Sunday, January 20, 2013

சின்மயி விவகாரம் -புத்தக விமர்சனம்

v

இந்த புத்தகத்தை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் .
சென்ற வாரம் கண்காட்சிக்கு செண்டிருந்த போது இன்னும் இந்த புத்தகம் கடைக்கு வரவில்லை என்றதும் மிகுந்த ஏமாற்றம் அடிந்திருந்தேன் .
ஆனால் நேற்று இது கிழக்கு பதிப்பகத்தில் பார்த்ததும் வாங்கிவிட்டேன் .

ஆசிரியர் விமலாதித்த மாமல்லன் வயது 52 என்று சொல்கிறார் ஆனால் அவர் எழுத்தை பார்த்தால் மிகவும் இளமையாக இருக்கிறது .
கொஞ்சம் கூட தயவு தாட்சண்யம் பாராமல் இந்த விவகாரத்தை மிக நேர்மையாக அலசியிருக்கிறார் .
சின்மயி அவர் தாயார் மட்டும் அல்ல எழுத்தாளர்கள் ஷோபா ஷக்தி ,அசோகமித்திரன் ,சாருநிவேதா ஜெயமோகன்,என்று அனைவர் நெற்றியிலும் ஆணி அடிக்கிறார்.
அதுவும் இவர் சாருவை காய்ச்சி எடுக்கும்போது நம் மனசுக்குள் ஒரு உற்சாக பட்டாசு வெடிக்கிறது.இந்த விவகாரத்தில் மறைந்து இருக்கும் நுண்ணரசியல் மற்றும் மேட்டு குடி  மனப்பான்மை.எப்படி இவர்களுக்காக சட்டம் வளைந்து குடுத்து ஆலோசனையும் சொல்கிறது .சின்மயி மற்றும் அவர் தாயின் மனநிலையை உளவியல் பூர்வமாக மிக விரிவாக விவரிக்கிறார்.

சின்மயி செய்தது  வினை . ராஜன் செய்தது எதிர்வினை  எதிர்வினைக்கு மட்டும் தண்டனையா ? இதில் ஒரே ஒரு ட்விட்க்காக மாட்டிகொண்ட சரவணபெருமாள் மற்றும் அழிக்கபட்ட ட்விட்கள் என்று எல்லாவற்றையும் ஆதார பூர்வமாக அடுக்குகிறார்.
சின்மயியின் தாயாரின் ரெட்டை வேடம்  பல இடத்தில்  ஆதார பூர்வமாக கலைக்க படுகிறது . வவ்வால் ஏற்க்கனவே அவர் பதிவில் சுட்டிக்காட்டி இருந்தார். இசையும் வசையும் -1  இசையும் வசையும்-2 
ஒரு பிராமினான இவரே பார்ப்பனர்களை கடுமையாக விமர்சிக்கிறார்.
இது விற்றாலும் விற்காவிட்டாலும் கவலை இல்லை இதை புத்தகமாக கொண்டுவந்து தமிழக முதல்வருக்கும் . போலீஸ் கமிஷ்னருக்கும் ஒன்று அனுப்பிவைப்பேன் அப்போதுதான் இந்த குடும்பத்திடம் இருந்து தமிழ்நாட்டில் பல குடும்பங்கள் தப்பிக்கும் இது என் சமுதாய கடமை என்று சொல்கிறார் .

இதில் நமக்கு நன்கு அறிமுகமான பலர் வருகிறார்கள்.சி.பி.செந்தில்குமார் யுவகிருஷ்ணா ,அதிஷா (புத்தகத்தில் கூட இந்த பெயர்கள் இணைபிரியாமல்   வருகிறது) வால்பையன் என்று .
சின்மயி ஆதரவாளரான மாயவரத்தான் செய்கை எல்லாவற்றியும் ஸ்க்ரீன் ஷாட்டுடன் அம்பலபடுத்துகிறது இந்த புத்தகம். மாயவரத்தானை சின்மயி வளர்க்கும் நாய் குட்டியுடன் ஒப்பிட்டு ஒரு படம் இருக்கிறது பாருங்கள்.
எப்படித்தான் யோசிக்கிறார்களோ குபுக் சிரிப்பை வரவழைத்தது .  

யாருக்கு தேவையோ இல்லையோ பதிவர்களுக்கு கண்டிப்பாக இந்த புத்தகம் அவசியத்தேவை. சில ஜாதிவெறியர்கள்களிடம் எச்சரிக்கையுடன் உறையாட வேண்டிய அவசியத்தை நமக்கு உணர்த்துகிறது .
இப்போது புதிது புதிதாக வன்னிய மைந்தன் , தேவேந்திர திலகன் , என்று கிளம்பி இருக்கிறார்கள். இவர்களின் ப்ரெண்ட் ரிக்குவெஸ்ட்களை எப்போதும் நான் ஏற்று கொள்வதில்லை. புறக்கணிப்புதான் நல்லது.

ஆக மொத்தம் இணையத்தில் இயங்கும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். சும்மா ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரவுண்டு கட்டி அடித்திருக்கிறார் .
   

30 கருத்து சொல்றாங்க:

”தளிர் சுரேஷ்” said...

அடடே! சூடான விவகாரம் பற்றிய சூடான புத்தகமா? விரிவாக விமரிசத்தமைக்கு மிக்க நன்றி!

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கம்,

நம்ம பதிவையும் சுட்டியதற்கு நன்றி!

வலைப்பதிவில் பலரும் பேசத்தயங்கிய சூழலில் அப்பதிவை எழுதினேன், இன்னும் கூட கிண்டி இருப்பேன், நேரமின்மையே காரணம், மேலும் மாமல்லன் அளவுக்கு டெடிகெட்டட் ஆக வேலை செய்ய நம்மால் ஆகாது.

அம்மா ,பொண்ணின் அசட்டுத்தனத்துக்கு ஆதாரம் தேடி எங்கும் அலையவேண்டாம் அவங்க எழுதின பதிவுகளை படிச்சாலே புரிஞ்சுக்கலாம் :-))

என்ன ஒன்னு எல்லாம் ஆங்கிலத்துல எழுதிட்டாங்க ,அதான் இம்மாம் நாளா தப்பிச்சிட்டாங்க, தமிழில் மட்டும் எழுதி இருந்தாங்க எல்லாம் சேர்ந்து காரி துப்பி என்னிக்கோ இணையத்தை விட்டு தொறத்தி இருப்பாங்க, இப்பவும் சில விளக்கெண்ணைகள் அவாளுக்காக பேசிட்டு அலையுறதை நினைச்சால் சிரிப்பாத்தான் இருக்கு, இதுல ஒரு ஃபிராட் நல்லா குளிர்க்காய்ந்தான் ,அவன் ஃபிராட் தனத்தை எல்லாம் தோண்டினால் பயங்கரமா நாறும் :-))

மக்கள் பிராபல்யம் என கண்ணை மூடிக்கிட்டு பின் தொடறக்கூடாது என்பதற்கு இச்சம்பவம் ஒரு பாடம்.

Unknown said...

இவர்களின் ப்ரெண்ட் ரிக்குவெஸ்ட்களை எப்போதும் நான் ஏற்று கொள்வதில்லை. புறக்கணிப்புதான் நல்லது.
//////////////////////
யோவ்...!மாப்பு இவங்களை பிரண்ட்டா இல்லாம, இவங்க எடுக்கிற வாந்திய படிக்க ஆப்சன் இருக்கு. அதைக் கொடு! அப்பொழுதுதான் ஒரு நாளைக்கு சேர்த்து வச்சு கிழிக்க முடியும்!

Unknown said...
நானும் படிக்க வேண்டுமே!

குலசேகரன் said...

price?

குட்டன்ஜி said...

புத்தக அறிமுகத்துக்கு நன்றி!

பட்டிகாட்டான் Jey said...

நைட்டோட நைட்டா படிச்சி முடிச்சிட்டிய செல்வின் :-)))

இதுல முக்காவாசி மாமல்லன் அவரோட பிளாக்லயும் எழுதி இருந்தார். இணையத்துல எழுதுனா 66A-வுக்கு வாய்ப்பிருக்குது.

புத்தகமா போட்டா அந்த மாதிரி சிக்கல் குறைவு :-))))

Unknown said...

அருமை செல்வின். நைட்டு வாங்கிய புத்தகத்திற்கு அதற்குள் அருமையான விமர்சனம், சூப்பர். அதே புத்தகத்தை நான் இன்று வாங்கினேன், எப்போது படிப்பேன் என்று தெரியாது. அதை விட சுவாரஸ்யமான புத்தகங்களை படித்த பிறகு தான் இந்த புத்தகத்திற்கு வருவேன் என்று நினைக்கிறேன்.

பால கணேஷ் said...

ஸிங்கம்! நான் இன்னும் இதை வாங்கலைப்பா. சின்மயி விவகாரம் எனக்கு மேலெழுந்தவாரியாத்தான் தெரியும். ஆழமா உண்மைகளைத் தெரிஞ்சுக்க விருப்பம். அவசியம் நாளைக்குப் போறப்ப வாங்கிப் படிச்சுப் பாத்திடறேன். ரொம்ப டாங்க்ஸு!

அஞ்சா சிங்கம் said...

@s suresh
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ..

அஞ்சா சிங்கம் said...

@ வவ்வால் நன்றி
உங்க உழைப்பும் என்ன சாதாரணமா.
நீங்க சொன்ன அந்த ஜந்துவை பற்றியும் இந்த புத்தகத்தில் கிழித்திருக்கிறார்கள்.
எல்லாவற்றியும் ஆதாரத்தோடு அடுக்கும் போது .
சின்மயியின் கோட்டை சீட்டுக்கட்டு போல் சரிகிறது .

அஞ்சா சிங்கம் said...

@ வீடு சுரேஸ்குமார்
எதுக்கு மாப்பு நமக்கு நாக்குல சனி .
நான் சும்மா இருந்தாலும் என் வாய் சும்மா இருக்காது . வாய் சும்மா இருந்தாலும் விரல் சும்மா இருக்காது .
மதவாதிகளை கூட சுலபமாக சமாளித்து விடலாம் . இது வெறி பிடித்த கூட்டம் நம்ம எனர்ஜி தான் வேஸ்ட் ஆகும் .

அஞ்சா சிங்கம் said...

புலவர் சா இராமாநுசம் said...
நானும் படிக்க வேண்டுமே!//

அவசியம் படிக்க வேண்டும் ஐயா ..

அஞ்சா சிங்கம் said...

குலசேகரன் said...

price?///

just 120 only ...........

அஞ்சா சிங்கம் said...

குட்டன் said...

புத்தக அறிமுகத்துக்கு நன்றி!///////////

வருகைக்கு நன்றி குட்டன் .

அஞ்சா சிங்கம் said...

@பட்டிகாட்டான் Jey

நமக்கு ஒரு புத்தகத்தை எடுத்தால் முடிக்காமல் கீழே வைக்க மாட்டேன் . தூக்கம் வரமாட்டுதுயா . இது ஏதும் வியாதியா ..........?

அஞ்சா சிங்கம் said...

@ ஆரூர் மூனா செந்தில்
படிங்க தலைவரே நேற்று உங்க பதிவை பார்த்து தமிழர் உணவு பற்றி நீங்கள் வாங்கிய புத்தகத்தின் விமர்சனம் என்று நினைத்துவிட்டேன் .
என்னடா நம்மளை விட வேகமாக் இருக்கிறாரே என்று .

அஞ்சா சிங்கம் said...

@ பால கணேஷ்
நன்றி அண்ணே

பாலா said...

விமர்சனம் என்பதை விட அறிமுகம் என்பது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன். சொல்ல துணிந்த அவருக்கு பாராட்டுக்கள். அறிமுகத்துக்கு நன்றி நண்பரே

Namasivayam said...

இலக்கிய வட்டத்திலிருந்து விலகி முப்பது வருஷம் ஆச்சு. இப்போ அங்க என்ன நடக்குதுன்னு தெரியல.முப்பது வருஷம் முன்னாடி இந்தி பிரச்சார சபைல ஒரு கருத்தரங்கம் நடந்தது.ஜே ஜே சில குறிப்புகள் --தலைப்பு. மாஸ்கோ மகாதேவன் தலைமை, அம்பை,ஜி.கேசவன் ஆகியோர் உரை.அப்போது ஞாநி யுடன் வந்த ஒரு பையன் கலாட்டா செய்து கொண்டு இருந்தான். என்னுடன் வந்த தோழர்களிடம் யாரென்று கேட்டேன்.அவர்கள் சொன்னார்கள்,கணையாழி க்ரூப் விமலாதித்த மாமல்லன் என்று.

சசிகலா said...

அவ்வளவு சீக்கரமா விமர்சனமா ?

Anonymous said...

உங்களுடைய பதிவை படிக்கும் பொது நம் மனசுக்குள் ஒரு உற்சாக பட்டாசு வெடிக்கிறது.
எமது வட்டத்துக்கு வந்து தங்கள் கருத்தை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம்.

HARIS
http://www.facebook.com/groups/charuvimarsagar/

Anand said...

இந்த புத்தகம் ஆன்லைன மூலம் கிடைக்குமா?

ராஜ நடராஜன் said...

தமிழகத்தில் புத்தக விழாவையெல்லாம் காணும் போது வாசக ரசனை இன்னும் ஆரோக்கியமாக இருப்பது மகிழ்ச்சிகரமாக இருக்கிறது.

மாமல்லன் குறிப்புகள் இணையம் கடந்தும் புத்தகமாக பரவுவது பிரபலத்துக்கான அவசர நீதி,பக்கசார்பு,66A போன்றவைகளை ஆராய ஒரு நல்ல துவக்கமாக கருதுகிறேன்.

ராஜ நடராஜன் said...

வவ்வாலின் இசையும்,வசையும்,பின்னூட்டங்களும் மீண்டுமொரு முறை மீள் பார்வை செய்தேன்.

அஞ்சா சிங்கம் said...

@ பாலா
ஆமாம் அப்படியும் போட்டிருக்கலாம் . நன்றி .

அஞ்சா சிங்கம் said...

@ Shivayam siva
வருகைக்கு நன்றி ஐயா ..
நீங்கள் அதே போல ஒரு கலாட்டாவை இந்த புத்தகத்திலும் காணலாம் .
சின்மயி முதல் குஷ்பூவரை யாரையும் விட்டு வைக்கவில்லை . குஷ்பூவிற்கும் ஜே .அன்பழகன்க்கும் நடக்கும் உரையாடல் மூலம் இருவருக்கும் உள்ள
அரசியல் அறிவை கூட சில ட்விட்கள் மூலம் அம்பலபடுதுகிறார். தான் சார்ந்திருக்கும் கட்சியின் கொள்கை கூட தெரியாதவர்கள் .

அஞ்சா சிங்கம் said...

Sasi Kala said...

அவ்வளவு சீக்கரமா விமர்சனமா ?

///////////////////////////////////////////////////////////

ஹி ஹி ..
உங்க கவிதை புத்தகத்திற்கு விமர்சனம் எழுத எனக்கு அருகதை இல்லை . உண்மையில் மிக அருமையாக இருந்தது ..
பாராட்டுக்கள் ..........

அஞ்சா சிங்கம் said...

@ HARIS
நான் ஏற்க்கனவே அங்க இருக்கேன்யா .:-)

அஞ்சா சிங்கம் said...

@ ராஜ நடராஜன்

கிட்ட தட்ட இந்த புத்தகம் வவ்வால் பாணி ஆராய்ச்சிதான் .
என்றாலும் இன்னும் ஆழமாக பல மர்மங்களை உடைத்திருக்கிறார் . லால்குடி விஷயம் படு கேவலம் .
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Popular Posts