும் ஒரே மாதிரி கண்ணாடி போட்டிருக்கீங்க?

yyyyyyyyy////////
இருந்தாலும் அவுரு அளவுக்கு வருமா ஏதோ நாங்களும் முயற்சி பண்றோம்.
அவரு முதல்வர் நன் சும்மா துனைமுதல்வர்தான் பாஸ் .

NaSo said...

அமைச்சர் டாகுடர் விசய் ரசிகர், நீங்க டாகுடர் விசய் மாதிரியே இருக்கீங்க!! எப்ப பணம் அனுப்புவீங்க? எனக்கு தேர்தல் செலவு இருக்கு!! என்னோட அக்கவுன்ட் நம்பர் 001-002-003-999-99, Bank - World Bank.

மங்குனி அமைச்சர் said...

எச்சூச்மி ........ அந்த ஆப்சன்ல இதையும் சேத்துக்கங்க

5 . வேற்றுகிரக ஜந்து

அஞ்சா சிங்கம் said...

நாகராஜசோழன் MA said...

அமைச்சர் டாகுடர் விசய் ரசிகர், நீங்க டாகுடர் விசய் மாதிரியே இருக்கீங்க!! எப்ப பணம் அனுப்புவீங்க? எனக்கு தேர்தல் செலவு இருக்கு!! என்னோட அக்கவுன்ட் நம்பர் 001-002-003-999-99, Bank - World Bank.///////

உங்க அக்கவுன்ட்ல பணமே இல்ல பணம் கொஞ்சமாவது இருக்கணும்.அப்புறம் நாங்கள் எல்லாம் எப்படி பொழைகிறது

அஞ்சா சிங்கம் said...

மங்குனி அமைச்சர் said...

எச்சூச்மி ........ அந்த ஆப்சன்ல இதையும் சேத்துக்கங்க

5 . வேற்றுகிரக ஜந்து///
சேர்த்தாச்சி.
சேர்த்தாச்சி.

ஹரிஸ் Harish said...

மங்குனி அமைச்சர் - மொக்கை சாரி பிரபல பதிவர் ..

ஹரிஸ் Harish said...

பணம் எங்க?...

NaSo said...

நண்பா ஏற்கனவே $1,000,000,000 (USD)அங்கு இருக்குமே!!

NaSo said...

//மண்டையன் said...

நாகராஜசோழன் MA said...

அமைச்சர் டாகுடர் விசய் ரசிகர், நீங்க டாகுடர் விசய் மாதிரியே இருக்கீங்க!! எப்ப பணம் அனுப்புவீங்க? எனக்கு தேர்தல் செலவு இருக்கு!! என்னோட அக்கவுன்ட் நம்பர் 001-002-003-999-99, Bank - World Bank.///////

உங்க அக்கவுன்ட்ல பணமே இல்ல பணம் கொஞ்சமாவது இருக்கணும்.அப்புறம் நாங்கள் எல்லாம் எப்படி பொழைகிறது//

நண்பா ஏற்கனவே $1,000,000,000 (USD)அங்கு இருக்குமே!!

அஞ்சா சிங்கம் said...

ஹரிஸ் said...

மங்குனி அமைச்சர் - மொக்கை சாரி பிரபல பதிவர் ../////
பிரபலமான மொக்கை பதிவர் இதுதான் ரைட் ஆன்சர் .

அஞ்சா சிங்கம் said...

நாகராஜசோழன் MA said...

நண்பா ஏற்கனவே $1,000,000,000 (USD)அங்கு இருக்குமே!!//

அடபாவிங்களா எனக்கு முன்னாடி யாரோ லவட்டீடான்களா.
டேய் யார இருந்தாலும் உண்மையா சொல்லிடுங்க.
முட்ட மந்திரிச்சி வச்சிருவேன்.

Anonymous said...

several times in the movie, as well as Jack accessories and tools. [url=http://www.journalonline.co.uk/christian-louboutin-outlet.html]christian louboutin outlet[/url] controls much of the maritime tourism industry in the Caribbean [url=http://www.journalonline.co.uk/christian-louboutin-outlet.html]christian louboutin outlet[/url] has a good time together. So good luck and Im sure your Jack and [url=http://www.journalonline.co.uk/ralph-lauren-outlet.html]Ralph Lauren Outlet[/url] the right base to sit on at a blackjack table. Apparently, for
Port Royal got degraded in morals and anarchy began to reign [url=http://www.journalonline.co.uk/christian-louboutin-outlet.html]http://www.journalonline.co.uk/christian-louboutin-outlet.html[/url] utensil. Remove the lid. Now get in there with your gutting spoon [url=http://www.journalonline.co.uk/tory-burch-outlet.html]tory burch outle[/url] the jeans lovers to find jeans according to their personal choice. [url=http://www.journalonline.co.uk/tory-burch-outlet.html]tory burch outle[/url] love and going over discipline and any commands you are teaching.
Forever? David: Yes. They can be digitized, but certainly at [url=http://www.journalonline.co.uk/ralph-lauren-outlet.html]http://www.journalonline.co.uk/ralph-lauren-outlet.html[/url] explain the rules. First, youll need to pin every participant [url=http://www.journalonline.co.uk/ralph-lauren-outlet.html]Ralph Lauren Outlet[/url] Youll know what to do. The easiest place to put the face of your [url=http://www.journalonline.co.uk/ralph-lauren-outlet.html]Ralph Lauren Outlet[/url] up on TV). I highly recommend this movie - and I have little faith

Popular Posts