மன்னா நம் அரண்மனையை உங்கள் புதல்வர்கள் முற்றுகையிட்டுவிட்டார்கள்.
கனத்த மவுனம்’
உப்பரிகையில் நின்று கோட்டை சுவரை வெறித்து பார்த்துகொண்டிருந்தான்
இரண்டாம் கவுசிகன்.
என் மகள் மதுராந்தகி தேவி பாதுகாப்பாகத்தானே இருக்கிறாள்.?
ஆம் மன்னா. போர் தொடங்குவதற்கு முன்னரே அவரை பட்டாசாரியார்களின்
பாதுகாப்பில் ஒப்படைத்துவிட்டேன்.
இந்நேரம் அவர் இலங்கையில் பாதுக்காப்பாக இருப்பார்.
மன்னா...
ம்..
கடைசியாக ஒருமுறை உங்கள் புதல்வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி
பார்க்கலாமே .
எதற்கு மந்திரியாரே வீண் கால விரயம். எல்லாம் விதிப்படி நடக்கட்டும் .
என்னை எதிர்ப்பதிலாவது ஒற்றுமையாக இருக்கிறார்களே.
பெண் நாடாண்டாள் என்ன குடியா மூழ்கிவிட போகிறது .?
மதுராந்தகி திறமையை நான் சிறுவயதில் இருந்தே கவனித்து வருகிறேன் ஆட்சி
அதிகாரத்தை கையாள்வதில் அவள் எந்த ஆணுக்கும் சளைத்தவள் அல்ல.
அவள் மூலமாக இந்த நாடு பெரும் பேரு அடையும் என்று கனவு கண்டது ஒரு தவறா.?
என் மகன்களின் ஒப்புதலோடுதானே இந்த ஏற்ப்பாட்டை செய்ய முயற்சித்தேன்?. இப்போது
என்ன ஆயிற்று இவர்களுக்கு?.
எல்லாம் கீழை சாளுக்கிய மன்னனின் சதி மன்னா. பெண் நாடாள்வது தெய்வ
குற்றம் சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு எதிரானது என்று தூண்டிவிட்டார்கள்.
அரியணையையும், அவர் மகளையும், உங்கள் மூத்த புதல்வனுக்கு தருவதாக ஆசைகாட்டி இருக்கிறார்.
அதில் இருக்கும்
அரசியல் சூழ்ச்சி தெரியாமல் இந்த முட்டாளும் அதற்க்கு ஒத்துகொண்டானா.?
மன்னா... ராஜகுரு தங்களை காண வந்திருக்கிறார்.
சரி வரச்சொல்.
ராஜகுரு வருகை
வெள்ளை தாடியுடன் ஒளிபொருந்திய பார்வையுடன் வயதுக்கேற்ற தள்ளாமையுடன் உள்ளே
வந்தார் ராஜகுரு.
அரசே..
கரங்கள் கூப்பிய நிலையில்..
வாருங்கள் குருநாதரே..தங்களை மிகவும் சிரமபடுத்திவிட்டேன். என்னை
மன்னித்தருள்க.
என்னால் ஆன முயற்சிகள் எல்லாம் செய்துவிட்டேன் மன்னா.
எதுவும் பலன்தரவில்லை. தங்களை சிறை பிடிப்பதே லட்சியம் என்று
கருவிகொண்டு இருக்கிறான் விஜயாதித்தன்.
குருநாதா தாங்கள் தானே மதுராந்தகியின் ஜாதகத்தை கணித்து கூறினீர்கள்.
இவள் நாடாள பிறந்தவள் என்று.
பின்னர் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது?
என் கணிப்பு பொய்க்காது மன்னா..
இப்போது நடப்பது ஏதோ ஊழ்வினை பயனாக இருக்கலாம். மதுராந்தகி
தேவி பொன்னியின் அம்சம் கொண்டவர். அதனால் மதுராந்தகி கண்டிப்பாக நாடாள்வார்.அதை
உங்கள் கண்களால் நீங்கள் காண்பீர்கள் மன்னா.
உணர்ச்சியற்ற கண்களால் அவரை பார்த்துகொண்டிருந்தான் மன்னன்
.
மன்னா ஒரு சிறு விண்ணப்பம்.
தாங்கள் என்னிடம் விண்ணப்பம் வைப்பதா .?
என்னை மேலும் பாவி ஆக்காதீர்கள் குருநாதரே என்ன செய்யவேண்டும் என்று
சொல்லுங்கள்.
பாண்டியர்களிடம் உதவி கேட்டுள்ளேன் நிலைமை சீரடையும் வரை தாங்கள்
தலைமறைவாக இருப்பது நல்லது.
எப்படி குருதேவா? முற்றுகையை உடைத்து கொண்டு தப்பிக்க நம்மிடம் போதிய
படை வீரர்கள் இல்லை.
வடக்கு வாசல் படையினரை நம்ப முடியாது நம் வீரர்கள் பலர் இப்போது
அவனுக்கு சாதகமாக மாறி இருக்கும் வாய்ப்பு உள்ளது.
சற்றே நெருங்கி மன்னனின் காதருகே வந்தார் ராஜகுரு ..
உங்கள் முன்னோர்கள் வெட்டிவைத்த சுரங்க பாதை இருக்கிறதே மன்னா ?
குருநாதரே எதிரியாக நிற்ப்பவர்கள்
என் மகன்கள் அவர்களுக்கு இந்த
கோட்டையில் உள்ள அத்தனை சுரங்கங்களும் தெரியும்..
தலையை அசைத்தவாறே மன்னனின் காதில் லேசாக கிசுகிசுத்தார் அவர்களுக்கு
தெரியாத ஏன் உங்களுக்கே தெரியாத சுரங்கம் ஒன்று இருக்கிறது மன்னா .....
ஆச்சிரியத்தில் விழிகள் விரிய பார்த்தான் மன்னன் .
எனக்கு தெரியாமலா?
ஆம் மன்னா அது களப்பிரர்கள் காலத்தில் இந்த அரண்மனையை கைப்பற்றும்
போது கண்டு பிடிக்கபட்டது. தாமரைக்குளத்தின் படிக்கட்டுகளுக்கு அடியில் உள்ளது.
அது எங்கே முடியும் என்று யாருக்கும் தெரியாது.
ஏன் ?
அந்த சுரங்கத்தின் உள்ளே ஒரு குறிப்பு உள்ளது மன்னா.
இது மாய சுரங்கம். ராஜரத்தம் மட்டும் உள்ளே செல்ல அனுமதி என்று.
அதை எனது முன்னோர்கள் கண்டுபிடித்து பாதுகாத்து வருகிறார்கள்.
இரண்டொரு முறை அந்த சுரங்கத்துள் ஆள் அனுப்பி சோதிக்க முயன்றனர் சென்ற யாரும்
திரும்பவில்லை..
இதை ரகசியமாக நான்கு தலைமுறையாக பாதுகாத்துவருகிறோம்.
இப்போது இதை விட்டால் வேறு வழி இல்லை மன்னா ...
சிறிதுநேர யோசனைக்கு பிறகு திடமாக எழுந்தான் மன்னன்.
தங்கள் ஆலோசனையை இதுவரை நான் தட்டியது இல்லை நீங்கள் சொன்னபடியே
ஆகட்டும் ...
சுரங்க வாயில்
(மன்னனும், ராஜகுருவும், ஆபத்துதவிகளும்,)
ஆபத்துதவிகள் இரண்டுபேர் என்னுடன் வந்தால் போதும்.
பந்தம் கொளுத்தப்பட்டது.
சிறிது வெளிச்சத்தில் பந்தம் தேவை படவில்லை.
ஆனால் உள்ளே செல்ல செல்ல இருள் வெளிச்சத்தை கவ்வியது.
அடேய் கார்மேகா எங்கு இருக்கிறாய் எனக்கு ஒன்றும் தெரியவில்லை.
பதில் இல்லை..
பந்தத்தில் சூடு இருக்கிறது ஆனால் வெளிச்சம் இல்லை. இது எந்தமாதிரியான
மாய சுரங்கம்.?
வழி தவறிவிட்டோமா?
இருள் சூராவளிக்குள் சிக்கிகொண்டது போல் இருக்கிறதே ..
கால்கள் தள்ளாட தொடங்கியது..
காலம் திசை எல்லாம் இந்த குகைக்குள் வெறும் மாயை போல் உள்ளதே.
முடிவு இதுதான் ..நம்பிக்கை உடையும் வேளையில் தூரத்தில் ஒரு புள்ளியாக
வெளிச்சம்.
அது போதும் அந்த ஒற்றை புள்ளி போதும்.
சோர்ந்து இருந்த உடலுக்கு புது தெம்பு தருவதற்கு இந்த சிறு வெளிச்சம்
போதும் .
கண்களால் அந்த புள்ளியை நோக்கி வேகமாக முன்னேறினான்.
குகைவாயில் அடைபட்டு இருந்தது.
பலம் கொண்டமட்டும் அதை தன் தோள்வலிமையால் இடித்து திறந்தான்.
ஒரு கற்பலகை பெயர்ந்து வெளியே சரிந்தது.
லேசாக சாக்கடையும் தண்ணீரும் குகைக்குள் சரிந்தது.
வெளியே வந்து பார்த்தான்.
இது என்ன நதி .?
இப்படி நாற்றம் எடுக்கிறதே !
அட இது எந்த நாடு .?
நாற்றம் எடுக்கும் அந்த நதி ஓரத்தில் நடந்து வந்தான்.
குதிரைகளும் மாடுகளும் இழுக்காமல் இங்கு ரதங்கள் எல்லாம் தானாக
ஓடுகிறதே?
இது என்ன மாய உலகமா .?
அது என்ன ஓவியம் இவ்வளவு பிரம்மாண்டமாக?
அந்த ஓவியம் மிகவும் தத்ரூபமாக உள்ளதே..
கண்களை சுருக்கி அதில் இருந்த எழுத்துக்களை கூர்ந்து படித்தான்.
“காவேரி தாயே தமிழகத்தில் என்றும் உன் ஆட்சியே”..
இவ்வளவு பிரம்மாண்டமாகவும் தத்ரூபமாகவும் ஒரு ஓவியனால் வரைய
முடியுமா.?
அது யார் அந்த ஓவியத்தில்..
மதுராந்தகி போலவே இருக்கிறதே!
மதுராந்தகியேதான் .................
மதுராந்தகி..........
மதுராந்தகி...........
(கூவம் நதிக்கரையில் ஒரு பைத்தியத்தை போல அந்த பிரம்மாண்ட ஓவியத்தை நோக்கி ஓடிகொண்டிருந்தான் அந்த சோழ மன்னன்.)
5 கருத்து சொல்றாங்க:
ங்ஙே!!!! :-)
நானும்
KiD ஆர்டின் KannaN said...
ங்ஙே!!!! :-) ///
ஹா ஹா ....
எதற்கும் முன் ஜாமின் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் சிங்கம் சார் ! கதை அட்டகாஷ் ;-)
அருமையான பதிவு.
மிகவும் நன்று ...
For Tamil News Visit..
மாலைமலர் | தினத்தந்தி
Post a Comment