1980 முதல் 90 வரை காதலுக்கு இருக்குற பவரை பத்தி ஏகப்பட்ட படங்கள் வந்திருக்கு. குறைந்த பட்சம் 300 மெகாவாட் மின்சாரமாவது காதலை வைத்து எடுக்க முடியும். கூடங்குளம் இல்லை என்றால் என்ன நம்ம கிட்ட காதல் இருக்கு என்று அப்போதைய இளைஞ்சர்கள் நம்பவைக்க பட்ட காலம் .
இதில் நாக்கை அறுத்த காதல், மூக்கை அறுத்த காதல் , என்று பல வெரைட்டிகள் வேறு உண்டு .
இப்படி அப்பாவி தனமாக போய் கொண்டிருந்த சினிமா கி.பி.2000 ஆண்டுக்கு பின்னால் காசு ,பணம் , துட்டு ,மணி,மணி, என்று தன்னை புதிப்பித்து கொண்டு வேறு கோணத்தில் பயணிக்க தொடங்கியது .
ரோஜா என்று ஒருபடம் வந்து மணிரத்தினத்தை உச்சத்திற்கு கொண்டு போனதே நினைவு இருக்கிறதா ? அதே படத்திற்கு கொஞ்சம் ஸ்ப்ரே அடித்து பவ்டர் போட்டு அலங்காரம் பண்ணி வேறு ஒரு பெயர் வத்து உங்க கிட்ட காசை வாங்கி உங்க டேபளில் பரிமாறி இருக்கிறார்கள் .
தனுஷ் :- குறை சொல்ல முடியாத நல்ல நடிகன் சொன்னதை எல்லாம் சிறப்பா செய்கிறார் . இந்த படத்திற்கும் கடுமையாக உழைத்து வேறு இருக்கிறார் பாவம் .
எவ்ளவோ விஷயங்கள் சொல்ல கூடிய சாத்தியம் இருந்தும்.அது மீனவர்கள் வாழ்வாதார பிரச்சனையாக இருக்கட்டும் . அல்லது ஆப்ரிக்க எண்ணெய் சுரண்டல் பிரச்சனையாக இருக்கட்டும். சாத்தியம் இருக்கும் கலத்தை எல்லாம் வீனடித்திருக்கிரார்கள்.
ஒரு பாரதிராஜா படத்தை மணிரத்தினம் டைரெக்ட் செய்த மாதிரி ஒரு எபெக்ட் கடற்கரையை காட்டி காதலர்களை லாங் ஷாட்டில் கொண்டுபோகும் போது ..........ஏ பிலிம் பை பாரதிராஜா என்று போடுவார்களோ என்று எதிர் பார்த்தேன் ஆனால் ஏ பிலிம் பை பரத்பாலா என்று போட்டு முடித்து விட்டார்கள் .
இந்த படத்தின் மூலம் சமுதாயத்திற்கு அவர்கள் சொல்லும் ஒரே ஒரு விஷயம் என்ன வென்றால் யாரையாவது காதலிச்சி தொலைங்க உங்களால் சோறு தண்ணி இல்லாமல் ஒரு 30 நாள் உயிரோடு இருக்க முடியும் .
7 கருத்து சொல்றாங்க:
5 மாதத்திற்கு பிறகு பதிவு எழுத வைத்த படம் சே.. காதல் வாழ்க...!
Welcome back...Happy to see your blog for the long time...:-)))
-Maakkaan.
என்னப்பா ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமா குழப்புறீங்க?
நான் பாடல்களுக்காகவே திங்கள் செல்லலாம் என்று முடிவு செய்து விட்டேன்
@சக்கர கட்டி said
எப்படியோ போங்க நம்ம ஊர் பயலுக சொன்னா எங்க கேக்குறான் ..........
அப்போ டிவிடியில் (மட்டும்) பார்க்கலாம் என சொல்றீங்க, !
அப்படியா........
Post a Comment