Tuesday, October 20, 2015

ஹிந்து நாடு ஏன் கூடாது

v


இந்த நாட்டை ஒரு இந்து மத நாடாக மாற்ற துடிப்பவர்கள் அல்லது அதுபோன்றதொரு ஆசையை மனதில் மட்டும் வைத்து கொண்டு சகிப்புத்தன்மையற்ற செயலுக்கும் மவுனம் சாதித்து மறைமுக ஆதரவு தருபவர்களும் ஏன் இந்த நாடு இந்து மத நாடாக ஆக வேண்டும் என்பதற்கும் தெளிவான ஒரு விளக்கமும் சொல்ல முடியாது .
 முஸ்லீம்களுக்கு தனி நாடுகள் இல்லையா? அவர் நாட்டில் போயி நீ இந்தமாதிரி பேசமுடியுமா ? என்கிற சொத்தை வாதத்தைதான் முன் வைக்கிறார்கள் . ஐயா அது மதவாதநாடாக இருந்து அதனால் அவர்கள் பெற்ற பயன் என்ன என்பதை ஆராய்ந்து விட்டு உன் நாட்டை மதவாத நாடாக மாற்ற உன் ஆதரவு தெரிவித்தால் நலம்.

இப்போது அனைத்து துறைகளிலும் முன்னணியில் இருக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஒரு இருண்டகாலம் இருந்தது.  ஆம் ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலும் கிருஸ்துவ மதத்தை தழுவின பின்பு விளைந்த நாசங்களை பட்டியல் இட்டால் தெரியும். அரசனின் கையில் இருக்கும் அதிகாரத்தை விட ஒரு மத நிறுவனத்திடம் அதிக அதிகாரம் குவியுமானால் அவர்கள் செயல் எப்போதும் அமைதியின்மைக்கே நம்மை இட்டு செல்லும் என்பதற்கு ஏராளமான வரலாறுகள் உள்ளது. 

போப்பின் பேச்சை மன்னன் தட்டமுடியாது சிலுவைபோர்கள் என்கிற வரலாற்றின் மிக நீண்ட போரை ஏறதாழ 200 ஆண்டுகள் சிறியது பெரியதுமாக பல சிலுவைபோர்கள் நடந்திருக்கிறது இதை ஆரம்பித்து வைத்தவர் போப் இரண்டாம் அர்பன். மதம் வெறும் போர்களை தானே உற்பத்தி செய்யும் அதில் சாவது ராணுவ வீரர்கள் தானே என்று விட்டு விட முடியுமா. அதே காலகட்டத்தில் கிறிஸ்தவ மதத்தை தழுவாதவர்கள் சடங்குகளில் நம்பிக்கை வைத்தவர்கள் எல்லாம் கூட்டம் கூட்டமாக சூனியம் செய்பவர்கள் என்று உயிரோடு கொளுத்த பட்டார்கள்.
பல ஆராய்சிகள் தடை செய்யபட்டது பல கண்டுபிடிப்பாளர்கள் கொலை செய்ய பட்டார்கள் கோப்பர்னிக்கஸ் தான் கண்டுபிடித்த சூரிய மைய கோட்பாடை இறக்கும் வரை வெளியிடவில்லை அவர் இறந்த பின் தான் அது வெளிவந்தது. கலிலேயோ அதை ஆதரித்ததால் பலவிதங்களில் கொடுமைபடுத்தபட்டார் ஏன் திருச்சபையில் தான் ஒரு பொய்யன் என்று கூறி மன்னிப்பு கேட்க்கும் நிலைமைக்கு தள்ளபட்டார். ஏன் என்றால் திருச்சபையின் அதிகாரத்திற்கு முன்னாள் மன்னனின் அதிகாரம் செல்லாது. 

இப்படி முன்னேற்றத்திற்கான எந்த தடையமும் இல்லாமல் தடுமாறி கொண்டுஇருந்த அதே ஐரோப்பிய கண்டம்தான் இன்று அறிவியல் ஆராய்ச்சியில் உலகிற்கு முன்னணி ஆகயுள்ளது .
போப்பின் அதிகாரத்தில் இருந்து வெளியேறிய பின்னர்தான் இது நடந்தது.
இனி ஒருபோதும் மத நிறுவனங்களை அரசியலில் கலக்கும் தவறை அவர்கள் செய்யமாட்டார்கள். காரணம் அவர்கள் வரலாறை வெறும் மார்க் வாங்குவதற்காக படிப்பவர்கள் அல்ல. அதில் நடந்த தவறுகளில் இருந்து பாடம் கற்பதற்காக படிப்பவர்கள். நாம் தான் வரலாறை உள்ளபடியே ஏற்றுகொள்ளும் பழக்கம் இல்லாதவர்கள் ஆயிற்றே. வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் அதை திருத்தி திருத்தி உண்மையை மறைத்து பொய்யையும் தற்புகழ்ச்சி மிக்க பாடல்களாலும் நிரப்பி விடும் பழக்கம் உள்ளவர்கள் தானே நாம். எந்த செயலுக்கும் நாம் வெட்கபட்டதே இல்லை மாறாக அதற்க்கு நியாயம் கற்ப்பிக்கும் குணம் உள்ளவர்களாக உருவாக்க பட்டுள்ளோம்.
   
ஆனால் நாம் பல்லாயிரம் ஆண்டுகளாக மதத்தின் பெயரால் ரத்தம் சிந்திகொண்டு தான் இருக்கிறோம். இஸ்லாமும் கிருத்துவமும் இந்த மண்ணிற்கு வருவதற்கு முன்னாள் இருந்தே இந்த ரத்தம் சிந்தும் படலம் நடந்து கொண்டே தான் இருக்கிறது. சைவம், வைணவம், பவுத்தம், சமணம், என்று ஏதோ ஒரு மதத்துடன் ஏதோ ஒரு காரணத்திற்காக அனல்வாதமும் புனல்வாதமும் புரிந்துகொண்டுதான் இருந்திருக்கிறோம். மற்றவர்களை கழுவில் ஏற்றுவது எப்போது நாம் ரசிக்கத்தகுந்த வெற்றியாகவே கொண்டாடி கொண்டிருந்திருக்கிறோம். வெள்ளையனின் வருகைக்கு பின்னால் சமத்துவம் சகோதரத்துவம் என்று லேசாக முன்அடி எடுத்து வைத்தால் அதற்குள் நம்மை பின்னால் இழுக்க ஒரு சக்தி கிளம்பிவிட்டது. 

இதனால் விளையபோகும் பாதிப்பு தெரியாமலேயே அந்த சக்திக்கு எரிபொருளாக ஆவதற்கு இங்கு பலர் துடிக்கிறார்கள். இன்று நீ மாட்டுகறி சாப்பிடாதே என்று சொல்பவன் நாளை நீ இதை மட்டும் தான் சாப்பிடவேண்டும் என்று உன் சாப்பாட்டை தீர்மானிப்பான் . இன்று நீ இதை எழுதாதே என்று சொல்பவன். நாளை நீ இதை மட்டும்தான் எழுதவேண்டும் அதையும் இப்படிதான் எழுத வேண்டும் என்று கட்டளை இடுவான். பிறகு இவன் மட்டும்தான் படிக்கணும் இவன் எல்லாம் படிக்கவே கூடாது அது நம்ம தர்மத்துக்கு விரோதமானது என்று சொல்வான். அப்போது நீ தலையில் காவி துண்டை சுற்றிக்கொண்டு கையில் காய்ச்சிய ஈயத்தோடு வீடு வீடாக சென்று எவன் காதில் ஊற்றலாம் என்கிற வெறியோடு சுற்றிக்கொண்டுதான் இருப்பாயா ?
சமத்துவமும், அமைதியும், குறிப்பாக நாகரிகமும் உள்ள ஒரு மதவாத நாடு நம்மால் காட்டமுடியுமா ? 
அப்படி இந்த நாடு தன் மதகொள்கையினால் மட்டுமே முன்னேறியது எல்லா மக்களும் ரத்தம் சிந்தாமல் அமைதியாக வாழ்கிறார்கள் என்று ஒரு முனுதாரனமான நாட்டை காட்டுங்கள் அப்படி ஒன்று இருந்து விட்டால் வாருங்கள் நாமும் கத்தியோடு கிளம்பலாம் இந்த நாட்டை ஒரு இந்துமத் நாடாக மாற்ற.  
                       

Friday, March 13, 2015

கதம் கதம்

v
இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் போட்டியே இந்த கதம் கதம். கதாநாயகனாக சதுரங்கவேட்டை நட்ராஜும் , நந்தாவும் நடித்திருக்கிறார்கள் . பாபு தூயவன் இயக்கி இருக்கிறார் .


கதை ரொம்ப சிம்பிள் நேர்மை போலிஸ், நேர்மை அற்ற போலிஸ், நேர்மை போலீஸாக நந்தாவும் கேடி போலீஸாக நட்ராஜும் நடித்திருக்கிறார்கள் .
தனி ஒரு ஆளாக நட்ராஜ் படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறார் . நந்தா எப்போதும் கஞ்சிதொட்டியில் முக்கி எடுத்தவர் போல் விறைப்பாகவே நிற்கிறார் . காதல் காட்சிகளில் கூட அப்படியே .

கதாநாயகியாக சனம் ஷெட்டி நடித்துள்ளார் . அப்படின்னு சரியாக  சொல்லமுடியாது வெறும் பாடல் காட்சிகளுக்கு என்ன நடிப்பு வேண்டி இருக்கு. எல்லா தமிழ் பட கதாநாயகிகளை போல குறைவான அறிவு ஆனால் மீதி எல்லாம் அதிகமாகவே இருக்கு.  பாடல் காட்சிகளில் முழுசாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.(நன்றாக கவனிக்கவும் முழுசாக ) .


வில்லனாக படத்தில் ஒருவர் வருகிறார் படம் ஆரம்பிக்கும்போது தன்னை எம்.பி. என்று சொல்கிறார் . பின்னர் படம் முடியும் பொது தான் ஒரு எம்.பி. என்று சொல்கிறார் . இடைப்பட்ட நேரத்தில் அவர் எம்.பி. என்பதை எல்லாரும் மறந்துவிட்டார்கள் படம் பார்க்கும் நாம் உட்பட. இப்படி நெறி படுத்தபடாத காட்சிகள் படத்திற்கு  தொய்வு .

இதை எல்லாம் தாண்டி நட்ராஜின் நடிப்பு மற்றும் வசன உச்சரிப்பு, நக்கல், நையாண்டி  எல்லாம் படத்தை காப்பாற்றுகிறது  .ஒரு பார்த்திபன் ஸ்டெயில் நடிப்பு .

பி.சி.செண்டர் ரசிகர்களை குறி  வைத்து எடுத்திருக்கிறார்கள். அதில் நிச்சிய வெற்றியும் பெற்றுவிட்டார்கள். ஜாலியாக பொழுது போகவேண்டும் என்று விரும்புபவர்கள்  பார்க்கலாம்.   
  

 
 

Friday, January 23, 2015

தொட்டால் தொடரும் - விமர்சனம்

v
நான் மிகவும் மதிக்கும் நண்பரின் முதல் படமான இதற்கு நான் விமர்சனம் எழுதலாமா என்று ஒரு சின்ன தயக்கம் இருந்தது அதை தூக்கி மூலையில் வைத்து விட்டு இதை எழுதுகிறேன் ..

இது ஒரு ரொமாண்டிக் த்ரில்லர் வகை .. பொதுவாக இந்த மாதிரி திரில்லர் படங்களுக்கு ரெண்டு விதமான சைக்காலஜி (உளவியல்) மட்டுமே பிரதானம் .
ஒன்று கொலையாளி யார் என்பதை மறைத்து வத்து பார்வையாளர்களை யூகிக்க விட்டு கடைசியில் முடிச்சை அவிழ்ப்பது . பார்வையாளர்கள் இவனா அவனா ? என்று குழம்பவைத்து அவர்கள் எதிர்பார்க்காத முடிவை தருவது . அந்த முடிவு பார்வையாளர்கள் ஏற்று கொள்ளும் வகையில் இருந்தால் படம் சக்சஸ். உதாரணம் அதே கண்கள் போன்றவை. இதில் வெற்றியை விட தோல்வியே அதிகம் . காரணம் இயக்குனரின் திருப்பம் பார்வையாளர்கள் ஓரளவிற்கு யூகித்து  விடுவது . அல்லது ஏற்று கொள்ள முடியாத நிலையில் இருப்பது .

ரெண்டாவது வகை ஓரளவிற்கு வெற்றிகரமானது . இதில் கொலையாளி யார் என்பதை பார்வையாளர்களுக்கு முன்னரே தெரியபடுத்தி விடுவது. ஆனால் அந்த படத்தில் இருக்கும் கேரேக்டர்களுக்கு அது தெரியாது . இப்போது பார்வையாளர்களுக்கு சஸ்பென்ஸ் இருக்காது ஆனால் ஒரு வகை பதபதைப்பு இருக்கும். அது அவர்களை படத்தோடு ஒன்ற செய்துவிடும் . சிகப்பு ரோஜா , விடியும் வரை காத்திரு , வாலி . போன்ற வகையறாக்கள் .

தொட்டால் தொடரும் முதல் வகை . படம் ஆரம்பித்து பத்து நிமிடத்திற்குள் நம்மைஉள்ளே இழுத்து விடுகிறார் இயக்குனர் . படம் தொய்வில்லாமல் நகருவது மிகபெரிய பலம் . படத்தின் நாயகன்  தமன் எதார்த்தமான நடிப்பு. பல நேரங்களில் ப்ரித்விராஜ் நினைவுக்கு வருகிறார் அப்படி ஒரு வாயிஸ் மாடுலேஷன் கொஞ்சம் மெனக்கிட்டால் ஒரு ரவுண்ட் வரலாம் .

நாயகி அருந்ததி இந்த அம்மணி கால் சென்ட்டரில் வேலை பார்ப்பவராக இல்லாமல் சண் மியுசிக் காம்பயர் என்று காட்டி இருந்தால் சரியாக இருந்திருக்கும். ஏன் என்றால் இவர் பாடி லேங்குவேஜ் அப்படி இருக்கு நாயகனிடம் பேசும் பொது கூட ஏதோ டெலி காலரிடம் பேசுவதை போலவே இருக்கு. கதாநாயகிகளுக்கு நடிக்க வாய்ப்பு  இருக்கும் படங்கள் கிடைப்பது அரிது . இவருக்கு இந்த வாய்ப்பு அதிர்ஷ்டம் தான். அதை சரியாக பயன் படுத்தினாரா என்பது கொஞ்சம் கேள்வி குறிதான் . நாயகனுடன் பாண்டிச்சேரியில் தனியாக தாங்கும் சந்தர்ப்பத்தில் எங்கே கவர்ச்சி கிவர்ச்சி காட்டிவிடுவாரோ என்கிற பதட்டம் தோற்றி கொள்வதை தவிர்க்க முடியவில்லை . நல்ல வேலையாக அப்படி எதுவும் இல்லை . பிற்காலத்திலும் அப்படி நடந்துவிடாமல் இருக்க கடவுளை வேண்டி கொள்வோம் .  

நாடகத்தனமான காட்சியமைப்பு படத்திற்கு மிக பெரிய தொய்வு சித்தி கொடுமை கையாலாகாத தந்தை என்று நாயகியின் குடும்பத்தை பார்க்கும் போது எல்லாம் சீரியல் நினைவுதான் வருகிறது .

ரெண்டு ட்ராக்காக பயணிக்கும் திரைக்கதை சுவாரசியம். இன்வெஸ்டிகேஷன் பிரிவு கொஞ்சம் அமெச்சூர் தனம். சுவாரசியமாக போட்ட முடிச்சிகள் அவிழ்க்கும் பொது  இருந்த சுவாரஸ்யம் வடிந்து விடுகிறது.

நடிப்பு என்று பார்த்தால் பாரதி மணி  ஐயா ஒரு காட்சியில் வந்தாலும் முத்திரை பதுத்து விட்டு போகிறார் . ரெண்டாவது பிரமிட் நடராஜன் . எல்லாம் எச்பீரியன்ஸ். 

இசை பி.சி.சிவம் பாடல்கள் ஒ.கே. ரகம் பின்னணி இசை ரொம்ப சுமார் படம் நாடகத்தனமாக தோன்றுவதற்கு இவர் முக்கிய காரணம் .

க்ளைமாக்ஸ் காட்சி படத்திற்கு ஒரு திரிஷ்ட்டி போட்டு .
தான் ஒரு இயக்குனர் என்பதை கேபிள் ஷங்கர் இந்த படத்தின் மூலம் தெளிவாக நிருபித்து விட்டார் . மிக சிறந்த இயக்குனர் என்பதை அடுத்த படத்தில் நிரூபிப்பார் என்று நம்புகிறேன்.



Popular Posts