Monday, July 16, 2012

பில்லா வாயில வருது நல்லா ....

v

ஆரம்பத்திலேயே சொல்லிடுறேன் எனக்கு விமர்சனம் எல்லாம் எழுத வராது .
இருந்தாலும் இந்த படத்தை ரெண்டு முறை பார்க்க வேண்டிய நிலைமைக்கு ஆளாக்க பட்டதினால் ஏற்ப்பட்ட விளைவு தான் இந்த பதிவு .

இந்த படம் ரசிக்கும்படி எடுக்கப்படவில்லை என்ற குறையை தவிர வேறு ஒன்றும் எனக்கு பெருசாக தெரியவில்லை .
சித்தாந்த ரீதியாக பார்த்தால் அந்த கதாபாத்திரம் செய்யும் செயல் எல்லாம் நியாயம்தான் .
அது ஒரு நிழல் உலக தாதா எப்படி உருவாகிறான் என்பது மட்டும்தான் .
டானுக்கு செண்டிமெண்ட் இருக்ககூடாது . எல்லோரையும் எதிரியாக பார்க்கவேண்டும் .இது மட்டும்தான் அடிப்படை
நமக்கு முன்னாள் ஆட்சி செய்த அரசர்களின் வாழ்கையை பார்த்தால் புரியும். எத்தனை கொலைகள் அண்ணன், தம்பி, 
தந்தை என்று யாரை வேண்டுமானாலும் கொன்று சாம்ராஜ்யத்தை நிறுவுவது ஒரு அரசனின் செயல் . இதற்காக பெற்ற மகனை கூட கொன்ற அல்லது குருடாக்கிய மன்னர்கள் பல இது போன்று தான் மன்னர்கள் உருவாக முடியும் சராசரி மனிதனுக்கு இது  நினைக்க முடியாத துயரம் .

படத்தின் ஆரம்பத்திலேயே நாயகன் சொல்லிவிடுகிறார் தீவிரவாதிக்கும் போராளிக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான் ஜெயித்தால் அவன் போராளி தோத்தால் தீவிரவாதி .இது ஒரு யூத பழமொழி . நீ கடந்து வந்த பாதையை உன் வெற்றி நியாயபடுத்தி விடும் .

இன்னும் எவ்ளோ நாளைக்கு தான் கதாநாயகன் நல்லது மட்டும் செய்யவேண்டும் என்று அவனை கட்டாய படுத்த போறோம் . அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறேன் . ரொம்ப நல்ல ஹீரோ வேண்டாம் அப்புறம் அவனுங்க முதலமைச்சர் ஆக ஆசை படுவானுங்க.

இந்த படத்திற்கு எதிர்மறை விமர்சனம் வருவது நல்லது தான் . ஆனால் இதுதான் நிசர்தனம் இப்படி ஒரு வாழ்க்கை இருப்பதும் உண்மைதான் .

ஒரு வேளை இந்த படத்தை ரெண்டு முறை பார்ததானால் வந்த பாதிப்பா என்று தெரியவில்லை .
அஜித்தை பாராட்டிதான் ஆக வேண்டும் நான் இப்படிதான் என் வாழ்க்கை நான் வாழ்கிறேன் எனக்கு கார் ஓட்ட வேண்டும் என்றால் கார் ஓட்டுவேன் . படம் நடிக்க வேண்டும் என்றால் நடிப்பேன் . உனக்காக என் வாழ்கை இல்லை . என் வாழ்கை எனக்காக மட்டும்தான் . போலி நல்லவர்கள் வேண்டாம் நிறையா பார்த்தாச்சி இந்த நடிகர்களிடம் என்ன எதிர் பார்கிறீர்கள் நாட்டை காப்பாற்றும் பொறுப்பா.?

நூற்றி ஐம்பது ருபாய் குடுத்து படம் பார்த்துவிட்டு இதில் கருத்து இல்லை லாஜிக் இல்லை என்று சொல்பவர்களுக்கு ..
சினிமாவில் இந்த கருமத்தை எல்லாம் ஏன் தேடுறீங்க . நல்ல புத்தகத்தில் கருத்து தேடுங்க அது நியாயம்.அதை விட்டு விட்டு எல்லா எழவையும் சினிமாவில் தேடுகிற கூட்டமாக இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் இருக்கபோகிறோமோ.


விடுங்க பாஸ் அவனுங்க பாட்டுக்கு நடிச்சிட்டு போகட்டும் திரை துறையில் இருந்து இன்னொரு முதல்வர் நமக்கு வேண்டாம் ...........

22 கருத்து சொல்றாங்க:

Unknown said...

//எல்லா எழவையும் சினிமாவில் தேடுகிற கூட்டமாக இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் இருக்கபோகிறோமோ.//

இந்த கருமத்தைத்தான் எவனும் புரிஞ்சுக்க மாட்டேங்குறானே, அவன் வேலை நடிக்கறது, நமக்கு பொழுதுபோகலைன்னா படத்துக்கு போறோம்,சினிமாலதான் வாழப்பழ காமெடியெல்லாம் சாத்தியம், நேர்லனா ஒரே அப்புதான், சூப்பரப்பு

அஞ்சா சிங்கம் said...

இரவு வானம் said...

//எல்லா எழவையும் சினிமாவில் தேடுகிற கூட்டமாக இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் இருக்கபோகிறோமோ.//

இந்த கருமத்தைத்தான் எவனும் புரிஞ்சுக்க மாட்டேங்குறானே, அவன் வேலை நடிக்கறது, நமக்கு பொழுதுபோகலைன்னா படத்துக்கு போறோம்,சினிமாலதான் வாழப்பழ காமெடியெல்லாம் சாத்தியம், நேர்லனா ஒரே அப்புதான், சூப்பரப்பு.............//////////////

வாங்க பாஸ் புத்தகத்தை படித்து கருத்து தேடுனாலும் பரவாஇல்லை . நடிகர்களுக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்துவிட்டோம் . அப்புறம் எப்படி அறிவுள்ள சமூகமாக நாம் மாற முடியும் . நாம் இப்படியே இருப்பது தான் அவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் லாபத்தை குடுக்க முடியும் . என்னமோ போங்க பாஸ் ...

வெளங்காதவன்™ said...

///திரை துறையில் இருந்து இன்னொரு முதல்வர் நமக்கு வேண்டாம்///

அப்போ நம்ம பவர் ஸ்டார் நெலம?

அஞ்சா சிங்கம் said...

வெளங்காதவன்™ said...

///திரை துறையில் இருந்து இன்னொரு முதல்வர் நமக்கு வேண்டாம்///

அப்போ நம்ம பவர் ஸ்டார் நெலம?.............///////////////
கஷ்டம்தான் என்னபண்றது தன்னலம் இல்லாத மக்கள் தலைவர் அவரு ..........

நாய் நக்ஸ் said...

Ada...
Singam....
Seeruthu.......!!!!!!!!

Unknown said...

இரண்டு தடவை ”பில்லா” பார்த்தா இப்படித்தான் சித்தாந்தம் பேசச் சொல்லும்.....

அஞ்சா சிங்கம் said...

NAAI-NAKKS said...

Ada...
Singam....
Seeruthu.......!!!!!!!!
///////////////

சிங்கம்னா சீறனும் நாயின்னா குறைக்கணும் இது இயல்புதானே சித்தப்பு....................

அஞ்சா சிங்கம் said...

வீடு சுரேஸ்குமார் said...

இரண்டு தடவை ”பில்லா” பார்த்தா இப்படித்தான் சித்தாந்தம் பேசச் சொல்லும்...../////////
ஹி ஹி நாங்க எல்லாம் மேதை படத்தையே பார்த்து ஜீரணம் பண்ணவங்க ...........

Unknown said...

ரொம்ப நாளு ஆச்சு கமெண்டு போட்டு அதுனால ஹி ஹி ஹி

அஞ்சா சிங்கம் said...

N.Mani vannan said...

ரொம்ப நாளு ஆச்சு கமெண்டு போட்டு அதுனால ஹி ஹி ஹி..................///////////////////////

நீங்க வந்தா மட்டும் போதும் .........நீங்க வந்தா மட்டும் போதும் .........

Anonymous said...

சினிமாவில் நாயகன் பொழுதுபோக்கிற்கான செயலை மட்டும் செய்துவிட்டு சென்றால் எவன் கேட்கப்போகிறான். என்ன எழவிற்கு ஈழ செண்டிமெண்ட் உள்ளிட்ட சில புல்லரிப்புகளை வைக்க வேண்டும். வெள்ளைக்காரன் படத்தை திருட வேண்டும். புத்தகம் குறித்த பதிவில்தான் புத்தக விமர்சனங்கள் மற்றும் பின்னூட்டங்களை எதிர்பார்க்கலாம். சினிமா பார்க்கையில் அதைப்பற்றிய லாஜிக்கை எதிர்பார்ப்பதில் தவறென்ன? பணம் குடுத்து படம் பார்க்கும் ஒவ்வொருவரும் நுகர்வோர்களே. அந்த பொருள் குறித்து விமர்சிப்பது அவன் இஷ்டம் தானே?

அஞ்சா சிங்கம் said...

! சிவகுமார் ! said...

சினிமாவில் நாயகன் பொழுதுபோக்கிற்கான செயலை மட்டும் செய்துவிட்டு சென்றால் எவன் கேட்கப்போகிறான். என்ன எழவிற்கு ஈழ செண்டிமெண்ட் உள்ளிட்ட சில புல்லரிப்புகளை வைக்க வேண்டும். வெள்ளைக்காரன் படத்தை திருட வேண்டும். புத்தகம் குறித்த பதிவில்தான் புத்தக விமர்சனங்கள் மற்றும் பின்னூட்டங்களை எதிர்பார்க்கலாம். சினிமா பார்க்கையில் அதைப்பற்றிய லாஜிக்கை எதிர்பார்ப்பதில் தவறென்ன? பணம் குடுத்து படம் பார்க்கும் ஒவ்வொருவரும் நுகர்வோர்களே. அந்த பொருள் குறித்து விமர்சிப்பது அவன் இஷ்டம் தானே?..........////////////
///////////////////////
உங்களுக்கு பதில் லக்கி பதிவில் இருக்கிறது .....
http://www.luckylookonline.com/2012/07/2.html

வவ்வால் said...

சரியாத்தான் சொல்லி இருக்கீங்க, ஹீரோ என்றால் protogonisலாக மட்டுமே இருக்கணும், அவன் செய்ய வேண்டியது ,செய்யக்கூடாதது என ஒரு பட்டியல் போட்டுக்கிட்டு படம் பார்க்க போறாங்க. இங்கே antogonist ஆஹ் ஹீரோ இருந்தாலும் அவனுக்கு ஒரு ஜஸ்டிஃபிகேஷன் வைக்கணும்னு சொல்வாங்க,

ஹீரோ என்று சொல்லாமல் மேல் லீட் ஆக்டர்னு கூட சொல்ல மாட்டாங்க :-))

silence of the lamb, hanibal போல எல்லாம் நம்ம ஊரில் படம் எடுக்கவே வாய்ப்பில்லை.வயதான கதாப்பாத்திரம் லீட் ரோல் செய்வது சாத்தியமில்லை தமிழில்.

அந்தவகையில் இந்தி வெட்னெஸ் டே சேர்க்கலாம், தமிழில் லோகநாயகர் யூத்தா வருவார் :-))

Anonymous said...

செல்வின்.. லக்கியின் பில்லா பதிவை படிக்கறதுக்கு நான் பில்லாவே மறுக்கா பாத்துருவேன்.

அவர் அணில் விஜய்யின் எதிர்ப்பாளர். ஏன்னா விஜய் அம்மா கூட்டணி. அதுக்காக பில்லா நல்லா இருக்குன்னு சொல்லலாம். வேற லிங்க் குடுங்க பாஸ்.

பாலா said...

இந்த படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் வரக்காரணம் வழக்கமான சினிமாவைப்போலவே இதிலும் சென்டிமெண்ட் நகைச்சுவை காட்சிகளை எதிர்பார்த்ததாலேயே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே, ஆனந்த தொல்லைக்கு விமர்சனம் எப்போ எழுத போறீங்க? அஜீத்துக்கே இப்படின்னா, பவர்ஸ்டார் பத்தி என்ன சொல்ல போறீங்கன்னு எல்லாரும் பதறிப்போய் இருக்காங்கண்ணே.....!

அஞ்சா சிங்கம் said...

வவ்வால் said...
ஹிந்தி வெட்னெஸ் டே படத்தை தமிழோடு ஒப்பிட்டு பார்க்க முடியாது .
அந்த படத்தை அவளவு கேவல படுத்தி இருப்பாரு நம்ம உலகநாயகன் ...
எனக்கு மிக பிடித்த படங்களில் அதுவும் ஒன்று .......

வௌவால் வருகைக்கு நன்றி ..............

திண்டுக்கல் தனபாலன் said...

இரண்டு தடவை பார்த்தீர்களா... நீங்கள் அஞ்சா சிங்கம் தான்...
பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...(TM 2)

shahul said...

மிகவும் நன்றாக இருக்கிறது................

vivek kayamozhi said...

"நாலுபேருக்கு நல்லது நடக்கும் னா நாம எது பண்ணாலும் தப்பே இல்ல "என நல்லவனா வாழ இவன் வேலு பாய் இல்ல, "நாம வாழனுன்னா எத்தன பேர வேணுன்னாலும் கொல்லலாம் " என்று வாழும் பில்லா. கொலைகள் ஓவர் தான்.
ஒரு டான் இன் வாழ்க்கையில் சந்தானம் காமெடியையும்,குத்து பாட்டையும்,செண்டிமெண்ட் முடிச்சுக்களையும் எதிர் பார்க்கலாமா? முனியாண்டி விலாசில் வெண்பொங்கல்,சாம்பார் வடையை கேட்பது வீண்.
யுவன் முதல் பார்ட் இல் தீம் ம்யுசிக் கை மட்டும் ஆங்காங்கே போட்டு ஒப்பேத்தி இருந்தார், ஆனால் இதில் ஒரு அகதி சர்வதேச கடத்தல் மன்னனாகும் வரை அவன் வாழ்வில் ஒவ்வொரு நொடியும் அவன் போக்கிலே நம்மையும் போகுமாறு தனது இசையால் அழைத்து சென்றிருக்கிறார். நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய இசை.
அஜித்,சக்கரி,ராஜசேகர்,முருகன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் .ஓரளவு !? சர்வதேச தரத்தில் ஒரு தமிழ் படம்.
July 16, 2012 4:39 AM

MANO நாஞ்சில் மனோ said...

பில்லா நீ இருடே நல்லா.....இப்பிடி தலைப்பு வச்சிருந்தா ரசிகர்கள் இன்னும் நாலு குடம் பாலை ஊத்தி இருப்பாயிங்கலு[ளோ]...?

Anonymous said...

//ரொம்ப நல்ல ஹீரோ வேண்டாம் அப்புறம் அவனுங்க முதலமைச்சர் ஆக ஆசை படுவானுங்க.
///

இது செம பாஸ்!!!

Popular Posts