Wednesday, March 30, 2011

வருங்கால நிரந்தர முதல்வர் டி.ஆர்.(2081)

v

தக்காளி நானும் பார்த்துக்கிட்டு இருக்கேன் .யாருமே எங்க வருங்கால முதல்வரை கண்டுக்க மாட்றாங்க .
வைகோ தேர்தலை புறக்கணித்த போது வளைச்சி வளைச்சி பதிவு எழுதினவங்க எல்லாம் எங்க போனாங்க .
இந்த நாட்டுக்காக எப்பேர் பட்ட தியாகத்தை பண்ணிருக்காரு யாருமே கண்டுக்கலேனா எப்படி ......
அதான் அந்த வரலாற்று சிறப்பு மிக்க அறிக்கையை நான் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் படிக்க சோம்பல் படுபவர்களுக்காக காணொளி இணைக்கப்பட்டுள்ளது .
அதனால் அனைவரும் கண்டிப்பாக பார்த்துவிட்டு செல்லவும் வரலாறு மிக முக்கியம் அமைச்சரே ..............


லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கை.....

தற்போது வரும் அறிக்கைகளில் சிலர் தங்கள் கோணத்தில் சொல்வதைப் போல நாங்களும் விரட்டப்பட்டவர்களும் அல்ல. விடு பட்டவர்களும் அல்ல. துரத்தப்பட்டவர்களும் அல்ல.


தொலைநோக்குப் பார்வையில் சிந்தித்துப் பார்த்து தூரம் தள்ளி நின்றவர்கள். கடந்த காலத்து கசந்த அனுபவங்கள் மறக்க வில்லை. அதனால் இந்த தேர்தல் குறித்து இடைப்பட்ட காலத்தில் நான் வாய் திறக்கவில்லை.

இந்த காலத்தில் அரசியலில் முன்னேறுவதற்கு தேவைப்படுகின்றன சில அடிப்படைத் தகுதிகள். அப்படிப்பட்ட தகுதிகள் இருந்தால்தான் தேர்தலில் கூட கிடைக்கும்போல இருக்கிறது கணிசமான தொகுதிகள். இன்றைய சூழலில் அரசியலில் முன்னேறுவதற்கு தேவை யோகம். மாறாக தேவை இல்லவே இல்லையோ தியாகம்.

ஆம் நாட்டு நடப்பைப்பார்த்தால் அரசியல் ஆகி விட்டது கேலிக்கூத்து. அதிக பட்சத்தினர் பேசுகின்றனர்.   வரும் இந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் வாக்களிக்கும் நாள் ஏப்ரல்-13 வாக்குகளை எண்ணும் நாள் மே-13. இடையில் இருப்பது ஒரு மாசம். எதற்கு இந்த அவகாசம்? எனப் பலர் மனதில் எழுந்தது இந்தக் கேள்வி. எந்த கண்கட்டு வித்தை காரணமாகவும் கண்டு விடக்கூடாதல்லவா தோல்வி.

என இந்த தேர்தலில் இறைவனை நோக்கி நடத்த விரும்புகிறோம் ஒரு வேள்வி. மின்னணு வாக்கு பதிவில் குளறுபடி நடப்பதற்கு இருக்கிறதாம் பல வழிமுறை... ஆகையால் மீண்டும் வர வேண்டும் வாக்குச் சீட்டு முறை... அப்படி ஒரு மாற்றம் வராத வரை இந்திய ஜனநாயகத்துக்கே அதுபெரும் குறை. அமாவாசையன்று மாதத்தில் வான் நிலவுக்கு ஒரு நாள் விடுமுறை. சில நாள் வளர்பிறை.

சில நாள் தேய்பிறை. இந்த சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரையில் எங்களுக்கு இருக்கலாம் தேய்பிறை.

இறைவன் அருளால் வரும் காலத்தில் காண்போம் வளர்பிறை. இந்த தேர்தல் காலம் எங்களுக்கான கோடை விடு முறை. கொள்கையைக் காக்க இதுதான் எனக்கு தெரிந்த நடைமுறை. 


தனித்து நின்று தனி ஆவர்த்தனம் வாசிப்போம் என்று சொல்லவும் கூடாது. தண்டவாளம் இல்லாத ஊருக்கு புறப்பட்டு போகவும் முடியாது என்ற சமயோசித முடிவின்படி இந்த சட்ட மன்ற தேர்தலெனும் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆட்டக் காரர்களாக களமிறங்காமல் வெறும் பார்வையாளர்களாகவே இருக்க விரும்புகிறோம்’’தெரிவித்துள்ளார்.
************************************************************************

எல்லோரும் கரகோஷங்களை எழுப்புங்கள் .........



தமிழ்நாடு எத்தனையோ சோதனைகளையும் வேதனைகளையும் சகித்து கொண்டிருக்கிறது ................
இதையும் சேர்த்துதான் .....................

Monday, March 28, 2011

மானம்கெட்ட வாக்காள பெருமக்களே

v

மொத்த தமிழ்நாடே தேர்தல் சுரத்தில் பேஸ்தடித்து இருக்கிறது தண்ணி போடாமலே தமிழ்நாட்டு மக்கள் இப்போது போதையில் இருக்கிறார்கள் . ஐயா வந்தால் என்ன கிடைக்கும் அம்மா வந்தால் என்ன கிடைக்கும் என்று மன கணக்கு போட்டு கொண்டிருக்கிறான் .
அட மானம் கெட்ட வாக்காள பெருமக்களே ஐயாவும் சரியில்லை ஆத்தாளும் சரியில்லை பின்னே மக்களும் தறுதலையாகதான் இருப்பார்கள் .....

இவ்வளவு  இலவசங்கள் இரு கழகங்களும் மாறி மாறி குடுக்கிரார்களே கொஞ்சமாவது சுரனையுடன் எதிர்ப்போம் என்று யாருக்காவது தோன்றுகிறதா ? இவர்கள் இலவசமாக குடுத்து வள்ளல் என்று பெயர் வாங்க அது என்ன அவர்கள் அப்பன் வீட்டு பணமா.?

நல்ல அரசின் வேலை இலவசங்கள் குடுப்பது அல்ல . நல்ல திட்டங்கள் குடுப்பதுதான் . அப்படியே இலவசம் குடுத்துதான் ஆகவேண்டும் என்றால் கல்வியை குடு . மருத்துவத்தை இலவசமாக குடு மற்றதை நாங்கள் சம்பாதித்து கொள்கிறோம் .

நான் இப்போது சம்பாதித்து சேர்த்துவைக்கும் பணம் முழுவதும் என் வாரிசுகளுக்கு முழுமையாக போகும் என்று நினைத்தால் உங்களை விட முட்டாள் வேறு யாரும் இல்லை .

உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள் முன்பு வைன் ஷாப் கடைகள் எல்லாம் அரசியல்வாதிகள் கையில் இருந்தது அவர்கள் அதில் சம்பாதித்து கட்சிகளுக்கு படி அளந்து கொண்டிருந்தார்கள் .அரசு சாராயம் விற்க ஆரம்பித்த பின்னர் அவர்களுக்கு சம்பாதிக்க வேறு துறை தேவைபட்டது . எல்லோரும் இப்போது கல்வித்தந்தை ஆகிவிட்டார்கள் . தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் பொது ஒருவிஷயத்தை கவனியுங்கள் .பெட்ரோல் பன்க்கை விட அதிகமாக பொறியியல் கல்லூரிகள் இருபக்கமும் இருக்கும் .
அதற்க்கு அடுத்த படியாக மருத்துவம். ஒரு நடுத்தர குடும்பத்தை  சேர்ந்த ஒருவன் தன வாழ்நாள் முழுவதும் உழைத்து சம்பாதிக்கும் பணம் பாதி அவன் வாரிசுகளின் கல்விக்காகவும் மீதி அவனின் முதிய வயதில் மருத்துவதுக்காகவும் செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். ஒருவரின் வாழ்நாள் சம்பாத்தியம் முழுதும்  இருவரால் கொள்ளையடிக்க படுகிறது. அது தெரியாமலேயே ஒண்ணரையணா மிக்சீக்காக சோரம் போகும் வாக்காளர்களை வேறு எப்படி அழைக்க முடியும் .....

இப்போது வரை இலவசங்களை மக்கள் வெறுப்பதாக தெரிய வில்லை ஒரு வித நப்பாசையுடன் தான் இருக்கிறார்கள் .
கல்வி கட்டனத்தை குறைக்கும் நடவடிக்கை என்ன ஆனது. எந்த கட்சியாவது தேர்தல் அறிக்கையில் இதை பற்றி சொல்லி இருக்கிறதா? கல்வி என்ன அத்தியாவசிய பொருளா? மிக்சி மாதிரி ...........

முன்னேற்றம் தரும் திட்டம் என்று ஏதாவது கழகங்களிடம் இருக்கிறதா?
நாம் ஏன் இலவசங்களை எதிர்த்து போராடகூடாது. ஈ என இறத்தல் இழிந்தன்று .............அவ்வை கிழவி அப்பவே சொன்னது .
எங்க வீட்டு கிழவி மூணுமே யாரு தராங்களோ அவுங்களுக்கு தான் ஒட்டு போடணும்ன்னு சொல்லுது ..................
ஏற்கனவே தமிழனின் வீரத்தையும் ரோஷத்தையும் தனித்தன்மையையும் மழுங்கடித்து விட்டோம் ...........
மிச்சம் இருப்பது மானம் மட்டும் தான் அதையும் இந்த அரசியல்வாதிகள் மழுங்கடித்து விடுவார்கள் ................

இது மிகவும் ஆபத்தான அரசியல் என்று யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை. இதை மக்களுக்கு புரியவைக்க யாரும் முன்வரவும் இல்லை. வலையுலக நண்பர்கள் குறைந்தபட்சம் இந்த பிரச்சாரத்தை முன்னெடுக்க ஆசை படுகிறேன் . இந்த இலவசங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அறிய ஆவலாய் இருக்கிறேன் .................. 

   

 

Monday, March 21, 2011

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ........

v


இந்த மூன்று மாதத்தில் ஜனங்கள் பொழுது போக்க எத்தனை விதமான பொழுதுபோக்குகள் இருக்கிறது பாருங்கள். உலக கோப்பை கிரிக்கட்டு அடுத்து ஐ.பீ.எல் கிரிக்கெட்டு அப்புறம் தேர்தல் கூத்துக்கள் என்று ஜனங்களுக்கு ஒரே கிளுகிளுப்புதான் .

தேர்தல் தேதி அறிவிக்க பட்டவுடன் நடந்த கூத்துக்கள் எல்லாருக்கும் தெரியும்.என் சிறுமூளைக்கு மட்டும் சின்ன டவுட்டு இருக்கு பெருமூளை  எப்போதும் வேலை செய்வதில்லை.யாராவது விவரமானவங்க சொன்னா புரிஞ்சிபேன் .

இந்த தேர்தலில் தி.மு.க. ஒரு அணியாகவும் ஆ.தி.மு.க ஒரு அணியாகவும் நிற்கிறது. ஆரம்பத்தில்  தி.மு.க. மேல் இருந்த மக்கள் கோபம் ஆ.தி.மு.க அணியை சுலபமாக வெற்றி பெற வைக்கும் என்று தான் நினைத்திருந்தேன் . ஆனால் கடந்த நாட்களில் அம்மா ஆடிய கூத்து பார்த்து என் கணக்கு தவறு என்று புரிந்துகொண்டேன் .

போதாத குறைக்கு கலைஞ்சரின் தேர்தல் அறிக்கை வேறு .நாம் என்னதான் கரடியாக கத்தினாலும் மிக்சி கிரைண்டர்க்கு சோரம் போகும் மக்கள் தான் எண்ணிக்கையில் பெரும்பாலும் இருக்கிறார்கள்.

இந்த தேர்தலில் நாம் காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் .........ம்................நியாயமான கோபம் .
சரி நாம் தோற்கடிக்க முயற்சிப்போம் தமிழ் இனத்தை அளிக்கும் வேலையே நயவஞ்சகமாக செய்யும் கட்சி தமிழகத்தில் இருக்க கூடாது நியாயமான கோபம்தான் .

அதை தோற்கடிக்க வேண்டும் என்றால் எதிரணியை ஜெயிக்கவைக்க வேண்டும் எதிர் அணியில் யார் இருக்கிறார்கள் ?
போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சொன்ன தங்கதாரகை பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று குரல்குடுத்த வீராங்கனை .சரி அவரை பற்றிதான் தெரியுமே கேப்டன் பிரபாகரன் இருக்கிறார் ஆனால் இவர் கடைசி வரை காங்கிரஸ் கூட்டணிக்கு காத்திருந்து வேறு வக்கு இல்லாமல் அம்மா காலில் போயி விழுந்து விட்டார்.

வை.கோ என்று ஒரு மானஸ்தன் இருந்தார்  ( இந்த ஊரு இன்னுமா இவரை நம்புது )ஊரை விடுங்க கட்சிக்காரன் நிலைமை என்ன?
தமிழர்களுக்காக தம்மு கட்டி குரல் குடுப்பவர்கள் இவரும் திருமாவும் திருமா இப்போது காங்கிரசுடன் கும்மியடிக்கிறார் .
வை.கோ போட்டிக்கு நான் வரலை என்று சொல்லி விட்டார் .
நமக்கு ஒரே வாய்ப்பு தங்க தாரகைக்கு ஒட்டு போடுவதுதான் .

எனக்கு என்ன சந்தேகம்னா தேர்தலுக்கு பிறகு அம்மா ஆட்சி அமைந்துவிட்டால். காங்கிரஸ் மஞ்சள் துண்டை உதறிவிடும் அம்மாவும் காங்கிரசும் சேர்ந்து விடுவார்கள் . இதில் சந்தேகம் இல்லை இது நடக்க போகும் உண்மை .
காங்கிரஸ் அறுபத்தி மூன்று இடத்திலும் தோற்றாலும் இது நடக்கும் மத்தியில் தி.மு.க.கழட்டிவிடபட்டு அம்மா அதிகாரத்தை சுவைப்பார் ஐந்து ஆண்டுகள் பிரெச்சனை இல்லாமல் இங்கு ஆட்சி செய்ய காங்கிரஸ்  தயவு வேண்டும்.

காங்கிரஸ் காரனுக்கு மானம் ரோஷம் சூடு சொரணை எதுவும் இருக்க போவதில்லை அதனால் அவர்கள் எதற்கும் கவலை பட போவது இல்லை .இப்போது காங்கிரசுக்கு எதிராக நாம் போடும் வாக்குகளின் எதிர்காலம் என்ன?
அது இலையாக மாறி மத்தியில் செல்வாக்காக அடுத்த ஐந்து ஆண்டுகள் இருக்கும் என்பதுதான் என் நம்பிக்கை .



காங்கிரசுக்கு எதிராக நான் போடும் வாக்குகளின் எதிர்காலம் என்ன?
49 ஒ போடலாமா ?
விவரமானவங்க சொல்லுங்களேன் புரிஞ்சிகுறேன் ..............


Popular Posts