Thursday, April 5, 2012

இப்பதிவு பிலாசப்பி பிரபாகரனுக்கு டெடிக்கேட் செய்யபடுகிறது

v
                                                       இது என் 50 தாவது பதிவு 

                                                        
சம்பவம் ஒன்று

நண்பர்களுடன் ஒருநாள் சென்னையில் உள்ள மிக மட்டமான பராமரிப்பு உடைய டாஸ்மாக் பார் ஒன்றில் நுழைந்தேன் .
உள்ளே நுழைந்துடன் குடலை பிரட்டும் நாற்றம் . சுத்தம்  சுகாதாரம் பற்றி எல்லாம் யாரும் கவலை பட்டதாக தெரியவில்லை . இங்கு வேண்டாம் நாம் வேறு எங்காவது செல்லலாம் என்று கிளம்ப எத்தனிக்கும் போது ஒரு நான்கு வயது குழந்தையை தூக்கிக்கொண்டு ஒருவன் அந்த பாருக்குள் நுழைந்தான் .

வந்தவன் நேராக தண்ணீரும் எச்சிலும் கலந்து வழிந்துகொண்டிருந்த ஒரு டேபிளை லேசாக கையால் துடைத்து விட்டு அந்த குழந்தையை அதன் மேலே அமரவைத்துவிட்டு சரக்கு வாங்க சென்றுவிட்டான். எனக்கு ரத்தம் லேசாக சூடாக ஆரம்பித்தது . அவன் வரும்வரை அங்கே காத்திருந்தேன். கையில் ஒரு பாட்டிலுடன் வாட்டர் பாக்கெட் மற்றும் பொடிமாஸ் வாங்கிவந்தவன் அந்த குழந்தை அருகே அமர்ந்து குடிக்க ஆரம்பித்தான் . போடிமாசையும் அந்த குழந்தைக்கு ஊட்டிவிட்டான்.

அவனிடம் சென்று யோவ் அறிவு இருக்கா குழந்தையை இந்த மாதிரி இடத்துக்கு கூட்டிவரலாமா . இது உன் குழந்தையா ? இதை வீட்டில் விட்டுவிட்டு வந்து குடிக்க உனக்கு என்ன கேடு . இந்த வயதில் குழந்தைகள் தங்கள் உலகை கூர்ந்து கவனிக்கிறார்கள் அதன் எதிர்காலத்தை நாசமாக்க உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. நீ குடித்து விட்டு மட்டை ஆனால் இந்த குழந்தை நிலை என்ன  என்று கோவத்தோடு கேட்டேன் . என்னை லேசாக முறைத்து
பார்த்து விட்டு அவன் சொன்னான் . வந்தமா குடிச்சமா போனமான்னு இரு என் புள்ளையை எனக்கு எப்படி வளர்க்கனும்ன்னு தெரியும் .பெருசா புத்திசொல்ல வந்துட்டாரு போடா போத்திக்கிட்டு என்று .

அதற்க்கு மேல் நான் எதுவும் பேசவில்லை ஆனால் அந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்து விட்டது . நார்வே நாட்டில் ஒரு இந்திய குழந்தைக்கு வெறும் கையால் உணவு ஊட்டிய பெற்றவர்களை அந்த அரசாங்கமே தண்டித்தது நினைவுக்கு வருகிறது . அங்கு அரசாங்கம் குழந்தைகள் மேல் காட்டும் அக்கறையை இங்கே பெற்றவர்கள் கூட காட்டுவதில்லை . இந்த குற்றசாட்டில் எல்லோருக்கும் பங்கிருக்கிறது .
இந்திய பெற்றோர்கள் தான் ரொம்ப பாசமானவர்கள் என்றும் மற்ற நாட்டு காரர்கள் எல்லாம் குழந்தை பெற்று தெருவில் வீசிவிடுபவர்கள் போலவும் ஒரு பொய்யான பிம்பத்தை இங்கு விதைத்திருக்கிறார்கள் .

உண்மையில் இந்திய பெற்றோர்கள் மிகவும் சுயநல வாதிகள் என்றே கருதுகிறேன் . அவர்கள் தங்கள் பிள்ளைகள் மீது அளவுக்கு அதிகமான அதிகாரத்தை செலுத்துகிறார்கள் . அல்லது பாசம் என்ற போர்வையில் செண்டிமெண்டல் ப்ளாக்மெயில் செய்கிறார்கள் . காரணம் முடிவெடுக்கும் அதிகாரம் எப்போதும் தன்னிடம் இருக்க வேண்டும் என்ற காரணம் . சுயமாக சிந்திப்பது அவனுக்கான பாதையை அவனே தேர்ந்தெடுக்கும் பக்குவத்தை குடுப்பது .விலகி நின்று கண்காணிப்பது அல்லது அவன் சுதந்திரத்தை மதிப்பது . போன்ற எந்த விசயமும் இங்கே யாருக்கும் பிடிப்பதில்லை
பெத்தவங்க பேச்சை தட்டாத பிள்ளை ரொம்ப கீழ்படிந்த பிள்ளை . எதிர்த்து பேசாத பிள்ளை .இவர்கள் தான் நல்ல பிள்ளைக்கு அடையாளமாக நாம் கொண்டாடுகிறோம் . மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் நாம் பிள்ளை வளர்க்கிறோமா அல்லது அடிமை வளர்க்கிறோமா ?
முடிவெடுக்க முடியாமல் திணறும் பல பேரை நான் பார்த்திருக்கிறேன் . அற்ப காரணங்களுக்கு தற்கொலை செய்பவர்கள் .வீட்டுக்கு தெரிஞ்சா அவ்ளோதான் என்று வீட்டை விட்டு ஓடியவர்கள் என்று இந்த பட்டியல் நீளும்
வெறும் கலாச்சார போதை ஊட்ட பட்ட நாட்டில் இப்படி பட்ட பெற்றோர்கள் தான் பிறப்பார்கள் .
தங்களை உயர்த்தி கொண்டு மற்றவர்களை தாழ்வாக நினைப்பார்கள். தங்கள் தவறை சுட்டிக்காட்டும் தகுதி யாருக்கும் இல்லை என்று நினைப்பார்கள் . இந்தியன் என்பதற்கு பெருமை படவேண்டும் என்று சொல்லி கொள்வார்கள் .
காரணம்தான் சொல்ல மாட்டார்கள் . நிச்சியமாக இந்தியன் என்று சொல்லிகொள்வதில் பெருமை பட நியாயமான
காரணம் எதுவும் இருப்பதாக எனக்கு தெரிய வில்லை .



*********************************************************************************************************************
                            
                         
சம்பவம் இரண்டு

புரட்சிதலைவி மாண்பிமிகு தமிழக முதல்வர் இதயதெய்வம் டாக்டர் அம்மா (குலோ துங்குவை விட்டிருந்தால் மன்னிக்கவும் ) அவர்களின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் நீர் மற்றும் மோர் பந்தல் திறக்கப்பட்டதை அனைவரும் அறிந்திருப்பீர்கள் அப்படி ஒரு பந்தலில் நடந்த சம்பவம்
மைக் வைத்து போவோர் வருவோர் எல்லோரிடமும் அம்மாவின் கருணையை பறை சாற்றிகொண்டிருந்த ஒரு ரத்தத்தின் ரத்தம் யாரும் உள்ளே வராத வெறுப்பில் இருந்தார் .
அப்போது அங்கே சென்றுகொண்டிருந்த ஒரு பெரியவரிடம் பெருசு வந்து மோர் குடிச்சிட்டு போ என்று அழைத்தார் .
அவ்ளோதான் பெருசு ஏற்கனவே புல் போதை வந்ததே கோவம் .

த்தா ...பீப்....மோர் குடுக்குறானாம் மோரு......பீப்.............பீப்............அதை உன்கிட்ட வாங்கி குடிக்கிறதுக்கு விஷத்தை குடிச்சிட்டு போயிடுவேன் .............. ....பீப்.............பீப்........பீப்.............பீப்....கரண்ட்டு பில்லு ஏத்துனே பால் விலை ஏத்துனே
பஸ் டிக்கட் விலையை ஏத்துனே ..பாவிகளா சரக்கு விலையையும் ஏத்தீட்டியே ........பீப்.............பீப்....உன் மோரை கொண்டுபோய் ....பீப்.............பீப்........பீப்.............பீப்........பீப்.............பீப்........பீப்.............பீப்........பீப்.............பீப்....ஊத்து....பீப்.............பீப்........பீப்.............பீப்....

அங்கு இருந்த ஒரு ரத்தத்தின் ரத்தம் சட்டையை பிடித்து பெருசை சிறிதுதூரம் தள்ளி கொண்டுபோய் விட்டு வந்தார் ..
இதே சம்பவம் உடன்பிறப்பின் பந்தலில் நடந்திருந்தால் அந்த பெருசின் நிலை என்னவாகி இருக்கும் என்று நினைத்தேன் விடை தெரியவில்லை ....

***********************************************************************************************************************


அனுபவம் மூணு

நிறையமுறை சாகசபயணம் செய்திருக்கிறேன் . ஆனால் என் வாழ்க்கையில் நான் செய்த மிக பெரிய சாகச பயணமாக நான் கருதுவது குடித்துவிட்டு மட்டை ஆன நண்பனை வீடுவரை பத்திரமாக கொண்டு வந்து சேர்த்தது தான் .
என்ன திரிலிங் என்ன சேசிங் .... அந்த நண்பர் சம்மதித்தால் அந்த சாகச பயணம் பற்று ஒரு பதிவு வரலாம் பார்ப்போம்
என்ன சொல்கிறார் என்று ....................


 

Monday, February 27, 2012

இவர்கள் எல்லாம் பிரபலபதிவர்கள் ---காலகொடுமை

v
இந்த பதிவு சும்மா ஜாலிக்காக ..யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் சத்தியமாக நமக்கு கிடையாது ..
இதில் வரும் ஒவ்வொரு படமும் ஏதாவது ஒருவிதத்தில் பிரபல பதிவர்களை ஞாபகபடுத்தும் ...
எந்த படம் யாருக்கு பொருந்தும் என்று நீங்கள் தான் சொல்லவேண்டும் .
பதிலை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் ..

  
இந்த பதிவர் எது கிடைத்தாலும் சாப்பிடுவார் . அப்புறம் அதுக்கு ஒரு பதிவு போட்டு நம்மள இம்சை பண்ணுவார் .


  
 நம்பர் ஒன் பதிவர் எந்த சூழ்நிலையிலும் பதிவு எழுதுவதை விடமாட்டாரு ..
அண்ணா உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவு இல்லைங்கலானா ?


  
எந்த பாதை எங்கே போகும்ன்னு அவருக்கே தெரியாது .( பாவம் அவரே கன்பீஸ் ஆயிட்டாரு )


  
வம்பு பண்றது இவருக்கு ரொம்ப  பிடிக்கும் அதுக்காக எங்க வம்பு பண்ணணுமோ அங்கதான் பண்ணனும் இல்லைன்னா இப்படிதான் டர்ர் ஆகா வேண்டியதுதான் .
  
இவரு லேப்டாப் வச்சிருக்காராம் அதுக்கெல்லாம் ஒரு பதிவு போடுவாரு .
அண்ணே லேப்டாப் இவ்ளோ பெருசா இருக்கே அப்புறம் அருவா வைக்க அங்க இடம் இருக்கா?
  
தம்பி எல்லாத்தையும் மாத்தி யோசிக்க கூடாதுப்பா கிறுக்கன்னு சொல்லிடுவாங்க ........
  

இந்த பதிவர் மிகவும் ரசிக்கும் ஒரு இடம் .இவர் பதிவுகளில் பவர் ஸ்டாருக்கு பிறகு அதிகம் இடம்பெறுவது இதுதான் .
  


என்னதான் ஒயின்ஷாப் ஓனராக இருந்தாலும் அதுக்காக இப்படியா ? தம்பி இந்த வயசுக்கு இது கொஞ்சம் அதிகம்தான் .
  
இந்த பயபுள்ள அநியாயத்துக்கு யோசிக்குது பாரேன் ..ஆனா பண்றது எல்லாம் கோமாளித்தனம் ......
  
இந்த படத்தை நல்லா பாருங்க விக்கல் எடுத்த தக்காளி மாதிரி இருக்கும் ......
  
இந்தியாவின் இளவரசர் அப்படீன்னு நினைப்பு . அண்ணே அரசியல்ல உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு ஆனா அந்த உறுப்பினர் கார்டை மட்டும் புதுபிச்சிருங்க போதும் ...
  


நெஞ்சை நக்கீட்டீங்க  போங்க ....
  
இதுக்கு மட்டும் எந்த க்ளூவும் கிடையாது நீங்களே கண்டு பிடிங்க .
  
எல்லை  மீறி போயிகிட்டுருக்க நீயி .எல்லை  மீறி போயிகிட்டுருக்க நீயி .இந்த கொசு தொல்லை தாங்க முடியல .
இது பிரபல பதிவர் எல்லாம் இல்லைங்க . ஆனா எல்லா பதிவுலயும் வந்து விளம்பரம் பண்ணிட்டு போயிடும்
**************************************************************
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்
  
இந்த போண்டா கோழிக்கு மட்டும் எந்த துப்பும் குடுக்க வேண்டிய அவசியம் இல்லை .
கண்டிப்பா எல்லாரும் கண்டு பிடிச்சிடுவாங்க . இருந்தாலும் சொல்றேன் .
இந்த கோழியை பெப்பர் போட்டு எத்தனை முறை வருத்தெடுத்தாலும் நல்லாதான்பா இருக்கு ...
-------------------------------------------------------------------------------------------------





டிஸ்க்கி :- பதிலை பின்னூட்டத்தில் அமைதியான முறையில் தெரியபடுத்த விரும்புபவர்கள் தெரிய படுத்தலாம்
அல்லது என்னை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று துடிப்பவர்களும் இதில் கலந்துகொள்ளலாம் .





Thursday, January 19, 2012

மேதை படம் பார்த்த மாமேதைகள்

v
  
                                       I am back
இந்த பொங்கலை வாழ்கையில் மறக்க முடியாத தினம் ஆக்கிய நண்பர்கள் பிரபா மற்றும் சிவகுமாருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ------ஏன்ப்பா நான் சரியாதான் பேசுறேனா?

பொங்கலுக்கு முந்தைய நாள் நான் குத்துமதிப்பா போதையில் இருக்கும் போது . பிரபா மற்றும் சிவாவிடம் அவர்களுடன் படத்திற்கு வருவதாக வாக்கு குடுத்து தொலைத்துவிட்டேன் .அதன் வீரியம் எனக்கு அப்போது தெரியாது .காலையில் பிரபா செல்லியவுடன்தான் எனக்கு புரிந்தது மேதை படம்பார்க்க நான் ஒத்துகொண்ட விஷயம்  . ராத்திரி கொஞ்சம் ஓவர்தான் போல  ------ஏன்ப்பா நான் சரியாதான் பேசுறேனா?

இருந்தாலும் குடுத்த வாக்கை காப்பாற்ற எண்ணி கடமை வீரனாக அவருடன் கிளம்பினேன் .காலையில் இருந்தே சிவா போன் மேல போன் போட்டு எழுந்தாச்சா? பல்லு வேளக்கியாச்சா? ஆயி போயாச்சா ? சட்டை போட்டாச்சா? என்று எல்லாத்தையும் விசாரித்து கொண்டிருந்தார் . பாவம் அந்த புள்ள டிக்கட் எடுக்க அதிகாலை எழுந்து தியேட்டர் வாசலில் போயி நிக்குது ------ஏன்ப்பா நான் சரியாதான் பேசுறேனா?


  

 பொங்கல் வாழ்த்து சொல்ல என் நண்பனிடம் இருந்து அழைப்பு வந்தது . பேச்சுவாக்கில் இன்னைக்கு என்ன ப்ரோக்ராம் என்று கேட்டான் . நானும் சாதாரணமாக மேதை படம் பார்க்க போகிறேன் என்றேன் .
மறுமுனையில் நீண்ட நிசப்தம் . பிறகு மெதுவானகுரலில். ஏன் என்ன ஆச்சி வீட்டில் எது பிரச்சனையா ? மனசு ஏதும் சரியில்லையா ? நீ உடனே புறப்பட்டு என் வீட்டுக்கு வந்திரு எதுவாக இருந்தாலும் நேரில்  பேசி கொள்ளலாம் அவசரபட்டு எந்த தவறான முடிவும் எடுக்காதே என்று சொல்லிக்கொண்டே போனான் . எனக்கு ஒன்றும் புரியவில்லை------ஏன்ப்பா நான் சரியாதான் பேசுறேனா?

ஒருவழியாக படம் ஓடும் கிருஷ்ணவேணி திரை அரங்கை  வந்து அடைந்தேன். அங்கே சிவா திரை அரங்கை சுற்றி சுற்றி போட்டோ எடுத்து கொண்டிருந்தார் . வண்டியை நிறுத்திவிட்டு தியேட்டர் உள்ளே நுழைந்தோம் அங்கே நான் கண்ட காட்சி ....ஆங்கிலபடத்தில் வரும் நடைபினங்களை போல் வெறித்த பார்வையுடன் எங்களை எல்லோரும் உற்று பார்த்துகொண்டிருந்தார்கள் . அனைவரும் நாற்ப்பது ஐம்பதை கடந்தவர்கள் எங்களை அவர்கள் விநோதமாக பார்ப்பது எனக்கு சங்கடமாக இருந்தது. ஏதோ ஷக்கீலா படத்திற்கு வந்த எலிமெண்ட்ரி ஸ்கூல் பையனை பார்ப்பது போல் இருந்தது .என் நண்பன் ஏன் அப்படி போனில் பேசினான் என்று எனக்கு லேசாக புரிய ஆரம்பித்தது அனைவரும்  ஏதோ விதத்தில் வாழ்க்கையை வெறுத்தவர்கள் என்று நினைக்கிறேன் தங்களை ரட்சிக்க ஒரு நல்ல தலைவனை தேடி தியேட்டர் தியேட்டராக போவார்கள்  போலும் ------ஏன்ப்பா நான் சரியாதான் பேசுறேனா?

  
                                   ராமராஜனின் தீவெறி ரசிகன்

பிரபா மட்டும் ஒரு தேனியின் சுறுசுறுப்போடு சுற்றிகொண்டிருந்தார் . கேட்டை திறந்தவுடன் முண்டியடித்து அனைவரையும் வயதானவர்கள் என்றுகூட பாராமல் ஏறி மிதித்து முதல் ஆளாக டிக்கட் எடுத்துகொண்டு வந்து அதை  காட்டும் போது பிரபா முகத்தில் ஒரு ஒளியை பார்த்தேன் . நித்தியானந்தா போஸ்டரில் அவரது சிஷ்ய கேடிகள் வரைவார்களே அதை விட பிரகாசமான ஒளியை அன்று பிரபா முகத்தில் பார்த்தேன் ------ஏன்ப்பா நான் சரியாதான் பேசுறேனா?


  
        அனைவரையும் மிதித்து பிரபா முன்னேறிய காட்சி

படம் ஆரம்பித்தவுடன் ஆரத்தி எடுக்கும் ரசிகனை நான் ஆச்சரியமாக பார்த்துகொண்டிருந்த போது .என் அருகில் இருந்தவர் வினோதமான  ஒலி எழுப்பி சிரித்து கொண்டிருந்தார் . என்னை சுற்றி என்ன நடக்கிறது என்று புரியவில்லை .பின்னால் திரும்பி பார்த்தேன் அங்கே ஒருவர் இந்தியன் டாயலட்டில் இருப்பது போல் சீட்டுக்கு மேலே குத்த வைத்து அமர்ந்திருந்தார் .படம் முடியும்வரை அவர் அப்படிதான் இருந்தார் . பிரபாவிற்கு அருகில் இருந்தவர் எம்.ஜி.ஆர். போட்டோவை திரையில் காட்டும் போதெல்லாம் கைதட்டிகொண்டிருந்தார் ------ஏன்ப்பா நான் சரியாதான் பேசுறேனா?
       
குணா படத்தில் கமல் கதாநாயகியிடம் லட்டு வாங்க போகும் போது என்ன மனநிலையில் இருந்தாரோ அதே போன்றதொரு நிலையில் தான் நானும் இருந்தேன் .அதனால் படத்தைப்பற்றி விமர்சனம் எதிர்பார்ப்பவர்கள் இங்கே செல்லவும்   அது முடியாதென்றால் இங்கே செல்லவும் இல்லை என்றால் எங்கேயோ போகவும் நான் இந்த படத்திற்கு விமர்சனம் எழுதும் அளவுக்கு இன்னும்  பக்குவபடவில்லை ------ஏன்ப்பா நான் சரியாதான் பேசுறேனா?

  
                   மேதையை இயக்கிய மாமேதை

படத்தின் இடைவேளையின் போது இந்த படத்தின் இயக்குனர் சரவணன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது .
எங்களோடு கைகுலுக்கி கட்டிபிடித்து சிறிது  நேரம் பேசி கொண்டிருந்தார் . அதை பற்றி பின்னர் பதிவிடுகிறேன் .
படம் முடியும் வரை இருந்து பார்த்துவிட்டுதான் போகவேண்டும் என்று அன்புகட்டளை போட்டார் .
இந்த படத்தின் க்ளைமாக்ஸ் எந்த நாட்டு படத்திலும் எடுக்காதது . அம்பேத்காருக்கு தோன்றாத ஒரு புதுவிதமான சிந்தனை இயக்குனருக்கு தோன்றி உள்ளது பாராட்ட படவேண்டிய விஷயம். வில்லன்களுக்கு நீதிபதி குடுக்கும் தண்டனை  இந்தியன் பீனல் கோடு மட்டும் அல்லாது ஜெர்மன் ,இத்தாலி,பிரான்ஸ்,டென்மார்க்,பங்களாதேஷ்,அமேரிக்கா என்று அத்தனை நாட்டு கோடுகளும் சிந்திக்க வேண்டிய புதுமை
அதை நீங்கள் திரையில்தான் பார்க்கவேண்டும் ------ஏன்ப்பா நான் சரியாதான் பேசுறேனா?

படம் பார்த்து மூன்று நாள் ஆகியும் பதிவிட ஏன் லேட்டு என்று கேட்கக்கூடாது .இரவில் நான் திடீர் திடீர் என்று அலறுவதாக வீட்டில் சொல்கிறார்கள் .எனக்கு வித்தியாசமாக ஒன்றும் தெரியவில்லை நான் முன்பை விட ஆனந்தமான மனநிலையில்தான் இருக்கிறேன். நீங்களும் இந்த படம் பார்த்து பரவசநிலை அடையுமாறு அன்போடு கேட்டுகொள்கிறேன் ------ஏன்ப்பா நான் சரியாதான் பேசுறேனா?


Popular Posts