Monday, August 20, 2012

பதிவர் மாநாட்டு தகவல்கள் (அறிய படங்களுடன்)

v
வரலாற்று சிறப்பு மிக்க அந்த மாநாடு இதோ பக்கத்தில் வந்து விட்டது ...

பதிவர்களின் புண்ணியத்தை வணங்கி கட்டிகொள்ளபோகும் மண்டபம் இதுதான் ..
முக்கிய குறிப்பு :-இங்கிருந்து உள்ளேசென்று ஒரு 25  அடி எடுத்து வைத்தால் சாப்டுற இடம் வந்திரும் ..


மண்டபத்தின் ஹால் இதுதான் கட்டி உருண்டாலும்  கலவரமே நடந்தாலும் . வெளியே யாருக்கும் தெரியாத அளவிற்கு பாதுகாப்பானது .இதன் கொள்ளளவு ஆரூர் . மூனா செந்திலை போல் ஒரு ஐநூறு பெயரை தாங்கும் அளவிற்கு வலுவானது என்று தெரிவிக்கிறார்கள் .
முக்கிய குறிப்பு :-இங்கிருந்து  ஒரு 20  அடி கீழே எடுத்து வைத்தால் சாப்டுற இடம் வந்திரும் ..வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானங்கள் பல எடுக்க போகும் விழா மேடை இதுதான் ..

முக்கிய குறிப்பு :-இங்கிருந்து  ஒரு 40  அடி கீழே எடுத்து வைத்தால் சாப்டுற இடம் வந்திரும் ..திரும்பிகிற பக்கம் எல்லாம் ஏசியோ..... ஏசி . கார் ஏசி கக்கூஸ் ஏசி ஒரே ஏசிதான் போங்க ....

முக்கிய குறிப்பு :-இது சாப்பிடுற இடத்திற்கு மிக அருகில் உள்ளது .இந்த இடம்தான் த்ரில்லிங்கான இடம் அடிச்சிக்காதீங்க அமைதியா பாருங்க ...
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
இதுதான் சாப்டுற இடம் ......


ஏற்ப்பாடு பெரியது என்பதால் வெளியூர் பதிவர்கள் தங்கள் வருகையை சீக்கிரமே தெரியபடுத்திவிட்டால் . உங்களை உபசரிக்க எங்களுக்கு சவுகரியமாக இருக்கும் ..


அதி முக்கிய குறிப்பு :- நக்கீரன் மாமா டக்கீலாவுடன்
(நன்றாக கவனிக்கவும் ஷக்கீலா  அல்ல டக்கீலா ) சனி அன்றே வருவதாக வாக்கு குடுத்திருக்கிறார் அதனால் அவருக்கு சிறப்பு விருந்தினருக்கான பட்டம் குடுத்து சிகப்பு கம்பள வரவேற்ப்பு தந்து . அவரை தனியாக அடைக்கும்படி நக்கீரன் கண்காணிப்பு குழுவிற்கு வேண்டுகோள் விடுகிறோம் .

23 கருத்து சொல்றாங்க:

புலவர் சா இராமாநுசம் said...

உமக்கேஉரிய நகைச்சுவையோடு பதிவு அமைந்துள்ளது! நன்றி!

பால கணேஷ் said...

அந்த மிகமிக முக்கியமான இடத்தைப் பற்ற விளக்கமாக எடுத்துரைத்தீர் அஞ்சா சிங்கமே... அருமை. நக்கீரன் ஸாரின் ஷக்கீலா... ஸாரி டக்கீலா ரொம்பவே பேமஸாயிடுச்சு போல...

மோகன் குமார் said...

:)) Sema !!

Kathir Rath said...

ஓகோ, அப்ப ஒரு நாள் முன்னாடி வந்தா ஷகிலா சாரி டகிலா உண்டா?

NAAI-NAKKS said...

Yow....singam...
Kavuththitteeyaa...?????

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கம்.

ஒரு கபடி மேட்ச் ஆடுற அளவுக்கு இடம் விஸ்தாரமா தான் ஏற்பாடு செய்து இருக்கீங்க :-))

சாப்புடுற இடத்தை மறக்காம நியாபகப்படுத்திக்கிட்டே இருப்பதை பார்த்தால் சாப்பாடு பலமா இருக்கும் போல , கறிச்சோறா அப்போ :-))


நீர் சொல்வதை பார்த்தால் நக்ஸ் அண்ணே ஒரு கண்டெயினரில் டக்கீலா எடுத்துவருவார் போல இருக்கே... நமக்கு ஒன்னுமில்லையே அடச்சே:-((

மதுமதி said...

சிறப்பு..

மயிலன் said...

அங்கே ஒரு கலவரம் காத்துட்டு இருக்கு... வந்து சொல்றேன்....

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கம்,

"அரிய படங்களுடன்" என வரவேண்டும் , ஹி..ஹி நானும் இப்படி மாத்தியடிப்பதுண்டு,படித்ததும் இப்பின்னூட்டம் அழித்துவிடவும்.

அரசன் சே said...

அடிச்சி புரண்டு விளையாடுவோம் பாஸ் ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நாய் நக்ஸ் அவர்களின் வசதிக்காக ஒரு தனி செல்பேசி கோபுரம் ஒன்றை மண்டபத்தில் ஏற்பாடு செய்யாததை வன்மையாக கண்டிக்கிறோம். இதைக் கண்டித்து நக்ஸ் அவர்கள் ஏற்பாட்டாளர்கள் அனைவருடனும் தொலைபேசுவார்....

இப்படிக்கு
நாய்-நக்ஸ் தொலைவிழுதுகள்

பட்டிகாட்டான் Jey said...

அஞ்சாசிங்கத்தின் கவனத்திற்கு நான்காவதாக இருக்கும் படத்தில் உள்ள மின்விசிறியில் இரண்டு ரெக்கைகள் மட்டுமே உள்ளது, எனவே அதை பழுது பார்த்து வைக்கவும்.

இப்படிக்கு,
சீரியஸூடன்,
மெட்ராஸ்பவன் - சிவக்குமார்.

பட்டிகாட்டான் Jey said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
நாய் நக்ஸ் அவர்களின் வசதிக்காக ஒரு தனி செல்பேசி கோபுரம் ஒன்றை மண்டபத்தில் ஏற்பாடு செய்யாததை வன்மையாக கண்டிக்கிறோம். இதைக் கண்டித்து நக்ஸ் அவர்கள் ஏற்பாட்டாளர்கள் அனைவருடனும் தொலைபேசுவார்....//

நக்ஸ் அவர்களின் தொலபேசும் சேவை தடையின்றி சக பதிவர்களுக்கு போய் சேரும் வகையில் மண்டபத்தின் மாடியில், கோபுரம் அமைக்க ரிலையன்ஸ் அம்பானியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிரது என்பதை, நாய்-நக்ஸின் தொலைவிழுதுகளுக்கு தெரிவிக்கப்படுகிறது, எனவே விழுதுகள் யாரும் கல்லெரிந்து கலாட்டா செய்யவேண்டாமென்றும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்..

yuvatirupur said...

மாப்ள சாப்பிடற எடம்...!சாப்பிடற எடம்...!அப்படின்னு போட்டிருக்கிறிங்க...என்ன சாப்பிடற எடம் அது புரியலையே..?ஷக்கிலா அடச்சே..!டக்கீலா சாப்பிடற எடமா?

திண்டுக்கல் தனபாலன் said...

தகவலுக்கு நன்றி நண்பரே...

விழா சிறக்க வாழ்த்துக்கள்... (TM 6)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

sema

Philosophy Prabhakaran said...

அந்த மனுஷனை போய் நம்புறீங்களேய்யா... அந்தாளுக்கு வாய் மட்டும்தான் காது வரைக்கும் நீளம்... நமக்கு வழக்கம்போல பகார்டி தான்...

பழனி.கந்தசாமி said...

பதிவு நல்லா இருக்கு.
எனக்கு வரவர தமிழ் மறந்து போகுது.
அறிய - அரிய, இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் சரியா அர்த்தம் புரிய மாட்டேங்கிறது? யாராவது விளக்கினால் புரிந்து கொள்வேன்.

கோவை நேரம் said...

படம் போட்டு விளக்கிடீங்க....

விக்கியுலகம் said...

வாழ்த்துக்கள்

தங்கம் பழனி said...

உண்மையிலேயே நீங்க அஞ்சா சிங்கம்தான்...!

s suresh said...

சிறப்பான தகவல் பதிவு! நன்றி!

இன்று என் தளத்தில்
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
http://thalirssb.blogspot.in/2012/08/5.html

சென்னை பித்தன் said...

இப்படியெல்லாம் எழுதினா கூட்டமே சாப்பாட்டுக் கூடத்துக்குப் போயிடும்!

Popular Posts