Friday, January 11, 2013

அலெக்ஸ்லு..பாண்டியன்லு

v

வழக்கமாக சினிமா அதிகம் பார்க்காதவன் நான் அப்படியே பார்த்தாலும் அதை விமர்சனம் பண்ணுவது எப்போதாவது நிகழும் அதிசயம் .
அந்த அதிசயம் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இவ்வளவு சீக்கிரம் வாய்க்கும் என்று நான் கனவிலேயும் நினைக்க வில்லை .
இன்று பவர் சடவ்ன் . வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல் இன்று ரிலீஸ் ஆன புது படம் ஏதாவது இருக்கிறதா என்று யோசித்து அம்பத்தூர் ராக்கி சினிமாஸில் அலக்ஸ் பாண்டியன் என்ற அமர காவியம் ரிலீஸ் ஆவதை அறிந்து கொண்டேன் .
சற்றும் தாமதிக்காமல் உடனே கிளம்பி தியேட்டருக்கு வந்து சேர்ந்தேன் .(டிக்கட் கிடைக்க வேண்டுமே என்ற கவலை) ஆனால் கூடட்ம் அதிகம் இல்லாததை கண்டதும் மனதிற்குள் ஒரு சிறு சந்தோஷம் . (அது எவ்வளவு முட்டாள்தனமானது என்று அப்போது எனக்கு தெரியாது )

இப்போது விமர்சனத்திற்கு போவோம் .
படம் ஆரம்பிக்கும் போது இந்த படத்தில் மிருகங்கள் எதுவும் வதைக்கபடவில்லை என்று டைட்டில் கார்ட் காட்டுகிறார்கள் அப்போது எனக்கு  தெரியாது அடுத்த மூன்று மணி நேரம் இவர்களிடம் மாட்டி வதை பட போறது நாம்தான் என்று .
படம் ஆரம்பித்து பத்தே வினாடிகளில் உங்களை அலேக்காக தூக்கி ஆந்திராவிற்கு கொண்டு போய்விடுகிறார் அலேக் பாண்டியன் .
சற்று மிரட்சியோடு படத்தை பின்தொடர்ந்தால். ஓடும் ரெயில். அதை துரத்தும் கதாநாயகி. அவளை துரத்தும் 10 அடியாட்கள். அவளை காப்பாற்ற அவர்களை பின்தொடர்ந்து விரட்டி வரும் கதாநாயகன் . என்று தமிழ் சினிமா இதுவரை கண்டிராத அற்புத காட்சியோடு படம் ஆரம்பம் ஆகிறது .

ரெயில்  பெட்டிகளை  எஞ்சின் கொண்டு இழுக்கிரார்களா ? அல்லது ஷேர் ஆட்டோ வைத்து இழுக்கிரார்களா என்று நமக்கு சந்தேகம் வருவதை தவிர்க்க முடிய வில்லை. அந்த அளவுக்கு எல்லாரும்  ஓடும் ரெயிலில் ஏறி இறங்கி ஜாலியாக விளையாடுகிறார்கள் . வில்லன்னும் வழக்கம் போல் ரயிலை எலிகாப்டரில் துரத்தி வருகிறான் .அவளவுதான் கட் பண்ணா நாம் எங்கு இருக்கிறோம்  என்று நமக்கே மறந்து விடுகிறது அது பரவாஇல்லை . ஆனால் அதை டைரெக்டரும் கதாநாயகனும் மறந்து விட்டதுதான் சோகம் .

சம்பந்தம் இல்லாமல் சந்தானம் ...................இடைவேளை வரை இருவரும் ரெட்டை அர்த்த வசனம் பேசி விளையாடிகொண்டே இருக்கிறார்கள். ஏற்கனவே நம்ம தலைவர் கவுண்டமணி பல படங்களில் செய்த காமடி சீன்களை வைத்து ஒப்பேற்றுகிறார் .சந்தானதிற்க்கு மூன்று தங்கச்சிகள் . சந்தானமே இந்த படத்திற்கு வேஸ்ட் லக்கேஜ் இதில் இன்னும் எக்ஸ்ட்ரா 3 லக்கேஜ் வேறு  ......... 

ஆனால் பார்க்கிற அனைவருக்கும் ஒரு விஷயம் தெளிவாக புரிந்து விடுகிறது . எந்த நேரத்திலும்  இந்த படத்தில் ஒரு கேவலமான பிளாஷ் பேக் வரபோகிறது எல்லோரும் தயாராக இருக்க வேண்டும் என்று .
அது எந்த  அளவிற்கு கேவலமாக இருக்கும் என்பதுதான் நம்மால் யூகிக்க முடியாத சஸ்பென்ஸ் . இந்த விஷயத்தில் டைரெக்டர் சுராஜ் ஜெயித்து விடுகிறார்.

அனுஷ்காவிற்கு கார்த்தி மேல்  காதல் வரும் காரணம் சுறா படத்தில் விஜய் மீது தமன்னாவிற்கு காதல் வருமே அதை விட வலுவானது . இடைவேளை வரை கார்த்தியின் பெயரை யாரும் உச்சரிக்காமல் இருக்கிறார்கள் . இடைவேளைக்கு பிறகு தான் அவர் பெயர் அலெக்ஸ் பாண்டியன் என்று நமக்கு தெரிய வருகிறது எப்பேர்பட்ட சஸ்பென்ஸ் .

இதெல்லாம் என்ன பிசுகோத்து என்று இதைஎல்லாம் தூக்கி சாப்பிடுகிறமாதிரி  இருக்கு பாருங்க ஒரு கிளைமாக்ஸ் . அது நமக்கு அங்க புரியாது வீட்டுக்கு வந்து ஒரு குவாட்டர் விட்டதுக்கு அப்புறம் தான் புரிகிறது . பல பேருக்கு அது புரியாமலே போய்விட சாத்தியமும் இருக்கிறது .
இந்த படத்தை பார்த்துவிட்டு நீங்கள் இருக்கையை ஈரம் பண்ணாமல் வந்துவிட்டால் நீங்கள் பாக்கியவான்கள் ......

படம் பார்த்துவிட்டு நாம்  வெளியே வரும்போது அடுத்த காட்சிக்காக டிக்கெட் வாங்கி விட்டு  உள்ளே போக தயாராக காத்திருப்பவர்களை பார்க்கும் போது நமக்கு வருகிறது பாருங்கள் ஒரு சிரிப்பு அந்த சிரிப்பிற்காக இந்த படத்தை பார்க்கலாம்.

அலெக்ஸ் பாண்டியன் : first worst film of the year  (சுறாவிற்கு அஞ்சான் இதற்கும் அஞ்சான் )

Saturday, December 1, 2012

விளிம்பு நிலை மனிதரின் பேட்டி (பேத்தி அல்ல )

v

சமீப காலங்களாக விளிம்பு நிலை மனிதர்கள் யாரும் என் கண்ணில் படுவது இல்லை . என்ன காரணம் யார் செய்த சூழ்ச்சி என்று பலவாறாக யோசித்து பார்த்ததில் காரணம் எனக்கு புரிந்தது.
 அதாவது நான் அலுவலகத்திற்கு காரில் சென்று வருவதால் என்னால் அவர்களை கண்டு பிடிக்க முடிய வில்லை என்பது இன்று விடுமுறை ஆதலால் மின்சார ரயிலில் பயணித்து யாராவது ஒரு விளிம்பு நிலை மனிதனின் பேட்டியை எடுத்து விடுவது என்ற வைராக்கியத்துடன் வீட்டை விட்டு கிளம்புகிறார் ஆரோக்கியசாமி .

இடம் திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையம் .
கூட்டம் அவ்வளவாக இல்லை என்றாலும் எங்கு பார்த்தாலும் டிப்டாப் ஆசாமிகள் மயம் . ஒரு விளிம்பு நிலை மனிதன் கூட ஆரோக்கியசாமி கண்ணில் படவில்லை . என்னடா இது இப்படி பிள்ளை பிடிக்கிறவன் மாதிரி எவ்வளவு நேரம் தான் தேடிக்கிட்டு இருக்கிறது என்று மனதுக்குள் நினைத்து கொண்டிருக்கும் போது . சட் என்று அவர் பார்வை பிளாட்பார்ம் ஓரத்திற்கு செல்கிறது .
அங்கே பிளாட்பார்ம் விழும்பில் ஒரு மனிதன் நின்று கொண்டு தண்டாவளத்தில் ரயில் வருகிறதா என்று பார்த்து கொண்டு இருந்தான் . மிகவும் விழும்பில் நின்று எட்டிப்பார்த்து கொண்டிருந்ததால் நாம் தேடும் விளிம்பு நிலை மனிதன் இவனாக இருக்குமோ என்று மனதிற்குள் ஒரு மணி அடித்தது . உடனே நம் மூளை சுறுசுறுப்பு அடைந்தது .
மெதுவாக அவன் அருகே சென்று பாஷா படத்தில் ரஜினி சொல்வது போல் சொல்லவேண்டும் என்று நினைத்து கொண்டேன் .

இனிமேல் லைவ் ரிலே :

ஆ.சாமி:-   அண்ணே வணக்கம் என் பேறு பிரேம்குமார்.

வி .மனிதன் :- இருக்கட்டும்...

ஆ.சாமி:- எனக்கு இன்னொரு பெயர் இருக்கு

வி .மனிதன் :- வச்சிக்கோ ..உன் இஷ்டம் எத்தினி வேணும்னாலும் வச்சிக்கோ.

ஆ.சாமி:- அது இல்லைன்னே உங்க பேட்டி வேணும் அதான் .

வி .மனிதன் :- ஏன்பா பார்த்தா படிச்சவனாட்டம் இருக்கே மனசு ஏதும் சரி இல்லையா வீட்ல ஏது பிரச்சனையா .?

(அவன் என்னை பேட்டி எடுக்க  ஆரம்பித்துவிட்டான் )

ஆ.சாமி:- அண்ணே நீங்க ரொம்ப விளிம்புல இருக்கீங்க . கிட்ட வர பயமா இருக்கு கொஞ்சம் பின்னாடி வாங்க நாம அந்த பென்ச்ல உக்கார்ந்து பேசலாம் .

(சிறிது யோசனைக்கு பிறகு சம்மதித்தான் )

ஆ.சாமி:- நீங்க எத்தனை வருஷமா இப்படி விளும்புல நிக்குறீங்க.?

 வி .மனிதன் :- அது ஆச்சிங்க ஒரு பதினைஞ்சி வருஷத்துக்கு மேல . நான் இஸ்கூலுக்கு  போசொல்ல ஆரம்பிச்சது . அப்போ எங்க இஸ்கூலு பேரிஸ்ல இருந்திச்சி . எங்க வீட்டுல இருந்து பஸ்லதான் போகணும் .ஆனா எனக்கு ட்ரைன்ல போகணும்னு ஆசை . வீட்ல இருந்து தாம்பரத்துக்கு பஸ்ல போயி அங்க இருந்து ட்ரைன்ல போலாம்ன்னு ப்ளான் பண்ணி போய்டேன் .
அப்படியே பிளாட்பாரம் விளும்புல நின்னுகிட்டு ரெயில் வருதான்னு பார்த்துக்கிட்டு இருந்தேன் . அப்போ திடீர்ன்னு ரெயில் வர்ற சத்தம் மட்டும் கேட்டுச்சு ஆனா ரெயிலை காணும் . என்னடா ஆச்சிரியமா இருக்குதேன்னு நெனைச்சிகிட்டு இன்னும் நல்லா விளும்புல போயி எட்டி பார்த்தேன் . அப்பவும் என் கண்ணுக்கு ரெயில் தெரியல. ஆனா சத்தம் மட்டும் ரொம்ப கிட்டக்க கேக்க ஆரம்பிச்சுது . பின்னால இருந்து ஒரு குரல் . சாவுகிராக்கி  திரும்பி பாரு ரெயில் வருது தலைய உள்ள எடு என்று . திரும்பி பார்த்தால் ரெயில் பக்கத்துல வந்திருச்சி . சடார்ன்னு தலைய உள்ள இழுத்து தப்பிச்சிட்டேன் . ஆனா அந்த த்ரில் பழகிடுச்சி 

ஆ.சாமி:- சரி பிழைப்புக்கு என்ன செய்கிறீர்கள் .?

வி .மனிதன் :-  ஆங் .. இங்க தான் டைட்டில் பார்க்குல அஜுபா கம்பனியில டெவலப்பர் ஆக இருக்கேன் . மாசம் 65,000 ருபாய் சம்பளம் வருது .

 ஆ.சாமி:- நல்ல வேலைதானே அப்புறம் ஏன் சலிச்சிகிறீங்க.?

வி .மனிதன் :- என்னதான் இருந்தாலும் மனசுக்கு பிடிச்ச வேலையா இருக்கனும்ல சார் . மதியானம் போல அவங்களே கார் அனுப்பி கூப்பிட்டு போறாங்க நாடு ராத்திரி வரை வெளிய உடமான்டாங்க . அப்புறம் அவங்களே வீட்டுக்கும் கார்ல அனுப்பி வைக்கிறாங்க . அப்புறம் எனக்கு தொங்குரதுக்கு ஏது நேரம் என்ன பொழைப்பு சார் இது . வெளிய போயி சுத்திகிட்டு வரமாதிரி வேலை இருந்தா நல்லாஇருக்கும். என்ன பண்றது எல்லாம் நம்ம கைலயா  இருக்கு. ஆனா வாரத்துக்கு ரெண்டு நாள் லீவு குடுக்குறாங்க சார் அந்த மாறி நேரத்துல இப்படி ரெயில்ல தொக்கி கிட்டு போறதுக்கு வந்துருவேன் .தோ இப்போ ஆரம்பிச்சி சாயங்காலத்துக்குள்ளாற எல்லா ஸ்டேசனுக்கும்  தொங்கிகினே போயிட்டு வந்துற மாட்டேன் .



 ஆ.சாமி:- உங்கள் எதிர்கால லட்சியம் என்ன .?

வி .மனிதன் :- சின்ன வயசில் இருந்து எல்லா பிளாட்பாரம் விளும்புளையும் நின்னுபார்துடேன் . பறக்கும் ரெயில் வந்தப்போ அது ரொம்ப புதுசா இருந்துச்சி . இப்போ மெட்ரோ ரெயில் வருது அதை நினைக்கும் போதே மனசு பரபரக்குது .
இன்னும் மோனோ ரெயில் வேறு வரும்ன்னு சொல்லிகிறாங்க . நான் கண்ணை மூடுறதுக்குள்ள அதுலயும் ஒரு தபா தொங்கீரனும் சார்.

(அந்த வீரமான மனிதனின் கண்விழியோரம் ஈரம் )

 ஆ.சாமி:- இந்த கேள்வி கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே ..நீங்க தமிழ்மணம் ஒட்டு போடுவீங்களா ...?


 வி .மனிதன் :- அதெல்லாம் இல்லை சார் நான் எப்போதும் தி.மு.க.வுக்கு தான் வோட்டு போடுவேன்.

நாம் அடுத்த கேள்வியை ஆரம்பிக்கும் முன் பீச் செல்லும் ரெயில் வர மின்னல் வேகத்தில் அதில் தொத்தி கொண்டு நம்மை பார்த்து கை ஆட்டிகொண்டே சென்றான் ....




இப்போது ஒன்லி மைன்ட் வாய்ஸ்

ஆரோக்கிய சாமி  மைன்ட் வாய்ஸ் (ச்சே இவன் கிட்ட கேமராவை குடுத்து என்னை ஒரு போட்டோ எடுக்க சொல்லலாம்ன்னு நினைச்சேன் அதுக்குள்ள தப்பிச்சிட்டானே )

விளிம்பு நிலை மனிதன் மைன்ட் வாய்ஸ் (ஹம்ம் பாவம் யார் பெத்த புள்ளையோ ஆளை பார்த்தால்  பையித்தியம் மாதிரி தெரியலயே சரி நமக்கு என்ன டிரெயின் வர்ற வரைக்கும் அந்த ஆளாள நல்லா பொழுது போச்சி )

டிஸ்கி :- சிரிக்க மட்டுமே சிந்திக்க அல்ல .






Tuesday, November 6, 2012

உங்கள் ஆதரவு தேவை

v

கருத்து சுதந்திரத்தை காக்க இப்போது நாம் தவறிவிட்டால் . நாமும் குன்றம் புரிந்தவர்கள் ஆகிறோம் .
கீழ் கண்ட இடுகை தருமி ஐயா தனது தளத்தில் பதிவிட்டது . அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டு கொள்கிறேன் .
 http://dharumi.blogspot.in/2012/11/601-i-t-act-section-66.html

601. I-T ACT SECTION 66 A - நமது கவலைகளும், கோரிக்கைகளும்.




*
 இப்பதிவில் நான் எழுதியுள்ளவை எல்லோருக்கும் சம்மதமாக இருக்குமென நினைக்கிறேன். ஒரு வேளை ஏதேனும் இன்னும் மாற்ற வேண்டுமாயின் இன்று இரவுக்குள் எனக்குத் தெரியப்படுத்தினால் மாற்றி விடுகிறேன். அதன் பின்பு, நாளை காலையிலிருந்து இப்பதிவை அடுத்த இரு நாட்களுக்குள் கீழே - சிகப்புக் கோட்டிற்குக் கீழே - உள்ளதைத் தங்கள் பதிவுகளாக பலரும் இட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். பதிவுகள் இட்ட பின் உங்கள் தொடுப்புகளை பின்னூட்டங்கள் மூலம் அனுப்பி விடுங்கள்.. அப்பதிவுகளை இப்பதிவின் கீழ் தொகுத்து விட ஏதுவாக இருக்கும்.

 தொடர்ந்து 2 நாட்கள் கிழே உள்ள வரியை எல்லோரும் டிவிட்டரிலும் பேஸ் புக்கிலும் பதிவிடலாமே ....

இந்திய அரசே,

தனிமனித உரிமைகளையே பறிக்கும். I-T ACT Section 66 A திருத்தப்பட வேண்டும். தனிமனித கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை வேண்டும்


நண்பர்களிடமும் சொல்லுங்கள் ..............
========================================================
*


 I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 - http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும் (http://www.thehindu.com/opinion/editorial/an-attack-on-media-freedom/article4055267.ece) இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.


நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம். 
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம்.

Popular Posts