Thursday, November 25, 2010

லிவ்விங் டுகெதர் காலத்தின் கட்டாயம்

v

ஹே நானும் பதிவு எழுத ஆரம்பிச்சுட்டேன் .
நானும் பிரபல பதிவர் ஆகிடவேண்டியதுதான் .

கமிங் டு தி பாயிண்ட் கொஞ்சநாள இந்த மேட்டர் பலபேர் மண்டைய கொடைஞ்சுக்கிட்டு இருக்கு .
நான் மட்டும் என்ன விதிவிலக்கா?
அதான் என் குருவி மண்டைக்கு எட்டியது .

இதை ஆதரிப்பவர்கள் எதிர்பவர்கள் என்று பதிவுலகமே
ரெண்டா பிரிஞ்சுகெடக்கு.

ஆதரிபவர்கள் கருத்து என்னானா தனிமனித உரிமை
அதை தவறு சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை என்பது.

எதிர்பவர்கள் கருத்து என்னனா இது கலாசார சீரழிவு .

இதை அனுமதித்தால் குடும்பம் என்ற கட்டுமானம் சிதைக்கப்படும் என்பது .

சரி நீ என்ன சொல்ல வரணு கேக்றீங்களா?.

சொல்றேன் சொல்றேன் . அதுக்கு தானே வந்திருகோம்.

கலாசாரம் அப்டினா என்ன சார் ?

நம்ம பன்னிக்குட்டி கூட இந்த கேள்விய கேக்குறார்.

இந்தியால ஒரு இடம் இருக்கு சார் ஹிமாலய பக்கதுல மலாங் அப்டின்னு.

அங்க பாருங்க ஒரு குடும்பத்துக்கு ஒரு பொண்ணுதான் கட்டுவாங்க மூத்த பையன் கல்யாணம் பண்ணினால் அவனுக்கு பின்னால் உள்ள அனைவர்க்கும் அந்த பெண் தான் மனைவி.

திருமண செலவு அதிகம் மற்றும் பெண்களின் எண்ணிக்கை குறைவு போன்ற காரணங்களால் காலகாலமாக இந்த

பழக்கத்தை கடைபிடிகிறார்கள் .

இதுவும் இந்தியாலதான் தல நடக்குது.

செக்ஸ் என்பது பொருளாதாரம், மக்கள்தொகை மற்றும் தேவையை பொருத்தது.

உணவு பஞ்சம் வரும்போது திமிங்கலங்கள் எல்லாம் கூட்டம்மாக தற்கொலை செய்வதுபோல.

மக்கள் தொகை குறைவாக இருக்கும்போது பலதார முறை சரியானதீர்வாக இருக்கும்.

அதே நேரத்தில் மக்கள் தொகை அதிகமிருக்கும் போது ஒரு தாரமுறை ஓகே.

மக்கள் தொகை மிக அதிகமாக இருக்கும்போது உளவியல்ரீதியாக திருமணத்தின் மீதான நாட்டம் குறைந்துவிடும்.

அதற்கு கமிட்மென்ட்குள் சிக்க விரும்பாதவர்களின் எண்ணிக்கை அதிகமாவதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு திருமணத்தின் தேவை இப்போது குறைந்திருக்கு.

கல்யாணம் பன்னாமல் வாழும் ஆண்களின் எண்ணிக்கை. பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு

குழந்தை வளர்க்கும் பொறுப்பை அவர்கள் விரும்பாததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆண் பெண் உறவு பல்லாயிரம் ஆண்டுகளாக பல பரிமாணம் தாண்டி இந்த நிலையை அடைந்திருகிறது.

இன்னும் அது மாறும். அது தேவைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும்.

கலாச்சாரத்தில் சரி என்றோ தவறு என்றோ எதுவும் கிடையாது.

சௌகர்யம் அசவ்கரியம் அவ்ளோதான் போன நூற்றாண்டில் உடன்கட்டை ஏறுவதும்.

தேவதாசி முறையும் நியாயம். ஆனா இப்போ அது அநியாயம்.

எல்லாம் மாறும் பாஸ் மாறிக்கிட்டு இருக்கும் வரைதான் கலாசாரம் வாழும்.

இல்லேன்னா பண்டைய எகிப்து கிரேக் கலாசாரம் காலாவதி ஆனமாதிரி ஆகிடும்.

கடைசியா ஒன்னு சொல்றேன்.

தண்ணியும் கலாச்சாரமும் ஒன்னுதான்.

தண்ணிக்கு ஓடி கிட்டிருக்கும் வரைதான் மரியாதை.

ஒருஇடத்தில் நின்றுவிட்டால் அதுக்கு பேரு குட்டை.

ரொம்ப நாள் ஆய்டுச்சினா அதுக்கு பேரு சாக்கடை.

கலாச்சாரமும் புதுமைகளை ஏற்கும்வரை அது உச்சத்தில் இருக்கும்.

நான் இதை நியாய படுத்தவோ அல்லது எதிர்க்கவோ இல்லை.

இது இந்த காலத்தின் தேவையாக கூட இருக்கலாம்.

வலம் போகிறவர்கள் வலம் போகட்டும் இடம் போகிறவர்கள் இடம் போகட்டும்.

அவர் அவர் விருப்பம்.

(அப்புறம் இதுதான் என் முதல் பதிவு ரொம்ப திட்டாதிங்க வலிக்கும் அழுதிருவேன்.)
16 கருத்து சொல்றாங்க:

மங்குனி அமைச்சர் said...

ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க மண்டையன் ......... கீப் இட் அப் ................ அப்புறம் இந்த தமிழ்மணம் , இன்ட்லியில் இணையுங்கள் ..அப்பத்தான் ஓட்டுப் போடா முடியும்

மங்குனி அமைச்சர் said...

இந்த வேர்டு வெரிபிகேசன எடுத்து விடுங்க , அதுனால ஒரு உபயோகமும் இல்லை , கமன்ட் போடுபவர்களை டெண்சனாக்கும்

அஞ்சா சிங்கம் said...

ரொம்ப நன்றி அமைச்சரே உடனே செய்கிறேன் .
வந்து விழாவை சிறப்பித்து விட்டீர்கள் .

Anonymous said...

/////// லிவ்விங் டுகெதர் காலத்தின் கட்டாயம் ////////
ரைட் ஆரம்பிச்சாச்ச ...,இனி இங்கு கும்மி அடிக்கலாமா ? தில்லு முல்லு கவுன்ட்டௌன் ஸ்டார்ட்ஸ்......,

அஞ்சா சிங்கம் said...

வாங்க சார் வாங்க

அஞ்சா சிங்கம் said...

இனி இங்கு கும்மி அடிக்கலாமா ? தில்லு முல்லு கவுன்ட்டௌன் ஸ்டார்ட்ஸ்.....//
கட புதுசு சார் பார்த்து கும்மி அடிங்க

எஸ்.கே said...

நல்லா எழுதியிருக்கீங்க!
எழுத ஆரம்பித்ததற்கு வாழ்த்துக்கள்! தொடர்ந்து சிறப்பாக எழுதவும்!

Anonymous said...

(அப்புறம் இதுதான் என் முதல் பதிவு ரொம்ப திட்டாதிங்க வலிக்கும் அழுதிருவேன்.)


ஹும்ஹும் செல்லாது!!!!!செல்லாது!! அழுவ கூடாது ஒய் திரும்பி நின்னு தாக்கனும் ...,தீயா இருக்கனும் ...,உன் கருத்தை சொல்லிட்டே அவ்ளோதான் ...,மாற்று கருத்து வந்தா அலசி பார்த்து உன்னக்கு பிடிச்சி இருந்த எத்துக்கோ இல்லியா டிசண்டா சொல்லிடு அவ்ளோ தான்

அஞ்சா சிங்கம் said...

நல்லா எழுதியிருக்கீங்க!
எழுத ஆரம்பித்ததற்கு வாழ்த்துக்கள்! தொடர்ந்து சிறப்பாக எழுதவும்!//
ரொம்ப நன்றி எஸ்.கே .

Anonymous said...

/////// கட புதுசு சார் பார்த்து கும்மி அடிங்க /////////

ஓகே ரைட் .......,

அஞ்சா சிங்கம் said...

ஹும்ஹும் செல்லாது!!!!!செல்லாது!! அழுவ கூடாது ஒய் திரும்பி நின்னு தாக்கனும் ...,தீயா இருக்கனும் ...,உன் கருத்தை சொல்லிட்டே அவ்ளோதான் ...,மாற்று கருத்து வந்தா அலசி பார்த்து உன்னக்கு பிடிச்சி இருந்த எத்துக்கோ இல்லியா டிசண்டா சொல்லிடு அவ்ளோ தான்//
அட களத்துல நாங்க விட்டுகுடுக்க மாட்டோம் .
வருகைக்கு நன்றி

ராஜி said...

து கடையா? சரக்குலாம் புதுசா தரமா இருக்குமா? புது பதிவர் பொலவே தெரியலையே. அப்படியெ டெரர், மங்குனி பொல குழப்பி இருக்கீர். வளர வாழ்த்துக்கள்

அஞ்சா சிங்கம் said...

ராஜி has left a new comment on your post "லிவ்விங் டுகெதர் காலத்தின் கட்டாயம்":

து கடையா? சரக்குலாம் புதுசா தரமா இருக்குமா? புது பதிவர் பொலவே தெரியலையே. அப்படியெ டெரர், மங்குனி பொல குழப்பி இருக்கீர். வளர வாழ்த்துக்கள்//
ஆதரவுக்கு நன்றி .

மாணவன் said...

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்

Sindhan R said...

எப்புடி ஓட்டு போடரது?

அஞ்சா சிங்கம் said...

மாணவன் said...

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்////

நன்றி நண்பரே ...............

Popular Posts