தலைக்கு இன்னும் மங்காத்தா ஜுரம் முழுமையாக விடவில்லை போலும் .
என்னதான் சொன்னாலும் அஜித்துக்கு இருக்கும் ஓபனிங் அசைக்கமுடியாது என்று தான் தோன்றுகிறது .
இந்து நாளிதழில் இதுவரை வந்த அஜித்தின் திரைப்படங்களின் வசூல் சாதனையை ஆரம்பம் முறியடிக்கும் என்று போட்டிருந்தார்கள் .அது உண்மையாக கூடிய சாத்தியம் இருக்கிறது .
படத்தின் ஆரம்பமே அதிரடியாக ஆரம்பிக்கிறது . மும்பையில் சில இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கிறது . அதை செட் செய்வது அஜித். அதன் பிறகு அப்பாவியான ஆர்யாவை கடத்துகிறார். நயன்தாராவை மிரட்டி ஆரியாவை பணிய வைக்கிறார். இது எல்லாம் மங்காத்தா தனமாக இருக்கிறதே என்று யோசித்து கொண்டிருக்கும் பொது இடைவேளை வந்துவிடுகிறது . இடைவேளையின் பொது சொல்கிறார் இது முடிவு இல்லைடா ஆரம்பம் என்று .
உண்மைதான் இடைவேளைக்கு பிறகு கதை வேறு திசையில் பயணிக்கிறது . சாரி பறக்கிறது . ஆயுத பெற ஊழல் , ஹோம் மினிஸ்டர் மற்றும் உயர் அதிகாரிகளின் ஊழல் இதனால் உயிரை இழக்கும் நண்பனின் குடும்பம். பழி வாங்க புறப்படும் ஹீரோ என்று ஒரு தமிழ் படத்திற்கு தேவையான அத்தனை வஸ்துக்களையும் அளவு மீறாமல் சரியாக கலந்து குடுத்திருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன் .
பில்லாவிற்கு பிறகு இருவரும் இணையும் கதை என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தி இருக்கிறது .துணை நாயகனாக ஆரியா நடித்துள்ளார் அவருக்கு ஜோடியாக தாப்சி . ரானா ,கிஷோர் ,அதுல் குல்கர்னி, மகேஷ் மஞ்ச்ரேகர் , சுதா ரகுநாத் . என்று மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
ஆனால் அனைவரையும் அசால்டாக ஓரம் கட்டி விடுகிறார் அஜித்குமார் . இவரை எப்படி காட்டினால் ரசிகர்கள் கைதட்டுவார்கள் என்று நன்றாக புரிந்து வைத்திருக்கிறார் இயக்குனர் . பத்து நிமிடத்திற்கு ஒருமுறை ஸ்லோ மோஷனில் நடக்கவிட்டு கைதட்டுகளை அள்ளுகிறார் .
ஆர்யாவின் அறிமுகம் மற்றும் பிளாஷ்பேக் காட்சிகள் லேசாக கொட்டாய் விட வைத்தாலும் பிறகு வேகம் எடுத்து விடுகிறது . படத்தின் இசை யுவன் ஷங்கர்ராஜா பில்லா அளவிற்கு இல்லை என்றாலும் பாடல்கள் நன்றாகவே உள்ளது அதை படமாக்கிய விதமும் கலர்புல் .
டாப்சி குறைந்த மூளை கொண்ட தமிழ் கதாநாயகிகளின் இலக்கணத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். நயன்தாரா இன்னும் அண்ணி வேடங்களில் நடிக்காமல் தன்னை கதாநாயகியாக தக்க வைத்து கொண்டிருப்பது மிக பெரிய சாதனை. அஜித்திற்கு ஈடு குடுத்து காட்சிகளில் தனித்து தெரிய வேண்டும் என்றால். மிக பெரிய அனுபவம் பயிற்சி தேவை நயனுக்கு அனுபவம் கைகுடுக்கிறது .
படத்தில் வண்டி வண்டியாக லாஜிக் மிஸ்டேக் இருக்கிறது . சர்வர் ஹேகிங் என்பது என்னவோ கடலை மிட்டாய் வாங்குவது போல் சுலபமானது என்று நினைத்துவிட்டார்கள் போல . பத்து நிமிடத்தில் சாட்டிலைட்டின் அப்ளின்கை ஹேக் செய்வது எல்லாம் ரொம்ப கொடுமை . துபாய் வங்கியின் சர்வரை ஹாக் செய்ய இவர்கள் போடும் திட்டம். பாரிஸ் கார்னரில் தள்ளுவண்டிகாரனிடம் இருந்து அவனுக்கு தெரியாமல் ஒரு சாத்துக்குடி திருடுவதை விட சுலபமானது கம்பியூட்டர் ஓரளவிற்கு தெரிந்தவர்கள் சிரித்து கொள்வார்கள் . இதை எல்லாம் பெரிதாக எடுத்து கொள்ள முடியாத அளவிற்கு
திரைகதையின் வேகம் அமைந்துவிட்டதால் படம் பார்பவர்களுக்கு உறுத்தவில்லை.
இந்த படத்திலும் அஜித் பைக் ஓட்டுகிற காட்சி ஒன்று வருகிறது நல்ல வேளையாக அதை அவர் ஒழுங்காக ரோட்டில் ஓட்டுகிறார் . வெறும் பைக்கை காட்டினாலே போதும் ரசிகர்களின் விசில் ஆர்பாட்டம் விண்ணை பிளக்கிறது .
இந்த தீபாவளிக்கு தல ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து படைத்துள்ளார் .
11 கருத்து சொல்றாங்க:
தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை யாராவது இணைத்து விடவும்
ஆக இந்த தீபாவளி "தல...தல..." தீபாவளி தான்...
தமிழ்மணம் இணைத்து விட்டேன்... ஓட்டும் இட்டு விட்டேன்... நன்றி..
நன்றி அண்ணாச்சி நன்றி ....
enna speedu review!!
MOKKAI PADAM
அப்ப படம் பார்க்கலாமா!?
ஸிங்கம்,
தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!
வாங்க... சகோதரி கூப்பிடுகிறாங்க...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : கலைச்செல்வி அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கிராமத்துக் கருவாச்சி
வலைச்சர தள இணைப்பு : கொஞ்சம் தூசி தட்டுங்க!!
வலைச்சரம் மூலமாக தங்களைப் பற்றி அறிந்தேன். பணி சிறக்க வாழ்த்துக்கள்.
அன்பின் தம்பிக்கு வணக்கம்.
இன்றுதான் தங்கள் தளத்தினைத் தொடர்வோனாகப் பதிவு செய்தேன்.
திண்டுக்கல் தனபாலனின் வலைப்பதிவர் பட்டியல் பார்த்து வந்தேன்.
மதுரை வலைப்பதிவர் திருவிழா நம் தமிழ்வலைப்பதிவர் அனைவரையும் இணைக்கட்டும். வணக்கம்.
Post a Comment