Sunday, January 27, 2013

விசுவாசரூபம்-ஒரு புதிய கதை

v
விஸ்வரூபம் பெயரே வில்லங்கமாக இருக்கு இதற்க்கு ஏகப்பட்ட எதிர்ப்பு வேறு கிளம்பி இருக்கு . அதனால் இந்த படத்தை நான் இயக்கிஇருந்தால் எப்படி இயக்கி இருப்பேன் என்று சொல்கிறேன்.

சிபி. கோவித்து கொள்ள மாட்டார் ஏனென்றால் இது அவர் டிப்பார்ட்மண்ட்.
எதிர்ப்பு இல்லாமல் படம் ஆக்குவது எப்படி .
கமல் அமெரிக்காவில் இருக்கும் ஒரு கதக் ஆசிரியர் அவர் மனைவி அவரிடம் இருந்து விவாகரத்து வாங்க முயற்சிக்கிறார் . அதற்க்கு அவரிடம் ஏதாவது குறை கண்டுபிடிக்க ஒரு துப்பறியும் சாம்புவை நியமிக்கிறார் .இது வரை எந்த மாற்றமும் இல்லை கதை ஆப்கானிஸ்தான் போனபின் மக்கள் எதிர்பார்க்காத திருப்பங்களை வைக்க வேண்டும் .

முதலில் கமல் ஒரு தாலிபான் இயக்க தியாகியாக காட்டவேண்டும் அவர் மீண்டும் வந்து தாலிபானில் இணையும் பொது அங்கு சூழ்நிலை சரி இல்லாததை உணர்கிறார். அவருக்கு அந்த இயக்கத்தின் மீது லேசாக சந்தேகம் வருகிறது . முல்லா ஓமர் வேறு நன்றாக தமிழ் பேசுவது இவரின் சந்தேகத்தை அதிக படுத்துகிறது . இதற்க்கு முன் பார்த்த ஒமருக்கு கன்னத்தில் மறு கிடையாது . இப்போது இருக்கும் ஒமருக்கு கன்னத்தில் மறு இருக்கிறது இவர் உண்மயிலேயே ஓமர்தானா .? சில பல துப்பறியும் வேலைகளுக்கு பின் . ஜிகாதிகள் கையில் வைத்திருப்பது குரான் அல்ல . அது யூதர்களின் தோரா என்றும் அட்டையை மட்டும் குரான் என்று பைண்டிங் செய்திருக்கிறார்கள் என்று கண்டு பிடிக்கிறார் . அதை படித்துவிட்டுதான் இவர்கள் எல்லார் கழுத்தையும் அறுக்கிறார்கள் என்று புரிகிறது . இது கமலின் சந்தேகத்தை அதிக படுத்துகிறது .

ஆப்கானிஸ்தானில் ஏதற்கு புத்தர் சிலை அதை உடைத்து விடலாமே என்று கமல் கேட்க  அதற்க்கு ஓமர் மறுப்பது கமலின் சந்தேகத்தை மேலும் ஊர்ஜித படுத்த அடுத்தகட்ட துப்பறியும் வேலையில் இறங்குகிறார் நம்மவர் .

பல ஆபத்துகளை கடந்து ஆப்கன் மலைகளுக்கு நடுவில் ஒரு பாதாள சுரங்கத்தில் நிறைய டயர்கள் மற்றும் ட்ரம்முகள் அடிக்கி வைக்க பட்டிருக்கும் ஒரு இடத்தில் சிகப்பு மற்றும் பச்சை விளக்குகள் எரியும் பின்னணியில் உண்மையான ஓமர் பல ஆண்டுகளாக கட்டி வைக்க பட்டிருக்கிறார் .
அப்படியென்றால் இப்போது இருப்பவர் உண்மையில் இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனின் சித்தப்பா மகன் இலட்சுமண கோபாலன்  என்ற உண்மை தெரிய வருகிறது. வில்லன்கள் கடைசியில் கமலையும் அண்ட்ரியாவையும் அதே குகையில் கடத்தி கொண்டு போயி கட்டிவைத்து அடிக்கிறார்கள் .
 ஏற்கனவே நிறைய தமிழ் படம் பார்த்திருக்கும் ஆண்ட்ரியா . இதுவரை ஒரு தமிழ்படம் கூட பார்த்திராத வில்லன்களிடம் நீங்க ஆம்பிளையா இருந்தா அவர் கட்ட அவிழ்த்து விட்டு அடிங்கடா பார்ப்போம் என்று சவால் விடுகிறார்.
இதில் மறைந்திருக்கும் சூழ்ச்சி தெரியாமல் வில்லன்கள் கமலின் கட்டை அவிழ்த்து விட்டு வாங்கி கட்டி கொள்கிறார்கள் .


 
ஒரு வழியாக போலி ஓமரை அழித்துவிட்டு உண்மையான ஓமரை தாலிபான் இயக்க தலைவராக ஆக்கிவிட்டு . புத்தர் சிலையை இடிக்க வைத்து விட்டு அங்கிருந்து கிளம்புகிறார் கமல் -----------------------சுபம்

இருங்க ரெண்டாவது பாகத்திற்கு லீட் குடுக்கணும் இல்லையா அதையும் கேட்டுட்டு போங்க . அமெரிக்க அதிபர் உண்மையான ஒபாமா கிடயாது.
அங்கு இருப்பவர் சிவ ராமசேனா தலைவர் முத்தலிக்கின் மூன்றாவது தம்பி இந்த விவரம் கமலுக்கு தெரியவர  அமெரிக்கா கிளம்புகிறார் .----------- விசுவாசரூபம் -2

டிஸ்க்கி :-
                    இந்த படத்திற்கு இந்து அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு வரலாம் ஆனால் மக்கள் ஆதரவோ அரசாங்கத்தின் ஆதரவோ கிடைக்காது என்பதால் கவலை படவேண்டிய அவசியம் இல்லை. இந்துக்களுக்கு அவர்கள் கடவுள் மேல் நம்பிக்கை அதிகம்  நீங்க எவ்ளோ கிண்டல் பண்ணினாலும் எங்க கடவுளுக்கு ஒன்னும் ஆகாது என்ற நம்பிக்கை. சோ பிரெச்சனை இல்லை 

28 கருத்து சொல்றாங்க:

Robin said...

பிரச்சினை சர்வதேச அளவில் இருப்பதால் இது கண்டிப்பாக யூத சதியாகத்தான் இருக்கும்

அஞ்சா சிங்கம் said...

@ Robin
அங்கதான் வச்சிருக்கோம் ட்விஸ்ட்டு .
யூத மத புத்தகம் தோராவை குரான் அட்டையில் பைண்டிங் பண்ணி இருக்கு ராபின் .

Anonymous said...

அவங்க தான் படத்துல டூயட் இல்ல காமெடி இல்லைன்னு சொல்றாங்களே. பேசாம ஆப்கானிஸ்தானில் குத்துப் பாட்டு ஒன்றையும், இரண்டு அல்காயிதாவினரை காமெடி ரோலுக்கும் போட்டிருக்கலாம்.

அஞ்சா சிங்கம் said...

@ ஆரூர் மூனா செந்தில்
ஒரு கற்பழிப்பு காட்சியும் இருந்தால் . நம்மவர்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்திருக்கும் ..
அடுத்த படத்திற்கு கமலுக்கு நாம் ஆலோசகர்களாக போய்விடலாம் .

சீனு said...

சிங்கம் சிங்கம் ஹீ இஸ் அஞ்சா சிங்கம்...
இவன் எழுதினால் போதும் பதிவுலகம் நடுங்கும்
சிங்கம் சிங்கம் ஹீ இஸ் அஞ்சா சிங்கம்...

இவன்
மெட்ராசின் வேர்கள்

அஞ்சா சிங்கம் said...

@ சீனு
யோவ் ஏன்யா நான் எவ்வளவு கஷ்ட்டப்பட்டு மார்க்க பந்துக்களுக்கு கோவம் வராத மாதிரி ஒரு கதை ரெடி பண்ணி குடுத்தா .
நான் என்னமோ வேணும்ன்னு கிண்டல் பண்றமாதிரி எழுதி இருக்கேன்னு அவங்க தப்பா நினைசிக்கிற போறாங்க ......:-)

சீனு said...

நீங்க என்னதான் கஷ்டப்பட்டு அவிங்களுக்கு கோவம் வராத மாதிரி எழுதி இருந்தாலும்... "அத சொல்றதுக்கு நீங்க யாரு?" என்று ஒருமுறை அவதானித்து பின் நிதானித்துக் கொள்ளவும்

அஞ்சா சிங்கம் said...

@ சீனு
அட சும்மா இருயா மூணு நாளா கடை வேற லீவு நானே மண்ட காஞ்சி போயி இருக்கேன் .
இதுல அவதானிப்பு நிதானிப்பு எல்லாம் ஆகுற கதையா ..?

Unknown said...

silla janmangallkku purindhal sarre

அஞ்சா சிங்கம் said...

@ Bala Mugundan

அண்ணே ................கூல்டவ்ன் .....................கூல்டவ்ன் .........................கூல்டவ்ன்
நல்லவர்கள் நிறைய பேர் முஸ்லீமில் இருக்கிறார்கள் .
என்ன அவர்கள் பேசுவது இல்லை .
சில்லறைகளின் சத்தம்தான் அதிகமாக இருக்கும் ...

R.Puratchimani said...

ஹா ஹா
நீண்ட நாட்களுக்கு பிறகு மிகவும் ரசித்து படித்த பதிவு....அருமை :)

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கம்,

படம் வர்முன்னே நானும் இப்படித்தான் கமலை இஸ்லாமியரா காட்டியிருக்கனும்னு சொன்னேன்,படத்திலும் இஸ்லாமியராத்தான் வர்ரார் :-))

நாம சொல்றதுலாம் சமீப காலத்தில் அப்படியே நடக்குது, ஒரு வேளை நானும் ஒரு இறைத்தூதரோனு டவுட்டா இருக்குது :-))

ஊரே பத்தி எரியும் போது நான் சோக்கு அடிக்கிறேன்னு மார்க்குகள் நினைக்கும், லோகநாயகர் அடுத்த படத்தில ஒரு இஸ்லாமிய ஹீரோயினை பயன்ப்படுத்தினா மக்கள் சந்தோஷப்படும்னு நினைக்கிறேன் :-))

அப்படியே ஆப்கானில் இந்து தீவிரவாதிகள் இருப்பதாகவும்,வில்லன் பேரு மோதினு வச்சு, அதனை இஸ்லாமிய ஹீரோயின் உடன் இஸ்லாமிய ஹீரோ அழிப்பது போலவும் படம் எடுத்தால் மார்க்குகள் சீசன் டிக்கெட் வாங்கி படத்தை ஓட வைப்பாங்க :-))

ராஜ நடராஜன் said...

கதையின் கடைசில வழக்கமா வரும் போலிசுகளைக் காணோம்.அதையும் சேர்த்தியிருந்தா இந்தக் கதை வெள்ளி விழாதான்.

rajamelaiyur said...

எக்காரணம் கொண்டும் தாலிபான்களை வில்லனாக காட்ட கூடாது ... அப்படி காட்டுநிங்க தமிழ்நாட்டில் படத்தை ஓட விடமாட்டோம் .

Unknown said...

கமல் ஒரு தலீபான் சமூக சேவை அமைப்பில் இருந்ததை கஜினி சூர்யா மாதிரி மறந்து விடுகின்றார்! அந்த வியாதி பேரு தலாபாலினோ அல்கய்தாலியோ அப்படின்னு பேரு வெச்சுக்கலாம். கடைசியில கிளைமாக்ஸ்ல ஆண்ட்ரியா சுடுங்க...ராமசாமி ஜலிகத்துல்லா...சுடுங்க அவன்தான் அப்படின்னு கத்தனும் கமல் அதுக்கு தங்கபதக்கம் சிவாஜி மாதிரி எனக்கு சப்பாத்திதான் சுடத்தெரியும் துப்பாக்கி சுடத்தெரியாதேம்மா.....ஓ....ஜீசஸ் அப்படிங்கிறார் அப்பத்தான் தெரியுது கமல் ஒரு கிருஸ்டியன்னு மீதி அடுத்த பாகம்!

தமிழ்வாசி பிரகாஷ் said...

கிளைமாக்ஸ் சொதப்பிட்டிங்க. ஆனாலும் ஹீரோயினை இன்னும் கொஞ்சம் காட்டியிருக்கலாம்....

திரைக்கதை பரவாயில்லை ரகம்....

வேகநரி said...

இஸ்லாமியர்களுக்கு இந்த படம் ரொம்ப பிடிக்கும்.

குட்டன்ஜி said...

//இந்த படத்திற்கு இந்து அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு வரலாம் ஆனால் மக்கள் ஆதரவோ அரசாங்கத்தின் ஆதரவோ கிடைக்காது என்பதால் கவலை படவேண்டிய அவசியம் இல்லை. இந்துக்களுக்கு அவர்கள் கடவுள் மேல் நம்பிக்கை அதிகம் நீங்க எவ்ளோ கிண்டல் பண்ணினாலும் எங்க கடவுளுக்கு ஒன்னும் ஆகாது என்ற நம்பிக்கை. சோ பிரெச்சனை இல்லை //

குனிந்து கொடுத்தே வளைந்து போனவர்கள்?!
சூப்பர் சிங்கம்

ராஜ் said...

//கமல் அமெரிக்காவின் அடிமையாக அல்லவா செயல்படுகிறார்,,,அதற்கு உங்களுக்கு வருத்தம் இல்லையா??
நல்ல விஷயங்கள் அதிகம் இருக்க இது போன்ற மத உணர்வுகளை பாதிக்க கூடிய படங்களை எடுக்கவேண்டும்...
அவர் அமெரிக்காவின் உளவாளியாக இருக்கலாம் யாருக்கு தெரியும்....////

செலவின், இது மாதிரி ஒருத்தர் (NOOR MOHAMMED) ரொம்பவே சீரியஸ்யான கமெண்ட் போட்டு இருந்தார். இவங்க எப்பவுமே இப்படி தானா, இல்லாட்டி இப்படி தான் எப்பவுமே.

ராஜ் said...

இலஞ்சம் வாங்குகிற அரசு அதிகாரிகளைப் பற்றிப் படம் எடுத்தா, அதிகாரிங்க கோச்சிப்பாங்க..
அதிகமா துட்டு வாங்குகிற டாக்டரைப் பற்றிப் படம் எடுத்தா, டாக்டருங்க கோச்சிப்பாங்க..
போலீஸ்காரர்களைப் பற்றிப் படம் எடுத்தா போலீஸ்காரங்க கோச்சிப்பாங்க...
வக்கீலைப் பற்றிப் படம் எடுத்தா வக்கீலுங்க கோச்சிப்பாங்க...
படத்தை DTH - ல திரையிடப்போகிறேன் சொன்னா தியேட்டர்காரங்க கோச்சிப்பாங்க...
முஸ்லீம் தீவிரவாதத்தைப் பற்றிப் படம் எடுத்தா ஜவஹிருல்லா கோச்சிப்பாரு...
இந்து தீவிரவாதத்தைப் பற்றிப் படம் எடுத்தா இராமகோபாலன் கோச்சிப்பாரு...
அமெரிக்க அட்டூழியங்களைப் பற்றிப் படம் எடுத்தா ஒபாமா கோச்சிப்பாரு..
'இவிங்க' ஆட்சியில இருக்கும் போது 'அவருடைய' கூட்டத்தில கலந்துகிட்டா 'இவிங்க' கோச்சிப்பாங்க...
'அவரு' ஆட்சியில இருக்கும் போது 'இவிங்க' கூட்டத்துல கலந்துகிட்டா 'அவரு' கோச்சிப்பாரு...
அதுக்கு படம் எடுக்கிறதையே நிறுத்தி விடலாமே...
அப்படித்தான் கமல்ஹாசனின் விஸ்வரூபம் ஒரு ---


நன்றி - புதுவை ராம்ஜி

வேகநரி said...

//இந்து தீவிரவாதத்தைப் பற்றிப் படம் எடுத்தா இராமகோபாலன் கோச்சிப்பாரு...
அமெரிக்க அட்டூழியங்களைப் பற்றிப் படம் எடுத்தா ஒபாமா கோச்சிப்பாரு..
- புதுவை ராம்ஜி//
இந்து தீவிரவாதத்தைப் பற்றிப் படம் எடுத்தா இராமகோபாலன் கோச்சிப்பாரு, ஆனா இந்துக்கள் கோவிக்க போவதில்லை. அமெரிக்காவை பற்றிப் படம் எடுத்தா ஒபாமாவோ,அமெரிக்கரோ கோவிக்க போவதில்லை.
பிறமக்களின் கருத்து உரிமையை மறுத்து அட்டூழியம் செய்பவர்கள் இஸ்லாமியர்கள் மட்டுமே.

காரிகன் said...

பேசாம கமல் இந்த கதையையே படமாக எடுத்திருக்கலாம். பிரச்சினையே வந்திருக்காது. அலெக்ஸ் பாண்டியனுக்கு ஒரு சரியான போட்டியாக இருந்திருக்கும்.

Anonymous said...

எனக்கென்னவோ இது தான் உண்மையான விஸ்வரூபம் கதை என நினைக்கின்றேன் .. படம் எடுத்து முடிக்கும் தருவாயில் உண்மையான கமலைக் கடத்திக் கொண்டு போய் விடுகின்றார்கள் மொசாத், அவருக்கு பதிலாக டூப்பிளிக்கேட் கலமை செட்டப் செய்து கதையை மாற்றி விடுகின்றார்கள். தோராவுக்கு பதிலாக உண்மையான குரானையே வைத்து விடுகின்றார்கள், பாருங்க கமல் அமெரிக்காவில் இருந்து இன்னம் வரவே இல்லை, ஏன்னா அவரு டூப்பிளிக்கேட் கமல் .. சோ ! எல்லாவற்றுக்கும் காரணம் மொசாத் தான் .. யூத சதியே இது .. உண்மையான விஸ்வரூபத்தை வெளியிடவே இஸ்லாமிய தலகள் போராடுகின்றன. புரிஞ்சுக்க மாட்டீங்களா.. அவர்கள் ரொம்ப நல்லவர்கள் .. !

வேகநரி said...

சகோ இக்பால் செல்வன், உங்க பதிவுகளுக்கு பின்னோட்டமிட முடியவில்லை.

DiaryAtoZ.com said...

Suuuuuppppper!

Unknown said...

அஞ்சா சிங்கம் அருமை
என் இமெயில் ஐடி jaisankarj@gmail.com

ஜிடாக்கில் பேசலாம்

Anonymous said...

So what can this all mean?

my weblog http://www.prnewswire.com/news-releases/flex-belt-review-and-latest-coupon-code-savings-now-featured-at-awesomealldaycom-190317331.html

Anonymous said...

Intercombase - excellent translation texts any of more than 140 languages. Business Translation, Medical Translation, Legal Translation - first class affordable.

Finnish Translation: [url=http://www.intercombase.com]Electronics[/url]

Popular Posts