சென்னையில் நேற்று நடந்த இளம் பதிவர்கள் சந்திப்பு நாங்கள் நினைத்ததை விட மிக சிறப்பாக நடந்தேறியது மகிழ்ச்சி அளிக்கிறது .
இதை வெற்றிகரமாக நடத்தி காட்டியதில் மதராசபவனின் பங்கு அளப்பரியது எல்லா புகழும் சிலுவை குமாருக்கே .
சாதனையாளர்களை அழைத்து கவுரவிக்கும் படி எங்களுக்கு ஆலோசனை சொன்ன ஆபீசர் சங்கரலிங்கம் சாருக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது . ஏனென்றால் அவர்களால் தான் இந்த நிகழ்ச்சி அழகேரியது .
ஆரூர் மூனா மனிதர் கடுமையாக இழைத்திருக்கிறார் சாரி உழைத்திருக்கிறார் மற்றும் பிலாசபிக்கு நன்றி ..
முக்கியமாக மகா சந்நிதானம் ( கேபள் சங்கர் ) இளைய ஆதீனம் ( கே.ஆர்.பி.செந்தில் ) அவர்கள் இல்லாமல் எங்களால் இது முடிந்திருக்காது .
வரண்டு கிடக்கும் உள்ளங்களுக்கு இவர்களின் வார்த்தைகள் தான் வயாகரா.
ஜாக்கி சேகர், லக்கி யுவா, அதிஷா, போன்ற பெரும்தலைகள் வராதது சிறிது வருத்தம் , அலுவல் காரணமாக அவர்கள் வராதது வெளியூரில் இருந்து வந்த பதிவர்களுக்கு சிறிது ஏமாற்றம். முடிந்தால் கண்டிப்பாக வந்திருப்பார்கள் என்று நமக்கு தெரியும் .
இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது நிறைய வெளிநாட்டு பதிவர்கள் மற்றும் வெளியூர் பதிவர்கள் பார்த்து மகிழ்ந்தார்கள் .
இது சிறியோர்களின் கன்னி முயற்சி குறை ஏதும் இருப்பின் சுட்டிக்காட்டவும்...பிழை ஏதும் இருப்பின் பொறுத்துகொள்ளவும் .. வந்திருந்து சிறப்பித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி ...நன்றி ...நன்றி ..
சிறப்பு நன்றி அறிவிப்பு
---------------------------------------
இவர் பதிவர் சந்திப்புக்கு வருகிறார் என்று தெரிந்தவுடன் சென்னையில் இடி மின்னல் .அவர் வராராமே உனக்கு போன் வந்துச்சா .?
உனக்கு போன் வந்துச்சா என்று .பலரிடத்தில் இருந்து எனக்கு போன் வந்தது .ஏதற்கும் ஜாக்கிரதையாய் இருப்பது நல்லது என்று ஆலோசனைகள் வேறு.
அந்த ப்ராப்ள பதிவர் வேறு யாரும் அல்ல அது நாய் நக்ஸ் நக்கீரன். இவர் ஒரே ஒருமுறை மட்டும் கிரகாம்பெல்லிடம் போனில் பேசியிருந்தால் தனது கண்டுபிடிப்பை தானே அழித்திருப்பார் . என்றாலும் மனிதர் நேரில் பார்க்கும்
பொது குழந்தை மனம் கொண்டவர் என்று புரிந்தது இவருக்கும் வீடு சுரேஷ் மற்றும் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும் நன்றி.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கனடாவில் இருந்து ஒரு வாசகர் தனது நண்பர் மூலமாக பிலாசபிக்கு பரிசு பொருள் மற்றும் ருபாய் 1200 ரூபாய்க்கு சத்தியம் தியேட்டர் ப்யுள் கார்ட் குடுத்து அணிப்பியிருந்தார் அதை பற்றி விசாரணைகள் நடந்து கொண்டிருக்கிறது ..
எல்லாருக்கும் மேல் நாங்கள் மிகவும் நன்றி சொல்ல கடமைபட்டிருப்பது டிஸ்கவரி அண்ணன் வேடியப்பன் அவர்கள் .
விரிவான பட பதிவுகள் இனிமேல் நம் பதிவர்களால் வெளியிடப்படும்
அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி ....
10 கருத்து சொல்றாங்க:
நான் ஆன்லைன்ல முழுதும் பார்த்தேன்,வாய்ஸ் கிளியரா இருந்தது. ஆனால் வீடியோ மட்டும் கொஞ்சம் சரியா தெரியில.இருந்தாலும் ஒரு பதிவர் சந்திப்பில் நேரில் கலந்துகொண்ட உற்சாகம் இருந்தது...நன்றி
கலக்கிட்டீங்க நன்றிகள் அனைவருக்கும் மற்றும் வாழ்த்துக்கள்!
சந்திப்பில் கலந்து கொள்ள முடியாத வருத்தம் இருந்தாலும் உங்களின் ஆன்லைன் முயற்சியால் சந்திப்பை பார்க்க முடிந்தது......
ஆடியோ ஓகே... வீடியோ கிளியர் கொஞ்சம் குறைவு. இனி வரும் சந்திப்புகளில் இந்த முயற்சியில் முன்னேற்றம் காண வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்....
கலந்து கொள்ள முடியாமல் போனது வருத்தமே, ஆனாலும் வெற்றிகரமாக நடந்தது மிக்க மகிழ்ச்சி
கலக்கிட்டிங்க... அப்புறம் முந்திட்டிங்க.....
அருமையான பதிவு. எனக்கு கூட பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளவேண்டும் என்ற ஆசை தான். கண்டிப்பாக அடுத்த முறை கலந்து கொள்ள முயற்சிக்கிறேன். பகிர்வுக்கு நன்றி.
சென்னையில நாங்க இல்லையே என்கிற ஏக்கத்தை உண்டு பண்ணியது உங்கள் நட்பு.........!
உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அண்ணா..
அதிலும் விழா எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடந்தேரியதில் இரட்டிப்பு மகிழ்ச்சி..
நன்றி
சம்பத்குமார்
கோவை
Manimaran விக்கியுலகம்
தமிழ்வாசி பிரகாஷ் இரவு வானம்
சதீஷ் மாஸ்
N.H.பிரசாத்
வீடு சுரேஸ்குமார்
.......
அணைத்து உள்ளங்களுக்கும் நன்றி
hii.. Nice Post
Thanks for sharing
For latest stills videos visit ..
Celeb Saree
Post a Comment