Saturday, December 1, 2012

விளிம்பு நிலை மனிதரின் பேட்டி (பேத்தி அல்ல )

v

சமீப காலங்களாக விளிம்பு நிலை மனிதர்கள் யாரும் என் கண்ணில் படுவது இல்லை . என்ன காரணம் யார் செய்த சூழ்ச்சி என்று பலவாறாக யோசித்து பார்த்ததில் காரணம் எனக்கு புரிந்தது.
 அதாவது நான் அலுவலகத்திற்கு காரில் சென்று வருவதால் என்னால் அவர்களை கண்டு பிடிக்க முடிய வில்லை என்பது இன்று விடுமுறை ஆதலால் மின்சார ரயிலில் பயணித்து யாராவது ஒரு விளிம்பு நிலை மனிதனின் பேட்டியை எடுத்து விடுவது என்ற வைராக்கியத்துடன் வீட்டை விட்டு கிளம்புகிறார் ஆரோக்கியசாமி .

இடம் திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையம் .
கூட்டம் அவ்வளவாக இல்லை என்றாலும் எங்கு பார்த்தாலும் டிப்டாப் ஆசாமிகள் மயம் . ஒரு விளிம்பு நிலை மனிதன் கூட ஆரோக்கியசாமி கண்ணில் படவில்லை . என்னடா இது இப்படி பிள்ளை பிடிக்கிறவன் மாதிரி எவ்வளவு நேரம் தான் தேடிக்கிட்டு இருக்கிறது என்று மனதுக்குள் நினைத்து கொண்டிருக்கும் போது . சட் என்று அவர் பார்வை பிளாட்பார்ம் ஓரத்திற்கு செல்கிறது .
அங்கே பிளாட்பார்ம் விழும்பில் ஒரு மனிதன் நின்று கொண்டு தண்டாவளத்தில் ரயில் வருகிறதா என்று பார்த்து கொண்டு இருந்தான் . மிகவும் விழும்பில் நின்று எட்டிப்பார்த்து கொண்டிருந்ததால் நாம் தேடும் விளிம்பு நிலை மனிதன் இவனாக இருக்குமோ என்று மனதிற்குள் ஒரு மணி அடித்தது . உடனே நம் மூளை சுறுசுறுப்பு அடைந்தது .
மெதுவாக அவன் அருகே சென்று பாஷா படத்தில் ரஜினி சொல்வது போல் சொல்லவேண்டும் என்று நினைத்து கொண்டேன் .

இனிமேல் லைவ் ரிலே :

ஆ.சாமி:-   அண்ணே வணக்கம் என் பேறு பிரேம்குமார்.

வி .மனிதன் :- இருக்கட்டும்...

ஆ.சாமி:- எனக்கு இன்னொரு பெயர் இருக்கு

வி .மனிதன் :- வச்சிக்கோ ..உன் இஷ்டம் எத்தினி வேணும்னாலும் வச்சிக்கோ.

ஆ.சாமி:- அது இல்லைன்னே உங்க பேட்டி வேணும் அதான் .

வி .மனிதன் :- ஏன்பா பார்த்தா படிச்சவனாட்டம் இருக்கே மனசு ஏதும் சரி இல்லையா வீட்ல ஏது பிரச்சனையா .?

(அவன் என்னை பேட்டி எடுக்க  ஆரம்பித்துவிட்டான் )

ஆ.சாமி:- அண்ணே நீங்க ரொம்ப விளிம்புல இருக்கீங்க . கிட்ட வர பயமா இருக்கு கொஞ்சம் பின்னாடி வாங்க நாம அந்த பென்ச்ல உக்கார்ந்து பேசலாம் .

(சிறிது யோசனைக்கு பிறகு சம்மதித்தான் )

ஆ.சாமி:- நீங்க எத்தனை வருஷமா இப்படி விளும்புல நிக்குறீங்க.?

 வி .மனிதன் :- அது ஆச்சிங்க ஒரு பதினைஞ்சி வருஷத்துக்கு மேல . நான் இஸ்கூலுக்கு  போசொல்ல ஆரம்பிச்சது . அப்போ எங்க இஸ்கூலு பேரிஸ்ல இருந்திச்சி . எங்க வீட்டுல இருந்து பஸ்லதான் போகணும் .ஆனா எனக்கு ட்ரைன்ல போகணும்னு ஆசை . வீட்ல இருந்து தாம்பரத்துக்கு பஸ்ல போயி அங்க இருந்து ட்ரைன்ல போலாம்ன்னு ப்ளான் பண்ணி போய்டேன் .
அப்படியே பிளாட்பாரம் விளும்புல நின்னுகிட்டு ரெயில் வருதான்னு பார்த்துக்கிட்டு இருந்தேன் . அப்போ திடீர்ன்னு ரெயில் வர்ற சத்தம் மட்டும் கேட்டுச்சு ஆனா ரெயிலை காணும் . என்னடா ஆச்சிரியமா இருக்குதேன்னு நெனைச்சிகிட்டு இன்னும் நல்லா விளும்புல போயி எட்டி பார்த்தேன் . அப்பவும் என் கண்ணுக்கு ரெயில் தெரியல. ஆனா சத்தம் மட்டும் ரொம்ப கிட்டக்க கேக்க ஆரம்பிச்சுது . பின்னால இருந்து ஒரு குரல் . சாவுகிராக்கி  திரும்பி பாரு ரெயில் வருது தலைய உள்ள எடு என்று . திரும்பி பார்த்தால் ரெயில் பக்கத்துல வந்திருச்சி . சடார்ன்னு தலைய உள்ள இழுத்து தப்பிச்சிட்டேன் . ஆனா அந்த த்ரில் பழகிடுச்சி 

ஆ.சாமி:- சரி பிழைப்புக்கு என்ன செய்கிறீர்கள் .?

வி .மனிதன் :-  ஆங் .. இங்க தான் டைட்டில் பார்க்குல அஜுபா கம்பனியில டெவலப்பர் ஆக இருக்கேன் . மாசம் 65,000 ருபாய் சம்பளம் வருது .

 ஆ.சாமி:- நல்ல வேலைதானே அப்புறம் ஏன் சலிச்சிகிறீங்க.?

வி .மனிதன் :- என்னதான் இருந்தாலும் மனசுக்கு பிடிச்ச வேலையா இருக்கனும்ல சார் . மதியானம் போல அவங்களே கார் அனுப்பி கூப்பிட்டு போறாங்க நாடு ராத்திரி வரை வெளிய உடமான்டாங்க . அப்புறம் அவங்களே வீட்டுக்கும் கார்ல அனுப்பி வைக்கிறாங்க . அப்புறம் எனக்கு தொங்குரதுக்கு ஏது நேரம் என்ன பொழைப்பு சார் இது . வெளிய போயி சுத்திகிட்டு வரமாதிரி வேலை இருந்தா நல்லாஇருக்கும். என்ன பண்றது எல்லாம் நம்ம கைலயா  இருக்கு. ஆனா வாரத்துக்கு ரெண்டு நாள் லீவு குடுக்குறாங்க சார் அந்த மாறி நேரத்துல இப்படி ரெயில்ல தொக்கி கிட்டு போறதுக்கு வந்துருவேன் .தோ இப்போ ஆரம்பிச்சி சாயங்காலத்துக்குள்ளாற எல்லா ஸ்டேசனுக்கும்  தொங்கிகினே போயிட்டு வந்துற மாட்டேன் . ஆ.சாமி:- உங்கள் எதிர்கால லட்சியம் என்ன .?

வி .மனிதன் :- சின்ன வயசில் இருந்து எல்லா பிளாட்பாரம் விளும்புளையும் நின்னுபார்துடேன் . பறக்கும் ரெயில் வந்தப்போ அது ரொம்ப புதுசா இருந்துச்சி . இப்போ மெட்ரோ ரெயில் வருது அதை நினைக்கும் போதே மனசு பரபரக்குது .
இன்னும் மோனோ ரெயில் வேறு வரும்ன்னு சொல்லிகிறாங்க . நான் கண்ணை மூடுறதுக்குள்ள அதுலயும் ஒரு தபா தொங்கீரனும் சார்.

(அந்த வீரமான மனிதனின் கண்விழியோரம் ஈரம் )

 ஆ.சாமி:- இந்த கேள்வி கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே ..நீங்க தமிழ்மணம் ஒட்டு போடுவீங்களா ...?


 வி .மனிதன் :- அதெல்லாம் இல்லை சார் நான் எப்போதும் தி.மு.க.வுக்கு தான் வோட்டு போடுவேன்.

நாம் அடுத்த கேள்வியை ஆரம்பிக்கும் முன் பீச் செல்லும் ரெயில் வர மின்னல் வேகத்தில் அதில் தொத்தி கொண்டு நம்மை பார்த்து கை ஆட்டிகொண்டே சென்றான் ....
இப்போது ஒன்லி மைன்ட் வாய்ஸ்

ஆரோக்கிய சாமி  மைன்ட் வாய்ஸ் (ச்சே இவன் கிட்ட கேமராவை குடுத்து என்னை ஒரு போட்டோ எடுக்க சொல்லலாம்ன்னு நினைச்சேன் அதுக்குள்ள தப்பிச்சிட்டானே )

விளிம்பு நிலை மனிதன் மைன்ட் வாய்ஸ் (ஹம்ம் பாவம் யார் பெத்த புள்ளையோ ஆளை பார்த்தால்  பையித்தியம் மாதிரி தெரியலயே சரி நமக்கு என்ன டிரெயின் வர்ற வரைக்கும் அந்த ஆளாள நல்லா பொழுது போச்சி )

டிஸ்கி :- சிரிக்க மட்டுமே சிந்திக்க அல்ல .


48 கருத்து சொல்றாங்க:

Unknown said...

யோவ்..!ஆட்டை மாத்துங்கய்யா....! வெட்டி..வெட்டி...போரடிக்குது!

MANO நாஞ்சில் மனோ said...

வி .மனிதன் :- அதெல்லாம் இல்லை சார் நான் எப்போதும் தி.மு.க.வுக்கு தான் வோட்டு போடுவேன்.//

நான் திமுக'வுக்குத்தான் "வேட்டு" போடுவேன் என்று படிக்கவும் ஹி ஹி....

அஞ்சா சிங்கம் said...

வீடு சுரேஸ்குமார் said...

யோவ்..!ஆட்டை மாத்துங்கய்யா....! வெட்டி..வெட்டி...போரடிக்குது!.......//////////////

சும்மா இந்த ஒரு வாரத்துக்கு மட்டும் தான் மாப்பு . நல்லா வெட கோழி எதுவும் புதுசா சிக்க மாட்டுது ......

அஞ்சா சிங்கம் said...


MANO நாஞ்சில் மனோ said...

வி .மனிதன் :- அதெல்லாம் இல்லை சார் நான் எப்போதும் தி.மு.க.வுக்கு தான் வோட்டு போடுவேன்.//

நான் திமுக'வுக்குத்தான் "வேட்டு" போடுவேன் என்று படிக்கவும் ஹி ஹி....///////////

அதான் போதுமான அளவுக்கு போட்டாச்சே ............

சிவானந்தம் said...

எல்லாரும் ஏதோ ஒரு முடிவோட இருக்கீங்க போலிருக்கு...

Anonymous said...

அடுத்த வாரம் எங்கூரு விளிம்பு மனிதரை நான் பேட்டிஎடுக்கப் போகிறேன். காத்திருங்கள்

அஞ்சா சிங்கம் said...


சிவானந்தம் said...

எல்லாரும் ஏதோ ஒரு முடிவோட இருக்கீங்க போலிருக்கு.............//////////

அட போங்க தலைவா .இது என்ன கூட்டு பிராத்தனையா ....

அதெல்லாம் ஒன்னும் இல்ல சும்மா ஜாலிக்காக ......

அஞ்சா சிங்கம் said...

ஆரூர் மூனா செந்தில் said...

அடுத்த வாரம் எங்கூரு விளிம்பு மனிதரை நான் பேட்டிஎடுக்கப் போகிறேன். காத்திருங்கள்

/////////////////////////////////////////

தலைவரே ரொம்ப எச்சரிக்கையாக எடுங்க கொஞ்சம் அசந்தா நம்மள லூசாக்கீருவாங்க ...

தஞ்சாவூர்ல இருக்குற விளிம்பு நிலை மனிதன் எனக்கு தெரிஞ்சி சரபோஜி மன்னர் ஒருவர்தான் .

விட்டுருங்களேன் அவரு பொழச்சி போகட்டும் ...........

ரஹீம் கஸ்ஸாலி said...

விளிம்பு நிலை மனிதர் என்பதால்தான் அந்த போட்டோவில் இருக்கும் மனிதர் சூட்கேசின் விளிம்பில் உட்கார்ந்திருக்காரோ? சும்மா ஒரு டவுட்டுதான் ஹி.ஹி.

அஞ்சா சிங்கம் said...

ரஹீம் கஸாலி said...விளிம்பு நிலை மனிதர் என்பதால்தான் அந்த போட்டோவில் இருக்கும் மனிதர் சூட்கேசின் விளிம்பில் உட்கார்ந்திருக்காரோ? சும்மா ஒரு டவுட்டுதான் ஹி.ஹி.............
///////////////////////////////////////////

ஆமாம் அவரு கக்கூசுல கூட ஒழுங்கா உக்கார மாட்டாரு . எப்போதும் விளிம்புதான் ................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பதிவுலத்துலயே எத்தனையோ விளிம்புநிலை பதிவர்கள் இருக்காங்க, அவங்களையெல்லாம் பேட்டி எடுக்கலாமே? மற்றபடி பேட்டி அருமை, சொல்ல வந்ததை ரொம்ப எளிமையா, தெளிவா சொல்லிட்டீங்க. (த. ம. 2)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இது போன்ற விளிம்பு நிலை மனிதர்களின் மறுபக்கத்தை அறிந்து கொண்டேன். நல்ல பேட்டி(த.ம. 3)

அஞ்சா சிங்கம் said...

ஹி ஹி ................அண்ணே அப்படியே உங்க கிட்ட ஒரு பேட்டி ........

உங்கள பத்தி நிறைய கேள்வி பட்டு இருக்கேன் . நீங்க கக்கூசுல கூட விளிம்புலதான் உக்காருவீங்கலாமே ....////////////////
ஹி ஹி ................அண்ணே அப்படியே உங்க கிட்ட ஒரு பேட்டி ........

உங்கள பத்தி நிறைய கேள்வி பட்டு இருக்கேன் . நீங்க கக்கூசுல கூட விளிம்புலதான் உக்காருவீங்கலாமே ....

பட்டிகாட்டான் Jey said...

ங்கொய்யாலே கடைசில இருக்கிர படத்தை பார்த்தா, ஆ.சாமியைப் பார்த்து தெறிச்சி ஓடுறாமேரி தெரியுதே.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

போன எடுத்தா நச்சு நச்சுங்கிறானுங்க.......... ஏதோ பேட்டியாம் அத விளிம்பு நிலை பதிவர்களாலேயே கொடுக்க முடியலையாம், நான் தான் கொடுக்கனும்கிறாங்க, அதாவது சோசியல் மேட்டர் பண்ணிக்கலாம், பட் அவனுங்கள ஒரு போட்டோ வேற எடுத்து கொடுக்கனுமாம்........ நான் என்ன போட்டோ புடிக்கிறவனா இல்ல படம் எடுக்கிறவனா? ஒரே குஷ்டமப்பா......

பட்டிகாட்டான் Jey said...

அப்படியே இந்த விளிம்புநிலை பதிவர்’ஸ் கிட்டேயும் ஒரு பேட்டி எடுத்து போட்ற வேண்டியதுதானே மக்கா :-)))))))

அஞ்சா சிங்கம் said...

பட்டிகாட்டான் Jey said...ங்கொய்யாலே கடைசில இருக்கிர படத்தை பார்த்தா, ஆ.சாமியைப் பார்த்து தெறிச்சி ஓடுறாமேரி தெரியுதே.../////////////////////////

ஏன் உங்களுக்கு அந்த அனுபவம் இல்லையா தோழர் .......
ஆ.சாமியை வைத்து உங்களுக்கு இனிமா குடுக்க சொல்றேன்
இதோட இன்னும் ஸ்பீடா ஓடுவீங்க ..........

பட்டிகாட்டான் Jey said...

பன்னி, பாவம் என்ன இருந்தாலும், எப்படி பார்த்தாலும் நம்ம பய, டில்லி புரோக்ராம் கேன்சல் பண்ணிட்டாவது கழுத பேட்டியக் குடுத்துடு....

நாளைய உலகம் உன்னை பழிக்கக்கூடாதில்லையா..:-)))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டிகாட்டான் Jey said...
பன்னி, பாவம் என்ன இருந்தாலும், எப்படி பார்த்தாலும் நம்ம பய, டில்லி புரோக்ராம் கேன்சல் பண்ணிட்டாவது கழுத பேட்டியக் குடுத்துடு....

நாளைய உலகம் உன்னை பழிக்கக்கூடாதில்லையா..:-)))////////

சத்திய சோதனை...... ஆங் மிஸ்டர் பட்டிக்ஸ் நாம இதுக்கு முன்னாடி டெல்லில மீட் பண்ணியிருக்கோம்..... அப்போ உங்களுக்கு ப்ளாக்ல பதிவு இருந்தது, இப்போ இல்ல....

பட்டிகாட்டான் Jey said...

// ஏன் உங்களுக்கு அந்த அனுபவம் இல்லையா தோழர் .......
ஆ.சாமியை வைத்து உங்களுக்கு இனிமா குடுக்க சொல்றேன் //

எண்ட்ட பேட்டி எடுக்க வந்தா பேதியாகி அந்த ஆனா.சானா தான் தெறிச்சி ஓடவேண்டியிருக்கும்.

நாங்கஎல்லாம் சம்மனங்கால் போட்டு உக்கார்ந்து பேட்டி குடுக்கிறவங்க மச்சி..:-)))

பட்டிகாட்டான் Jey said...

// ஆங் மிஸ்டர் பட்டிக்ஸ் நாம இதுக்கு முன்னாடி டெல்லில மீட் பண்ணியிருக்கோம்..... //

ந்க்கொன்னியா உனக்கு இன்னும் அந்த அம்முனூசியா சரியாகலையா, இதுக்கு முன்னாடி நாம *வெனிஸ்வீதில போட்ல* உலாவரும்போது மீட் பண்ணோம் மச்சி..

உங்கிட்ட இருக்கிர கெட்ட பழக்கமே இதான்.... எங்கே மீட் பண்ணோங்கறத மறந்துடறது...:-))

அஞ்சா சிங்கம் said...

///ந்க்கொன்னியா உனக்கு இன்னும் அந்த அம்முனூசியா சரியாகலையா, இதுக்கு முன்னாடி நாம *வெனிஸ்வீதில போட்ல* உலாவரும்போது மீட் பண்ணோம் மச்சி..///////////////

இந்த பார் எங்க இருக்கு நான் போனது இல்லையே .
பட்டியோட வீர பராகிரமத்தை சென்ற வாரம் நேரில் பார்த்தவர்கள் சொன்னார்கள் .
வெறும் 45 மி.லி. கே இவரு லண்டன் வரைக்கும் போயிட்டு வருவாராமே .
இருடி நாளைக்கு நானும் வரேன் நாம் ரெண்டுபேரும் சேர்ந்து சுவிசர்லாந்து போலாம்

பட்டிகாட்டான் Jey said...

// வெறும் 45 மி.லி. கே இவரு லண்டன் வரைக்கும் போயிட்டு வருவாராமே .
இருடி நாளைக்கு நானும் வரேன் நாம் ரெண்டுபேரும் சேர்ந்து சுவிசர்லாந்து போலாம் //

மச்சி அப்படியே வரும் போது pinot nair மேரி வாங்கி வா மச்சி, இந்த ஆரூர் சரியா டுபாக்கூர் ஏமாத்திட்டாப்ல :-)))))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////படிச்சிட்டு சும்மா போனா எப்படி/////

வேற எப்படி போகனும்.....?

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////படிச்சிட்டு சும்மா போனா எப்படி/////

வேற எப்படி போகனும்.....?//////////////////////////////////////

.............................கொஞ்ச நேரம் குத்த வச்சி கும்மி அடிச்சிட்டு போங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// அஞ்சா சிங்கம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

////படிச்சிட்டு சும்மா போனா எப்படி/////

வேற எப்படி போகனும்.....?//////////////////////////////////////

.............................கொஞ்ச நேரம் குத்த வச்சி கும்மி அடிச்சிட்டு போங்க////////////

எங்களுக்குலாம் குத்த வெச்சா கக்காதான் வரும்........ எப்புடி வசதி?

Unknown said...

@ஆரூர் மூனா செந்தில் said...
அடுத்த வாரம் எங்கூரு விளிம்பு மனிதரை நான் பேட்டிஎடுக்கப் போகிறேன். காத்திருங்கள்
////////////////////
நொம்ப விளிம்புல நின்னு பேட்டி எடுக்காத மச்சி குப்பறடிக்க விழுந்திருவே...!

Unknown said...

@பட்டிகாட்டான் Jey said...

ந்க்கொன்னியா உனக்கு இன்னும் அந்த அம்முனூசியா சரியாகலையா, இதுக்கு முன்னாடி நாம *வெனிஸ்வீதில போட்ல* உலாவரும்போது மீட் பண்ணோம் மச்சி..

உங்கிட்ட இருக்கிர கெட்ட பழக்கமே இதான்.... எங்கே மீட் பண்ணோங்கறத மறந்துடறது...:-))
////////////////////////
வூட்டுக்கு பொறத்துக்கால...இருக்கிற காட்டுக்கு வெளிக்கு போனதை வெனிஸ்ல போட்ல போனேங்கறாப்டி பாரு கணக்குபுள்ள பங்காளி..!

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// அஞ்சா சிங்கம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

////படிச்சிட்டு சும்மா போனா எப்படி/////

வேற எப்படி போகனும்.....?//////////////////////////////////////

.............................கொஞ்ச நேரம் குத்த வச்சி கும்மி அடிச்சிட்டு போங்க////////////

எங்களுக்குலாம் குத்த வெச்சா கக்காதான் வரும்........ எப்புடி வசதி?
/////////////////////////////////

தோழர் இது ஆப்ரிக்க பெண்கள் அதிகம் வந்து பார்க்கும் வலைப்பூ .. அதனால் நாகரீகமாக பின்னூட்டம் இதவும் .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அஞ்சா சிங்கம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// அஞ்சா சிங்கம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

////படிச்சிட்டு சும்மா போனா எப்படி/////

வேற எப்படி போகனும்.....?//////////////////////////////////////

.............................கொஞ்ச நேரம் குத்த வச்சி கும்மி அடிச்சிட்டு போங்க////////////

எங்களுக்குலாம் குத்த வெச்சா கக்காதான் வரும்........ எப்புடி வசதி?
/////////////////////////////////

தோழர் இது ஆப்ரிக்க பெண்கள் அதிகம் வந்து பார்க்கும் வலைப்பூ .. அதனால் நாகரீகமாக பின்னூட்டம் இதவும் .//////

தோழர் எங்களுக்கு சப்பானிய பெண்களையும் ரொம்ப புடிக்கும், அதுனால அவங்களுக்கு புடிக்கிற மாதிரி எழுதி அவங்களையும் வரவைங்க தோழர்.....

அஞ்சா சிங்கம் said...

//தோழர் எங்களுக்கு சப்பானிய பெண்களையும் ரொம்ப புடிக்கும், அதுனால அவங்களுக்கு புடிக்கிற மாதிரி எழுதி அவங்களையும் வரவைங்க தோழர்.....///

யோவ் அவங்களுக்கு தான் மூக்கே கிடையாதே எவ்ளோ நாரடிசாலும் ஒன்னும் பிரச்னை இல்லை .

பாலா said...

இது உள்குத்தா? இல்லை கலாய்ப்பா? போரடிக்கிற வரைக்கும் விடமாட்டீங்களா?

Thozhirkalam Channel said...

ஹா...ஹா...ஹா...
விளிம்பு நிலை மனிதர்களை பற்றி நாங்களும் அறிந்து கொண்டோம்

வவ்வால் said...

ஓய் அஞ்சா ஸிஙகம்,

என்னா வெள்ளாட்டுபா இது, ஒன்னியுமே பிரியலை, ஆனால் சொக்கா கிளிச்சுக்காம வெள்ளாண்டா செரிதேங்க்!

உண்மையான விளிம்பு நிலை மனிதனின் ,உண்மையான விளிம்பு நிலை கவலைகள் பற்றி இங்கு யாருக்கேனும் கவலை உண்டா?

நாம் என்னமாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம், என்ற மனசிக்கல் என்னுள் உள் ஒளியாக அவ்வப்போது எழுகிறது,பின் தவழ்கிறது.

நம் மக்கள் புறவயமாக சிந்தித்து அகவயமாக விதந்தோம்புதல் என்னும் மாய சுழலில் சிக்குண்டு இருப்பதை சமீப காலங்களில் காண்கிறேன்..

இது நமது இந்து ஞானசூன்ய மரபின் வீழ்ச்சிக்கு அடையாளம் ஆகும்.

டாஸ்மாக் பாரில் சில்லுக்கு ஜிப்பாவை விட மெல்லிய ஒளியூடுரும் குவளையில் விளிம்பு வரையில் சரக்கினை மிக்சிங்குடன் ஊற்றி விட்டு சிந்தாமல் வாய்க்கு எப்படி இடப்பெயர்ச்சி செய்வது எனக்கவலைப்படும் விளிம்பு நிலை மனிதனின் கவலையை என்றாவது சிந்தித்து பார்த்திருப்பீர்களா ?

நான் உங்களிடம் கேட்பதெல்லாம் என்ன உங்கள் வாழ்நாளில் ஒரு நாளில் ஒரு மனி நேரத்தை என்னை போன்ற விளிம்பு நிலை மனிதர்களினை பற்றி சிந்திக்க கொடுங்கள் என்பதே.

இதுவே செக்கோஸ்லாவியாவில் இதனை சொல்லி இருந்தால் இன்னேரம் அந்நாட்டுக்கு அதிபதி ஆகி இருப்பேன். :-))

இப்பதிவினை அஞ்சா ஸிங்கம் ஸ்வாகிலி மொழியில் எழுதி இருந்தால் இன்னேரம் ஸான்சிபாரில் சரக்கடித்துக்கொண்டிருந்திருப்பார் :-))

மேன்ஷன் ஹவுசின் விலை அதிகம் ஆகிவிட்டது, ஒரு நல்ல குடிமகனுக்கு ஏற்பட்ட பெருந்துன்பம்!

வவ்வால் said...

//யோவ் அவங்களுக்கு தான் மூக்கே கிடையாதே எவ்ளோ நாரடிசாலும் ஒன்னும் பிரச்னை இல்லை .//

யோவ் எங்களுக்கு மூக்கு இருக்குய்யா :-))

அஞ்சா சிங்கம் said...

வவ்வால் said... ஓய் அஞ்சா ஸிஙகம்,

என்னா வெள்ளாட்டுபா இது,................////////////////

இது சும்மா செத்து செத்து விளையாடுற ஆட்டம் .......

//நாம் என்னமாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்//

ஆமாம் உண்மைதான் 10 மணிக்கு கடையை அடைத்தபின் சரக்கு வாங்க அல்லாடும் . டூப்ளிகேட் சரக்காக இருந்தாலும் அதிக விலை குடுத்து வாங்க வெளியில் தவம் இருக்கும் . அந்த விளிம்பு நிலை தியாகியை . இந்த சமுதாயம் நினைத்தது உண்டா .? மதித்தது உண்டா........?
நன்றி கேட்ட உலகமடா................

///நான் உங்களிடம் கேட்பதெல்லாம் என்ன உங்கள் வாழ்நாளில் ஒரு நாளில் ஒரு மனி நேரத்தை என்னை போன்ற விளிம்பு நிலை மனிதர்களினை பற்றி சிந்திக்க கொடுங்கள் என்பதே.//////

உங்க அளவுக்கு யாரும் விளிம்பில் தொங்க முடியாது ................இந்த தியாக திரு உருவிற்கு நிச்சியமாக பீச்சில் சிலை வைக்க வேண்டும் .

Unknown said...

சகோதரா எனக்கு ஒரு சந்தேகம் நீங்க அவரை பேட்டி எடுதிங்களா இல்லே ரயில் பிடிக்க ஓடுகிறாரே அவர் உங்களை பேட்டி எடுத்தாரா . என்ன உங்களை விட தெளிவா பதில் சொல்லியிருக்கிறாரே அதுதான் சந்தேகம்

நாய் நக்ஸ் said...

யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் .........நாளை வரேன்............

@வவ்வால்...இனி நீர் தப்பிக்க முடியாது...........

மோன நிலை முடிந்த பிறகு...நாளை தொடரும்.....

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கம்,

//.இந்த தியாக திரு உருவிற்கு நிச்சியமாக பீச்சில் சிலை வைக்க வேண்டும் .//

அப்படி சிலை வைத்தால் வருங்காலத்தில் பீச்சில் பதிவர் சந்திப்பு நடத்த லேண்ட்மார்க் ஆக இருக்கும்.

பி.கு: குடைப்பிடித்து கொண்டு இருப்பது போல் சிலை வைக்கவும் , அப்போ தான் விஷமக்கார காக்கைகள் கக்கா போவதில் இருந்து என் திருவுருவம் பாதுகாக்கப்படும் :-))

வவ்வால் said...

நக்ஸ் அண்ணாத்த மோன நிலையில் வருவதற்குள் ஓடிப்போயிடுவோம் :-))

முட்டாப்பையன் said...

மிக பெரிய பிரபல பதிவர்,ஹிட்ஸ்களின் முதன்மையானவர் அங்க பதில் சொல்லுறாரு வவ்வாலு.வாங்க அங்கன போய் இணைய கருத்து சொல்லுவோம்.
இந்த உலகத்த காப்பாத்துவோம் 21/12/2012---லிருந்து.

Anonymous said...

வாய்ப்பளிக்கும் நன்மக்களாய் நாம் இருப்போம்
நன்மைக்களே!
வணக்கம்
மாணவர் திறன் மேம்பாட்டுக் கழகம் (Students skills Development Association ) வசதியற்ற உயர் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தடையின்றி கல்வி பயிலும் நோக்கில் பாட புத்தகங்களை கடனாக வழங்கி திரும்ப பெற்று வருகிறது . இதற்காக வடசென்னை திருவொற்றியூரில் புத்தக வங்கி செயல் படுத்தி வருகிறது. இதன் மூலம் ஏழை எளிய பொறியியல் மற்றும் கலை அறிவியல் மாணவர்கள் பயன் பெற்று வருகிறார்கள்.
நன்கொடையாளர்கள் புத்தகங்களை நன்கொடையாக வழங்குவதன் மூலம் இவ்வங்கி திறம்பட செயல்பட்டு வருகிறது. நன்கொடையாளர்கள் வழங்கும் புத்தகத்தின் முதல் பக்கத்தில் அவர்களின் விபரம் தெளிவாக பதிவு செய்யப்படுகிறது. இதனால் நன்கொடையாளர்கள் வழங்கும் பணம் அல்லது புத்தகம் மாணவர்களுக்கு முழுமையான பயன் அளிக்கின்றது என்பது வெளிப்படையாக நடைபெற்று வருகிறது.
மாணவர்கள் புத்தகங்களை திரும்ப ஒப்படைக்கும் வண்ணம் முன் வைப்புத் தொகை பெறப்படுகிறது. அவர்களுக்கு தபால் மூலம் நினைவூட்டல் செய்து புத்தகங்களை தவறாமல் திரும்பப் பெற்று வருகிறோம்.
இந்த புத்தக வங்கி மேலும் சிறப்பாக அதிக மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் பொருட்டு தங்களின் உதவியை பணமாகவோ அல்லது புத்தகமாகவோ தந்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஒரு மாணவருக்கு ஒரு பருவத்திற்கு சுமார் ரூ 1800 முதல் ரூ 3700 வரை புத்தகம் வாங்க செலவு செய்யப்படுகிறது. கொடையாலர்களிடம் சரிசமமாக ஒரு மாணவருக்கு ஒரு பருவத்திற்கு 2500 ஐ பெற்று புத்தகங்கள் வாங்கப்படுகின்றது.
இவ்வங்கியில் EEE , ECE , ME , CIVIL , பயிலும் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் புத்தகம் பெற்று வருகிறார்கள்
தாங்களும் இச் சேவையில் பங்குபெற்று வருங்கால இளைய சமுதாயம் தவறான பாதைக்கு செல்லாமல் நன்கு படித்து நன்மக்களாக வாழ்வுபெற தங்கள் உதவி செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
நாடு நலம் பெற வீடு நலம் பெற வேண்டும்
வீடு நலம் பெற வீட்டில் உள்ள
இளைஞர்கள் நலம் பெற வேண்டும்
நாட்டு மக்கள் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்
வாய்ப்பு கிடைத்த இளைஞர்களால் சாதிக்க முடியும்
அந்த வாய்பை அளிக்கும் நன் மக்களாய் நாம் இருப்போம்
தொடர்புக்கு
பிரதி வாரம் சனி மற்றும் ஞாயிறு
SSDA BOOK BANK
STUDENTS SKILLS DEVELOPMENT ASSOCIATION
44/48 SP KOIL 3rd STREET
THIRUVOTTIYUR
CHENNAI -600019
9444305581
9444124519
9941357720

வவ்வால் said...

நண்பரே,

Book Bank திட்டம் ஒரு நல்ல முயற்சி,வாழ்த்துக்கள்.

2500 ரூ கொடுத்தால் மட்டும் தான் ஏற்பீர்களா? 1000 ரூ என வைக்கலாமே.

சிலபஸ் படி நூல்கள் இருக்க வேண்டுமா, எந்த சிலபஸ் என்றாலும் பரவாயில்லையா?

அஞ்சா சிங்கம் said...

@வவ்வால்
Balasubramanian நமது நண்பர்தான் அவர் நீண்ட காலமாக இந்த சேவையை செய்துவருகிறார் . இதற்காக இங்கு ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து மாணவர்கள் இருந்து படிக்கும் வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளார் . tnpc பரீட்சைக்கு மாணவர்களை தயார் செய்வது .இலவச நோட்டு புத்தகங்கள் வழங்குவது போன்றவை எல்லாம் ஒரு குழுவாக இனைந்து செய்ய படுகிறது . நானும் இதில் கலந்து கொண்டு சிறு பங்களிப்பு செய்கிறேன் ...
எல்லாமே இலவசமாகத்தான் செய்ய படுகிறது . வைப்பு தொகை என்பது மாணவர்கள் புத்தகத்தை சேதபடுத்தாமல் திருப்பி தருவதற்காக வைக்க பட்டுள்ளது ...........நண்பர்கள் யாராவது பாடப்புத்தகத்தை இலவசமாக தந்தால் ஏழை மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கத்தில் இந்த பின்னூட்டம் இட்டுள்ளார் இது விளம்பரம் அல்ல சேவை ...
உங்களின் ஆக்க பூர்வமான யோசனையை தெரிவிக்க அவரது தொலை பேசியில் தொடர்பு கொள்ளலாம் 9042905783
அல்லது அடியேனையும் தொடர்பு கொள்ளலாம் 9444125010

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கம்,

அப்படியா,நல்ல முயற்சி, நானும் ஏதேனும் பங்களிக்களாமா என அறிந்து கொள்ளத்தான் கேட்டேன், ஒரு நபர் ஆயிரம் ரூ என அளித்தாலும் பரவாயில்லை தானே.

எங்கிட்டே கொஞ்சம் புத்தகமும் இருக்கு,அது பயன்படுமா என தெரிந்து கொள்ளவே சிலபஸ் படி இருக்கணுமா எனக்கேட்டேன்.

அந்தப்பக்கம் வந்தால் கண்டிப்பாக பார்க்கிறேன். நிறைய புத்தகம் இரவல் கொடுத்து திரும்ப வராமலே போயிருக்கு, அதற்கு யாரேனும் நல்ல விதமாக பயன்ப்படுத்துவோருக்கு கொடுக்கலாம் என்றே நினைக்கிறேன்.

தொடர்ந்து சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்.

VOICE OF INDIAN said...

டும் டும் ..டும் இதனால சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் தொடர்ந்து மூன்றாவது வருசமாக http://vitrustu.blogspot.in/2013/01/blog-post.html#more

Anonymous said...

Really very satire article with humorous comments...:-)


By--Maakkaan.

Vignesh said...


I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Alloy Manufacturers in Chennai
Alloy Manufacturers in Ambattur
Best Aluminium Alloy Manufacturers in Ambattur
Aluminium Alloy Manufacturers in Chennai
Die Casting in Chennai
High Pressure Die Casting in Chennai
Gravity Die Casting in Chennai
Aluminium Die Casting in Chennai
Aluminium Pressure Die Casting in Chennai
Manufacturer of Aluminium Alloy Ingots in Chennai
Automobile Products Manufacturers in Chennai
Coupler Body Manufacturers in Chennai


Popular Posts