Friday, August 24, 2012

தமிழ் பதிவர் சந்திப்புக்கு வர முடியாதவர்கள் என்ன செய்யலாம் !

v

சென்னைப் பதிவர் சந்திப்பு ஏற்பாடுஆகிவிட்டது. தமிழ்நாட்டில் இருக்கும் பதிவர்கள் பலர் கோலகலத்துக்கு தயாராகிவிட்டார்கள். ஆனால் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மத்தியக் கிழக்கு, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா மற்றும் உலகெங்கும் உள்ள பதிவர்களால் கலந்துக் கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் இருக்கின்றது. ஒரு விடயத்தில் நேரில் கலந்துக் கொள்ள முடியாவிட்டாலும் நாம் நமது உளப் பூர்வமான ஆதரவை (Solidarity)தெரிவிப்போம் அல்லவா. ஆனால் சற்றே ஒரு வித்தியாசமான யோசனை எனக்குத் தோன்றியது. இணையத்தில் உலாவும் நாம் எதாவது செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. 
பதிவர் சந்திப்பு நடக்கப் போகும் நாள் ஞாயிறு ( August 26, 2012 ), கலந்துக் கொள்ளப் போவது சுமார் 200 -500 வரையிலான பதிவர்கள். ஞாயிறு பலருக்கும் விடுமுறையாகவே இருக்கும் அல்லவா.  ஆனால் தமிழில் எழுதும் ஆயிரக் கணக்கான நாம் என்ன செய்யலாம்.
வீரராகவன் சம்பத் : குப்பையாக விரவிக் கிடக்கும் இணைய செய்திகளை வகைப்படுத்த வந்த ஒரு எளிய முறை தான் # பயன்பாடு. உங்கள் செய்தி எதைப் பற்றியது என்று இரண்டு மூன்று keywords இட்டு இணைப்பது போல. உதாரணத்திற்கு, இந்த பத்தியின #tamilblogger என்று வகைப்படுத்தினால், தேடுபவர்களுக்கு எளிதாகக் கிடைக்கும். நிறைய பேர் ஒரே குறியீட்டுச் சொல்லை ஒரே நேரத்தில் பயன்படுத்தினால், அந்தக் குறியீட்டை கண்டறிந்து Trending topics என்று "தலைப்புச் செய்தி" ஆக்கி விடலாம். நிறைய உதாரணங்களை நீங்கள் Twitter Timeline-ல் பார்த்திருப்பீர்கள்.
ட்விட்டர் வந்த பின் தான் # பயன்பாடு பரவலானது. தற்போது Google+ம் இதைப் பயன்படுத்தி வருகிறது.#ஐ சரியாக பயன்படுத்தினால், இணையம் வழி பல கூட்டு முயற்சிகளை நாம் மேற்கொள்ளலாம். அவை எல்லாவற்றிற்கும் அடிப்படை புரிதல் அவசியம். 

இருக்கவே இருக்கு ட்விட்டர். பதிவர் சந்திப்பு நடக்கும் அந்த நாளில் தயவு செய்து ட்விட்டரில் தொடர்ந்து ட்விட் மழை பொழிய வாருங்கள். உங்களுக்கான குறிச்சொல் ஒன்றையும் உருவாக்கி இருக்கின்றேன். 
#tamilbloggers
நிச்சயம் உங்களின் பேஸ்புக், ட்விட்டர், கூகிள் ப்ளஸ் நண்பர்களை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ட்விட்டரில் ட்விட் மழை பொழியும்படிக் வேண்டிக் கொள்ளுங்கள். நேரில் போகாவிட்டாலும் அவர்களுக்கான ஆதரவுக் குரலை ட்விட்டரில் கொடுப்போம். குறைந்தது இந்திய அளவிலாவது #tamilbloggers -ஐ trend செய்ய வைப்போம். 
நான் தயார் ! நீங்கள் தயாரா ? இந்தப் பதிவை நீங்கள் மீள்பதிவு செய்யவும், பேஸ்புக் உட்பட எதிலும் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கின்றேன். நன்றிகள் !!!
 
நன்றி இக்பால்செல்வன்
இவர் முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்போம் .
http://www.kodangi.com/2012/08/sypport-tamil-bloggers-conference-in-twitter.html

8 கருத்து சொல்றாங்க:

”தளிர் சுரேஷ்” said...

மிகச்சிறப்பான தொரு தகவல்! கண்டிப்பாக செய்யலாம்!
வாழ்த்துக்கள்!
இன்று என் தளத்தில்
அஷ்டமி நாயகன் பைரவர்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_24.html

கோவை நேரம் said...

கண்டிப்பா பண்ணலாம்...

Vijiskitchencreations said...

நல்ல பதிவு. அவசியம் கலந்துக்குவோம். ஞாயிறு அன்று டிவிட்டரில் சந்திக்கலாம். அதுவரைக்கும்.

http://vijiscreation.blogspot.com/

நாய் நக்ஸ் said...

செய்துடலாம்...ஆனா..அதுக்குன்னே வேற டிரண்ட்
ஆரம்பிப்பாணுக....

திண்டுக்கல் தனபாலன் said...

அவர் தளத்தில் படித்தேன்...

பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... (TM 2)

முட்டாப்பையன் said...

@ சிங்கம்
இன்று எங்கள் தளத்தில் உங்களுக்கு செம விருந்து.
சாப்பிட வரவும்.

முட்டாப்பையன் said...

@ சிங்கம்
இன்று எங்கள் தளத்தில் உங்களுக்கு செம விருந்து.
சாப்பிட வாருங்கள்.

ம.தி.சுதா said...

சகோ என் மெயிலுக்கு ஒரு தடவை வர முடியுமா?

mathisutha56@gmail.com

Popular Posts