Saturday, August 17, 2013

வச்சா வெடிக்கும்

v
அனுப்புனர் :-
                         புரட்சிகரமாக குழம்பிபோனவர்கள் இயக்கம்
                         இடம் பரமரகசியம் .

பெறுனர்    :-
                         கேபிள் சங்கர்
                         தொட்டால் தொடரும் பட இயக்குனர் .


திரு கேபிள் சங்கர்  என்னும் திரை பட இயக்குனருக்கு எங்களது படு பயங்கரமான மிரட்டல் கடிதம் . நீங்கள் எடுக்கும் தொட்டால் தொடரும் திரைப்படத்தில் ஏதாவது  ஒரு காட்சியில் யாரயாவது  புண்படுத்துவது போல் வசனம் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறோம் .

அதுமட்டும் அல்லாமல் இதில் நடிக்கும் நாயகன் நாயகி இந்த படத்தில் செல்போன் அதிகமாக உபயோகிப்பதை போல் காட்சி இருப்பதாக கேள்வி படுகிறோம். இது எங்கள்  புரட்சிகரமாக குழம்பிபோனவர்கள் இயக்கத்தின் விடிவெள்ளி நாய் நக்ஸ் நக்கீரனை கேவலபடுத்துவதாக எண்ணுகிறோம்.

மற்றும் நீங்கள் கருப்பு கலர் கேமரா உபயோகித்து படம் எடுக்க திட்டமிட்டுள்ளாதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது. இது எங்கள் இயக்கத்தின் தளபதி சிவாவிற்கு பிடிக்காத நிறம் அதனால் நீங்கள் கேமரா இல்லாமல் படபிடிப்பு நடத்திக்கொள்ளவும் ........
மேலும் உங்கள் பெயர் கேபிள் சங்கர் என்று இருப்பது எங்களுக்கு ஆட்டோ சங்கரை நினவு படுத்துகிறது . இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் வீடு சுரேஷ் குமார்படபிடிப்பிற்க்கு எங்கள் இயக்கத்தின் சார்பில் ஒருவர் (ஆரூர் மூனா செந்தில்)இடம் பெற வேண்டும். அவர் உங்கள் படபிடிப்பை தொடர்ந்து கண்காணிப்பார்.அவருக்கு போண்டா டீ போன்றவை நீங்கள் கேட்க்கும் போதெல்லாம் தரவேண்டும். அவர் ஆட்சேபம் தெரிவிக்கும் உணவு பொருள்களை நீங்கள் அவருக்கு தரக்கூடாது .படம் வெளியாகும் முன்பு எங்கள் இயக்கத்திற்கு அதை திரையிட்டு காட்ட வேண்டும். கொக்ககோலா மற்றும் பாப்கார்ன் கண்டிப்பாக அதில் இடம் பெற வேண்டும்.
 
இதை எல்லாம் மீறி நீங்கள் படபிடிப்பு நடத்தி படத்தை வெளியிடலாம் என்று முடிவு செய்தால் . படம் வெளியாகும் திரை அரங்குகளை குண்டு வைத்து தகர்ப்போம் . குறுக்கு வழியாக சிந்தித்து  தொலைகாட்சியில் வெளியிடலாம் என்று நீங்கள் மனப்பால் குடித்தால் டி.வி.பெட்டிக்கும் குண்டு வைப்போம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.


                                                                                  இப்படிக்கு
   
                                       புரட்சிகரமாக குழம்பிபோனவர்கள் இயக்கம்
                                                                     இடம் பரமரகசியம் .


22 கருத்து சொல்றாங்க:

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா.....டிவி பெட்டிக்குள்ளேயும் குண்டா ?

எலேய் சண்முகபாண்டி எட்றா அண்ணனின் வீச்சறுவாளை பூட்ரா காளை வண்டியை விட்ரா சென்னைக்கு.

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா.....டிவி பெட்டிக்குள்ளேயும் குண்டா ?

எலேய் சண்முகபாண்டி எட்றா அண்ணனின் வீச்சறுவாளை பூட்ரா காளை வண்டியை விட்ரா சென்னைக்கு.

Unknown said...

ஆட்டோ சங்கருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்ய்யா....

அஞ்சா சிங்கம் said...

//ஆஹா.....டிவி பெட்டிக்குள்ளேயும் குண்டா ?// ஒரு முறை முடிவு பண்ணிவிட்டா எங்க பேச்சை நாங்க யாரும் கேக்க மாட்டோம் .........

அஞ்சா சிங்கம் said...

வீடு சுரேஸ்குமார் said...

ஆட்டோ சங்கருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்ய்யா....
/////////
மாப்புள ஆன்ன்டாண்டு காலமாக அடைமொழியோடு வாழறோம்...
ஆட்டோவை வீட்டில்தானே விடுவாங்க...

arasan said...

இரகளை அண்ணே ...

பால கணேஷ் said...

அடேடே., சூப்பரு. டோரன்ட்ல வெளியிட்டா என்ன பண்ணுவீங்க சங்கத்தாரே.?

கார்த்திக் சரவணன் said...

அண்ணன்கே.ஆர்.பி.க்கு வேலைஒண்ணும் இல்லையா...... ஹா ஹா ஹா...

Sivakumar said...

என்னது எனக்கு கருப்பு கலர் பிடிக்காதா? 'செவப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்டா' மாதிரி எப்படியெல்லாம் கிறுத்தரம் பண்றாய்ங்க.

Anonymous said...

சிவா சொல்வது பொய், பளீர் வெளிர் நிறத்தில் இருக்கும் தமன்னாவுடன் தினமும் கனவில் ரகசியமாக குடும்பம் நடத்துவது எங்களுக்கெல்லாம் தெரியும். எனவே தான் உறுதியாக சொல்கிறோம். உங்களுக்கு கருப்பு நிறம் பிடிக்காது என்று.

செங்கோவி said...

பாம்புகூட ஈஸியா படம் எடுத்திடுது..ஆனா இந்த மனுசப்பயக படம் எடுக்குமுன்ன படுறபாடு இருக்கே...அப்பப்பா!

Manimaran said...

ஆஹா அப்ப தலைவா படத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விட்டது இந்த புரட்சிகரமாக குழம்பிபோனவர்கள் இயக்கம் தானா..

Manimaran said...


//இடம் பரமரகசியம் .// அதாவது சிதம்பர ரகசியம்..புரிஞ்சி போச்சி நாய் நக்ஸ் ஊரு... இப்படியா வெட்ட வெளிச்சமா சொல்றது.

Manimaran said...


அப்போ... வேறு தேசம் நோக்கி சென்றுவிடுவேன்னு டைரக்டர் சொன்னா ,முதல்ல டாடா காட்டுறது நம்ம பிளாக்கர்ஸ் தானா...!

Manimaran said...


அப்போ... வேறு தேசம் நோக்கி சென்றுவிடுவேன்னு டைரக்டர் சொன்னா ,முதல்ல டாடா காட்டுறது நம்ம பிளாக்கர்ஸ் தானா...!

R.Puratchimani said...

:)super

Anonymous said...

குண்டு குண்டு சொல்றீங்களே ! அப்படினா என்ன? - தலைகால் புரியாமல் தடைகோரும் அம்மாஞ்சி சங்கம்.

Unknown said...

ஹா ஹா அம்மா பார்த்துகோங்க குண்டு வைப்பாங்களாம்

Anonymous said...

:-)

வவ்வால் said...

அஞ்சா ஸுங்கமே ,

ரொம்ப நாளா "களப்பணியாற்றலையேனு ஒரே அடியா மொக்கைப்பணியா"? அவ்வ்!

கோலி குண்டு வைக்கிறதுக்கா இம்ப்புட்டு அலப்பறை, நல்லா பெரிய பேந்தா கோலிக்குண்டா வையுங்கப்பா :-))

படம் எடுத்தாலும் சரி எடுக்காட்டியும் சரி, ரிலீஸ் ஆனாலும் சரி ஆகலைனாலும் சரி ,முதல்ல எனக்குதான்யா போட்டுக்காட்டனும், நான் பி.கேபியின் .தொட்டால் தொடரும் கதைக்கும் படத்துக்கும் மினிமம் 6 வித்தியாசம் இருந்தா தான் ,படம்னே ஒத்துப்பேன் :-))

இப்படிக்கு

PKP பாசறை,

கேர் ஆஃப் பட்டுக்கோட்டை ஒயின்ஸ்.

*PKP= "பின்னூட்ட கொலைவெறி புலி"

Anonymous said...

",மனிதர்களை சிங்கம், புலி இவற்றோடுதான் உங்கள் தமிழ் நாட்டு எழுத்தாளர்கள் / மக்கள் ஒப்பிடுவார்களோ என்று வடநாட்டு எழுத்தாளர்கள் அடிக்கடி வினவுவதாக மக்கள் எழுத்தாளர் .சு.சமுத்திரம் மேடைகளில் குறிப்பிடுவார்.தாங்கள் வைத்துக்கொண்ட பெயருக்கான காரணம் யாதோ?

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/08/7.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Popular Posts