என் முதல் கணணி அனுபவம் என்கிற பெயரில் பலரும் எழுதி தள்ளுகிறார்கள்.சரி நம்மளையும் எழுத ஏதாவது ஒரு பக்கி கூப்பிடும் அப்போ எழுதலாம் என்று இருந்தேன். ஹம் ஹம் ......ஒரு பய சீண்டலையே ..
அதுக்காக அப்படியே விட்டிட முடியுமா . இதோ என் முதல் கணணி அனுபவம்.
+1னில் வேறு வழி இல்லாமல் எனக்கு ஒதுக்க பட்ட பாடம் கம்பியுட்டர் சயின்ஸ். வெந்ததை தின்னுட்டு விதியேன்னு கிளாசுக்கு போய் கிட்டு இருந்தேன் . கொஞ்சம் கூட என்னை அந்த பாடம் ஈர்க்கவில்ல . ப்ரேக்டிகள் கிளாசுக்கு எங்கள் வகுப்பறையில் இருந்து லேபிற்கு வருசையாக அழைத்து செல்வார்கள் .அப்போது அந்த வரிசையில் இருந்து சில கருப்பு ஆடுகள் தனியாக பிரிந்து வேறு ஒரு பாதையில் போய் கொண்டு இருக்கும். அந்த கருப்பு ஆடுகளில் முதன்மையான ஆடு நான் தான் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன .?
பின்பு கல்லூரியில் நான் எடுத்தது எலக்ட்ரானிக்ஸ் & கம்யுனிகேஷன் . இதில் மைக்ரோ பிராசசர் என்று ஒரு பாடம் வரும். நான் ஹாஸ்டலில் தங்கி படித்ததால் அப்போது வீட்டு நியாபகம் அடிகடி வரும் . குறிப்பாக இந்த பீரியடில் நான் காலச்சக்கரத்தில் பின்னோக்கி நகர்த்தப்பட்டு தொட்டிலில் படுத்துஇருப்பதாகவும்என் தாய் தாலாட்டு பாடுவதை போலவும் இருக்கும்.
இப்போது கூட சரியாக தூக்கம் வராத வேளைகளில் சாரதா மேடம் பாடம் நடத்துவதாக கற்பனை செய்துகொண்டால் பொதும் .
கல்லூரி ப்ரோஜக்ட் எடுத்த பொது என் நண்பர்கள் கம்ப்யுடர் செய்யலாம் என்ற யோசனையை கொலை வெறியுடன் எதிர்த்து வாதாடி டி.வி.ட்ரான்ஸ் மீட்டர் & ரிசிவர் செய்ய வைத்த புண்ணியம் என்னையே சாரும் .
இப்படியாக சென்று கொண்டிருந்த என் வாழ்க்கையில் திடீர் என்று டார்ச் அடித்தது என் நண்பன் பெரோஸ் கான் . புதுசா பிரவ்சிங் செண்டர் போட்டிருக்காங்க வா போயி பார்க்கலாம் என்று கூட்டி போனான் .
அங்க பார்த்தா பசங்களை விட பொண்ணுங்க எண்ணிக்கை அதிகமாக இருந்தது . பெரோஸ் சொன்னான் மாப்பிள டெய்லி டியுஷன் போற மாதிரி இங்க ஒரு மணி நேரம் வந்துட்டு போகலாம்ன்னு சொன்னான் .பட் அந்த டீலிங் எனக்கு பிடிச்சிருந்தது ஒத்துகிட்டேன் .
ஆரம்பத்தில் ஒன்னுமே புரியல எந்த சைட்டிற்கு போனாலும் மெயில் ஐடி கேக்குது .அப்போ கடை ஓனர் எனக்கு ஒரு யாஹு மெயில் ஐ.டி. உருவாக்கி தந்தார் . தினமும் வந்து மெயில் செக் வேறு பண்ணுவேன் . ஒரு மெயிலும் வந்திருக்காது . கடுப்புல கடைகாரரிடம் இந்த இளநியில தண்ணி வரல மாதிரி எனக்கு எந்த மெயிலும்வர மாட்டுது என்று கம்ப்ளைன்ட் வேறு பண்ணினேன்னா பார்த்துக்கங்க .
நாளையில் இருந்து உனக்கு நிறைய மெயில் வர மாதிரி பண்றேன் என்று சொன்னவர். அதே போல் செஞ்சிட்டார் . ஒரு நாளைக்கு குறைந்தது 200 மெயிலாவது வரும். அதில் பெரும்பாலானது கேப்டன் டி.வி. மற்றும் வசந்த் டி.வி. யில் ஒளிபரப்ப படும் நள்ளிரவு சமாச்சாரங்கள்தான் ....
சரி இப்போது நாம் அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டிய நேரம்வந்துவிட்டதாக உள் உணர்வு சொல்லவே. அப்பா கையில் காலில் விழுந்து ஒரு கம்பியுடர் வாங்கினேன் . முதல் வேலையாக அதை பிரித்து போட்டேன்.கொஞ்சம் கூட பயப்படலையே .. அக்குவேறாக ஆணி வேறாக பிரிச்சி மேஞ்சு இது எப்படி வேலை செய்கிறது என்பதை தெரிந்து கொண்டேன்.
நான் படித்தது எலெக்ட்ரானிக்ஸ் என்பதால் இது சுலபமானதாகவும் எனக்கு ஏற்ற வேலையாகவும் தெரிந்தது .
அப்போ ஆரம்பிச்சது இப்போ அதுவே என் தொழிலாக மாறிவிட்டது எங்க ஏரியாவில் முதன் முதலில் கம்ப்யுடர் சேல்ஸ்&சர்விஸ் செண்டர் ஆரம்பித்தது நான் தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இந்த ஆண்டு புதிதாக திறந்த என் அலுவலகத்திற்கு லோகோ டிசைன் செய்து குடுத்தது அருமை நண்பர் வீடு சுரேஷுகுமார் ...........

17 கருத்து சொல்றாங்க:
செம டைட்டிலாச்சே.. சீக்கிரம் நானும் இதே தலைப்பில போஸ்டு போட்டிடவேண்டியதுதான் :)
ஆனா ஒன்னு பாஸ்.. பொண்ணு சைட் அடிக்கப்போய் வாழ்க்கையில முன்னேறின ஒரே ஆள் நீங்களாத்தான் இருப்பீங்க :P
நல்ல டீலிங் ...!
அன்பின் அஞ்சா சிங்கம் - தொடங்கிய தொழில் நன்கு முன்னேறி - வெற்றி பெற்று சிறப்புடன் நடைபெற நல்வாழ்த்துகள் =- நட்புடன் சீனா
மச்சி கலக்கல்...
வாழ்க்கை கம்ப்யூட்டரில் என்பது சந்தோசமான செய்தி....
நம்மளும் ஒண்ண போட்ர வேண்டியதுதான்.... போஸ்ட்ட சொன்னேன்....
தொழிலில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அஞ்சா சிங்கம்.
வாழ்த்துக்கள்
வெற்றி பெற வாழ்த்துக்கள்...
-Maakkaan.
பொண்ணுங்க எண்ணிக்கை அதிகமாக இருந்தது . பெரோஸ் சொன்னான் மாப்பிள டெய்லி டியுஷன் போற மாதிரி இங்க ஒரு மணி நேரம் வந்துட்டு போகலாம்ன்னு சொன்னான் .பட் அந்த டீலிங் எனக்கு பிடிச்சிருந்தது//
டீலிங் பிடிச்சுது சரி, ஃபிகர் மாட்டுச்சா அதை சொல்லுய்யா முதல்ல.
உங்களை யாரும் காதலிச்சு என்னத்தை சாதிச்சேன்னு கேட்க முடியாது.
//எங்க ஏரியாவில் முதன் முதலில் கம்ப்யுடர் சேல்ஸ்&சர்விஸ் செண்டர் ஆரம்பித்தது நான் தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்//
ஓ... உங்க ஏரியாவில் இருக்கிற நல்ல கம்பியூட்டரை ரிப்பேர் செய்து கொடுப்பீர்களா? ஹீ.ஹீ -
//கல்லூரி ப்ரோஜக்ட் எடுத்த பொது என் நண்பர்கள் கம்ப்யுடர் செய்யலாம் என்ற யோசனையை கொலை வெறியுடன் எதிர்த்து வாதாடி டி.வி.ட்ரான்ஸ் மீட்டர் & ரிசிவர் செய்ய வைத்த புண்ணியம் என்னையே சாரும் .//
ஒரு கம்ப்யூட்டர் செய்யிற அளவுக்கு இருந்தவங்கள டிஸ்கரேஜ் பண்ணிடீங்க... ச்சே.. :-)
நல் வாழ்த்துக்கள்..
எல்லாம் சரி , அந்த பெரோஸ் கான் எப்படி இருக்கிறார்.
அஜீமும்அற்புதவிளக்கும் said...
எல்லாம் சரி , அந்த பெரோஸ் கான் எப்படி இருக்கிறார்//
ஒரு விபத்தில் அவர் இறந்துவிட்டார் :-(
நல்ல கம்ப்யூட்டர் அனுபவம்...!
பிளாக்கர் தளத்தில் பலரும் வலைப்பதிவுகளை எழதி வருகின்றனர். ஆனால் வலைப்பதிவுகளைப் படிப்பவர்கள் தமிழில் மறுமொழி இட வசதிகள் இல்லை. தமிழ்மறுமொழிப்பெட்டி அமைப்பதன் எளிமையாக தமிழில் கருத்திட முடியும். "தமிழ் மறுமொழிப் பெட்டி" அமைப்பது எப்படி என்பதை எளிமையாக விளக்குகிறது இப்பதிவு. பிளாக்கர் தள வலைப்பதிவர்களுக்கு இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
மேலதிக தகவல்களுக்கு சுட்டியைச் சொடுக்கி வாசிக்கவும்.
பிளாக்கர் தளத்தில் தமிழ் மறுமொழிப் பெட்டி அமைப்பது எப்படி?
Post a Comment