இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் போட்டியே இந்த கதம் கதம். கதாநாயகனாக சதுரங்கவேட்டை நட்ராஜும் , நந்தாவும் நடித்திருக்கிறார்கள் . பாபு தூயவன் இயக்கி இருக்கிறார் .
கதை ரொம்ப சிம்பிள் நேர்மை போலிஸ், நேர்மை அற்ற போலிஸ், நேர்மை போலீஸாக நந்தாவும் கேடி போலீஸாக நட்ராஜும் நடித்திருக்கிறார்கள் .
தனி ஒரு ஆளாக நட்ராஜ் படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறார் . நந்தா எப்போதும் கஞ்சிதொட்டியில் முக்கி எடுத்தவர் போல் விறைப்பாகவே நிற்கிறார் . காதல் காட்சிகளில் கூட அப்படியே .
கதாநாயகியாக சனம் ஷெட்டி நடித்துள்ளார் . அப்படின்னு சரியாக சொல்லமுடியாது வெறும் பாடல் காட்சிகளுக்கு என்ன நடிப்பு வேண்டி இருக்கு. எல்லா தமிழ் பட கதாநாயகிகளை போல குறைவான அறிவு ஆனால் மீதி எல்லாம் அதிகமாகவே இருக்கு. பாடல் காட்சிகளில் முழுசாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.(நன்றாக கவனிக்கவும் முழுசாக ) .
வில்லனாக படத்தில் ஒருவர் வருகிறார் படம் ஆரம்பிக்கும்போது தன்னை எம்.பி. என்று சொல்கிறார் . பின்னர் படம் முடியும் பொது தான் ஒரு எம்.பி. என்று சொல்கிறார் . இடைப்பட்ட நேரத்தில் அவர் எம்.பி. என்பதை எல்லாரும் மறந்துவிட்டார்கள் படம் பார்க்கும் நாம் உட்பட. இப்படி நெறி படுத்தபடாத காட்சிகள் படத்திற்கு தொய்வு .
இதை எல்லாம் தாண்டி நட்ராஜின் நடிப்பு மற்றும் வசன உச்சரிப்பு, நக்கல், நையாண்டி எல்லாம் படத்தை காப்பாற்றுகிறது .ஒரு பார்த்திபன் ஸ்டெயில் நடிப்பு .
பி.சி.செண்டர் ரசிகர்களை குறி வைத்து எடுத்திருக்கிறார்கள். அதில் நிச்சிய வெற்றியும் பெற்றுவிட்டார்கள். ஜாலியாக பொழுது போகவேண்டும் என்று விரும்புபவர்கள் பார்க்கலாம்.

0 கருத்து சொல்றாங்க:
Post a Comment